ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

பூமி என் தாய்
 T.N.Balasubramanian

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!

View previous topic View next topic Go down

முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 05, 2011 7:57 pm

முக்கண்ணியைத் தொழுவார்க்கு தீங்கில்லையே!

விக்ருதி வருடம், தை மாதம் 24-ஆம் தேதி, திங்கட் கிழமை... மிக அற்புதமான நாள்! சோமவார சுக்ல சதுர்த்தி, உத்திரட்டாதி நட்சத்திரம், சித்த யோகம் கூடிய அந்த சுப தினத்துக்கு, மேலும் ஒரு மேன்மை சேர்ந்தது!

இந்தத் திருநாளில்தான்... சிவாச்சார்யர்களின் மந்திர கோஷமும், வங்கக் கடலெனத் திரண்டிருந்த பக்தர்களின் சரணகோஷமும் விண்ணதிர ஒலிக்க, தனது திருக்கோயிலின் (நூதன ராஜகோபுர) மகா கும்பாபிஷேகத்தைச் சிறப்புற நிகழ்த்திக்கொண்டாள் அருள்மிகு காளிகாம்பாள்!

உலகையும் உயிர்களையும் ரட்சிக்கும் அம்பிகை அவள்; வாழ்வைப் புரிந்துகொள்ளும் ஞானத்தை அருள்ப வள். அதுமட்டுமா? காலத்தை நிர்ணயிக்கும்- அதைக் கட்டுப்படுத்தும் சக்தியும் அவளே! எனவே, காளி எனும் பெயர் கொண்டாள். இந்தப் பெயருடன் அவள் கோயில் கொண்டிருக்கும் தலங்களில், சென்னை- ஸ்ரீகாளிகாம்பாள் ஆலயமும் ஒன்று.

சென்னை- பாரிமுனையில், தம்புச்செட்டித் தெருவில் அமைந்திருக்கிறது ஆலயம். ஆதியில் இந்த அம்பிகை கொலுவிருந்தது, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள பகுதியில். இங்கு வசித்த மீனவர்கள், தினமும் செந்தூரம் அர்ப்பணித்துத் தாங்கள் வழிபடும் இந்த அம்மனை, ('செம்மேனி அம்மன்’ எனும் பொருள் பட), சென்னம்மா என்று அழைத்தனராம். 'சென்னா’ எனும் மீன் வகை ஒன்று உண்டு. அந்த மீன்களைப் போன்று அழகிய கண்களைக் கொண்டவள் என்பதால், சென்னம்மா என்று பெயர் வந்தது எனவும் கூறுவர்.

நாளடைவில், ஆலயம் இருந்த பகுதி பிரிட்டிஷாரின் வசப்பட, அங்கே கோட்டை- கொத்தளங்கள் உருவாயின. கெடுபிடிகள் அதிகரிக்க, அம்பிகையை எளிதில் வழிபட இயலாத நிலை. பக்தர்கள் வருந்தினர். அவர்களது வருத்தத்தை, ஆலய பொறுப் பாளர்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் தெரிவித் தனர். ''ஆலயத்தைக் கோட்டைக்கு வெளியே மாற்றலாம்; அதற்கு வேண்டிய உதவிகளை நாங்கள் செய்கிறோம்'' என்றனர் அதிகாரிகள். அதன்படியே தற்போதுள்ள இடத்தில் ஆலயம் அமைந்தது; சென்னம்மனும், ஸ்ரீகாளிகாம்பாள் எனும் பெயர்கொண்டாள்.

அன்றுதொட்டு இன்று வரை, குறைவில்லாமல் தொடர் கிறது ஸ்ரீகாளிகாம்பாளின் கருணைக் கடாட்சம்.

1999-ஆம் வருடம். அந்த அடியவரை மருத்துவ மனையில் சேர்த்திருந்தனர். மருத்துவர்களால் முடிவு சொல்ல முடியாத நிலை. அவரது சுய நினைவு பாதியாகக் குறைந்து விட்டிருந்தது.

ஆனால், கண்மூடிக் கிடந்த அந்த அடியவரின் வலக் கரம் மட்டும் மெள்ள அசைந்தது. ம்ருகு முத்திரை போல... சுட்டு விரலையும் சுண்டு விரலையும் நீக்கி, மீதி மூன்றையும் சேர்த்து, குங்குமத்தை அள்ளி அம்பாளின் பாதத்தில் சமர்ப்பித்து, திரிசதி அர்ச்சனை பண்ணுவதுபோல ஒரு பாவனை தொடர்ந்தது அவரிடம்.

'அம்மா..! இதுவரை உன்னிடம் எதுவும் கேட்டதில்லை. இப்போது கேட்கிறேன்... இன்னும் சில காலம் வாழ வரம் கொடு! உன் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடக்கட்டும். அதைக் கண்குளிர தரிசித்துவிடுகிறேன். அதன் பிறகு, நீ எப்போது அழைத்தாலும், உன் திருவடியைத் தேடி ஓடி வந்துவிடுவேன்!’ என்று, அன்னையிடம் வேண்டிக் கொண்டாரோ?!

ஸ்ரீசக்ர மந்திராதிபதியாக, கலைமகளையும் அலைமகளையுமே தனது இரண்டு கண்களாகக் கொண்டு திகழும் அம்பிகை அல்லவா காளிகாம்பாள்! எனில், அவள் குடியிருக்கும் கோயிலில் எவ்வளவு சாந்நித்தியம் நிறைந்திருக்கும்! அந்தத் திருவருள், இன்னும் பன்மடங்கு பெருகி, இந்த ஊருக்கும் உலகுக்கும் பயன்பட வேண்டுமல்லவா? அதற்கு, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயிலில் கும்பாபிஷேகம் நிகழ வேண்டுமே!

83-வது வருஷம்... கிழக்குக் கோபுர திருப்பணிகளுடன் கும்பாபி ஷேகம் நடந்தது. வருடங்கள் ஓடிவிட்டன. அடுத்து ஒரு கும்பாபிஷேகம் நிகழ வேண்டாமா? அனுதினமும் அவர் அம்பாளை வேண்டிக் கொண்டது இதற்காகத் தானே? அப்படியிருக்க... கும்பாபிஷேகத்தைக் காணாமல் போக மனம் வருமா?அடிக்கடி அவர் திரிசதி அர்ச்சனை செய்து அம்பாளை வழிபடுவது உண்டு. சந்தோஷமான தருணங்களில் நன்றியைத் தெரிவிக்க, தன்னிடம் துயரங்களைப் பகிர்ந்துகொள்ளும் பக்தர்களின் பிரச்னை தீர... என அம்பாளுக்கு திரிசதி அர்ச்சனை செய்து வழிபடுவார்.

இப்போதும், 'எனது பிரார்த்தனையை நிறைவேற்று தாயே’ என்று மானசீகமாக திரிசதி அர்ச்சனை செய்கிறாரோ?! அவருடைய வலக் கரத்தின் அர்ச்சனை பாவனை தொடர்ந்தது.

மெள்ள மெள்ள, அவர் உடல்நிலையில் முன்னேற்றம். பத்துப் பன்னிரண்டு நாட்களில் பூரணமாய் குணம்பெற்று எழுந்துவிட்டார். ஆமாம், அம்பிகை அவரது வேண்டுதலை நிறைவேற்றி விட்டாள் என்றே சொல்ல வேண்டும்.

பிறகென்ன... அவர் ஆசைப்பட்டது போலவே, கும்பாபிஷேகப் பணிகளை உற்சாகமாகத் தொடர்ந்தார். நாட்கள் நகர்ந்தன. 2001-ஆம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற, அதற்கும் பிறகு வெகு நாட்கள் கழித்தே அன்னையின் திருவடியைச் சேர்ந்தார் அந்த அடியவர்.

ஸ்ரீகாளிகாம்பாளின் கருணைக்குப் பாத்திரமான அந்த அடியவர் வேறு யாருமல்ல; பல்லாண்டு காலம் ஸ்ரீகாளிகாம்பாளுக்குப் பணிவிடை செய்து அருள்பெற்ற சாம்பமூர்த்தி சிவாச்சார்யர்தான்.

மேற்கு நோக்கி அமைந்திருக்கிறது ஆலயம். உள்ளே 16 கால் மண்டபத்துடன் கூடிய கருவறை யில்... கலைமகளும் அலைமகளும் சாமரம் வீச, மேலிரு கரங்களில் பாச- அங்குசம் திகழ, வலது கீழ்க் கரத்தில் நீலோத்பல மலர் கொண்டு, இடது கீழ்க் கரத்தால் வரத முத்திரை காட்டி, பத்மாசனக் கோலத்தில் அருளாட்சி செய்கிறாள் அம்பிகை. அவள் திருமுன் ஸ்ரீசக்ரமேரு!

பக்தர்கள், சந்நிதி மண்டபத்தில் அமர்ந்து அம்பாளைத் தரிசிக்கலாம்! பக்தர்களுக்கு, செவ்வாய்க்கிழமைகளில் மாலை வேளையில், பூஜிக்கப்பட்ட 'ரட்சை’ தருகின்றனர். உடல்நலம் குன்றியோர், மகப்பேறு வேண்டுவோர், உத்தியோகம் கிடைக்க விரும்புவோர் பயபக்தியுடன் வாங்கிச் செல்கிறார்கள். இந்த ஆலயத்தில் வழங்கப்படும் அபிஷேக மஞ்சள் பிரசாதமும் விசேஷம்! ஸ்ரீகாளிகாம்பாளின் இந்த மங்கலப் பிரசாதம், குழந்தை வரம் தரும் வல்லமை கொண்டது.

இந்தக் கோயிலில் அருளும் ஸ்ரீஸித்திகணபதி, பிரம்ம சாஸ்தா அம்சத்துடன் திகழும் ஸ்ரீவட கதிர்காம முருகன், ஸ்ரீகமடேஸ்வரர், ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீபிரத்தியங்கரா தேவி, ஸ்ரீவிஸ்வபரபிரம்மம் (விஸ்வ கர்மா) ஆகிய தெய்வங்களும் வரப்ரசாதியர்!

விஸ்வகர்ம சமூகத்தைச் சார்ந்த- தேர்ந்தெடுக் கப்பட்ட அறங்காவலர் குழுவால் நிர்வகிக்கப்படும் இந்த ஆலயத்தில், நவராத்திரி, வசந்த நவராத்திரி, ஆடிப்பெருவிழா, வைகாசி பிரம்மோற்ஸவம் போன்ற விழாக்கள் சிறப்புற நடைபெறுகின்றன. பிரம்மோற்ஸவத்தின் 9-ஆம் நாள்... கிண்ணித் தேரில் அம்மன் பவனி வரும் அழகே அழகு!

கோயிலில் மேற்கு கோபுரம் அமைக்கும் முயற்சி யாக, 2004-ல் பூமி பூஜையுடன், திருப்பணிகள் ஆரம்பமாயின. 2008-ல் கடைக்கால் பூஜையுடன் கட்டட வேலைகள் துவங்கின. இந்து சமய அற நிலையத் துறையின் ஆதரவுடனும், ஆலய அறங் காவலர் குழு, சிவாசார்யர்அறக்கட்டளையின் தீவிர முயற்சியிலும், ஆன்மிக அன்பர்களது உதவியு டனும் திருப்பணிகள் நிறைவடைந்து, அன்னதானக் கூடம், பிராகாரத்தில் பளிங்கு கல் பதித்தல் போன்ற வேலைகள் பூர்த்தியாகி, கடந்த பிப்ரவரி 7-ஆம் நாள் சிறப்பாக நடந்தது கும்பாபிஷேகம்.

கும்பாபிஷேகம் நிகழ்ந்து, ஒரு மண்டலகாலம் அந்தக் கோயிலைத் தரிசிப்பது விசேஷம். நீங்களும் அன்னையின் ஆலயத்துக்குச் சென்று தரிசியுங்கள். உங்களது துயரங்களை நீக்கி, அருளும் பொருளும் அள்ளித்தர கற்பக விருட்சமாய் காத்திருக்கிறாள் ஸ்ரீகாளிகாம்பாள்.

நன்றி விகடன்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum