ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பகவத் கீதை சுருக்கம்

View previous topic View next topic Go down

பகவத் கீதை சுருக்கம்

Post by rsakthi27 on Sat Oct 16, 2010 1:54 pm

பகவத் கீதை சுருக்கம்
பகவத் கீதையில் எல்லாம் வரிகளும் முக்கியமானவை அதில் எனக்கு பிடித்த வரிகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


எல்லா மனிதப் பிறவிகளுக்கும் முக்குணங்கள் என்ற இயற்க்கை உண்டு. அதாவது
1 . கடமை
2 . தீயசெயல்
3 . செயலற்று இருப்பது

இதில் முக்கியமானது கடமை ஒவ்வொரு மனிதனும் செய்தே ஆக வேண்டும்.

மனித பிறவியின் சிறப்பு என்னவென்றால் தான் யார் என்பதை அறிந்து தன்னைதானே வென்று , தன்னுள் சுயமாக இறைவனின் ஒளியை உணர்ந்து , தன்னை தானே திருப்தி அடைந்து , தானே கேள்வி தானே பதில் என்று தன்னிலை அடைந்து ஆனந்தம் அடைந்தவனுக்கு கடமை என்பது கிடையாது.


மெய்யென்ற புலனை ஒழுங்குபடுத்திவிட்டால் பெரும் பாவியாகிய காமத்திலிருந்து விடுபடலாம். உருவாகும் காமத்தை ஆரம்பதிலையை அடக்கிவிடவேண்டும். அப்போது தான் மெய் ஞான தெய்வ ரகசியத்தை அடைய முடியும். மனிதன் காமத்தை தர்மத்துக்கு பாதகமிள்ளது செயல்படுத்தவேண்டும். காம உணர்வை முறைபடுதினால் ஞானம் என்னும் மனித வாழ்க்கை பாதையில் அந்த துன்பம் வருவதில்லை.

எவனொருவன் என்றும் என் உருவத்தை பூஜித்து கடமை என்னும் நற்செயல்களைப் பின்பற்றி வருகிறானோ, அவனே தெய்வீக உணர்வை அடைவான். மீண்டும் அவனுக்கு மனிதபிறப்பு என்பதே கிடையாது அவன் சொர்கத்தை ஆட்சி புரிவான். இதுவே மனிதன் தான் அடையவேண்டிய முடிவான இடமாகும்.

இறைவழிபாட்டில் பல பிரிவுகள் உள்ளன. அதில் சில, முனிவர்கள் யாகத்தை வளர்த்து பிரபஞ்ச பூரண உண்மையை பொருளாக இட்டு தேவர்களை வழிபடுகின்றன, சில பிரிவினர் சூரியனை கடவுளாக வழிபடுகின்றனர், சில பிரிவினர் பலகடவுள் இருப்பதாக கூறுகின்றனர். இது மாபெரும் தவறு ,

http://devotionalonly.com/wp-content/uploads/2009/09/lord-maha-vishnu.jpg

கடவுள் என்பது நான் ஒருவன் தான்.

மனிதன் மனதை கட்டுபடுத்தி புலன்களை அடக்கி பக்தியுடன் செயல்படும் போது அவன் எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துவான், மற்றவரும் அவனை அன்புடன் நடத்துவர், அவன் எத்தகைய தியச்செயளுக்கும் கட்டுபடுவதில்லை.

இறைவனின் அன்பபை பெற்ற பக்தன் இறை உணர்வில் எப்போதும் இருப்பன். கேட்பவை, பார்ப்பவை, தொடுபவை எல்லாவற்றையும் இறைவனே செயல்படுத்துகிறான் என்பதை உணர்வான்.

அறிவு, மனம், நம்பிக்கை, கடமை இவற்ற்றை ஆத்மாவின் துணையுடன் ஒரே நிலையில் பரமாத்மாவை நிறுத்தி இறைவனை உணர்ந்து வழிபடுபவனே ஞானத்தின் சொர்கத்தை நேராகச் சென்று அடைந்துவிடுகிறான்.

பசிக்காக மனிதன் உண்ணும் உணவு உடலுக்கும் எழு விதமாக தாது பொருள்களாக பிரிக்கப் படுகின்றன, அவை,
இரத்தம், நீர்,மலம்,சதை, எலும்பு,பித்து,விந்து இவையனைத்தும் நாம் உண்ணும் உணவிலிருந்து பிரிக்கப்பட்டு உடலின் அந்த அந்த இடத்திற்கு சென்று செயல்படுகின்றன. ஆனால் நாம் அதை மறந்து விடுகிறோம்,

உணவை உண்பதையும் கழிவுகளை கழிப்பதையும் மட்டுமே அறிந்துள்ளோம்,உடம்பிற்குள் நடத்தப்படும் இந்த தெய்வீக செயல்களை நாம் செயல்படுத்துவதில்லை, அனால் அதை யார் செய்கிறார்கள் சிந்தித்து பார்த்தல் புரியும். நம்முள் ஒரு சக்தி இருக்கிறது என்பதை உணர முடியும்.


நாம் இந்த கலியுகத்தில் தெளிவு பெறவே அர்ஜுனன் கிருஷ்ணரிடம் ஒரு நல்ல கேள்வியை கேட்கிறான், அதாவது, ஒருவன் தியானத்திற்காக எத்தனை முயற்சி எடுத்தாலும் நம்பிக்கையுடன் செயல்பட்டாலும், சமுதாயம் என்ற சுழலில் சொந்தபந்த கடமையல் அவனது முயற்சி தோற்றுவிட்டால் பிறகு அவனது கதி என்னவாகும்,? இத்தகைய கேள்வி கீதையில் மிக முக்கியமானதாகும்.

மிக தெளிவாக கிருஷ்ணர் இங்கே பதில் கொடுத்துள்ளார். நல்ல செயல்களை செய்ய தொடங்கியவனுக்கும் , நல்ல செயல்களுக்கு முயற்சி செய்தவனுக்கும், தீமை என்பதே கிடையாது. அவன் இந்த சமுதாய கடைமையால் தோற்றுவிட்டாலும் கூட அவன் மீண்டும் செல்வந்தனகவோ,நல்லவனாகவோ, உயர்ந்த எண்ணம் கொண்ட நல்லவனாகவோ, மறுபிறவி எடுப்பான் என்று கூறி உள்ளார்.

பிறப்பில் உடல் தான் மாறுகின்றது, ஆத்மா மாறுவதில்லை, நல்லவர்களுடைய பிறப்பு இந்த உலகிற்கு அவசியம் என்பதால் சில நல்லவர்களுக்கு தற்கால சோதனைகள் வருவதுண்டு.

அதை மனபூர்வமாக ஏற்ற்றுக் கொள்ளும் பக்குவம் அடைந்தால் போதுமானது, நமது ஆத்மாவோடு கலந்து ஆத்மாவை நண்பனாக கருதி வாழ்வதே யோகமாகும்.

உலக ஆசை பற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர்களே தேவர்களிடம் சரணதைந்து அவர்களை பூஜித்து தங்களது சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் வழிபட்டு முறைளையும் விதியையும் பின்பற்றுகிறார்கள். உலக ஜீவன்கள் அத்தகைய இதயத்திலும் நானே பரமாத்மாவாக இருக்கிறேன்.

குறுகிய மனப்பான்மைக்கு உட்பட்ட மனிதர்களை தேவர்களை வழிபடுவார்கள் அவர்களால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளும்,நற்பலன்களும், தற்காலிகமானவை தான் குறிப்பிட்ட கால எல்லை உட்பட்டவயாகும் .

தேவர்களை வழிபடுபவர்கள் தேவலோகத்தை அடைந்து சுகமாக காலங்கழித்து மீண்டும் பூலோகத்தில் பிறவி எடுப்பார்கள், எனது ஆத்மா உணர்வு பக்த்தர்கள் எனது உன்னத உலகை அறிந்து பிறவித் தொடர் என்பது இல்லாமல் முழுமையான இன்பத்தை முடிவில்லாமல் அடைகின்றார்கள்.

இந்த பிறப்பு இறப்பு அற்ற என்னை , மாயையால் சூழப்பட்ட மயங்கிய உலகம் அறிவதில்லை. மரணம் என்ற ஒன்றில் விடுபட முயற்சி செய்தே என்னிடம் சரணடைகின்றார்கள். அவர்கள் ஆன்மீக சக்திகளைப் பற்றியும் என்னுடைய உணர்வு பற்றியும் அறிவார்களேயானால் அவர்களை அபாயத்திலிருந்து காப்பேன். உறுதியான மனதுடன் என்னை உணர்ந்து விட்டால் அவர்களுக்கு இறப்பின் அச்சம் என்பது அறவே நீங்கிவிடும்.

ஆத்மாவின் மீது நம்பிக்கை கொண்டாலே மரணத்தின் மீதுள்ள அச்சம் போய்விடும்.

யாராவது என்னை மட்டுமே பக்தி தொண்டில் பூஜித்துக் கொண்டு இருக்கும் போது அவர்களின் உயிர் உடலைவிட்டு நீங்கியவுடன் அவன் என்னுடைய இயற்கையை அடைகிறான் இதில் எந்த ஐயமும் இல்லை.

தனது உயிர் உடலைவிட்டு பிரியும் நிலையிலும் தனது ஆத்ம நிலையை எவன் எண்ணுகிறானோ அவனே அந்த நிலையை பூரணம அடைகிறான்.

பக்த யோகிகள் என்னை அடைந்த பின்பு துன்ப உலகில் பிறப்பதில்லை, அவர்கள் உயர்ந்த பக்குவத்தை அதைந்தவர்களாக உள்ளார்கள். இந்த உலகம் ஒரு தற்காலிகமான படைப்புதான், இதுதான் உண்மை , இந்த பிரபஞ்சத்தில் மொத்த பிறப்பும் இறப்பும் துன்பத்தின் தொடர்களே.

பிரம்மத்த அறிந்தவர்கள் பிரம்மத்தை தன் உயிர் சக்தியில் பின்னி இருப்பார்கள். அக்னி தேவனின் ஆதிக்கத்திலும், தெய்வீக ஒளியிலும் , நல்ல நேரத்திலும், வளர்பிறை உள்ள இருவரங்களிலும், சூரியன் வடக்கு நோக்கி செல்லும் ஆறுமாத காலங்களிலும் சரியாக அவர்கள் இவ்வுலக வாழ்க்கை விடுத்து மேலுலகிர்க்கு செல்வர்கள், அதுவே என்னை வந்து அடையும் நல்ல காலமாகும்.

மேகம் சூழ்ந்த நேரத்திலும், இரவிலும்,அம்மவாசைகளிலும், தேய்பிறை உள்ள இருவரங்களிலும்,சூரியன் தெற்கு நோக்கி செல்லும் ஆறு மாதகாலத்திலும் இவ்வுலகை விடுப்பவர் துறவியானாலும் இவர்கள் சந்திரலோகத்தை அடைந்து மீண்டும் பூவுலகில் பிறவிஎடுப்பர்கள்.

என்னை நம்பாதவர்கள் பிறப்பு, இறப்பு என்ற இந்த உலகத்திற்கு மீண்டும் வந்துவிடுகின்றனர்.

தேவர்களை வழிபடுபவர்கள் தேவலோகத்தில் பிறவி எடுப்பார்கள், முன்னோர்களை வழிபடுபவர்கள் முன்னோர் பிறந்த இடத்தில் பிறவி எடுப்பார்கள், பேய், பூதங்களை , அசுரர்களை வழிபடுபவர்கள் அத்தகயரிடமே பிறவி எடுப்பார்கள், என்னை வழிபடுபவர்கள் என்னை வந்து அடைவார்கள்.

எனக்கு அன்போடு எத்தகையப் பொருள்களை படைத்தாலும் நான் அதை ஏற்றுக்கொள்வேன், அது பூவோ, காயோ, பழமோ, இலையோ, நீரோ, அன்போடு கொடுக்கும் எதுவாயினும் அதனை மனபூர்வமாக ஏற்றுக்கொள்வேன்.


தூய பக்தி கொண்டவனே என்னை வந்து அடைவான் என்பது மட்டும் நிச்சயம், எதுவே சத்தியம்.

மனிதன் தன் மனதில் என் நினைவோடு பக்தியில் என்னை தியானம் செய்து கொண்டு அவனுடைய எல்லா செயல்களையும் எனக்கு அர்பணித்து என்னை அன்போடு வழிபட்டால் அவன் இந்த துன்ப உலகின் பிறப்பு, இறப்பு என்ற தொடரிலிருந்து விடுபட்டு என்ன எளிதில் அடைவான்.

என்னை எளிதில் அடையும் சாத்தியத்தை கூறுகிறேன் கேள் . நீ முதலில் பக்தி யோகத்தில் ஒழுங்கு நெறிகளை பின்பற்ற வேண்டும். எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்கி கொள்ளவேண்டும் இதை கூட்டுமுயற்சி (பஜனை) -இலும் பின்பற்றலாம்.

பக்தன் எங்கனம் இருக்க வேண்டும் என்று கூறுகிறேன் கேள். தினமும் அதிகாலை எழுந்து நீராடவேண்டும். துய உடை அணியவேண்டும், அவன் எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும்,

அவன் இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக கருத வேண்டும். எப்போதும் அமைதியுடனும் ஆசை என்கிற பற்று இல்லாமல் கிடைப்பதில் திருப்தி அடையவேண்டும், அவன் முகத்தில் எப்பொழுதும் புன்னகை பொலிவு இருக்க வேண்டும், அவன் மனதையும் அறிவையும் கொண்டு என்னுடன் விவாதிப்பதாக இருக்கும் கற்பனை திறன் வேண்டும். அவனே எனக்கு மிகவும் பிரியமான பக்தன் ஆவான்.

பிறரை தன் செயலாலோ மனதாலோ கஷ்டத்திற்குள்ளகாமல் இருப்பவனும் தானும் துன்பபடாத மனிதனும், கவலையாக இருகிறதை என்று கவலைபடாத மனிதனும் இன்பத்திலும் அளவில்லாத சந்தோஷத்தை அடையாத மனிதனும், துன்பத்திலும் அளவில்லா துயரம் அடையாத மனிதனும், எனக்கு மிகவும் பிரியமானவன் ஆவான்.

சுபகாரியங்களுக்கும் , அசுபகாரியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் தன் பக்தி கடமையை செயலாற்றும் பக்தன் மிக சிறந்தவனாவான்.

மனிதன் இறைவனைக் காண உருவ வழிபாட்டில் முதலில் ஈடுபடுத்திக் கொண்டு ஆர்வம் தன்னம்பிக்கையும் வளர்த்துக் கொள்ளவேண்டும் .


அழியும் பொருள்களில் அழித்துக் கொள்ளாமல் தன்னை காப்பாற்றிக் கொண்டு என்னையே எவன் பார்க்கிறானோ அவனே தெய்வீக லட்சியத்தை அடைவான்.

இயற்கையை உருவான உடல் தான் எல்லா செயல் களையும் செய்கிறது ஆனால் ஆத்மா எந்த செயல்களையும் செய்வதில்லை, என்ற உண்மையை அறிபவனே ஞானத்தை அடையும் மார்கத்தை புரிந்துக் கொள்வான்.

ஆத்மாவுக்கு என்று தனிப்பட்ட துன்பமோ, பிரச்சனையோ போன்றவை இல்லை. நீ மேலை காணும் ஆகாயம் எப்படியோ அதே போல் இந்த சரிதத்திலும் ஆத்மா நிறைந்துள்ளது, வானம் எந்தவிதமான கலக்கம் அடைவதில்லையோ ஆத்மாவும் கலக்கமடவதில்லை.

உடலுக்கு உடலின் உரிமையாளன் , என்கிற வேறுபாட்டின் பிரிவை எவன் ஞானக் கண்ணால் காண்கிறானோ அவனே பிரம்மத்தை அடைந்தவனாகிறான்.

அவ்விதமான இயற்கையை அடைந்தால் ஒருவன் எங்கும் இயற்கையாக இருக்கும் எனது தெய்வீக இயற்கையை அடைய முடியும். அவர்கள் மீண்டும் நான் இந்த உலகத்தை படைக்கும் போது பிறப்பதோ அல்லது நான் இந்த உலகத்தை அளிக்கும் போது எந்தவித துன்பத்திற்கும் ஆட்படுவதுமில்லை.

இந்த இயற்க்கை முக்குணங்களால் ஆனது அதாவது

1 . சத்வம் - கடமை
2 . ரஜோ - தியச் செயல்
3 . தமோ - செயலற்று இருப்பது

என்ற குணங்கள் இயற்கைத் தொடரின் மூலம் மனிதனின் வாழ்வில் வந்தடையும் போது அந்தக் குணங்களுக்கு கட்டுபட்டவனாகிறான்.

சத்வகுணம் உடையவன் பாவமாற்றவனகிறான். இவன் மற்றவர்களை விட பிரகாசமாக இருப்பான். இந்த குணத்தை உடையவன் ஞானத்தை அதிகபடுத்திக் கொள்கிறான். அவர்கள் இன்பத்தை கருதாமல் ஞானத்திற்கு கட்டுப்பட்டவர்கள்.

ரஜோ குணம் கொண்டவன் மனதில் எல்லையற்ற ஆசையும் விருப்பமும் மட்டுமே உடையவன் இவையே உயர்ந்து காணப்படும். முறையற்ற காமம் திய எண்ணம் ஆகிய செயல்களின் பலனை எதிர்பார்த்து அதற்க்கு கட்டுபட்டவனாகிறான்.

தமோகுணம் கொண்டவன் எப்போதும் மயக்க நிலையில் இருப்பான். இக்குனத்தல் பித்தம் தலைக்கு ஏறி சோம்பல் மற்றும் உறக்கத்திறுகு கட்டுபட்டவனாகிறான்.

மனித வாழ்வில் சில சமயம் சத்வகுணம் ரஜோ குணத்தை தோற்கடித்து மேலே எழும், பின் ரஜோகுணம் உயர்ந்த நிலைக்கு வரும், பின் ரஜோ குணத்தை சத்வகுணம் தோர்க்க செய்து உயர்ந்து வரும். பின் சத்வ குணத்தையும் ரஜோ குணத்தையும் தமோ குணம் தோற்கடித்து விடும். இது போன்ற உயர்நிலை போட்டியானது வாழ்வில் நடந்துக் கொண்டே இருக்கும்.

1 . சத்வகுணம் மேலிட்டு இருக்கும் போது ஒருவன் மரணம் அடைந்தால் அவன் என்னை, என் உலகத்தை வந்தடைவான்.

2 . ரஜோ குணம் மேலிட்டு இருக்கும் போது ஒருவன் மரணம் அடைந்தால் அவன் பலன் நோக்கி செயல் பட்டு கொண்டீருக்கும் இல்லத்தில் பிறவி எடுபான்.

3 . தமோ குணம் மேலிட்டு இருக்கும் போது ஒருவன் மரணம் அடைந்தால் அவன் கொடிய மிருகமாய் பிறவி எடுப்பான்.

1 . சத்வ குணத்தில் ஒருவன் நிலைபெற்றுவிட்டால் அவன் படிப்படியாக உயர்ந்து என் உலகத்தை அடைகிறான்.

2 . ரஜோ குணத்தில் ஒருவன் நிலைபெற்றுவிட்டால் அவன் பூலோகதிலையை வாழ்க்கையை கழிக்கிறான்

3 . தமோ குணத்தில் ஒருவன் நிலைபெற்றுவிட்டால் அவன் கிழுலகமான நரக லோகத்தை நோக்கிச் செல்கிறான்.

மனிதன் செயல்கள் எல்லாவற்றிலும் இயற்க்கைக்கு அப்பாற்பட்டது ஏதுமில்லை என்று எவன் எண்ணுகிறானோ இறைவனாகிய நான் ஒருவன்தான் இந்த இயற்க்கை குணங்களில் உயர்ந்தவன் என்று எவன் உணர்கிறானோ அவனே ஆன்மீக இயற்க்கை உலகை அடையமுடியும்.

மனிதர்களில் யார் என்னை நெறிதவராது பக்தி தொண்டில் செய்கிறார்களோ அவர்களை இந்த குணங்களை எளிதில் கடந்து சென்று இயற்க்கை என்னும் பிரம்ம ஆவதற்கு தகுதி அடைகிறான்.

ரஜோ குணம் அதிகமாகும் போது காமம் உருவாகிறது , காமம் அதிகப்படும் போது தமோ குணம் வந்துவிடுகிறது ,


சமுதாயத்தில் தன் மதிப்பு உயரவேண்டும் என்பதற்காக செயல்படுத்துவது ரஜோ குணம் தான் அவன் அடைய விரும்பும் செல்வத்திருக்கும் சுகத்திருக்கும் ஏங்கி கடுமையாக உழைக்கிறான் வாழ்க்கையோடு போராடுகிறான் , இந்த பலன் எதிர்பார்ப்பு தோல்வியடைந்தால் அங்கே தமோ குணம் வந்து விடுகிறது.

மனிதனுடைய பிறப்பு இந்த முக்குணங்களின் போராட்டத்தில் இருந்து ஜெய்த்து பிறப்பு, இறப்பு, மூப்பு என்னும் துன்பத்திலிருந்து விடுபடுவது தான் வாழ்வின் நோக்கமாகும்.

இந்த கலியுகத்தில் சத்வ குணத்தில் உயர்ந்துவிட்டால் நாம் நினைக்கும் காரியங்கள் அத்தனையும் தானாகவே நடந்து விடும்.


என்னை வந்து அடையும் நித்தியதளம் என்னும் என்னுடைய உயர்ந்த உறைவிடத்தில் சூரியன் பிரகாசிப்பதும் இல்லை , சந்திரனும்மில்லை, அக்னியுமில்லை, அங்கு வந்த பின்பு மீண்டும் இங்கு வருவதுமில்லை.


ஜீவராசிகளின் உடல்கள் என்னால் தான் வளர்க்கப்படுகின்றன . மனிதன் உடலுக்குள்ளே உணவை செரிக்க செய்யும் நெருப்பு என்னும் ஆற்றலாக நானே இருக்கிறேன். சுவாசம் என்னும் உயிர் முச்சும் நானே, நெருப்பையும் காற்றையும் கொண்டு உணவை நான்குவிதமாக செரிக்கவும் செய்கிறேன்.

இரண்டுவிதமான மனிதர்கள் மட்டுமே இந்த உலகில் வாழ்கின்றனர் அதாவது,

1 .அழியாகூடியவர்கள் 2 . அழியாவதர்கள்


இந்தஉலகில் பிறவி எடுத்தால் அவர்கள் அழியாகூடியவர்கள்.ஆன்மீக உலகில் பிறவி எடுத்தால் அழியாவதர்கள் .

தைரியம்,மனதில் தீர்க்கமான தூய்மை, யோகத்தால் ஞானத்தின் உயர்ந்த நிலையை அடைதல், தானம் செய்தல் , தன்னடக்கம், மந்திரம் ஜெபித்தல், வேதங்கள் கற்றல், தியானம் செய்தல் , எளிமையாக இருத்தல், வாய்மை , சினம் கொள்ளாத நடைமுறை, பிறரை குற்றம் சொல்லாத செயல், பிற உயர்களிடம் கருணை, பிறர் பொருள்களிடம் பேராசை கொள்ளாமை, மிருதுவான தன்மை, நிதானம், உறுதியான நம்பிக்கை,
நாணம், உற்சாகமான எண்ணம், பிறர் குற்றம் பொறுத்து மன்னிக்கும் தன்மை, தளர்ச்சி அடையாமை, சுத்தம், வஞ்சனை செய்யாமை, கெளரவம், ஆணவம் கொள்ளாமை ,

இந்த தன்மை உடையவர் எல்லாம் தெய்வீக சம்பதத்துடன் பிறந்தவற்குக்கு உள்ள இயல்பான குணங்கள்.

அசுர தன்மை குணங்கள் கொண்டவர்கள் எதை செயல்படுத்த வேண்டும் எதை செயல் படுத்தக் கூடாது என்று அறியமாட்டார்கள். தீயவைகளை உணரமாட்டார்கள். அவர்களினிடம் சுத்தம் இருக்காது, முறையான நன்னடத்தை இருக்காது, இந்த உலகமே பொய் என்றும், ஆதாரம் ஏதும் இல்லை என்றும், ஆண் பெண் செயல்களினால் மட்டுமே இந்த உலகம் உருவானது என்றும், காமம் தான் உயர்ந்தது என்றும், காமமே அனைத்துக்கும் காரணம் என்றும் அவர்கள் கருதுவார்கள்.

அசுர குணம் கொண்டவர்கள் எப்போதும் கவலை, கவலை என்று கவலைக்ககவே கவலை படுவார்கள். வாழ்வில் மரணம் தன்னை நெருங்கி விட்டது என்றும் மரணத்திற்கு முன்னால் ஐம்புலன்களின் இன்பத்தை அனுபவித்து விட வேண்டும் என்றும் நினைப்பார்கள்.

இவர்கள் அசுர குணங்களுடன் வாழ்ந்து மீண்டும் இந்த பாவப் பிறவி எடுத்து என்னை என்றுமே அடையாதவர்காளாகி விடுவார்கள். இவர்களின் ஆத்மா துன்பக்கடலில் மூழ்கி கிடக்கின்றனர்.

நரகலோகத்திற்கு செல்ல மூன்று வாசல்கள் உள்ளது அவை 1 . காமம், 2 . கோவம், 3 . பேராசை, இந்த மூன்றும் ஆத்மாவை அழிக்க கூடிய பாதைக்கு செல்வதால், ஆறறிவு படைத்த மனிதன் இந்த மூன்று விஷயத்தையும் விடுத்து செயலாற்ற வேண்டும்.

நரகத்திற்கு செல்லும் இந்த வாசல்களை அடைத்து விட்டு அதை அறிந்து உணர்ந்து தப்பிய ஒருவனே ஞான வழியை கடைப்பிடித்து பிரம்மத்தை அடைவான்.ஆகையால் எதை செய்யவேண்டும் எதை செய்யக்கூடாது என்பதற்கு சாஸ்திரம் உனக்கு உற்ற துணையாக இருக்கும். ஆகவே நான் கூறிய நெறிமுறைகளை உணர்ந்து செயலில் கடமையாற்றுவதற்கு உரியவனவிடு.


நல்லொதொரு இல்லத்தில் மனைவியை உடையவன் காம வாழ்விலும் கூட நெறிமுறைகளை கடைபிடிப்பான். அவன் தன் மனைவியுடன் உள்ள காமத்தை தெய்வீகமாக கருதிவிட்டால் அவன் இல்லறத்திலே இறைவனே அடைவான்.

நம்பிக்கை உயர்ந்து சத்வகுனத்தில் உள்ளவன் என்னை வணங்கி ஞானத்தை அடைவான்.

மனித பிறவி கடமை என்பது மிகுந்த தொல்லை தரக்கூடியது என்றும் துன்பத்தை தரகுடியது என்றும் கருதி அச்சப்பட்டு இந்த கடமையை துறப்பவன் ரஜோ குணத்தி உள்ளவன் என்றும் கூறுகிறேன்.

இவ்வாறு சினம், காமம், அகந்தை, தற்பெருமை இல்லாமல் பிரம்மந்தை அடைந்தே தீரவேண்டும் என்று உறுதியான நோக்குடன் இருப்பவன் ஆன்மீக உணர்வு நிலையில் உயர்ந்து காணப்படுகிறான், இவன் பிரம்மத்த விரைவிலே அடைகிறான் என்பதுதான் நிச்சயம், பின்பு அவன் வேறு ஒன்றும் அடைய தேவை இல்லை, அவன் கவலைப்பட தேவை இல்லை, துன்பபடதேவை இல்லை, என்னிடத்தில் அவன் உயர்ந்த பக்தி கொண்டு என் அன்பைப் பெறுகிறான்.


மனிதன் என்மீது பக்திக்கொண்டால் மட்டுமே என்னை என்னை அறிந்துக் கொள்ள முடியும், பின் பக்த்தியை பின்பற்றி என்னை உணர்வில் உணர்ந்து என்னை மிக விரைவாக என்னோடு ஐக்கியமாகி விடுகிறான்.

எப்போதும் என்னை பூஜிக்கும் பக்த்தனாகி விடுவாயாக என்னை வணங்கி வழிபட்டு கொண்டே இரு, எனக்கு நீ பிரியமான நண்பன், அதலால் நீ என்னை வந்தடைவாய் என்று வரமளிக்கிறேன். எல்லாவற்றிலும் பற்றை விட்டொழித்து நீ என் ஒருவனிடமே சரணடவாயாக.


நான் உனக்கு வரும் பாவ விளைவுகளிலிருந்து உன்னை காப்பாற்றுகிறேன் நீ கவலைபடாதே , வருத்தப்படாதே , தவம் செய்யதவர்களுக்கும், பக்தி தொண்டில் ஈடுபடதவர்களுக்கும், தியாகம், தானம் செய்யதவர்களுக்கும், இந்த தெய்வ ரகசிய ஞானம் கூறபடக்கூடாது. இந்த ரகசியத்தை அறிந்தவர்கள் எனது பக்த்தர்களுக்கு விளக்கி கூறலாம்.

பிறருக்கு என் தெய்வீகத்தைப் பற்றி விளக்குபவர்கள் எனது பக்தியில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் என்பதாகும். இறுதியில் அவனும் என்னை வந்தடைவான் என்பது நிச்சயம்.

இது போன்ற புனித உரையாடல்களை கற்று அரிவாள் கடமை வழி நடத்தி என்னை வழிபடுபவன் வெகு விரைவில் ஞானமர்கத்தை அறிந்துவிடுவான் என்று தெரியபடுத்துகிறேன்.

இந்த உரையாடல்களின் கருத்துகளையும் தூய்மையான எண்ணத்துடனும், நம்பிக்கையுடனும், கேட்டு மகிழ்ந்து அறிபவர்களுக்கு பாவ விளைவுகளிருந்து விடுபட்டு தேவலோகங்களை அடைவார்கள் என்பது நிச்சயம்.


1 . எல்லாவிதமான உயிர்வாழ்வான, பறவைகள், மிருகங்கள், பூச்சிகள், தாவரங்கள் எல்லாவற்றிக்கும் ஆத்மா என்பது உண்டு தன் ஆத்மாவுக்கும் அந்த ஆத்மாவுக்கும் வேறுபாடு இல்லை என்று உணர்திருபன், இது சத்வ குணத்தில் செயல்படுபவனின் உயர்ந்த நிலையாகும்.

2 .ரஜோ குணத்தில் நிலைத்தவன் தனது ஆசையை பூர்த்தி செய்து கொள்வதிலும் பெரும் முயற்சியில் செல்வத்தை அடைய வழித்தேடிக் கொண்டு, இந்த உடலைய உயிர் என்றும், இதற்க்கு பிறகு ஒரு வாழ்க்கை இல்லை என்றும் கூறி கொள்வார்கள். உணர்வை தோற்றுவிக்கும் ஆத்மா என்ற ஒன்று தனிய இல்லை, உடலைய ஆத்மா உடலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட ஆத்மா கிடையாது என்பதும் கூறிகொள்வார்கள். இத்தகைய அறிவிக்கேற்றவாறு இந்த உணர்வு தற்காலிகமானது தான் என்பதையும் அறிவதில்லை.

3 .உண்மையைப்பற்றி அறியாமல் எந்தவித ஆர்வமும் இல்லாமல் தன் வாழ்க்கைச் சிறிய வட்டத்திற்குள் கட்டுபடுத்திக் கொண்டு ஏனோ பிறந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என்று வாழ்வதே தமோ குணமாகும். மயக்கம் என்ற நிலைதான் இது போன்றவர்களின் ஜீவனடியாகும்.


எனவே ஒவ்வொருவருடைய இதயத்திலும் அமர்திருக்கும் பரமாத்மாவான முழுமுதற் கடவுளான ஜீவாத்மாவை நாம் சரணடைய வேண்டும், இந்த சரணதிக்கமே ஜட இருப்பிடமாகும். எந்த வாழ்வின் துன்பங்கள் எல்லாவற்றிலும் விடுபடுவதோடு இறுதியாக முழுமுதற்கடவுளான கிருஷ்ணரையும் சென்று அடையலாம்.

இந்த இயற்க்கைகெல்லாம் தாயும், தந்தையும் அவர்தான் என்பதை உணர்ந்து விட்டால் தாயின் அன்பைபோன்றும், தந்தையின் பிரியத்தைப் போலவும், இறைவன் நமக்கு சகல நன்மைகளையும் தருவார் என்பதில் ஐயமில்லை.

எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாகிய விஷ்ணுவுக்கு நாம் அனைவரும் ஒன்று தான் என்பதை உணர்ந்து கொள்வோமாக.
avatar
rsakthi27
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 93
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: பகவத் கீதை சுருக்கம்

Post by rsakthi27 on Wed Oct 20, 2010 11:30 am

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே.
avatar
rsakthi27
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 93
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: பகவத் கீதை சுருக்கம்

Post by rsakthi27 on Wed Oct 20, 2010 11:45 am


இந்த கலியுகத்தில் மனிதர்கள் மாயையில் திளைந்து வாழ்கிறார்கள்

நிழலை நிஜம் என்று நம்பி வாழும் மனிதர்கள்

பந்தம் பாசம் எனும் மாயையை நம்பி

வஞ்சம் சூழ்ச்சி எனும் மாயையில் மயங்கி

மானம் அவமானம் எனும் மாயையில் சிக்கி

மனிதப்பிறப்பின் நோக்கத்தை மறந்து விடுகிறார்கள்

இந்த மாயை எனும் துன்பத்திலிருந்து விடுபட

பகவத் கீதையை புரிந்து உணர்ந்து

பலன் எதிர்பாராது கடமையைச் செய்ய வேண்டும்.

- பகான் ஸ்ரீ கிருஷ்ணர்


Last edited by rsakthi27 on Thu Oct 21, 2010 11:34 am; edited 1 time in total
avatar
rsakthi27
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 93
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: பகவத் கீதை சுருக்கம்

Post by சரவணன் on Wed Oct 20, 2010 1:29 pm

நல்ல கட்டுரை சக்தி. மகிழ்ச்சி மகிழ்ச்சி

மானிட சமூகத்திற்கு கீதையின் படிப்பினை
* பற்றுகளை அறு. அதற்காக புலனடக்கம் என்ற யோகசாதனையைச் செய்துகொண்டே இரு.

* பலனில் பற்றற்று சுயதருமத்தை ஒழுகு.

* ஈசனை மறக்காதே. அந்த இரண்டற்ற பரம்பொருளிடம் சுயநலமற்ற பக்தியைச் செலுத்து.

* அம்மெய்ப் பொருளையே புகலிடமாகக் கொள்.

* யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல்.

இதுதான் வேதங்களும் உபநிடதங்களும் இதிகாச புராணங்களும் எண்ணற்ற பெரியோர்களும் மனிதனுக்குப் புகட்டும் முடிந்த முடிவான படிப்பினை.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பகவத் கீதை சுருக்கம்

Post by rsakthi27 on Wed Oct 20, 2010 1:59 pm

பிச்ச wrote:நல்ல கட்டுரை சக்தி. மகிழ்ச்சி மகிழ்ச்சி

மானிட சமூகத்திற்கு கீதையின் படிப்பினை
* பற்றுகளை அறு. அதற்காக புலனடக்கம் என்ற யோகசாதனையைச் செய்துகொண்டே இரு.

* பலனில் பற்றற்று சுயதருமத்தை ஒழுகு.

* ஈசனை மறக்காதே. அந்த இரண்டற்ற பரம்பொருளிடம் சுயநலமற்ற பக்தியைச் செலுத்து.

* அம்மெய்ப் பொருளையே புகலிடமாகக் கொள்.

* யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல்.

இதுதான் வேதங்களும் உபநிடதங்களும் இதிகாச புராணங்களும் எண்ணற்ற பெரியோர்களும் மனிதனுக்குப் புகட்டும் முடிந்த முடிவான படிப்பினை.

நன்றி நண்பா புன்னகை
avatar
rsakthi27
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 93
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: பகவத் கீதை சுருக்கம்

Post by sathyan on Wed Oct 20, 2010 2:07 pm

நல்ல பயனுள்ள பதிவு நன்றி
avatar
sathyan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1199
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: பகவத் கீதை சுருக்கம்

Post by rsakthi27 on Wed Oct 20, 2010 2:38 pm

@sathyan wrote:நல்ல பயனுள்ள பதிவு நன்றி

உங்கள் விருப்பத்தை கூறியமைக்கு நன்றி புன்னகை
avatar
rsakthi27
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 93
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: பகவத் கீதை சுருக்கம்

Post by சிவா on Wed Oct 20, 2010 4:22 pm

பரித்திராணாய சாதூனாம் வினசயச்
துஷ்கிருதாம்
தர்ம ஸம்ஸ்தாப ஸார்த்தாய
சம்பவாமி யுகே யுகே!

சிறந்த கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி சக்தி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பகவத் கீதை சுருக்கம்

Post by rsakthi27 on Thu Oct 21, 2010 11:33 am

@சிவா wrote:பரித்திராணாய சாதூனாம் வினசயச்
துஷ்கிருதாம்
தர்ம ஸம்ஸ்தாப ஸார்த்தாய
சம்பவாமி யுகே யுகே!

சிறந்த கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி சக்தி!

நன்றி புன்னகை
avatar
rsakthi27
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 93
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: பகவத் கீதை சுருக்கம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum