உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்: நடிகர் ரஜினிகாந்த்
by சிவனாசான் Today at 2:30 am

» தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக கமல் ஆவேசம்
by சிவனாசான் Today at 2:27 am

» மதுரை:ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நுழைந்த அதிகாரி யார்?
by ayyasamy ram Today at 12:37 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 10:37 pm

» செய்திகள்
by சிவனாசான் Yesterday at 8:42 pm

» வெஜ் பேலியோ பா.ராகவன்
by aeroboy2000 Yesterday at 6:34 pm

» பல ஆண்டுக் கனவான கருந்துளை (black hole ) படமாக்கப்பட்டது.
by சக்தி18 Yesterday at 6:09 pm

» மனைவியை அடிப்பது எப்படி?
by சக்தி18 Yesterday at 6:01 pm

» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» வண்ணப்பறவைகள் போல் விளையாடு
by ayyasamy ram Yesterday at 3:06 pm

» கண்கவர் அந்தமான் போட்டோக்கள் ! by Krishnaamma !
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» தொழில் நுட்பம் புது வரவு
by சக்தி18 Yesterday at 2:50 pm

» பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து!
by சக்தி18 Yesterday at 2:34 pm

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by சக்தி18 Yesterday at 2:30 pm

» இந்தியாநீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது : பாலியல் புகார் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» பூந்தி லட்டு
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண் - கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» இந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» நாளை நிழல் இல்லா நாள்: புதுச்சேரியில் கண்டு ரசிக்க ஏற்பாடு
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» சிவகார்த்திகேயன் படம்: வெளியீட்டுத் தேதியில் மாற்றம்!
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» நுங்கம்பாக்கம் தொழிற்சாலையில் தீ விபத்து
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» அமமுக பொதுச் செயலாளரானார் டிடிவி தினகரன்: கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» இடைத்தேர்தல்: 4 தொகுதிகளுக்கான திமுக பொறுப்பாளர்கள் நியமனம்
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல்
by ayyasamy ram Yesterday at 11:34 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 6:13 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 6:10 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 6:06 am

» பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக்கொண்ட தலித் இளைஞர்
by கோபால்ஜி Fri Apr 19, 2019 4:33 pm

» புன்னகைத்துப் பாருங்கள்...!!
by ayyasamy ram Fri Apr 19, 2019 3:51 pm

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by ayyasamy ram Fri Apr 19, 2019 3:48 pm

» வாழ்க்கையை வாழும்போதே ரசித்து வாழுங்கள்...!!
by ayyasamy ram Fri Apr 19, 2019 3:43 pm

» கவிதை தூறல்...
by ayyasamy ram Fri Apr 19, 2019 2:52 pm

» குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க….(டிப்ஸ்)
by ayyasamy ram Fri Apr 19, 2019 2:44 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Apr 19, 2019 2:32 pm

» அக்காவும், அப்பாவும், காங்., மகனும், மருமகளும், பா.ஜ.
by ayyasamy ram Fri Apr 19, 2019 1:40 pm

» நாங்கள் என்ன நாற்றமடிக்கிறோமா? - பாஜக வேட்பாளர் ஹேமமாலினியைச் சாடிய விவசாயி
by ayyasamy ram Fri Apr 19, 2019 12:51 pm

» பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
by ayyasamy ram Fri Apr 19, 2019 12:48 pm

» சசி இயக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
by ayyasamy ram Fri Apr 19, 2019 12:13 pm

» தேர்தல் முடிந்த பிறகு வெளியாகும் 3 தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Fri Apr 19, 2019 12:11 pm

» திருக்கழுக்குன்றம்:-ஒளிமயமான எதிர்காலம்.-ஜிதமிழ் தொலைக்காட்சியில்.
by velang Fri Apr 19, 2019 8:16 am

» பஞ்சராக்ஷரம் - திரைப்படம்
by krishnaamma Fri Apr 19, 2019 12:44 am

» காய்கறி ஓவியங்கள் !
by krishnaamma Thu Apr 18, 2019 9:45 pm

» சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்
by krishnaamma Thu Apr 18, 2019 9:31 pm

» திரை விமர்சனம் - Shazam!
by krishnaamma Thu Apr 18, 2019 9:21 pm

» தமிழ் மின் புத்தகங்கள்
by krishnaamma Thu Apr 18, 2019 9:17 pm

» அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.....
by krishnaamma Thu Apr 18, 2019 9:13 pm

» ஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி!
by krishnaamma Thu Apr 18, 2019 9:13 pm

Admins Online

தமிழே... அமுதே...

தமிழே... அமுதே... Empty தமிழே... அமுதே...

Post by dsudhanandan on Fri Mar 18, 2011 4:47 pm

1. இலை

தமிழ்ல ஒவ்வொன்றையும் அதனோட தன்மைக்கு ஏத்தமாதிரி பெரியவங்க தனிச்சுக் காமிக்கும்படியா சொற்களை செய்து வெச்சு இருக்காங்க. அதை நாம சரியாப் பயன்படுத்தணும்ங்க.... இன்னைக்கு இலையைபத்தி யோசிக்க வேண்டி வந்தது.... (தேர்தல் நேரம்ங்கிரதாலே இரட்டை இலையை நினைச்சேன் அப்படின்னு நீங்களா கற்பனை பண்ணக் கூடாது) இலைக்கே எத்தன சொல் பாத்தீங்களா...

ஆமாங்க, நீட்ட வாக்குல முளை விடுறது எல்லாத்தையுஞ் சொல்லுறது தாள் வெங்காயத்தாள், இராகித்தாள், வரகுத்தாள், சாமைத்தாள் அப்படின்னு.

அகத்தி, பசலை, முருங்கை போன்ற தாவரங்கள்ல, உணவுக்கு நேரிடையாப் பாவிக்கக் கூடியது கீரை.

சின்ன அளவுல நீட்ட நீட்டமா வர்றது எல்லாம் புல்; அறுகம்புல், கோரைப்புல் இதெல்லாம். அதுவே தரையில படர்ந்து போச்சுன்னா, அதுக்குப் பேரு பூண்டு. நெருஞ்சிப்பூ(ண்)டு.... புல், பூண்டு அப்படீன்னு சொல்ரோம்மில்லையா?

பரந்து, விரிஞ்சு இருந்தா அது மடல், சப்பாத்திக்கள்ளி மடல்!

கரும்பு, நாணல் இதுல வர்றதைச் சொல்லுறது தோகை.

அதே போல, குறுகலா நீட்ட நீட்டமா வர்றது ஓலை, தென்னை ஓலை, கமுகு ஓலை இப்படி!

உசிலை, சாணிப்பூட்டான், இந்த மாதிரி பத்தையில பச்சைப் பசேல்னு இருக்குறதெல்லாம் தழை.

சரி, சரி... அப்ப எதைத்தான் இலைன்னு சொல்லுறதுன்னு என்கிறீங்களா? செடியானாலும் சரி, கொடியானாலும் சரி, சிறு, குறு, பெரு மரமானாலும் சரி, தன்னிச்சையா எடுப்பா விரியுறது இலை, வேப்பிலை, அரச இலை, மாவிலை, .... இப்படி!

இவன் என்ன இன்னைக்கு இலைய இங்கே பதியாறேன் அப்படின்னு யோசிக்கிறீங்களா? வேற ஒண்ணும் இல்ல தலைவா... இன்னைக்கு மதியம் கீரை கொழம்பு சாப்பிட்டேனா... அதான்...

என்ன என்னை அடிக்க வரமாட்டீங்களே... சரி இப்போதைக்கு [You must be registered and logged in to see this image.] மீண்டும் வருவேன்!!!


Last edited by dsudhanandan on Thu Aug 25, 2011 11:52 pm; edited 2 times in total
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

தமிழே... அமுதே... Empty Re: தமிழே... அமுதே...

Post by சிவா on Fri Mar 18, 2011 4:55 pm

இலை பற்றி மிகவும் அழகான விளக்கம்! அப்படியே சிறு தேர்தல் பிரச்சாரம் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டீர்கள் சுதானந்தன்! வாழ்த்துக்கள்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

தமிழே... அமுதே... Empty Re: தமிழே... அமுதே...

Post by முரளிராஜா on Fri Mar 18, 2011 5:10 pm

இலை
அருமையா இருக்குல [You must be registered and logged in to see this image.]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

தமிழே... அமுதே... Empty Re: தமிழே... அமுதே...

Post by dsudhanandan on Fri Mar 18, 2011 5:34 pm

2 தமிழில் கணிதச் சொற்கள்


தமிழில் எண்களை குறித்த பதிவை பார்த்தேன்...

http://www.eegarai.net/t269-topic

http://www.eegarai.net/t50481-topic

http://www.eegarai.net/t24172-topic

http://www.eegarai.net/t35259-topic

http://www.eegarai.net/t11668-topic

http://www.eegarai.net/t42685-topic

http://www.eegarai.net/t52089-topic

அதன் தொடர்ச்சியாக மேலும் சில:


கால அளவு

2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 விநாடி-நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம்-30 நாள் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்

எண்ணல் அளவை

ஒன்றிலிருந்து கோடி வரை அனைவரும் அறிந்தவையே.... கோடிக்கு பிறகான எண்களின் பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்.

10 கோடி - 1 அற்புதம்
10 அற்புதம் - 1 நிகற்புதம்
10 நிகற்புதம் - 1 கும்பம்
10 கும்பம் - 1 கணம்
10 கணம் - 1 கற்பம்
10 கற்பம் - 1 நிகற்பம்
10 நிகற்பம் - 1 பதுமம்
10 பதுமம் - 1 சங்கம்
10 சங்கம் - 1 சமுத்திரம்
10 சமுத்திரம் - 1 ஆம்பல்
10 ஆம்பல் - 1 மத்தியம்
10 மத்தியம் - 1 பரார்த்தம்
10 பரார்த்தம் - 1 பூரியம்

---------------------------------------------------------------------------------------------------------------------------------

எல்லாம் சரி.... அப்ப ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியை தூய தமிழில் எப்படி சொல்லறது?


Last edited by dsudhanandan on Sat Mar 19, 2011 9:52 am; edited 1 time in total
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

தமிழே... அமுதே... Empty Re: தமிழே... அமுதே...

Post by மஞ்சுபாஷிணி on Fri Mar 18, 2011 5:40 pm

அருமையான பகிர்வு சுதானந்தா..... கீரை குழம்பு நன்றாக இருந்ததாப்பா?
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தமிழே... அமுதே... Empty Re: தமிழே... அமுதே...

Post by dsudhanandan on Fri Mar 18, 2011 5:48 pm

@மஞ்சுபாஷிணி wrote:அருமையான பகிர்வு சுதானந்தா..... கீரை குழம்பு நன்றாக இருந்ததாப்பா?

நான் இப்படி யோசிக்கும்போதே உங்களுக்கு புரிந்திருக்கும்.....
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

தமிழே... அமுதே... Empty Re: தமிழே... அமுதே...

Post by dsudhanandan on Fri Mar 18, 2011 6:53 pm

@சிவா wrote:இலை பற்றி மிகவும் அழகான விளக்கம்! அப்படியே சிறு தேர்தல் பிரச்சாரம் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டீர்கள் சுதானந்தன்! வாழ்த்துக்கள்!

அடுத்த மாசம் மாம்பழ சீஸன்... அதான்...
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

தமிழே... அமுதே... Empty Re: தமிழே... அமுதே...

Post by dsudhanandan on Fri Mar 18, 2011 6:56 pm

@முரளிராஜா wrote:இலை
அருமையா இருக்குல [You must be registered and logged in to see this image.]

ஊழலற்ற... ச்சே... நோய் தாக்காத இலை எப்பவுமே அருமையாகவும் அழகாகவும் இருக்கும்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

தமிழே... அமுதே... Empty Re: தமிழே... அமுதே...

Post by மாணிக்கம் நடேசன் on Fri Mar 18, 2011 7:28 pm

இலையைப்பற்றி ஆரம்பித்து வேறு பல நல்ல தகவல்களைத் தந்து
விட்டீர்கள். நன்றி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4292
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1259

View user profile

Back to top Go down

தமிழே... அமுதே... Empty Re: தமிழே... அமுதே...

Post by dsudhanandan on Sat Mar 19, 2011 9:57 am

3. தமிழில் கணிதம் -- தொடர்ச்சி

தமிழில் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், லட்சம், கோடி வரை நாம் சொல்லி விடுகிறோம். அதற்கு மேல் உள்ள அளவுகளை எப்படிச் சொல்வது என்று தெரியுமா? தெரியவில்லை என்று தளர்ந்து விடாதீர்கள். இந்த எண்ணிக்கை அளவுகளை தேறையர் தான் பாடிய வைத்திய காவியத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

100 ஆயிரம் என்பது ஒரு லட்சம்
100 லட்சம் - ஒரு கோடி
100 கோடி - ஒரு அற்புதம்
100 அற்புதம் - ஒரு நிற்புதம்
100 நிற்புதம் - ஒரு கருவம்
100 கருவம் - ஒரு மகா கருவம்
100 மகா கருவம் - ஒரு சங்கம்
100 சங்கம் - ஒரு மகாசங்கம்

ஒரு சங்கம் என்பதை எண்ணால் எழுதும்போது ஒன்று போட்டு பக்கத்தில் 17 சைபர் போடவேண்டும். இதே போல்

பதும சங்கம்
பருவம்
பெரிய அற்புத பருவம்
நிற்புத பருவம்
கருவ பருவம்
மகா கருவ பருவம்
சங்க பருவம்
மகா சங்க பருவம்
பதும சங்கம்
திரிசங்க பருவம்
அனந்த சங்கம்
சாகரம்
சாகர கருவம்
மகா சாகர கருவம்
கருவ சங்க சாகரம்
பதும சங்க சாகரம்
அனந்த சங்க சாகரம்
திரி சங்க சாகரம்
மகா சங்கம்
அக்ஷ்க்ஷோணி
க்ஷோணி
மகாக்ஷோணி
கருவ க்ஷோணி
அனந்த கருவ க்ஷோணி
சங்க கருவ க்ஷோணி
மகா சங்க க்ஷோணி
திரிசங்க க்ஷோணி
அனந்த மகா க்ஷோணி
மகா பதும க்ஷோணி
திரிசங்க பதும க்ஷோணி
சங்கத்தின் க்ஷோணி
வெள்ளம்
அற்புதத்தின் வெள்ளம்
நிற்புதத்தின் வெள்ளம்
கருவத்தின் வெள்ளம்
மகா கருவ வெள்ளம்
சங்க வெள்ளம்
மகா சங்க வெள்ளம்
பதும சங்க வெள்ளம்
திரி சங்க வெள்ளம்
அனந்த சங்க வெள்ளம்
அற்புதத்தின் பருவ வெள்ளம்
சங்க பருவ வெள்ளம்
பதும சங்க பருவ வெள்ளம்
மகா சங்க பருவ வெள்ளம்
திரி சங்க பருவ வெள்ளம்
அனந்த சங்க பருவ வெள்ளம்
வாகினி
பதும வாகினி
அனந்த வாகினி
மகா வாகினி

1 போட்டு பக்கத்தில் 43 சைபர் போட்டுப் பாருங்கள். இந்த அளவின் பெயர் என்ன தெரியுமா? ஒரு சாகரம்

அதே போல் ஒன்று போட்டு 61 சைபர் போட்டால் சோணி
83 சைபர் போட்டால் வெள்ளம்
115 சைபர் போட்டால் வாகினி
121 சைபர் போட்டால் மகாவாகினி

எண்களுக்குரிய இந்த அபூர்வ வார்த்தைகளைப் பார்த்தால் தமிழை எப்படிப் போற்றுவது என்று தெரியாமல் சற்று வியப்பு ஏற்படுகிறதல்லவா?


===========================================================================================================

என்ன அன்பர்களே பதிவை இரசிக்கிறீர்கள் எனில் மேலும் தொடர்வேன்....
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

தமிழே... அமுதே... Empty Re: தமிழே... அமுதே...

Post by மாணிக்கம் நடேசன் on Sat Mar 19, 2011 11:13 am

அதனால்தான் அதை, தமிழே அமுதே அழகிய மொழியே எனதுயிரே
என்கிறோம்.
வாழ்க தமிழ்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4292
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1259

View user profile

Back to top Go down

தமிழே... அமுதே... Empty Re: தமிழே... அமுதே...

Post by dsudhanandan on Sat Mar 19, 2011 7:00 pm

4. தமிழில் கணிதம் -- தொடர்ச்சி

படைகளின் அளவு

1 பந்தி = 1 இரதம் (தேர்) : 1 யானை , 3 குதிரை, 5 காலாள்
3 பந்தி = 1 சேனாமுகம்
3 சேனாமுகம் = 1 குல்மம்
3 குல்மம் = 1 கணகம்
3 கணகம் = 1 வாகினி
3 வாகினி = 1 புலுதம்
3 புலுதம் = 1 சமுத்திரம்
3 சமுத்திரம் = 1 சமாக்கியம்
10 சமாக்கியம் = 1 அக்குரோணி

1 அக்குரோணி = 21870 இரதம், 21870 யானை, 65610 குதிரை, 109350 காலாள்

மஹாபாரதத்தில் (பாண்டவர்கள், கெளரவர்கள்) மொத்த சைனியமும் சேர்த்து 18 அக்குரோணி.


8 அக்குரோணி = ஏகம்
8 ஏகம் = கோடி
8 கோடி = சங்கம்
8 சங்கம் = விந்தம்
8 விந்தம் = குமுதம்
8 குமுதம் = பதுமம்
8 பதுமம் = நாடு
8 நாடு = சமுத்திரம்
8 சமுத்திரம் = வௌ்ளம்

இராமனோடு சென்ற வானர சேனையின் அளவு எழுபது வெள்ளம்.
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

தமிழே... அமுதே... Empty Re: தமிழே... அமுதே...

Post by dsudhanandan on Mon Mar 21, 2011 4:21 pm

5. தமிழில் கணிதம் -- தொடர்ச்சி

யுகங்கள்

1 கற்பம் = 1000 சதுர் யுகம்
1 மனுவந்தரம் = 71 சதுர் யுகம்
1000 சதுர் யுகம் = 4 யுகங்கள்
4 யுகங்கள் = 43,20,000 ஆண்டுகள்

கலியுகம் = 1 x 43,20,000 ஆண்டுகள்
துவாபர யுகம் = 2 x 43,20,000 ஆண்டுகள்
திரேதா யுகம் = 3 x 43,20,000 ஆண்டுகள்
கிருத யுகம் = 4 x 43,20,000 ஆண்டுகள்


dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

தமிழே... அமுதே... Empty Re: தமிழே... அமுதே...

Post by சிவா on Mon Mar 21, 2011 4:22 pm

தமிழின் சிறப்புக்களை அறியத் தருவது மிகவும் பயனுள்ளதாக உள்ளது சுதானந்தன்! நன்றி!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

தமிழே... அமுதே... Empty Re: தமிழே... அமுதே...

Post by ப்ரியா on Mon Mar 21, 2011 8:06 pm

@சிவா wrote:தமிழின் சிறப்புக்களை அறியத் தருவது மிகவும் பயனுள்ளதாக உள்ளது சுதானந்தன்! நன்றி!

அதுதான் தமிழுக்கு உண்டான சிறப்பு .இல்லையா அண்ணா அருமையிருக்கு
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 3394
இணைந்தது : 25/02/2010
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

தமிழே... அமுதே... Empty Re: தமிழே... அமுதே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை