புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_m10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10 
37 Posts - 51%
heezulia
அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_m10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10 
33 Posts - 45%
T.N.Balasubramanian
அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_m10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_m10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_m10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_m10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_m10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_m10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_m10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10 
17 Posts - 2%
prajai
அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_m10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_m10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_m10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10 
4 Posts - 1%
jairam
அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_m10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_m10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10 
4 Posts - 1%
Jenila
அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_m10அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்"


   
   
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Aug 27, 2011 1:51 pm

அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் பன்னிரண்டாவது நாளை எட்டியுள்ளது. லோக்பால் மசோதா தொடர்பாக அவரது குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது மத்திய அரசு என்று நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதா நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் வேண்டுமானால் மசோதா தொடர்பான யோசனைகளை அந்தக் குழுவிற்கு அனுப்பலாம் என்றும் அந்த யோசனைகள் மசோதாவில் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவே, அண்ணாஹசாரே குழுவினருடன் நடத்திய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பேசிய ஷரத்துக்கள் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டுள்ளது என்கிற அதிருப்தியின் காரணமாகவே முழுமையான மசோதா தயாரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையிலேதான் ஹசாரே அவர்கள் இப்போது தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.

ஹசாரேவுக்கான நாளுக்கு நாள் பெருகும் ஆதரவுக் குரல்கள் மத்திய அரசினைப் படிப்படியாக இறங்கி வர வைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். திஹார் சிறையில் அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த போதே வெளியில் அண்ணாவுக்கு ஆதரவு பெருக ஆரம்பித்து விட்டது. அண்ணா ஹசாரே வெறும் அரசியல்வாதியல்ல அவரது போராட்டங்களைச் சட்டென்று ஒடுக்கி விடுவதற்கு. அவரது பேச்சும், அவ்வப்போதைய அறிவிப்புகளும் மிகவும் கண்ணியமாக உள்ளன. மகாத்மாவின் அடியொட்டிய தியாகத்தின் அடிப்படையிலானவை என்பதற்கான அடையாளங்கள் அங்கே உணரப்படுகின்றன. அண்ணலின் உண்ணாநோன்பு என்பது தன்னை வருத்திக் கொள்ளும் சத்தியத்தின் அடிப்படையிலானது. அதன் சக்தி மகத்தானது. அதன் மகிமை நம் மக்களின் ஊனோடு உணரப்பட்ட ஒன்றாக இன்றும் விளங்குகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

மக்கள் எல்லாக் காலங்களிலும் நேர்மையின் பக்கமானவர்கள்தான். அது அவர்களின் ரத்தத்தோடு ஊறிய ஒன்று. காலத்தின் கட்டாயத்தில் சமூகம் இப்படிச் சீரழிந்து போய்க்கிடக்கிறதே என்கிற வேதனையில் தங்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேறு வழியின்றி அவர்கள் சில பிறழ்ச்சிகளை மேற்கொண்டிருக்கலாம். தொலையுது போ என்கிற வேதனையின் பாற்பட்டவை அவை. ஆனால் அப்படியான ஒரு ஜோதி அவர்களின் கண்களுக்குத் தென்படுமானால் நிச்சயம் அதை வணங்கத் தவறமாட்டார்கள் என்பதன் அடையாளம்தான் அண்ணாஹசாரே அவர்களுக்கு இன்று கிடைத்துள்ள மக்களின் ஆதரவு.

நம் அரசியல்வாதிகள் விழிப்போடு வேறு வழியின்றிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அண்ணா ஹசாரேவுக்குத் தங்கள் பகிரங்க ஆதரவைத் தெரிவிப்பதா வேண்டாமா, அப்படித் தெரிவித்தால் அவை அவர்களுக்கு நன்மை பயக்குமா பயக்காதா, அதன் மூலம் தேர்தல் அரசியலுக்கு அது சாதகமாய் அமையுமா அமையாதா என்பதெல்லாம் அவர்களின் யோசனையாகவே இருந்து கொண்டிருக்கிறது.

இந்த அரசியல்வாதிகள் அப்படித் தங்களின் பகிரங்க ஆதரவைத் தெரிவித்தால் அம்மாதிரி ஒரு கட்டத்தில் அதை எப்படி எதிர்கொள்வது, அதை முழுமையாக ஏற்றுக் கொள்வதா வேண்டாமா அல்லது இருந்து விட்டுப் போகட்டும் என்று மேம்போக்காக விட்டுவிடுவதா அல்லது நல்ல விஷயத்திற்குத்தானே ஆதரவு கொடுக்கிறார்கள் என்று அருகில் இழுத்து நிறுத்திக் கொள்வதா அல்லது முற்றிலும் ஏற்பதற்கில்லை. இது தேசத்தின், இந்த மக்களின் முழுமையான நலனின் பாற்பட்ட தன்னலமற்ற தியாகத்தின் அடிப்படையிலான விஷயம். எனவே நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று பகிரங்கமாக அறிவிப்பதா, அப்படி அறிவிக்கும் பட்சத்தில் அது எந்த அளவுக்கு இந்த நன்னோக்கைப் பாதிக்கும், கடைசிவரை கொண்டு செல்வதற்கு இவர்களின் கைகளையும் சேர்த்துப் பிடித்தே முன்னேற வேண்டுமா, கூடாதா என்று பல்வகையிலும் அண்ணா ஹசாரே குழுவினர் இதுவரை யோசித்திருக்க வாய்ப்பேயில்லை. இது போகப் போகத்தான் எப்படித் திசை மாறக் கூடும் என்று பார்க்க வேண்டும்.

ஆனால் அண்ணா ஹசாரேவுக்கு இப்பொழுது மாணவர்களின் ஆதரவு பெருகியிருக்கிறது. மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும், மாநிலங்களின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இந்த ஆதரவின் அலைகளைக் காண முடிகிறது. கூடியிருக்கும் கூட்டத்தினரின் எண்ணிக்கை ஒரு அளவாக இருந்தாலும், வந்து ஆதரவு தெரிவித்துப் பதிவேட்டில் கையொப்பமிட்டுச் செல்வோரின் எண்ணிக்கை அதிகம்.இது அலைகடலெனப் பெருகும் வாய்ப்பு உண்டு என்றே நம்பலாம். மக்கள் அமைதியான போராட்டத்திற்கு என்றுமே தயாரானவர்கள்தான். கலகத்தை விரும்பாதவர்கள். மொத்தமான அமைதிப் போராட்டத்தில் ஏற்படும் நஷ்டங்களை எதிர்கொள்ளும் மனநிலை உண்டு என்று சொல்லலாம். நம் மக்களுக்கு அந்த அளவுக்கான சகிப்புத் தன்மையைக் கற்றுக் கொடுத்தது நம் தேசத் தந்தை மகாத்மாவின் அஹிம்சைக் கொள்கைதான். அது இன்னும் உயிரோட்டமாக நம் மக்களின் ஊனில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த இடங்களிலெல்லாம் நம் கண் முன்னே பளிச்சென்று தெரிவது நமது தேசியக்கொடிதான்.

தேசியக்கொடி பிடித்து நமது தேசத்திலேயே, நமது தேசத்திற்காக, நமது மக்களுக்காகப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எதை, யாரை எதிர்நோக்கி? காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை எதிர்த்து. அதாவது அதன் தலைமையிலான மத்திய அரசினை எதிர்த்து. நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலான காங்கிரஸ்காரர்கள் என்பது வேறு. இப்போது இருப்பவர்கள் என்பது வேறு. இவர்களின் பேச்சும் நடவடிக்கைகளும் வெறும் அரசியல்வாதியின் அடையாளங்களாகவே இன்றுவரை பரிணமிக்கிறது. அன்றிருந்தவர்கள் தேசியவாதிகள். சுயநலமில்லாதவர்கள். இன்றிருப்பவர்கள் எப்படியென்று விலாவாரியாகச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. மக்கள் நன்கு அறிவார்கள். ஊடகங்கள் அந்தப் பணியைச் செவ்வனே செய்து கொண்டிருக்கின்றன. அது காண்பிக்கக் கூடிய செய்தியில் எது நியாயம், எது தவறு என்று மக்கள் நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கிறார்கள்.

தேச பக்தியும் தெய்வ பக்தியும் நிறைந்த நாடு நமது இந்தியா. அப்படித்தான் ஆரம்பித்தது. இன்றும் அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. அரசியலைச் சாக்கடையாக்கி, சுயநலமிகள் தலை தூக்கியதால் அது பெரும் விருட்சமாகி நம்மையெல்லாம் பயமுறுத்துகிறது. ஆனாலும் சத்தியத்திற்கு என்றுமே அழிவில்லை. அதன் அடையாளமாகத்தான் அண்ணா ஹசாரே தோன்றியிருக்கிறாரோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

ஆட்சியாளர்களுக்கும் சரி, அண்ணா ஹசாரேக்கும் சரி, இந்த தேசத்தின் நலன், தேசத்தை உள்ளடக்கிய இந்த மக்களின் நலன் என்ற ஒன்றே மையப்புள்ளியாக இருக்குமேயானால் முழுக்க முழுக்க நன்மை பயக்கும் ஒரு முழுமையான லோக்பால் மசோதா நிறைவேற்றமாகும். அப்படியான ஒரு நோக்கம் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும், ஆட்சியாளர்களுக்கு இருக்கிறதா என்பதுதான் இந்த நிமிடம் வரையிலான சந்தேகமாக இருந்து கொண்டிருக்கிறது. இழுக்கும் இழுவையைப் பார்த்தால் இது ஊர்ஜிதமாகிறது.

அந்த அதிருப்தியோடேயே மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உயிரோசை நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 27, 2011 3:40 pm

அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக