ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அக்ஷய திருதியை ! 29-04-2017

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma on Sat May 15, 2010 1:12 am

First topic message reminder :

அக்ஷய திருதியை  கொண்டாடுவது எப்படி என்பதை இங்கு காண்போம்.சில வருடங்களாக தங்கம் வாங்கினால் நல்லது என்று சொல்லி சொல்லி தங்கம் விற்பனையை பெருக்கி விட்டனர். இந்த நாளில் குரு பகவானின் அருள் பெற்ற
உலோகமான தங்கத்தை வாங்குவது சிறபென்று ஒரு ஐதிகம் உண்டு. அதற்காக தங்கத்தை வாங்குவது ஒன்றுதான் இந்த நாளின் மகத்துவம் என்று கூறுவது பேதமை.

(மேலும் இரண்டு வருடங்களாக வெள்ளை நிற உலோகம் வாங்கினால் நல்லது என்று சொல்லி பிளாட்டினம் வாங்க சொல்லுகிறார்கள். ஏன் வெள்ளை என்றால் அலுமினியம் அல்லது வெள்ளி வாங்கினால் ஆகாதா? பொது மக்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்.)

ஆல மர இலை யில்  மிருதுஞ்சய மந்திரத்தை ஜபித்து வியாதி யச்தேர்கள் தலையணை அடியில் வைத்தால் வியாதி விரைவில் குணமாகும்.

குழந்தைகள் தலையணை அடியில் வைத்தால், கண் திருஷ்டி கழியும்.

இந்த நன்னாளில் நாம் செய்ய வேண்டிய முக்கய கடமை என்னவென்றால் அது பெரியோரயும் பித்ருகளையும் வணங்குவது தான்.

இந்த நாளில் மகாலட்சுமி பூஜை செய்வது மிக நல்லது.

சத்ரு சாந்தி பூஜிக்கும் இது சிறந்த நாளாக கருதப்படுகிறது.

மிருத sanjevini மந்த்ரம் தெரிந்தவர்கள் அதை நெறைய ஜபிக்கலாம்.  இதனால் வியாதிகளின்
வீரியம் குறையும்.

கீழுள்ள  விவரங்களை இன்று ( 17-4-2015) இணைத்துள்ளேன் புன்னகை

1. ஆலமர இலையில் மிருத்யுஞ்ஜய
மந்திரத்தை ஜபித்து வியாதிஸ்தர்களின்
தலையணையின் அடியில் வைத்தால் வியாதி விரைவில் குணமாகும். குழந்தைகளின் தலையணைக்கடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும.

2. இந்த நன்னாளில் நாம் செய்ய
வேண்டிய முக்கியக் கடமை பெரியோர்களை வணங்கி ஆசியைக் பெருதல் ஆகும்.

3. அன்றையதினம் மகாலட்சுமி பூஜை செய்வது நன்மை தரும்.

4. சத்ரு சாந்தி பூஜைக்கும் இந்நாள்
உகந்தது.

5. மிருத சஞ்ஜீவனி மந்திரம் தெரிந்தவர்கள், அட்சய திருதியதினத்தில் அதை நிறைய ஜபிக்கலாம். இதனால்
வியாதிகளின் வீரியம் குறையும்.

6. இந்த நாளில் குரு பகவானின் அருள் பெற்ற உலோகமான தங்கத்தை வாங்குவது சிறப்பென்று ஒரு ஐதீகம் உண்டு. அதற்காக தங்கத்தை வாங்குவது ஒன்றுதான் இந்த நாளின் மகத்துவம் என்று
கூறுவது பேதமை.

7. ஏழைகளுக்கு தம்மால் முடிந்ததைக் கொடுத்து உதவுங்கள். அதனால் அவர்கள் மனம் குளிர்ந்தால், தன்னாலேயே நம் செல்வம் பெருகும்.

எனவே, நம்மால் முடிந்தவரை ஏழைகளுக்கு
கொடுத்து உதவுங்கள்.அட்சய திருதியை கொண்டாடுங்கள் !!

இந்த நாந்நாளில் ஏழைகளுக்கு தானம் செய்வது மிக மிக சிறந்தது.

எனவே கண்டிப்பாக இதை செய்வோம், அவர்கள் வாழ்த்து நம்மை செலவசெழிப்போடு வாழவைக்கும்...... வியாபாரிகளின் வார்த்தைகளை நம்பி அதிக விலை கொடுத்து தங்கம் வாங்காதீர்கள் ! புன்னகை


Last edited by krishnaamma on Fri Apr 17, 2015 1:17 pm; edited 2 times in total
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down


Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma on Fri May 06, 2011 1:10 pm

[quote="sgprabu85"] குஓட்டே
மறுபடி தங்கமா ? புன்னகை நன்றி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by பிஜிராமன் on Fri May 06, 2011 2:09 pm

அக்ஷ்ய திருதி
எனக்கொரு கேள்வி......இந்த நாள் அன்று.....தங்கம் வாங்க வேண்டும் என்பது.....எப்போது இருந்து நடை முறையில் உள்ளது......என்று யாராவது......விளக்கினால்.....மகிழ்வேன்......
நன்றி கிருஷ்ணா


Last edited by pgraman on Fri May 06, 2011 7:34 pm; edited 1 time in total
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by கே. பாலா on Fri May 06, 2011 7:26 pm

@krishnaamma wrote:நன்றி பாலா புன்னகை நானே செய்யவேண்டும் என் நினைத்தேன் நீங்கள் செய்து விட்டீர்கள் . ரொம்ப நன்றி புன்னகை
அம்மா பரவாயில்லை ! நல்லது சொல்லத்தானே நாம் இருக்கிறோம்!
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by கே. பாலா on Fri May 06, 2011 11:17 pm

அட்சய திருதியை தங்க விற்பனை குறைந்தது!
இந்த ஆண்டு தங்கம் 5000 கிலோ விற்கப்பட்டது .
கடந்த ஆண்டு இது 7000 கிலோவாக இருந்தது . சென்னையில் மட்டும் இன்று 2400 கிலோ தங்கம் விற்பனையானது!


source: Sunnews: 11.00 pm today
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by அன்பு தளபதி on Sat May 07, 2011 10:26 am

@பிஜிராமன் wrote:அக்ஷ்ய திருதி
எனக்கொரு கேள்வி......இந்த நாள் அன்று.....தங்கம் வாங்க வேண்டும் என்பது.....எப்போது இருந்து நடை முறையில் உள்ளது......என்று யாராவது......விளக்கினால்.....மகிழ்வேன்......
நன்றி கிருஷ்ணா

இங்கே சென்று பாருங்கள்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by பிஜிராமன் on Sat May 07, 2011 10:44 am

maniajith007 wrote:
@பிஜிராமன் wrote:அக்ஷ்ய திருதி
எனக்கொரு கேள்வி......இந்த நாள் அன்று.....தங்கம் வாங்க வேண்டும் என்பது.....எப்போது இருந்து நடை முறையில் உள்ளது......என்று யாராவது......விளக்கினால்.....மகிழ்வேன்......
நன்றி கிருஷ்ணா

இங்கே சென்று பாருங்கள்
நன்றி மணி......மக்களின் நம்பிக்கை அபரி மிதமானது என்பதற்கு ஒரு சான்று...கஷ்ட காலம்.....
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by அன்பு தளபதி on Sat May 07, 2011 10:50 am

நன்றி மணி......மக்களின் நம்பிக்கை அபரி மிதமானது என்பதற்கு ஒரு சான்று...கஷ்ட காலம்.....[/quote]

நம்பிக்கை இல்லையென்றால் வாழ்க்கை இல்லை ராமன் அவர்கள் நம்பும் அவர்கள் கடவுள் அவர்களை ஒரு போதும் கைவிடுவதில்லை
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by பிஜிராமன் on Sat May 07, 2011 11:00 am

maniajith007 wrote:
நன்றி மணி......மக்களின் நம்பிக்கை அபரி மிதமானது என்பதற்கு ஒரு சான்று...கஷ்ட காலம்.....

நம்பிக்கை இல்லையென்றால் வாழ்க்கை இல்லை ராமன் அவர்கள் நம்பும் அவர்கள் கடவுள் அவர்களை ஒரு போதும் கைவிடுவதில்லை [/quote]

உண்மை மணி.....நன்றி....
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma on Thu Apr 16, 2015 11:01 pm

இந்த வருடம், ஏப்ரல் 21 ஆம் தேதி அட்சய திருதியை வருகிறது. எனவே இந்த திரியை மேலே கொண்டு வருகிறேன் புன்னகை..............மஹாலக்ஷ்மியை துதித்து, ஏழைகளுக்கு அன்ன தானம் செய்து மகிழ்வோம் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by monikaa sri on Fri Apr 17, 2015 3:27 am

நல்ல எச்சரிக்கை உணர்வை தரக்கூடிய பதிவு!தங்கத்தின் மீது மோகம் கொள்ள வைத்து தான ,தர்மத்தை மறக்கச்
செய்யும் வியாபாரிகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்!நன்றி!
avatar
monikaa sri
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 235
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma on Fri Apr 17, 2015 9:04 pm

அள்ள அள்ளக் குறையாது வழங்கும்

அக்ஷய திருதியை-21.4.2015சித்திரை மாதம் பிறக்கிறது என்றவுடன் நம் அனைவரின் நினைவிற்கும் வருவது அக்ஷய திருதியை. அதுவும் கடந்த சில வருடங்களாக தீபாவளிக்கு இணையாகப் பெண்களால் பேசப்படும் பொன்னாள். நகைக்கடை அதிபர்களின் திருவிழா நாள் இது. ஏழை, பணக்காரன் என யாராக இருந்தாலும் சரி, தங்களால் இயன்ற குண்டுமணி தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்ற கருத்து தற்போது வெகுவாகப் பரவியுள்ளது. அப்படி என்னதான் சிறப்பு இந்த அக்ஷய திருதியைக்கு?

பிரதி வருடம் சித்திரை மாதம் அமாவாசை கழிந்த மூன்றாவது நாள் இந்த அக்ஷய திருதியை நாள் வரும். ‘க்ஷயம்’ என்றால் குறைவு, ‘அக்ஷயம்’என்றால் குறைவில்லாத அல்லது என்றுமே குறையாத, என்று பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு யுகத்திலும் இந்த அக்ஷய திருதியை நாள் ஆனது மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பிரம்மா தனது படைப்புத் தொழிலைத் துவங்கியது இந்த நாளில்தான். அக்ஷய திருதியை நாளில் தனது படைப்புத் தொழிலைத் துவங்கிய பிரம்மா எந்தவிதக் குறையும் இன்றி தொடர்ந்து தனது பணியைச் செய்துகொண்டிருக்கிறார்.

சந்திரன் தனது 27 மனைவிகளுள் ரோகிணியின் மீது மட்டும் தீராத காதல் கொண்டு மற்றவர்களை புறக்கணிக்கிறான் என்ற புகாரின் பேரில் அவனது மாமனார் ஆன தக்ஷனின் சாபத்திற்கு உள்ளாகி தேய்ந்து போகிறான். அந்த நிலையில் சந்திரன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து சாப விமோசனம் பெற்ற நாள் இந்த அட்சய திருதியை. சந்திரனின் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் ‘அக்ஷய’ என்று வரம் அருளினார். தக்ஷனின் சாபத்தால் தேய்ந்து வந்தாலும் இறைவன் அருளிய அக்ஷய என்ற வரத்தால் மீண்டும் சந்திரன் வளரத் தொடங்குகிறான் என்பது புராண காலத்துக் கதை.

இக்ஷ்வாகு குல இளவரசன் பகீரதனின் விடாமுயற்சி யால் கங்கை நதி ஆகாயத்தி லிருந்து பூமிக்கு வந்தது இந்த அக்ஷய திருதியை நாளன்றுதான். அன்று முதல் இன்று வரை வற்றாத ஜீவ நதியாக கங்கை பிரவாகித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் நிஜத்தில் கண்டு வருகிறோம். அக்ஷய திருதியை நாள் அன்று நம் பாரத பூமிக்கு வந்ததால் இன்றளவும் குறைவில்லாமல் நீர்வளம் நிரம்பிய நாடாக நம் தேசத்தை கங்காதேவி காத்துக்கொண்டிருக்கிறாள்.

துரியோதனின் உத்தரவின் பேரில் திரௌபதியின் துகிலை துச்சாதனன் உரியும்போது ‘கண்ணா... நீயே எனக்கு கதி’ என்று தன்னைச் சரணடைந்த அந்த அபலையின் மானத்தைக் காக்க கண்ணன் ஓடோடி வருகிறான். அவன் அருளால் புடவையின் நீளம் குறையில்லாமல் வளர்ந்து கொண்டேயிருக்க, துகிலுரித்த துச்சாதனன் மயங்கி விழுந்ததுதான் மிச்சம். இவ்வாறு திரௌபதியின் மானம் காக்க கண்ணன் புடவையை அருளியது இந்த அக்ஷய திருதியை நாளில் என்கிறது மகாபாரதம்.

திருமால் தனது பத்து அவதாரங்களில் ஒரே நேரத்தில் இரண்டு அவதாரமாக வாழ்ந்து காட்டியது துவாபரயுகத்தில். பலராமன் ஆகவும், கண்ணன் ஆகவும் யதுகுல சகோதரர்களாக, கோசம்ரக்ஷணை என்பது மிகவும் இன்றியமையாதது என்பதை இவ்வுலகிற்கு எடுத்துக் காட்டினர். பசுக்களை பராமரித்தால் குறையில்லாத செல்வம் நிறைந்திருக்கும் என்பதை உலகிற்கு உணர்த்திய பலராமன் பிறந்தது இந்த அக்ஷய திருதியை அன்றுதான்.

பாண்டவர்கள் வனவாசம் செய்த காலத்தில் காட்டினில் உணவு சமைக்க மிகவும் சிரமப்பட்டாள் திரௌபதி. பீமனுக்கு உணவு சமைக்க வேண்டும் என்பதற்காக அல்ல, தங்களை நாடி வரும் முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் குறையின்றி அமுது படைக்க இயலாது போகிறதே என்று மனம் வருந்தினாள். செய்வதறியாது திகைத்த திரௌபதி சூரிய பகவானை நினைத்து வழிபட்டாள். சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை நாளில் அள்ள அள்ளக் குறையாத அக்ஷய பாத்திரத்தை திரௌபதிக்கு வழங்கி ஆசீர்வதித்தார் சூரிய பகவான். குறையின்றி உணவினை வழங்க வல்லது என்பதால் அதற்கு அக்ஷய பாத்திரம் என்ற பெயர் வந்தது.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma on Fri Apr 17, 2015 9:04 pm

இதெல்லாம் சரி, தங்க நகை வாங்கி வைப்பதற்கும், இந்த அக்ஷய திருதியை நாளுக்கும் என்ன சம்பந்தம்? செல்வத்திற்கு அதிபதியான குபேரன் முதன்முதலில் மகாலக்ஷ்மியிடம் இருந்து செல்வத்தைப் பெற்ற நாள் இந்த அக்ஷய திருதியை நாள். செல்வத்தினை பாதுகாத்து, பெருக்கும் பொறுப்பினை மகாலக்ஷ்மி தாயாரிடம் அக்ஷய திருதியை நாளில் பெற்றுக் கொண்டதால் குபேரனின் கிடங்கினில் செல்வம் என்பது அள்ள அள்ளக் குறையாமல் வளர்ந்து கொண்டேயிருக்கிறது என்பது நமது நம்பிக்கை.

இது மட்டுமல்ல, வறுமையில் வாடிய குசேலர் தனது பால்ய சிநேகிதனும், துவாரகையின் அரசனுமான ஸ்ரீகிருஷ்ணனை சந்திக்கச் சென்றபோது தனது மனைவி கொடுத்து அனுப்பிய அவல் மூட்டையை கண்ணனிடம் கொடுக்காமல் தயங்கி நிற்க, புரிந்து கொண்ட கண்ணன் குசேலனின் கையில் இருந்த அவலை வாங்கி வாயில் போட்டு ‘அக்ஷய’ என்று வாய் திறந்து அருளினான். மறு கணமே சுதாமா என்கிற குசேலனின் குடிசை மாட மாளிகையாக மாறியதோடு மட்டுமல்லாமல் அவனது இல்லத்தில் செல்வமும் நிறைந்தது. இவ்வாறு கண்ணன் தனது வாய் திறந்து ‘அக்ஷய’ என்று அருளியது இந்த அக்ஷய திருதியை நாளில்.

இந்த கலியுகத்தில் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி சங்கரர் தனக்கு நெல்லிக்கனியை பிட்சையிட்ட ஏழைப் பெண்மணியின் துயர்துடைக்க கனகதாரா ஸ்தோத்ரம் படைத்து மகாலட்சுமியின் அருளினால் அந்தப் பெண்மணியின் இல்லத்தில் செல்வத்தை நிறையச் செய்தது இந்த அக்ஷய திருதியை நாளில். கனகம் என்றால் தங்கம் என்று பொருள். தாரை என்றால் விடாமல் பொழிவது. இவ்வாறு தங்கத்தை விடாமல் பொழியச் செய்யும் சக்தி படைத்த கனகதாரா ஸ்தோத்ரத்தை சங்கரர் இயற்றியது இந்த அக்ஷய திருதியை நாளில் என்பதால் இந்த நாளானது தங்கத்திற்கு முக்கியத்துவம் தரும் நாளாக அமைந்துவிட்டது.

அக்ஷய திருதியை என்றதும் தங்கத்தினை மட்டும் நினைவில் கொள்ளும் நாம் மேற்சொன்ன கதைகளில் இருந்து முக்கியமான ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள மறந்துவிடுகிறோம். அக்ஷய திருதியை நாளில் செல்வம் சேரும் என்பதை மட்டும் புரிந்துகொள்ளும் நம்மால் இந்தக் கதைகளில் சொல்லப்பட்டுள்ள உட்கருத்தினை அறிந்துகொள்ள இயலவில்லை. தனது வீட்டினில் பிட்சையிடுவதற்கு எதுவும் இல்லாவிட்டாலும் ‘பவதி பிட்சாந்தேஹி’ என்று வாசலில் வந்து நிற்கும் சங்கரனுக்கு அந்த ஏழைப் பெண்மணி தன்னால் இயன்ற நெல்லிக்கனியை எவ்வித தயக்கமும் இன்றி பிட்சையிட்டாள்.

கண்ணனுக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லையென்றாலும் தன்னால் இயன்ற அவலையும் வெல்லத்தையும் கலந்து தனது கணவனிடம் கொடுத்து அனுப்பினாள் ஏழை குசேலனின் மனைவி. வனவாசம் செய்யும்போது கூட அந்த கஷ்டமான சூழலிலும் தங்களை நாடி வரும் ரிஷிகளும், முனிவர்களும் வயிறார உண்ண வேண்டும்,

அவர்கள் பசியினைப் போக்க வேண்டும் என்பதற்காக சூரிய பகவானிடமிருந்து அக்ஷய பாத்திரத்தைப் பெற்றுக் கொண்டாள் திரௌபதி. ஆக, அக்ஷய திருதியை நாளில் அடுத்தவர்களுக்கு அன்னமிட வேண்டும் என்பதே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இறைக்கின்ற ஊற்றுதான் சுரக்கும். நாம் அள்ளி அள்ளி கொடுத்தால்தான் நம் வீட்டினில் அள்ள அள்ளக் குறையாத செல்வம் சேரும் என்பதே அக்ஷய திருதியை நாளில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியதாகும்.

ஜோதிடவியல் ரீதியாக ஆராய்ந் தால் நவகிரஹங்களில் நம் கண்களுக்குத் தெரிகின்ற சூரியனும், சந்திரனும் ஒரே நேரத்தில் உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் காலமே அக்ஷய திருதியை நாள். அதாவது, சூரியன் தனது உச்ச ராசியான மேஷத்திலும், சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷபத்திலும் அமர்ந்திருக்கும் காலமே அக்ஷய திருதியை நாள் ஆகும். சூரியனும், சந்திரனும்தான் நமக்கு உணவினை அளிக்கும் கோள்கள். நீர் வளத்தினைத் தருவது சந்திரன்.

சூரியனின் அருளில்லாவிட்டால் பயிர்கள் விளையாது. சூரியன், சந்திரனின் ஆசியினால்தான் பயிர்கள் விளைகின்றன. குறைவின்றி வயிறு நிறைய சாப்பிடுகிறோம். அவர்கள் உச்ச வலிமையோடு சஞ்சரிக்கும் காலத்தில் அன்னதானத்தினைச் செய்தோமேயானால் அன்னத்திற்கு என்றுமே பஞ்சம் வராது. தங்கத்தை நம்மால் சாப்பிடமுடியாது. எவ்வளவு தான் தங்க நகைகளைச் சேர்த்து வைத்தாலும், தவித்த வாய்க்குத் தண்ணீர் வேண்டும். தாகத்தைத் தீர்த்து வைப்பவனிடம்தான் தங்கமும் சேரும்.

எல்லாவற்றிற்கும் மேலாக சிவபெருமான் பிட்சாடனர் ஆக அலைந்தபோது அவருக்கு பிச்சையிட, அன்னையானவள் அன்னபூரணியாக வடிவெடுத்து வந்ததும் இந்த அக்ஷய திருதியை நாளில் என்று சிவபுராணம் சொல்கிறது. மகத்துவம் வாய்ந்த இந்த நன்னாளில் நகைகள் வாங்கி சேர்த்து வைப்பது மட்டும் நம் நோக்கமாகிவிடக் கூடாது.. அக்ஷய திருதியை என்றால் அன்னதானம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். (குறிப்பாக நகைக்கடை அதிபர்கள் அக்ஷய திருதியை நாளில் அன்னதானம் செய்வதன் மூலம் மேன்மேலும் தங்கள் வியாபாரம் சிறக்கக் காண்பார்கள்.

நகை வாங்குவதற்கு வரும் வாடிக்கையாளர்களுக்குக் கூட தங்களால் இயன்ற உணவினை அளிக்கலாம். வியாபாரம் பெருகுவதோடு வயிறு நிறையும் வாடிக்கையாளர்களின் வாழ்த்துகளையும் பெறலாம்.) இந்த நாளில் எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அது காலமெல்லாம் தொடர்ந்து கொண்டிருக்கும்.

அக்ஷய திருதியையின் பெருமையைப் புரிந்து கொண்டு அந்த நாளில் ஆதரவற்ற முதியவர்கள், அநாதைக் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்க்கு நம்மால் இயன்ற அன்னதானத்தினையும், பொருளுதவியையும் செய்வோம். தங்கம் மாத்திரமல்ல, எல்லாவிதமான வளங்களும் அள்ள அள்ளக் குறையாத அளவிற்கு நம் வாழ்வினில் வந்து சேரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

நன்றி ஆன்மிகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by விமந்தனி on Sat Apr 18, 2015 11:50 amavatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma on Sun Apr 19, 2015 10:43 pm

நன்றி விமந்தனி புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by ayyasamy ram on Mon Apr 20, 2015 1:09 pm

சூப்பருங்க
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37077
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma on Mon Apr 20, 2015 9:26 pm

மேற்கோள் செய்த பதிவு: 1131673

நன்றி ராம் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma on Sat May 07, 2016 11:43 pm

மே 9 வருகிறது அட்சய திருதியை!...அதனால் இதை மேலே கொண்டு வருகிறேன்.............புன்னகைவிவரங்கள் நாளை புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by anikuttan on Sun May 08, 2016 6:55 am

தங்க விற்பனையாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் இந்த அரசியல் வாதிகள் மக்களை ஏதாவது கூறி எளிதாக ஏமாற்றுவதை போல் நாமும் ஏன் எமாத்தமுடியாது என்ற வகையில் அவர்களால் முடிந்தவரை ஏதாவது கூறி விளம்பரங்களை ஓடவிட்டு மக்களை வாங்க தூண்டுகிறார்கள்.
avatar
anikuttan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 100
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by Hari Prasath on Sun May 08, 2016 12:49 pm

நல்ல பதிவு,இத்தனை நாள் அக்ஷய திருதியை நாளை பற்றி தவறான எண்ணத்தையே கொண்டிருந்தேன்.
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma on Sun May 08, 2016 11:26 pm

@anikuttan wrote:தங்க விற்பனையாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் இந்த அரசியல் வாதிகள் மக்களை ஏதாவது கூறி எளிதாக ஏமாற்றுவதை போல் நாமும் ஏன் எமாத்தமுடியாது என்ற வகையில் அவர்களால் முடிந்தவரை ஏதாவது கூறி விளம்பரங்களை ஓடவிட்டு மக்களை வாங்க தூண்டுகிறார்கள்.

உண்மை சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma on Sun May 08, 2016 11:32 pm

@Hari Prasath wrote:நல்ல பதிவு,இத்தனை நாள் அக்ஷய திருதியை நாளை பற்றி தவறான எண்ணத்தையே கொண்டிருந்தேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1206276

மேலே அனிக்குட்டன் சொன்னது போல இந்த வியாபாரிகள் தங்களுக்கு சாதகமாய் வளைத்து விட்டார்கள் அவ்வளவே புன்னகை .....ரொம்ப நல்ல நாள் அக்ஷய திருதியை !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma on Thu Apr 27, 2017 9:55 am

அட்சய திருதியை பற்றி பல புராணக் கதைகள் உள்ளன. அவற்றில் பொதுவாக அனைவருக்கும் தெரிந்த ஒன்று: கிருஷ்ணரும், குசேலரும் தமது குருகுலவாசத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். கிருஷ்ணர் கோகுலத்தை விட்டு நீங்கி துவாரகாபுரியின் மன்னரானார். ஆனால், குசேலரோ பரம ஏழையாக இருந்தார். அவருக்குத் திருமணமாகி 27 குழந்தைகள் இருந்தனர். தனது குழந்தைகளுக்கு அனுதினமும் உணவு அளிக்கவே அவர் பெரிதும் அவதிப்பட்டார். அவர் கொண்டு வரும் சிறு பொருளையும் சிக்கனமாக இருந்து குடும்பத்தை கவனித்தாள் அவரது மனைவி சுசீலை.

இந்த சூழ்நிலையில் ஒருநாள் குசேலர் வாழ்ந்துவந்த கிராமத்தில் கிருஷ்ணர் தன்னிடம் உதவி வேண்டி வருவோர்க்கு அள்ளி அள்ளிக் கொடுப்பதாகக் கேள்விப்பட்டாள் சுசீலை. தங்களுடைய இந்த வறுமை நிலையைப் போக்க எண்ணிய அவள், குசேலரிடம் விபரத்தைக் கூறி, பால்ய நண்பரான கிருஷ்ணரை சந்தித்து உதவி கேட்குமாறு கூறினாள்.

முதலில் அதை ஏற்றுக் கொள்ளாத குசேலர், பிறகு மனைவியின் வற்புறுத்தலின் பேரில் கிருஷ்ணரை சந்திக்கச் சென்றார். கிருஷ்ணருக்குப் பிடித்த அவலை ஒரு துணியில் சிறு மூட்டையாகக் கட்டிஎடுத்துச் சென்றார். குசேலர் வருவதை கேள்விப்பட்ட கிருஷ்ணர் அரண்மனை வாசலுக்கே ஓடி வந்து அவரை வரவேற்றார். சிறப்பான உபசரிப்பு வழங்கினார். கிருஷ்ணரின் செல்வவளத்தைக் கண்ட குசேலர் மிக்க மகிழ்ச்சிகொண்டார். ஆனால், இவ்வளவு பெரிய அரண்மனையில் உயரிய விருந்துண்ணும் கிருஷ்ணருக்கு, தான் கொண்டுவந்த அவலை எப்படி கொடுப்பது என தயங்கினார். அதை அறிந்த கிருஷ்ணர் குசேலர் வைத்திருந்த அவலை நட்பு உரிமையுடன் வாங்கி ஒவ்வொரு பிடியாக எடுத்து உண்டார். முதல் பிடி அவலை எடுத்து தன் வாயில் போட்டுக் கொண்டதும் அட்சயம் என்றார் கிருஷ்ணர்.

அடுத்த நொடியே, கிராமத்தில் இருந்த குசேலரின் வீடு பெரிய மாட மாளிகையாக மாறியது. இரண்டாம் பிடி அவலை எடுத்ததும் அவ்வாறே கூற குசேலரின் மாளிகையில் அத்தனை விலை உயர்ந்த பொருட்களும் தோன்றின. குசேலர் குபேரரானார். குசேலருக்கு கிருஷ்ணர் அருள்புரிந்தது ஒரு அட்சய திருதியை நன்நாளில்தான். அமாவாசைக்கு பிறகு வரும் 3ம் நாள் திருதியை. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் 3ம் நாள் அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது. எப்படி அட்சயப்பாத்திரத்திற்கு பெருமை உள்ளதோ அதுபோல் தான் அட்சய திருதியைக்கும் உண்டு. இந்த நாளில் செய்யும் எந்த நல்ல காரியமும் நற்பலனை தரும்.

* இந்த நாளில் வாங்கப்படும் எந்த பொருளும் குறையாமல் நிறைந்து இருக்கும். அட்சய திருதியையன்று மகாலட்சுமியை வணங்கினால் செல்வம் பெருகும்  என்பது ஐதீகம். அந்நாளில் ஏழைகளுக்கு ஏதாவது ஒரு பொருளை தானம் செய்து நாம் வாங்கும் எந்த பொருளும் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும்.

* அட்சய திருதியை நாளில் லட்சுமி குபேர பூஜை நடத்துவது அதிக பலன்களை தரும்.

* அட்சய திருதியை நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, புதிய பொருட்கள் வாங்குவது என எல்லாவற்றையும் தாண்டி 4 ஏழைகளுக்கு தானம்  வழங்குவது அதிக சிறப்பு.

* அட்சய திருதியை புனித ஸ்தலங்களில் நீராடி இறைவனை வணங்கினால் பாவங்கள் விலகிவிடும் என்பது ஐதீகம்.

* அட்சய திருதியை நாளில் ஏழைகளுக்கு தானம் வழங்குவது மட்டுமின்றி கால்நடைகளுக்கும் உணவு வழங்கலாம். அதுவும் பசு மாட்டுக்கு வாழைப்பழம்  வழங்கி வணங்கினால் நல்லது. பசுமாட்டில் அனைத்து தெய்வங்களும் இருப்பதாக நம்புவதால், வாழைப்பழம் வழங்குவது அனைத்து இறைவனுக்கு படைப்பதற்கு சமம்.

* அட்சய திருதியை நாளில் தங்கம் மட்டுமின்றி. ஒருபடி உப்பு வாங்கி வீட்டில் வைத்தாலும் பலன் கிடைக்கும்.

* ஜைன மதத்திலும் அட்சய திருதியைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஜைனர்கள் அட்சய திஜ் என்று அழைக்கின்றனர். இதை மிக புனிதமான  நாளாகவே கருதுகின்றனர். தானம் செய்வதற்கு ஜைனர்கள் இந்த நாளையே அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

* அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது மட்டுமின்றி வீடு கட்டுதல், வியாபார நிறுவனங்களை தொடங்குதல், புனித சுற்றுலா செல்வது  போன்றவற்றையும் செய்யலாம்.

* பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகம் வசிக்கும் யாதவர்கள், இந்நாளை விளைபொருட்கள் விதைப்புக்கு உகந்த நாளாக கருதுகின்றனர்.

தினகரன்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma on Thu Apr 27, 2017 9:58 am

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: வேதங்களில் இதுபற்றி சொல்லப்பட்டிருக்கிறது. யசூர் வேதம் போன்றவற்றில் வாழ்வியல் முறைகளில் சிலதெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. எந்தெந்த நாட்களில் எதை எதை வாங்கி வைத்தால் நலமாக இருக்கும், வளர்ச்சி அடையும் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் அதில் பிரதானமாக என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றால், வெள்ளை நிறப் பொருட்கள் வாங்கினால் நலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிறகு மஞ்சள் நிறப் பொருட்கள் வாங்குவது நலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து ஒருவர் வெள்ளை நிறத்திற்குப் பிளாட்டினம் வாங்கி அணியுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மஞ்சள் நிறத்திக்கு தங்கத்தை வாங்குங்கள் என்கிறார்கள். இதெல்லாம் ச‌ரியானத‌ல்ல.

பொதுவாக தானியங்களில்தான் லட்சுமி நிறைந்திருக்கிறாள். அதனால்தான் திருமணம் முடிந்த நங்கைகள் முதன் முதலாக மாப்பிள்ளை வீட்டிற்கு வரும்போது மரக்காவில் பொன்னி அரிசி போட்டு அதன் மீது காமாட்சி விளக்கு ஏற்றி அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு உள்ளே வரச்சொல்வார்கள்.

அட்சய திருதியை அன்றைக்கு முனை முறியாத பச்சரிசி வாங்குவது நல்லது. கைக்குத்தல் அரி‌சிதான் முனை முறியாத அரிசி. அந்த முனை முறியாத அரிசியை புடைத்து எடுத்து, பணப் பெட்டியில், பீரோவில் கொஞ்சம் வைப்பது நல்லது.

அதற்கடுத்து மஞ்கள், இதில்தான் எல்லா மகிமையும் உள்ளது. மஞ்சள்தான் எல்லா வகையிலும் நல்லது தரக்கூடியது. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம், மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம். இதில் கஸ்தூரி மஞ்சள் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தனி சக்தி உண்டு.

அடுத்தது, அட்சய திருதியை அன்றைக்கு வேதங்கள் என்ன சொல்கிறது, உத்திர கால விரதம் என்ற நூலில் கூட எ‌ன்ன சொல்லப்பட்டுள்ளது எ‌ன்றா‌ல், அன்றைக்கு தானம் செய்யுங்கள் என்றுதான் சொல்கிறது. அன்னதானம் செய்யுங்கள், வஸ்திர தானம் துணி தானம் கொடுங்கள். அதாவது அடுத்தவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களை கொடுக்க வேண்டும். காசாக கொடுக்கக்கூடாது. அவர்களுடைய தேவை என்னவோ அதை பூர்த்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

தவிர, அட்சய திருதியை அன்றைக்கு திதி கொடுக்க வேண்டும். முன்னோர்களை நினைத்து மந்திரங்கள் சொல்லி திதி கொடுக்க வேண்டும். அப்படி திதி கொடுக்கும் போது வாழைக்காய், பச்சரிசி, துணி, பணம் கொடுத்துதானே திதி கொடுக்கிறோம். அதுவும் ஒரு வகையான தானம்தானே. அதாவது மந்திரங்கள், வேதங்கள் படிப்பவர்களை மதித்து தானம் தருவது. இதுபோன்றுதான் சொல்லப்பட்டிருக்கு.

தங்கம் என்பது லட்சுமியின் ஒரு அம்சம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வெள்ளியும் வாங்கலாம், அதில் ஒன்றும் தவறு இல்லை. பல நூல்கள் வெள்ளியை மிகவும் உயர்வாக குறிப்பிடுகிறது. அதற்குப் பிறகுதான் தங்கத்தையே கொண்டு வருகிறது. அதனால் வெள்ளியும் வாங்கலாம். ஆனால், தங்கம் வாங்கினால்தான் நல்லது என்பது தவறு.

அதற்குப் பதிலாக முனை முறியாத பச்சரிசி, மஞ்சள், வெள்ளி போன்ற பொருட்களெல்லாம் வாங்கி வைக்கும் போது நிச்சயம் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

எல்லாவற்றையும் தாண்டி மனதார, வாயார, வயிறார யாராவது வாழ்த்தினால்தான் அட்சய திருதியை அன்று நமக்கு நல்லது நடக்கும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma on Thu Apr 27, 2017 10:01 am

அளவற்ற நற்பலன்களை தரும் அட்சய திருதியை !முதல் மாதமான சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை நாள் “அக்‌ஷய திருதியை” என்ற சிறப்பு பெயருடன் சிறப்பு மிக்க நாளாக போற்றப்படுகிறது.

அளவற்ற நற்பலன்களை தரும் அட்சய திருதியை !

நமது அன்றாட வாழ்வில் நட்சத்திரங்கள், திதிகள் எல்லாம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் குறிப்பாக சில மாதங்களில் வரும் நட்சத்திரங்களும், திதிகளும் தனி சிறப்பு வாய்ந்தவை. அந்த வகையில் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதியை மகாலட்சுமிக்கு உரிய திருநாள் என்றே சாஸ்திரம் கூறுகிறது. அதிலும், குறிப்பாக தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை நாள் “அக்‌ஷய திருதியை” என்ற சிறப்பு பெயருடன் சிறப்பு மிக்க நாளாக போற்றப்படுகிறது.

அட்சயம் என்றால் என்றும் தேயாது, குறையாது, வளர்தல் என்ற பொருளை தருகிறது. அதனால் தான் அட்சயதிருதியை நாளில் நாம் செய்யும் நற்காரியங்கள் எல்லாம் பன்மடங்கு பெருகும். அதன் பலன்களும் நமக்கு பெருமளவு கிடைக்கும். வாங்கும் பொருட்களும் அழியாச்செல்வமாய் வீட்டில் தங்கி நிலைத்திருக்கும் என்பது ஆன்றோர் கருத்து. மகாகவி காளிதாசன் எழுதிய உத்திர காலாமிருதம் என்ற நூலில் திதிகளில் மிகவும் சிறப்பு மிக்கது திருதியை திதி என குறிப்பிடுகிறார். எல்லா நலன்களும் அள்ளி வழங்கும் திருதியை நன்னாள் அட்சய திருதியை திருநாள் ஆகும்.

ஜோதிட ரீதியாக பார்க்கும் போது நவக்கிரகங்களில் சூரியனை தந்தையாகவும், சந்திரனை தாயாகவும் அழைக்கின்றோம். இவ்விரண்டு கிரகங்களும் ஓரே நாளில் உச்சபலத்துடன் சஞ்சரிக்கும் காலம் தான் “அக்‌ஷயதிருதியை”. அதாவது மேஷத்தில் சூரியனும், ரிஷபத்தில் சந்திரனும் இருக்கும் நன்னாள். பெரியோர் அனைவரையும் வாழ்த்தும் போது சூரிய சந்திரர் போல் நிலைத்து வாழ்க என்று வாழ்த்துவர். அதாவது நீண்ட காலம் நிலைத்து வாழ சூரிய, சந்திரனும் வலுப்பெற்றிருப்பது மிக முக்கியம். எனவே தான் அப்படி வாழ்த்துகிறார்கள்.

.................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by krishnaamma on Thu Apr 27, 2017 10:02 am

மேலும் சூரியன் என்பவர் பிதுர்காரகர், சந்திரன் மாத்ருகாரகர் இவர்கள் இருவரும் பலம் பெற்றும் இருக்கும் நன்னாள் அக்‌ஷயதிருதியை என்பதால் அதில் நாம் மேற்கொள்ளும், பூஜைகளும், தானதர்மங்களும், தர்ப்பணங்களும், தொழில் மற்றும் திருமண நிகழ்வுகளும், பொருட்களை வாங்குதல் என அனைத்தும் பன்மடங்காகும், தான தர்மத்தின் மூலம் கிடைக்கும் பலன்களும் பன் மடங்கு பெருகி நம்மை வாழ்விக்கும். இந்நாளில் சிறப்பமிக்க பூஜைகளும், தானதர்மமும் செய்து பன்மடங்கு அருளை பெறுவோம்.

அட்சயதிருதியை நாளில் நாம் செய்யும் தானதர்மங்கள் அளவற்ற புண்ணியத்தை சேர்க்கும்.

“பிறருக்கு நாம் கொடுப்பதெல்லாம் தமக்கே தாம் கொடுத்து கொள்வது ” என்பதாகும் என்கிறார் ரமணர். அதாவது நாம் பிறருக்கு கொடுக்கும் தான தர்மங்கள் மூலம் நமக்கு அதற்கேற் பொருட்களும், புண்ணியங்களும் மீண்டும் கிடைக்கிறது. அதுபோல், பிறருக்கு தருகின்ற அளவிற்கு வசதி பெருக்கமும் அதிகரிக்கிறது. அட்சயதிருதியை நன்னாளில் சுயநலமான பணிகளை மேற்கொள்வதை விட பிறருக்கு தேவையான தர்மத்தை வழங்குவது நல்லது.

பள்ளியில் பயில முடியாத குழந்தைகளுக்கு கல்வி உபகரணம், புத்தகம் வாங்கிதருதல், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று உதவிடுதல், உணவற்ற ஏழைகளுக்கு உணவு வழங்குதல் போன்றவாறு உதவிகளை செய்தல் வேண்டும்.

தானதர்மம் செய்ய பெரிய செல்வந்தராக தான் இருத்தல் வேண்டும் என்பது இல்லை நம்மால் இயன்ற சிறு பொருளையாவது வழங்குவது மிக நன்மை பயக்கும். அக்‌ஷய திருதியை நன்னாளில் நீர்மோர், தயிர்சாதம், பானகம் போன்றவகளை கூட மக்களுக்கு தானமாக வழங்குதல் நல்ல பலன்களை தரும்.

நன்றி : மாலைமலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அக்ஷய திருதியை ! 29-04-2017

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum