ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

தஞ்சை ஓவியம்!

View previous topic View next topic Go down

தஞ்சை ஓவியம்!

Post by சிவா on Mon Feb 14, 2011 10:54 pm

நாம் வழிபடும் கோயில்களில் சாதாரணமாக கர்ப்பகிருகத்தில் மூலஸ்தான மூர்த்திகளையோ லிங்கங்களையோ இப்போது காண்கிறோம். ஆனால், ஆதிகாலத்தில் கர்ப்ப கிருகத்துச் சுவர்களில் - தீட்டிய சித்திரங்களையோ, அமைத்த சிற்பங்களையோ தெய்வங்களின் வடிவங்களாக பாவித்து வந்தார்கள்.

அவரவர் தாந்தாம்
அறிந்தவா றேத்தி
இவரிவர் எம்பெருமான்
என்று - சுவர்மிசைச்
சார்த்தியும் வைத்தும்
தொழுவர், உலகளந்த
மூர்த்தியுருவே முதல்

-பொய்கையாழ்வார்
(முதல் திருவந்தாதி)

பிறகு பூஜைக்கு என்று மூல விக்கிரகங்களை நிர்மாணித்தபோது சுதையால் (சுண்ணாம்பு கலந்த காரையால்) செய்து வர்ணமும் தீட்டியிருந்தார்கள். முகம், கை, கால், உடம்பு முதலிய அங்கங்களுக்கும் உடை, அணி ஆகியவற்றுக்கும் இன்ன இன்ன வர்ணங்கள் தீட்ட வேண்டுமென்று சிற்பசாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய அழகிய வடிவங்களை இன்றும் பல இடங்களில் காணலாம். ஆனால், பலநூறு வருடங்களாக அவற்றுக்கு எண்ணெய்க் காப்பிட்டதால் கறுத்து வனப்பு குறைந்து காண்கின்றன.

சித்திரம் வரையும் கலை நம் நாட்டுக்குப் புதிது அல்ல. முக்கியமாக, இந்தக் கலை கோயிலில் பூஜை சம்பந்தமாகவே ஆரம்ப காலத்தில் பெரிதும் பயன்பட்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் சித்திரம் வரையும் பாணி வெவ்வேறு விதமாக இருந்திருக்கிறது.

துரதிருஷ்டவசமாக, தமிழ்நாட்டு ஓவியங்கள், காலப் போக்கில் அழிந்துவிடக் கூடிய சுவரிலும் மரத்திலும் சித்திரங்களைத் தீட்டியிருந்தார்கள். எனவே, அவற்றின் பெருமையை இன்று உணர இயலாதபடி, அவற்றில் பெரும்பான்மையானவை அழிந்துவிட்டன. எஞ்சியிருப்பவை சிலவே.

புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள சித்தன்னவாசலில் இருக்கும் மண்டபங்களில் தமிழ்நாட்டு சித்திரக் கலையைக் காணலாம். தஞ்சாவூர்க் கோயில் பிராகாரத்தில் மறைந்திருந்த சுவர்ச் சித்திரங்களும் தமிழர்களின் ஓவியத் திறமைக்குச் சான்றாக விளங்குகின்றன.

கோயில்களில் விக்கிரகங்களை வைத்துப் பூஜை செய்து வருகிறோம். ஆனால், சாதாரணமாக வீடுகளில் விக்கிரகங்களை நிர்மாணித்து வழிபாடு செய்வதில்லை. விக்கிரக பூஜைகளுக்குக் கடைப்பிடிக்கும் கிரியைகளை வீட்டில் செய்ய இயலாது. பூஜை அறைகளில் பெரிய படல்களை வைத்து வணங்குவதுதான் வழக்கம்.பூஜைக்கென்றே தெய்வப் படங்களை தயாரிப்பதில் ஒரு காலத்தில் தஞ்சாவூர் நகரம்தான் தனிப்புகழ் பெற்றிருந்தது.

தஞ்சாவூரை ஆண்டுவந்த சரபோஜி மன்னர், பல கலைகளிலும் தேர்ந்தவர். அவர் வடஇந்தியாவிலிருந்து சித்திர நிபுணர்களை வரவழைத்து ஓவியக் கலைக்கு ஊட்டம் தந்தார். வடநாட்டிலிருந்து வந்தவர்கள் தமிழ்நாட்டு சித்திர பாணியையும் கலந்து புதுமையைப் புகுத்தினார்கள்.

மராட்டியரின் ஆதிக்கம் சீர்குலைந்த பிறகு இந்தக் கலைஞர்களை ஆதரிப்பவர்கள் குறைந்துவிட்டார்கள். எனவே, இந்த ஓவியக் கலைஞர்களுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. வீடுகளில் பூஜை செய்வதற்குத் தேவையான தெய்வப் படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள்.

தண்ணீரில் பல நாட்கள் ஊறவைத்து, நன்றாகத் தயார் செய்த மரப் பலகைகளில் உருவங்களை வரைவார்கள். பிறகு சித்திரங்களின் உருவம், ஆடை, அணி முதலியவைகளுக்குப் பொருத்தமாக வேவ்வேறு வர்ணங்கறைத் திட்டுவார்கள். தவிர, நகைகளுக்கு விலை உயர்ந்த கற்களையு முத்துக்களையும் ஆங்காங்கே பதிப்பார்கள்.

தெய்வ வடிவங்களுக்குப் பின்னணியாக அமைந்துள்ள விமானம், ஆசனம் முதலியவற்றுக்கு நுணுக்கமான வேலைப்பாடுகளைச் செய்து, தங்க ரேக்குகளை ஒட்ட வைப்பார்கள். இப்படித் தயாரித்த சித்திரங்கள் கண் கவரும் அழகும், தெய்வீகப் பொலிவும் பெற்று விளங்கும். இவையே பிற்காலத்தில் தஞ்சாவூர் சித்திரங்கள் என்றும் தஞ்சை ஓவியம் என்றும் தற்காலத்தில் டேஞ்சூர் பெயிண்டிங் என்றும், சிலாகித்துப் பேசப்பட்டன.

இந்தத் தஞ்சை ஓவியங்கள் தோன்றி இருநூறு ஆண்டுகள் ஆகியும் இன்றும் புத்தம் புதியனவாக ஒளியுடன் விளங்குகின்றன. நல்ல கற்கள் பதித்து உருவாக்கிய தஞ்சை சித்திரங்களை ஜமீன்தார்களும் செல்வந்தர்களும் அதிக விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்கள்.

சாதாரண மக்களும் இந்த ஓவியங்களை வாங்கும் விதத்தில் இமிடேஷன் கற்களையும் செயற்கை முத்துக்களையும் பதித்துத் தயாரித்து வந்தார்கள். இப்படிப் பதித்த கற்களில் மட்டும் பேதம் இருந்ததே தவிர, வர்ண அமைப்பிலோ சித்திரப் பாணியிலோ, கலை நுணுக்கத்திலோ சற்றும் சிறப்பு குறையவில்லை.

யசோதை ஒரு புறமும் நந்தகோபன் மறுபுறமும் நிற்க, வெண்ணெய்த் தாழியுடன் மஞ்சத்தில் பட்டுத் திண்டுகளுக்கிடையில் வீற்றிருக்கும் பாலகிருஷ்ணனின் சித்திரம் மிகவும் கவர்ச்சியானது. கண்ணனின் கண்கள் நம்முடன் பேச முயல்வது போலவே தோன்றும். படத்தைப் போலவே குழந்தையை இவ்வளவு பெரிதாகவும் வயது முதிர்ந்தவர்களைச் சிறு உருவங்களாகவும் சித்திரிப்பது தவறானது, முரணானது என்று சிலர் கருதலாம். ஆனால், சித்திர சாஸ்திரப்படி அவற்றையெல்லாம் ஒரே அளவில் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை. ஓவியத்தில் எது முக்கிய அம்சமோ அது பெரிய அளவிலும் மற்றவற்றைச் சிறிய அளவிலும் அமைப்பது பழைய முறை. இத்தகைய ஓவியங்களில் உள்ள உருவங்களைத் தனித் தனியேதான் பார்த்து அனுபவிக்க வேண்டும்.

இருபுறமும் வெண் சாமரம் வீசும் சேடியர்களுக்கு நடுவே, கவிந்த விமானத்தின் கீழே, இரு கரங்களில் பத்மம் தாங்கி, மற்ற இரு கரங்களால் அபய, வரத முத்திரையைக் காண்பிக்கும் மகாலட்சுமியின் தோற்றம், வீட்டுக்கே லட்சுமிகரமாய் இருக்கிறது.

பட்டாபிஷேகக் கோலத்துடன் வீற்றிருக்கும் ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் கம்பீரமும் அவரைச் சுற்றி உள்ளவர்களின் பொலிவும் சித்திரம் முழுவதும் நிரம்பி வழிகின்றன.

கண்ணனும் ராதையும் அணைத்து நிற்கும் காட்சி காதலும் தெய்வீகமும் கலந்த அற்புத சித்திரம். மீனாட்சி கல்யாண சித்திரம் எல்லோருடைய மனதையும் பரவசப்படுத்தக் கூடியது.

இப்படிப் பலவிதமாகச் சித்திரங்களை வரைந்து தமிழ் நாட்டில் வீடுகளிலும் மடங்களிலும் பக்தி மணம் கமழச் செய்த தஞ்சாவூர் சித்திரக்காரர்களுக்கு நூறு வருடங்களுக்கு முன்பிருந்த ஆதரவு குறைந்துவிட்டது. தஞ்சாவூர் சித்திரங்களை வெகுகாலமாகத் தீட்டிவந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வருவாய்க் குறைவை சரிக்கட்ட வேறு வேலைகளில் ஈடுபடலானார்கள். ஆன்மிக விழிப்புணர்வு பெற்றுள்ள மக்களின் ஆதரவால் நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு மீண்டும் தஞ்சை ஓவியக் கலை புத்துயிர் பெற்று வருகிறது.

-ஆர்.சி. சம்பத்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum