ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பூமி என் தாய்
 M.M.SENTHIL

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நடிகைகளை மிரட்டிய ரசிகர்கள்!

View previous topic View next topic Go down

நடிகைகளை மிரட்டிய ரசிகர்கள்!

Post by சிவா on Sun Oct 10, 2010 10:11 pm

ரசிகர்களை நடிகர், நடிகைகளுக்கு பிடிக்கும். தங்களை கடவுளுக்கு இணையாக வைத்துப் பூஜிப்பவர்கள் என்பதால்! ஆனால் அதே ரசிகர்கள் எல்லை மீறும் போதுதான் எரிச்சலடைகிறார்கள், திகைத்துப் போகிறார்கள் திரை நட்சத் திரங்கள். அப்படிச் சில நடிகைகளை ரசிகர்கள் அச்சுறுத்திய சம்பவங்கள்...

கங்கனா ரணவத்

பிரபலங்களுக்கான `பிட்னஸ்' ஆலோசகர் லீனா மோக்ரேயின் `ஜிம்'மின் முன்னால் ஒரு ரசிகர் 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். தான், கங்கனாவுக் காக எழுதி வைத்திருக்கும் கடிதத்தை அவர் கையால் வாங்கிக் கொண்டால்தான் உண்ணாவிரதத்தைக் கைவிடுவேன் என்றார்.

கங்கனா செய்தது என்ன?

ஐந்தாம் நாள் இந்த விஷயத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட கங்கனா, கடைசியில் கடிதத்தை வாங்கிக் கொண்டார். ஆனால் கடிதத்தில் என்ன எழுதியிருந்தது என்று அவர் தெரிவிக்கவில்லை. ``ரசிகர்கள் இந்த அளவுக்குப் போவது பயமுறுத்துவதாக இருக்கிறது.

ரசிகர்கள் எப்போதும் எனது வலைப்பூ மூலம் என்னைத் தொடர்புகொள்ளலாம்'' என்றார்.

கத்ரீனா கபூர்

முப்பது வயதை நெருங்கும் ஒருவர், கத்ரீனாவை எட்டு மாதங்களாகப் பின்தொடர்ந்திருக்கிறார். அவர் கத்ரீனாவின் வீட்டருகே சுற்றித் திரிந்திருக்கிறார். ஒருநாள் வீட்டுக்குள்ளும் நுழைந்துவிட்ட அவர், வீட்டு வேலைக்காரரிடம் தன்னை கத்ரீனா சந்திக்க வரச் சொல்லியிருப்பதாகக் கூறி யிருக்கிறார். ஒரு திரையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கத்ரீனாவை தொடும் அளவு நெருங்கி விட்டார் அந்த ரசிகர் (?).

கத்ரீனா செய்தது என்ன?

தன்னை நெருங்கி வந்த அந்த இளைஞரை பார்த்ததுமே புரிந்துகொண்ட கத்ரீனா, தனது பாதுகாவலர்களை உஷார்ப்படுத்தியிருக்கிறார். தன்னைச் சுற்றி பலர் சூழ்வதைக் கண்டதும் அந்த நபர் நழுவி விட்டார்.

அம்ரிதா ராவ்

ஒரு கிராமத்து ரசிகர் தனது சொத்துகளை எல்லாம் விற்றுவிட்டு மும்பை வந்து அம்ரிதாவின் வீட்டின் முன் முகாம் போட்டார். அவர் அடிக்கடி அம்ரிதாவை தொலைபேசியில் அழைக்கவும் ஆரம்பித்தார்.

அம்ரிதா செய்தது என்ன?

அம்ரிதா தனது படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த ஸ்டுடியோவுக்கு அந்த ரசிகரை அழைத்தார். அவருடன் 15 நிமிடங்கள் பேசினார். அவருக்கு சினிமா பற்றியும், நடிகைகளின் வாழ்க்கையைப் பற்றியும் விளக்கி கூறினார்.

அவர் ஓரளவு தெளிவான பின்பு தனது உதவியாளர் மூலம் அந்த ரசிகருக்கு சொந்த ஊர் செல்வதற்கான ரெயில் டிக்கெட் எடுத்துக் கொடுத்து, கொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்பி வைத்தார்.

அசின்

அசின் கடந்த ஆண்டு சிங்கப்பூர் சென்றிருந்தபோது ஓர் இளைஞர் அவரைத் தொந்தரவுபடுத்தினார்.

இந்தூரில் இருந்து சிங்கப்பூருக்கு அசினை பின்தொடர்ந்து சென்ற அவர், அசின் தங்கிய ஓட்டலிலேயே தானும் ஒரு அறை எடுத்துக் கொண்டார். அசினைப் பார்த்து நைசாகப் பேசி பேசி புகைப்படம் எடுத்துக் கொண்ட அவர், அசினின் பாதுகாவலன் போலவும் நடந்து கொள்ளவும் முயன்றார்.

அசின் செய்தது என்ன?

அசின் திட்டமிட்டதை விட முன்பாகவே மும்பைக்குத் திரும்பி விட்டார். அந்தத் தீவிர ரசிகரை ஏமாற்றும்வகையில் திட்டமிட்ட நேரத்துக்கு முன்பாகவே ஓட்டலிலிருந்து மெதுவாக நழுவி விட்டார்.

மினிஷா லம்பா

ஒரு ஆசாமி இவருக்கு முதலில் ஜோக் எஸ்.எம்.எஸ். அனுப்பினான். முதலில் ரசிக்கும்படியாக இருந்தது. பின்பு அதுவே `ஏ' ஜோக்குகளாக மாறின. அதையும் இவர் கண்டுகொள்ளாமல் விட, அடுத்து வந்ததெல்லாம் ஆபாசம், வக்கிரம்! பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்த இவர், எந்த செல்போனில் இருந்து வந்தது என்பதை கண்டறிந்து அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.

மினிஷா செய்தது என்ன?

முதலில் அவர் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு செமடோஸ் விட்டார். அந்த நபர் அடங்கிப் போகாமல் பதிலுக்கு ஆத்திரம் காட்ட, மினிஷா போலீசுக்கு சென்றார். போலீஸ் தட்ட வேண்டிய இடத்தில் தட்டிய பின்புதான் அந்த ஆபாச அழைப்புகளின் வரத்து நின்றுபோனது. இவர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.

ஞாயிறு மலர்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum