புதிய இடுகைகள்
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்புT.N.Balasubramanian
சிந்திக்க சில நொடிகள்
Dr.S.Soundarapandian
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
Dr.S.Soundarapandian
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
Dr.S.Soundarapandian
சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
M.Jagadeesan
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
T.N.Balasubramanian
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
ராஜா
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
Dr.S.Soundarapandian
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
பழ.முத்துராமலிங்கம்
நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
பழ.முத்துராமலிங்கம்
ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
Dr.S.Soundarapandian
ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
Dr.S.Soundarapandian
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
Dr.S.Soundarapandian
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
Dr.S.Soundarapandian
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
Dr.S.Soundarapandian
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
Dr.S.Soundarapandian
ட்விட்டரில் ரசித்தவை
ஜாஹீதாபானு
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
ஜாஹீதாபானு
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
Dr.S.Soundarapandian
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
Dr.S.Soundarapandian
வணக்கம் நண்பர்களே
ஜாஹீதாபானு
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
ஜாஹீதாபானு
தலைவருக்கு ஓவர் மறதி...!!
Dr.S.Soundarapandian
தலைவர் தத்துவமா பேசறார்....!!
Dr.S.Soundarapandian
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
SK
பண்டைய நீர்மேலாண்மை
Dr.S.Soundarapandian
பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
Dr.S.Soundarapandian
பசு மாடு கற்பழிப்பு
SK
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
SK
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
SK
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
SK
காங்., பேரணியில் பாலியல் தொல்லை
M.Jagadeesan
ஐ.பி.எல் -2018 !!
ayyasamy ram
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
ayyasamy ram
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
அம்புலிமாமா
மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
அம்புலிமாமா
கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
SK
பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
SK
பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
SK
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
SK
தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
ayyasamy ram
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
SK
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
SK
என்ன படம், யார் யார் நடிச்சது
SK
வெறுப்பா இருக்கு!
SK
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
SK
100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
SK
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
ayyasamy ram
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
கீரையின் பயன்கள்
danadjeane
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ராஜா |
| |||
heezulia |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!
Page 1 of 2 • 1, 2
வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!
ஃபாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்! என்ன செய்வாங்க.. நம்மாளுங்க வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்தா? அவங்க பண்ற அலப்பரைகளை பத்திதான் ஆராய்ச்சி பண்ணி கீழ எழுதியிருக்கேன். கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா இருக்காங்களளளாம்!)
வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)
கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா?)
குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்க!)
கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க... (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)
சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)
எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல யோசிச்சி "ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்"னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)
தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு "எக்ஸ்சூஸ்மீ" ன்னு சொல்றது... (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!)
"செளக்கியமா"ன்னு கேக்காம.. "ஹாய்"ன்னு சொல்றது, "லட்ச"த்துக்கு பதிலா.. "மில்லியன்ல" சொல்றது, தயிருக்கு பதிலா.. "யோகர்டு"ன்னு சொல்றது, "ஹய்வே"க்கு பதிலா "ஃப்ரீவே"ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)
சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா "கோக்கோ (அ) பெப்சியோ" இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)
சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. "தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா" ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)
வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி... அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. சாமீகளா! பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல!)
கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு... எதை சொல்ல வந்தாலும்.. "இப்படிதான் துபாய்ல...", "இப்படிதான் நான் சிங்கபூர்ல இருந்தப்ப... " ன்னு ஆரம்பிப்பாங்க!! (மேலே உள்ளது பாதி அடியேனும் செய்வேன்னு.. யாராவது போட்டு குடுக்குறதுக்கு முன்னாடி, நானே ஒத்துகுறேன் நனபர்களே !!)

qnbindia- பண்பாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 61
மதிப்பீடுகள் : 9
Re: வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!
நானும் இதுல உள்ள சிலதை செய்றேன். என்ன பண்றது இங்க வசதியா இருந்துட்டு நம்ம நாட்டுக்கு போய் அங்க ஏற்படுரா சின்ன சின்ன வசதி குறைவை கூட ஏத்துக்க முடிய மாட்டேங்குது.இத்தனைக்கும் நாம வெளிநாடு போற சமயம் வரை அங்க இருக்கற அந்த குறைஞ்ச வசதில இருந்தவங்கதான்.ஆனா இங்க வந்து இருக்கற அந்த கொஞ்ச வருசத்துல மாறி போறோமேன்னு நினைச்சு எனக்கு வருத்தமாதான் இருக்கு
உதயசுதா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070
Re: வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!
அப்ப நான் மட்டும் தான் இங்க நல்லவனா? தமிழ்நாட்டு எல்லையை தாண்டி போனதில்லை
நிசாந்தன்- இளையநிலா
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 957
மதிப்பீடுகள் : 3
Re: வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்
எனது மின்னூல் தளம்:
http://tamilnesan1981.blogspot.in
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 3518
மதிப்பீடுகள் : 969
Re: வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!
ஹாஹா ரசித்தேன்...
ஆனால் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்து அலட்டாம இருக்கும் ஒரு சில கேணம்ஸும் உண்டு அடியேன் தான் அது....
இங்கிருந்து இந்தியா போன அன்னிக்கு தண்ணி குடிச்சு தொண்டை கட்டிக்கிட்டு பாடமுடியாது அது அடுத்த விஷயம் பேசவே முடியாம அவஸ்தை படுவதுண்டு.... தரையில் வெறுமனே படுத்து உருள்வது இஷ்டமான காரியம்.. ஜூன் மாசம் ஊருக்கு போய் ஜில்லுனு தண்ணில எத்தனை முறை குளித்தாலும் ஜாலியா இருக்கும்.... தினமும் கோவிலுக்கு போவதுண்டு அங்கு சுழலும் ஊதுவத்தி மணமும் விபூதி சந்தனத்தின் வாசமும் பிரசாத நெய்யின் மணமும் மனதை நிறைக்கும்....
வெளிநாட்டில் இருந்து வந்த மாதிரியே காமிச்சுக்காம செம்ம ரகளை செய்வோம் எப்பவுமே உடம்புக்கு தான் வயசாகுது ஆனால் பேச்சும் செயலும் அப்படியே தான் செம்ம வாலு என்ற செல்லப்பெயர் இப்பவும் உண்டு....

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888
Re: வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!
நம்ம ஊருக்கு போனால் 1 மாதம் குபுஸ் விட முடியாது, இதை விட புளுக்கம் நம்மை ஒரு வழி பண்ணும்.
ramesh.vait- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18
Re: வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!
@ramesh.vait wrote:நம்ம ஊருக்கு போனால் 1 மாதம் குபுஸ் விட முடியாது, இதை விட புளுக்கம் நம்மை ஒரு வழி பண்ணும்.
அதானே பார்த்தேன் எங்கே நைனாவ கானம்னு...!

Tamilzhan- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239
Re: வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!
வந்துட்டான் தமிழா.... எப்படி இருக்கீங்க எப்ப ஊருக்கு பூரிங்க நம்ம ராஜா ?@Tamilzhan wrote:@ramesh.vait wrote:நம்ம ஊருக்கு போனால் 1 மாதம் குபுஸ் விட முடியாது, இதை விட புளுக்கம் நம்மை ஒரு வழி பண்ணும்.
அதானே பார்த்தேன் எங்கே நைனாவ கானம்னு...!![]()
ramesh.vait- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18
Re: வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!
இப்போ தானே வந்தேன் அதுக்குள்ள விரட்டுறிங்க..? 

Tamilzhan- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239
Re: வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!
@Tamilzhan wrote:இப்போ தானே வந்தேன் அதுக்குள்ள விரட்டுறிங்க..?

ramesh.vait- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18
Re: வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!
தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு "எக்ஸ்சூஸ்மீ" ன்னு
சொல்றது... (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான்
பார்போம்ங்கறது வேற விசயம்!!)

சொல்றது... (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான்
பார்போம்ங்கறது வேற விசயம்!!)

lijo- பண்பாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 58
மதிப்பீடுகள் : 6
Re: வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!
அட நானும் தான். ஊருக்கு வந்து நான் சிங்கப்பூர் இருந்து வறேன்னு சொன்னா ஒரு பய புள்ளயும் நம்ப மாட்டாக்குது தலிவா.
jkumar_b- புதியவர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2
மதிப்பீடுகள் : 10
Re: வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!
@நிசாந்தன் wrote:அப்ப நான் மட்டும் தான் இங்க நல்லவனா? தமிழ்நாட்டு எல்லையை தாண்டி போனதில்லை
நிஷாந்தன் அண்ணே... நானும் நல்லவன் நானும் நல்லவன்... என்னாயே விடுடிங்க பார்த்தீங்களா...

Guest- Guest
நிகழ்நிலை இணையாநிலை
Re: வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!
ஒண்ணு கூடிட்டாங்கப்பா, ஒண்ணு கூடிட்டாங்கமதன்கார்த்திக் wrote:@நிசாந்தன் wrote:அப்ப நான் மட்டும் தான் இங்க நல்லவனா? தமிழ்நாட்டு எல்லையை தாண்டி போனதில்லை
நிஷாந்தன் அண்ணே... நானும் நல்லவன் நானும் நல்லவன்... என்னாயே விடுடிங்க பார்த்தீங்களா...![]()

உதயசுதா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070
Re: வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!
இது கூட இல்லையின்னா...அப்புறம்..
அந்த வெளிநாட்டுல இருந்து என்ன பிரயோசனம்..?
மறக்காம நான் ஊருக்கு வரும்போது
வீட்டில் வந்து சிங்கப்பூர் சென்ட் வாங்கிக்கங்க...

தேனி சூர்யாபாஸ்கரன்- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 3208
மதிப்பீடுகள் : 108
Re: வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!
எங்க வந்து வாங்கனும் பாஸ்கி?? ஒரு கூட்டமே காத்திருக்குது அனுப்பி வைக்கவா? ஹாஹா....
மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888
Re: வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!
அக்கா..நீங்க வரும் போது எங்களுக்கு GOLD வாங்கி வரும் போது@மஞ்சுபாஷிணி wrote:எங்க வந்து வாங்கனும் பாஸ்கி?? ஒரு கூட்டமே காத்திருக்குது அனுப்பி வைக்கவா? ஹாஹா....
இந்த தம்பி சென்ட் கடையே..கொண்டு வருவான்..தேனிக்கு..

எல்லோரும் வாங்கிக்கலாம்...

தேனி சூர்யாபாஸ்கரன்- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 3208
மதிப்பீடுகள் : 108
Re: வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595
Re: வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை!!!!

அருண்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748
Re: வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888
Re: வெளிநாட்டுல இருந்து திரும்பி வருபவர்களின் அலும்புகள் !!!
@qnbindia wrote:ஃபாரின் ரிட்டன்ஸின் அலப்பரைகள்! என்ன செய்வாங்க.. நம்மாளுங்க வெளிநாடுகளுக்கு போயிட்டு வந்தா? அவங்க பண்ற அலப்பரைகளை பத்திதான் ஆராய்ச்சி பண்ணி கீழ எழுதியிருக்கேன். கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரியிவாங்க... (அவங்க சுகாதாரமா இருக்காங்களளளாம்!)
மினரல் வாட்டரோ இல்லை காய்ச்சி ஆற வச்ச தண்ணியோ குடிக்காம முன்ன மாதிரி குழா தண்ணி குடிச்சு உடம்பு சரியில்லாம போயிருச்சுன்னா, இருக்குற மூணு வார விடுமுறைய மருத்துவமனைல களி(ழி)க்கணுமேன்னு பயம் தான்.
@qnbindia wrote:வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க.. (10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)
இது அலம்பல் எல்லாம் இல்ல. வருச கணக்குல நம்ம பயபுள்ளகள பாக்காம இருந்துட்டு இப்ப பாக்குற நேரத்துல இந்த சின்ன பேப்பர எல்லாம் எப்படி ஞாபகம் வச்சிகிட்டு கிழிக்கிறதாம்.
@qnbindia wrote:கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க.. (நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா?)
இதுக்கு காரணம் உடம்பு வளையாமை தான். அதனால ஒரு நப்பாச. எப்படியாவது இது உருளாதா. அப்படி உருண்டுட்டா இத நாம தூக்காம இழுத்துகிட்டே திரியலாமே...
@qnbindia wrote:குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது (பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்க!)
இது எல்லாரும் கெடயாது. ஏதாவது சின்னப்பய புள்ளக ஆர்வக் கோளாறுல பண்ணி இருக்கும். பாவம் மன்னிச்சி விட்டிருங்க.
@qnbindia wrote:கையேந்தி பவன்ல கூட கிரிடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க... (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)
என்னத்த பண்ண. நம்மள் நம்பி நம்மூருல ரூவா தர ஒருத்தருமில்லையே. சரி மாத்தி வச்சிக்கலாம்னா, நம்மூரு வெலவாசி எல்லாம் மறந்து போனதால, மூணு வார லீவுக்குன்னு எடுத்த பணம் மூணே மணி நேரத்துல காலி ஆயிருது.
@qnbindia wrote:சுத்தத்தை பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)
இது நல்ல விசயம் தான. நல்லது எங்க இருந்து எப்படி வந்தா என்ன
@qnbindia wrote:எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல யோசிச்சி "ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்"னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)
முத முத வெளிநாட்டுல இறங்கினப்ப எல்லாத்தையும் ரூபாயில மாத்தி பாத்து பாத்து தாகத்துக்கு தண்ணி கூட வாங்கி குடிக்காம அலைஞ்ச கதை நல்ல வேலை நம்மூருல யாருக்கும் தெரியாது. என்ன செய்ய... நம்மள வளத்த வளப்பு அப்படி. ஆத்துல போட்டாலும் அளந்து போடுன்னு சொல்லி சொல்லில்ல வளத்தாக.
[quote="qnbindia"]தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு "எக்ஸ்சூஸ்மீ" ன்னு சொல்றது... (அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!) [quote/]
இது பழக்கம் தான். திடீருன்னு எப்படி மாத்துறதாம்.
@qnbindia wrote:"செளக்கியமா"ன்னு கேக்காம.. "ஹாய்"ன்னு சொல்றது, "லட்ச"த்துக்கு பதிலா.. "மில்லியன்ல" சொல்றது, தயிருக்கு பதிலா.. "யோகர்டு"ன்னு சொல்றது, "ஹய்வே"க்கு பதிலா "ஃப்ரீவே"ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)
இதும் பழக்கம் தான். திடீருன்னு எப்படி மாத்துறதாம்.
@qnbindia wrote:சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா "கோக்கோ (அ) பெப்சியோ" இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)
இதும் எல்லாரும் கெடயாது. ஏதாவது சின்னப்பய புள்ளக ஆர்வக் கோளாறுல பண்ணி இருக்கும். பாவம் மன்னிச்சி விட்டிருங்க.
@qnbindia wrote:சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. "தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா" ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)
இதுல பாதி (குபாக்/குணாஃபா ) என்னன்னு எனக்கு தெரியாததால எஸ்கேப்பு.
@qnbindia wrote:வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி... அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. சாமீகளா! பணம் டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல!)
சரிதான். கே.பி.என் ல ஏறிட்டு மருதைல இறங்கி 'என்னதாம் சொல்லு. கே.பி.என் மாறி வராது. சென்னைல எடுத்தாம்னா ஒரே அழுத்துதாம். சும்மா பட்டய கிளம்புறாம். நேரா வந்து நடுவால ஒரு இடத்துல சாப்பிட நிறுத்துறாம் பாரு. அது வரைக்கும் எல்லாஞ் சரி தேன். நிறுத்துன இடத்துல ஒண்ணுக்குப் போறதுக்கு மூணு ரூவா கேக்காம். சரின்னு நைசா புளியமரத்தடில ஒதுங்கப் பாத்தா அங்கன ஒருத்தன் கைல கட்டையோட நின்னுகிட்டு அப்பன் ஆத்தான்டு எல்லாரையும் கெட்ட கெட்ட வார்த்தைல திட்டுறான். வேற வழி இல்லாம, சும்மா போற ஒண்ணுக்குக்கு, மூணு ரூவா தண்டமழுது.......' இப்படி எல்லாம் மக்கமாரு பேசி கேட்டதே இல்லயா.
@qnbindia wrote:
கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு... எதை சொல்ல வந்தாலும்.. "இப்படிதான் துபாய்ல...", "இப்படிதான் நான் சிங்கபூர்ல இருந்தப்ப... " ன்னு ஆரம்பிப்பாங்க!! (மேலே உள்ளது பாதி அடியேனும் செய்வேன்னு.. யாராவது போட்டு குடுக்குறதுக்கு முன்னாடி, நானே ஒத்துகுறேன் நனபர்களே !!)
இங்கிட்டு வெளி நாட்டுல வந்து 'இப்படித்தான் எங்கூருல....' ன்னு சொல்லிகிட்டு எப்பவுமே இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசப்படுற சாதி சனம் தான நம்மாளுக.
சிப்பி- புதியவர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 25
மதிப்பீடுகள் : 13
Sponsored contentநிகழ்நிலை இணையாநிலை
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum