ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

2011 - ஆங்கில புத்தாண்டு பலன்

View previous topic View next topic Go down

2011 - ஆங்கில புத்தாண்டு பலன்

Post by krishnaamma on Tue Jan 04, 2011 5:15 pm

அசுவினி, பரணி, கார்த்திகை

பேச்சில் வசீகரம் நிறைந்த மேஷ ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு இரண்டில் கேது, எட்டில் ராகு, ஆறில் சனி, பன்னிரெண்டில் குரு என்கிற நிலையில் பிரதான கிரகங்களின் அமர்வு உள்ளது. சனிபகவான் மிகுந்த அனுகூல பலன் தருகிற வகையில் உள்ளார். தாமதமான செயல்களை நிறைவேற்றுகிற லட்சிய எண்ணம் மனதில் மலரும். குருபகவானின் பார்வை பதிகிற இடங்களின் வழியாக நற்பலன் கிடைக்கும். பெரியவர்களிடம் பேசுகிற வார்த்தையில் நிதானம் பின்பற்ற வேண்டும். வீடு, வாகனத்தில் தேவையான மாற்றங்களை செய்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர் பாசத்துடன் நடந்துகொள்வர். புத்திரர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பிடிவாத குணத்துடன் செயல் படுவர். பூர்வ சொத்தில் கிடைக்கிற வருமானம் சுமாராக இருக்கும். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். எதிரிகள் விலகிச் செல்வர். தம்பதியர் குடும்பநலன் கருதி ஒற்றுமையுடன் நடந்துகொள்வர்.

தொழிலில் இருந்த குறுக்கீடு விலகும். பணியிட மாற்றம், பதவி உயர்வு போன்றவை பெறுவதில் உள்ள முயற்சி அனுகூல பலன் தரும். கிடைக்கிற பண வரவை முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்துவதால் கடன்சுமை ஏற்படாத நன்னிலை உருவாகும். அரசு தொடர்பான காரியங்கள் நிறைவேற இதமான அணுகுமுறை பின்பற்ற வேண்டும். வெளிநாடு வேலைவாய்ப்பில் அனுகூல பலன் உள்ளது. தொழிலதிபர்கள் பொருளின் தரத்தை உயர்த்த நவீன யுக்திகளைக் கடைபிடிப்பர்.
உற்பத்தியை உயர்த்துவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் அதிக நன்மை பெறுவர். உபதொழில் துவங்கும் முயற்சியை பின்வரும் காலங்களில் நிறைவேற்றுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நகை, ஜவுளி, மளிகை, வாகனம், மருந்துப்பொருட்கள், விவசாய விளைபொருட்கள், பாத்திரம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கட்டுமானப் பொருட்கள், காய்கறி, பழங்கள், பர்னிச்சர் வியாபாரிகளுக்கு சந்தையில் இருந்த போட்டி குறையும். மற்ற வியாபாரிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். கிட்டங்கிகளில் கூடுதல் பாதுகாப்பு செய்ய வேண்டும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தமக்குள்ள பொறுப்பை உரிய கவனத்துடன் நிறைவேற்றுவர். பணியிடத்தில் இருந்த குறுக்கீடு விலகும். சம்பள உயர்வு, நிலுவை பணவரவு ஆகியவை கிடைக்கும். கடன்பாக்கிகளை ஓரளவு அடைப்பீர்கள்.

பணிபுரியும் பெண்கள் பணியிடத்தில் உள்ள மாறுபட்ட சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டியிருக்கும். பணிப்பளு உயரும் என்றாலும் அதை ஏற்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வீர்கள். நிர்வாக குளறுபடியால் சிலருக்கு வெளியூர் மாற்றம் ஏற்படும். குடும்பப் பெண்கள் கணவரின் குணநலன், பணவரவு, குடும்ப சூழ்நிலை இவற்றை கருத்தில் கொண்டு செயல்படுவர். முக்கிய தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு உற்பத்தி பெருகும். விற்பனை ஓரளவுக்கு இருக்கும். கடனுக்கு கொடுப்பதை இயன்ற அளவு தவிர்ப்பது நல்லது. லாபம் நன்றாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் உற்சாகத்துடன் செயல்படுவர். அதிக மார்க் கிடைக்கும். சக மாணவர்களுடன் கருத்து பேதம் கூடாது. படிப்பை முடித்தவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக அமையும். உறவினர்களின் உதவியால் முன்னேற்றம் அடைவீர்கள். அரசியல்வாதிகள் தங்கள் நற்பெயரை காத்துக்கொள்கிற எண்ணத்துடன் செயல்படுவர். புதிய பொறுப்புகளை பெறுவதில் இருந்த ஆர்வம் குறையும். எதிரிகளின் தொந்தரவு விலகும். புதிய பிரச்னைகளில் ஈடுபடாமல் விலகிச்செல்வது நல்லது. அரசியல் பணிக்கு புத்திரர்களின் உதவி பங்கு ஓரளவுக்கே இருக்கும். அரசியலுடன் தொழில், வியாபாரம் நடத்துபவர்கள் நல்ல லாபம் பெறுவர்.

விவசாயிகள்: விவசாய பணிகளை நிறைவேற்ற தேவையான அனுகூலம் அத்தனையும் கிடைக்கும். பயிர் மகசூல், கால்நடை வளர்ப்பில் முன்னேற்றம் வந்து தாராள பணவரவு பெறுவீர்கள்.

பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் தொழில் சிறந்து பணவரவு சீராகும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

ரிஷபம்

Post by krishnaamma on Tue Jan 04, 2011 5:16 pm

கார்த்திகை 2,3,4 ‌ரோகிணி, மிருகசீரிடம்

அன்பே வெல்லும் என்ற கொள்கையுள்ள ரிஷப ராசி அன்பர்களே!

உங்கள் ராசியில் கேது, ஐந்தில் சனி, ஏழில் ராகு, பதினொன்றில் குரு என்ற நிலையில் பிரதான கிரகங்களின் அமர்வு உள்ளது. குருபகவான் மிகுந்த நற்பலன்கள் வழங்கும் விதத்தில் உள்ளார். சமூகத்தில் இருக்கிற நற்பெயர் தொடர்ந்திடும். இளைய சகோதரர் கூடுதல் பாசத்துடன் நடந்துகொள்வர். வீடு, வாகனத்தில் பெறுகிற வசதியை சரிவர பயன்படுத்துவது போதுமானது. தாயின் எண்ணங்களை அறிந்து தேவையை நிறைவேற்றுவதால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் வளரும். புத்திரர்கள் தங்கள் சேர்க்கை சகவாசத்தினால் படிப்பில் பின்தங்குகிற கிரகநிலை உள்ளது. அதேசமயம் இவர்களை அளவுடன் கண்டிக்க வேண்டும். தவிர்த்தால் பெற்றோரிடம் மனக்கசப்பும், பிரிந்து வேறிடம் செல்கிற எண்ணமும் வளர்ந்திடும். பூர்வ சொத்துக்களை பாதுகாப்பதிலும் அதன்மூலம் வருமானம் பெறுவதிலும் கண்காணிப்புடன் செயல்படுவது அவசியம். தம்பதியரிடையே சிறுசிறு சலசலப்புகள் உருவாகி குருவருளால் சரியாகும். தந்தைவழி உறவினர்கள் மூலம் சில நன்மை கிடைக்கும்.

தொழில் சார்ந்த வகையில் கண்ணும் கருத்துமாக பணிபுரிவதால் மட்டுமே குறைபாடு வராத நன்னிலை திகழும். முக்கிய தேவைகளுக்கான பணவரவு சீராக கிடைக்கும். வெளிநாடு வேலைவாய்ப்பில் சுமாரான நன்மை கிடைக்கும். சுயதொழில் துவங்கும் வாய்ப்புக்களை செயல்படுத்த தேவையான முதலீடு, தொழில்நுட்பம் வருட பிற்பகுதியில் கிடைக்கும். தொழிலதிபர்கள் உற்பத்தியை பெருக்கி புதிய ஒப்பந்தமும் பெறுவர். பணியாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கே கிடைக்கும். லாபம் சுமாராக இருக்கும். நகை, ஜவுளி, மளிகை, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், கட்டுமானப் பொருள், தோல், பிளாஸ்டிக், ரப்பர் விற்பனை செய்பவர்கள் கூடுதல் வாடிக்கையாளர் கிடைத்து பணவரவில் முன்னேற்றம் காண்பர். மற்றவர்களுக்கு சுமாரான லாபம் கிடைக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் கருத்துபேதம் கொள்வர். அளவான மூலதனம், சீரான வாடிக்கையாளர் சேவை என்கிற கொள்கையை பின்பற்றுவதால் வியாபாரம் இன்னும் சிறக்கும். தொடர்பில்லாத பிற வியாபாரங்களில் ஈடுபட முயற்சிக்க வேண்டாம். அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலை பெரிதும் மதித்து பின்பற்றுவர். பணி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். தொழில் சார்ந்த பயிற்சி அல்லது புதிய தொழில்நுட்ப பயிற்சி பெற வாய்ப்பு உருவாகி நிறைவேறும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்று வதுநல்லது. சக பணியாளர்களுடன் சுமூக நட்பு தொடர்ந்திட தேவையற்ற விவாதம் பேசக்கூடாது. சலுகைகள் நல்லபடியாக கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் கூடுதல் முயற்சியுடன் பணிபுரிந்து திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவர். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் முயற்சியின் பேரில் கிடைத்து விடும். குடும்பப் பெண்கள் கணவரின் வருமானத்திற்கேற்ப செலவுகளில் சிக்கனம் பின்பற்றுவர். எதிர்கால வாழ்வு பற்றிய நம்பிக்கை வளரும். சுயதொழில் புரியும் பெண்கள் சுமாரான உற்பத்தி, எதிர்பார்த்த பணவரவு கிடைக்கப்பெறுவர். போட்டி குறைந்து நிம்மதியான மனநிலையைப் பெறுவர்.

மாணவர்களுக்கு மிகச்சிறப்பாகப் படிப்பர். படிப்பிற்கான பணவசதி எதிர்பார்த்தபடி கிடைக்கும். சக மாணவர்களுடன் கருத்துபேதம் வராத அளவிற்கு பேசுவது நல்லது. படித்து முடித்தவர்களுக்கு சில தடங்கல்களைச் சந்தித்தாலும் வேலைவாய்ப்பு உறுதியாக கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூகத்தில் ஏற்கனவே பெற்ற நற்பெயர் வளரும். ஆதரவாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அரசியல் பணிக்கு புத்திரரின் உதவி அளவுடன் இருக்கும். வம்பு, விவகாரங்களில் ஒதுங்கி செயல்படுவது நல்லது. வெளியூர் பயணம் புதிய நம்பிக்கை, அனுபவங்களை பெற்றுத்தரும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் சிலரது உதவியால் தொழில் சிறந்து தாராள பணவரவு காண்பர். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து பொருட்களுக்கு சந்தையில் நல்லவிலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அளவான நன்மை பெறுவீர்கள். குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சி நிறைவேறும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடக்கும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

மிதுன ராசி

Post by krishnaamma on Tue Jan 04, 2011 5:17 pm

மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூŒம் 1,2,3

தோற்றப்பொலிவுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு நான்கில் சனி, ஆறில் ராகு, பத்தில் குரு, பன்னிரெண்டில் கேது என்ற நிலையில் பிரதான கிரகங்களின் அமர்வு உள்ளது. ராகு நற்பலன்களை வழங்கும் விதத்தில் உள்ளார். பத்தில் குரு, நான்காம் இட அர்த்தாஷ்டம சனி சில குறுக்கீடுகளை உருவாக்கினாலும் சமயோசிதம், ஞானம் நிறைந்த சிந்தனை, செயல்களால் புடம்போட்ட தங்கமாய் ஜொலிப்பீர்கள். பொறுமையான போக்கு செயல்பாடுகளில் வெற்றியைத் தரும். உங்கள் சொல்லுக்கு சமூகத்தில் கூடுதல் மதிப்பு, மரியாதை கிடைக்கும். பணவரவுக்கு குறையேதும் இருக்காது. தம்பி, தங்கைகள் ஓரளவுக்கு உதவி செய்வர். வீடு,வாகனத்தில் தேவையான பராமரிப்பு பணிகளை நிறைவேற்றினால் போதும். புத்திரர்கள் படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் கண்டு உங்களின் குடும்பச்சுமை குறைய இயன்ற அளவு உதவுவர். பூர்வ சொத்தில் சிறு பகுதியை அடமானம் வைக்க, விற்பனை செய்ய சில சூழ்நிலைகள் உருவாகும். உடல்நலம் படிப்படியாக பலம்பெறும். உங்களிடம் எதிரித்தனமாக செயல்பட நினைப்பவர்கள் தன் நிலையில் பலமிழந்து போவர். வழக்கு, விவகாரத்தில் இருந்த தாமதம் விலகி அனுகூல பலன் கிடைக்கும். தம்பதியர் குடும்ப பொறுப்புகளை அக்கறையுடன் நிறைவேற்றி சந்தோஷமாக இருப்பர். சிலருக்கு வீடு, பணியிட மாற்றம் ஏற்படும். ஆபத்து, சிரமம் உருவாகிற தருணங்களில் குருவருள் துணைநின்று உங்களை காக்கும். வெளிநாடு வேலைவாய்ப்பில் எதிர்பார்ப்பு நிறைவேறி நல்ல பலனைத்தரும். தொழிலதிபர்கள் உற்பத்தியை பெருக்கி நல்ல லாபம் காண்பர்.

பணியாளர்கள் நிர்வாகத்தின் நலன் பாதுகாக்கப்படும் வகையில் செயல்படுவர். நகை, ஜவுளி, மளிகை, காய்கறி, மலர், இறைச்சி, ஸ்டேஷனரி, மின்சார உபகரணங்கள், வாகனம், கட்டுமானப் பொருட்கள், தோல், கண்ணாடி, பீங்கான் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் கூடுதல் உழைப்பால் விற்பனையைப் பெருக்குவர். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிற பொருள்கள் விற்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் உங்களின் கடின உழைப்பினைக் கண்டு வியப்புறுவர். நிலுவை பணவரவு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்ற வேண்டும். பணியில் சிறு அளவிலான குளறுபடி உருவாகும். சக பணியாளர்களின் உதவி, வழிகாட்டுதலினால் பணி இலக்கை சரிவர நிறைவேற்றுவீர்கள். சலுகைகள் ஓரளவுக்கு இருக்கும். குடும்பச்செலவுகளை ஈடுகட்ட கடன் பெறுவதும் சேமிப்பு பணத்தை பயன்படுத்துவதுமான தன்மை இருக்கும். நிதி நிர்வாகம், எழுத்துத்துறை சார்ந்த பணியாளர்கள் வளர்ச்சி காண்பர். பணிபுரியும் பெண்கள் பணியில் சில குளறுபடிகளை எதிர்கொள்ளலாம். பணியிட மாற்றம், பணிச்சுமை போன்றவை ஏற்படலாம். வருட பிற்பகுதியில் வளர்ச்சிதரும் மாற்றம் ஏற்படும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு, பாசம் கூடுதலாக கிடைத்து அன்றாட குடும்ப பணியை நிறைவேற்றுவர். தாய்வீட்டு உதவி பெறலாம். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் வியாபார நடைமுறையை அபிவிருத்தி செய்வர். போட்டியை சரிசெய்து முன்னேறுவீர்கள்.

மாணவர்கள் நன்றாகப் படிப்பர். படிப்புக்கான பணவசதி ஓரளவுக்கு கிடைக்கும். மார்க் உயரும். வேலைவாய்ப்பைதேடுபவர்களுக்கு அளவான சம்பளத்தில் பணி கிடைக்கும். இருப்பினும், கற்ற துறையில் வளர கிடைத்த வாய்ப்பாக கருதி பணிபுரிவீர்கள். பெற்றோரின் அன்பு, ஆதரவு சிறப்பாக கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூகத்தில் நற்பெயர் பெற உரிய வாய்ப்பு கிடைக்கும். ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பை சரிசெய்ய கொஞ்சம் செலவு செய்வீர்கள். எதிரிகளாக செயல்பட்டவர்கள் உங்களிடம் மறைமுக அனுகூலம் பெற விரும்புவர். புத்திரர்கள் அரசியல் பணிக்கு குறைந்த அளவிலேயே உதவுவர். அரசு தொடர்பான காரியங்களில் அனுகூலம் பெற உங்களின் சமயோசித பேச்சு, அணுகுமுறை உதவும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்களுக்கு லாபம் சுமாராக இருக்கும். விவசாயிகளுக்கு அளவான மகசூல் கிடைத்து எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் பலன் உங்கள் குடும்ப செலவினங்களை சரிகட்டும். நிலம் தொடர்பான பிரச்னையில் சுமூக தீர்வு வரும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடுவதால் வாழ்வில் சகல நன்மையும் ஏற்படும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

கடகராசி

Post by krishnaamma on Tue Jan 04, 2011 5:18 pm

புனர்பூசம்4, பூசம், ஆயில்யம்

உயர்ந்த சிந்தனை உழைப்பில் ஆர்வம் நிறைந்த கடகராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றில் சனி, ஐந்தில் ராகு, ஒன்பதில் குரு, பதினொன்றில் கேது என்கிற வகையில் பிரதான கிரகங்களின் அமர்வு உள்ளது. குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களும் உங்களுக்கு அபரிமிதமான நற்பலன்களை அள்ளி வழங்க தயாராக உள்ளனர். உங்கள் காட்டில் அடைமழைதான் என்று பிறர் சொல்லுகிற விதமாக உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும். நல்லோர் சொல், வேத சாஸ்திரங்களின் கருத்துக்களை உணர்ந்தும் வாழ்வில் பின்பற்றியும் நடப்பீர்கள். பேச்சில் சாந்தமும் மனதில் கருணையும் நிறைந்திருக்கும். சமூகப்பணியில் ஆர்வம் வளரும். தம்பி, தங்கைககளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க நல்யோகம் பலமாக உள்ளது. தாயின் அன்பு, ஆசி கிடைக்கும். பூர்வசொத்தில் பெறுகிற வருமானம் உங்களின் கண்காணிப்பினால் வந்துசேரும். உங்கள் சிறப்புகளை கண்டு எதிரிகளும் வியப்புற்று விலகிப்போவர். உடல்நலம் நன்றாக இருக்கும். கடன்களை பெருமளவில் அடைத்துவிடுவீர்கள். தம்பதியர் கருத்து ஒற்றுமையுடன் நடந்து குடும்ப பெருமையை உயர்த்துவர். நண்பர்கள் உரிய மரியாதையுடன் நடந்துகொள்வர். குடும்பத்தேவை பெருமளவில் பூர்த்தியாகும். அஷ்டலட்சுமியும் நவநிதியும் இஷ்டமாய் உங்கள் இல்லத்தில் வாசம் செய்யும். எனவே புதிய அனுபவங்களைக் காண்பீர்கள். தொழில் சார்ந்த வகையில் புதிய முயற்சிகளை செயல்படுத்தி கூடுதல் வெற்றி பெறுவீர்கள். தொழிலதிபர்கள் வளர்ச்சி பெற்று ஆதாய பணவரவு பெறுவர்.

புதியவர்கள் தொழிலில் கூட்டுசேர விருப்பத்துடன் நாடுவர். பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக கிடைக்கும். தொழில் நிறுவன அபிவிருத்திப்பணி நிறைவேறும். வெளிநாடு சுற்றுலா சென்றுவர வாய்ப்பு உருவாகி நிறைவேறும். சமூக அந்தஸ்து உள்ள பதவி, பொறுப்பு கிடைக்கும். நகை, ஜவுளி, மளிகை, வாகனம், கட்டுமான பொருட்கள், பிளாஸ்டிக், கடல்சார் பொருட்கள், பாத்திரம் வியாபாரம் செய்பவர்கள் சந்தையில் கூடுதல் வரவேற்பு பெறுவர். விற்பனை சிறந்து உபரி பணவரவைத்தரும். மற்றவர்களுக்கு இவர்களை விட நல்ல லாபம் கிடைப்பதுடன், அபிவிருத்திப்பணிகளையும் நிறைவேற்றுவர். கடன்களை அடைப்பதும், சரக்கு கொள்முதலை உயர்த்துவதுமான நன்னிலை உண்டு. அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தகுதி, திறமையை பயன்படுத்தி நற்பெயர் பெறுவர். பணி இலக்கு எளிதாக நிறைவேறும். நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்து பதவி, சம்பள உயர்வு பெறுவீர்கள். சக பணியாளர்களுடன் நட்பு வளரும். குடும்பத்தேவையை பெருமளவில் பூர்த்தி செய்வீர்கள். மருத்துவம், இன்ஜினியரிங் துறை சார்ந்த பணியாளர்கள் மிக அதிக வருமானம் பெறுவர்.

பணிபுரியும் பெண்கள் தமக்குள்ள திறமையை முழுமையாக பயன்படுத்தி பணியின் தரத்தை உயர்த்துவர். பணி இலக்கு எளிதாக நிறைவேறும். பதவி உயர்வு, பிற சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு, பாசத்தினை பெறுவர். குடும்ப செலவுக்கான பணவரவு திருப்திகரமாக இருக்கும். புத்திரப்பேறு வகையில் குறைகளை சரிசெய்வதால் நற்பலன் கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிசெய்வர். உற்பத்தி, விற்பனை உயர்ந்துசேமிக்கும் அள வில் பணவரவைத்தரும். மாணவர்கள் ஒருமித்த மனதுடன் நன்கு படிப்பர். இந்த ஆண்டில் மாநில ராங்க் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. கிரக சூழ்நிலைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் ஆதரவாளர்களின் நன்மதிப்பை பெறுவார்கள். அரசு தொடர்பான காரியங்கள் தாமதமின்றி நிறைவேறும். பதவி, பொறுப்புகளை எதிர்பார்த்தபடி பெறுவீர்கள். புத்திரர்கள் அரசியல்பணியில் ஆர்வக்குறைவுடன் செயல்படும் கிரகநிலை உள்ளது. அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் திறமை, விசுவாசம் நிறைந்த பணியாளர்களின் உதவியால் தொழில் சிறப்பும் தாராள பணவரவும் காண்பர். விவசாயிகள் விவசாயப்பணிகளை திறம்பட மேற்கொள்ள அனைத்து வசதிகளும் கிடைக்கும். மகசூல் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பிலும் முன்னேற்றம் உண்டு. இதனால் தாராள பணப்புழக்கம் ஏற்படும். கூடுதல் நிலம் வாங்க அனுகூலம் உண்டு. குடும்பத்தில் சுபநிகழ்ச்சி இனிதாக நடக்கும்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் தொழில்வளமும் குடும்ப நலமும் சிறக்கும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

சிம்ம ராசி

Post by krishnaamma on Tue Jan 04, 2011 5:20 pm

மகம், பூரம், உத்திரம்

துணிச்சலும் செயல்திறனும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு இரண்டில் சனி, நான்கில் ராகு, எட்டில் குரு, பத்தில் கேது என்கிற வகையில் பிரதான கிரகங்களின் அமர்வு உள்ளது. ஆறாம் இட அதிபதி சனிபகவானும் எட்டாம் இட அதிபதி குருபகவானும் ஒருவருக்கொருவர் "சமசப்தம' பார்வை பெற்றுள்ளனர். இந்த நிலை "விபரீத ராஜயோகம்' எனற பலமான நன்மையைத் தருகிறது. ஆண்டின் இறுதியில் ஏழரைச் சனி விலகுவது இன்னொரு பிளஸ் பாயின்ட். மனதில் நம்பிக்கை வளர்த்து உற்சாகமுடன் செயல்படுவீர்கள். தற்போது நடக்கும் சில குளறுபடியான சூழ்நிலைகள் படிப்படியாக சரியாகும். பேச்சில் கண்டிப்பும் நியாய தர்மத்தை பின்பற்றுகிற குணமும் குரு அருளால் உண்டாகும். இளைய சகோதரர்கள் அன்பு பாராட்டுவர். வீடு, வாகன பராமரிப்பில் கூடுதல் கவனம் பின்பற்ற வேண்டும். இஷ்ட, குலதெய்வ வழிபாடு, தான தர்மம் வழங்குதல் திட்டமிட்டபடி நிறைவேறும். எதிரிகள் மதிப்பிழந்து போவர். உடல்நலத்தைக் காப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுவது நல்லது. தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறையுடன் நடந்து மகிழ்ச்சி பெறுவர். நண்பர்களின் உதவி, ஆலோசனை தொடர்ந்து கிடைக்கும். இயந்திரங்களை கையாளும் தருணங்களில் உரிய பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றுவது அவசியம்.

தந்தைவழி சார்ந்த உறவினர்கள் எதிர்பார்ப்பு மனதுடன் நடந்துகொள்வர். குடும்பத் தேவைகளை நிறைவேற்ற ஓரளவு கடன் பெறுவீர்கள். வெளிநாடு வேலைவாய்ப்பில் சாதகமான நிலை ஏற்படும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் இருந்த சிரமம் விலகி முன்னேற்றம் காண்பர். அபிவிருத்திப்பணிகள் சிறப்பாக நிறைவேறும். கைவிட்டுப்போன பொருள் வந்து சேரும். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து கிடைக்கும். தொழிலதிபர் அமைப்புகளில் பதவி பெறும் வாய்ப்புண்டு. நகை, ஜவுளி, மளிகை, வாகனம், கண்ணாடி, பீங்கான், பிளாஸ்டிக், தோல் பொருட்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், கட்டுமானப் பொருள், பர்னிச்சர் விற்பனை செய்பவர்கள் கூடுதல் வரவேற்பு பெறுவர். மற்றவர்களுக்கு வியாபாரம் சுமாராக இருக்கும். கடனுக்கு விற்பனை நடந்தாலும் வரும் காலத்தில் நிலுவைப்பணம் வசூலாகிவிடும். கிட்டங்கிகளில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை பின்பற்றுவது அவசியம். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், பணிபுரியும் இடத்தில் சுமூக சூழ்நிலை அமையப்பெறுவர். பணி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். உயர் அதிகாரிகளின் மனதில் உங்களைப்பற்றி நல்ல அபிப்பிராயம் வளரும். நிர்வாகப் பொறுப்புக்களை அடைவீர்கள். பணியில் கிடைக்கிற அதிர்ஷ்டகரமான முன்னேற்றம் உங்களுக்கே உங்கள் மீது வியப்பை உருவாக்கும். பணித்திறன், தகுதியை வளர்த்துக்கொள்வீர்கள். சிலருக்கு வசதி நிறைந்த வீடு, கவுரவமான வெளியூர் வேலைவாய்ப்பு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் படிப்படியாக பணி இலக்கை நிறைவேற்றுவர். பணியின் தரம் சிறந்து நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவர். சலுகை, கூடுதல் பொறுப்பு எதிர்பாராத வகையில் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரிடம் நன்மதிப்பு, பாராட்டு பெறுவர். குடும்பத்தேவை பெருமளவில் பூர்த்தியாகும். மாங்கல்ய பலம் அதிகரித்து கணவரின் உடல்நலம் சிறக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் சராசரி உற்பத்தி, விற்பனை என்கிற நிலைமை மாற்றம்பெறக் காண்பர். உற்பத்தி, விற்பனை சிறந்து கூடுதல் பணவரவு பெறுவீர்கள். எவருக்கும் பணம் சார்ந்த வகையில் பொறுப்பேற்கக்கூடாது. மாணவர்கள் மிக கவனமாகப் படித்து முன்னேற்றம் காண்பர். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக கிடைக்கும்.

சக மாணவர்கள் படிப்பில் ஒத்துழைப்பு தருவர். தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு அதிர்ஷ்டகரமாக கிடைக்கும். அரசியல்வாதிகளின் செயல்திறன் அதிகரிக்கும். ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் நடந்துகொள்வர். பதவிப்பொறுப்பு கிடைக்கும். புத்திரர்கள் புதிய செயல் திட்டங்களை வகுத்து தந்து உங்களின் அரசியல் பணி சிறக்க உதவுவர். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் கூடுதல் நிர்வாக செலவினங்களுக்கு உட்படுவர். வெளியூர் பயணம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வகையில் கிடைக்கிற பணவரவு முக்கிய தேவைகளுக்கு பயன்படும். நிலம் தொடர்பான விவகாரங்களில் சமரச தீர்வு கிடைக்கும்.

பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் சகல நன்மையும் உண்டாகும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

கன்னி ராசி

Post by krishnaamma on Tue Jan 04, 2011 5:22 pm

உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2

எந்தச்சூழலையும் பக்குவமாக எதிர்கொள்ளும் கன்னி ராசி அன்பர்களே!

உங்கள் ராசியில் சனிபகவான், மூன்றில் ராகு, ஏழில் குரு, ஒன்பதில் கேது என்கிற வகையில் பிரதான கிரகங்களின் அமர்வு உள்ளது. இதில் குரு, ராகு உங்களுக்கு தாராள நற்பலன்களைத் தருவர். ஜென்மச்சனியின் தாக்கத்தை குரு பார்வையும், குருவின் 9ம் பார்வையையும் பெற்ற ராகுவின் 11ம் பார்வை ராசியில் பதிகிறது. இதனால் உங்களிடம் கருத்துபேதம் கொண்டவர்கள் கூட நன்மதிப்பு வைத்து உங்களை நாடிவருவர். நடை, உடை, பாவனையில் மாற்றம் ஏற்படும். வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்க இளைய சகோதரர்கள் உதவிகரமாக நடந்துகொள்வர். அவர்களுக்கான சுபநிகழ்வு இனிதாக நிறைவேறும். வீடு, வாகனத்தில் நம்பகமானவர்களை மட்டும் அனுமதிக்கலாம். புத்திரர்கள் செயல்திறன் வளர்த்து படிப்பு, வேலைவாய்ப்பில் உயர்ந்த நிலையை அடைவர். பூர்வசொத்தில் சீரான பணவரவு கிடைக்கும். உடல்நலத்தில் மிகுந்த கவனமுடன் செயல்படுவது அவசியம். எதிரி உங்களின் வழியாக மறைமுக பலன் பெறுவதின் காரணமாக பகைமை உணர்ச்சியை குறைத்துக்கொள்வர். திசை தெரியாத போக்கு ஏற்பட்டு நண்பர், உறவினர்களின் வழிகாட்டுதலால் சரியாகும்.

தம்பதியர் அன்பு, பாசத்துடன் நடந்து குடும்பத்தேவைகளை நிறைவேற்றுவர். வெளிநாடு வேலைவாய்ப்பில் இருந்த தடையை சரிசெய்து பண வருமானத்தை உயர்த்துவீர்கள். இளம் வயதினருக்கு திருமண முயற்சி நிறைவேறும். தொழிலதிபர்கள் தொழிலில் இருந்த தேக்கநிலையை மாற்ற புதிய யுக்திகளை பின்பற்றுவீர்கள். உங்கள் வளர்ச்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வர். வளர்ச்சியும் தாராள பணவரவும் கிடைக்கும். அபிவிருத்திப்பணிகள் நிறைவேறும். தொழில் கூட்டமைப்புகளில் தகுதிவாய்ந்த பதவி, பொறுப்பு கிடைக்கும். நகை, ஜவுளி, மளிகை, வாகனம், ஸ்டேஷனரி, கட்டுமான பொருட்கள், தோல், பிளாஸ்டிக், கண்ணாடி, பீங்கான், ரப்பர் பொருட்கள், எண்ணெய், பாத்திரம் விற்பவர்கள் சந்தையில் புதிய வாய்ப்பு கிடைத்து முன்னேற்றம் காண்பர். மற்றவர்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கருத்து ஒற்றுமையுடன் நடந்துகொள்வர். வியாபார அபிவிருத்தி பணிகளை நிறைவேற்ற தாராள பணஉதவி கிடைக்கும்.
அரசு, தனியார் துறையில் பணிபுரி பவர்கள் பணிகளை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். சக பணியாளர்கள் உதவும் மனப்பாங்குடன் நடந்துகொள்வர். பதவி உயர்வு, விரும்பிய பணியிட மாற்றம் எதிர் பார்த்தபடி கிடைக்கும். கூடுதல் வரவை பாதுகாப்பான வகையில் முதலீடு செய்வீர்கள். பணிபுரியும் பெண்கள் உற்சாகத்துடன் செயல்புரிந்து பணியை திறம்பட நிறைவேற்றுவர். தாமதமான பதவி உயர்வு கிடைக்கும். குடும்ப பெண்கள், கணவரின் நல்அன்பை பெறுவர்.

குடும்பச்செலவுகளுக்கான பணவசதி திருப்திகரமாகும். புத்திரர்களின் படிப்பு, திறமையை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றுவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.சுயதொழில் புரியும் பெண்கள், கூடுதல் மூலதனத்துடன் உற்பத்தியை பெருக்குவர். சந்தையில் வரவேற்பும், விற்பனையும் அதிகரிக்கும். இளம் பெண்களுக்கு திருமண முயற்சி நிறைவேறும். மாணவர்கள் நிறைந்த ஞாபக சக்தியுடன் படித்து உயர்வான நிலை பெறுவர். வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை கிடைக்கும். சக மாணவர்கள் கூடுதல் நட்பு பாராட்டுவர். சுற்றுலா பயணத்திட்டம் நிறைவேறி இனிய அனுபவத்தை பெற்றுத்தரும். அரசியல்வாதிகளுடன் கருத்து வேறுபாடு கொண்டு விலகிச் சென்றவர்கள் மதித்து நாடிவருவர். சமூகப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அரசு தொடர்பான காரியங்களில் முயற்சி நிறைவேறி கூடுதல் ஆதரவாளர்களை பெற்றுத்தரும். எதிரிகளும் உங்களின் சிபாரிசை மறைமுகமாக பெற விரும்புவர். புத்திரர்கள் உங்களின் அரசியல் பணி பரிமளிக்க இயன்ற உதவி புரிவர். வழக்கு, விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் நல்லவர்களின் உதவி கிடைத்து வளர்ச்சி காண்பர். பணவரவு அதிகரிக்கும். விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். மகசூல் சிறந்து சந்தையில் நல்ல விலை கிடைக்கும். கால்நடை பராமரிப்பில் கூடுதல் செலவு இருக்கும். நிலம் தொடர்பான சிரமம் விலகும். குடும்பத்தில் சுபகாரியம் திட்டமிட்டபடி நடக்கும்.

பரிகாரம்: சரஸ்வதியை வழிபடுவதால் பேச்சில் இனிமை கூடி எல்லா செயலும் வெற்றி தரும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

துலாம் ராசி

Post by krishnaamma on Tue Jan 04, 2011 5:24 pm

சித்திரை 3,4, ”வாதி, விசாகம் 1,2,3

கலையம்சத்துடன் செயல்களை செய்ய விரும்பும் துலாம் ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு இரண்டில் ராகு, ஆறில் குரு, எட்டில் கேது, பன்னிரெண்டில் சனி என்கிற நிலையில் கிரக அமர்வு உள்ளது. குரு, சனியின் சமசப்தம பார்வை சில நல்ல பலன்களை உங்களுக்கு தரும். தம்பி, தங்கைகள் உங்களிடம் அன்பு காட்டுவர். தாயின் ஆலோசனை உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்களை உருவாக்க உதவும். புத்திரர்கள் உங்கள் சொல்படி கேட்டு நடந்து படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் பெறுவர். தம்பதியர் ஒற்றுமையுடன் செயல்படுவர். பேச்சில் நிதானமும் கண்டிப்பும் சமஅளவில் இருக்கும். சமூகத்தில் உங்களை நல்லவிதமாக நடத்தியவர்கள் கூட பொறாமை குணத்துடன் அணுகுவர். சில சிரமங்கள் இருந்தாலும் அவை குலதெய்வ அருளால் குறைந்து உற்சாகம் ஏற்படும். வீடு, வாகன வகையில் தற்போது கிடைக்கிற நன்மை தொடரும். உறவினர்கள் வருகையால் செலவு அதிகரிக்கும். தவிர்க்க இயலாத வெளியூர் பயணம் ஏற்படும்.
உடல்நலம் சீராக இருக்க நல்ல பழக்கவழக்கம், சீரான ஓய்வு பின்பற்றுவது நல்லது.

நண்பர்களிடம் பண பரிவர்த்தனையில் தகுதிக்கு மீறிய செயல்பாடு கூடாது. வீட்டிலும், பயணங்களின்போதும் விலையுயர்ந்த பொருட்களை கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். தான, தர்ம அறப்பணிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் வேலைவாய்ப்பு எளிதாக கிடைக்கும். வெளிநாட்டு பணியில் விருப்பம் உள்ளவர்களுக்கு கூடுதல் வேலைப்பளுவுடன் கூடிய வாய்ப்பு வந்து சேரும். தொழிலதிபர்களுக்கு வளர்ச்சிப்பணிகளை முழுமையாக நிறைவேற்றுவர். புதிய மாற்றங்களை நடைமுறைப்படுத்தி நிறுவனத்தின் நற்பெயரை தக்க வைப்பார்கள். சந்தைப்படுத்துதல், விளம்பரம் ஆகியவற்றிலும் புதுமையைப் புகுத்துவார்கள். நிர்வாகச்செலவு உயர்ந்தாலும் எதிர்கால நன்மை அதிகரிக்கும். முக்கிய தேவைகளுக்கு பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். வியாபாரிகள் போட்டியை சமயோசிதமான செயலால் சரி செய்வார்கள். விற்பனையும் லாபமும் சுமாரான அளவில் இருக்கும். சரக்கு கிட்டங்கிகளில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். வெளியூர் பயணம் நன்மைகளைப் பெற்றுத்தரும்.

அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுவார்கள். நிர்வாகத்தின் வழிகாட்டுதலும் கிடைக்கும். பணி இலக்கு நிறைவேறும். வருமானம் வருமென்றாலும் செலவும் துரத்திக் கொண்டே இருக்கும். அத்தியாவசியமானவற்றை மட்டும் செய்தால், இருப்பதைக் கொண்டு சமாளித்து விடலாம். சக பணி யாளர்கள் ஒத்துழைப்பு தருவர். பணிபுரியும் பெண்கள் தாமதமானாலும் அதிக நேரம் வேலை செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முடித்து விடுவார்கள். சம்பளம் வழக்கம் போல் கிடைத்தாலும் செலவு காரணமாக மிச்சப்படுத்த இயலவில்லையே என்ற ஆதங்கம் இருக்கும். குடும்பப்பெண்கள், குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி கணவருடன் ஒற்றுமையை பேணிகாத்திடுவர். அத்தியாவசிய செலவுகளை மட்டும் மேற்கொள்வது நல்லது. நகை இரவல் கொடுக்க, வாங்கக் கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் சுமாரான உற்பத்தியும் குறைந்த லாபத்தில் பொருட்களை விற்பதுமான தன்மையை பெறுவர்.
மாணவர்கள் கூடுதல் முயற்சியுடன் படிப்பதால் மட்டுமே மார்க் அதிகரிக்கும். படிப்புக்கான செலவில் சிக்கனம் அவசியம். சக மாணவர்கள் உங்களுக்கு படிப்பு விஷயத்தில் ஒத்துழைப்பு அளிப்பர். படித்து முடித்தவர்களுக்கு சற்று தாமதத்தின் பேரில் வேலை வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளிடம் கடந்த காலங்களில் பகைமை உணர்வுடன் நடந்தவர் கள் மனமாற்றம் பெறுவர். உங்களின் உண்மை, தியாக செயல்களை பாராட்டுவர். அரசு தொடர்பான காரியங்களில் எதிர்பார்ப்பு நிறைவேற தாமதமாகும். புத்திரர்கள் உங்களின் கருத்தை செயல்வடிவமாக்குவதில் முனைப்புடன் உதவுவர். வழக்கு விவகாரத்தில் வெற்றி பெற மாற்று உபாயங்களை பின்பற்றி நன்மை பெறுவீர்கள். அரசிய லுடன் தொழில்நடத்துபவர்களுக்கு முன்னேற்றம் உருவாகி பணவரவு சீராகும். விவசாயிகள் பயிர் வளர்ப்பில் கூடுதல் கவனம் கொள்வதால் மட்டுமே எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். சாகுபடி செலவு அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பின் பயன் உற்சாகம் தரும். நிலம் தொடர்பான விவகாரங்களில் அனுகூலம் கிடைக்கும்.

பரிகாரம் : ஆஞ்சநேயரை வழிபடுவதால் தொழில் வளர்ச்சியும் கூடுதல் பணவரவும் கிடைக்கும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

விருச்சிக ராசி

Post by krishnaamma on Tue Jan 04, 2011 5:25 pm

விசாகம் 4, அனுஷம், கேட்டை

பிறர் கருத்துக்கும் மதிப்பளிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

உங்கள் ராசியில் ராகு, ஐந்தில் குரு, ஏழில் கேது, பதினொன்றில் சனி என்கிற நிலையில் பிரதான கிரகங்களின் அமர்வு உள்ளது. குரு, சனி பகவான் அளப்பரிய நற்பலன்களை வழங்கும் விதத்தில் உள்ளனர். உங்களின் பணிகளில் செயல்திறன் அதிகரிக்கும். புதுமைகளைப் புகுத்தும் எண்ணம் மேலோங்கும். பேச்சில் இனிமையும் கனிவும் வெளிப்படும். கூடுதல் பணவரவை பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். இளைய சகோதரர்கள் உங்கள் உதவியால் தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்வர். சமூகப்பணியில் அளவுடன் ஈடுபடுவீர்கள். வீடு, வாகன வகையில் உங்கள் விருப்பம் போல அனைத்து சிறப்புகளும் நிறைவேறும். தாயின் அன்பு, ஆசி கிடைக்கும். தாய்வழி உறவினர்களிடம் லேசான கருத்து வேறுபாடு வந்து சீராகும். புத்திரர் நல்லவிதமாக படிப்பர். அவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இஷ்டதெய்வ அருள் பரிபூரணமாக துணைநிற்கும்.

பூர்வ சொத்தில் வருமான உயர்வும், புதிய சொத்து வாங்குவதுமான நன்னிலை உண்டு. உடல்நலம் சிறக்க தனி கவனத்துடன் செயல்படுவது நல்லது. உஷ்ணம் மற்றும் அலர்ஜி தொடர்பான தொந்தரவு வந்து, உரிய சிகிச்சையினால் சரியாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் சுயகவுரவம் பார்க்கிற சூழ்நிலைகளும் மனத்தாங்கலும் ஏற்படும். ஆனால், புத்திரர்களின் அன்பால் கவலை மாறும். குடும்பத்திற்கு தேவையான சகல வசதிகளும் பெற சனிபகவானால் உருவாகிற தன, தான்ய யோக பலன் துணைநின்று உதவும். ஆதாய ஸ்தானத்தில் உள்ள சனிபகவான் உங்களுக்கு அபரிமிதமான பணவரவைத் தருவார். வெளிநாடு வேலைவாய்ப்பில் குறைந்த பலனே கிடைக்கும். இளம் வயதினருக்கு நல்ல வரன் கிடைத்து திருமணம் இனிதாக நடக்கும். சுயதொழில் துவங்க விருப்பம் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்பு உருவாகும். ஏற்கனவே வீடு, வாகனம் உள்ளவர்கள் குழந்தைகளுக்காகவோ பிற்காலம் கருதியோ மேலும் இவற்றை வாங்குவதற்கு யோகம் இருக்கிறது. வழக்கிலுள்ள சொத்துக்களில் சில சாதகமான தீர்ப்பின் மூலம் வந்து சேரவும் வாய்ப்புண்டு. தொழிலதிபர்களுக்கு திட்டமிட்ட வளர்ச்சிப்பணிகள் இனிதாக நிறைவேறும். லாபம் மிகச்சிறப்பாக இருக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பணியாளர்களின் ஒத்துழைப்பை பெற சலுகைகளை வழங்குவீர்கள். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகமாகி முன்னேற்றமும் ஆதாய பணவரவும் கிடைக்கும். புதிய கிளை துவங்கயோகம் உள்ளது. அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் நடந்து பணிகளை வேகமாக நிறைவேற்றுவர். பணியிடத்தில் சுமூகமான சூழ்நிலை இருக்கும். தாராள பணவரவால் குடும்பத்தேவைகள் திருப்திகரமாக நிறைவேறும். பணிபுரியும் பெண்கள் தங்கள் பணித்திறமையை நன்கு வெளிப்படுத்தி குறித்த காலத்தில் பணிகளை முடிப்பர். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவதால் குடும்பத்தில் சச்சரவு இல்லாத நன்னிலை ஏற்படும். புத்திரர்களின் படிப்பு தொடர்பான விஷயங்கள் மனதை மகிழச் செய்யும். தாய்வழியில் உதவி பெற்று மகிழ்வீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து ஆதாய பணவரவு காண்பர்.

மாணவர்கள் மனம் ஒன்றிப் படித்து உயர்ந்த தேர்ச்சி காண்பர். பாராட்டு, பரிசு கிடைக்கும். சக நண்பர்களை அனுசரித்து செல்வது மார்க்கை மேலும் அதிகரிக்கும். படிப்பை முடித்தவர்களுக்கு சிறந்த வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அரசியல்வாதிகளிடம் ஆதரவாளர்கள் உரிய மரியாதையுடன் நடந்து கொள்வர். எதிர்பார்த்த பதவிப்பொறுப்பு எளிதாகக் கிடைக்கும். எதிரிகளால் இருந்த தொல்லை குறையும். குறைந்த விலைக்கு அதிக மதிப்புள்ள சொத்து கிடைக்க யோகமுள்ளது. அரசியலுடன் தொழில், வியாபாரம் செய்பவர்கள் உற்பத்தி விற்பனை சிறந்து அதிக பணவரவு பெறுவர். அரசு தொடர்பான காரியங்கள் எளிதாக நிறைவேறும். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் எளிதாக கிடைக்கும். மகசூல் உயர்ந்து பயிர்களுக்கு சந்தையில் நல்ல விலை பெறுவீர்கள். கால்நடை வளர்ப்பிலும் உயர்வு உண்டு. புதிய சொத்து வாங்குவீர்கள்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதால் தொழில் சிறப்பும் குடும்பத்தில் சுபநிகழ்ச்சியும் உண்டாகும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

தனுசு ராசி

Post by krishnaamma on Tue Jan 04, 2011 5:25 pm

மூலம், பூராடம், உத்திராடம்

வாழ்வில் முன்னேற துடிப்புடன் செயல்படும் தனுசு ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு நான்கில் குரு, ஆறில் கேது, பத்தில் சனி, பன்னிரெண்டில் ராகு என்கிற நிலையில் பிரதான கிரகங்களின் அமர்வு உள்ளது. இதில் கேது பகவான் உங்களுக்கு தாராள நற்பலனை அள்ளி வழங்குவார். மனதில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் சொல்லுக்கு வரவேற்பு கிடைக்கிற இடங்களில் மட்டும் பேசுவது நல்லது. சமூகத்தின் பார்வையில் உங்களின் செயல் வித்தியாசமானதாக தோன்றும். இளைய சகோதரர்கள் முரண்பட்ட மனதுடன் நடந்து கொள்வதற்குரிய வாய்ப்புண்டு. வீடு, வாகனத்தில் பராமரிப்பு பணி தேவைப்படும். தாயின் அன்பு, ஆசி கிடைக்கும். புத்திரர்கள் சுயதேவையை நிறைவேற்றிக்கொள்ள உங்களிடம் எதிர்பார்ப்புடன் செயல்படுவர். பூர்வசொத்தில் அளவான வருமானம் கிடைக்கும். உடல்நலக்குறைவினால் மனதில் உருவான பயம் விலகும். எதிரிகள் உங்களை விட்டு விலகிப் போவர். தம்பதியர் ஒற்றுமையில் சிறுசிறு கருத்து பேதம் உருவாகும். நண்பர்களிடம் பணம் கெடுக்கல், வாங்கலில் தகுதிக்கு மீறிய தன்மை கூடாது. குடும்பத்திற்கு தேவையான நவீன வீட்டு சாதனங்கள், நகை சேர்க்கை அதிர்ஷ்டகரமான வரவாக கிடைக்கும். தந்தைவழி உறவினர்கள் பாசத்துடன் நடந்துகொள்வர். வெளிநாடு வேலைவாய்ப்பு கிடைக்கவும், அதனால் பணவரவு குறைவதற்கான நிலையும் உள்ளது. தொழிலதிபர்கள் தங்கள் வளர்ச்சிக்கு எதிரான குறுக்கீடுகளை உடைத்தெறிய வேண்டியிருக்கும். கூடுதல் உழைப்பு, நேரடி கண்காணிப்பின் மூலம் லாபத்தை உயர்த்த முயற்சிக்கலாம். பணியாளர்களின் ஒத்துழைப்பைப் பெறவும், நிர்வாக மாற்றத்திற்கும் கூடுதல் செலவு ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கடன்பாக்கி கணிசமான அளவில் வசூலாகும்.

வியாபாரிகள் விற்பனையைப் பெருக்க பல இடைஞ்சல்களைச் சந்தித்தாலும், சமயோசித புத்தியால் அவற்றை சரி செய்து லாபத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். சீரான விற்பனை, சுமாரான லாபம் என்ற போக்கு இருந்தாலும், ஜூன் மாத வாக்கில் சரியாகி விடும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கருத்துபேதம் வராத அளவிற்கு செயல்பட வேண்டும். கடன்களை சற்று நெருக்கி வசூலித்து விட்டால் பணஓட்டத்திற்கு பிரச்னையிருக்காது. அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு உட்படுவர். வரைமுறை வகுத்து செயல் படுவதால் பணி இலக்கு நிறைவேறும். சக பணியாளர்களுடன் கருத்து ஒற்றுமையுடன் நடந்துகொள்வதால் நன்மை கிடைக்கும். வழக்கமான சலுகைகள் தொடரும். இயந்திரம், நிதி நிர்வாகம் துறை சார்ந்த பணியாளர்கள் அதிக சலுகை பெறுவர். பணிபுரியும் பெண்கள் தங்கள் வேலையில் சிறுசிறு குளறுபடி உருவாக காண்பர். இதைச் சரிசெய்வதற்கு கூடுதல் கவனம், பயிற்சி முறை, புதிய யுக்திகளைப் பின்பற்றுவது நல்லது. பணிசார்ந்த சலுகைகளைப் பெற நிர்ப்பந்தம் எதுவும் வேண்டாம். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படும். குடும்பப் பெண்கள், கணவரின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவதால் மட்டுமே குடும்பத்தில் பிரச்னை இல்லாமல் இருக்கும். குடும்பச் செலவுக்கான பணம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் புதிய நடைமுறையை பின்பற்றுவர். சுமாரான விற்பனை, அளவான பணவரவு என்கிற நிலை இருக்கும்.

மாணவர்கள் ஒருமுகத்தன்மையுடன் படிப்பர். சக மாணவர்களுடன் படிப்பு தவிர பிறவிஷயங்களில் விவாதம் கூடாது. பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்லக்கூடாது. பெற்றோர் பாசத்துடன் நடந்துகொள்வர். படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் சுமாரான அளவில் நன்மை உண்டு. படிப்புக்கான பணம் யார் மூலமாகவாவது கிடைத்து விடும். அரசியல்வாதிகளை மாறுபட்ட கண்ணோட்டத்துடன் எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்வர். இதனால் மனதில் நம்பிக்கை குறைவு வந்து விலகும். இருப்பினும் வருட பின்பகுதியில் உங்களுக்கு சமூக அங்கீகாரம், எதிர்பார்த்த பதவி, பணம் கிடைக்கும். எதிரிகளால் உருவாக்கப்பட்ட சிரமங்களின் தாக்கம் குறையும். புத்திரர்கள் அரசியல் பணிக்கு இயன்ற அளவில் உதவுவர். விவசாயப் பணிகளுக்கு கூடுதல் செலவாகும். அளவான மகசூல், சராசரி பணவரவு கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் லாபகர பலன் உண்டு. நிலம் தொடர்பான சிரமங்கள் குறையும்.

பரிகாரம்: ராமபிரானை வழிபடுவதால் வாழ்வில் சிரமம் குறைந்து நன்மை அதிகரிக்கும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

மகர ராசி

Post by krishnaamma on Tue Jan 04, 2011 5:26 pm

உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2

புதிய பணிகளை உடனுக்குடன் நிறைவேற்றும் மகர ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றில் குரு, ஐந்தில் கேது, ஒன்பதில் சனி, பதினொன்றில் ராகு என்கிற வகையில் பிராதன கிரகங்களின் அமர்வு உள்ளது. இதில் ராகு பகவான் தாராள நற்பலன்களை வழங்கும் இடத்தில் உள்ளார். குருபகவானின் பார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாகவும் சுபபலன் பெறுவீர்கள். எதிர்கால வாழ்க்கையைப் பற்றி மாறுபட்ட கோணத்தில் சிந்திப்பீர்கள். சகல பாக்கியங்களும் பெற உச்சம் பெற்ற ராகுவின் நல்லருள் துணை செய்யும். பேச்சில் நியாயமும் வேகமும் சம அளவில் கலந்திருக்கும். வீடு, வாகன வகையில் அபிவிருத்தி பணியை நிறைவேற்றுவீர்கள். தாயின் ஆசி கிடைக்கும். புத்திரர்களின் உடல்நலத்திலும் சேர்க்கை சகவாசத்திலும் கண்காணிப்புடன் நடந்துகொள்வது நல்லது.

குலதெய்வ வழிபாட்டை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். பூர்வ சொத்தில் கிடைக்கிற வருமானத்தை முறையாக கொண்டுவர தகுந்த நடவடிக்கை வேண்டும். எதிரிகளால் வருகிற சிரமங்களை சமயோசிதமான நடவடிக்கையால் சரிசெய்வீர்கள். தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறையுடன் நடந்துகொள்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களின் வருகையும் உதவியும் வாழ்வியல் நடைமுறையில் உற்சாகப்படுத்தும்.
நண்பர்கள் மதிப்பு மரியாதையுடன் நடந்துகொள்வர். பயணங்களில் மித வேகம் பின்பற்ற வேண்டும். தந்தைவழி சொத்து அடகு, விற்பனைக்கு உட்படும் கிரகநிலை உள்ளது. தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சிபெற கிடைக்கிற வாய்ப்பை முழுமையாக பயன்படுத்துவீர்கள். இதனால் தன, தான்ய வரவு பெறுகிற யோகபலன் ஏற்படும். வெளிநாடு வேலைவாய்ப்பில் குறைந்தஅளவிலான அனுகூல பலன் உள்ளது. தொழிலதிபர்கள் முன்னேற்றம் பெறுவதற்கான வாய்ப்பு தேடிவரும். இதை முறையாகப் பயன்படுத்தி உற்பத்தி, தொழில் தரத்தை உயர்த்துவார்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். உங்களிடம் பணியாற்றுபவர்கள் பொறுப்புக்களைதிறம்பட நிறைவேற்றுவர். அரசு தொடர்பான உதவி பெறுவதில் இருந்த தாமதம் விலகும்.

வியாபாரிகள் அபிவிருத்தி பணிகளை திருப்திகரமாக நிறைவேற்றவர். சந்தையில் போட்டி குறையும். லாபம் சுமார் என்றாலும் திருப்தியான சூழ்நிலை இருக்கும். கூட்டு வியாபாரத்தில் உள்ளவர்கள் வளர்ச்சி காண்பர். சரக்கு கொள்முதலில் சலுகை கிடைக்கும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் கூடுதல் வரவேற்பு பெறுவர். பணி இலக்கு குறித்த காலத்தில் நிறைவேறும். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகை எளிதாக கிடைக்கும். சக பணியாளர்களுடன் நட்பு வளரும். குடும்பச் செலவுகளை பூர்த்தி செய்கிற உபரி வருமானம் பெறுவீர்கள். விலைமதிப்புள்ள பிறர் பொருளை பாதுகாப்பதும் தன் பொருளை இரவல் கொடுப்பதும் கூடாது. வெளியூர் பயணத்தினால் புதிய அனுபவம் பெறுவீர்கள்.
பணிபுரியும் பெண்கள் தன் துறை சார்ந்தவர்களின் ஆலோசனை, வழிகாட்டுதல்படி நடந்து பணி இலக்கை நிறைவேற்றுவர். சலுகைகள் சற்று தாமதமாக கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஊக்கம்தரும் வகையில் செயல்படுவர். குடும்பப் பெண்கள் கணவர் மற்றும் கணவர் வழி சார்ந்த உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுவர். நகைகளைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை தேவை. சுயதொழில் புரியும் பெண்கள் அதிக மூலதனத்துடன் வளர்ச்சிப்பணி நிறைவேற்றுவர். சுமாரான உற்பத்தி, விற்பனை இருக்கும்.
மாணவர்கள் மிகுந்த அக்கறை எடுத்து படித்தால் தான் அதிக மார்க் பெற முடியும். படிப்புக்கான பணவரவு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும்.

சக மாணவர்கள் படிப்பில் உயர உறுதுணை புரிவர். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் நல்ல பலன் உண்டு. அரசியல்வாதிகள் சமூகப்பணியில் ஆர்வத்துடன் செயல்பட வேண்டும். ஆதரவாளர்கள் பணம், சலுகைகள் கேட்டு நச்சரிப்பர். எதிரிகளால் இருந்த தொல்லை குறையும். வழக்கு விவகாரம் அனுகூலத் தீர்வு தரும். புத்திரர்கள் உங்களின் அரசியல் பணிக்கு குறைந்த அளவில் உதவுவர். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் அதிகசெலவில்அபிவிருத்திபணிசெய்வர். விவசாயிகள் உரிய காலத்தில் பயிர்பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டால், மகசூல் எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாகும். நிலம் தொடர்பான விவகாரம் அனுகூலத் தீர்வு பெறும்.

பரிகாரம் : தன்வந்திரியை வழிபடுவதால் உடல்நலம் சிறப்பாக இருக்கும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

கும்ப ராசி

Post by krishnaamma on Tue Jan 04, 2011 5:27 pm

அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3

நட்புக்கு இலக்கணமாக திகழும் கும்ப ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு இரண்டில் குரு, நான்கில் கேது, எட்டில் சனி, பத்தில் ராகு என்கிற வகையில் பிரதான கிரகங்களின் அமர்வு உள்ளது. குருபகவான் கூடுதல் பலன்களை தரும் வகையில் உள்ளார். உங்களின் செயல்களை நிறைவேற்ற விடாமுயற்சி செய்வீர்கள். பணவரவை அதிகம் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். பேசும் வார்த்தை வேதத்தின் தொடர்பு மற்றும் பிறருக்கு வழிகாட்டுதல் தன்மையுடன் இருக்கும். இளைய சகோதரர்கள் வாழ்வில் உயர்ந்து உங்களுக்கும் உதவிகரமாக நடந்துகொள்வர். நன்னடத்தை குறைவானவர்களிடம் தவிர்க்க இயலாத சூழ்நிலையில் பழகும் நிலை ஏற்படும். இந்த சமயங்களில் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். தாயின் உடல்நலத்திற்கு தகுந்த சிகிச்சை தேவைப்படும். புத்திரர் ஆடம்பர செலவுகளைச் செய்வதில் ஆர்வம் கொள்வர். உரிய அறிவுரை சொல்வதால் நிலைமை சீரடையும். பூர்வசொத்து தொடர்பான ஆவணங்களை பிறர் பொறுப்பில் கொடுக்க கூடாது. குலதெய்வ அருள் கிடைக்கும். எதிரிகளால் இருந்த தொல்லை படிப்படியாக குறையும். சில நிர்ப்பந்தங்கள் காரணமாக பிற செலவுகளை குறைத்து கடன்களை அடைப்பீர்கள். உடல்நலம் சீராக இருக்க ஊட்டம் தரும் உணவு பழக்கம், உடற்பயிற்சி ஆகிய நடைமுறை பின்பற்றுவது பலன் தரும். தம்பதியர் குடும்ப நலனை கருத்தில் கொண்டு பெரும்பாலான விஷயங்களில் சமரச மனப்பாங்குடன் நடந்துகொள்வர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி திட்டமிட்டபடி நிறைவேறும். குறிப்பாக, இளம்பெண்களுக்கு தடைபட்ட திருமணம் நடந்தேறும். வெளிநாடு வேலைவாய்ப்பு பெறுவதில் அதிக செலவு ஏற்படும்.
தொழிலதிபர்கள் நிறுவனம் வளர்ச்சிபெற புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவார்கள். உற்பத்தி, தரம் உயரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். லாபம் திருப்திகரமாகும். தொழிற்சாலை, அலுவலகங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்துவது நல்லது. அரசு தொடர்பான அனுகூலம் கிடைக்கும். சில குறுக்கீடுகளை மதிநுட்பத்துடன் சரிசெய்வீர்கள். வியாபாரிகள் புதுமைகளைப் புகுத்தி விற்பனையை உயர்த்துவர். போட்டி குறையும். சரக்கு கொள்முதலில் நிதானம், கிட்டங்கிகளில் பாதுகாப்பு ஆகிய நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.

அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி நற்பெயர் பெறுவர். பணி இலக்கு குறித்த காலத்தில் நிறைவேறும். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் பெறலாம். சக பணியாளர்களுடன் சமரச மனப்பாங்குடன் நடந்து கொள்வீர்கள். குடும்பச் செலவுகளை நிறைவேற்ற போதுமான வருமானம் கிடைக்கும்.
பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணியை அறிந்து நிறைவேற்றுவர். நிர்வாகத்திடம் நற்பெயரும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். உடல்நல ஆரோக்கியம் பலம்பெறும். குடும்பப் பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்புரிந்து எதிர்கால நன்மைக்கு பாடுபடுவர். குடும்பத்தில் மகிழ்ச்சி தழைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிர்ஷ்டகரமாக கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை இலக்கை உயர்த்த புதிய யுக்தியுடன் செயல்படுவர். திட்டம் நிறைவேறி அதிக பணவரவை தரும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் கொள்வது நல்லது. தேர்ச்சி சராசரி அளவில் இருக்கும். படிப்புக்கான பணவசதி கிடைப்பதில் முன்னேற்றம் உண்டு. புதியவரை நண்பராக ஏற்பதில் கூடுதல் கவனம் வேண்டும். வேலைவாய்ப்பில் குறைந்த அளவு அனுகூலம் உண்டு.

அரசியல்வாதிகள் ஆதரவாளர்களிடம் நம்பிக்கையை உயர்த்துவதில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும். பதவிகளை பெறுவதில் அதிர்ஷ்டகரமான பலன் ஏற்படும். வழக்கு விவகாரத்தில் அனுகூலத் தீர்வு கிடைக்கும். எதிரிகள் உங்கள் பணவசதி கண்டு தொல்லை செய்ய தயங்குவர். அரசு தொடர்பான இனங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும். பயணங்களில் மிதவேகம் பின்பற்ற வேண்டும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் உபரி பணவரவு பெறுவர். விவசாயிகள் விளைச்சல் இலக்கை அடைய தீவிரமாகச் செயல்படுவர். மகசூல் சிறந்து சந்தையில் நல்ல விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அளவான முன்னேற்றம் உண்டு.

பரிகாரம் : லட்சுமியை வழிபடுவதால் தொழில் சிறந்து தாராள பணவரவு கிடைக்கும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

மீன ராசி

Post by krishnaamma on Tue Jan 04, 2011 5:28 pm

பூரட்டாதி 4, உத்திரட்டாதி,ரேவதி

வாழ்வில் உயர புதிய திட்டங்களுடன் செயல்படுகிற மீன ராசி அன்பர்களே!

உங்கள் ராசியில் குரு, மூன்றில் கேது, ஏழில் சனி, ஒன்பதில் ராகு என்கிற வகையில் பிரதான கிரகங்களின் அமர்வு உள்ளது. கேது தாராள நற்பலன்களை தருகிற வகையில் உள்ளார். நண்பர், நல்லவர்களின் ஆலோசனையால் உங்கள் வாழ்வில் முன்னேற திட்டமிடுவீர்கள். பிறர் மனம் அறிந்து பேசி நற்பெயரும், காரியம் நிறைவேற்றுவதுமான தன்மையை பெறுவீர்கள். முருகப்பெருமானின் பரிபூரண அருள் துணைநின்று உதவும். இளைய சகோதர, சகோதரிகளுக்கு திருமணம் இனிதாக நிறைவேறும். வீடு, வாகனத்தில் இப்போது பெறுகிற வசதியை முறையாக பயன்படுத்திக் கொண்டாலே போதும். தாயின் மனக்கஷ்டத்திற்கு உங்களின் கவனக்குறைவான செயல் காரணமாக இருந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். புத்திரர்கள் நல்லவிதமாக நடந்து படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். பூர்வசொத்தில் பெறுகிற வருமானம் உயரும். உடல்நலம் சிறப்பாக இருக்க உணவு விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். வழக்கு, விவகாரங்களில் பிடிவாத குணத்தை தவிர்ப்பது நல்லது. தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து கொள்வர். மனைவி பெருந்தன்மையுடன் நடந்து குடும்ப சிரமங்களை மாற்றுவார். நண்பர்களிடம் தகுதிக்கு மீறிய வகையிலான பண பரிவர்த்தனை கூடாது. ஆடம்பரச் செலவைக் குறைத்துக் கொண்டால் பணவசதி மற்ற செலவுகளை தாராளமாக ஈடுகட்டி விடும். பயணத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும். தந்தைவழி உறவினர்கள் பாசத்துடன் நடந்துகொள்வர். வெளிநாட்டு வேலைவாய்ப்பில் பெரும் ஒளர்ச்சி ஏற்படும். தொழிலதிபர்கள் தடைகளை தகர்த்தெறிந்து தாராள வளர்ச்சி பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பயணங்கள் ஏற்படும். பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கூடுதல் பணம் செலவாகும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் வெளிப்படையான நிர்வாக நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். வியாபாரிகள் போட்டியை சாதுர்யத்துடன் சமாளிப்பார்கள். விற்பனை உயர்ந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சரக்கு கொள்முதல் இடங்களில் சில சலுகைகள் கிடைக்கும். புதிய கிளை துவங்குகிற எண்ணத்தை தாமதிப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் புதிய நம்பிக்கை பெற்றுத்தரும்.

அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சுமூக சூழ்நிலை அமைந்து பணியை திறம்பட மேற்கொள்வர். பணியிட மாற்றம் சிலருக்கு ஏற்படும். தொடர்ந்த உழைப்பினால் பணிகள் நேரத்திற்கு முடியும். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகைகள் ஓரளவு கிடைக்கும். சக பணியாளர்களுடன் சுமூக நட்பு பின்பற்றுவது அவசியமாகும். குடும்பச் செலவுக்கு முக்கிய தருணங்களில் கடன் பெறுவீர்கள். பணிபுரியும் பெண்கள் கவனமாக செயல்புரிந்து பணித்திறனை உயர்த்துவர். சம்பள உயர்வு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். மனதில் இருந்த கவலை மாறும். குடும்பப் பெண்கள், கணவரின் எண்ணங்களை உணர்ந்து செயல்படுவதால் சுமூகமான வாழ்வுமுறை ஏற்படும். குடும்ப செலவுக்கான பணவரவு திருப்திகரமாக இருக்கும். சமையலறைப் பணிகளில் கவனம் நல்லது. சுய தொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் உழைப்பையும் பெருக்கி சந்தையில் தமக்கென தனி இடம் பிடிப்பர். சக தொழில், வியாபாரம் சார்ந்தவர்களுடன் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் நிதான நடைமுறை பின்பற்ற வேண்டும். மாணவர்கள் படிப்பதற்கு தேவையான அனுகூல சூழ்நிலை அமையும். அவர்கள் அக்கறையுடன் படித்து முன்னேற்றம் காண்பர். சக மாணவர்களுடன் ஏற்படுகிற கருத்து வேறுபாடுகளை பெரிதுபடுத்தக்கூடாது. படிப்பை முடித்தவர்களுக்கு வருட பிற்பகுதியில் வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூகப்பணியில் கூடுதல் ஆர்வத்துடன் செயல்படுவர். உங்களை புறக்கணித்தவர்களே பாராட்டும் அளவு நிலை உயரும். ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அரசு தொடர்பான உதவிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டாலும் புதிய யுக்திகளை பின்பற்றி பெற்று விடுவீர்கள். பணவரவு சீராகும். விவசாயிகள் தங்கள் பணிகளை உற்சாகமாக நிறைவேற்றுவார்கள். எதிர்பார்த்த மகசூல் அமைந்து நல்ல விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அதிக லாபம் பெறுவீர்கள். சொத்து தொடர்பான விவகாரங்களில் நிதானம் வேண்டும்.

பரிகாரம்: நாகராஜாவை வழிபடுவதால் சிரமம் குறைந்து நன்மை அதிகரிக்கும்.

நன்றி தினமலர் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2011 - ஆங்கில புத்தாண்டு பலன்

Post by உதயசுதா on Tue Jan 04, 2011 5:30 pm

கிருஷ்ணம்மா இந்த பலன்களை கணிச்ச ஜோதிடர் யாரு?
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: 2011 - ஆங்கில புத்தாண்டு பலன்

Post by krishnaamma on Tue Jan 04, 2011 5:45 pm

ஹாய் சுதா , நலமா? புத்தாண்டு எப்படி இருந்தது? தினமலரில் ஜோசியர் பெயர் போடல.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: 2011 - ஆங்கில புத்தாண்டு பலன்

Post by உதயசுதா on Tue Jan 04, 2011 6:15 pm

நான் நல்லா இருக்கேன் கிருஷ்ணம்மா, நீங்க மற்றும் உங்க வீட்டுல எல்லாரும் எப்படி இருக்கீங்க?
இது தினமலரில் வந்த பலனா நான் ஏதோ நீங்கதான் யாருக்கிட்டாவோ கேட்டு
போட்டு இருக்கிங்கன்னு நினைச்சேன். நான் இன்னும் புத்தாண்டு பலன்களை
படிக்கலை
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: 2011 - ஆங்கில புத்தாண்டு பலன்

Post by மஞ்சுபாஷிணி on Tue Jan 04, 2011 8:49 pm

ஆஹா இந்த வருடம் எல்லாருக்குமே நன்மையை வழங்கட்டும் பகவான் அருளால்....

அன்பு நன்றிகள் சுமதி பகிர்வுக்கு....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: 2011 - ஆங்கில புத்தாண்டு பலன்

Post by சிவா on Wed Jan 05, 2011 9:10 am

நன்றி கிருஷ்ணம்மா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2011 - ஆங்கில புத்தாண்டு பலன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum