ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 amutha jothi

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்!

View previous topic View next topic Go down

கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்!

Post by realvampire on Wed Feb 09, 2011 5:05 pm

'அமைதிப்படை' முதலான அரசியல் நையாண்டிப் படங்களும் மார்க்சியம்,
பெரியாரியம், தமிழ்த் தேசியம், ஈழ ஆதரவு என வெளிப்படையான அரசியல் பேசுகிற
துணிச்சலும் இயக்குநர், நடிகர் மணிவண்ணனின் அடையாளம். விபத்தில் அடிபட்டு
கால் உந்தி நடக்கும் நிலையிலும், முத்துக்குமாரின் இரண்டாவது நினைவு
தினத்தில் பங்கேற்றுத் திரும்பிய மணிவண்ணனைச் சந்தித்தோம்.


நீங்கள் சினிமாவில் இருந்துகொண்டே, தொடர்ச்சியாக அரசியல் பேசி வருபவர்.
ஆனால், ஏன் தீவிர அரசியலில் இறங்கவில்லை? சீமானைப் போல ஓர் இயக்கம்
ஆரம்பிக்க வேண்டும், மக்களை அணி திரட்ட வேண்டும் என்று ஏன் உங்களுக்குத்
தோன்றவில்லை?


"அது சீமானுக்கே இப்போதுதானே தோன்றியது. என்னிடம் உதவி இயக்குநராக
இருந்தபோது, அவர் இயக்கம் ஆரம்பிக்கவில்லையே. எப்போதுமே வரலாறுதான்
இயக்கத்தையும், அதற்கான தலைவர்களையும் உருவாக்குகிறது.


இப்போதுள்ள வரலாற்றுத் தேவைதான் சீமானை உருவாக்கியது. ஆனால், சினிமா
துறையில் நீண்ட காலமாகவே நான் ஈழ ஆதரவு அரசியல் பேசி வருபவன். அதற்காக
மனப்பூர்வமான வேலைகளைச் செய்து வருபவன். ஆனால், நான் எப்போதும் என்னை
முன்னிலைப்படுத்தியது இல்லை. புதிதாக இளைஞர்கள் தலைமை தாங்க வேண்டும் என்று
விரும்புபவன். இப்போது இருக்கக்கூடிய இயக்கங்கள், கட்சிகள்,
தமிழினத்துக்குத் துரோகம் இழைத்து விட்டன என்று கருதுபவர்கள், அமைப்புகளின்
மீது நம்பிக்கை இழந்தவர்கள்தான் சீமான் பின்னால் திரள்கிறார்கள். அந்த
நம்பிக்கையை சீமான் காப்பாற்றுவார் என்று நம்புகிறேன்!"


ம.தி.மு.க தொடங்கப்பட்டபோது வைகோவுக்கு ஆதரவாக இருந்தவர் நீங்கள். ஆனால்,
இன்று ம.தி.மு.க-வில் இருந்து ஆர்.சுந்தர்ராஜன், கலைப்புலி தாணு தொடங்கி
பலர் வரிசையாக
வெளியேறுகிறார்களே, இது வைகோவுக்கு வீழ்ச்சியா?


"என்னங்க இது, சுந்தர்ராஜன் வெளியேறிட்டா... வைகோவுக்கு வீழ்ச்சியா? நான்
எப்போதும் ம.தி.மு.க-வில் உறுப்பினராக இருந்தது இல்லை. இன்றைக்கு சீமானை
எப்படி நம்பிக்கைக்குரிய தலைவராகப் பார்க்கிறேனோ, அதேபோல... அன்று வைகோவை
நம்பிக்கைக்கு உரியவராகப் பார்த்தேன். அவர் தி.மு.க-வைவிட்டு
வெளியேற்றப்பட்டபோது அவரை ஆதரித்தேன்.


ஆனால், ஆர்.சுந்தர்ராஜன், தாணு போன்றவர்கள் கட்சியைவிட்டு வெளியேறி,
விடுகிற அறிக்கைகள் நல்ல நகைச்சுவை. கட்சியைவிட்டு வெளியேறுவதுன்னு
முடிவெடுத்தவுடனே 10 வருஷமா நடந்ததைத் தொகுத்து குற்றப்பத்திரிகை
வாசிக்கிறாங்க. அப்ப 10 வருஷமா இவங்க என்ன செஞ்சாங்க, அந்த முறைகேடுகளுக்கு
எல்லாம் துணைபோனாங்கன்னுதானே அர்த்தம்?


ஒருவேளை, கட்சித் தலைமை தவறு செய்யுதுன்னா, 10 வருஷமா அந்தத் தவறுகளுக்குத்
துணை போனவங்களுக்கு என்ன தண்டனை? அவர்களுக்குச் சுயவிமர்சனம் இல்லையே!
எனக்கு இன்னமும் வைகோ மீது நம்பிக்கை இருக்கிறது!"


ஈழப் பிரச்சினையை முன்வைத்து கலைஞரை எதிர்ப்பது சரிதானா?


"சரியானதுதான். இந்திய அரசு ராணுவத்தைப் பயன்படுத்தி ஈழத் தமிழர்களை
அழித்தது என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்களே சொல்கிறார்கள்.
மணிவண்ணனுக்குத் தெரிந்த இந்த உண்மை, கலைஞருக்குத் தெரியாதா, என்ன? அவரைப்
பொறுத்தவரை, கூட்டணி முக்கியம், தேர்தல் முக்கியம், அதனால் காங்கிரஸ்
முக்கியம்.


அதனால்தான் இந்த மூன்றிலும் கலைஞரைத் தோற்கடிக்க வேண்டும். அட, ஈழத்
தமிழர்களை விடுங்கள். மீனவர் படுகொலை மாதாமாதம் நடக்கிறதே, அதற்கு என்ன
செய்தார்கள்?


நிருபமா ராவ் எப்போதும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்குப் போய், திங்கட்கிழமை
இந்தியா திரும்பிவிடுகிறார். ஹாலிடே டூர் மாதிரி ஆயிடுச்சு. கட்சி,
அரசியல், தமிழன், தெலுங்கன் இதையெல்லாம் விடுங்கள். மனித உயிர்களுக்கு
மதிப்பு வேண்டாமா? ஏதோ தேர்தல் நேரமாக இருப்பதால், செத்துப்போன மீனவர்
குடும்பத்துக்கு 5 லட்சம் கொடுக்கிறார்கள். இல்லையென்றால், அதுவும்
இருக்காது. செம்மொழி மாநாடு நடத்தினார்கள். இறந்துபோன ஈழத் தமிழர்களுக்காக
ஒரு இரங்கல் தீர்மானம் உண்டா?


நான், பிரபாகரனுக்கோ, நடேசனுக்கோ தீர்மானம் நிறைவேற்றச் சொல்லவில்லை.
ஆனால், தமிழ் மொழியைப் பேசத் தொடங்குவதற்கு முன்பே ஒரு தமிழ்ப் பெண்ணின்
வயிற்றில் பிறந்ததால், சிங்களப் பேரினவாத அரசால் கொல்லப்பட்ட
குழந்தைகளுக்காகவாவது இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி இருக்கலாமே? ஆனால்,
கலைஞர் ஈழத்தில் இருந்து சிவத்தம்பி என்ற அறிஞரை அழைத்து வந்து, 'ஈழம்
என்பது தமிழ்ச் சொல் அல்ல' என்று பேசவைத்தார்.


சிலர் என்னிடம் வந்து 'இது பிரைன் வாஷ்' என்றார்கள். 'இல்லை இல்லை, பிரைன்
டியூமர்' என்றேன் நான். சுய மரியாதை உள்ளவர்கள் காங்கிரஸையும்
காங்கிரஸூக்குத் துணை போகும் தி.மு.க-வையும் எதிர்ப்பது நியாயம்தான்.
ஆனால், எனக்கு நாடாளுமன்ற அரசியலில் நம்பிக்கை இல்லாததால், தேர்தல்
பிரசாரத்துக்குப் போக மாட்டேன். ஓட்டும் போட மாட்டேன்!"


"நீங்கள் சினிமாவிலும் வெளியிலும் என்னதான் பகுத்தறிவு பேசினாலும்,
சாமியார்களைத் தேடிச் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகத்தானே
செய்கிறது?"


"அட, நம்ம ரஞ்சிதாவே ஒரு சாமியார் கிட்ட போய் மாட்டிக்கிட்டாங்களே.
கார்ப்பரேட் செக்டார் அதிகரிக்க... அதிகரிக்க, கார்ப்பரேட் சாமியார்களும்
அதிகரிக்கிறார்கள். ஆன்மிகம், தியானம் என்று பேசக்கூடிய எல்லா
சாமியார்களுமே ஓஷோவிடம் இருந்து சிந்தனைகளைத் திருடியவர்கள்தான்.


நித்யானந்தாவிடம் இருந்த ராகசுதா, பல சினிமா நட்சத்திரங்களை அவரின்
ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார். என்னிடம்கூட ஒருமுறை, 'சாமியும் நீங்க
சொல்ற மாதிரி கடவுள் இல்லைன்னுதான் சொல்றார். அவரோடு டிஸ்கஸ் பண்ண வாங்க'னு
கூப்பிட்டாங்க.
'ரொம்பச் சந்தோஷங்க. அவருக்கும் எனக்கும் ஒரே கருத்தா? அப்புறம் அவர்கிட்ட
பேசி என்ன செய்யப்போறேன்?'னு மறுத்துட்டேன். உலகமயமாக்கல், அதனால் ஏற்படும்
மன அழுத்தம் இதுதான் நடுத்தர வர்க்கத்து மக்களைக் கார்ப்பரேட் சாமியார்களை
நோக்கித் தள்ளுது. இது புரியணும்னா... நமக்கு மார்க்சியமும் பெரியாரும்
தெரியணும்!"
avatar
realvampire
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 192

View user profile http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

Re: கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்!

Post by கோவை ராம் on Wed Feb 09, 2011 5:18 pm

அப்பா மணிவண்ணன் என்ன தெளிவா இருக்கார் .பெரியாரின் சீடனுக்கு உரிய தெளிவு .அருமையான விளக்கங்கள் .

ராம்
avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்!

Post by திவா on Wed Feb 09, 2011 5:26 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்!

Post by SK on Wed Feb 09, 2011 5:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6429
மதிப்பீடுகள் : 1140

View user profile

Back to top Go down

Re: கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்!

Post by கண்ணன்3536 on Wed Feb 09, 2011 6:55 pm

உரத்த குரலில் உரிமையுடன் கேள்
avatar
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 752
மதிப்பீடுகள் : 86

View user profile http://liberationtamils.blogspot.com

Back to top Go down

Re: கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்!

Post by nandhtiha on Wed Feb 09, 2011 7:20 pm

respected all
there is no question of brain wash. we have now to wash the brains
ever loving
nandhitha

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1589
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்!

Post by கலைவேந்தன் on Wed Feb 09, 2011 10:06 pm

அருமையான கருத்துக்கள் கூறி இருக்கிறார் மணிவண்ணன்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்!

Post by பிளேடு பக்கிரி on Wed Feb 09, 2011 10:26 pm

புன்னகை புன்னகை புன்னகைavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்!

Post by ranhasan on Fri Feb 18, 2011 9:15 am

தெளிவான சிந்தனை நிதானமிக்க பேசு மணிவண்ணன் என்றுமே எனக்கு பிடித்த பகுதறிவாளி
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: கலைஞரை எதிர்ப்பது சரியானதுதான்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum