புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிங்கம் பட விமர்சனம் Poll_c10சிங்கம் பட விமர்சனம் Poll_m10சிங்கம் பட விமர்சனம் Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
சிங்கம் பட விமர்சனம் Poll_c10சிங்கம் பட விமர்சனம் Poll_m10சிங்கம் பட விமர்சனம் Poll_c10 
13 Posts - 25%
prajai
சிங்கம் பட விமர்சனம் Poll_c10சிங்கம் பட விமர்சனம் Poll_m10சிங்கம் பட விமர்சனம் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
சிங்கம் பட விமர்சனம் Poll_c10சிங்கம் பட விமர்சனம் Poll_m10சிங்கம் பட விமர்சனம் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சிங்கம் பட விமர்சனம் Poll_c10சிங்கம் பட விமர்சனம் Poll_m10சிங்கம் பட விமர்சனம் Poll_c10 
2 Posts - 4%
Rutu
சிங்கம் பட விமர்சனம் Poll_c10சிங்கம் பட விமர்சனம் Poll_m10சிங்கம் பட விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
சிவா
சிங்கம் பட விமர்சனம் Poll_c10சிங்கம் பட விமர்சனம் Poll_m10சிங்கம் பட விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
viyasan
சிங்கம் பட விமர்சனம் Poll_c10சிங்கம் பட விமர்சனம் Poll_m10சிங்கம் பட விமர்சனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிங்கம் பட விமர்சனம் Poll_c10சிங்கம் பட விமர்சனம் Poll_m10சிங்கம் பட விமர்சனம் Poll_c10 
10 Posts - 83%
Rutu
சிங்கம் பட விமர்சனம் Poll_c10சிங்கம் பட விமர்சனம் Poll_m10சிங்கம் பட விமர்சனம் Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
சிங்கம் பட விமர்சனம் Poll_c10சிங்கம் பட விமர்சனம் Poll_m10சிங்கம் பட விமர்சனம் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கம் பட விமர்சனம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat May 29, 2010 12:11 pm

மசாலா படங்கள் என்றால் நூறு கார்கள் நொறுங்க வேண்டும், நூற்றுக்கணக்கில் வெள்ளை வேட்டி சட்டையில் வில்லன்கள் பறக்க வேண்டும், சரியாக 20 நிமிஷத்துக்கு ஒரு முறை முக்கால் நிர்வாணத்தில் ஹீரோயினும் துணை நடிகையும் ஆட வேண்டும், கடைசியில் வில்லன் தோற்று ஹீரோ ஜெயித்து, முதலில் பாடிய அதே டூயட்டை நாயகியுடன் பாடியபடி கையாட்டி ரசிகர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்...

இந்தக் காட்சிகள் மற்றும் பார்முலாவில் ஒன்று கூட மிஸ்ஸாகாமல் கொதிக்கக் கொதிக்க மசாலாவை அள்ளி ரசிகர்கள் தலையில் கொட்டியிருக்கிறார் இயக்குனர் ஹரி.

திருநெல்வேலிக்குப் பக்கத்தில் நல்லூர் கிராமத்தில் மளிகைக் கடை வியாபாரத்தைக் கவனித்துக் கொள்ள ஆசைப்படும் சூர்யா, தன் அப்பாவின் ஆசைக்காக போலீஸ் வேலையில் சேருகிறார். நேர்மையான போலீஸ் சப் இன்ஸ்பெக்டரான அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறது அந்த ஊர்.

ஒரு ரியல் எஸ்டேட் விவகாரத்தில் சென்னை தாதாவான பிரகாஷ்ராஜுடன் சூர்யாவுக்கு மோதல் ஏற்பட, பிரகாஷ்ராஜ் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சப் இன்ஸ்பெக்டர் சூர்யாவை, இன்ஸ்பெக்டர் சூர்யாவாக பதவி உயர்த்தி, தனது திருவான்மியூர் ஏரியாவுக்கே மாற்றல் செய்ய வைக்கிறார். அங்கே ஆரம்பிக்கிறது இருவருக்குமான போலீஸ்- திருடன் சேஸிங்.

கடைசியில் ஹீரோ எப்படி வில்லனை முடிக்கிறார் என்பது ரத்தம் சொட்டும் க்ளைமாக்ஸ்.

ஜீப்பின் கதவுகள், மேற்கூரையைப் பிய்த்துக் கொண்டு, கதறக் கதற வசனம் பேசியபடி அறிமுகமாகிறார் ஹீரோ சூர்யா.

ஸ்ஸ் அப்பா... இப்படி கண்ணக் கட்ட வைக்கிறாய்ங்களே என வடிவேலு பாணியில் சலித்துக் கொள்கிற அளவுக்கு ஏக பில்டப் காட்சிகள். பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக்குகளை உச்ச கட்ட டெஸிபலில் சூர்யா பேசப் பேச நமக்கு காது கிழிகிறது. 'அன்புச் செல்வன்' சூர்யாவுக்கு இந்த மசாலா போலீஸ் துரைசிங்கம் சுத்தமாகப் பொருந்தவில்லை.

ஹீரோயினுக்கும் ஹீரோவுக்கும் உயரத்தை அட்ஜஸ்ட் செய்வதற்கே நேரம் சரியாக இருந்திருக்கும் போல, இயக்குனர் மற்றும் கேமராமேனுக்கு. இதற்காகவே ரொம்ப க்ளோஸ் அப் காட்சிகளையும் தவிர்த்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அட, ரொமான்ஸ் காட்சிகளில் கூட சில அடி எட்டவே நிற்கிறார் ஹீரோ.

ஹீரோவை விட வில்லன் பிரகாஷ் ராஜுக்கு படு பவர்புல் அறிமுகம். ஆனால் சர்க்கஸில் ரிங் மாஸ்டருக்கு பயந்து உறுமும் சிங்கம் அளவுக்குக் கூட இல்லை இவரது பாத்திரப் படைப்பு. கடைசி வரை வாய் உதார்தான்.

படத்தின் ஜில்லான அம்சம் அனுஷ்கா. ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு ஆக்ஷன் மசாலா படத்தில் ஹீரோயினை முழுப் படத்திலும், ஓரளவு ஸ்கோப் உள்ள பாத்திரத்தில் காட்டியிருக்கிறார்கள். அனுஷ்காவும் உணர்ந்து நடித்திருக்கிறார்.

ஏட்டு எரிமலையாக வந்து கத்திரி வெயிலில் இன்னும் காந்த வைக்கிறார் விவேக். சகிக்கவில்லை.

போஸ் வெங்கட் பாத்திரம் நிறைவு. நாசர், மனோரமா, விஜயகுமார் என ஹரியின் ஆஸ்தான கலைஞர்கள் இதிலும் உண்டு.

ப்ரியனின் ஒளிப்பதிவு ஓகே. தேவி ஸ்ரீ பிரசாதின் இசையில் இரண்டு பாடல்கள் பரவாயில்லை. ஆனால் பின்னணி இசை என்றால் வீசை என்ன விலை என்று கேட்டிருக்கிறார் மனிதர். வி.டி. விஜயனின் எடிட்டிங் ஆங்காங்கே தத்தித் தாவுகிறது.

இரண்டு மணி நேரம் முப்பத்தைந்து நிமிடங்களை விறுவிறுப்பாக நகர்த்த வேண்டும் என்ற முனைப்பில் ஹரி உழைத்திருப்பது தெரிகிறது. ஆனால் தனது முந்தைய பட காட்சிகளையே காப்பியடிப்பது, மாறாத லொகேஷன்கள், ரிபீட் வசனங்கள் என சலிப்புத் தட்ட வைக்கிறார் ஹரி.

படத்தின் ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் எளிதில் யூகித்து கமெண்ட் அடிப்பது மிகப் பெரிய மைனஸ்!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 29, 2010 12:14 pm

பின்ன ஹரி படத்துல நீங்க என்ன எதிர்பாக்குறிங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் சிங்கம் பட விமர்சனம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat May 29, 2010 12:31 pm

இது என்ன சிங்கமா இருக்கும்? ரிலாக்ஸ்





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 29, 2010 12:37 pm

என்னப்பா எல்லோரும் இப்படி பயமுறுத்துறீங்க ? ,
மொத்ததுல இது சிங்கமா இல்ல அசிங்கமா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat May 29, 2010 1:17 pm

balakarthik wrote:பின்ன ஹரி படத்துல நீங்க என்ன எதிர்பாக்குறிங்க
சிங்கம் பட விமர்சனம் 677196 சிங்கம் பட விமர்சனம் 677196 சிங்கம் பட விமர்சனம் 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா சிங்கம் பட விமர்சனம் 154550
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 29, 2010 1:45 pm

சிங்கம்தான், ஆனால் கட்டில் உள்ள சிங்கமல்ல! நாட்டில் வாழும் சிங்கமுத்து!!



சிங்கம் பட விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 29, 2010 2:25 pm

சிவா wrote:சிங்கம்தான், ஆனால் கட்டில் உள்ள சிங்கமல்ல! நாட்டில் வாழும் சிங்கமுத்து!!

யு மின் லைன் பெரல்



ஈகரை தமிழ் களஞ்சியம் சிங்கம் பட விமர்சனம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Sat May 29, 2010 3:31 pm

ராஜா wrote:என்னப்பா எல்லோரும் இப்படி பயமுறுத்துறீங்க ? ,
மொத்ததுல இது சிங்கமா இல்ல அசிங்கமா

ரெண்டும்தான் ......
அசிங்கமான சிங்கம் ....

mkag.khan
mkag.khan
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009
http://www.aranthaiweb.blogspot.com

Postmkag.khan Sun May 30, 2010 8:43 pm

ஐயோ இந்த சூர்யா அநியாயத்துக்கு கத்துறார்
ஒரு ஹீரோ என்னன்னா தெனாவட்ட பேசுறதா நினசுகிட்டு நமமல ஒரு 6 படமா கொன்னுகிட்டு இருக்காப்ல
இவர் என்னன்னா நல்லா நடிகிரத நினைசிகிட்டு அந்த கால மேடை நாடகத்துல நடிகிராப்ள நடிகிரப்ள சகிக்கல அம்மா இந்த பாட்டுக்கெல்லாம் நல்லா கவனிங்க பாடகர் கூட இப்படி கத்தமாட்டாப்ள இந்த கஜினிலேர்ந்து லிப் மூவேமென்ட் ஓவர்
பாட்டுக்கெல்லாம் ஒரே மாதிரி எச்ப்ரசன் செய்றப்ள
சுருசுர்ப்பா நடிக்கிறதா நினைசிகிட்டு ரொம்ப வேகமா நடிசிர்ரப்ள ஒருபடத்துல சரி ஒவ்வொரு படத்திலும
இந்த சிங்கம் கர்சிச்ச பரவில்ல அடிக்கடி குரைக்குது
மொத்தத்தில் நாமம் வீட்டு செல்லபிரானிக்கு வைக்கும் செல்ல பேர் TIGER மாதிரி இந்த சிங்கம்
இந்த ஹரி இயக்குனர்க்கு
அய்யா சாமி எதாவது ஹாலிவுட் DVD பார்த்தாவது படமெடுய பரவில்ல கொஞ்சமாவது லாஜிக்கா நகரிகம எடுப்ப
கமர்சியல் படம்னு சொல்லுற
நல்லா ஓடுற எல்லா படமுமே கமர்சியல் படம்தம்ப

எல்லாரும் கண்டிப்பா போய் பாருங்க நல்லா காமெடியா ஒரு விஜய் படம் பார்த்த பீல் இருக்கும் ஒரே வித்தியாசம் இதுல ஹீரோ ஓவரானடிசிருப்பரு



-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக