புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்பிணிக்கு உதவிய ஐயனார்!- திருநாரையூர் Poll_c10கர்ப்பிணிக்கு உதவிய ஐயனார்!- திருநாரையூர் Poll_m10கர்ப்பிணிக்கு உதவிய ஐயனார்!- திருநாரையூர் Poll_c10 
21 Posts - 66%
heezulia
கர்ப்பிணிக்கு உதவிய ஐயனார்!- திருநாரையூர் Poll_c10கர்ப்பிணிக்கு உதவிய ஐயனார்!- திருநாரையூர் Poll_m10கர்ப்பிணிக்கு உதவிய ஐயனார்!- திருநாரையூர் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்பிணிக்கு உதவிய ஐயனார்!- திருநாரையூர் Poll_c10கர்ப்பிணிக்கு உதவிய ஐயனார்!- திருநாரையூர் Poll_m10கர்ப்பிணிக்கு உதவிய ஐயனார்!- திருநாரையூர் Poll_c10 
63 Posts - 64%
heezulia
கர்ப்பிணிக்கு உதவிய ஐயனார்!- திருநாரையூர் Poll_c10கர்ப்பிணிக்கு உதவிய ஐயனார்!- திருநாரையூர் Poll_m10கர்ப்பிணிக்கு உதவிய ஐயனார்!- திருநாரையூர் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
கர்ப்பிணிக்கு உதவிய ஐயனார்!- திருநாரையூர் Poll_c10கர்ப்பிணிக்கு உதவிய ஐயனார்!- திருநாரையூர் Poll_m10கர்ப்பிணிக்கு உதவிய ஐயனார்!- திருநாரையூர் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கர்ப்பிணிக்கு உதவிய ஐயனார்!- திருநாரையூர் Poll_c10கர்ப்பிணிக்கு உதவிய ஐயனார்!- திருநாரையூர் Poll_m10கர்ப்பிணிக்கு உதவிய ஐயனார்!- திருநாரையூர் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பிணிக்கு உதவிய ஐயனார்!- திருநாரையூர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 01, 2010 2:59 am

சங்க காலத்திலேயே தமிழகத்தில் ஐயனார் வழிபாடு பிரபலம் அடைந்து விட்டது. தமிழகத்தில் தொன்மையான ஊர்களில் வடக்கில் பிடாரியும், தெற்கில் ஐயனாரும் கோயில் கொண்டுள்ளனர். ஐயனார் என்பவர் பிச்சாண்டவராக வந்த சிவபெருமானுக்கும், மோகினியாக வந்த திருமாலுக்கும் ஏற்பட்ட காதலால் உருவான கடவுளாவார். கையார் என்ற சொல்லே பிற்காலத்தில் ஐயனார் ஆயிற்று என்றும் கூறுவர். மிகவும் புகழ் பெற்ற தலமான திருநாரையூரில் எழுந்தருளியுள்ள ஐயனாரும் புகழ், பெருமைக்குரிய கடவுளாவார். தெய்வ அருள்பெற்ற நம்பியாண்டார் நம்பியின் திருஅவதாரத் தலம் திருநாரையூர் ஆகும். அப்பரடிகள் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிவன் கோயிலுக்கு வரும் அன்பர்கள் ஐயனார் கோயிலுக்கும் வந்து செல்வது மரபாகும். நம்பியாண்டார் நம்பிகள் வழிபாடு செய்த பொல்லாப்பிள்ளையார் இக்கோயிலில் அருள்பாலித்து வருகிறார். ஐயனார் கோயிலின் தலவிருட்சம், சிற்பங்களின் அமைப்பு, கட்டடத்தின் கலையம்சம் போன்றவற்றை பார்க்கும் போது, இக்கோயிலின் காலம் ஐந்நூறு ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவருகிறது. ஆனால் அதற்கும் முன்பாகவே சோழ மன்னர்கள் காலத்தில் ஆலமரம் அல்லது வேப்பமரத்தடியில் சுடுமண் உருவத்தில் ஐயனார் இங்கு வழிபாட்டில் இருந்திருக்கலாம் என்கின்றனர்.

15-ஆம் நூற்றாண்டில் ஓட்டுக் கட்டடத்தில் கற்சிற்பங்களைக் கொண்டு கோயில் கட்டி வழிபாடு செய்துள்ளனர். பிறகு 17-ஆம் நூற்றாண்டில் கருங்கல் மற்றும் செங்கல் சுதை கொண்டு மூலவர் கருவறையும் முன்மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் தனிபீடத்தில் மூலவர் ஐயனார், தனது தேவியருடன் காட்சி தருகிறார். பழைய மூலவரின் சிற்பம் பின்னமாகி விட்டதால், அதனை தனி மேடையமைத்து, பக்கத்தில் வைத்துள்ளனர். தற்போது வழிபாட்டில் உள்ள ஐயனார் சிற்பம் பழைய சிற்பத்தைப் போலவே சற்று பெரிதாக அமைந்துள்ளது. ஐயனார் வலது காலைத் தொங்கவிட்டு, இடது காலை மடித்து சுக ஆசனத்தில் அமர்ந்த நிலையில், வலது கையில் சாட்டையைப் பிடித்த வண்ணம் உள்ளார். இடது கையை இடது முழங்கால் மீது வைத்துள்ள நிலை. தலையில் ஜடாபாரமும், காதுகளில் பத்ர குண்டலமும், மார்பில் மூன்று ஆரங்களும் அணிந்துள்ளார்.

ஐயனாரின் வலது பக்கம் அவரது தேவியான பூரணை அமர்ந்துள்ளார். தலையில் கரண்ட மகுடமும், இடது கையில் பூச்செண்டு பிடித்தும், வலது கையை தொடை மீது வைத்தும் அமர்ந்துள்ளாள். இடது பக்கம் புஷ்கலை அமர்ந்துள்ளாள். இவர் வலது காலை மடித்து இடது காலைத் தொங்கவிட்டு அமர்ந்துள்ளார். வலது கையில் மலர்ச்செண்டு ஏந்தி இடது கையை இடது காலில் ஊன்றியுள்ளார். தலையில் கரண்ட மகுடம், காதுகளில் மகர குண்டலங்கள், மார்பில் மணிமாலைகள் எழிலூட்டுகின்றன. தற்போது உள்ள மூலவரின் காலம் 17-ம் நூற்றாண்டு ஆகும். ஐயனாரின் பழைய சிலை 15ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. வீரனாருக்கு ஐயனார் கோயிலின் முன்பாக கிழக்கில் தனிச் சன்னதி அமைந்துள்ளது. ஊரை பார்த்தபடி வீரனார் காட்சி தருகின்றார். அவரது ஆயுதமான சூலம் எதிரே மூன்றடி உயரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வீரனார் தனிமேடையில் இரண்டடி உயரத்தில் நின்ற நிலையில் காட்சி தருகின்றார். தலையில் அமைந்த விரிசடையைக் கொண்டையாக சேர்த்துக் கட்டியுள்ளார். காதுகளில் பத்ர குண்டலமும், மார்பில் ஆரங்களும், கால்களில் வீரக்கழல்களும் அணி செய்கின்றன. வலது கையில் குறுவாளும், இடது கையில் கதாயுதத்தையும் பிடித்துள்ளார். குதிரை வாகனத்தில் அமர்ந்து ஊரை வலம் வந்து காவல் பணியில் ஈடுபட்டு வருகிறார் இவர் என்பர்.

விநாயகர் தனி மேடையில் அமர்ந்து காட்சி தருகின்றார். கோயிலுக்கு கிழக்கே தனித்தனி மேடைகளில் மிகப் பிரமாண்டமான உருவத்தில் எதிர்எதிராக இரண்டு குதிரைகள் நின்ற நிலையில் காட்சி தருகின்றன. குதிரையின் நடு முதுகில் ஐயனாரும், வீரனும் அமர்ந்து செல்வதற்காக மெத்தை விரிப்பு தொங்கவிடப்பட்டுள்ளது. கோயிலின் கிழக்கில் பலிபீடத்தின் தென்புறமாக தல விருட்சமான வேப்பமரம் காட்சி தருகின்றது. வீரன் சன்னதிக்குப் பின்புறம் மற்றொரு தலவிருட்சமான ஆலமரம் அமைந்துள்ளது. தெற்குப் பக்கத்தில் திருக்குளம் அமைந்துள்ளது. கோயில் திருக்குளம் தெளிந்த நீரோடையைப் போல காட்சி தருகின்றது. வடக்குக் கரையில் இரண்டு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் இத்திருக்குளத்தில் நீராடி ஐயனாரை வலம் வந்து வழிபாடு செய்வது மரபாக உள்ளது. ஒவ்வொரு ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையன்றும், தைப்பொங்கலன்றும், தமிழ் வருடப்பிறப்பு நாட்களிலும் குலதெய்வ வழிபாட்டுக்காரர்களும், உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வரும் திரளான பக்தர்களும் இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, கோயிலில் பொங்கலிட்டு மகிழ்கின்றனர். இந்த ஐயனாரின் பெருமைக்குக் காரணமாக பல சம்பவங்கள் சொல்லப்படுவதுண்டு. ஒரு முறை நிறைமாத கர்ப்பிணி ஒருத்தி இவ்வூரைக் கடந்து மாலை வேளையில் தாய்வீட்டிற்குச் சென்றுள்ளார். இப்பகுதி அப்போது அடர்ந்த மரங்கள் நிறைந்த காடாக இருந்துள்ளது. அச்சமயம் அவளுக்குப் பிரசவ வலி வந்துவிடவே துணைக்கு யாரும் இன்றித் தவித்திருக்கிறாள். அப்பொழுது ஐயனார் ஒரு பெண்ணாகத் தோற்றம் பெற்று நல்ல முறையில் குழந்தை பிறக்கச் செய்தார். பின்னர் இரவு முழுவதும் அவளுக்கு துணையாக இருந்து விட்டு விடிந்தவுடன் மறைந்துவிட்டார். அதன்பிறகுதான், தனக்குத் தாயாக வந்து பிரசவத்திற்கு உதவியவர் ஐயனார் என்பது அவளுக்குத் தெரிந்திருக்கிறது. காவல் தெய்வமான ஐயனார் தம்மைக் குலதெய்வமாகக் கொண்டு வழிபடும் பக்தர்களின் குடும்பங்கள் சீரோடும், சிறப்போடும் வாழும் வகையில் அருள்பாலித்து வருகிறார். தன் பக்தர்கள் யாரும் வாழ்வில் இன்னல்பட்டு முடங்கிப் போகாமல் காத்து வருவதால் இந்த ஐயனாருக்கு "மங்காமல் காத்த ஐயனார்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டம், திருநாரையூர் எனும் கிராமத்தில் இந்த ஐயனார் கோயில் அமைந்துள்ளது.

-கோ.முத்துசாமி, தரங்கம்பாடி.



கர்ப்பிணிக்கு உதவிய ஐயனார்!- திருநாரையூர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக