புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_c10உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_m10உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_c10உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_m10உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_c10உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_m10உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_c10 
11 Posts - 4%
prajai
உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_c10உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_m10உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_c10 
9 Posts - 4%
Jenila
உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_c10உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_m10உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_c10 
4 Posts - 2%
Rutu
உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_c10உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_m10உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_c10உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_m10உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_c10 
2 Posts - 1%
jairam
உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_c10உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_m10உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_c10உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_m10உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_c10உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_m10உங்களுக்காகவே துடிக்கும்-------.... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்காகவே துடிக்கும்-------....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 18, 2010 5:40 pm


நாடி... அதை நாடு... இல்லாவிட்டால் ஏது இந்த மனித கூடு? இந்த மனிதக் கூட்டுக்கு ஆதாரமானவை அண்டவெளியில் அமைதுள்ள ஐம்பூதங்களே. அண்டவெளியில் உள்ள ஐம்பூதங்களே உடலாகிய உயிர் குடிகொண்ட பிண்ட வெளியிலும் நிறைந்துள்ளன. அவற்றில் இருந்தே வாதம், பித்தம், கபமாகிய நாடிகள் தோன்றுகின்றன என்பதையும் இந்த நாடிகள் பற்றியும் சென்ற பதிவில் ஒரு பருந்துப் பார்வைக் பார்த்தோம். ஆமாம் அந்த நாடி எங்கு உற்பத்தி ஆகிறது? எங்கு செல்கிறது? அதன் நிறம் என்ன? குணம் என்ன? நடை என்ன? என்பதை இந்த பதிவில் காணலாம்.

தொப்புளுக்கு கீழே 4 அங்குல அகலமும், 2 அங்குல நீளமும் உடைய பவளம் போன்ற செந்நிறத்தில், முளை போன்ற தோற்றமுடைய ஒரு இடமே நாடிகளுக்கு மூலஸ்தானம். அதிலிருந்து கிளம்பும் நாடிகளே இலையில் காணலாகும் நரம்புகள் போல பல கிளைகளாகப் பிரிந்து மிகவும் மென்மையாக உடலின் எல்லா பாகங்களுக்கும் செல்கின்றன. இவை உடலில் உள்ள ஏழு வகை தாதுக்களில் இடைப்புகுந்து செல்லும் போது அவற்றின் நிறங்களையும் அடைகின்றன. இவற்றுள் சில பருமனாகவும், சில மெல்லியதாகவும், சில முடிச்சுள்ளவையாகவும், சில அடிப்பக்கம் பருத்தும் மேலே வர வர மெலிந்தும், இருக்கின்றன. இவை எல்லாம் ஒன்று சேர்ந்தும் பல திசைகளில் பிரிந்து நுன்மையான நுணிகளை உடையனவாகவும் எல்லாம் ஓட்டை உடையன வாகவும் இருக்கும். நாடி என்பது இரத்தக்குழாய்களில் உண்டாகும் துடிப்புகளின் எண்ணிக்கையோ, தாள அமைதியோ, அழுத்தமோ மட்டுமல்ல. அது ஒவ்வொரு
உடம்பிலும் செயல்படும் உயிரின் முழு இயக்கம். இவை உடம்பின் ஒவ்வோரு
அணுவிலும் செயல்படுகிறது. இதனாலேயே,


”நாடியென்றால் நாடியல்ல; நரம்பில் தானே,
நலமாகத் துடிக்கின்ற துடி தானுமல்ல,
நாடி என்றால் வாத பித்த சிலேற்பணமுமல்ல,
நாடி எழுபத்தீராயிரந் தானுமல்ல,
நாடி என்றால் அண்டரண்டமெல்லாம்
நாடி
எழுவகைத் தோற்றத்து உள்ளாய்
நின்றநாடிய துயராய்ந்து பார்த்தாரானால்
நாடியுறும் பொருள் தெரிந்து நாடுவாரே”

என்று சதக நாடி நூல் உரைக்கும். இதயம் விரியவும் சுருங்கவும் செய்யும்
போது நாடி நரம்புகளும் விரியவும் சுருங்கவும் செய்யும் நாடித்துடிப்புச்
சிறப்பாக இரத்தக் குழாய்களில் பத்து இடங்களில் வெளிப்படையாகத் தெரிகிறது.
அதனால் நாடியைப் பார்க்கும் இடங்கள் பத்தாக உள்ளன. அவையாவன கை, கண்டம், காலின் பெருவிரல், கணுக்கால், கண்ணிச்சுழி, ஆகியன. இவற்றில் கையைப் பார்ப்பதே துல்லியமான கணிப்புக்கு உதவும் இடமாகும். ஆணுக்கு வலக்கையிலும் பெண்ணுக்கு இடக்கையிலும் நாடித்துடிப்புச் சரியாக காணக்கூடும். நாடி பார்க்குமுன் நோயாளியின் கைவிரல்களை நெட்டை எடுத்துவிட்டு, ஒருமுறை உள்ளங்கையில் சூடு பறக்கத் தேய்த்த பின் மூன்று விரல்களால் அழுத்தியும், விட்டும் மாறி மாறிச் செய்யும் போது நாடித்துடிப்பின் வேறுபாடுகளை விரல்களால் நன்கு உணர முடியுமாம்.

பொதுவாக நடையைத்தான் அன்ன நடை, மான் போன்ற துள்ளல் நடை, சிங்க நடை என்றெல்லாம் வர்ணனை செய்து பார்த்திருக்கிறோம். இரத்தக்குழாயில் ஓடும் குருதியின் நடையை வருணிக்கும் நம் சித்த வைத்தியர்களின் கற்பனைனையை எப்படி பாராட்டுவது. அதிலும் சிங்கம் போன்ற ஆண்களுக்கும் அன்னம் போன்ற பெண்களுக்கும் நடை வேறுபாடு உள்ளது போல ஆண்களுக்கும் பெண்களுக்கு நாடி நடையிலும் உள்ள வேறுபாட்டை அழகாக கூறியுள்ள திறம் எண்ணி எண்ணி வியக்கத் தக்கது. ஆண்களுக்கு வாத நாடி, கோழி போலவும், குயில் போலவும், அன்னம் போலவும் நடக்கும். பித்த நாடி, ஆமையைப் போலவும் அட்டையைப் அசைந்து அசைந்து நடக்குமாம். சிலேத்தும நாடி பாம்பு போல ஊர்ந்தும் தவளை போல குதித்தும் செல்லுமாம். பெண்களுக்கு வாதநாடி பாம்பு போலவும், பித்த நாடி தவளை போலவும், சிலேத்தும நாடி அன்னம் போலவும் நடக்குமாம்.

நாடியைப் பார்க்கும் நேரம் மாதங்களுக்கு ஏற்ப மாறுபடும். சித்திரை, வைகாசி
மாதங்களில் அதிகாலையும் (உதயத்தில்), ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகை
மாதங்களில் மதியமும், மார்கழி, தை, மாசி மாதங்களில் மாலையும், பங்குனி,
புரட்டாசி, ஆவனி மாதங்களில் இரவும் நாடியைப் பாக்க வேண்டிய காலங்களாகும். நாடியைப் பார்க்க நாள் நட்சத்திரம் வேறு பார்க்க வேண்டுமா என்று நினைக்கக் கூடாது. எந்தெந்த மாதத்தில் எந்த நேரத்தில் பார்த்தால் நோய் அறிகுறியை மிகத்துல்லியமாக அறியலாம் என்று ஆய்ந்து சொன்ன அவர்களின்
அறிவுக்கூர்மையைப் பார்க்க வேண்டுமல்லவா? பாடலைப் பார்க்கலாமா?

”சித்திரை வைகாசிக்குஞ் செழுங்கதிருப் பிற்பார்க்க
அத்தமாம் ஆனியாடி ஐப்பசி கார்த்திகைக்கும்
மத்தியானத்திற் பார்க்க மார்கழி தைமாசிக்கும்
வித்தகக் கதிரோன் மேற்கே வீழ்கும் வேளையிற் றான்பாரே
தானது பங்குனிக்குந் தனது நல் ஆவனிக்கும்
வானமாம் புரட்டாசிக்கும் அர்த்த ராத்திரியில் பார்க்க
தேனென மூன்று நாடி தெளியவே காணும்”


இவை மட்டுமல்ல எப்போதெல்லாம் நாடிச் சோதனைச் செய்யத் தகுதியற்ற நேரம் என்றும் கூறியுள்ள அவர்களின் திறனை எத்துனைப் பாராட்டினாலும் தகாது. எண்ணெய்க் குளியல் செய்த பின்பு, உடல் ஈரமாக (நனைந்து) உள்ள போது, உணவு உண்ட உடனே, மது அருந்தியுள்ள போது, புகையிலை போன்றவை பயன்படுத்தியுள்ள போது, வேகமாக நடந்த பின்பு, வாதி, பேதி, விக்கல் போன்றவை உள்ள நேரத்தில், உடல் உறவு கொண்ட உடனே எல்லாம் நாடிச்சோதனை செய்தால் நாடியைச் சரியாகக் கணிக்க முடியாது. ஆங்கில மருத்துவத்தில் பொதுவாக வெள்ளை ஆடை அழகிகள் வந்து கண்களால் தன் கையில் கட்டிய கடிகாரத்தையும், கையால் நோயாளியின் கையையும் பிடித்து நாடியை எண்ணி எழுதிவிடுவர். அவ்வளவுதான்.

இங்கே சித்தர்கள் பாருங்கள். வயது, பாலுக்கு ஏற்ப நாடித் துடிப்பு
மாறுவதைக் கணக்கிட்டுச் சொல்லியுள்ள பாங்கை. ஒரு நிமிடத்தில் நாடித்
துடிக்கும் அளவு பிறந்த குழந்தைக்கு 70, அதுவும் சாதாரணமாக 100,
உட்கார்ந்து இருக்கும் போது 40, இளமைப் பருவத்தினருக்கு 75 முதல் 80,
வாலிபப் பருவத்தினருக்கு 90, வயது முதிர்ந்த ஆணுக்கு 70 முதல் 75, அவர்கள்
படுத்து இருக்கும் போது 67, வயது முதிர்ந்த பெண்களுக்கு 75 முதல் 80 என்று
எண்ணிக்கை வேறுபாட்டை எவ்வளவு அழகாகக் கூறியுள்ளனர். இன்னும் எத்தனையோ இருக்கிறது நாடியைப் பற்றிக் கூறிக்கொண்டே போக.

இப்போது நாடித்துடிப்பைக் கண்டு நோய் அறிதல் அற்று போய் விட்டது என்றே கூற வேண்டும். மருத்துவரிடம் சென்றவுடன் நாடித்துடிப்பு பார்க்கும் காலம் மாறி
ஸ்டெத் வந்தது. இப்போது அதற்கெல்லாம் கூட விடை கொடுத்தாகி விட்டது. எடுத்த எடுப்பிலேயே ஸ்கேன் என்ற நிலையில் பழகிவிட்டனர் மருத்துவர்கள். என்பது ஒருபுறம். மறுபுறம் நவ நாகரிக மக்களின் பணத்தை நாடும், பகட்டை நாடும், பேரை நாடும், புகழை நாடும் பேராசை அவர்களை நாடி ஜோசியத்தை நாட வைத்துள்ளது. என்ன செய்தால் கோடிஸ்வரன் ஆகலாம என்ற ஆவல் நாடி ஜோசியத்தின் பக்கம் திசை திருப்பி விட்டுள்ளது. இந்த நம்மையே எண்ணி நமக்காகவே துடிக்கும் நாடியைப் பற்றி எவரும் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை. நாடிக்கடலில் நம் முன்னோர்கள் அராய்ந்து கூறியுள்ள வாத, பித்த, கப நாடிகளின் தன்மைகளையும் அவை மிகினும் குறையினும் உண்டாகும் நோய்களையும் பிரிதொரு பதிவில் பார்க்கலாமா? வரட்டா???.


ஆதிரா..











உங்களுக்காகவே துடிக்கும்-------.... Aஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Aஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Tஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Hஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Iஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Rஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Aஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Jul 18, 2010 7:05 pm

நாடி பற்றி, தேடி வந்து சொல்லும் கட்டுரை .இன்றைய நாடி நிலை பற்றியும்,நாடியின்,கால நிலை பற்றி ,அதை நம் முன்னோர்கள்,சொன்னதை ,அழகாய் எடுத்துக்காட்டியும் ,நாடி ஜோதிடத்தை அலசியும் ,ஒரு மருத்துவக் கட்டுரையை ,தந்த வழி நடத்துனர் ஆதிராவுக்கு நன்றி .

தொடருங்கள் ....................



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 18, 2010 7:39 pm

தொடர்ந்து அறிய முடிந்தது நன்றி தங்களின் அரிய படைப்புக்கு




நேசமுடன் ஹாசிம்
உங்களுக்காகவே துடிக்கும்-------.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 18, 2010 7:39 pm

kalaimoon70 wrote:நாடி பற்றி, தேடி வந்து சொல்லும் கட்டுரை .இன்றைய நாடி நிலை பற்றியும்,நாடியின்,கால நிலை பற்றி ,அதை நம் முன்னோர்கள்,சொன்னதை ,அழகாய் எடுத்துக்காட்டியும் ,நாடி ஜோதிடத்தை அலசியும் ,ஒரு மருத்துவக் கட்டுரையை ,தந்த வழி நடத்துனர் தோழி ஆதிராவுக்கு நன்றி .

தொடருங்கள் ....................


மிக்க நன்றி கலைநிலா..தோழரே.. எப்போது உம்ரா முடித்து திரும்பினீர்கள்..எப்படி இருந்தது பயணம்?



உங்களுக்காகவே துடிக்கும்-------.... Aஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Aஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Tஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Hஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Iஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Rஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Aஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 18, 2010 9:18 pm

நம்மை நாடி வந்த நல்லதோர் பதிவு. உங்களுக்காகவே துடிக்கும்-------.... 154550 உங்களுக்காகவே துடிக்கும்-------.... 154550 உங்களுக்காகவே துடிக்கும்-------.... 154550 ரமணீயன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jul 18, 2010 9:37 pm

உங்கள் இப்பதிவுகள் மூலம் நிறைய விடயங்கள் அறிய முடிந்துள்ளது அக்கா தொடருங்கள் உங்களுக்காகவே துடிக்கும்-------.... 154550 உங்களுக்காகவே துடிக்கும்-------.... 154550 உங்களுக்காகவே துடிக்கும்-------.... 154550 உங்களுக்காகவே துடிக்கும்-------.... 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 19, 2010 7:05 pm

ஹாசிம் wrote:தொடர்ந்து அறிய முடிந்தது நன்றி தங்களின் அரிய படைப்புக்கு
படித்துக் கருத்துப் பகர்ந்தமைக்கு மிக்க நன்றி ஹாசிம்



உங்களுக்காகவே துடிக்கும்-------.... Aஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Aஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Tஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Hஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Iஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Rஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Aஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 19, 2010 7:10 pm

அடேங்கப்பா நாடி துடிப்பில் இத்தனை விஷயங்களா???

அருமையான பாடல் வரிகளுடன் தொகுத்து விளக்கமாக கொடுத்த அன்பு ஆதிராவுக்கு அன்பு நன்றிகள்.....

எனக்கு தெரிஞ்ச ஒரு கொழந்தை இருக்குப்பா... நல்லா அழகா சிரிப்பா... அழகா பேசுவா.... நேத்து தான் அந்த குழந்தையோட பேசினேன்... ஆனா அந்த கொழந்தை ரொம்ப lazy.. அந்த குழந்தையோட நாடி துடிப்பு எப்படி துடிக்கும்பா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்களுக்காகவே துடிக்கும்-------.... 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 19, 2010 7:21 pm

மஞ்சுபாஷிணி wrote:அடேங்கப்பா நாடி துடிப்பில் இத்தனை விஷயங்களா???

அருமையான பாடல் வரிகளுடன் தொகுத்து விளக்கமாக கொடுத்த அன்பு ஆதிராவுக்கு அன்பு நன்றிகள்.....

எனக்கு தெரிஞ்ச ஒரு கொழந்தை இருக்குப்பா... நல்லா அழகா சிரிப்பா... அழகா பேசுவா.... நேத்து தான் அந்த குழந்தையோட பேசினேன்... ஆனா அந்த கொழந்தை ரொம்ப lazy.. அந்த குழந்தையோட நாடி துடிப்பு எப்படி துடிக்கும்பா?




இந்த கொழந்தயா...மஞ்சு.. நேத்து உங்க தங்கையோட பேசினேன்..அம்மா வெளியில போயிருக்கரதா சொன்னாங்க.. அம்மாவோட பேசல. உங்களுக்காகவே துடிக்கும்-------.... 440806
Spoiler:




உங்களுக்காகவே துடிக்கும்-------.... Aஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Aஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Tஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Hஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Iஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Rஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Aஉங்களுக்காகவே துடிக்கும்-------.... Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jul 19, 2010 7:30 pm

ச்சுவீத்துப்பா இந்த லட்டு குழந்தை..... தூக்கிக்கட்டுமா?? சமர்த்துக்குட்டி..... நேத்து இந்த குழந்தை கிட்ட தாம்பா பேசினேன்... அத்தனை அழகா சிரிச்சுது... அத்தனை அழகா பேசித்து... எனக்கு ரொம்ப இஷ்டமாயிடுத்து..... உங்களுக்காகவே துடிக்கும்-------.... 942

அம்மா தண்டையார்பேட்டை போய் இருந்தாங்கப்பா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்களுக்காகவே துடிக்கும்-------.... 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக