ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கரையே இல்லாத ஆறு
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 
ayyasamy ram
 
கோபால்ஜி
 

Admins Online

விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு!

View previous topic View next topic Go down

விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு!

Post by ரிபாஸ் on Thu Jun 24, 2010 10:08 am

விண்வெளியில் தனியே வசிக்க வாய்ப்பு!

இப்போது விண்வெளிக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள்
ஒன்றாகத்தான் தங்க வேண்டும். ஒரு விண்வெளி வீரர் தனிமை விரும்பியாக
இருந்தாலும் அவர் தனியே தங்க வாய்ப்பிருக்காது. அதற்கு வசதி ஏற்படுத்திக்
கொடுக்கவிருக்கிறது, அமெரிக்கா லாஸ் வேகாஸில் உள்ள `பிகெலோவ் விண்வெளி
இருப்பிட கட்டுமானத் தொழிற்சாலை’.இத்தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ள
எதிர்காலத்துக்கான மாதிரி விண்வெளி இருப்பிடங்கள் பெரிய தர்ப்பூசணியைப்
போலக் காட்சியளிக்கின்றன. இவற்றின் உள்ளே சென்றாலே ஒரு வசதியான
வசிப்பிடத்துக்கான அனைத்து வசதிகளையும் காண முடிகிறது.
“எங்கள் தொழிற்சாலைக்கு வந்து இவற்றைப் பார்க்கும் ஒவ்வொரு விண்வெளி
வீரரும் பெரிதும் வியந்து போகின்றனர். இந்த அளவுக்கு ஓர் இருப்பிடத்தை
உருவாக்க முடியும் என்று அவர்களால் நம்பவே முடியவில்லை” என்று இந்தத்
தொழிற்சாலையின் நிறுவனரான ராபர்ட் பிகெலோவ் தெரிவிக்கிறார்.
இன்னும் நான்காண்டு காலத்தில் இந்த விண்வெளி வசிப்பிடங்கள் விண்
வெளிக்குச் செல்லப் போகின்றன. அப்போது இவை முதல் விண்வெளி `தனி
வசிப்பிடங்களாக’ இருக்கும்.
`பேயிங் கஸ்டமர்களுக்கான’ இருப்பிடங்கள் அதற்கடுத்து ஓராண்டுக்குப் பின்
ஏற்படுத்தப்படும். விண்வெளி நிலையம் அமைக்கும் நிபுணத்துவமோ, பொருளாதார
வசதியோ இல்லாத நாடுகள் அந்தக் குடியிருப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, 2016-ம் ஆண்டில் ஒரு பெரிய விண்வெளிக்
குடியிருப்பு அமைக்கப்படும். அப்போது அங்கு ஒரே நேரத்தில் 36 விண்வெளி
வீரர்கள் வசிக்க முடியும். அது, தற்போதைய சர்வதேச விண்வெளி நிலையத்தில்
வசிக்கும் விண்வெளி வீரர்களைப் போல ஆறு மடங்கு அதிகம்.
2017-ம் ஆண்டில் 15 முதல் 20 ராக்கெட் ஏவுதலுக்குக் கட்டணம்
செலுத்தியுள்ளது `பிகெலோவ்’ நிறுவனம். அதற்குப் பின் ஒவ்வொரு ஆண்டும் ஒரு
ராக்கெட் ஏவுதலைப் பயன்படுத்திக்கொள்ளும். அதன்மூலம் வர்த்தக ரீதியாக
விண்வெளிக்கு ஆட்களைக் கொண்டு செல்ல முடியும் என்று நம்பப்படுகிறது.
தனியாரின் இந்த முயற்சிக்கு அமெரிக்க அரசும் ஆதரவு அளிக்கிறது.
விண்வெளிக்கு ஆட்களைக் கொண்டு செல்லும் திறன் கொண்ட விண்கலங்களை
உருவாக்குவதற்கு மேலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு
உதவுவதற்காக 2011-ம் ஆண்டில் 600 கோடி டாலர்கள் என்ற பெருந்தொகையை முதலீடு
செய்யவுள்ளது ஒபாமா அரசு.
தனியார் நிறுவனங்களின் வர்த்தக ரீதியான விண்வெளி முயற்சிகள் வெற்றி
பெற்றால், பணம் செலுத்தும் எவரும் விண்வெளிக்குப் பயணம் செய்து அங்கு
குறிப்பிட்ட நாட்களுக்குத் தங்கலாம்.
`பிகெலோவ்’ நிறுவனத்தின் விண்வெளி வசிப்பிடத்துக்குப் பூமியிலிருந்து
செல்லவும், அங்கு 30 நாட்களுக்குத் தங்கவும் தற்போது ஏறக்குறைய 112 கோடி
ரூபாய் கட்டணமாக விதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது அதிகமாகத்
தெரிந்தாலும், ரஷியாவின் `சோயுஸ்’ விண்கலத்தின் மூலம் தனது வீரர்களை
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப `நாசா’ செலுத்தும் கட்டணத்துடன்
ஒப்பிடும்போது குறைவுதான்.
`சூடான்சர்’ என்ற பெயர் கொண்ட, 6,400 கனஅடி
பரப்புக் கொண்ட விண்வெளி இருப்பிடத்தை முதலில் விண்வெளிக்கு அனுப்ப
`பிகெலோவ்’ திட்டமிட்டுள்ளது. அதன்பிறகு 11,700 கனஅடி பரப்புக் கொண்ட
இரண்டாவது `சூடான்சர்’ விண்வெளிக்கு அனுப்பப்படும்.
விண்வெளி இருப்பிடங்கள் நிறுவப்பட்டதும், தாங்களால் உணவு, நீர், காற்று
விநியோகத்தை மேற்கொள்ள முடியும், திடீரென ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிக்க
முடியும் என்று `பிகெலோவ்’ நிரூபித்துக் காட்டும். இந்நிறுவனம் தற்போது
கூறும் விஷயங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டால், எதிர்கால விண்வெளி
வசிப்பிடத்துக்கும், பூமியில் உள்ள ஓட்டல்களுக்கும் பெரிதாக வித்தியாசம்
இருக்காது என்று கூறப்படுகிறது.
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum