ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

அனைவருக்கும் இனிய வணக்கம்
 ரா.ரமேஷ்குமார்

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

நரை கூறிய அறிவுரை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா?

View previous topic View next topic Go down

ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா?

Post by Ramya25 on Thu Aug 20, 2009 1:29 am

ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா?

By ராஜா ஆர்.எஸ்

முழுப் பொறுப்பையும் நம் தோள்மீதே சுமத்திக்
கொள்ளும்பொது, நாம் மேலும் உயர்ந்தவர்களாவோம், சிறந்தவர்களாவோம். நாம்
சாய்ந்துகொள்ள வேறு ஒருவரைத் தேடாமல் இருக்கும்போது, நம் பழியைச் சுமத்த
எந்தச் சாத்தானும் இல்லாதபோது, நம் சுமையைச் சுமக்க நமக்கென்று ஒரு
தனிப்பட்ட கடவுள் இல்லாதபோது, நாம் மட்டும் நமக்குப் பொறுப்பானவர்கள்
என்ற நிலையில் மட்டுமே நாம் உயர்ந்த நிலைக்கு வருவோம்,
சிறந்தவர்களாவோம். வாழ்க்கை என்பது கடினமானதொரு விஷயம். அதை தைரியமாகக்
கடந்து செல். அது எந்தச் சின்னக் கடவுள் மீதும் பொறுப்பைச் சுமத்துவதல்ல.
ஏனென்றால் நீயே உன் விதியைச் சமைக்கிறாய்.
- சுவாமி விவேகானந்தர்

சென்னையில், பாடி என்ற ஒரு ஊர். பாடியின் பழைய பெயர் திருவலிதாயம். அங்கே
பழைமையானதொரு சிவன் கோவில் இருக்கிறது. இறைவனின் பெயர் திருவல்லீஸ்வரர்,
இறைவி ஜகதாம்பிகை. அருமையான சிறிய கோவில். திருஞானசம்பந்தர் இந்தப்
பகுதிக்கு விஜயம் செய்தபோது அவரால் பாடல்பெற்ற பெருமை உடையது. அதனால்
‘பாடி’ என்று பெயர் பெற்றது என்று எனக்குச் சிறுவயதில் என் பாட்டி சொன்ன
ஞாபகம். வேறு ஒரு அறிஞர், “கரிகால் சோழன் பாடிவீடு (army camp) கட்டி
அங்குத் தங்கினான். அதனால் அந்தப் பெயர்” என்றும் சொல்லக்
கேட்டிருக்கிறேன்.எது எப்படியோ, இன்று அந்தக் கோவில் இந்தக் காரணங்களுக்காக அல்லாமல் ‘குரு
ஸ்தலம்’ என்ற பெயரில் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. சுமார் இருபது
ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் அங்கு வசித்தபோது, அந்தக் கோவிலுக்கு
அப்படி ஒரு சிறப்பு இருந்ததாக எங்களுக்கே தெரியாது. இந்த பிராபல்யம்
தொடங்கியதெல்லாம் கடந்த சில வருடங்களாகத்தான். புதிதாக குருவுக்காக ஒரு
மண்டபமும் கட்டி விட்டார்கள். பக்கத்தில் இருக்கும் ரயில் நிலயத்தில்
‘குரு ஸ்தலத்திற்குச் செல்ல இங்கே இறங்கவும்’ என்ற போர்டும்
மாட்டியாகிவிட்டது. இப்பொழுது பரிஹாரங்கள் செய்ய மக்கள் கூட்டம் படை
எடுத்துக் கொண்டிருக்கலாம். நான் அங்குச் சென்று சில வருடங்கள் ஆகிவிட்டன.
சரி, இதில் என்ன பிரச்சனை? பெரிதாக ஒன்றும் இல்லை. ஒரு, பாடல்பெற்ற
சிவன் கோவில், திருஞானசம்பந்தரின் தொடர்பால் வெளி உலகிற்குத் தெரியவர
வேண்டிய தலம், ஜோதிடத்தின் மூலம் வேறு சாயம் பெற்றுவிட்டது.
கோவில்கள் வெறும் பரிஹார நிவர்த்தி நிலையங்களாக மட்டுமே பலரால்
அணுகப்படுகின்றன. “நான் இதைச் செய்கிறேன். நீ எனக்கு இதைச் செய்” என்று
வியாபாரம் மேலோங்கத் தொடங்கி விட்டது. அந்தச் சிவன் கோவிலில் முன்னொரு
காலத்தில் குரு வழிபாடு நடந்ததா என்ற ஆராய்ச்சிக்கு நான் செல்லவில்லை. பெரும்
தத்துவங்களை உணர்த்தும் சிவன், திருமால் போன்றவர்களை விட, அவர்களுக்குக்
கீழே இருக்கும் ஊழியர்களான நவகிரஹங்களுக்குச் செல்வாக்கு அதிகமாகி விட்டது
என்பது வருத்தத்திற்குரியது.
ஒருநாள், மாங்காடு காமாக்ஷி அம்மன் கோவிலுக்குச் சென்றபோது, தக்ஷிணாமூர்த்தி
சன்னதி முன் யாரோ ஒருவர் ஒரு ஸ்தோத்திரம் சொல்லிக் கொண்டிருந்தார்.
பார்த்துக் கொண்டிருந்த அர்ச்சகர் திடீரென்று அதட்டலான குரலில் “ஓய்!
என்ன மந்திரம் சொல்றீர்? பிரைம் மினிஸ்டர் முன்னாலே நின்னுண்டு MLA-வைக்
கும்பிடலாமா? நீங்க சொல்ற மந்திரத்துக்கு உரியவர் அங்கே இருக்கார். அங்கே
போய்ச் சொல்லுமையா” என்று நவகிரஹ சன்னதியைக் காண்பித்தார். முதலில்
என்னவென்று யாருக்கும் விளங்கவில்லை. மந்திரம் சொன்னவர் ஒரு அசட்டுச்
சிரிப்பு சிரித்தார். பின்னர்தான் தெரிந்தது, அவர் நவகிரஹத்தில் ஒருவரான
குரு பிருஹஸ்பதி ஸ்தோத்திரத்தை தக்ஷிணாமூர்த்தி சன்னதியில்
சொல்லியிருக்கிறார். அந்த குருவுக்கும், இந்த குருவுக்கும் வித்தியாசம்
தெரியாத அளவுக்கு நம்மை ஜோதிடம் ஆக்கிரமித்துள்ளது.
தென்திசை பார்த்து, கால்மேல் கால் போட்டு, ஆலமரத்தின் கீழ்
அமர்ந்திருக்கும் தக்ஷிணாமூர்த்தி சிவபெருமானின் ஞான வடிவம். நவகிரஹ குரு
என்பவர் வேறு, இவர் வேறு. ஆனால் ‘குரு பெயர்ச்சிப் பலன்’ என்று புத்தகம்
போட்டாலும், அட்டைப் படத்தில் தக்ஷிணாமூர்த்தியைச் சித்தரிக்கிறார்கள்.
மௌனமாக உட்கார்ந்து ஞானதீட்சை அளிக்கும் சிவ மூர்த்தியை, ஜோதிடம் என்ற
சிறிய உலகாயத விஷயத்தில் அடக்கி விட்டார்கள். இது தவறு என்று
சுட்டிக்காட்ட, விஷயம் தெரிந்த ஜோதிடர்களாவது முன்வர வேண்டாமா?நான் ஜோதிடத்தை வீணான விஷயம் என்று சொல்பவனல்ல. இங்கே நான் பேசுவது, ஆன்மீகத்தை மறைக்கும் அளவிற்குப் போய்க் கொண்டிருக்கும் ஜோதிட மயக்கத்தை பற்றித்தான்.
டி.வி.யிலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, ஏதாவது ஒரு ஜோதிடர் “இந்த
ராசிக்காரர்கள், இந்த ஊரில் இந்தக் கோவிலில் உள்ள இந்த அம்மனுக்கு நெய்
விளக்கை ஏற்றி இந்த திசையில் வைத்து வழிபட வேண்டும்” என்று
கூறிவிடுகிறார். அவர் சொல்வதைப் பார்த்தால், அந்த கோவிலில் உள்ள
ஆட்களுக்கும் இவருக்கும் ஏதாவது உடன்படிக்கையோ என்றுகூடத் தோன்றி
விடுகிறது. ரியல் எஸ்ட்டேட்காரருக்கு இந்த கோவில், சாஃப்ட்வேர்
எஞ்சினியருக்கு இந்தக் கோவில் என்ற ரேஞ்சுக்கு போய்க் கொண்டிருக்கிறது
கதை.
ஜனவரி மாதம் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கோவில்களும் பரிஹார
மந்திரங்களும் என்கிறார்கள். இந்த விவகாரங்கள் எல்லாம் நம்
முன்னோர்களுக்குத் தெரியாமல் போய் விட்டது! பாவம். இல்லை என்றால்
ராமனும், பாண்டவர்களும் ‘லோ லோ’ என்று காட்டில் அலைந்திருப்பார்களா?
வாழ்க்கையில் சிலவற்றை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்று ‘தப்புக்
கணக்கு’ போட்டு விட்டார்கள்..
நவரத்தின ராசிக்கற்கள் வியாபாரம் ஒரு பக்கம். பரமஹம்ச யோகானந்தர் என்ற
மகான், தன்னுடைய ஒரு யோகியின் சுயசரிதம் என்ற நூலில் ரத்தினக் கற்களைப்
பற்றிக் குறிப்பிடும் போது, இந்த கற்களின் அதிர்வு (vibration) நமக்குப்
பலனளிக்க வேண்டுமானால் குறைந்தது ஒரு காரட் எடை இருக்க வேண்டும்
என்கிறார். நம் மக்கள் பல பேருக்கு இதெல்லாம் இன்னும் தெரிய வரவில்லை.
நகைக்கடை வியாபாரிகளுக்குத் தெரிய வந்தாலும் ஆகப்போவது என்ன? ஒரு காரட்
வாங்கு என்றால் எவன் வாங்குவான்? சரி. அவன் வாங்குகிற அளவுக்கு, அதைக்
கடுகளவு சிறிய அளவில் மோதிரத்தில் பதித்து ‘வீடு கட்ட, திருமணம் நடக்க’
என்று, விதவிதமாகச் சொல்லி விற்க வேண்டியதுதான்.

Ramya25
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 110
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா?

Post by Ramya25 on Thu Aug 20, 2009 1:32 am

திருவண்ணாமலையில் கிரிவலம். முன்னர் பக்தி இருந்தது. அமைதி
இருந்தது. பரபரப்பு இல்லை. வியாபாரமும் இல்லை. இந்தக் கிழமையில் கிரிவலம்
செய்தால் இப்படி ஆகலாம் என்று இப்போது ஒரு பட்டியல் வேறு. கேட்டால் இந்த
விவரம் இந்தப் புராணத்தில் இருக்கு என்பார்கள். நமக்கேன் வம்பு? நண்பர்
ஒருவர் சொன்னார் “பௌர்ணமி என்றால் திருவண்ணாமலை போயிடுவேன் சார்.
அப்படித்தான் பாருங்க. ரெண்டு நாளுக்கு முன்னால் போனேன். கிரிவலம்
ஆரம்பிக்க கொஞ்சம் லேட்டாயிடுச்சு. பௌர்ணமி டயம் வேற முடியப் போகுது.
இன்னும் பாதி தூரம் இருக்கு. ஒரே ஓட்டமா ஒடி மூச்சிரைக்க ஒருவழியா கிரி
வலத்தை முடித்தோம்.”
அடக் கடவுளே! எப்படி, கிரிவலம் என்பது வெறும் சடங்காகி விட்டது
பாருங்கள். ‘ஒரு நிறைமாத கர்ப்பிணியான மகாராணி நடப்பது போல கிரிவலம்
செய்ய வேண்டும்” என்றார் ரமணமகரிஷி.

வாழ்க்கையில் சில தருணங்களில் ‘என்ன செய்தால் இந்த துன்பத்திலிருந்து
விடுபடலாம். எத்தைத் தின்னால் பித்தம் தீரும்’ என்பது போன்ற நிலை வரும்.
அப்பொழுது ஜோதிட பரிஹாரங்களில் ஆறுதல் தேடுவது தவறாகாது. நான் மேலே
சுட்டிக் காட்டியவை அவையே ஆன்மீகம் என்று நினைத்து உழல்பவர்களுக்கு.
குறிப்பாகத் தமிழ்நாட்டில் இன்று ஆன்மீகம் என்றாலே முக்கால்வாசி
ஜோதிடம்தான் என்ற நிலை.
நாயன்மார்களோ, ஆழ்வார்களோ, ஆதிசங்கரரோ, ஸ்ரீ ராமகிருஷ்ணரோ நாம்
படும் துன்பங்களுக்கு ஜோதிட பரிஹாரமா சொல்லிக் கொண்டிருந்தார்கள்?
வாழ்வென்று வந்துவிட்டால் இன்ப துன்பங்கள் நிச்சயம்; இரண்டிலிருந்தும்
விடுபட வழியைப் பார். துன்பம் வரும்போது இறைவனைச் சரணடை” என்றுதானே
போதித்தார்கள்.

திருஞானசம்பந்தர், ஒரு படி மேலே போய், தன்னுடைய கோளறு பதிகத்தில்
“சிவபெருமான் என் இதயத்தில் புகுந்து விட்டதால் ஒன்பது கிரஹங்களும்
நல்லவையே. அவை அடியவர்க்கு நல்லதையே செய்யும்”
என்று பாடி வைத்தார்!
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே”
“எனக்கு மேலும் மேலும் துன்பத்தைக் கொடு. அப்பொழுதுதான் உன்னை
எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பேன்” என்று கண்ணனிடம் வேண்டினாளாம்
குந்தி. அந்த அளவுக்கு நாம் இல்லையென்றாலும் கொஞ்சமாவது பக்திக்காக பக்தி
செலுத்தப் பழகிக்கொள்வோமே.

Ramya25
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 110
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா?

Post by Ramya25 on Thu Aug 20, 2009 1:35 am

ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா?
By நன்னிலம் V ராஜகோபால கனபாடிகள்

வேதம் என்னும் புருஷனுக்கு ஆறு அங்கங்கள் (உறுப்புகள்). அவைகளில்
ஜ்யோதிஷம் (ஜோதிடம்) என்பது நேத்ரம் (கண்) போன்றது. ஒரு மனிதனின் அனைத்து
உறுப்புகளிலும் கண்கள் எவ்வாறு முக்கியமானவைகளோ அவ்வாறே அனைத்து
சாஸ்திரங்களிலும் ஜ்யோதிஷ சாஸ்திரம் மிக முக்யமானதாகும். ஸூரியன் சந்திரன்
போன்ற கிரஹங்களின் ஸஞ்சாரத்தையும், அமைப்பையும், நக்ஷத்ரங்களின்
விபரங்களையும் தெரிவிக்கும் ஜ்யோதிஷ சாஸ்திரம், வானவெளியில் உலாவரும்
கிரஹங்களுக்கும், பூமியில் வாழும் உயிர்னங்களுக்கும் உள்ள தொடர்பை
விவரித்து அவற்றின் நன்மை தீமைகளையும் கூறுகின்றது.
நமது முன்னோர்கள், கிரஹங்களின் போக்கை தெரிந்துகொள்வதற்கும்
விரதம்-பண்டிகை-செய்யவேண்டிய நாட்களையும் - காலத்தையும் - அறிந்து
கொள்வதற்கும் மட்டுமே ஜோதிடத்தை உபயோகித்து வந்தார்கள். அவசியத் தேவை
ஏற்படும்போது மட்டும், எதிர்கால பலன்களை ஜோதிடம் மூலம் பரிசீலித்துத்
தெரிந்து கொண்டார்கள். ஆனால், இன்றைய சூழ்நிலையில் ஜோதிடம் என்றாலே
எதிர்கால பலன்களைத் தெரிந்து கொள்வதற்காக மட்டும்தான் என்று பலர்
எண்ணுகிறார்கள். செய்யவேண்டிய அனுஷ்டானங்களின் (கடமைகளின்) காலங்களை
(பஞ்சாங்கங்கள் மூலம்) தெரிந்துகொள்ளவே நாம் ஜோதிடத்தை அதிகமாக உபயோகிக்க
வேண்டுமே தவிர, அடிக்கடி நமது எதிர்காலத்தை ஆராய ஜோதிடத்தை உபயோகிப்பதை
குறைத்துக்கொள்ள வேண்டும்.

ஏனென்றால் ஜோதிஷ சாஸ்திரங்களில் கூறப்படும் பலன்கள் நிஸ்சயமற்றவை.
ஒருவரின் நல்ல-தீய-செயல்களால் பலன்கள் எதிர்காலத்தில் மாறலாம். ஆகவேதான்
பலன்களைக்கூறும் வராஹ மிஹிரர்கூட, பலன்களைத்தான் நாங்கள் கூறுகிறோமே
தவிர, பலன்களில் அதிகம்-குறைவு என்னும் பாகுபாட்டை ஸ்ருஷ்டி செய்த
ப்ருஹ்மதேவனால் மட்டுமே கூறமுடியும்
என்கிறார். மேலும் ஸ்தாஸானுக்ரஹா: க்ரஹா: என்பதாக எப்போதும் தனது கடமைகளைச் சரிவரச் செய்துவரும் நபர்களுக்கு அனைத்து கிரஹங்களும் ஒருபோதும் தீங்கு செய்யாது
எப்போதும் நன்மையையே செய்யும் என்றும் கூறுகிறார். பொதுவாக ஜாதகம்
(பிறப்பு) என்பது மிகவும் ரஹஸ்யமாக பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. ஜாதகம்,
பிறந்த நக்ஷத்திரம்-பிறந்த லக்னம், ராசி, (சர்மா) பெயர், ஆகியவற்றை
மற்றவரிடம் காரணிமின்றி தெரிவிக்காமல் ரஹஸ்யமாக பாதுகாக்க வேண்டும்
என்கிறது சாஸ்திரம். ஆகவேதான் நமது முன்னோர்கள் அடிக்கடி ஜாதகங்களை
ஆராய்வதில்லை. கடமையை மட்டும் செய்து வந்தார்கள். அதனாலேயே அவர்களுக்கு
எப்போதும் நன்மை கிட்டியது.

Ramya25
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 110
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா?

Post by Ramya25 on Thu Aug 20, 2009 1:36 am

தற்காலத்தில் பலர் அடிக்கடி தாங்கள் ஜாதகத்தை ஜோதிடரிடம் காண்பித்து
பலன்களைக் கேட்கிறார்கள். குறிப்பாக குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி,
வருடப்பிறப்பு போன்ற நாட்களில் எனது நக்ஷத்திரத்திற்கு எப்படி இருக்கும்?
நல்லதா? கெட்டதா? என்று கேட்கிறார்கள். இதை பயன்படுத்தி பத்திரிக்கை,
டி.வி. போன்ற மீடியாக்களும் தன் பங்கிற்கு விளம்பரங்கள் செய்கின்றன.
சிலர் ஜோதிடர் சொல்லும் பரிஹாரத்தை செய்கிறார்கள். பலர் மறுபடியும்
வேறு ஜாதகரிடம் சென்று அதே ஜாதகத்தைக் காண்பித்து மறுபடியும் பலனைக்
கேட்கின்றார்கள். மேலும் பலர் ஜோதிடர்கள் கூறும் பரிஹாரங்களை செய்யாமல்
விட்டுவிடுகிறார்கள். இதனால் பரிஹாரத்துக்குரிய கிரஹங்கள், தாங்கள்
ஏமாற்றப்பட்டதாக எண்ணிக்கொண்டு அதிகமான துன்பத்தைத்தர முயற்சிக்கின்றன.
ஜாதகத்தை பரிசீலிப்பதில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று கிரஹங்களின்
ஸஞ்சாரத்தை ஆராய்ந்து சுப அசுபத்தன்மையை கண்டுபிடித்தல். இரண்டாவது
கிரஹங்களின் தோஷங்களுக்கான பரிஹாரங்கள். இவற்றில் முதலில் கூறப்பட்ட
பகுதியை அனைவரும் செய்யலாம். கம்ப்யூட்டர்கூட கிரஹ ஸஞ்சாரத்தைக்
கணக்கிட்டு (தோஷமுள்ள) கிரஹங்களை கண்டுபிடித்து விடுகிறது. ஆனால்
இரண்டாவதாக உள்ள பகுதியை அனைவராலும் செய்ய இயலாது. ஏனென்றால் கிரஹ
தோஷத்திற்கான பரிஹாரங்கள் அனைத்தும் வேத,சாஸ்திர, ஆகம-புராணங்களில்
அமைந்துள்ளன. ஜோதிடம்-வேதம் ஆகிய இரண்டையும் நன்றாக அறிந்தவர்களால்
மட்டுமே தோஷத்திற்கும் பரிஹாரத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தி பரிஹாரங்களைக்
கூற முடியும்.
ஆகவே அடிக்கடி நக்ஷத்ரங்களைச் சொல்லி பலனைக் கேட்கக்கூடாது. ஜாதகத்தை
மற்றவரிடம் காரனமின்றி காண்பிக்கவும் கூடாது. திருமணப்பொருத்தம் போன்ற
தேவையான நேரங்களில் வேதம்-சாஸ்திரம் கற்று ஆச்சாரத்துடன் இருப்பவர்களிடம்
மட்டும் ஜாதகத்தைக் காண்பிக்கலாம். இந்த மஹான்கள் ஜாதகத்தைக் கூடியவரை
ஆராய்ந்து, தனது வாக்கால் பலனைக் கூறி, தேவையென்றால் மட்டும்
சக்திக்குத்தக்கவாறு பரிஹாரமும் கூறுவார்கள். அந்தப் பரிஹாரமும் உடனேயே
பலனைத்தரும். ஆகவே, கூடியவரை பலனை எதிர்பாராமல் நமது கடமைகளை
ஸரிவரச்செய்து தெய்வ ஆரதனைகளை செய்து கொண்டிருக்கலாம். அடிக்கடி ஜாதகம்
பார்ப்பதையும் தகுதியற்றவர்களிடம் நமது நக்ஷத்ரத்தைச் சொல்லியும்,
ஜாதகத்தைக் காண்பித்தும் பலனைக் கேட்பதையும் தவிர்க்க முயற்சிக்கலாம்.
ஸ்ரீ பகவான் ரக்ஷிக்கட்டும்.

நன்னிலம் V ராஜகோபால கனபாடிகள்

Ramya25
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 110
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா?

Post by paarthaa077 on Thu Aug 20, 2009 10:43 am

அருமை, ரம்யா அவர்களின் பதிவுகள் தொடர வாழ்துகள்.. மகிழ்ச்சி
avatar
paarthaa077
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 179
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஜோதிட மயக்கமா? ஆன்மீகமா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum