புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் சீமான் “தேச விரோதி” ஆகிறார்: புரட்சிப்பெரியார் முழக்கம் Poll_c10மீண்டும் சீமான் “தேச விரோதி” ஆகிறார்: புரட்சிப்பெரியார் முழக்கம் Poll_m10மீண்டும் சீமான் “தேச விரோதி” ஆகிறார்: புரட்சிப்பெரியார் முழக்கம் Poll_c10 
12 Posts - 86%
ஜாஹீதாபானு
மீண்டும் சீமான் “தேச விரோதி” ஆகிறார்: புரட்சிப்பெரியார் முழக்கம் Poll_c10மீண்டும் சீமான் “தேச விரோதி” ஆகிறார்: புரட்சிப்பெரியார் முழக்கம் Poll_m10மீண்டும் சீமான் “தேச விரோதி” ஆகிறார்: புரட்சிப்பெரியார் முழக்கம் Poll_c10 
1 Post - 7%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீண்டும் சீமான் “தேச விரோதி” ஆகிறார்: புரட்சிப்பெரியார் முழக்கம் Poll_c10மீண்டும் சீமான் “தேச விரோதி” ஆகிறார்: புரட்சிப்பெரியார் முழக்கம் Poll_m10மீண்டும் சீமான் “தேச விரோதி” ஆகிறார்: புரட்சிப்பெரியார் முழக்கம் Poll_c10 
130 Posts - 50%

95 Posts - 37%
mohamed nizamudeen
மீண்டும் சீமான் “தேச விரோதி” ஆகிறார்: புரட்சிப்பெரியார் முழக்கம் Poll_c10மீண்டும் சீமான் “தேச விரோதி” ஆகிறார்: புரட்சிப்பெரியார் முழக்கம் Poll_m10மீண்டும் சீமான் “தேச விரோதி” ஆகிறார்: புரட்சிப்பெரியார் முழக்கம் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree
மீண்டும் சீமான் “தேச விரோதி” ஆகிறார்: புரட்சிப்பெரியார் முழக்கம் Poll_c10மீண்டும் சீமான் “தேச விரோதி” ஆகிறார்: புரட்சிப்பெரியார் முழக்கம் Poll_m10மீண்டும் சீமான் “தேச விரோதி” ஆகிறார்: புரட்சிப்பெரியார் முழக்கம் Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் சீமான் “தேச விரோதி” ஆகிறார்: புரட்சிப்பெரியார் முழக்கம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 22, 2010 10:15 am

சீமான் என்ற தனிமனிதருக்கு எதிரான அடக்குமுறையாகப் பார்க்காமல், தமிழினத்தின் உரிமைக்கு குரல் கொடுப்போருக்கு எதிரான அச்சுறுத்தலாகவே இதைக் கருத வேண்டும். இந்த சட்டத்துக்கு எதிரான கண்டனங்கள் - இயக்கங்கள் வெடித்துக் கிளம்ப வேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகத்தின் வார ஏடான புரட்சிப்பெரியார் முழக்கம் தலையங்கம் எழுதியுள்ளது.
மீண்டும் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் மீது, தேசியப் பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. தமிழக மீனவர்களை அடித்துக் கொல்வது; தாக்குவது; துப்பாக்கியால் சுடுவது; மீன் வலைகளை நாசப்படுத்துவது என்று சிங்களக் கப்பல்படையின் அட்டூழியம் தொடர்கதையாகவே இருந்தாலும் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், உயிரைப் பலி கொடுத்தும், தடுத்து நிறுத்த முடியாத தி.மு.க. ஆட்சி, இதைத் தட்டிக் கேட்பவர்களை ‘தேசத்தின் விரோதிகள்’ என்று குற்றம்சாட்டுகிறது. ஓராண்டுக்கு வெளியே வர முடியாத தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை கைகளில் தூக்கிக் கொண்டு, கோரத் தாண்டவமாடுகிறது.

கடந்த காலங்களில் பார்ப்பன முதல்வர் ஜெயலலிதா, இதேபோல் ‘பொடா’ சட்டத்தைப் பயன்படுத்தி, தமிழின உணர்வாளர்களை சிறைப்படுத்தி மகிழ்ந்தார். அப்போதெல்லாம் ஜெயலலிதாவுக்கு எதிராக மனித உரிமையாளர்களைப் போல் வேடம் போட்டுக் கொண்டு ஜெயலலிதாவைக் கடுமையாக தாக்கிப் பேசியது, இதே தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி தான். எதிர்கட்சியாக இருக்கும்போது மனித உரிமையாளர்களாக நடிப்பவர்கள், ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவுடன், அடக்குமுறைச் சட்டங்களை கரங்களில் தூக்கிக் கொண்டு நிற்பதை நாட்டு மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

1976 ஆம் ஆண்டு அன்றைய இந்திராவின் காங்கிரஸ் ஆட்சி, ‘மிசா’ எனும் அடக்குமுறை சட்டத்தில் தி.மு.க.வினரை சிறையிலடைத்தபோது, ‘மிசா’ எதிர்ப்பு வீரர்களாக - தி.மு.க. பவனி வந்தது. மிசாவின் கீழ் கைது செய்யப்பட்டு, விடுதலையானவர்களின் பெயர்களோடு ‘மிசா’ என்ற அடைமொழியை ஒட்ட வைத்துக் கொண்டார்கள். ‘மிசா’ ஒழிந்து ‘தடா’ வந்தபோது, தி.மு.க. அதை எதிர்த்தது. அப்போது - தி.மு.க. எதிர்கட்சி. பிறகு தி.மு.க. மீண்டும் ஆளும் கட்சியாக வந்தபோது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, மாநில அரசுகளே அடக்குமுறை சட்டங்களைக் கொண்டு வரலாம் என்று ஆலோசனை கூறியபோது, உடனே ‘பொடோ’ என்ற மாநில அளவிலான அடக்குமுறை சட்டத்தை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தியது - இதே கலைஞர் கருணாநிதி தான். (30.5.1998) மசோதா, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப் போனபோது, குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணன், ஒப்புதல் தராமல் விளக்கம் கேட்ட நிலையில், அம்மசோதா சட்டமாகாமல் தடைபட்டுப் போனது. மீண்டும் 2002 ஆம் ஆண்டில் பா.ஜ.க. ஆட்சி நடந்தபோது, ‘பொடா’ எனும் அடக்குமுறை சட்டத்தைக் கொண்டு வந்தது (மார்ச் 18, 2002). நாடாளுமன்றத்தில் நிறைவேறிய இந்த சட்டம், மாநிலங்களவையில் காங்கிரஸ் எதிர்ப்பின் காரணமாக தோற்கடிக்கப்பட்டது. பிறகு, இரு அவைகளையும் ஒன்றாகக் கூட்டி, சட்டத்தை நிறைவேற்றினார்கள். அப்போது மத்தியில் பா.ஜ.க. கூட்டணியை ஆதரித்த தி.மு.க. ‘பொடா’வையும் ஆதரித்தது. பிறகு பார்ப்பன ஜெயலலிதா ‘பொடா’வைப் பயன்படுத்தி, பழ. நெடுமாறன், வை.கோ. உள்ளிட்டோரை கைது செய்தபோது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த தி.மு.க. ‘பொடா’ எதிர்ப்பாளராக வலம் வந்தது.

மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது ‘பொடா’ சட்டம் இல்லாமல் போய்விட்டது. எனவே ‘பொடா’வுக்கு மாற்றாக விசாரணையின்றி பிணை வழங்க முடியாமல் சிறையில் அடைக்கும், ஆள்தூக்கி சட்டம் ஏதாவது இருக்கிறதா என்று தேடிப் பிடித்து தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

ஏற்கனவே கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் இராமகிருட்டிணன், இயக்குனர் சீமான் உள்ளிட்ட பல தோழர்கள் மீது தி.மு.க. ஆட்சியில் முறைகேடாக பாய்ந்த தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை உயர்நீதிமன்றமே நீக்கம் செய்து அறிவித்தது. கோவை நீலாம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இராணுவ வாகனங்கள் மறிக்கப்பட்ட வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை தி.மு.க ஆட்சி ‘தேசபக்தி’ பீறிட்டு ஏவினாலும்கூட, மத்திய உள்துறை அமைச்சகமே தலையிட்டு ரத்து செய்ததை நினைவுபடுத்துகிறோம்.

ஒரு காலத்தில் திராவிட நாடு பிரிவினை கேட்ட கட்சி தி.மு.க. பிரிவினை கேட்கும் அமைப்புகள், தேர்தலில் போட்டியிட தடை வரலாம் என்ற நிலை வந்தபோது 1962 இல் திராவிட நாடு பிரிவினையைக் கைவிடுவதாக அண்ணா அறிவித்தார். ஆனால், பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்றார். அடக்குமுறை சட்டங்களையும் அண்ணா எதிர்த்தார். அண்ணாவின் வழி வந்த தி.மு.க.வின் சட்ட அமைச்சர் துரைமுருகனோ, இறையாண்மைக்கு எதிராக பேசுவோருக்கு தனிச்சட்டம் கொண்டுவரப் போவதாகக் கூறி, தனது ‘அதீதமான’ தேசபக்தியை வெட்கமின்றி வெளிப்படுத்துகிறார்.

அரசியல் சந்தர்ப்பவாதத்துக்காக அதிகார அரசியல் என்ற ஒரே குறிக்கோளுடன், தன்னுடைய கொள்கை அடையாளங்களை படிப்படியாக அழித்துக் கொண்டே வரும் தி.மு.க., இப்போது கொள்கை அழிவின் விளிம்பு நிலைக்கு வந்து சேர்ந்துவிட்டது.

இந்திய ஒருமைப்பாட்டையும், இந்து பார்ப்பனியத்தையும் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டவர் ஜெயலலிதா. ஆனால், பெரியார், அண்ணா பெயரைக் கூறிக் கொண்டிருக்கும் தி.மு.க.வோ, ஜெயலலிதாவையும், கதர்ச்சட்டைக்காரர்களையும் விஞ்சக்கூடிய தேச பக்தர்களாக மாறி நிற்பது பச்சையான கொள்கை துரோகம்.

நல்லவேளை, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மறைந்துவிட்டார். அவர் உயிருடன் இருந்திருந்தால், “கொலை வாளினை எடடா; மிகு கொடியோர் செயல் அறவே” என்ற வரிகளுக்காக, வன்முறையைத் தூண்டுகிறார் என்று அவரையும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் பிடித்துப் போட்டு, இவர்கள் மத்திய அரசிடம் நற்சான்றிதழ் வாங்கி வைத்திருப்பார்கள்.

தமிழ்நாடு மீனவர்கள் காப்பாற்றப்படவேண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காக எதிரிகளை எச்சரிக்கை செய்யக்கூடிய கருத்துகளை வெளியிடுவது கூட தி.மு.க. ஆட்சியில் தேச விரோதமாக்கப்பட்டுவிட்டது. இராஜபக்சே இதற்காக பூரித்து மகிழ்ந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

தோழர் சீமானைப் பொறுத்தவரை இவை எல்லாம் அவருடைய வளர்ச்சிக்கு ஒரு உரமாகவே பயன்படும் என்பதே நமது கருத்து. அடக்குமுறையால் தோழர் சீமானை புடம் போட்டு வார்த்து எடுக்க தி.மு.க.வே முடிவு செய்துவிட்டது என்றே தோன்றுகிறது. அதுவும் நன்மைக்குதான்.

ஆனாலும், ஒட்டுமொத்த தமிழினத்தையே தலைகுனிய வைத்துள்ளது இந்த அடக்குமுறை சட்டம். சீமான் என்ற தனிமனிதருக்கு எதிரான அடக்குமுறையாக இதைப் பார்க்காமல், தமிழினத்தின் உரிமைக்கு குரல் கொடுப்போருக்கு எதிரான அச்சுறுத்தலாகவே இதைக் கருத வேண்டும். இந்த சட்டத்துக்கு எதிரான கண்டனங்கள் - இயக்கங்கள் வெடித்துக் கிளம்ப வேண்டும்.

- புரட்சிப்பெரியார் முழக்கம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக