ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ராஜா

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

குளுகுளு ஏசி அறையில் “”தடதட” பீரங்கி பயிற்சி !

View previous topic View next topic Go down

குளுகுளு ஏசி அறையில் “”தடதட” பீரங்கி பயிற்சி !

Post by கார்த்திக் on Mon Sep 13, 2010 9:49 am




காடு, மேடு, மலை, பள்ளம், பாலைவனம் என, இந்திய எல்லைப் பகுதியில், 70 கி.மீ., வேகத்தில், “தடதட’வெனச் சென்று, எதிராளிகளை சுட்டுத் தள்ளும் பீரங்கி பயிற்சி இங்கு அளிக்கப்படுகிறது; எதிராளி கள் யாரும் இல்லாமலேயே, அதுவும், “குளுகுளு ஏசி’ அறையில். அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா?
ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தான் ஆரம்பத்தில் இந்திய ராணு வத்திற்கு தேவையான பீரங்கிகள் வாங்கப்பட்டன. பின், வெளிநாட்டு தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவிலேயே பீரங்கிகள் தயாரிக்கப்பட்டது. தற்போது, முழுக்க, முழுக்க இந்திய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, பீரங்கிகளை இந்திய பாதுகாப்புத் துறை தயாரித்து வருகிறது. இந்திய ராணுவத்தின் ஏகோபித்த வரவேற்பை யும், நம்பிக்கையையும் பெற்ற அர்ஜூன் பீரங்கிகள் ஆவடி, போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (சி.வி.ஆர்.டி.இ.,) வடிவமைத்துக் கொடுத்தது என்பது தமிழகத் திற்கு கிடைத்த பெருமை. இதற்கு, மத்திய அரசின் 2009ம் ஆண்டிற்கான, “சிலிக்கான் விருது’ கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சாதனையைத் தொடர்ந்து, மேலும் ஒரு சரித்திரம் படைத்துள்ளது சி.வி.ஆர்.டி.இ., இந்தியாவிலேயே, ஏன், உலகிலேயே, முதல் முறையாக, “சிமுலேட்டர்’ என்ற, “செயல்பாட்டுடன் கூடிய நகல் சாதன பயிற்சி மையம்!’ தற்போது இங்கு அமைக்கப் பட்டுள்ளது. பீரங்கி இயக்கத்தை நேரடியாக கற்பதை விடுத்து, ஏன் இந்த நகல் பயிற்சி மையம்? இதற்கான, “ஐடியா’ எங்கிருந்து கிடைத்தது? இதனால் என்ன பயன் போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறார், “சிமுலேட்டர்’ புராஜக்ட் குழு மேலாளரான, விஞ்ஞானி செண்பக மூர்த்தி… பீரங்கிகளை இயக்குவதற்கு ராணுவ வீரர்கள் பயிற்சி பெறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. எளிதாகவும், விரைவாகவும் பயிற்சி பெற, “சிமுலேட்டர்’ சாதனம் வடிவமைத்து கொடுக்க முடியுமா…’ என, ராணுவத்தினர் எங்களிடம் கேட்டனர். நாங்கள் அதை சவாலாக எடுத்துக் கொண்டு, 1998ம் ஆண்டு முதல் இதற்கான பணியில் இறங்கினோம். அதில் வெற்றி பெற்று, பீரங்கி சுடுபவர்களுக்கான (கன்னர்) “சிமுலேட்டர்’ 2002ம் ஆண்டு செய்து கொடுத்தோம். அதைப் பார்த்து, திருப்தியடைந்து, மேலும் இரண்டு, “சிமுலேட்டர்’ ஆர்டர் கொடுத்தனர். அதுவும், வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் அமைத்துத்தர வேண்டினர். அதையும் சவாலாக எடுத்து, “மினியேச்சர்’ வடிவில், வடிவமைத்து, 2009ல் டெலிவரி செய்தோம். அதன் பின்னர் தான், “சிமுலேட்டர்’ பயிற்சி மையத்தை அமைத்துத்தர ராணுவத்தினர் கேட்டுக் கொண்டனர். விஞ்ஞானி சுவாமிராஜ் தலைமையில் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர், இரவு, பகலாக செயல்பட்டு, இப்பயிற்சி மையத்தை வெற்றிகரமாக முடித்துள்ளோம் என்றார் செண்பகமூர்த்தி. முழுக்க, முழுக்க குளிரூட்டப்பட்ட அறையில், மூன்று ஓட்டுநர், மூன்று, “கன்னர்’ (சுடுபவர்) என, மொத்தம் ஆறு, “சிமுலேட்டர்கள்’ உள்ளன. தனித்தனியாகவும், ஜோடியாகவும் இவற்றில் பயிற்சி பெற முடியும். இங்கு அளிக்கப்படும் பயற்சியின் முக்கிய அம்சம் தான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டுள்ளது. மேலும், அதிகாலை, நள்ளிரவு, பனி, மழை, மோசமான வானிலை, வழியில் உள்ள தடைகள், சமநிலையற்ற தரைகளிலும் பீரங்கிகளை ஓட்டும் அனுபவம், இந்த “சிமுலேட்டரில்’ கிடைக்குமாம். பீரங்கியின் மேல்புற மூடியை திறந்து வைத்து, உள்ளேயுள்ள திரையில் தெரியும் காட்சி மூலம், ஓட்டுநர் எவ்வாறு பீரங்கியை இயக்குவது; நீரில் ஓட்டுவது போன்ற பயிற்சியும் கொடுக்கப்படும். இந்த ஆறு, “சிமுலேட்டர்’களும் மின்சார நகரும் சாதனத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளதால், உண்மையில் நிகழ்வது போன்ற அசைவுகள் மற்றும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளிருந்தபடியே பீரங்கி ஓட்டுநர் பயிற்சி பெறுபவர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6467
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: குளுகுளு ஏசி அறையில் “”தடதட” பீரங்கி பயிற்சி !

Post by ப்ரியா on Mon Sep 13, 2010 10:01 am

நல்ல முயற்சி ... புன்னகை புன்னகை
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: குளுகுளு ஏசி அறையில் “”தடதட” பீரங்கி பயிற்சி !

Post by புவனா on Mon Sep 13, 2010 10:07 am

நன்றி நன்றி நன்றி
avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3339
மதிப்பீடுகள் : 78

View user profile

Back to top Go down

Re: குளுகுளு ஏசி அறையில் “”தடதட” பீரங்கி பயிற்சி !

Post by சிவா on Mon Sep 13, 2010 10:54 am

இதுபோல் குளு குளு ஏசி அறையில் பயிற்சி எடுத்துவிட்டு, யுத்தம் என்று வரும்பொழுது எதிரியை நேரில் பார்த்ததும் பயந்து ஓடிவிட வேண்டியதுதான்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குளுகுளு ஏசி அறையில் “”தடதட” பீரங்கி பயிற்சி !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum