5>
உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவுby ayyasamy ram Today at 8:00 am
» கார்விபத்தில் விழுப்புரம் அ.தி.மு.க., எம்.பி., உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:23 am
» ராமர் கோவில் கட்டுவோம் : காங்கிரசும் வாக்குறுதி
by ayyasamy ram Today at 7:22 am
» 'புல்லட்' ரயிலுக்கு பெயர் வைக்கலாம்
by ayyasamy ram Today at 7:18 am
» மோக முள்
by Monumonu Today at 6:15 am
» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்
by ayyasamy ram Yesterday at 10:47 pm
» படித்ததில் பிடித்தது – பல்சுவை
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» சிறந்த வீடியோக்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» இனிமே எப்படி குறை சொல்வது...?!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» முதல் பார்வை: கண்ணே கலைமானே
by T.N.Balasubramanian Yesterday at 8:15 pm
» முதல் பார்வை: டுலெட்
by T.N.Balasubramanian Yesterday at 8:11 pm
» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
by T.N.Balasubramanian Yesterday at 7:59 pm
» டிடெக்டிவ் திருமதீஸ்
by ANUBAMA KARTHIK Yesterday at 7:38 pm
» பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கவும், பலவிதமான நோய்களுக்கான அருமருந்து இது!
by ayyasamy ram Yesterday at 7:29 pm
» இது...என்ன? என்ன இது? (தொடர்)
by T.N.Balasubramanian Yesterday at 6:48 pm
» உலகின் மிகச்சிறிய நாடு
by T.N.Balasubramanian Yesterday at 3:23 pm
» திக்கற்றவனுக்கு தெய்வமே துணை…!
by ayyasamy ram Yesterday at 2:25 pm
» மனதில் உறுதி வேண்டும்…!
by ayyasamy ram Yesterday at 2:25 pm
» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» பணக்காரனாகவும் நடிக்கணும், ஏழையாகவும் நடிக்கணும்..!!
by ayyasamy ram Yesterday at 2:22 pm
» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்
by ayyasamy ram Yesterday at 2:19 pm
» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» வீரமாமுனிவர்
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» இவர்கள் இப்படித்தான்..
by ayyasamy ram Yesterday at 2:16 pm
» யாரையும் ஏமாற்றாதீர்கள்..!
by ayyasamy ram Yesterday at 2:14 pm
» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி!
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» சிறகுகளைத் தேடி,,,!தாலும் வரும் மழை
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» தோற்றவர்களின் கதை
by kuloththungan Yesterday at 12:53 pm
» புதிய மின்னூல் வேண்டல்.
by prajai Yesterday at 11:41 am
» இந்திய வானம் எஸ்.ரா
by pkselva Yesterday at 8:56 am
» KAVITHAI
by ANUBAMA KARTHIK Thu Feb 21, 2019 11:52 pm
» சென்னையில் ஒரு திருக்கடையூர்
by ayyasamy ram Thu Feb 21, 2019 9:52 pm
» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by சிவனாசான் Thu Feb 21, 2019 8:53 pm
» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Thu Feb 21, 2019 7:06 pm
» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்
by mani2871967 Thu Feb 21, 2019 6:43 pm
» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Feb 21, 2019 6:29 pm
» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா ???
by மாணிக்கம் நடேசன் Thu Feb 21, 2019 5:13 pm
» தமிழ் மகனே வாடா! தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா! தரணி வெல்ல வா வா!
by ayyasamy ram Thu Feb 21, 2019 4:32 pm
» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு
by T.N.Balasubramanian Thu Feb 21, 2019 1:57 pm
» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...!!
by T.N.Balasubramanian Thu Feb 21, 2019 1:50 pm
» மூச்சுக்கலை
by kuloththungan Thu Feb 21, 2019 1:29 pm
» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.
by T.N.Balasubramanian Thu Feb 21, 2019 1:27 pm
» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
by SK Thu Feb 21, 2019 10:57 am
» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 21, 2019 9:46 am
» வாட்ஸ் அப் -நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 21, 2019 9:34 am
» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,
by SK Thu Feb 21, 2019 12:11 am
» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
by SK Thu Feb 21, 2019 12:07 am
» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்
by T.N.Balasubramanian Wed Feb 20, 2019 9:52 pm
» குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Feb 20, 2019 9:33 pm
Admins Online
சுண்டைக்காய்
சுண்டைக்காய்
சுண்டைக்காய்
சுண்டைக்காய் அனைவரும் அறிந்திருக்கும் காய்தான். பலர் வீட்டுத் தோட்டங்களில் இந்த சுண்டைச்செடி இடம்பெற்றிருக்கும்.

நன்கு அகன்ற இலைகள், கொத்துக்கொத்தாக வெள்ளை நிற பூக்கள், கொத்துக்கொத்தாய் சிறிய உருண்டை வடிவ காய்கள் என பார்க்க அழகாக காணப்படும் செடி இது.

சுண்டைக்காயில் இருவகை உண்டு.
1. காட்டுச் சுண்டை
2. நாட்டுச் சுண்டை எனப் படும் யானைச் சுண்டை.
மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது.
வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும் நாட்டுச் சுண்டைக் காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். இவற்றின் மருத்துவப்பயன்கள் ஒன்றே.
நெஞ்சின் கபம்போம் நிறைகிருமி நோயும்போம்
விஞ்சுவா தத்தின் விளைவும்போம்-வஞ்சியரே
வாயைக் கசப்பிக்கும் மாமலையில் உள்ள சுண்டைக்
காயைச் சுவைப்பவர்க்குக் காண்
(அகத்தியர் குணபாடம்)
குணம் - ஐயம், நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள், வளிப்பெருக்கு இவை போகும். சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம். சுண்டைக்காய் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுகசப்பு சுவை உடையது. இதை வாரம் இருமுறை சாப்பிடுவந்தால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.
மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மும்முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.
சுண்டைக்காய் - 10
மிளகு - 5
கறிவேப்பிலை - 10 இலை
இவைகளை ஒன்றாகச் சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், மூலக்கிருமி, மலத்துவாரத்தில் பூச்சுக்கடி போன்றவை நீங்கும்.
சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும்.
சுண்டைக்காய் சூப்
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல், போன்றவை நீங்கும்.
இரத்தத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும்.
மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும்.
ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.
சுண்டைக்காய் வற்றல்
முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்கும். குடலில் உள்ள அசடுகளை நீக்கும்.
சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து
சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல்
நீங்கும்.
நக்கீரன்
மோகன்- தளபதி
- பதிவுகள் : 1269
இணைந்தது : 26/02/2010
மதிப்பீடுகள் : 44
Re: சுண்டைக்காய்
சுண்டைக்காய் பற்றிய தகவலுக்கு நன்றி மோகன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/sivastar
சிவா- நிறுவனர்
- பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875
Re: சுண்டைக்காய்
செரிமானச் சிகரம் சுண்டைக்காய்!
‘சுண்டக்கா மாதிரி இருந்துக்கிட்டு என்ன வேலை பண்றான் பாரு’ எனும் சொலவடையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சிறிதாக இருந்தாலும் நோய்களைப் போக்கும் மிகப் பெரிய வேலையைச் சுண்டைக்காய் செய்கிறது.
சுண்டைக்காயின் கசப்புத் தன்மை காரணமாக, அதன் பெயரைக் கேட்டவுடனே, காய்ந்த சுண்டை வற்றலைப் போல் பெரும்பாலோரின் முகமும் சுண்டிவிடுகிறது. கசக்கும் சுண்டைக்கு முகம் சுளிக்காமல் உணவில் இடமளிக்க, இனிக்கும் வாழ்வு நிச்சயம்!
பெயர்க் காரணம்: காய்கள் சுண்டிவிடும் தன்மை கொண்டவை என்பதால், ‘சுண்டை’ என்ற பெயர் உருவாகியிருக்கலாம். மலைச்சுண்டை, கடுகி, அமரக்காய் ஆகிய வேறு பெயர்களைக் கொண்டது சுண்டை. சுண்டையின் வகைகளில், மலைச்சுண்டை அதிகக் கசப்புச் சுவை கொண்டது, வீட்டுத் தோட்டங்களில் வளரும் பால் சுண்டைக்குக் கசப்புத் தன்மை சிறிது குறைவு. காட்டுச் சுண்டை, நஞ்சுச் சுண்டை, குத்துச் சுண்டை போன்ற வகைகளும் உண்டு.
அடையாளம்: ஓரளவு வளரும் பெருஞ்செடி வகை. அகன்று விரிந்த இலைகளில் சிறிய பிளவுகள் தென்படும். வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டிருக்கும். காய்கள் கொத்துக் கொத்தாகக் காய்க்கும். முட்கள் கொண்ட தாவரம். சுண்டையின் தாவரவியல் பெயர் ‘சொலானம் டார்வம்’ (Solanum torvum). இதன் குடும்பம் ‘சொலானேசியே’ (Solanaceae). ரூடின் (Rutin), கேம்ஃபெரால் (Kaempferol), குவர்செடின் (Quercetin), சொலாஜெனின் (Solagenin) போன்றவை இதிலுள்ள வேதிப் பொருட்கள்.
உணவாக: வற்றல் வகைகளில் சுண்டை வற்றலுக்கு என்றுமே தனி மரியாதை உண்டு. வயிற்றுவலி, உப்புசம், ஏப்பம், சுவையின்மை போன்ற செரியாமை சார்ந்த அறிகுறிகளைக் குணப்படுத்த, சுண்டை வற்றல் மட்டுமே போதும் என்கிறது சித்த மருத்துவம். உலர்ந்த சுண்டைக் காய்களைப் பிளந்து, உப்பு சேர்த்து தயிரில் கலந்து வெயிலில் காய வைத்து, நன்கு உலர்த்தி வற்றலாகச் செய்துகொள்ளலாம்.
குடல் பகுதிகளில் இருக்கும் கிருமிகளை அழித்து, செரிமானப் பாதையைப் பாதுகாக்கும் ‘மூலிகைக் காவலன்’ தான் சுண்டை. கழிச்சல் நோயைக் கட்டுக்குள் வைக்க சுண்டை வற்றலைப் பொடியாக்கி, மோரில் கலந்து சாப்பிடலாம். மந்தமான வயிற்றின் செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் இது உதவுகிறது. சுண்டையின் கசப்புச் சுவையை ஈடுகட்ட, பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டலாம்.
மருந்தாக: இதன் காய்களுக்கு நுண்ணுயிர்க்கொல்லி செய்கை (Anti-microbial) இருப்பது ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுண்டையிலுள்ள டார்வனால் (Torvanol), டார்வோசைட் (Torvoside) போன்ற தாவர வேதிப்பொருட்கள், சில வகையான வைரஸ்களுக்கு எதிராகச் செயல்பட உதவுகின்றன. அதிக அளவு அமிலச் சுரப்புகளிலிருந்து வயிற்றுத் தசைகளுக்குப் பாதுகாப்பளிக்கும் சளி திரவத்தை (Mucus) சுரக்கச் செய்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் (Anti-ulcerogenic) இதன் இலைச் சாறு தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வீட்டு மருத்துவம்: முதிர்ந்த சுண்டையின் பழங்களை அரைத்து நெற்றியில் பற்றுப் போட, தலைவலி குறையும். முதிராத சுண்டையைச் சமைத்துச் சாப்பிட சளி, இருமல் மறையும். பசியைத் தூண்டுவதற்கான சித்த மருந்துகளில் சுண்டைக்காய் சேர்க்கப்படுகிறது. ‘சுண்டை வற்றல் சூரணம்’ எனும் சித்த மருந்து, குடல் சார்ந்த நோய்களைக் குணப்படுத்த உதவும். சுண்டை வற்றல், நெல்லி வற்றல், வெந்தயம், மாதுளை ஓடு, சீரகம், கறிவேப்பிலை… இவற்றை லேசாக வறுத்துப் பொடிசெய்து வைத்துக்கொண்டு, ஐந்து சிட்டிகை அளவு மோரில் கலந்து அருந்தினால் கழிச்சலும் ஆசனவாய் எரிச்சலும் குறையும். நார்ச்சத்து, புரதம், இரும்புச் சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற தனிமங்களும் சுண்டையில் அதிகம்.
‘என்ன சாப்பிட்டாலும் பிள்ளையின் உடம்புல ஒட்ட மாட்டேங்குதே’ என்று அங்கலாய்க்கும் பெற்றோர்கள், சுண்டைக்கு அவ்வப்போது உணவில் இடம் அளிக்கலாம். உணவின் சாரம் முறையாக உறிஞ்சப்பட்டு, உடலில் சதைப் பிடிக்க ஆரம்பித்துவிடும். சுண்டை இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கங்களில் வைத்துக் கட்டலாம். உடலின் வெப்பத்தைக் குறைக்க, இதன் இலைச் சாற்றைப் பருகலாம்.
தயிரோடு சேர்ந்து உலர்ந்துகொண்டிருந்த சுண்டை வற்றலை வீடுகளில் பார்ப்பது இப்போது அரிதாகிவிட்டது. சுண்டைக்காய் புளிக் குழம்பின் ருசியில் மயங்கிய கடந்த தலைமுறைக்கு, செரிமான நோய்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. வயிற்றுக்குள் குறுகுறுவென நடனமாடும் புழுக்களை அழித்து, செரிமானப் பகுதியைச் சுத்தம் செய்ய, சுண்டையைவிடச் சிறந்த உணவு இல்லை என்பதை இந்தத் தலைமுறையும் புரிந்துகொண்டால் செரிமான நோய்கள் தலை காட்டாது. சாப்பிட்டுப் பாருங்கள்… ‘சுண்டைக்காய் சூப்பர் காய்!’ என்பீர்கள்.

Last edited by சிவா on Sun Oct 07, 2018 12:40 pm; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/sivastar
சிவா- நிறுவனர்
- பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875
Re: சுண்டைக்காய்
சுண்டைக்காய் வற்றல் பற்றிய வெண்பா
பித்தவரோசகம்போம் பேராப்புழுச்சாகும்
உற்றகிறாணியும்போம் உட்பசியாம் – சத்தியமாய்
பண்டைக்குதவாமம் பற்றுமிங்கியாரையுந்தான்
சுண்டைக்காய் வற்றலுண்ணச் சொல்.
உற்றகிறாணியும்போம் உட்பசியாம் – சத்தியமாய்
பண்டைக்குதவாமம் பற்றுமிங்கியாரையுந்தான்
சுண்டைக்காய் வற்றலுண்ணச் சொல்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/sivastar
சிவா- நிறுவனர்
- பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875
Re: சுண்டைக்காய்
சுண்டைக்காயின் குணங்கள்
1. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
2. இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. இரும்புச் சத்து என்றதும், கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோருக்கு சுண்டைக்காயில் அது அதிகம் உள்ளது என்பது புதிய விஷயமாகும்.
3. காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன் , காயங்களையும் , புண்களையும் ஆற வைக்கும்.
4. தையமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்ககூடியது.
5. நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்ககூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்.
6. சித்த மருத்துவத்தில், சுண்டைக்காயின் பயன்பாடு மிக அதிகம். பல மருந்து தயாரிப்புகளுக்கு இதனை உபயோகிக்கிறார்கள்.
7. பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக ‘அங்காயப் பொடி’ என ஒன்று கொடுப்பார்கள். அதில் பிரதானமக சேர்கக்ப்படுவதே சுண்டைக்காய்தான்.
8. தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி , உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.
மருத்துவ குணங்கள்:
அ) உணவின் மூலம் நம் உடலுக்குள்சேர்கிற கிருமிகள் அமைதியாகஉள்ளே பல்வித பாதிப்புகளை உருவாக்கலாம். அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது தவிர்க்கப்படும்.
ஆ) சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி தினம் சிறிதளவு தண்ணீரில் கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய்த் தொற்றும், அதன் விளைவாக உண்டாகிற அரிப்பும் குணமாகும்.
இ) வாரத்தில் 4 நாட்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு, ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.
ஈ) சுண்டைக்காயைக் காய வைத்து, வற்றலாக்கி, சில துளிகள் எண்ணெய் விட்டு, வறுத்து சூடான சாதத்தில், பொடித்துச் சேர்த்து, ஒரு கவளம் சாப்பிட அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.
உ) வாயுப் பிடிப்பு பிரச்சினை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து.
ஊ) பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படுமென்பது பெண்களுக்கு நல்லது.
எ) பக்கவாதம் பாதித்தவர்களுக்குக்கூட சுண்டைக்காய் மெல்ல மெல்ல நிவாரணம் தரும் .

மேற்கோள் செய்த பதிவு: 1280838@சிவா wrote:சுண்டைக்காய் வற்றல் பற்றிய வெண்பாபித்தவரோசகம்போம் பேராப்புழுச்சாகும்
உற்றகிறாணியும்போம் உட்பசியாம் – சத்தியமாய்
பண்டைக்குதவாமம் பற்றுமிங்கியாரையுந்தான்
சுண்டைக்காய் வற்றலுண்ணச் சொல்.
சுண்டைக்காய் பற்றிய பல அரிய தகவல்களை சிவா நீங்களும் மோகன் அவர்களும் வழங்கி உள்ளீர்கள்
மிகவும் உபயோகமாக இருக்கும் பதிவு
நன்றி.. நன்றி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 11662
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2547
Re: சுண்டைக்காய்
அடிக்கடி உணவில் சுண்டைக்காய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சுண்டைக்காயில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்க செய்யும். சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலை பயன்படுத்தலாம்.
வாயுப் பிடிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து. பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும்.
ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிட்டால். நோய் கட்டுப்படும். சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது. கல்லீரல், மண்ணீரல் நோய்களையும் நீக்க உதவுகின்றது..
அதேபோன்று சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்
மூல நோய் உள்ளவர்கள் ஒரு கைபிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கும். மூல நோயால் உண்டாகும் ரத்தக் கசிவும் நீங்கிவிடும்
சுண்டைக்காயை உனவில் சேர்த்து வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். மேலும் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும் புளித்த ஏப்பம், மூட்டுவலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. எனவே உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்
குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க சுண்டைக்காய் உதவும். இவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்துவிடும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/sivastar
சிவா- நிறுவனர்
- பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|