ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 SK

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆன்மீகத் தகவல்கள்!

View previous topic View next topic Go down

ஆன்மீகத் தகவல்கள்!

Post by சிவா on Tue Nov 02, 2010 7:10 am

சொல் கேட்கும் பிள்ளையார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோட்டையூரில் உள்ள விநாயகரை வித்தியாசமாக ``சொல் கேட்கும் பிள்ளையார்'' அல்லது `சொல் கேட்டான் பிள்ளையார்' என்று அழைக்கிறார்கள். பேச்சு வழக்கில் சொக்கட்டான் பிள்ளையார் என்கிறார்கள்.

பக்தர்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு அருள்புரிகிறார் என்பதால் இந்தப் பெயர் அவருக்கு ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.

காலப்போக்கில் இந்தப் பெயர் மாறி `சொக்கட்டான் பிள்ளையார்' என்றாகிவிட்டது.


Last edited by சிவா on Tue Nov 02, 2010 7:21 am; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகத் தகவல்கள்!

Post by சிவா on Tue Nov 02, 2010 7:11 am

ஒரு தலை பிரம்மன்
பிரம்மனுக்கு நான்கு தலைகள் உண்டு. ஆனால் ஒரு தலையுடன் கூடிய பிரம்மன் கோவை மாவட்டம் கூளநாயக்கன்பட்டியில் உள்ள மலையாண்டி சுவாமி கோவிலில் காணப்படுகிறார்.

இங்கு பிரம்மனுக்கு ஒரு தலையும், நான்கு கைகளும் உள்ளன. வலது கையில் அபய முத்திரையும், இடது கையில் கமண்டலமும், பின் வலது கையில் தர்ப்பைப் புல்கட்டும், மற்றொரு கையில் வேள்விக் கரண்டியும் கொண்டு அருள்பாலிக்கிறார், இந்த ஒரு தலை பிரம்மன்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகத் தகவல்கள்!

Post by சிவா on Tue Nov 02, 2010 7:13 am

கைக்குத்தல் அரிசி காணிக்கை

எல்லாக் கோவில்களிலும் இறைவனுக்கு சாதமே நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் சத்திரம் என்ற கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு அரிசியையே நைவேத்தியமாகப் படைக்கிறார்கள்.

இதற்காகப் பெண்கள் கைக்குத்தல் அரிசியைக் காணிக்கையாகக் கொடுக்கிறார்கள்.

இந்த அரிசியை பக்தர்கள் தங்கள் வீட்டிலேயே மிகச் சுத்தமான முறையில் தயார் செய்கிறார்கள்.

இவ்வாறு கைக்குத்தல் அரிசியை நைவேத்தியமாக கொடுத்தால், நினைத்த வேண்டுதல் சட்டென்று நிறைவேறும் என்கிறார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகத் தகவல்கள்!

Post by சிவா on Tue Nov 02, 2010 7:14 am

சூரியன், சனி தோஷம் நீக்கும் கோவில்
சூரியனும், சனிக் கிரகமும் பகைக் கிரகங்கள் ஆகும். எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் சூரியன் ஓரிடத்திலும், சனி மற்றொரு இடத்திலும் இருப்பதைத்தான் காண முடியும்.

ஆனால் தஞ்சாவூர் அருகில் உள்ள திருவலஞ்சுழியில் உள்ள சுபர்தீஸ்வரர் கோவிலில் இந்த இரண்டு கிரகங்களும் நேருக்கு நேர் உள்ளன.

இங்கு இவர்கள் இருவரும் நட்பு நிலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சூரியன் மற்றும் சனி பகவானால் ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து அர்ச்சனை செய்து கொள்ளலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகத் தகவல்கள்!

Post by சிவா on Tue Nov 02, 2010 7:15 am

ஆயிரம் காளியம்மன்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ளது திருமலைராயன்பட்டிணம் என்ற ஊர். இங்கு ஆயிரம் காளியம்மன் கோவில் இருக்கிறது.

இந்த அம்மனை ஐந்து வருடத்திற்கு ஒருமுறை ஒரு பெட்டியில் இருந்து எடுத்து வழிபாடு நடத்துகிறார்கள். மற்ற நாட்களில் கோவிலுக்குச் சென்று பெட்டியை மட்டுமே வணங்கலாம்.

வைகாசி மாதம் வளர்பிறை திங்கட்கிழமை அன்று மட்டும் தான் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை அம்மனை வெளியே எடுத்துப் பூஜை செய்வார்கள். இந்த அம்மனுக்கு எதைப் படைத்தாலும் ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் - என்ற எண்ணிக்கையின் அடிப்படையில்தான் படைக்க வேண்டும்.

அதனால் இந்த அம்மன் `ஆயிரம் காளியம்மன்' என்று அழைக்கப்படுகிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகத் தகவல்கள்!

Post by சிவா on Tue Nov 02, 2010 7:16 am

பணப் பிரச்சினை போக்கும் பைரவர்
சிவபெருமானின் அம்சத்துடன் நாய் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பவர் பைரவர். பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான்.

ஒருவரால் ஏமாற்றப்படுவது அல்லது அவர்கள் நியாயமற்ற வகையில் நமது சொத்துக்களை அபகரிப்பது, திரும்பி வராத நீண்ட நாள் கடன்கள் உள்ளிட்ட நிறைவேறாத நியாயமான பொருளாதார பிரச்சினைகள் தீரவும், சனி தோஷத்தால் அவதியுறுபவர்கள் அதிலிருந்து விடுபடவும், அதன் தாக்கம் குறையவும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவரை தேய்பிறை அஷ்டமியிலும், ராகு காலம் சனி ஓரையிலும் வழிபடுவது சிறப்பு.

மேலும், தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிற்றுக் கிழமை மாலைவேளையில் சனி ஓரையில் உள்ள ராகு காலத்திலும் சொர்ண ஆகர்ஷன பைரவரை வழிபடுவது சிறப்புக்குரியது.

அப்போது நடைபெறும் பூஜைகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், பால், தேன், இளநீர், பன்னீர், திருமஞ்சனம் பொடி, மஞ்சள், சந்தனம், பச்சரிசி மாவு ஆகிய அபிஷேகப் பொருட்களுடன் செவ்வரளிப் பூவையும் பூஜைக்காக அளிப்பது நற்பலன்கள் பல தரும்.

இந்த அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெறும் போதும், அதனை தொடர்ந்து பக்தர்களால் வழங்கப்பட்ட செவ்வரளிப் பூக்களை கொண்டு பூஜை நடத்தப்படும்போதும் பைரவர் மூலமந்திரத்தை மன முருக பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இவ்வாறு நாம் செய்யும் பிரார்த்தனை நம் துன்பங்களைப் போக்கி வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பது ஐதீகம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகத் தகவல்கள்!

Post by சிவா on Tue Nov 02, 2010 7:22 am

ஒரு மண்டல விரதம் ஏன்?
எந்த தெய்வத்தை பூஜிப்பதாக இருந்தாலும் அதனைத் தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) பூஜிக்க வேண்டும் என்பார்கள். இதற்கான காரணம் தெரியுமா?

சூரியன் முதல் கேது வரை நவக்கிரகங்கள் ஒன்பதாகும். மேஷம் முதல் மீனம் வரை ராசி மண்டலம் பன்னிரண்டாகும். அசுவதி முதல் ரேவதி வரை நட்சத்திர மண்டலம் 27 ஆகும். இந்த மூன்று மண்டலங்களின் கூட்டுத்தொகையான 48-ஐ வழிபாட்டில் ஒரு மண்டலம் என்று வகுத்துள்ளனர். ஒருவருக்கு ஒரு செயல் நடைபெற கிரகங்களும், ராசிநாதர்களும், நட்சத்திர தேவதைகளும் துணை செய்ய வேண்டும் என்று கருதியே மண்டல வழிபாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நோக்கத்தை மனதில் கொண்டு அந்த நோக்கம் நிறைவேறுவதற்காக ஒரு மண்டலம் தொடர்ந்து பூஜிப்பது மரபு. இந்த நாட்களில், எந்த தெய்வத்தை வழிபடுகிறோமோ அந்த தெய்வத்தின் கோவிலுக்குச் செல்லுதல், அந்த தெய்வத்திற்குரிய மூலமந்திரங்களை ஜெபித்தல், மந்திரம் சொல்ல முடியாதவர்கள் அந்த தெய்வத்திற்குரிய எளிய துதிப்பாடல்கள், கவசங்களைப் பாராயணம் செய்தல், சகஸ்ர நாமங்களை ஜெபித்தல், புஷ்பத்தால் அர்ச்சித்தல், தீபம் ஏற்றுதல்... போன்ற எளிய விதங்களில் வழிபட வேண்டும்.

ஒருமுகப்பட்ட மனதுடன் ஒரு மண்டலம் செய்து வரும் பிரார்த்தனைகள் நிச்சயம் நிறைவேறி வருவதை அனுபவத்தில் உணரலாம். மண்டல வழிபாடு செய்வது என்பது மிகவும் மகத்தானது.

ஆனால், மண்டல வழிபாடு இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து செய்யப்பட வேண்டும். ஒரு செயலில் முழுமையான வெற்றியை வேண்டுவோர் தமக்கு விருப்பமான இஷ்ட தேவதையை முன்னிறுத்தி தொடர்ந்து 48 நாட்கள் பூஜித்து வர நிச்சயம் வெற்றி பெறுவது உறுதி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகத் தகவல்கள்!

Post by ராஜா on Tue Nov 02, 2010 11:15 am

அரிய தகவல்கள் நன்றி சிவா நன்றி அன்பு மலர்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆன்மீகத் தகவல்கள்!

Post by சாந்தன் on Tue Nov 02, 2010 11:22 am

பக்தி மயமான தகவல்களுக்கு மிக்க நன்றி சிவா அண்ணா
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ஆன்மீகத் தகவல்கள்!

Post by Thanjaavooraan on Tue Nov 02, 2010 2:19 pm

அறிய தகவல்கள்..ஸ்தல பெயர்காரணியும் கேட்டிராதது. தகவலுக்கு நன்றி. மகிழ்ச்சி
avatar
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 818
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: ஆன்மீகத் தகவல்கள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum