உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தமிழக பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி: முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:51 am

» அம்பானி மகள் திருமணம் ஜரூர் ஏற்பாடு: ஆயிரம் சொகுசு கார்கள் தயார்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:33 am

» கற்பக தரு 27: பாளையருவா, மட்டையருவா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:28 am

» முகலாயர்கள் - முகில் மின்னூல்
by badri2003 Today at 10:07 am

» தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது சிறுமி : ஒரு நெகிழ்ச்சி தருணம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:54 am

» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:45 am

» வரலாறு படைத்தது இந்தியா: அடிலெய்டில் அடி பணிந்தது ஆஸி.
by ராஜா Yesterday at 11:59 pm

» கெட்ட வார்த்தை பேசிய மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியை...!!
by aeroboy2000 Yesterday at 9:57 pm

» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்
by aeroboy2000 Yesterday at 9:51 pm

» புழுதி பறக்கும் சாலைகள்... தொடரும் போக்குவரத்து நெரிசல்: நான்கு துறைகளின் திட்டப்பணிகளால் திணறும் ஈரோடு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:33 pm

» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு
by சிவனாசான் Yesterday at 3:21 pm

» அ" வுக்கு அடுத்து "ஆ" வருவதேன்?
by சிவனாசான் Yesterday at 3:18 pm

» நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!
by சிவனாசான் Yesterday at 3:15 pm

» புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு
by சிவனாசான் Yesterday at 3:02 pm

» கடவுளைப் பூரணமாக நம்பு
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:57 pm

» பொழுது போக்கு - சினிமா
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:53 pm

» ரயில்களில் விரைவாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு
by சிவனாசான் Mon Dec 10, 2018 11:47 pm

» நிம்மதியான நல்வாழ்வுக்கு மஹா பெரியவரின் பத்து கட்டளைகள்:
by T.N.Balasubramanian Mon Dec 10, 2018 4:52 pm

» முதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்
by ayyasamy ram Mon Dec 10, 2018 9:15 am

» மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை?
by ayyasamy ram Mon Dec 10, 2018 8:30 am

» சிவசைலநாதர் திருக்கோவில்
by ayyasamy ram Sun Dec 09, 2018 11:00 pm

» கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது: டெல்லியில் 13-ந்தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்
by சிவனாசான் Sun Dec 09, 2018 7:58 pm

» பொது அறிவு தகவல்கள்
by T.N.Balasubramanian Sun Dec 09, 2018 6:05 pm

» பகல்ல நகைக்கடை எப்படி இருக்கும்...?!
by ayyasamy ram Sun Dec 09, 2018 3:43 pm

» வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:42 pm

» விஸ்வரூபமெடுக்கும் ‘புத்தாண்டு புத்தக இரவு’ இயக்கம்!
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:39 pm

» தங்கம் விலை நிலவரம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 2:31 pm

» ஆர்.எஸ்.எஸ்(RSS) மதம் மதம் மற்றும் மதம் - பா. ராகவன்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:26 pm

» 9/11: சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி --- பா. ராகவன் மின்னூல்
by ஞானமுருகன் Sun Dec 09, 2018 2:24 pm

» டெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு
by ayyasamy ram Sun Dec 09, 2018 1:37 pm

» மாயவலை - பா.ராகவன் மின்னூல்
by பிரபாகரன் ஒற்றன் Sun Dec 09, 2018 12:46 pm

» தீர்த்த மகிமை விருட்ச மகிமை 03: வாகையை வலம் வருவோம்!
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 11:25 am

» வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 11:14 am

» அவரவர் விருப்பத்துக்கேற்ப படங்களை வெளியிட்டுக் கொள்ளுங்கள்: தயாரிப்பாளர்கள் சங்கம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 11:14 am

» 336 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கே.ஆர்.எஸ். அணைப்பகுதியில் ரூ.1,500 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா மந்திரி டி.கே.சிவக்குமார் தகவல்
by ayyasamy ram Sun Dec 09, 2018 11:06 am

»  விஜய்யின் 63-ஆவது படம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 10:54 am

» எஸ்ரா ‘மேப்’!
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 10:51 am

» திருவண்ணாமலையில் வயது முதிர்வால் மூக்கு பொடி சித்தர் காலமானார்
by ayyasamy ram Sun Dec 09, 2018 10:46 am

» முதல் முறையாக பவுண்டரி --சென்னை விமான நிலையம்
by ayyasamy ram Sun Dec 09, 2018 10:42 am

» வெற்றி பெற தகுந்த நேரம் வரும் வரை அமைதியாக காத்திரு...!!
by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 10:07 am

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by fefe Sun Dec 09, 2018 8:35 am

» நான் நல்லது மட்டும் தான் செய்வேன் பிரண்ட்ஸ்...நம்புங்க
by T.N.Balasubramanian Sat Dec 08, 2018 9:22 pm

» 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்
by T.N.Balasubramanian Sat Dec 08, 2018 9:14 pm

» நான் சொல்றதை பத்து K B யாவது கேளுங்க
by SK Sat Dec 08, 2018 7:32 pm

» மாயாஜாலம்...ரோன்டா பைர்ன்
by ஞானமுருகன் Sat Dec 08, 2018 7:03 pm

» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by ஞானமுருகன் Sat Dec 08, 2018 7:02 pm

» அயோத்தி ராமர் கோவில் விவகாரம் சிவசேனா சார்பில் 24-ந் தேதி பேரணி உத்தவ் தாக்கரே பேட்டி
by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 08, 2018 10:48 am

» 2019- தேர்தலில் போட்டியிட மாட்டேன்': உமா பாரதி
by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 08, 2018 10:41 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Dec 07, 2018 11:24 pm

» மனதைப் புரிந்து கொள்,...!!
by ayyasamy ram Fri Dec 07, 2018 10:49 pm

Admins Online

ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வரலாறு!

ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வரலாறு!

Post by சிவா on Wed Sep 29, 2010 4:20 amமட்டக்களப்பு மாநிலம் :

ஈழவள நாட்டின் கிழக்குத்திசையில் வங்கக்கடலோரம் இம்மாநிலம் உள்ளது. நிலப்பரப்பு 135 மைல் வரை நீண்டும் ஒடுங்கி 50 மைல் தூரம்வரை பரந்தும், வடக்கே குமுக்கன் ஆற்றையும் தெற்கே வெருகல் கங்கையினையும் எல்லைகளாகக் கொண்டது.


மட்டக்களப்பு என்பது தனித் தமிழ்ச்சொல் (மட்டம்+களப்பு) மட்டமான களப்புகளை உடையது. இவை உவர் களப்புகள்.களப்புகள் பல சேர்ந்து மாரிகாலங்களில் ஆறுபோல ஓடிக் கடலுடன் சேருகின்றன. ஆற்றுக்குரிய பல வளங்களும் இருப்பதால் ஆறு என்று அழைக்கப்படுகின்றது. ஆற்றின் கழிமுகம் துறைமுகமாயுமிருந்தது. களப்புகளினூடே பல மைல் தூரம் ஓடங்கள் மூலம் உள்ளே செல்லவும் முடிந்தது.


கடலும் கடல் சார்ந்த நிலமும், காடும் காவும் பசும் புற்றரைகளும் புல் வெளிகளும் இம்மானிலமெங்கும் பரந்தும் செறிந்தும் காணப்படுவதால் நெய்தலும் மருதமும் தம்முள் மயங்கியும் முயங்கியும, திரிந்தும் பொலிந்துமிருப்பது புலனாகும்.


சோலைகள் காடுகளெல்லாம் மணங்கமழும் மலர் வனங்களுண்டு. அம்மலர்களிலயிருந்து தேன் நிரம்பி வழியும், தோடெலாம் எழு மதுகரச் சுரும்பின. அவை தேனை உண்டு மிஞ்சிய தேனைக் கூடுகளிற்சேர்த்துச் சேகரிக்கும். காட்டுப்புறங்களையண்டி வாழ்வோர் அத்தேன் கூடுகளைக் காடுகளில் தேடி எடுத்துப் பிழிந்து தேன் சேகரிப்பர். அவர்கள் உண்டும் அயற்கிராமங்களில் விற்றும் வருவதால் தேனாடு எனவும், இங்குள்ள புல்நிலங்களில் வளர்கப்படும் ஆவினங்களிலிருந்து அதிக அளவில் பால் பெறப்படுவதால் "பானாடு" (பால்+ நாடு) எனவும், இம்மானிலமெங்கும் அமோகமாக விளைவிக்கப்படுவதால் "நென்னாடு" (நெல்+நாடு) எனவும், கடலிலும் களப்புபளிலும் பல இன மீன்களும் இறால் நண்டுகளும் பிடிக்கப்படுவதால் "மீனாடு" (மீன் +நாடு) எனவும், பண்டைப்புகழ் கொண்டது.


ஐந்திணை நிலத்தின் பகுப்புமுடையதாய் அமைந்துள்ள இம்மானிலம் பல மாவட்டங்களை அடக்கியுள்ளது. மாவட்டங்கள் பெரிய கிராமங்களையும் சிறிய கிராமங்களையும் கொண்டுள்ளன கிராமங்களையும் கொண்டுள்ளன. கிராமங்கள்தோறும் மா, பலா, வாழை ஆகிய முக்கனி மரங்களும் கன்னலும் கமுகும் தென்னை பனைகளும் செழித்து வளர்ந்து கிராமங்களை அழகு செய்கின்றன. பல இனமக்களும் பல குடிகளாகப் பண்பு மொழியாட்சியுமுயோராய் வாழ்ந்த பெருமை சுளையுமுடைந்து இவர்கள் வாழ்க்கை பழமையோடும் தொடர்புற்று மிளிர்வதை பல சான்றுகள் பகர்கின்றன. காலத்தால் மாற்றமடையினும் நிலைத்திரூக்கும் பல பழக்கங்களையும் கிராமமக்களின் வாழ்க்கை முறைகளில் இன்றும் காணகூடியதாக இருக்கின்றன.


மட்டு மா நகர்

தென்னை பனையோடு தேன்தரு சோலையும்
செஞ்நெல் வயலும் செழித்துப் பொலிவுற
வன்மீ னெளிலதரு வாவியில் மீனினம்
துள்ளிக் குதித்திடும் மட்டு மா நகர்.
தேன் கதலி நெல் கரும்பு செறிந்து தோன்றித்
திகழ்ந்திடு மா மட்டு நகர்.


எனப் பலபடப்புகழ்ந்து பாடப்பட்டுள்ளது மட்டு மா நகர்.

தேன் சொரியும் மலர் வனங்கள் சூழ்ந்துள்ளது (மட்டு-தேன்) இங்கு தேன் உண்டு. களப்புகளில் மீன்களுண்டு. அதனாற்போலும் தேன்நாடு மீன்நாடு என்ற பண்டைப் புகழுடைத்தது.


மட்டுநகர் இரு பெரும் களப்புக்களால் சூழப்பட்டுள்ளது. நகரையண்டடிய களப்புப்பகுதிகள் ஆழமுடையன. அவை கல்லடிப்பாலம் அமைந்துள்ள பகுதியும் கச்சேரியைச் சூழவுள்ள பகுதிகளுமாகும். இவ்வாழமான நீர்ப்பகுதிகளில் நீர்ர மகளீர் வாழ்கின்றனர். (பாடும் மீன்கள்) அவர்கள் இசை பாடுகின்றனர். பாடும் இசைகளைப் பௌர்ணமி நடு நிசியில் கேட்கலாம. இதனை முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் ஆராய்ச்சி செய்தும் காதாற்கேட்டும் தாம் இயற்றிய யாழ்நூலில் குறிப்பிட்டுள்ளார். நீருக்குள்ளேயிருந்த நீரரமகளீரைப் பாருக்கு அறியவைத்துள்ளார் என்பது யாழ் நுல் இவற்றால் மட்டு மா நகர் மீன்பாடும் தேன்நாடெனப் பேச்சு வழக்கிலுள்ளது. நகரிலும் நகர்புறங்களிலும் பல இனமத மக்களும் வாழ்கின்றனர். அரசாங்கத் தலைமையகங்கள் உண்டு. கல்விக்கூடங்கள் பல, மத, ஆலயங்கள் பல, கல்வி கற்று நாகரீகமடைந்த மக்கள் வாழும் ஒரு நகரமாக விளங்குகின்றது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வரலாறு!

Post by சிவா on Wed Sep 29, 2010 4:21 am

கோட்டமுனை:

மட்டுநகர் முன்பு இரு பெரும் பிரிவுகளாக இருந்தன.

1. புளியந்தீவு 2. கோட்டைமுனை (கோட்டைக்கு எதிர்புறமாக உள்ள முனையாக இருந்ததினால் கோட்டைமுனை என அழைக்கப்பட்டது. முன்பு கோட்டைமுனைப் பகுதியிலேயே அமிர்தகழிக் கிராமமும் அடங்கியிருந்து பின் மாற்றமடைந்தது.


கோட்டைமுனைப் பகுதியில் அடங்கியிருந்த சிறு பகுதிகள் கோட்டைமுனை, தாண்டவன்வெளி, வெட்டுக்காடு, தாமரைக்கேணி, மோர்சாப்பிட்டி, புளியடிக்குடா, உப்போடை, சீலாமுனை.


அமிர்தகழிப்பகுதியில் அடங்கியிருந்த சிறு பகுதிகள் : அமிர்தகழி, புன்னைச்சோலை, மட்டிக்களி, பாலைமீன்மடு, முகத்துவாரம், கருவேப்பங்கேணி, ஊறணி, நாவலடி.

ஆலயத்தில் நிர்வாகபகுதியாக இருப்பதனால் இவ்விரு பகுதிகளும் குறிப்பிடப்படுகிறது


ஆலய நிர்வாகம் கோட்டைமுனைப் பகுதி வேளாளர் பரம்பரையினருக்கும், அமிர்தகழி பகுதி ஏழூர்க் குருகுல வம்சத்தவர்களுக்குமே உரிமை உடையது. (1880ஆம் ஆண்டுப் பரம்பரையினர்)


அமிர்தகழிக் கிராமம் :

வங்கக்கடலோடு மட்டக்களப்பு வாவி சங்கமமாகும் இடத்தின் அயலில் உள்ளது அமிர்தகழி கிராமம். மட்டுநகரில் இருந்து இருமைல் தொலைவாகும். ஒருபுறம் நதிக்கரைக் குடியேற்றங்களைக் கொண்டது. மறுபுறம் அலையோலை மிகுந்த கடல. அதனை அண்மிப்பரந்து செல்லும் வெண்மணற் பரப்புக்கள். அங்கு தாழைகள் குமுக்குக்குக்குமுக்காய் செறிந்து சூழ்ந்து அரண்செய்யும். தென்னைமரங்களும் புன்னை மரங்களும் உயர்ந்து வளர்ந்து நிழல் பரப்பும். களப்பின் முத்துக்களை விளைவிக்கும் சிப்பிகளும் நத்தைகளும் மற்றும் ஆமைகளும் வெளிஓட்டு உடலால்தம்மை மூடிக்கொண்டு நீர்வாழ் சுகத்தை அனுபவிக்கின்றன. கயல், ஆரல் போன்ற மீனினங்கள் துள்ளிக்குதித்து நீந்தி விளையாடுகின்றன. கடற்புள்ளினங்கள், பருந்துகள், கழுகுகள், கொக்கினங்கள் வட்டமிட்டுப் பறக்கின்றன. பாம்புகள் வளைந்து வளைந்து நெளிந்து ஓடுகின்றன.


கடல் ஓயாது நெய்தல் பண்ணிசைத்து ஒலிக்கின்றது. கடலிலிருந்து காற்று வீசிக்கொண்டிருக்கும். கரையூரவரென்னும் மீன்பிடியாளரின் தோணிகளும் வள்ளங்களும் உயர்ந்தும் தாழ்ந்தும் கடலில் செல்லும். இத்தகைய காட்சிகளையும் சிறப்புக்களையும் உடையது. இக் கிராமம் நீர்வளம் நிலவளம் கொண்டது. தென்னை மரங்கள் செழிப்புற சோலைகளாக வளர்ந்து இக் கிராமத்தை அழகு பெற செய்கின்றன. கடற்கரையை அண்டித்தோன்றிய உவர் நீர்நிலைகளை இப்பகுதி மக்கள் தோணாக்கள் என்பர் தோணாக்களும் நெய்தல் நில நீர்நிலைகளுமிருப்பதால் கமுகு, வாழை, கரும்பு என்பன பயிர்செய்யப்படுகின்றன. ஒரு புறம் பற்றைக்காடுகள் நிறைந்தும் சோலைக்காடுகளாகவும் இருந்தன. தற்போது அவை அழிக்கப்பட்டு குடியேற்றமடைந்துள்ளன (புன்னைச்சோலை, கருவேப்பங்கேணி)


மாமாங்கம்:

மட்டுநகர் மத்தியிலிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் இப்பதியுண்டு. மட்டுநகர்ப் புறத்திலிருப்பதால் மட்டுநகர் மாமாங்கம் என்றும் அமிர்தகளிக் கிராமத்தையண்டியிருப்பதால் அமிர்தகழி மாமாங்கம் என்றும் சொல்லப்படுகிறது.

மட்டக்களப்பென்னும் மாநாடம் நாட்டினிடைப்
பட்டினப் பாங்கர்ப் பரந்த தோணாமுகமாய்,
ஜங்கரன் கேயில் அமிர்தகழிக் கணித்தாய்

ஏன்று பாடியுள்ளார் உயர்திரு. சுவாமி விபுலானந்தர் அடிகளார் அவர்கள்.


ஆதியில் மாமாங்கக்குளமும் அதனைச்சூழ்ந்துள்ள பகுதிகளும் மக்கள் குடியேற்றமற்று நிலச்செழிப்புமில்லாது காடுகளும் கற்றைகளும் நிறைந்து காணப்பட்டது.விந்நனைக் காட்டுப்பகுதிகளில் வாழ்ந்த வேடர்கள் இக்காட்டுப்பகுதிகளில் வேட்டையாடியும் தேன் சேகரித்தும் வந்துள்ளனர்.காலஞ்செல்ல சில வேடர் குடும்பங்கள் இப்பகுதிகளில் நிலையாகத் தங்கியும் வாழ்ந்து வந்தனர்.இதற்குசான்றாக அவர்களுக்கே உரித்தானதும் வணங்கும் தெய்வமுமான (முருகன்) குமாரத்தன் கோயிலுமொன்று மாமாங்கப் பதியின் மேற்கே ஒருமைல் தூரத்தில் இருப்பதை இன்றும் காணலாம். வேடுவர் காலத்தில கொத்துக்குழைப் பந்தரிட்டு வணங்கி வந்த கோயில் தற்போது காடுகள் வெட்டப்பட்டுக் குடியேற்றம் பெற்றுள்ளது.


கோயிலும் அங்குள்ள மக்களால் கற்களினால் சிறப்பாக அமைக்கப்பட்டு பூசைகளும், விழாக்களும் நடைபெற்று வருகின்றன. வேடர்கள் வணங்கிவந்த மற்றுமொருதெய்வமுமான வீரபத்தினிக்கோவிலொன்று மாமாங்கப்பதியின் வடமேற்கே காட்டினுள் இருமைல் தூரத்தில் இன்றும் நிலைத்துள்ளது. வருடாந்த விழாவினை வேடர் சந்ததிக்குடியினரே தொடர்ந்தும் செய்துவருகின்றனர்.மறறும் அவர்கள் வணங்கி வந்த தெய்வங்களான தெற்கில் காலபைரவி, கிழக்கில் கடலாட்சி அம்மன், பரிகல வைரவ ஆலயங்களும் இருந்தன. காலவரையில் வேடர் பரம்பரை அருகியது.காடுகள் வெட்டப்பட்டுக் குடியேற்றங்கள் பெற்றன.


1930ம் ஆண்டளவில் மாமாங்கத்தின் தென்புறமானவும் தென்மேற்குப்புறமாகவும் உள்ள காடுகள் வெட்டப்பட்டு அவற்றின் ஊடாக மட்டக்களப்பு புகையிரதப்பாதை போடப்பட்டதாக அறியமுடிகிறது. இதன்பின்பே மேற்குப்புறமாகவும், தென்புறமாகவும் சேனைக்குடியேற்றங்கள் ஆரம்பமாகின. சேனைகளில் குடியேறியவர்கள் ஜீவனத்துக்காகச் சிறுபயிர்களைப் பயிரிட்டும் அண்டிய காடுகளில் விறகுகளை வெட்டியும் காட்டிலுள்ள நாவல், பாலை, ஈச்சை, காரை துவரைப் பழங்களைப் பிடுங்கி அயற்புறங்களில் விற்றும் வாழ்க்கை நடத்தினர். பின் நிலையான பயிர்களையும் தென்னை, பனை போன்றவற்றையும் கனிதூங்கும் முந்திரிகை மரங்களையும் நாட்டித்தோட்டங்களாக்கினர். எனினும் வடபறம் தவிர்ந்த ஆலயச் சூழல் கற்றைக்காடுகளாகவே காணப்பபட்டது. 1950ம் ஆண்டின் பின்னரே மாமாங்கப்பதியின் சூழலில் உள்ள காடுகளும் பற்றைக் காடுகளும் முற்றாக அழிக்கப்பட்டு குடியேற்றங்கள் குடியேற்றங்கள் பல உண்டாயின. சிறுதெருக்களும் போடப்பட்டுத் தற்போது அவை பெரிய தெருக்களாக மாற்றமடைந்துள்ளன. நகர்புறங்களிலுள்ளவர்களும் ஏனைய அயற் கிராமங்களிலுள்ளவர்களும் வந்து குடியேறி உள்ளனர்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வரலாறு!

Post by சிவா on Wed Sep 29, 2010 4:22 am

மாமாங்கக்குளம் :

(1) இக்குளம் ஓர்கால மாமங்க நதி எனவம் வழங்கியது. இன்று இந்நதியிருந்த குளம் மாத்திரம் இருந்தாலும் வங்கக்கடலில் கிழக்குக்கரையை அண்டித் திருக்கோயில் என்னும் திருப்பதியிலிருந்து திருகோணமலை என்னும் திருப்பதி வரை பாய்ந்து ஓடிய தடம் அழியவில்லை.இன்று இந்நதிப் பள்ளத்தாக்கு மணலால் மூடப்பட்டிருந்தாலும் மழைக்காலத்தில் தண்ணீர் அப்பள்ளத்தாக்கிலே பல மைல் தூரத் தேங்கிநிற்பதைக் காணலாம்.கடல் கோள்களினால் சிசைவுற்று மறைந்த இந்நதியின் சான்றாக மாமாங்கக் குளம் நிலைத்துள்ளது.


(2) ஆதியில் மாமாங்கக்குளம் அதனை அடுத்திருந்த நெய்தல் நிலநீர் நிலைகளுடன் தொடர்பு கொண்டு மாரிகாலத்தில் நதி போன்று ஓடிக் கடலுடன் கலப்பதினாற் போலும் மாமாங்க நதி எனப்பட்டது. மாமாங்கக்குளம் அனுமார் தீர்த்தம், காக்கைதீர்த்தம், பழையாறு, நற்றண்ணீர் மடு, பாலமீன்மடு, மட்டிக்கழி, ஓடையெனப்படும் கிண்ணயடிதோணா என்ற ஏழு தீர்த்தங்களுடன் (தொடர்பு கொண்டு) தொடர்ந்தும் சேர்ந்துமுள்ளது.


இவற்றிலே சில காலப்போக்கில் தூர்ந்தும் அழிந்தும் மறைந்தும் போயிருக்கலாம். ஆனால் அவை இருந்த தடங்கள் அழியவில்லை. மாமாங்கக்குளத்தில் மேற்கு (பக்கத்தில்) புறத்தில் சேர்ந்து இருப்பது அனுமார் தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது. சீதையைத்தேடி இலங்காபுரியிலுள்ள அசோக வனத்தை அடைந்த அனுமன் தனது வாலினால் எரியூட்டியபின் அணையாது பற்றிக்கொண்டிருந்த தீயை அணைப்பதற்கு மாமாங்கக்குளத்தில் மேற்குபுறத்தில் உள்ள குளத்தில் வாலைவிட்டு அமிழ்த்தி அணைத்ததாக கூறப்படுகிறது. இலங்கையினை சுட்டெரித்த அனுமன் வாலில் இருந்த பெருந்தீயணைத்த தீர்த்தம் எனவும் பாடப்பட்டுள்ளது. மற்றைய தீர்த்தங்களுக்கும் பெயர் காரணங்கள் இருந்திருக்கலாம். தற்போது அவை தெரிந்தில் ஸ்ரீ இராமபிரானுடைய பணியில் இந்தியா சென்று காலந்தாழ்த்தி இலிங்கத்துடனும் அவிமுத்தித் தீர்த்தத்துடனும் வேகமாகப் பாய்ந்து வந்த அனுமனுடைய பாதங்கள் பட்ட சுவடுகளே பள்ளங்களாகித் தீர்த்தங்களாகின என்றும் கருதப்படுகிறது.


(3) மாமாங்கக்குளம் நிறைந்த சந்தணச்சேறு கொண்டது மெல்லிய (தன்மை) பசுமை நிறமான இச்சேறு உடம்பில் வெளிப்புற நோய்களை மாற்றுந்தன்மை கொண்டது. ஆனதால் அமிர்தச்சேறு என்றும் சொல்லப்படுகிறது. பசுஞ்சந்தணம்போற் குளிர்மையாயுமிருப்பதால் சந்தணசேறு என்றும் வழங்கப்படுகிறது. குளத்தை அடுத்துள்ள நீர் நிலைகளான தோணாக்களின் அடிகளிலும் அயலில் உள்ள ஊர் கிணறுகளின் அடியிலும் இந்த அமிர்தசேற்றின் படிவுகள் உள்ள காரணத்தினால் குளத்தை அடுத்துள்ள ஊரும் அமிர்தகழி என்ற பெயர் பெற்றுள்ளதுபோலும் பாற்கடலைக் கடைந்து வெளிப்பட்ட அமிர்தத்தை மகா விஷ்ணு தேவர்களுக்கு ஈந்ததைபோன்று அவரின் அம்சமான ஸ்ரீ இராமபிரான் தனது அருட்சக்தியினால் அமிர்தத்தை இத்திருக்குளத்தில் சேர்த்துள்ளதால் இக்குளத்தீர்த்தம் புனிதமும் புதுமையும்இ வல்லமைகளையும் உடையதாக மதிக்கப்படுகிறது.


மாமாங்கக்குளச் சிறப்பு:

(4) இக்குளத்தில் உயர்ந்தசாதி வெண்சங்குகள் வந்து சேர்ந்து ஊர்கின்றன. ஓதையிடுகின்றன. பக்கங்களில் தாழைகள் பூத்துக்குலிங்கி மணம் கமழுகின்றன. வாவியின் அழகை வர்ணனை செய்யும் பூவினங்கள் நிறைந்துள்ளன. செந்தாமரை வெண்டாமரைகளும் அல்லி ஒல்லி மலர்களும் மலர்ந்து சுடர் விடுகின்றன. கருங்குகளைஇ செழுங்கழு நீர் போன்ற ஏனைய நீர்பூக்களும் பூத்துக்குலுங்குகின்றன. தூயமருக்கொழுந்தும் நறுமணம் வீசிப்பரப்பும் நீரில் மீனினங்களான கயல், ஆரல், விரால் என்பன துள்ளிப்பாய்ந்து விளையாடித்திரிகின்றன. சின்னங்சிறிய சிட்டுக்களும் வண்டினங்களும் அங்குமிங்கும் பறந்துதிரிந்து ஆர்ப்பரிக்கின்றன. கொக்கினங்களும் நாரைகளும் துள்ளிக்குதிக்கும் மீன்களைக் கௌவிப்பறக்கின்றன.


மற்றையவை தூங்குவன போல் நடிக்கின்றன.குளக்கரை மருங்குகளிளெல்லாம் கீரிப்பற்றை எனப்படும் கண்ணாச்செடிகளும் கிண்ணை, வம்மி பொன்ற மரங்களும் வளர்ந்து நிழல் பரப்புகின்றன. நாணல் எனப்படும் தூய்மை உடையதான தர்ப்பை வேறு புல்லினங்களும் அடர்ந்து செழிபுபுற வளர்ந்துள்ளன.கால வரையில் இவை வெளியாக்கப்படவேண்டும்.குளம் (30) முப்பது ஏக்கர் விஸ்தீரணமுடையதாக இருந்தும் மூன்று பக்கங்களையும் சுவீகரித்து கோயிலும் சுனையும் சேரக்குடிகளும் மருவி வாழ்கின்றன.


ஆலயச்சூழல் :

(1) ஆலயம் அமைந்த இடம் அமைதியான சூழலில் ஆல், அரசு, புன்னை, நாவல், கொக்கட்டி, குருந்தை, வில்வை முதலான மரங்கள் எங்கும் பரந்து நிழல் செய்யும் குளிர்ந்த நெய்தல் நிலப்பரப்பிலமைந்துள்ளது.தல விருட்சங்கள் போன்றும் பல குருந்தை மரங்கள் இருந்தன.தற்போது ஒரு குருந்தை மரம் மட்டும் பல்லாண்டுகளாகியும் ஒரேபடித்தாய் கோயிலின் நேர்வாசலில் அருள் பரப்பி நிற்கின்றது. அதனைக்கண்ணுறும் போது மாணிக்கவாசகசுவாமிகளுக்கு இறைவன் குருந்தை மர நிழலின் கீழிலிருந்து அருளுபதேசம் செய்த வரலாற்றினை நினைவூட்டுகின்றது.


அக்காலத்தில் கதிர்காமயாத்திரை செய்யும் அடியார்கள் குருந்தமரநிழலில் வேலை வைத்து வழிபட்டு ஆலய மடத்திலே தங்கிச்செல்வர். தொடர்ந்தும் வரும் கதிர்காம உற்சவகாலங்களுக்கு முன் நாட்டின் பல இடங்களிலுமிருந்து அடியார் கூட்டங்கள் இங்கு வந்து கூடித்தங்கிச்செல்கின்றனர்.


(2) ஆலயத்தின் வடபுறமாக உள்ள பளிங்கு போன்ற நீர்ப்பரப்பினை உடைய மாமாங்கக்குளத்தில் படிந்து வரும் தண்ணென்ற பூங்காற்றானது ஆலயச்சூழலையும் அங்கு வரும் அடியார்களையும் குளிர்மையும் அமைதியும் உறச்செய்து எந்தக்கொடிய வெயில் வேளையிலும் நிறைந்த இன்பத்தை அளித்துக்கொண்டிருக்கின்றது. இவைகளால் மல மயக்கமற்ற மனவளம் நோயில்லாத உடல் வளங்களையும் வேண்டும் அடியார்களுக்கெல்லாம் ஈந்து ஆன்ம வளம் சுரந்து நிற்கும் காமதேனுவாக இந்நாட்டில் விளங்கிக்கொண்டிருக்கிறது.


இத்தலத்தின் பழமையைக்காட்டுவதற்குவழங்கப்பட்டுவரும் கர்ணபரம்பரைக்கதைகள் பல. இராமாயணக்காலத்துக்கு முற்பட்டதாகக் காட்டுவதற்கும் இராமாயணக்காலப்பகுதியைச் சேர்ந்ததாகக் காட்டுவதற்கும் அமைவாக உள்ளன.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வரலாறு!

Post by சிவா on Wed Sep 29, 2010 4:27 am

ஆலயம் அமைந்த வரலாறு :

சிவன் தந்த வலிமை பெரிதென்று இராவணன் சீதையை கவர்ந்து வந்து அசோக வனத்தில் சிறை வைத்திருந்த காலம் பலவினைக்காளாகி இராமபாணத்தினால் பட்டளிந்து ஒழிந்த சமயம் மனமது கலங்கித்துவண்டு நின்ற ஒப்புவமையற்ற நில மங்கை சீதையின் சிறையினை விடுத்து உடன் அழைத்து வழிநடை கொண்டகாலை செல்லும் வழியில் சற்றுக் களைப்பற்றதனால் இளைப்பாற எண்ணினார். கடலிடம் சார்ந்த தூய தனியிடமாக ஆல் இஅரசு இதிருவாத்தி இநெல்லி இநாவல் இகொக்கட்டி முதலிய மரங்களை ஓரிடத்திற்கொண்டு பஞ்சவடி போன்றமைந்து கண்களுக்கும் மனசுக்கும் இதமானதாகவும் காடுகள் நிறைந்திருந்ததுமான இப்பகுதியில் ஒருபோது தங்கி இளைப்பாறினார். சிவ பூசை செய்ய விருப்பம் மேலிடச்சிவபூசை செய்வதற்குரிய சிவலிங்கம் ஒன்றைக் கொண்டு வருமாறு உடன்வந்த அனுமனைப் பணித்தார். இலிங்கம் தேடி விந்தியமலை சென்ற அனுமன் விரைந்து வருவானென்று எதிர்பார்த்திருந்தார்.அன்றைய நாளில் அது தாமதமாகவேயிருந்தது.


குறித்த காலத்தில் சிவபூசையை நிறைவேற்ற எண்ணினார் ஸ்ரீ இராமபிரான் மணலில் பிசைந்து இலிங்கமொன்றை ஆக்கினார். அதற்கு அபிஷேகம் செய்வதற்காகத் தனது கோதண்டத்தை நிலத்தில் ஊண்டிப் பதித்தார். அப்பள்ளத்திலிருந்து சுரந்து தோன்றிப்பாய்ந்த புனித நீரைப் பெற்று இலிங்கத்தை அபிஷேகம் செய்தார். பத்திர புஷ்பங்களால் அர்ச்சித்துப் பூசை செய்துமுடித்தார். அப்பள்ளம் நீர் சுரந்து நிரம்பிக் குளமாகியது. ஸ்ரீ இராமபிரானுடைய ஆணைப்படி விந்தியமலையிலி குளமாகியது. ஸ்ரீ இராமபிரானுடைய ஆணைப்படி விந்தியமலையிலிருந்து காலம் தாழ்த்தி அனுமனால் கொண்டுவரப்பட்ட இலிங்கம் இராமபிரானால் ஆக்கபட்ட திருக்குளத்தின் நடுவில் புதைத்து விடப்பட்டது. அந்தப் புண்ணிய இலிங்கத்தின் மகிமையினால் தன்னுட்படிவோர்மீது சேர்ந்துள்ள பாவங்களனைத்தையும் போக்கவல்ல திருவருட் சக்தி இத்திருக்குளத்திற்கு நிரந்தரமாகக் கிடைக்கலாயிற்று என்றும் இத்தீர்த்தத்தின் மகிமை சிலாகிக்கப்படுகிறது. காசியிலிருந்து அனுமனால் அவிமுத்தித் தீர்த்தமும் இக்குளத்தில் கலக்கப்பட்டது என்பதும் ஒரு வரலாறு.


அன்றியும் காசியிலிருந்து வந்த முனிவரொருவர் தம் கமண்டலத்திற் கொண்டுவந்த கங்கை, யமுனை, காவேரி, சரஸ்வதி, கோதாவரி, துங்கபத்திரை, பவானி, தாமிரபரணி, சேது முதலான ஒன்பது மங்கைப் பெண்களின் பெயரமைந்த தீரத்தங்களையும் இத்திருக்குளத்தில் கலந்து நீராடி இராமலிங்கத்தை வழிபட்டுப் பெரும் பயன்பெற்றார் என்றும் மங்கை நதிகளின் தீர்த்தங்கள் கலக்கப்பட்ட திருக்குளமானதால் மாமங்கைத் தீர்த்தமென்று பெயர் எனவும் சொல்லப்படுகிறது.


அவிமுத்தித் தீர்த்தம் என்பது வடமொழிச் சொல். தன்னிடை மூழ்கி எழுந்தார்க்கு நற்பலன் அளித்தலில் மாறாகபெருஞ் சிறப்புடையது. தீவினை பயன்களை நீக்கும் ஆற்றல் பெற்றுள்ளது இத்திருக்குளம.


அனுமனால் காலமந்தாமதித்துக் கொண்டுவரப்பட்ட சிவலிங்கத்தை வைப்பதற்காக மண்ணினால் செய்துவைக்கப்பட்ட இலிங்கத்தைப் பெயர்த்தெடுக்க அனுமன் முயன்றபோது அவ்விலிங்கம் பெயர்கப்படாமல் இருந்ததாகவும் பின்பு ஏழுவிதமான நீர் நிலத்தில தோண்டியெடுத்து அவ்விலிங்கத்தைப் பூசித்து அயோத்தி சென்றதாகவும் அனுமனால் தோண்டபட்ட இடங்களே மாமாங்கக்குளத்தை அண்டியிருக்கும் சிறுசிறு குளங்கள் என்றும் ஒரு வரலாறு கூறுகின்றது.இலிங்கம் பற்றிய வரலாறு :

இத்தலத்தில் அமைந்துள்ள இலிங்கம் காத்தல் கடவுளாகிய மகா விஷ்ணுவின் அம்சமான ஸ்ரீ இராமபிரானின் கைவண்ணத்தினால் உருவாக்கப்பட்டு அவரால் அபிNஷகம் பண்ணி வழிபாடு செய்யப்பட்டது. நீண்டகால இடைவெளிக்குப் பின் இலிங்கம் அமைந்துள்ள இடம் சோலைக்காடுகளாலும், பற்றைக்காடுகளாலும் மரவேர்களாலும் மூடி வளர்ந்து மறைந்திருந்தது. காடுகள் நிறைந்து அப்பகுதிகளில் வாழ்ந்த வேடன் ஒருவன் வேட்டையாடிக் களைப்படைந்து ஓர் ஆலமர நிழலில் தனது தனது வில், அம்பு, கோடரி முதலியவற்றை வைத்துச் சிறிது துயின்றான்.


அப்போது இலிங்கம் பற்றி தரிசனம் ஒன்று கண்டான். தான் கண்ட கனவின்படி வில்லைச்சார்த்தி வைத்திருந்த முள்ளாவ மரத்தைச் சுற்றிக் கிளறினான். வேர்களையும் பற்றைகளையும் வெட்டி ஒதுக்கினான். தான் கனவிற் கண்ட இலிங்கம் அங்கே காணப்பட்டது.தன் இனத்தவர்களைக் கூவி அழைத்துக் கூட்டிக் காட்டினான். எல்லோரும் சேர்ந்து அவ்விடத்தில் கொத்துக்குளைப் பந்தலிட்டு வழிபாடாற்றினர். கொடிய வன விலங்குகளின் கூட்டத்தோடு கூடிவாழ்ந்த வேடுவரின் தெய்வமுமாகியது.மற்றொரு வரலாறு கூறுவது :

ஸ்ரீ இராமபிரானால் வழிபாடு செய்யப்பட்ட இலிங்கமானது காலப்போக்கில் அடர்ந்த சோலைக்காடுகளாலும் இபற்றைக்காடுகளாலும் சூழ்ந்து மறைக்கப்பட்டிருந்தது. ஆலயமின்றி அமர்ந்தகாலை சோலைள் சூழ சுகமுடனிருந்தது. விந்தனைக் காடுகளில் வாழ்ந்த வேடர்கள் தேன் எடுப்பதற்காகவும், வேட்டையாடவும் இப்பகுதிக்காடுகளிற்கு வருவர். தேன் எடுக்கவந்த வேடனொருவன் நாவல் மரமொன்றில் தேன்கூடு இருப்பதைக் கண்டான்.அத்தேனை எடுக்க நாவல் மரத்தை கோடரியால் வெட்டினான். வெட்டும்போது கோடரி தவறி இலிங்கமிருந்த இடத்தில் சிதறி விழுந்தது. அதனைக்கவனியாது தேனை எடுத்துக்கொண்டு மரத்தடியில் இளைப்பாறினான்.


அவன் சற்றுக்கண்ணயரும்போது கனவில் சிவலங்கப்பெருமான் தோன்றி உன்னுடைய கோடரியால் அடியுண்ட எனது உடல் வலி எடுக்கிறது.அவ்வலி நீங்க சுடுதண்ணீர் வைத்து வார்க்கும்படி கூறியதாகவும் உணர்ந்தான்.வேடன் விழித்தெழிந்து ஓடிச்சென்று பார்க்கும் போது இலிங்கமொன்று இருப்பதையும் அதிலே கோடரி பட்ட (தடம்) அடையாளம் தெரிவதையும் கண்டான். மெய்தானரும்பி விதிர்விதிக்குக் கைதான தலை வைத்துக்கண்ணீர் ததும்பி உள்ளம் வெதும்பி பயபக்தியுடன் வழிபட்டான். பக்கங்களில் ஓடிச் சுடுநீர் வைத்து முழுக்காட்டினான்.பத்திர புஷ்பங்களைச் சொரிந்து வணங்கினான். தன் இனத்தவர்களை அழைத்து வந்து காட்டிச் செடி கொடி பற்றைகளை வெட்டி வெளியாக்கிப் பந்தரமைத்து இலைகுழைகளால் வேய்ந்து வழிபாடாற்றி வந்தான். காலவரையில் வேடர் குடியேற்றங்கள் அருகியது.


கொடி செடிகளும், பற்றைக்காடுகளும் மண்டின. தொட்டம் தொட்டமாக வாழ்ந்த மாடுகள் மேய்க்கும் இடையர்கள் தங்கள் கால்நடைகளைத் தண்ணீர் காட்டக் குளத்திற்கு வருவர். ஒருநாள் அப்படி வரும் ஒரு இடையனின் காலில் ஏதோ ஒன்று இடறுபட்டது. நன்றாகப் பார்த்தபோது அது ஒரு இலிங்கமாக இருப்பதைக் கண்டு குளைகளால் மூடி நீர்வார்த்து வணங்கிவந்தான்.இதை அறிந்து அயலில் வசித்த கோட்டமுனையில் உள்ளவர்களும், அமிர்தகழியில் வசித்தவர்களும் சேர்ந்து (களிமண்ணினால்) இவ்விடத்தில் ஓர் ஆலயத்தை அமைத்தனர். அக்கால வேடர் பரம்பரையிலுள்ளவர்களாகக் கருதப்படும். மாமாங்கன் பிள்ளையான் ஆகிய இருவரிடமும் கோட்டமுனையில் வசித்த வேளாளர் குலத்தினரும் அமிர்தகழியில் வசித்த குருகுல வம்சத்தினரும் சேர்ந்து செய்துகொண்ட வாய்மூல ஒப்புதலின்படி மாமாங்கன் பிள்ளையான் என்பதைச் சேர்த்து மாமாங்கப்பிள்ளையார் எனப் பெயர் வைக்கப்பட்டு இக்கோவில் இருசமூகத்தவர்களாலும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலை ஆதரித்த மெய்யடியார்களில் ஒருவராகிய பரிசாரியார் கதிர்காமர் என்பவருக்கு மாமாங்கேஸ்வரப் பெருமான் கனவில் தோன்றி மேற்படி ஆண்டு மாசிமகத்தன்று தன்னை மாமாங்கப்பிள்ளையாராக ஆதரிக்கும்படி கட்டளையிட்டருளின் எனவும் பரம்பரையாகப் பேசப்பட்டு வந்துள்ளது.


1837ம் ஆண்டு மட்டக்களப்பு நில வரைபடத்தில் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயம் ஸ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி, கொத்துக்குளத்து மாரியம்மன் கோயில், திமிலை தீவு கிருஷ்ணன் கோயில் என்பன பதியப்பட்டுள்ளது. ஆலயங்கள் களிமண்ணினால் கட்டப்பட்டிருந்தன.


1880ம் ஆண்டுப் பரம்பரையினரைக்கொண்டே ஆலய நிர்வாகம் நடைபெறுகிறது. 1888ம் ஆண்டு பங்குனி 19ம் திகதி அம்பிகைபாகப்பிள்ளையவர்களால் எழுதப்பட்ட உறுதிப்படி கோட்டமுனை வேளாளர் குலத்தைச்சேர்ந்த பரிசாரியார் கதிர்காமர், பொ.த.சீனித்தம்பி, அவர் மைத்துனர் நெல்லிநாதப்பிள்ளைக்கும், குருகுல வம்சத்தவர் அமிர்தகழி ஆ.முத்துப்பிள்ளை சின்னத்தம்பி, கணபதிப்பிள்ளை குடும்பத்தவர்களுக்கும் உள்ள கோயிலாக உரிமையாக்கப்பட்டிருந்தது.


கொடியேற்றம் நடைபெறும்போது கூறும் ஆசீர்வாதத்தில் மட்டக்களப்பு தேசம் முழுவதும் எல்லைகள் கட்டப்படுத்தி சைவமக்கட்கும் ஆசீர்வாதம் சொல்லப்படுகிறது.


1888இல் பெரிய போரதீவுக் குழந்தைவேல் ஆச்சாரியும், காளிக்குட்டி ஆச்சாரியும் சேர்ந்து இக்கோயில் கட்டியதற்கான ஒப்பந்தக் குறிப்புகளுமுண்டு.

மூலஸ்தானம் கட்டும்போது இச் சிவலிங்கமூர்த்தியை நீர் மட்டத்தின் கீழும் தோண்டிப்பார்த்து அடியைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தெய்வ மேன்மையை உணர்ந்து ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.


ஆரம்ப காலத்தில் சிவலிங்க மூர்த்தியாகவே வழிபாடுகள் நடைபெற்றன. ஆலய நிர்வாகத்தினரின் நன்மை கருதியும், பூசகர்களின் நன்மை கருதியும் பிள்ளையார் வழிபாடாக மாற்றப்பட்டது. பொதுமக்கள் மாமாங்கேஸ்வராகவும, மாமாங்கப்பிள்ளையாராகவும் வழிபடுகின்றனர்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வரலாறு!

Post by சிவா on Wed Sep 29, 2010 4:29 am

ஆடி அமாவாசை :

ஆடி அமாவாசை என்று சொன்னாலே மட்டக்களப்புத் தமிழகத்து மக்கள் அனைவரினதும் கருத்திலும் நினைப்பிலும் ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் திருத்தலத்தையே முதலில் நினைவிற்குக் கொண்டுவரும்.அவ்வளவுதூரம் ஆடி அமாவாசைச் தீர்த்தச்சிறப்பிற்குப் பேர்போன தலமாக இப்பகுதியில் விளங்கும் பெருமை இதற்கு உண்டு. மட்டக்களப்பு மாநிலத்தின் சகல பகுதிகளிலுமிருந்து ஏராளமான மக்கள் ஒருமித்துக்கூடுமிடமாகவும் உள்ளது.மக்கள் பிதிர்க்கடன் கழிக்க ஆடி அமாவாசைத் தினத்திற்கு முன்கூட்டியே வந்து சேருகின்ற ஆடி அமாவாசைத் தினம் சூரியனும் சந்திரனும் சேர்ந்து ஒரே நாளில் கூடும் காலம்..பிதுர்க்காரகன் சூரியன் மாதுர்க்காரகன் சந்திரன்.இதனால் அமாவாசை பூரணைக் காலங்களில் பிதா மாதாக்களை விரதமாகக் கொள்வர்.

தேவகாரக் கணக்கின்படி ஆடி அமாவாசைத் தினம் சாயரட்சை ஆகும்.இக்காலம் பிதுர்தேவதைகள் வழிபாட்டிற்குரிய உகந்த காலம் ஆகும். அக்காலத்தில் விசேட புண்ணிய தீர்த்தங்களை நாடித் தீர்த்தமாடி ஆலய தரிசனம், பிதுர்தர்ப்பணம் முதலியன செய்து இயன்ற அளவு அன்னதானம் வழங்கி பிதிர்க்கடன்களை நிறைவேற்றவேண்டும். இதனால் இறந்த பிதா மாதாக்கள் சந்ததியினர் நற்கதி பெறுவரெனப் புராணங்கள் கூறுகின்றன.புரட்டாதி மாத மகாளய பச்சகாலம் முழுவதும் பிதிர்க்கடன் கழிக்க உகந்த காலம்.அந்த முழுப்பலனையும் ஆடி அமாவாசையிலன்று விரதமிருந்து, தீர்த்தமாடி, ஆலய தரிசனம், பிதுர்தர்ப்பணம் என்பன செய்வதால் பெறலாம் என்றும் இறந்தவர்களின் சாதகஓலைகளை தீர்த்தத்தில் கிழித்துப் போட்டு விடுவதனால் மோட்ச சித்திகளையடைவரென்றும் அதை மாமாங்கத்தீர்த்தக்குளத்தில் அன்று கிழித்துப்போடுகின்றனர்.

இவை மட்டுமன்றிச் சந்நியாசிகள் துறவு பூணும்போதும் முடிவில் தமக்குத்தாமே இறுதிக்கடன்களை இத்தீர்த்தத்தில் நீராடி நிறைவேற்றுகின்றனர். ஆடிஅமாவாசைத் தினத்தில் இக்குளத்தில் தீர்த்தமாடுவதினால் பிற்சந்ததி பெறாதோரும் சந்ததி பெறுவர். ஆறு அல்லது பன்னிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்தும் தீர்த்தமாடுவோர் வேண்டிய சித்திகளையும் பெறுகின்றனர் எனக்கூறுகின்றனர் இவ்வாறு இம்மைக்கும் மறுமைக்கும் நற்பயன் அழிக்கவல்ல திருக்குளம் இப்பகுதியிலுள்ள சைவ மக்களால் மட்டுமன்றி ஏனைய சமூகத்தவராலும் மிக்க பரிசுத்தமானதொன்றாக மதிக்கப்படுகிறது.

தல வரலாறும் பெருமையும் என்ற தலைப்பில் வெளிவந்தவை :

இலங்கையைப் பல திக்கிலுமிருந்து ஆண்ட அரசர்கள் ஆடகசவுந்தரியை இலங்கை முழுவதற்கும் ஏக சக்கராதிபதியாக்கினர். ஆடகசவுந்தரியின் பிதாவாகிய அசோகசுந்தரன் அசோககிரியை அரசுசெய்து பரமபதம் அடையும் காலம் வரத்தனது புத்திரி இலங்கையை அரசுபுரிவதை அறிந்து ஆடகசவுந்தரிக்கு வேண்டிய திரவியங்களையனுப்பிவிட்டுப் பரமபதம் அடைந்தார. ஆடகசவுந்தரியும் தந்தையனுப்பிய திரவியங்களைப்பெற்று ஆழும் காலம் ஓரிரவு சயனிக்கும் பொழுது இராமமூர்த்திதெரிசனப் பிரசன்னராகி ஆடகசவுந்தரியே நீதிரேதயுகமுடிவில் இலங்கையை அரசுபுரிந்த இராவணேஸ்வரனுக்குப் புத்திரியாகப்பிறக்க இராவணேஸ்வரன் சோதிடரை அழைத்து உனது பிறவி நோக்கைப் பார்வையிட்டான்.

சோதிடர் இந்தப்பிள்ளை இராச்சியத்திற்கு ஆகாது என உனது பிதாவாகிய இராவணேஸ்வரன் உன்னைப் பேழையிலடைத்து ஆழியில் விட்டான். அந்தப்பேழை வடகடல் மருங்காய்ச் சனகருடைய யாசஞ்செய்யுமிடமாகிய கடலருகிலடைந்தது.சனங்கள் எடுத்து சனகரிடம் கொடுத்தனர்.அவர் வளர்த்துப் பருவகாலத்தில் அயோத்தியை பரிபாலிக்கும் தசரதன் மகன் ஸ்ரீ இராமனுக்குப் பாணிக்கிரகணம் செய்துவைத்தான். புpன் தந்தையின் கட்டளைப்படி பதினான்கு ஆண்டுகள் வனத்தரசனாகித் தம்பி இலட்சுமணனுடம் உன்னையும் கூட்டிக்கொண்டு போயிருந்தான்.அக்கால இராவணேஸ்வரன் தங்கையாகிய சூர்ப்பனகி திருச்சிராவில் வாசஞ் செய்துகொண்டிருந்தாள். இராமர் கங்கை நதியில் தீர்த்தமாடவர வரும் போது அவரைக்கண்டு மோகங்கொள்ள இலட்சுமணன் காதுகளையும் மூக்கையும் அரிந்து விட்டான. சூர்ப்பனகி இரத்தம் தோய்ந்த முகத்துடன் இராவணேஸ்வரனிடம் சென்று முறையிட்டாள். அவன் உன்னை மாயமாக கவர்ந்து கொண்டு சென்று இலங்கையில் சிறைவைத்தான் ஸ்ரீ இராமர் அவனைக்கொன்று அவன் தம்பியாகிய விபூஷணனுக்குப் பட்டம் கட்டி அயோத்திக்குச் செல்லவேண்டியிருந்ததால் இடையில் ஓர் இடத்தில் அனுமனை ஏவி காசியிலுள்ள கங்கையில் அவிமுத்தித் தீர்த்தமெடுத்து ஒருவாவியிற்கலந்து இருவரும் ஸ்நானஞ் செய்து பாவத்தை நீக்கி அயோத்திக்குப்போய் வாழ்ந்தனர் வாழுங்காலம் குசன் பிறந்து வால்மீகரால் உபதேசம் அளிப்பித்துப் பரமபதம் அடைந்தாய்.அதேபோல இச்செனனமும் எடுத்தாய். இப்போது காசி அபிமுத்தி நீர் கலந்த நதி உன்னுடைய ஆச்சிரமத்திலிருக்கிறது.

அந்நதியை அறியவேண்டில் அதில் பசுஞ் சந்தணச்சேறு நிறைந்திருக்கும்.குஷ்டரோகிகள் ஸ்ஞானஞ் செய்தால் உடனே நோய் நீங்கி விடும் என்று சொல்லி மறைந்தார். அரசியும் விழித்தெழுந்து அந்நதியை ஆராய்ந்து கண்டறிந்து பார்க்கும் போது காசி அபிமுத்தித் தீர்த்தம் கலந்துள்ள நதி மாமாங்க குளமே என அறிந்து இங்கு வந்து தீர்த்தமாடி மாமங்கை நதி என நாமஞ்சாற்றினாள. ஆண்டாண்டு தோறும் மாமாங்ககுளத்தில் தீர்த்தமெடுத்துக் கொண்டு திருக்கோயில் சமுத்திரத்திலிட்டுக் கலந்து ஆடித்திங்கள் அமாவாசையன்று தீர்த்தமாடிக் கொண்டாடிவந்தாள்.

ஆடகசவுந்தரி நூற்றிப்பதினேழு வருடம் வரை உன்னரசு கிரியை ஆண்டு வந்தாள் என்றும் அக்காலம் மட்டக்களப்பும் அவளின் ஆட்சியின் கீழ் இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆடகசவுந்தரியின் மற்றொரு வரலாறு :

மூன்று முலைகளையுடையவரும் 117 ஆண்டுகள் கன்னிப் பருவம் எய்தாமல் இளம் பெண்ணாகவே இருந்தவளுமாகிய ஆடகசவுந்தரி (ஆடகம் - பொன் சவுந்தரி – அழகி) மட்டக்களப்பின் தென்கொடியிலுள்ள உன்னரசு கிரியிலிருந்து அதிபதியாக கிழக்கிலங்கையின் பல பகுதிகளையும் ஆண்டு வந்தாள்.இங்குள்ள குளத்தின் மகிமையைக் கேள்வியுற்றாள்.தனது பரிவாரங்களுடன் இக்குளத்திற்கு வந்தாள்.ஆலயத்தை வலம்வந்து வணங்கினாள். இத்திருக்குளத்தில் பயபக்தியோடு மூழ்கி எழுந்தாள்.தனது மூன்றாவது முலைத்தடம் நீங்கியதோடு இளமையும் கன்னித்தன்மையும் பேரழகும் பெற்றாள்.அதனால் மாமங்கைக்குளம் என அவளால் பெயரிடப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

விஷ்ணுமதத்தில்அதிகபற்றுடையவளும் இராமமந்திரவலிமையுடையவளுமாகிய ஆடகசவுந்தரிக்கு ஒருநாள் கனவிடைஇராமன் தோன்றி அக்குளம் பற்றிக் கூறியதாக மட்டக்களப்பு மான்மியம் குறிப்படுவது.

இராவணணைச் சங்காரஞ்செய்து மீண்டபின் தானும் சீதையும் அயோத்திக்குச் செல்லும் வழியில் அனுமனை ஏவிக்காசியிலிருந்து அவிமுத்தித் தீர்த்தமெடுத்து ஒரு வாவியில் கலந்து இருவரும் நீராடிப் பாவத்தைப்போக்கி அயோத்திக்குச் சென்று வாழும் குகன் பிறந்து வால்மீகு முனிவரால் உபதேசம் பெற்றான்.சீதையாகிய நீ பரபதமடைந்தாய். அதேபோல இச்செனனமும் எடுத்தாய்.இப்Nபுhது காசி அவிமுத்தித் தீர்த்தம் கலந்தகுளம் உன்னுடைய ஆச்சிரமத்திலிருக்கிறது.அந்நதியைக் கண்டறியவேண்டில் அதில் பசுச்சந்தணச்சேறும் சரவணமும் (தர்ப்பை) நிறைந்திருக்கும் தோய்வோரின் ஜென்ம வினை அகலும் எனக் கூறிமறைந்தார்.அரசியும் கண்விழித்தெழுந்து அந்நதியை ஆராய்து பார்க்கும்போது அது மட்டக்களப்பிலுள்ள மாமாங்கக்குளமே அவிமுத்தித் தீர்த்தம் கலந்தது என அறிந்தாள்.இங்குவந்து நீராடி மாமங்கை நதி என நாமஞ்சாற்றினாள் எனவும் ஆண்டாண்டு தோறும் தீர்த்தம் எடுத்துக்கொண்டுபோய் திருக்கோவில் சமுத்திரத்திலிட்டுக் கலந்து ஆடித்திங்கள் அமாவாசைத்தினத்தன்று தீர்த்தமாடித் தன் ஜென்மவினையினின்றும் நீங்கினாள் என்றும் கூறப்படுகிறது.

ஆடகசவுந்தரி வாழ்ந்த 2ம் 3ம் நூற்றாண்டு காலத்தில் சீரும் சிறப்பும் பெரும் புகழுடையதாக இருந்தது. ஆடகசவுந்தரி என்று மட்டக்களப்பில் புகழப்படும் பேரழகியாகிய இளவரசி கிழக்கிலங்கையையாண்ட மும்முலை அரக்கி என்றும் வேறுபகுதிகளில் குறிப்படுகிறாள். மற்றொரு வரலாற்றின்படி ஆடகசவுந்தரிக்குப் பிறக்கும்போதே இயற்கையாகக் கழுத்தில் ஒரு மச்சம் இருந்ததாகவும் பெண்ணாக இருந்தபோதும் ஆண்களுக்குரியதன்மைகள் காணப்பட்டதாகவும் பெண்களுக்குரிய நாணம் அச்சம் முதலிய குணங்கள் காணப்படவில்லை எனவும் அறியமுடிகிறது.ஒரு சமயம் குளக்கோட்டு மகாராசா கிழக்கிலே வந்து ஆலயம் அமைக்கத்தொடங்கியுள்ளான் என்பதைக் கேள்வியுற்றாள்.அவனை விரட்டத் படைகளுடன் வந்து குளக்கரை வடபுறமாகக் கூடாரமடித்து இளைப்பாறினாள்.தோழிகளுடன் சேர்ந்து குளத்தில் நீராடினாள்.அவள் கழுத்திலிருந்த மச்சம் மாயமாக மறைந்தது.அவளிடமிருந்த ஆண்தன்மைகள் மாறிப் பெண்களுக்குரிய இயல்புகள் யாவும் தானாக வந்தடைந்தன.உடனே அவள் தோழியருடன்ஆலயத்தை அடைந்து வணங்கி இவ்வதிசய நிகழ்வுகளை எண்ணி புளகாங்கிதமடைந்தாள்.இக்கதைகளின் உண்மைகள் எவ்வளவு தூரம் இருந்தபோதும் இத்தலத்தினதும் மூர்த்தியினதும் தீர்த்தத்தினதும் மகிமையும் அக்காலத்திலிருந்தே போற்றி வரப்பட்டுள்ளது.

இதை விளக்கும் பாடலொன்று

மட்டுநகர் மாநிலத்தை அரசுசெய்த
மாதரசான் கழுத்தினிலே
இருந்த மச்சம் சட்டெனவே மாற்றிய
நற்றீத்தங் கண்டேன்
சங்கரனார் சுயம்பு லிங்கக்காட்சி கண்டேன்.
எனவும் போற்றிப் புகழப்படுகிறது.

ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய நிர்வாகம் :

கோட்டமுனைப்பகுதி வேளாளர் பரம்மரையினரும் (1880ம் ஆண்டு) அமிர்தகழிப்பகுதி ஏழூர் குருகுல வம்சத்தவர்களுமே ஆலய நிர்வாகத்திற்கு உரிமையடையவர்களாவர். மூன்று வருடங்களுக்கொருமுறை இருபகுதியாரிலிருந்தும் பிரதமவண்ணக்கர் ஒருவரும் உதவிவண்ணக்கர் ஒருவருமாக நால்வர் தெரிவுசெய்யப்படுவர் தெரிவுகள் போட்டிமுறையிலும் போட்டியில்லாமலும் நடைபெறும். கணக்காய்வாளர்கள் இருபகுதியாரிலிருந்தும் வருடத்திற்கொருமுறை இருவர் தெரிவுசெய்யப்படுவர். இவ்விருவருமே ஆலய நிர்வாகங்களை நடத்திவருகின்றனர்.

http://www.lakapps.lk/


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வரலாறு!

Post by ப்ரியா on Wed Sep 29, 2010 8:47 am

அருமையான பதிவு அண்ணா .....

ஆடி அமாவாசைக்கு பக்தர் வெள்ளத்தால் நிரம்பி வழியும் ....அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயம் ..

இந்த ஆலயத்தின் பெருமைகளைப் பற்றி இந்திய பாடகர்கள் பாடிய அருமையான தொகுப்பு உள்ளது அண்ணா .( s .P பாலா அண்ணா ,உன்னி கிருஷ்ணன் , மற்றும் பலர் )..விரைவில் பதிவிடுகின்றேன் அண்ணா ..

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 3394
இணைந்தது : 25/02/2010
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வரலாறு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை