ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

View previous topic View next topic Go down

நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

Post by sriramanandaguruji on Tue Oct 05, 2010 11:49 amனதை கடக்க வேண்டும் மனதை கடக்க வேண்டும் என்றால் மனம் என்ன கடலா? ஆஞ்சநேயன் இலங்கையை அடைவதற்கு கடலை கடந்தது போல் நாமும் கடலைத் தாண்டிச் செல்ல வேண்டுமா என்று கேட்கலாம், மனதை கடத்தல் என்றால் மனதை இல்லாது செய்ய வேண்டும், மனதை ஏன் இல்லாது செய்ய வேண்டும்? அந்த மனது நம்மை என்ன செய்துவிட்டது என்று கேட்கலாம்,
மனம் என்பது ஒரு மாயை, அதாவது இருப்பனவற்றை இல்லாதது போலவும். இல்லாததை இருப்பதாகவும் துக்கத்தை சந்தோஷமாகவும். சந்தோஷத்தை துக்கமாகவும் காட்டவல்லது, அதோடு மட்டுமல்ல இறைவன் நம்மை படைத்தபோது அவன் நமக்குத் தந்த சக்தியை நாம உணராமல் உணர்ந்து விடாமல் சர்வ ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டு இருக்கின்ற ஒரு மிகப்பெரிய ராட்சசன் நமது மனம், எவ்வாறு என்று நீங்கள் கேட்கலாம், இறைவன் மனிதர்களை சிருஷ்டிப்பதோடு மட்டுமில்லாமல் மனிதர்களை தனக்கு இணையானவர்களாக படைத்தான், தன்னிடம் இருக்கின்ற ஒரு சக்தியை தவிர்த்து மற்ற எல்லா சக்தியையும் மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ளான், அதாவது புதிய உயிர்களை சிருஷ்டிக்கின்ற சக்தி. மேலும் அனைத்து விதமான சக்திகளும் நமக்குள் அடங்கியிருக்கிறது, நமக்குள் இருக்கின்ற அந்த மகா சக்தியை நாம் உணராமல் இருக்க அந்த மன மாயையை மனத்திரையை நாம் அறுத்துவிட்டோம் என்று சொன்னால் அனைத்து சக்திகளையும் நாம் பார்க்கலாம். பெறலாம் பயன்படுத்தலாம், இறைவனுக்கு இணையாக வாழலாம்,

எப்படி சக்தி நமக்குள் இருக்கிறது, மனதை எப்படி நாம் அறுப்பது என்று கேட்கலாம், மனதை கடப்பது என்பது அவ்வளவு சமானியமான விஷயமல்ல, தாயுமானவர் தமது பாடலில் குறிப்பிட்டு இருப்பதைப்போல் அதாவது மதம் பிடித்த யானையை அடக்கி விடலாம். சிங்கத்தை புலியை மடக்கி வசப்படுத்தி நமது விருப்பம் போல் ஆட்டுவிக்கலாம், சீறிவரும் பாம்பை கட்டுப்படுத்தலாம், இவையெல்லாம் செய்யலாம் ஆனால் சிந்தையை அடக்கி சும்மா (அமைதியாக) இருக்க நம்மால் முடியாது,
எண்ணங்களில் கூட்டு வடிவமே மனது, அந்த எண்ணங்களை அழித்துவிட்டோமானால் மனதை அறுத்துவிடலாம், அதற்கு நமது 6 ஆதாரத்தை முறைப்படி இயக்க துவங்கினால் அறுத்தெறிவது என்பது மிகச் சுலபம்,
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மிக அற்புதமாக மனதை பற்றி கூறியுள்ளார், மனதை அடக்குவது என்பது அசாத்தியமான ஒன்று கடுமையான பயிற்சிகளின் மூலம் அந்த மனதை அடக்கி விடலாம் என்று சொல்கிறார், ஆறு ஆதாரங்களில் இருக்கின்ற சக்தியை முறைப்படி அப்பியாசப்படுத்தி பழகிக் கொண்டும் அந்த ஆறு ஆதாரங்களில் இருக்கிற சக்தியை மேலே எழுப்பி பிரம்ம சக்கரத்தில் சக்தியை நிறுத்திவிட்டால் நம்மால் சாதிக்க முடியாத விஷயங்கள் என்று எதுவுமே இல்லை,

அதாவது அஷ்டமாசித்துகள் என்று சொல்வார்கள் அல்லவா அப்படிப்பட்ட அஷ்டமா சித்துக்களையும் கடந்து இறை நிலையோடு சற்றேக்குறைய இறைவனுக்கு சமமாக நாம் இருக்கலாம்,
அப்படி இறைவனுக்கு சமமாக இருந்தவர்கள் தான் சப்த ரிஷிகள், அந்த சப்த ரிஷிகளில் மனதோடு பெரும் போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டவர் விஸ்வாமித்ர மகரிஷி, இவருடைய தவசக்திக்கு இணையான தவசக்தியை நாம் பார்க்க முடியாது, அதைப்போல் மனது எந்தெந்த விஷயங்களில் நமது கட்டுக்குள் அகப்படாமல் மீறும்போது என்ன ஏற்படும் என்பதை இவரது வாழ்க்கை ஒவ்வொரு கட்டத்திலும் நமக்கு விளக்குகிறது, ஆசை. கோபம் காமம் போன்றவை மனதை எந்தெந்த வகையில் கீழ்நிலைக்கு கொண்டுவந்து விடும் என்றும் அதை எந்தெந்த நிலையில் நேர்நிலைப்படுத்தலாம் என்பதை விஸ்மாவமித்ர மகரிஷியின் வாழ்க்கையில் இருந்து நாம் அறியலாம்,
அவர் மனதை அடக்கியபின் அதாவது மனதை அறுத்தெறிந்து ஆத்ம தரிசனத்தை பெற்றபின் அவருடைய சாதனைகள் என்று நாம் பார்த்தால் இன்றளவும் உலகில் நிலைத்து இருக்கக்கூடிய மாபெரும் சாதனைகளை அவர் செய்து இருக்கிறார், ஆன்மீகத்தில் ஆன்மீக வழியில் மிக கீழான நிலையில் இருப்வன் கூட மிக மேலான நிலைக்கு வந்துவிட ஏதுவாக இருக்கின்ற மந்திரங்களில் மகா உன்னதமான தலைசிறந்த. பிரம்ம மந்திரமான காயத்ரி மந்திரத்தை நமக்கு தந்தவர் விஸ்வாமித்ர மகரிஷி,

அந்த காயத்திரி மந்திரத்தின் சொல். அசைவுகளை உணர்ந்தவர்கள்தான் விஸ்வாமித்ர மகரிஷியின் தவவலிமையை முழுமையாக உணர்ந்து கொள்ள இயலும், விஸ்வாமித்ர மகரிஷி மந்திரங்களை மட்டும் நமக்கு தரவில்லை தான் மட்டும் உயர்ந்தால் போதாதது, தனக்கு பின்னால் வருகின்ற சந்ததியினரும் உயர வேண்டும் என்பதற்காக அவர் நமக்கு காயத்ரி மந்திரத்தை தந்திருக்கிறார்,

இந்த காயத்ரி மந்திரத்தை பயன்படுத்தினாலே செயற்கரிய சாதனைகளை நாம் செய்யலாம், அவர் தமது தவ சக்தியால் ஒரு புதிய சொர்க்கத்தையே நிர்மாணித்தவர், புதிய தேவாதி. தேவர்களை உருவாக்கியவர், புதிய இந்திரனையே நிர்மானம் செய்தவர், அப்பேற்பட்ட சக்தியை ஒரு சத்ரிய மன்னனாக கௌசீக சக்கரவர்த்தி விசுவாமித்திரனாக எப்படி மாறி செய்ய முடிந்தது என்றால் அவர் மனதை கடந்து விட்டதனால் தான் புராண காலத்தில் வாழ்ந்த மிகப் பெரும் ரிஷிகளும். இன்று நம்மோடு வாழ்ந்து இருக்கிற பல சித்த புருஷர்கள் அனைவருமே மனதை உணர்ந்ததால் தான் பல சாதனைகளை நிகழ்த்த முடிந்தது,

இமயமலைச் சாரலில் இருக்கின்ற திபெத் லாமாக்கள் இன்று நம் கண்ணெதிரே மனதை கடந்துவிட்ட நிலையில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்கள், நமது நாட்டின் முன்னாள் பிரதமர் ஜவர்ஹலால் நேரு திபெத் பகுதிக்கு விஜயம் செய்த போது ஒரு லாமா தனது மனோச்தியால் ஜவஹர்லால் நேரு அவர்களின் தலைக்கு மேல் மேகக் கூட்டங்களை வரவழைத்து அவருக்கு மட்டும் மழை பொழிய வைத்து காண்பித்தார், இன்னும் எத்தனையோ விஷயங்களை மனதை கடந்தவர்கள் செய்திருக்கிறார்கள், நமது தமிழ்நாட்டில் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் சுப்பையா புலவர் என்று ஒருவர் இருந்தார், அவர் தரையிலே காலை நீட்டிப் படுத்துக்கொண்டு சிறிது நேரம் தியானம் செய்வதைப் போல கண்களை மூடிக்கொள்வார், அவரது வலது கையில் நீளமாக அங்கவஸ்திரத்தை பிடித்து அதன் மேல் முனையில் ஒரு முடிச்சு போட்டு வைத்திருப்பார், அந்த அங்கவஸ்திரம் பார்ப்பதற்கு தடியைப் போல் விறைப்பாக இருக்கும், அதை அந்த புலவர் ஆதாரமாக பிடித்துக் கொள்வார், சிறிது நேரத்திற்கெல்லாம் சுப்பையா புலவர் படுத்திருந்த நிலையிலேயே மேலே செல்வார், இப்படி மேலே சென்று தரைமட்டத்தில் இருந்து சுமார் 4 அடி உயரத்தில் கால்களை நீட்டி இடது கையை தலைக்கு வைத்துக் கொண்டு கண்களை மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல் மிதந்து கொண்டு இருப்பார், இதை அறிந்த அப்போதைய பிரிட்டிஷ்காரர் புலவர் எப்படி மிதக்கிறார் என்பதை அறிய வந்தார்,

புலவர் கண்ணுக்கு தெரியாத பல கம்பிகளை கட்டிக்கொண்டு அதன் மூலம் மேலே மிதக்கிறாறோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் எத்தனையோ சோதனைகளை செய்தார், அப்படி எல்லாம் எதுவும் இல்லை புலவர் வெறுமனே அந்தரத்தில் மிதந்து கொண்டு இருந்தார், இதை அந்த பிரிட்டிஷ்காரர் புகைப்படமாகவும் எடுத்து இருக்கிறார், அந்த புகைப்படத்தை நானும் பார்த்து இருக்கிறேன், இப்படி நம் நாட்டில் மட்டுமல்ல பல வெளிநாடுகளிலும் பலர் இருக்கின்றனர்,
அந்தரத்தில் மிதப்பது மட்டுமல்ல தமது அதிசய மனோ சக்தியால் ஓடுகின்ற விமானத்தையே இழுத்து நிறுத்திய மனிதர்கள் பூமியில் இருந்திருக்கிறார்கள், அவர்களில் மிகவும் புகழ் பெற்றவர் யூரிகெல்லர், இவர் இஸ்ரேல் நாட்டைச் சார்ந்தவர், இவர் தான் பயணம் செய்ய வேண்டிய விமானம் முன்கூட்டியே பறந்து விடாமல் இருக்க தனது மனோ சக்தியை பயன்படுத்தி விமானத்தை பறக்க விடாமல் செய்தார், அதைப்போல் டி,வி,கேமராக்கள் வழியாக தனது கண்பார்வையைச் செலுத்தி எந்த இடத்தில் நேரத்தில் அந்த நிகழ்ச்சி ஓடிக் கொண்டு இருந்ததோ அந்தந்த வீட்டில் இருந்த பல இரும்பு கம்பிகள். போன்றவைகளை உருகிபோகவும் செய்திருக்கிறார், சிறிது வயதிலே தமது கைகடிகாரத்தின் முள்ளை தமது கண் பார்வையாலேயே அதிவேகமாக சுழல வைத்திருக்கிறார் இப்படி அதீத சக்திகளை யூரிகெல்லர் பெற்றிருக்கிறார், இவைவெல்லாம் இவர்களுக்கு எப்படி வருகின்றது என்றால் மனதை கடந்த நிலையினால்தான்,

அதுமட்டுமல்ல நாஸ்டர் டாம் என்ற தீர்க்க தரிசியை நீங்கள் அறிவீர்கள், எதிர்காலத்தில் நடக்கக் கூடிய பல விஷயங்களை முன் கூட்டியே சொல்லியிருப்பவர் நாஸ்டர் டாம் என்று நமக்குத் தெரியும், தற்பொழுது அமெரிக்க நகரங்களில் விமானம் கட்டடங்கள் மீது மோதியதை இரண்டு மிகப்பெரிய தூண்கள் கீழே சரியும் என்று கூறியிருக்கிறார், அவர் காலமாகி ஒரு நூற்றாண்டுக்குப் பின் அவருடைய கல்லறையை சிலர் தோண்டினார்கள்,

ஒரு நூற்றாண்டு சென்று விட்டது என்று சொன்னால் கல்லறைக்குள் வெறும் எலும்புக்கூடு மட்டுமே மிஞ்சியிருக்கும், அந்த எலும்புக் கூட்டின் மார்பில் ஒரு உலோகத்தகடு இருந்தது, அவர்கள் அந்த தகட்டை தொட்டவுடன் அது கீழே விழுந்தது, அதை தோண்டியவர்களில் ஒருவர் நாஸ்டர்டாமின் மண்டை ஓட்டில் மதுவை ஊற்றி குடித்தால் தனக்கும் தீர்க்கதரிசன சக்தி கிடைக்கும் என்று கூறிக்கொண்டே அவர் மண்டை ஓட்டில் மதுவை ஊற்றி கண் துவாரங்கள் வழியாக உறிஞ்சி குடிக்க முற்பட்டான், அப்படி அவன் செய்ய ஆரம்பிக்கும் முன்பு எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு அவன் மீது பாய்ந்து துடிதுடிக்க விழுந்து இறந்தான், அதன் பின்பு அந்த உலோக தகட்டை எடுத்த படித்தபோது அதில் என் எலும்புக்கூடை முதலில் தொடுபவன் எவனோ அவன் உடனே சாவான் என்று எழுதப்பட்டு இருந்தது,
நாஸ்டர்டாமை போன்று நமது தமிழ்நாட்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த ஒரு மிகப்பெரிய மகான் ஐயா வைகுண்டசுவாமி தமது அகிலத்திரட்டு என்ற புத்தகத்தில் நமது இந்தியாவில் நடக்க கூடிய ஆட்சி மாற்றங்கள். இந்தியாவின் அரசியல் தலைவர்களின் எதிர்காலம். அவர்களது வளர்ச்சிகள் மற்றும் இந்தியா உலக அரங்கில் எவ்வப்போது எப்படி எப்படி எல்லாம் பேசப்படும். எந்தெந்த காலகட்டங்களில் ஏச்சுக்கும் பேச்சுக்கும் உள்ளாகும், எத்தகைய காலகட்டங்களில் தலை நிமிர்ந்து நிற்கும் என்பதை மிக எளிய தமிழ் வடிவில் சில பரிபாஷைகளில் மிக அற்புதமாக கூறி இருப்பதை அகிலத்திரட்டு என்ற நூலை படித்தவர்கள் அறிவார்கள்,

அகிலத்திரட்டு புத்தகத்தில் இனி வருகின்ற காலங்களை பற்றி வைகுண்ட சுவாமி சொல்லியிருப்பதை நாம் படித்தோம் என்று சொன்னால் நமக்கு பெரும் வியப்பாக இருக்கும், கடந்த காலத்தில் நேருவுக்கு பின் வந்த லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் அயல்நாட்டிலே மரிப்பார் என்றும் அவருக்குப் பின்னால் பெண் சிங்கம் ஒன்று அரசாளும் என்றும் அதாவது இந்திரா காந்தி அம்மையாரின் அரசாட்சி பற்றியும் காமராஜர் அவர்களின் செயல்திறன் இந்தியா முழுக்க எந்த ரீதியில் எதிரொலிக்கும் என்றும் அவருடைய மறைவைப் பற்றியும் பல விஷயங்களை கூறியிருக்கிறார், ஸ்ரீ ராமானுஜர் பூமியில் இளைய மகன் சதையும். ரத்தமும் சிதறிய பின் தெற்கில் உள்ள மனித சிங்கம் நாட்டை ஆளும் என்று கூறியுள்ளார், அதாவது ராஜிவ்காந்தியின் மரணத்தை பற்றியும் நரசிம்மராவின் பதவிப் பிரமாணத்தை பற்றி இவ்வாறு வைகுண்ட சுவாமி கூறுகிறார், மேலும் பிரம்மச்சாரி ஒருவரின் ஆட்சிக்கு பின் மக்களிடையே மௌனப் புரட்சி ஏற்பட்டு யுகப்புருஷன் போல் ஒருவன் தலைமையேற்று இந்திய சாம்ராஜ்ஜியத்தை உலக அரங்கில் பொருளாதாரத்திலும் ஆயுத பலத்திலும் தன்னிகரற்று விளங்கச் செய்வான் என்றும் கூறுகிறார்,

இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து இப்போதைய வல்லரசுகளை புறம் தள்ளி உலகின் பெரும்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும் கூறியுள்ளார், சுவாமியின் கருத்துப்படி இவையெல்லாம் ஒரு 10 ஆண்டுக்குள் நடந்துவிடும், தமிழகத்தில் ஒரு கட்சியில் இளம் தலைமுறையில் தலைமை பொறுப்பால் கட்சி உடைந்து தற்போதைய அரசியலாளர்களின் வாய்வீச்சும். கைவீச்சும் ஓய்ந்து பெரும் மாறுதல்கள் ஆட்சியிலும். வாழ்க்கையிலும் ஏற்படும், கலைத்துறையின் தாக்கம் வருங்காலத்தில் இருக்காது எனவும் மக்கள் பண்பாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சினிமா உருமாறும் என்றும் கூறியுள்ளார்,
மனதை கடந்த ஞானிகளின் வாக்குகள் என்றும் பொய்ப்பதில்லை, நீங்களும் மனதை கடக்க முயற்சித்து வெற்றி பெற்றால் உங்கள் வாக்கும் சத்திய வாக்காக மாறும் சமானியமாக இருக்கும் நீங்களும் சரீரத்தில் பெரும் மாறுதலை காண்பீர்கள், அதற்கு உங்களுக்கு தேவை அயராத உழைப்பு. கடினமுயற்சி. சோர்வடையாத மனம்,

source http://ujiladevi.blogspot.com/2010/10/blog-post_04.html

avatar
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 306
மதிப்பீடுகள் : 3

View user profile http://ujiladevi.blogspot.com

Back to top Go down

Re: நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

Post by சரவணன் on Tue Oct 05, 2010 12:01 pm

"இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து இப்போதைய வல்லரசுகளை புறம் தள்ளி உலகின் பெரும்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவார்கள்"

"தமிழகத்தில் ஒரு கட்சியில் இளம் தலைமுறையில் தலைமை பொறுப்பால் கட்சி உடைந்து தற்போதைய அரசியலாளர்களின் வாய்வீச்சும். கைவீச்சும் ஓய்ந்து பெரும் மாறுதல்கள் ஆட்சியிலும். வாழ்க்கையிலும் ஏற்படும், கலைத்துறையின் தாக்கம் வருங்காலத்தில் இருக்காது எனவும் மக்கள் பண்பாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சினிமா உருமாறும் என்றும் கூறியுள்ளார்"

எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

கட்டுரை பகிர்விற்கு நன்றி அய்யா!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11123
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

Post by நிலாசகி on Tue Oct 05, 2010 12:16 pm

நல்ல தகவல்கள் ....மிக்க நன்றி

"இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து இப்போதைய வல்லரசுகளை புறம் தள்ளி உல

இதைத்தான் பலரும் சொல்கிறார்கள்....பொருந்திருந்து பார்போம்
கின் பெரும்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவார்கள்"
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

Post by mohan-தாஸ் on Tue Oct 05, 2010 12:22 pm

@நிலாசகி wrote:நல்ல தகவல்கள் ....மிக்க நன்றி

"இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து இப்போதைய வல்லரசுகளை புறம் தள்ளி உல

இதைத்தான் பலரும் சொல்கிறார்கள்....பொருந்திருந்து பார்போம்
கின் பெரும்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவார்கள்"

என்றேய் முழுசா படித்து பதில் வேற என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது பைத்தியம்
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

Post by நிலாசகி on Tue Oct 05, 2010 12:30 pm

@mohan-தாஸ் wrote:
@நிலாசகி wrote:நல்ல தகவல்கள் ....மிக்க நன்றி

"இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து இப்போதைய வல்லரசுகளை புறம் தள்ளி உல

இதைத்தான் பலரும் சொல்கிறார்கள்....பொருந்திருந்து பார்போம்
கின் பெரும்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவார்கள்"

என்றேய் முழுசா படித்து பதில் வேற என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது பைத்தியம்
என்ன அப்படி சொல்லிட்டீங்க........நேற்று மூடநம்பிக்கை என்று சொல்லப்பட்டது இன்று முழுநம்பிக்கை ஆகிவிட்ட.எது மூட நம்பிக்கை..எது உண்மை என்று அறிவியல் மிக மெதுவாக சொல்லும் ...(அதுவும் அமேரிக்கா காரன் சொன்னாத்த நாம நம்புவோம் ).
கற்றது சிறு துளி.....கல்லாதது கடல்...ஏன் எதை எப்படி நீங்கள் இதை மூட நம்பிக்கை என்று சொல்லுகிறீர்கள் என்று தெளிவாக சொல்லுங்கள்

avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

Post by சபீர் on Tue Oct 05, 2010 12:31 pm

நாளை நடப்பதை இன்றே அறிவிக்க கூடிய மனிதர்கள் இருந்தால் கடவுள் இருப்பது பொய்யாகிவிடுமே சோகம்
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

Post by mohan-தாஸ் on Tue Oct 05, 2010 12:35 pm

@நிலாசகி wrote:
@mohan-தாஸ் wrote:
@நிலாசகி wrote:நல்ல தகவல்கள் ....மிக்க நன்றி

"இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து இப்போதைய வல்லரசுகளை புறம் தள்ளி உல

இதைத்தான் பலரும் சொல்கிறார்கள்....பொருந்திருந்து பார்போம்
கின் பெரும்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவார்கள்"

என்றேய் முழுசா படித்து பதில் வேற என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது பைத்தியம்
என்ன அப்படி சொல்லிட்டீங்க........நேற்று மூடநம்பிக்கை என்று சொல்லப்பட்டது இன்று முழுநம்பிக்கை ஆகிவிட்ட.எது மூட நம்பிக்கை..எது உண்மை என்று அறிவியல் மிக மெதுவாக சொல்லும் ...(அதுவும் அமேரிக்கா காரன் சொன்னாத்த நாம நம்புவோம் ).
கற்றது சிறு துளி.....கல்லாதது கடல்...ஏன் எதை எப்படி நீங்கள் இதை மூட நம்பிக்கை என்று சொல்லுகிறீர்கள் என்று தெளிவாக சொல்லுங்கள்
ஓ..கோ அப்படியா வாரிங்க அப்போ இந்த வருடத்தில் நல்ல அறி விழி நீங்கதான் என்ன கொடுமை சார் இது அப்போ அவர் சொல்வார் வீடு வாங்க எழிய வளி நான்கு செம்பும் சீனியும் காக்கிலோவும் பக்கத்து வீட்டுக்கு கொடுக்க பிறகு கொடுத்தால் வீடு சீக்கிரம் கிடைத்துவிடும் வாகனம் கிடைக்க பெற்றோல் குடிக்க சொல்வார் அதை குடிங்க அவருக்கு சாம்புராணி கொழுத்தி வைத்து புகைப்பிடிங்க அமேரிக்கா காரணுக்கும் இவர் கதைக்கும் தொடர்பே இல்லை இவர் மூட நம்பிக்கை புராணம் இந்த வருடத்தில் சின்ன பிள்ளத்தனமா பேசுவதை விட்டு போட்டு வீட்டு வேலை இருந்தா போய் பாரு மணி
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

Post by உதயசுதா on Tue Oct 05, 2010 12:39 pm

நல்ல கட்டுரை குருஜி.
சினிமா மோகத்துல இருந்து மக்கள் விடுபட்டால் அதை விட
நல்ல விஷயம் என்ன இருக்கிறது?
இந்தியா வல்லரசு ஆகும் என்ற நம்பிக்கையில் நாளை நம் வருங்கால சந்ததிகள் வல்லரசு நாட்டில் வாழும் என்ற நம்பிக்கையில் உழைத்தால் எல்லாம் சாத்தியமே
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

Post by mohan-தாஸ் on Tue Oct 05, 2010 12:47 pm

@உதயசுதா wrote:நல்ல கட்டுரை குருஜி.
சினிமா மோகத்துல இருந்து மக்கள் விடுபட்டால் அதை விட
நல்ல விஷயம் என்ன இருக்கிறது?
இந்தியா வல்லரசு ஆகும் என்ற நம்பிக்கையில் நாளை நம் வருங்கால சந்ததிகள் வல்லரசு நாட்டில் வாழும் என்ற நம்பிக்கையில் உழைத்தால் எல்லாம் சாத்தியமே

ஆமா அது சரி நேற்று ஏந்திரன் படம் பார்க்க சாப்பிடாமல் டிக்கட் எடுக்க போய் முன் வரிசையில் நின்றதை பார்த்தேன் அதிர்ச்சி இன்று ஏன் இப்படி பேசுரிங்க மேடம் சினிமாவை பத்தி தப்பாக ஒன்னும் புரியல
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

Post by நிலாசகி on Tue Oct 05, 2010 12:48 pm

@mohan-தாஸ் wrote:
@நிலாசகி wrote:
@mohan-தாஸ் wrote:

என்றேய் முழுசா படித்து பதில் வேற என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது பைத்தியம்
என்ன அப்படி சொல்லிட்டீங்க........நேற்று மூடநம்பிக்கை என்று சொல்லப்பட்டது இன்று முழுநம்பிக்கை ஆகிவிட்ட.எது மூட நம்பிக்கை..எது உண்மை என்று அறிவியல் மிக மெதுவாக சொல்லும் ...(அதுவும் அமேரிக்கா காரன் சொன்னாத்த நாம நம்புவோம் ).
கற்றது சிறு துளி.....கல்லாதது கடல்...ஏன் எதை எப்படி நீங்கள் இதை மூட நம்பிக்கை என்று சொல்லுகிறீர்கள் என்று தெளிவாக சொல்லுங்கள்
ஓ..கோ அப்படியா வாரிங்க அப்போ இந்த வருடத்தில் நல்ல அறி விழி நீங்கதான் என்ன கொடுமை சார் இது அப்போ அவர் சொல்வார் வீடு வாங்க எழிய வளி நான்கு செம்பும் சீனியும் காக்கிலோவும் பக்கத்து வீட்டுக்கு கொடுக்க பிறகு கொடுத்தால் வீடு சீக்கிரம் கிடைத்துவிடும் வாகனம் கிடைக்க பெற்றோல் குடிக்க சொல்வார் அதை குடிங்க அவருக்கு சாம்புராணி கொழுத்தி வைத்து புகைப்பிடிங்க அமேரிக்கா காரணுக்கும் இவர் கதைக்கும் தொடர்பே இல்லை இவர் மூட நம்பிக்கை புராணம் இந்த வருடத்தில் சின்ன பிள்ளத்தனமா பேசுவதை விட்டு போட்டு வீட்டு வேலை இருந்தா போய் பாரு மணி

இந்த கட்டுரையில் அதெல்லாம் இருக்கா என்ன....

இது மனிதன் உருவாக்கிய சடங்குகள்.....மனிதனின் அறியாமை தான் காரணம்...... அப்ப்ரிக்கா இந்தியா அமெரிக்க ஆஸ்ட்ரேலியா என்று எங்கெங்கும் பரவி இருக்கிறது.. ..மதக்கோட்பாடுகளில் நிறையவே இருக்கிறது ....எல்லா மதங்களிளும்தான்.
ஒரு அறையில் நாள் பேர் வரிசையாக இருக்கிறார்கள் முதலாமவன் சொல்லியதை நான்காவதாய் இருப்பவனிடம் நடுவிலிருக்கும் இரண்டு பேர் மூலமாக சொல்லவேண்டும் ...நிச்சயம் அந்த தகவல் சிதைந்து உருமாறி அவரவருக்கு தோன்றிய தகவல்களையும் (மனுஷன் மிகுந்த கற்பனா சக்தி உள்ளவன்) சேர்த்து தவறாகத்தான் நான்காம் நபரிடம் செல்லும்...இதற்காக முதலாம் நபர் முட்டாள் மூடநம்பிக்கையை பரப்புவர் என்று சொன்னால் அது தகுமா ? அப்படி நாள் பேர் இருக்கும் அறைக்கே இப்படி என்றால் ...இந்த உலகத்தை சொல்லத்தான் வேண்டுமா...avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

Post by நிலாசகி on Tue Oct 05, 2010 12:54 pm

@சபீர் wrote:நாளை நடப்பதை இன்றே அறிவிக்க கூடிய மனிதர்கள் இருந்தால் கடவுள் இருப்பது பொய்யாகிவிடுமே சோகம்

நாளை நடப்பதை இன்றே சொல்ல ஏன் முடியாது ......இவர்களை விடுவிடுங்கள் .நீங்கள் ஒரு காரியம் செய்யபோகிறீர்கள் .உங்களுக்கு iq அதிகம்..ஆராயும் திறன் அதிகம்,அனுபவமும் உண்டு ....ஏன் அனைத்து சந்தர்பங்களையும் காரலேட் செய்து ..இந்த காரியம் இத்தனை மணிக்குள் செய்யமுடியும்.இதற்கு இத்தனை பலன் உண்டு..இத்தனை குறுக்கீடுகள் வரும் என்று சொல்லமுடியாதா?..அதை தடுக்க என்ன வழிகள் ,அதை எப்படி எதிர்கொள்ளுவது என்று இலக்கை நோக்கி நடத்தி செல்ல முடியாதா.avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

Post by mohan-தாஸ் on Tue Oct 05, 2010 1:02 pm

@நிலாசகி wrote:
@mohan-தாஸ் wrote:
@நிலாசகி wrote:
என்ன அப்படி சொல்லிட்டீங்க........நேற்று மூடநம்பிக்கை என்று சொல்லப்பட்டது இன்று முழுநம்பிக்கை ஆகிவிட்ட.எது மூட நம்பிக்கை..எது உண்மை என்று அறிவியல் மிக மெதுவாக சொல்லும் ...(அதுவும் அமேரிக்கா காரன் சொன்னாத்த நாம நம்புவோம் ).
கற்றது சிறு துளி.....கல்லாதது கடல்...ஏன் எதை எப்படி நீங்கள் இதை மூட நம்பிக்கை என்று சொல்லுகிறீர்கள் என்று தெளிவாக சொல்லுங்கள்
ஓ..கோ அப்படியா வாரிங்க அப்போ இந்த வருடத்தில் நல்ல அறி விழி நீங்கதான் என்ன கொடுமை சார் இது அப்போ அவர் சொல்வார் வீடு வாங்க எழிய வளி நான்கு செம்பும் சீனியும் காக்கிலோவும் பக்கத்து வீட்டுக்கு கொடுக்க பிறகு கொடுத்தால் வீடு சீக்கிரம் கிடைத்துவிடும் வாகனம் கிடைக்க பெற்றோல் குடிக்க சொல்வார் அதை குடிங்க அவருக்கு சாம்புராணி கொழுத்தி வைத்து புகைப்பிடிங்க அமேரிக்கா காரணுக்கும் இவர் கதைக்கும் தொடர்பே இல்லை இவர் மூட நம்பிக்கை புராணம் இந்த வருடத்தில் சின்ன பிள்ளத்தனமா பேசுவதை விட்டு போட்டு வீட்டு வேலை இருந்தா போய் பாரு மணி

இந்த கட்டுரையில் அதெல்லாம் இருக்கா என்ன....

இது மனிதன் உருவாக்கிய சடங்குகள்.....மனிதனின் அறியாமை தான் காரணம்...... அப்ப்ரிக்கா இந்தியா அமெரிக்க ஆஸ்ட்ரேலியா என்று எங்கெங்கும் பரவி இருக்கிறது.. ..மதக்கோட்பாடுகளில் நிறையவே இருக்கிறது ....எல்லா மதங்களிளும்தான்.
ஒரு அறையில் நாள் பேர் வரிசையாக இருக்கிறார்கள் முதலாமவன் சொல்லியதை நான்காவதாய் இருப்பவனிடம் நடுவிலிருக்கும் இரண்டு பேர் மூலமாக சொல்லவேண்டும் ...நிச்சயம் அந்த தகவல் சிதைந்து உருமாறி அவரவருக்கு தோன்றிய தகவல்களையும் (மனுஷன் மிகுந்த கற்பனா சக்தி உள்ளவன்) சேர்த்து தவறாகத்தான் நான்காம் நபரிடம் செல்லும்...இதற்காக முதலாம் நபர் முட்டாள் மூடநம்பிக்கையை பரப்புவர் என்று சொன்னால் அது தகுமா ? அப்படி நாள் பேர் இருக்கும் அறைக்கே இப்படி என்றால் ...இந்த உலகத்தை சொல்லத்தான் வேண்டுமா...
நீங்கள் சொல்வது எல்லாம் ஒரு காலத்தில் இருந்தது நம்பினார்கள் ஆனால் அது எல்லாம் பொய் என்று இப்போ உள்ள ஆதி காலத்தவர்களும் திருந்தி உள்ளார்கள் ஆனால் நேற்று பிறந்த உங்களை மாதரி கொஞ்ச பேர் இப்போவும் இவைகளை கேட்டு ஆ..அப்படியா என்று எடுத்து நடப்பதால் நம்புவதால் ஒரு சிலபேரால் அது பரம்பரையா உறுவெடுத்து வருகின்றது இதனை நான் முற்றாக வெறுக்கிறேன் அப்போ உங்களுக்கு இப்போ உங்களுக்கு தேவைப்பட வேண்டிய வைத்தியம் கட்டாயம் நீங்கள் செய்ய வேண்டியது நித்தியானந்தம் அவனித்தில் போய் அலோசனை பெற்று வாருங்கள் பிறகு நன்றாக அனைத்து புரியும் பேசிவேலை இல்லை என்ன கொடுமை சார் இது
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

Post by சரவணன் on Tue Oct 05, 2010 1:04 pm

நம்புவதும் நம்பாதததும் அவரவர் விருப்பம்.
நாம் யாரையும் நம்பு நம்பாதே என்று கட்டாயப்படுத்தக் கூடாது..
- இது என்னுடைய தாழ்மையான கருத்து.
குருக்கீட்டிர்க்கு மன்னிக்கவும்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11123
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

Post by mohan-தாஸ் on Tue Oct 05, 2010 1:10 pm

பிச்ச wrote:நம்புவதும் நம்பாதததும் அவரவர் விருப்பம்.
நாம் யாரையும் நம்பு நம்பாதே என்று கட்டாயப்படுத்தக் கூடாது..
- இது என்னுடைய தாழ்மையான கருத்து.
குருக்கீட்டிர்க்கு மன்னிக்கவும்.

ஒருவன் தப்பு செய்யும் போது அவன் விருப்பத்திற்கு தப்பு செய்ரான் என்று விட்டு விட கூடாது தப்பு செய்தால் அதை தட்டி கேற்கனும் அதுதான் மனிதன் அதனை திருந்த செய் திருந்தி நட...தப்பான விடயத்தில் ஈடு படாத பிறகு உன் பரம்பரையை அது பாதிக்கும் அப்போ இது தப்பு..என்று எனக்கு நூறு வீதம் தெரியும் இதனால் பாதிப்பு அடைந்தவர்கள் நிறையப்பேர் அதனால் அழகான முறையில் சொன்னால் கேற்கனும் இல்லா விட்டால் சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

Post by சரவணன் on Tue Oct 05, 2010 1:12 pm

நீங்க ஒரு வீரனை அடிக்க வந்தா உங்களுக்கு பதக்கம் கொடுத்து பாராட்டி இருப்பேன்.நீங்க அடிக்க வரத்து ஒரு பிள்ள பூச்சியை....உங்களுக்கு பதக்கமும் கிடையாது,, பட்டமும் கிடையாது!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11123
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

Post by நிலாசகி on Tue Oct 05, 2010 1:13 pm

இந்த கட்டுரையில் அதெல்லாம் இருக்கா என்ன....

இது மனிதன் உருவாக்கிய சடங்குகள்.....மனிதனின் அறியாமை தான் காரணம்...... அப்ப்ரிக்கா இந்தியா அமெரிக்க ஆஸ்ட்ரேலியா என்று எங்கெங்கும் பரவி இருக்கிறது.. ..மதக்கோட்பாடுகளில் நிறையவே இருக்கிறது ....எல்லா மதங்களிளும்தான்.
ஒரு அறையில் நாள் பேர் வரிசையாக இருக்கிறார்கள் முதலாமவன் சொல்லியதை நான்காவதாய் இருப்பவனிடம் நடுவிலிருக்கும் இரண்டு பேர் மூலமாக சொல்லவேண்டும் ...நிச்சயம் அந்த தகவல் சிதைந்து உருமாறி அவரவருக்கு தோன்றிய தகவல்களையும் (மனுஷன் மிகுந்த கற்பனா சக்தி உள்ளவன்) சேர்த்து தவறாகத்தான் நான்காம் நபரிடம் செல்லும்...இதற்காக முதலாம் நபர் முட்டாள் மூடநம்பிக்கையை பரப்புவர் என்று சொன்னால் அது தகுமா ? அப்படி நாள் பேர் இருக்கும் அறைக்கே இப்படி என்றால் ...இந்த உலகத்தை சொல்லத்தான் வேண்டுமா...[/quote]

நீங்கள் சொல்வது எல்லாம் ஒரு காலத்தில் இருந்தது நம்பினார்கள் ஆனால் அது எல்லாம் பொய் என்று இப்போ உள்ள ஆதி காலத்தவர்களும் திருந்தி உள்ளார்கள் ஆனால் நேற்று பிறந்த உங்களை மாதரி கொஞ்ச பேர் இப்போவும் இவைகளை கேட்டு ஆ..அப்படியா என்று எடுத்து நடப்பதால் நம்புவதால் ஒரு சிலபேரால் அது பரம்பரையா உறுவெடுத்து வருகின்றது இதனை நான் முற்றாக வெறுக்கிறேன் அப்போ உங்களுக்கு இப்போ உங்களுக்கு தேவைப்பட வேண்டிய வைத்தியம் கட்டாயம் நீங்கள் செய்ய வேண்டியது நித்தியானந்தம் அவனித்தில் போய் அலோசனை பெற்று வாருங்கள் பிறகு நன்றாக அனைத்து புரியும் பேசிவேலை இல்லை என்ன கொடுமை சார் இது [/quote]

கலாச்சரத்திருந்து நம்பிக்கை வரை அனைத்தும் வட்டமே....முடிவு மறுபடியும் ஆரம்பத்திற்கே வரும்என்ன மாதிரியா...காலை பத்துமணிக்கு கல்லூரியில் இருக்கவேண்டும் என்று சொல்லுவதையே கேட்டு நடக்காதவள்(அது எனக்கு மூட நம்பிக்கையாக படுகிறது ) அதைவிட தேர்வுகள அப்பட்டமான மூட நம்பிக்கை (அதையும் யாராவது கலாயுங்க ) உங்களைப்போன்றவர்கள் எதற்கெடுத்தாலும் தப்பு மூட நம்பிக்கை பொய் பித்தலாட்டம் என்று அனைத்தையுமே கூறுவதால்..நிஜமான மூடநம்பிக்கையான பொருளை நீங்கள் சொன்னாலும் கேட்க மறுக்கிறார்கள் ..என்னிடத்தில் இருக்கும் பகுத்தறிவு திறனைக் கொண்டு எனக்கேது மூடநம்பிக்கையாக தோன்றுகிறதோ அதை ஒருபோதும் செய்வதில்லை.
ஆனால் இந்த கட்டுரையில் மூடநம்பிக்கை இருப்பதாக தெரியவில்லை என்னைப்பொருத்தமட்டில்

avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

Post by mohan-தாஸ் on Tue Oct 05, 2010 1:26 pm

இவர் எழுதியதை கட்டுரை என்று சொல்வதற்கு என்ன ஆதாராம் அதை முளிசாக படித்து பார்தையா? அந்த மொழியின் அர்த்தத்தை நன்று அறிந்தாயா? இவருடைய கருத்துக்களில் வேற வேற கோற்பாடுகள் நிறை காணப்படுகின்றது மந்திரம்..சூத்திரம்..அப்படியல்லாம் கூறி அதனால் நிறைய சுயவற்சக தகவல்களை பெயர்களை இட்டு வேற சக்திகள் உள்ளது என்பனவற்றை எல்லாம் சொல்லி சுட்டிகாட்டுகிறார் நன்றாக படித்து விட்டு பின்னூட்டம் கொடு படித்தாலும் அதன் அர்த்ததையும் புரிய வேண்டும் சில பெயர் சொல்லி உள்ளார் அதற்கு அர்த்தம் புரியுமா தமிழில் இல்லாத வார்த்தைகளை இவர்கள் உபயோகத்தில் எடுத்து அதை மந்திரமாக மாற்றி கூறுவார்கள் நான் நினைக்கிறேன் உங்கள் குடும்பத்தை சார்தோர் யாரும் இதில் ரொம்பவும் ஈடுபாடாக உள்ளார்கள் என்று அதுதான் அர்த்தம் புரியாமல் சொல்வதையும் விளங்காமல் தத்தளித்து கொண்டிருக்கீர்ர் என்று...நன்றாக புரிகின்றது
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

Post by சபீர் on Tue Oct 05, 2010 1:28 pm

@நிலாசகி wrote:
@சபீர் wrote:நாளை நடப்பதை இன்றே அறிவிக்க கூடிய மனிதர்கள் இருந்தால் கடவுள் இருப்பது பொய்யாகிவிடுமே சோகம்

நாளை நடப்பதை இன்றே சொல்ல ஏன் முடியாது ......இவர்களை விடுவிடுங்கள் .நீங்கள் ஒரு காரியம் செய்யபோகிறீர்கள் .உங்களுக்கு iq அதிகம்..ஆராயும் திறன் அதிகம்,அனுபவமும் உண்டு ....ஏன் அனைத்து சந்தர்பங்களையும் காரலேட் செய்து ..இந்த காரியம் இத்தனை மணிக்குள் செய்யமுடியும்.இதற்கு இத்தனை பலன் உண்டு..இத்தனை குறுக்கீடுகள் வரும் என்று சொல்லமுடியாதா?..அதை தடுக்க என்ன வழிகள் ,அதை எப்படி எதிர்கொள்ளுவது என்று இலக்கை நோக்கி நடத்தி செல்ல முடியாதா.
புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

நீங்கள் சொல்வதுபோல் நாளை நடக்க இருக்கும் வேலையை இன்றே திட்டமிட்டு இருந்தாலும் அது 100 வீதம் நடந்தேருமா என்றால் முடியாத காரியம் அக்கா.

நான் சின்னதாக ஒரு கேள்வி உங்களிடம் கேட்கிறேன்.நாளை நடப்பதை இன்றே அறிந்து கொள்ளலாம் என்றால் இந்த விபத்துக்கள் எல்லாம் எப்படி நடக்கின்றது அக்கா. இப்படி முன்னறிவிப்பு செய்பர்கள் இதை தடுக்கலாம் இல்லயா.

அடுத்தது நீங்களே சொல்லுங்கள் உங்களுக்கு நாளை என்ன நடக்க இருக்கிறது என்று இப்பவே சொல்லுங்கள் நேரத்துடன் அப்படி நாளைக்கு சொல்லப்பட்ட நேரத்தில் நடந்தால் உங்களுக்கு. அதை நான் நம்பத்தயார் என்ன சொல்ரிங்க அக்கா
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

Post by நிலாசகி on Tue Oct 05, 2010 1:46 pm

@mohan-தாஸ் wrote:இவர் எழுதியதை கட்டுரை என்று சொல்வதற்கு என்ன ஆதாராம் அதை முளிசாக படித்து பார்தையா? அந்த மொழியின் அர்த்தத்தை நன்று அறிந்தாயா? இவருடைய கருத்துக்களில் வேற வேற கோற்பாடுகள் நிறை காணப்படுகின்றது மந்திரம்..சூத்திரம்..அப்படியல்லாம் கூறி அதனால் நிறைய சுயவற்சக தகவல்களை பெயர்களை இட்டு வேற சக்திகள் உள்ளது என்பனவற்றை எல்லாம் சொல்லி சுட்டிகாட்டுகிறார் நன்றாக படித்து விட்டு பின்னூட்டம் கொடு படித்தாலும் அதன் அர்த்ததையும் புரிய வேண்டும் சில பெயர் சொல்லி உள்ளார் அதற்கு அர்த்தம் புரியுமா தமிழில் இல்லாத வார்த்தைகளை இவர்கள் உபயோகத்தில் எடுத்து அதை மந்திரமாக மாற்றி கூறுவார்கள் நான் நினைக்கிறேன் உங்கள் குடும்பத்தை சார்தோர் யாரும் இதில் ரொம்பவும் ஈடுபாடாக உள்ளார்கள் என்று அதுதான் அர்த்தம் புரியாமல் சொல்வதையும் விளங்காமல் தத்தளித்து கொண்டிருக்கீர்ர் என்று...நன்றாக புரிகின்றது
நானும் என் குடும்பமுமா .....ஈடுபாடா
உங்களுக்கு நன்றாக புரிந்துவிட்டது!எனக்குதான் புரியவில்லை என்ன பண்றது படிப்பறிவில்லாத குடும்பம்....யோசிக்க அறிவு பத்தவில்லை ..

ஒத்துக்கிட்டேன் ...என்னைபோன்ற அறிவிலிகள் குடும்பத்திலிருந்து வந்தவர்களிடம் தர்க்கம் செய்வது உங்களுக்கு அழகல்ல...அதனால் நிறுத்திக்கொள்வோம்

avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

Post by நிலாசகி on Tue Oct 05, 2010 1:48 pm

@சபீர் wrote:
@நிலாசகி wrote:
@சபீர் wrote:நாளை நடப்பதை இன்றே அறிவிக்க கூடிய மனிதர்கள் இருந்தால் கடவுள் இருப்பது பொய்யாகிவிடுமே சோகம்

நாளை நடப்பதை இன்றே சொல்ல ஏன் முடியாது ......இவர்களை விடுவிடுங்கள் .நீங்கள் ஒரு காரியம் செய்யபோகிறீர்கள் .உங்களுக்கு iq அதிகம்..ஆராயும் திறன் அதிகம்,அனுபவமும் உண்டு ....ஏன் அனைத்து சந்தர்பங்களையும் காரலேட் செய்து ..இந்த காரியம் இத்தனை மணிக்குள் செய்யமுடியும்.இதற்கு இத்தனை பலன் உண்டு..இத்தனை குறுக்கீடுகள் வரும் என்று சொல்லமுடியாதா?..அதை தடுக்க என்ன வழிகள் ,அதை எப்படி எதிர்கொள்ளுவது என்று இலக்கை நோக்கி நடத்தி செல்ல முடியாதா.

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

நீங்கள் சொல்வதுபோல் நாளை நடக்க இருக்கும் வேலையை இன்றே திட்டமிட்டு இருந்தாலும் அது 100 வீதம் நடந்தேருமா என்றால் முடியாத காரியம் அக்கா.

நான் சின்னதாக ஒரு கேள்வி உங்களிடம் கேட்கிறேன்.நாளை நடப்பதை இன்றே அறிந்து கொள்ளலாம் என்றால் இந்த விபத்துக்கள் எல்லாம் எப்படி நடக்கின்றது அக்கா. இப்படி முன்னறிவிப்பு செய்பர்கள் இதை தடுக்கலாம் இல்லயா.

அடுத்தது நீங்களே சொல்லுங்கள் உங்களுக்கு நாளை என்ன நடக்க இருக்கிறது என்று இப்பவே சொல்லுங்கள் நேரத்துடன் அப்படி நாளைக்கு சொல்லப்பட்ட நேரத்தில் நடந்தால் உங்களுக்கு. அதை நான் நம்பத்தயார் என்ன சொல்ரிங்க அக்கா
அதான் எனக்கு அறிவும் நியானமும் இல்லையே...இருந்தா நான் ஏன் இப்படி இருக்கிறேன்
மப்பு ஏறிப்போச்சு தூக்கம்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

Post by mohan-தாஸ் on Tue Oct 05, 2010 1:55 pm

@நிலாசகி wrote:
@mohan-தாஸ் wrote:இவர் எழுதியதை கட்டுரை என்று சொல்வதற்கு என்ன ஆதாராம் அதை முளிசாக படித்து பார்தையா? அந்த மொழியின் அர்த்தத்தை நன்று அறிந்தாயா? இவருடைய கருத்துக்களில் வேற வேற கோற்பாடுகள் நிறை காணப்படுகின்றது மந்திரம்..சூத்திரம்..அப்படியல்லாம் கூறி அதனால் நிறைய சுயவற்சக தகவல்களை பெயர்களை இட்டு வேற சக்திகள் உள்ளது என்பனவற்றை எல்லாம் சொல்லி சுட்டிகாட்டுகிறார் நன்றாக படித்து விட்டு பின்னூட்டம் கொடு படித்தாலும் அதன் அர்த்ததையும் புரிய வேண்டும் சில பெயர் சொல்லி உள்ளார் அதற்கு அர்த்தம் புரியுமா தமிழில் இல்லாத வார்த்தைகளை இவர்கள் உபயோகத்தில் எடுத்து அதை மந்திரமாக மாற்றி கூறுவார்கள் நான் நினைக்கிறேன் உங்கள் குடும்பத்தை சார்தோர் யாரும் இதில் ரொம்பவும் ஈடுபாடாக உள்ளார்கள் என்று அதுதான் அர்த்தம் புரியாமல் சொல்வதையும் விளங்காமல் தத்தளித்து கொண்டிருக்கீர்ர் என்று...நன்றாக புரிகின்றது
நானும் என் குடும்பமுமா .....ஈடுபாடா
உங்களுக்கு நன்றாக புரிந்துவிட்டது!எனக்குதான் புரியவில்லை என்ன பண்றது படிப்பறிவில்லாத குடும்பம்....யோசிக்க அறிவு பத்தவில்லை ..

ஒத்துக்கிட்டேன் ...என்னைபோன்ற அறிவிலிகள் குடும்பத்திலிருந்து வந்தவர்களிடம் தர்க்கம் செய்வது உங்களுக்கு அழகல்ல...அதனால் நிறுத்திக்கொள்வோம்

படிப்பறிவு இல்லாமல் யோசிக்காமல் பின்னூட்டம் கொடுத்திங்க என்றுதான் நான் அழகிய முறையில் சொன்னேன் இப்போவாது புரிந்து கொண்டது இவ்வளவு பேச்சுக்கு பிறகு சந்தோசம் அறிவில்லாதோருக்கு அறிவும் புகட்டலாம் இன்னும் உங்களுக்கு வயசு இருக்கு நன்றாக படித்து விட்டு பதில் கொடுங்க நானும் நிறுத்தி கொள்கிறேன் நன்றி மீண்டும் சந்திப்போம்
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

Post by கலைவேந்தன் on Tue Oct 05, 2010 8:30 pm

இந்த திரியை இப்போது தான் முழுதாக பார்த்து முடித்தேன்.
மிகவும் வேதனையாக இருக்கிறது. பண்பாட்டுக்கு பெயர்பெற்றவர்கள் நாம்.

எதை எடுத்துச்சொன்னாலும் அதில் பண்பாடு மிக்க சொற்களைத்தான் பயன்படுத்தவேண்டும்...!

இனி இதுபோன்ற பண்பற்ற பதிவுகள் எங்குமே அனுமதிக்கப்படமாட்டாது..!

அனைவரும் இதையே இறுதி எச்சரிக்கையாக கொண்டு பண்புடன் நடக்க வேண்டிக்கொள்கிறேன்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

Post by சிவா on Tue Oct 05, 2010 8:38 pm

கலை wrote:இந்த திரியை இப்போது தான் முழுதாக பார்த்து முடித்தேன்.
மிகவும் வேதனையாக இருக்கிறது. பண்பாட்டுக்கு பெயர்பெற்றவர்கள் நாம்.

எதை எடுத்துச்சொன்னாலும் அதில் பண்பாடு மிக்க சொற்களைத்தான் பயன்படுத்தவேண்டும்...!

இனி இதுபோன்ற பண்பற்ற பதிவுகள் எங்குமே அனுமதிக்கப்படமாட்டாது..!

அனைவரும் இதையே இறுதி எச்சரிக்கையாக கொண்டு பண்புடன் நடக்க வேண்டிக்கொள்கிறேன்..!

கலையின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாளை நடப்பதை இன்று சொன்னவர்கள்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum