உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சினிமா செய்திகள் - தினத்தந்தி
by ayyasamy ram Today at 6:42 am

» நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்
by ayyasamy ram Today at 6:37 am

» ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா? - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 6:34 am

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by heezulia Today at 1:11 am

» மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்!
by சக்தி18 Yesterday at 10:54 pm

» லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி
by சக்தி18 Yesterday at 10:48 pm

» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» பீகார் மூளை காய்ச்சல் பலி- மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு
by M.Jagadeesan Yesterday at 6:51 pm

» இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து
by T.N.Balasubramanian Yesterday at 6:45 pm

» அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்
by T.N.Balasubramanian Yesterday at 5:20 pm

» தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» பொறியாளரை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ கைது
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்- மக்களவையில் மசோதா தாக்கல்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Jun 23, 2019 10:23 pm

» சினி துளிகள்! - வாரமலர்
by ayyasamy ram Sun Jun 23, 2019 10:17 pm

» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
by T.N.Balasubramanian Sun Jun 23, 2019 9:10 pm

» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
by ayyasamy ram Sun Jun 23, 2019 8:18 pm

» புனே, ஷிர்டியில் துணிகரம் ரூ.50 லட்சத்துடன் 2 ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: மர்ம ஆசாமிகள் அலேக்காக தூக்கிச் சென்றனர்
by ayyasamy ram Sun Jun 23, 2019 8:16 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by சிவனாசான் Sun Jun 23, 2019 8:06 pm

» V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம்.
by சக்தி18 Sun Jun 23, 2019 6:51 pm

» கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்
by T.N.Balasubramanian Sun Jun 23, 2019 6:49 pm

» இனிமேல் மரத்தை வெட்டமாட்டேன்! ஆளுங்களைதான் வெட்டுவேன் – ராமதாஸ் பேச்சால் பதற்றம்
by T.N.Balasubramanian Sun Jun 23, 2019 6:13 pm

» ஹெலோ வீட்டில் அட்மின் யாரும் இல்லையா?
by T.N.Balasubramanian Sun Jun 23, 2019 6:08 pm

» ஏன்…? (நட்பு)
by T.N.Balasubramanian Sun Jun 23, 2019 6:01 pm

» ஊட்டியில் வாட்டர் பாட்டில், கூல் டிரிங்க்ஸ் விற்கத் தடை! - சுதந்திர தினத்தில் அமலுக்குவருகிறது
by ayyasamy ram Sun Jun 23, 2019 4:07 pm

» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
by ayyasamy ram Sun Jun 23, 2019 12:27 pm

» பரிசை கொஞ்சம் உசத்திக் கொடுங்க...!!
by ayyasamy ram Sun Jun 23, 2019 11:52 am

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Jun 23, 2019 11:47 am

» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
by சக்தி18 Sun Jun 23, 2019 10:55 am

» தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை
by ayyasamy ram Sun Jun 23, 2019 9:26 am

» தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
by ayyasamy ram Sun Jun 23, 2019 9:21 am

» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்
by ayyasamy ram Sun Jun 23, 2019 9:18 am

» நாகூர் ரூமி அவர்களின் புத்தகங்கள்
by Guest Sun Jun 23, 2019 8:53 am

» ஆம்லேட் மிருதுவாக வர....டிப்ஸ்!
by ayyasamy ram Sun Jun 23, 2019 8:03 am

» ஏம்பா…டீ கேட்டா கொஞ்சமா தர்றீயே…!!
by ayyasamy ram Sun Jun 23, 2019 7:55 am

» 'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து
by ayyasamy ram Sun Jun 23, 2019 7:38 am

» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!
by ayyasamy ram Sun Jun 23, 2019 7:32 am

» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :
by M.Jagadeesan Sun Jun 23, 2019 7:30 am

» தலையில் கொம்பு முளைக்கும் - கைபேசி எச்சரிக்கை
by சக்தி18 Sat Jun 22, 2019 6:57 pm

» சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர்
by T.N.Balasubramanian Sat Jun 22, 2019 5:20 pm

» வீட்டுக்குள் மரம்.
by T.N.Balasubramanian Sat Jun 22, 2019 5:12 pm

» கேரளாவின் தண்ணீா் உதவியை மறுத்ததா தமிழகம்? அமைச்சா் வேலுமணி விளக்கம்
by M.Jagadeesan Sat Jun 22, 2019 9:56 am

» லிப்ட் கொடுக்கிறீர்களா? எச்சரிக்கை.
by M.Jagadeesan Sat Jun 22, 2019 8:50 am

» நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காவிட்டால், உடல்வரட்சி காரணமாக இப்படியும் நடக்கலாம்.
by T.N.Balasubramanian Sat Jun 22, 2019 6:55 am

» டெல்லியில் பிரதமர் நடத்திய கூட்டம்- அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு
by M.Jagadeesan Fri Jun 21, 2019 7:42 pm

Admins Online

பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'

பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா' Empty பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'

Post by krishnaamma on Tue Jun 15, 2010 7:52 pm

சாதாரணமாக காம்புகளைக் கிள்ளி நட்டுவைத்தாலும், எந்த மாதிரியான சூழலிலும் வளரக்கூடிய கீரை இது.

இந்தக் கீரையில் ஊட்டச் சத்து, நீர்ச் சத்து, கொழுப்புச் சத்து, மினரல் சத்துக்கள், கார்போஹைட்ரேட், கால்ஷியம், பாஸ்பரஸ், புரதம் ஆகிய சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

கால்ஷியம் அதிக அளவில் கலந்திருப்பதால் எலும்புகளின் உறுதிக்கும், பற்களின் ஆரோக்கியத்துக்கும் இந்தக் கீரை ரொம்பவே உதவும்.

'பொன்னாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால், பகலிலும் நட்சத்திரத்தைப் பார்க்க லாம்' என்பார்கள்.

இதில் வைட்டமின் 'ஏ' மிகுந்து இருப்பதால், அந்த அளவுக்குக் கண் பார்வையைக் கூர்மையாக்கும்;என்பதால் வந்த சொல்வடை இது.
அந்த அளவு வல்லமையைக் கொண்ட கீரை இது.


இதை வெவ்வேறு விதமாக உட்கொள்வதன் மூலம், நமது உடம்பின் எடையைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ முடியும்.


ஆம். இந்தக் கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்துச் சமைத்து, சாதத்துடன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.


மாறாக, துவரம் பருப்பும் நெய்யும் கலந்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் எடை கூடும்.


இதன் சாற்றுடன் சம அளவு கீழாநெல்லிச் சாற்றைக் கலந்து நல்லெண்ணெய் இட்டுக் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்தால், கண் சம்பந்தமான நோய்கள் விலகும்.

உடல் உஷ்ணம் குறையும்.

ரத்தம் விருத்தியாகும்.இதன் பெயருக்கேற்றாற் போல, நமது தோலின் மினுமினுப்புத் தன்மையை அதிகரிக்கக் கூடிய சக்தியும் இந்தக் கீரைக்கு உண்டு.


இவ்வளவு மகத்துவங்கள் அடங்கிய இந்தக் கீரையை, 'கீரைகளின் ராஜா' என்று தயங்காமல் சொல்லலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா' Empty Re: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'

Post by ஹனி on Tue Jun 15, 2010 8:51 pm

நல்ல தகவல் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
மதிப்பீடுகள் : 30

View user profile

Back to top Go down

பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா' Empty Re: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'

Post by சபீர் on Tue Jun 15, 2010 9:08 pm

நல்லதொரு குறிப்பு பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா' 678642 பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா' 678642 பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா' 678642
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா' Empty Re: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'

Post by kalaimoon70 on Tue Jun 15, 2010 9:17 pm

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா' Empty Re: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'

Post by krishnaamma on Tue Sep 13, 2011 9:02 pm

நன்றி நண்பர்களே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா' Empty பொன்னாங்கண்ணி கீரை

Post by T.N.Balasubramanian on Sun Nov 25, 2018 6:47 pm

பொன்னாங்கண்ணி கீரை

பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா' E_1542951839

பொன்னாங்கண்ணி கீரை, அனைவரும் அறிந்தது தான். ஆனால், அதிலே பொதிந்துள்ள மருத்துவ குணங்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பூமியில் இருந்து பொன் சத்தை உறிஞ்சி, தன்னுள் தேக்கி வைத்திருக்கிறது. அதுபோலவே, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரையும், பொன் சத்தை பெற்றிருக்கிறது.
* பொன்னாங்கண்ணி கீரை, ஓர் அற்புதமான உடல் தேற்றி. இன்று, பெரிய செல்வந்தர்களுக்கு கூட எட்டாத ஒரு மருந்தாகிப் போனது தங்கபஸ்பம். ஆனாலும், அதை ஏழைகளும் பெறும் விதத்தில் பொன்னாங்கண்ணியில் பொதிந்து வைத்திருக்கிறார், இறைவன்
* நவீன மருத்துவத்தில், 'கோல்ட் குளோரைடு' என்று, தங்கத்தை, உப்பு நிலையில் மாற்றி மருந்தாகக் கொடுப்பர். இது, உடல் வலியைப் போக்குவது மட்டுமின்றி, உடலுக்கு பலத்தையும் தரவல்லது
* பொன்னாங்கண்ணி கீரை, தாய்ப்பாலை பெருக்கும். பித்தப்பை சீராக இயங்கச் செய்யும் மற்றும் தூக்கத்தை தூண்ட கூடியது
* நரம்புக் மண்டலத்தை சீர் செய்து, சாந்தப்படுத்தக் கூடியது. எனவே, பல்வேறு நரம்பு நோய்கள் வராமல் தடுக்கிறது
* ஞாபக சக்தியைத் தூண்ட கூடியது. உடல் உஷ்ணம் நீங்கி, கண்களுக்கும், மூளைக்கும் குளிர்ச்சி தரவல்லது. தலைவலி, மயக்கத்தை தணிக்க கூடியது. இதன் சாறு, பாம்புக் கடி விஷத்தை முறிக்கும் தன்மை உடையது
* ரத்த வாந்தியை நிறுத்தக் கூடியது
* பொன்னாங்கண்ணி கீரை விழுதை, எண்ணெயில் இட்டு காய்ச்சி, தலைக்கு தடவினால், தலைமுடி செழுமையாக வளரும்
* இக்கீரையை உணவில் அடிக்கடி சேர்ப்பதால், ரத்த அழுத்த குறைவு கட்டுப்படும். இரைப்பை கோளாறுகள் இல்லாமல் போகும். 'கொனேரியா' எனும் பால்வினை நோய் குணமாகும்
* ஆண்களின் மலட்டு தன்மையையும், இயலாமையையும் போக்க கூடிய அற்புதமான மருந்து
* பொன்னாங்கண்ணி கீரையை, அரைத்து, முகத்தில் பூசி வந்தால், முகப்பருக்கள் போவதோடு, கரும்புள்ளிகளும் காணாமல் போகும்; முகம் பொலிவு பெறும்
* இக்கீரை, சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடையது. பேதி மற்றும் சீதபேதியை கட்டுப்படுத்த வல்லது.
* குடலிறக்க நோய் வராமல் இருக்கவும், நெஞ்சு சளியை கரைக்கவும், மார்பு இறுக்கத்தை போக்கவும் வல்லது. ஆஸ்துமா போன்ற நுரையீரல் கோளாறுகளையும் அகற்றுகிறது. நுண்கிருமிகளை அழிக்க வல்லது
* புண்களை ஆற்றக் கூடியது. ரத்தத்தில் சேர்ந்த கழிவுகளை போக்கி, புற்று நோய் வரா வண்ணம் தடுக்க கூடியது. உடலுக்கு உற்சாகம் தரவும் வல்லது
* ரத்தத்தில் சேரும் சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்தை குறைக்க வல்லது. பூஞ்சைக் காளான்களை துரத்த வல்லது
* பொன்னாங்கண்ணி கீரையை வேக வைத்து, உப்பு சேர்க்காமல் இளஞ்சூட்டோடு வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வர, கண் பார்வை தெளிவு பெறும்; கண் நோய்கள் விலகும்
* கீரையை நன்கு மைய அரைத்து, நீர் நிரப்பிய மண்பானை மீது அப்பி, மறு நாள் காலையில் எடுத்து கண்களின்மேல் சிறிது நேரம் கட்டி வைத்து அவிழ்க்க, கண் நோய் குணமாகும்
* பொன்னாங்கண்ணிச் சாறு, நல்லெண்ணெய், நெல்லிக்காய் சாறு, பசுவின் பால் மற்றும் கரிசலாங்கண்ணிச் சாறு, இவைகளை சம அளவு எடுத்து, இதனோடு சிறிதளவு அதிமதுரத்தை பாலில் அரைத்து சேர்த்து காய்ச்சி, மெழுகு பதத்தில் வந்ததும், வடிகட்டி, தலைக்கு தேய்த்து குளித்து வர, 96 வகையான கண் நோய்களும் தொலைந்து போகும்
* இக்கீரையை வதக்கி, மிளகு, போதிய அளவு உப்பு சேர்த்து, ஒரு மண்டலம் உண்ண, உடலுக்கு வனப்பு, பொன் நிறம், கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும்
* ஒரு பிடி பொன்னாங்கண்ணி கீரையை, காலையில் வெறும் வயிற்றில் மென்று தின்று, பசும்பால் அருந்தி வர, உடல் குளிர்ச்சி பெற்று, ஈரல் நோய் இல்லாது போகும். கண் நோய்கள் நீங்கி, பார்வையும் தெளிவு பெறும்
பொன்னாங்கண்ணி கீரை, பொன்மேனி தருவதோடு, கண்களுக்கு நன்மையும், தலைமுடிக்கு வளத்தையும், ரத்தப் பெருக்கையும், உடல் குளிர்ச்சியையும் தரக் கூடியது என்பதை நினைவில் நிறுத்தி, நித்தமும் பயன்படுத்துவோர், நூறாண்டு வாழ்வர்.
- கைலாஷ்

தினமலர் வாரமலர் பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா' 1571444738

ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24533
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8880

View user profile

Back to top Go down

பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா' Empty Re: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'

Post by krishnaamma on Mon Nov 26, 2018 7:52 pm

ஐயா , ஏற்கனவே நான் ஒரு திரி துவங்கி இருக்கிறேன் ஐயா, அத்துடன் இணைத்து விடுகிறேன் புன்னகை...

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா' Empty Re: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Nov 26, 2018 9:11 pm

பொன்னாங்கண்ணி கீரை பருப்பு கூட்டு
எனக்கு மிகவும் பிடித்த பதார்த்தம்.
இது இருந்தால் வேறு எதுவும் வேண்டாம்.
நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12525
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2866

View user profile

Back to top Go down

பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா' Empty Re: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'

Post by சிவனாசான் on Mon Nov 26, 2018 9:19 pm

மேனி பொன்னாக பொன்னாங்கன்னி கீரையை பயன்படுத்தலாம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4222
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1176

View user profile

Back to top Go down

பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா' Empty Re: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'

Post by krishnaamma on Mon Nov 26, 2018 9:20 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:பொன்னாங்கண்ணி கீரை பருப்பு கூட்டு
எனக்கு மிகவும் பிடித்த பதார்த்தம்.
இது இருந்தால் வேறு எதுவும் வேண்டாம்.
நன்றி அம்மா
எனக்கும் ஐயா.....அதுவும்  சீமை பொன்னாங்கண்ணியைவிட, நாட்டுப்பொன்னாங்கண்ணி தான் மிகவும்  சுவையாக இருக்கும்....ஆனால் அதை 'ஆய்வது' / சுத்தப்படுத்துவது  கொஞ்சம் கஷ்டம்....புன்னகை
.
.
.
இந்த கீரை இந்த பெருமை ஒன்று உண்டு ஐயா, உங்களுக்குத்தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை.... இந்த கீரையை, பயத்தம் பருப்பு தேங்காய் அரைத்து  பொரித்த கூட்டு போல் செய்தால் உடல் பலம் பெறும், வெயிட் ஏறும்..... 
.
.
.
.அதுவே, துவரம் பருப்பு போட்டு மிளகு சீரகம் சேர்த்து சாப்பிட்டால் எடை குறையும்.... ஆனால் ஒருமண்டலம் தொடர்ந்து சாப்பிடவேண்டும்....எங்க அப்பா சொல்வார் இதை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா' Empty Re: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Nov 26, 2018 9:40 pm

Code:

இந்த கீரை இந்த பெருமை ஒன்று உண்டு ஐயா, உங்களுக்குத்தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை.... இந்த கீரையை, பயத்தம் பருப்பு தேங்காய் அரைத்து  பொரித்த கூட்டு போல் செய்தால் உடல் பலம் பெறும், வெயிட் ஏறும்.....

அம்மா உடம்பு எடை கூட அருமையான
பதார்த்தம் சொல்லியுள்ளீர்கள்.
நான் தற்போது வெறும் 57 கிலோவே உள்ளேன்.
என் உயரத்திற்கு 63 கிலோ இருக்க வேண்டும்.
இதை உடன் செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12525
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2866

View user profile

Back to top Go down

பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா' Empty Re: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'

Post by krishnaamma on Mon Nov 26, 2018 10:25 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

இந்த கீரை இந்த பெருமை ஒன்று உண்டு ஐயா, உங்களுக்குத்தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை.... இந்த கீரையை, பயத்தம் பருப்பு தேங்காய் அரைத்து  பொரித்த கூட்டு போல் செய்தால் உடல் பலம் பெறும், வெயிட் ஏறும்.....

அம்மா உடம்பு எடை கூட அருமையான
பதார்த்தம் சொல்லியுள்ளீர்கள்.
நான் தற்போது வெறும் 57 கிலோவே உள்ளேன்.
என் உயரத்திற்கு 63 கிலோ இருக்க வேண்டும்.
இதை உடன் செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1287178


ஆஹா... உங்களுக்கு எடை கூட வேண்டுமா....கைவசம் நிறைய குறிப்புகள் உள்ளன ஐயா...ஆனால் நான் எடை குறைக்கவேண்டும் ...வெகு வருடங்களாக முயல்கிறேன்...ஹுஹும்....முடியவில்லை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா' Empty Re: பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை