உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 5:46 pm

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by சக்தி18 Today at 4:04 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by சக்தி18 Today at 3:54 pm

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by kram Today at 3:51 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by சக்தி18 Today at 3:51 pm

» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087

பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Empty பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087

Post by சிவா on Thu Jul 15, 2010 4:57 am

கவிதைப்போட்டி எண் 087
பிரியாத வரமொன்று வேண்டும்


சத்தமின்றி சமையலறை வந்து உனை பின்புறமாய்
நான் தொட நீ சத்தமிட்டு துடிப்பாய்.
எனை உணர்ந்த பின்னாலே செல்லமாய் சிணுங்கி
விரல் நோகாமல் என் மார்பில் அடிப்பாய்.

என் சிகை கோதும் போது ஒரு சிறுநரை நீ பார்த்துவிட்டால்
"ஏய் கிழவா!" என்று சொல்லி சிரிப்பாய்,
உன் விளையாட்டு வார்த்தையின் விளைவாய் என் முகம் சுருங்கும்
முன்னாலே அந்நரையை பரிப்பாய்.

என் முதுகில் சாய்ந்தபடி, கையிரண்டை கோர்த்தபடி
நான் படைத்த கவிதைகளை படிப்பாய்.
அதை படித்து பொருள் உணர்ந்து அக்கனமே மனமுவர்ந்து
செல்லமாய் என் செவிமடலை கடிப்பாய்.

சோகம் எனை வாட்டி வதம் செய்யும்தினம் ஓடிவந்து
புறம் அமர்ந்து காரணங்கள் கேட்பாய்
என் நம்பிக்கை நரம்புகளை இரும்புகளாய் மாற்றிவைத்து
எனை சோகம் விட்டு சில நொடியில் மீட்பாய்.

நலம் குன்றி படுக்கையிலே நீ கிடந்து துடிக்கையிலே
பணிவிடைகள் நானுனக்கு புரிவேன்.
அந்நோய் தீரும் வரையில் என் சேயாக உனை கொண்டு
தாயாக உன் விழிக்கு தெரிவேன்.

உன் முதுகு நான் தேய்த்து உன் விரலில் நகம் கடித்து
உன் கால்கள் பிடித்துவிட்டு ரசிப்பேன்.
உன் ஈரத்தலை துடைத்து, உன் கூந்தல் நான் முடித்து
உயிருள்ளவரை உன் நிழலில் வசிப்பேன்.

என் தாயை உன் தாயாய் நீ கொண்டு வாழும் விதம்
நான் கண்டு மனமகிழ்ச்சி அடைவேன்
உன் மனம்பார்த்து குணம்பார்த்து சிலநாளின் பின்னிரவில்
என் விழிவழியால் ரகசியமாய் உடைவேன்

உன் தேவைதனை நானறிந்து வேண்டுபொருள் வாங்கிவந்து
நீ கேட்கும் முன்னே காலடியில் இரைப்பேன்.
என்னுயிர் நீ என்றுணர்ந்து சேவைகள் பல புரிந்து
உன் இதயத்தை இன்பத்தால் நிறைப்பேன்.

கண்ணே! என் எண்ணங்களின் பிம்பமாய் நீயிருக்க
என் தாயுக்கு ஈடாய் உனை மதிப்பேன்.
கல் சிலைகள் புறகணித்து மனதாற உணை நினைத்து
என் கடவுள் என்று உனை துதிப்பேன்.

கேட்கும் வரம் தரும் கடவுள் வருகின்ற தருவாயில்
நானும் இங்கு தவமொன்று கிடப்பேன்
நீ வாழும்வரை நானும் வாழ்ந்து சாகும் நொடி நானும் செத்து
வீழுகின்ற வரம் கேட்டு முடிப்பேன்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Empty Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087

Post by மஞ்சுபாஷிணி on Thu Jul 15, 2010 2:39 pm

ஹப்ப்ப்ப்ப்ப்ப்பா ஒவ்வொரு வரியிலும் இத்தனை அன்பா இத்தனை அன்பா என்று பிரமிக்க வைக்கிறது... கண்டிப்பாக இது கற்பனை வரிகள் இல்லை.... கற்று உணர்ந்த வரிகளும் இல்லை... அன்பை அன்பாய் பகிர்ந்து காதலாய் கசிந்துருகி மனதை நிறைக்கும் அருமையான வரிகள்.....

அன்பு பாராட்டுக்கள் நண்பரே...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Empty Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087

Post by உமா on Thu Jul 15, 2010 2:40 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஹப்ப்ப்ப்ப்ப்ப்பா ஒவ்வொரு வரியிலும் இத்தனை அன்பா இத்தனை அன்பா என்று பிரமிக்க வைக்கிறது... கண்டிப்பாக இது கற்பனை வரிகள் இல்லை.... கற்று உணர்ந்த வரிகளும் இல்லை... அன்பை அன்பாய் பகிர்ந்து காதலாய் கசிந்துருகி மனதை நிறைக்கும் அருமையான வரிகள்.....

அன்பு பாராட்டுக்கள் நண்பரே...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Empty Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087

Post by பிளேடு பக்கிரி on Thu Jul 15, 2010 2:47 pm


கணவன் மனைவியின் அன்பு.. பாசம்... சீண்டல்கள்......
அனைத்தும் ஒவ்வொரு வரிகளிலும் வாழ்கிறது....
அருமை...
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Empty Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087

Post by மீனா on Thu Jul 15, 2010 2:49 pm

சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அனைத்து வரிகளும் மிக அருமையாக உள்ளது. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
மதிப்பீடுகள் : 64

Back to top Go down

பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Empty Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087

Post by raj001 on Thu Jul 15, 2010 3:04 pm

கேட்கும் வரம் தரும் கடவுள் வருகின்ற தருவாயில்
நானும் இங்கு தவமொன்று கிடப்பேன்
நீ வாழும்வரை நானும் வாழ்ந்து சாகும் நொடி நானும் செத்து
வீழுகின்ற வரம் கேட்டு முடிப்பேன்.................பிரியாத வரமொன்று......மிகவும் அருமையான வரிகள்........
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
மதிப்பீடுகள் : 9

Back to top Go down

பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Empty Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087

Post by V.Annasamy on Thu Jul 15, 2010 4:54 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஹப்ப்ப்ப்ப்ப்ப்பா ஒவ்வொரு வரியிலும் இத்தனை அன்பா இத்தனை அன்பா என்று பிரமிக்க வைக்கிறது... கண்டிப்பாக இது கற்பனை வரிகள் இல்லை.... கற்று உணர்ந்த வரிகளும் இல்லை... அன்பை அன்பாய் பகிர்ந்து காதலாய் கசிந்துருகி மனதை நிறைக்கும் அருமையான வரிகள்.....

அன்பு பாராட்டுக்கள் நண்பரே...


மஞ்சு,
உங்களின் வரிகளில் மேலும் இக்கவிதை உயிர், ஊட்டம் பெறுகிறது. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Empty Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087

Post by நிலாசகி on Thu Jul 15, 2010 5:05 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Empty Re: பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை