ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 10:31 pm

First topic message reminder :

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு வைரமுத்து


'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா 2006 டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.


[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Fri Aug 06, 2010 7:03 am

பாயில கெடந்த பயல மடியில தூக்கிவச்சுக் கொஞ்சிட்டு, சட்டைக்கு உள்கூட்ல கையவிட்டு தங்கச் சங்கிலிய எடுத்துப் பிள்ள கழுத்துல போட்டு, "கைக்காசு போட்டுச் செய்முறை செய்ய வக்கில்லைன்னாலும், கடனத் திருப்பிக் கட்டத் தெம்பு இருக்கு தாயி. எம் மகளுக்கு ஒன் ஆத்தா போட்ட சங்கிலிய ஒம் மகனுக்கு நான் திருப்பிப் போட்டிருக்கேன்"னு சொல்லி வயசான கண்ல அழுதாரு.

களி தின்டுக்கிட்டிருந்தவ தன்னையறியாம எச்சிக் கையெடுத்துக் கும்பிட்டா பெரியவர.

கோழியடிச்சு கும்பா நெறையக் கொழம்புவச்சு நல்லெண்ண ஊத்தி எலும்பில்லாத கறியா எடுத்து, "தின்னு மகளே தின்னு"ன்னு திங்கவச்சு அவ ஒடம்பத் தேத்த, மூணாம் நாளே கண்ணு கசிய ஆரம்பிச்சிருச்சு காம்பு. மொதல்ல மஞ்சளா வருது சீம்பாலு. முட்டி முட்டி முண்டுது பிள்ள. யப்பே! ஒக்காந்துக்கிட்டே பறக்கிற மாதிரியில்ல இருக்கு பயபுள்ள பால் குடிக்கிறது!

கடவுளே! இதுல யார் சொகம் பெருசு..? குடுக்கிற தாய்க்கா? இல்ல குடிக்கிற பிள்ளைக்கா? இதுல ரெண்டு சொகம் எங்கயிருக்கு? பிள்ள சொகமும் சேந்து தாய்க்கு தாய் சொகமும் சேந்து பிள்ளைக்கு.

மூணாம் நாளு வந்து குமுஞ்சுபோனாக மொதலக்கம்பட்டி ஆளுக. அரிசி ஒரு பையில பேறுகாலச் செலவு ஒரு பையில நாலஞ்சு வெடக்கோழிக் குஞ்சுக கையில. ஆணும் பொண்ணுமாப் பத்துப் பன்னெண்டு பேர் வந்து, பிள்ள இடுப்புல ஒரு வெள்ளி அருணாக்கயிறையும் கட்டிவிட்டுட்டு, பெறந்து வந்துட்டாண்டா பீம மகராசான்னு பெருமையும் பேசிக்கிட்டாக.

பேறுகாலமான வீடு தீட்டு வீடு. ஒம்போது நாள் தீட்டுக் கழியாம அங்க யாரும் தங்குறதுமில்ல உங்குறதுமில்ல. செய்மொறையச் செஞ்சுபுட்டு, போயிட்டு வாரோம்னு பொழுதிருக்கப் போயிட்டாக. தாயும் பிள்ளையும் படுத்திருக்கிற பாயச்சுத்தி வட்டமா ஒரு சாம்பல்கோடு போட்டுவிடுவாக. அப்பிடிச் செஞ்சாப் பேய் பிசாசு அண்டாதுங்கிறது நம்பிக்கை. ஆனா, ஈ எறும்பு தாண்டாதுங்கிறதுதான் எதார்த்தம். அந்தச் சாம்பல் வட்டத்துக்குள்ள படுத்திருக்கா கருவாச்சி. பல்லு மொளைக்காத பிள்ள வாயில கட்ட வெரல வச்சுக் "கடி கடி"ங்கிறா. இளம் ஈறு அழுத்த அழுத்த என்னென்னமோ ஆகுது பிள்ள பெத்த ஒடம்புக்குள்ள.

"இப்பப் பாயில கெடக்குற நீயா மகனே... பத்து மாசம் படுத்திருந்த என் வகுத்துக்குள்ள? ஒன்னிய நான் காப்பாத்தப்போறனா? என்னிய நீ காப்பாத்தப்போறயா? பெறந்து மண்ணுல விழுந்ததுல யிருந்து நீ அழுகவே இல்லையே மகனே. ஒனக்கும் சேத்து அழுதுட்டா ஆத்தா அதே போதும்னு நெனைக்கிறியா? நீ வகுத்துக்குள்ள வளந்து வரல மகனே என் வைராக்கியத்துல வளந்து வந்திருக்க. பொழைச்சுக் காமிக்கணுமடா இந்த பூமியில. அஞ்சாம் நாளே காஞ்சு விழுந்து போச்சப்பா ஒந்தொப்பூழ்க் கொடி. ஆனா, எந்த நாள்லயும் விழுந்திரக் கூடாதுடா ஒன் வைராக்கியம். முள்ளுல கெடக்குடா மகனே ஆத்தா முந்தான வளந்து ஆளாகி வந்து எடுத்துவிடு."

கையக் கால ஒதறிக் காடாவெளக்கு வெளிச்சத்துல சிரிக்குது பிள்ள.

மொதலக்கம்பட்டி ஆளுக குடுத்த பேறுகாலச் செலவுலயிருந்து காயங்கருப்பட்டி சேக்குறாக ரங்கம்மாவும் பவளமும். மஞ்சள் கடுகு சுக்கு மௌகு திப்பிலி தேசாவதாரம் ஓமம் சதகுப்ப சித்தரத்த வசம்பு பெருங் காயம் வால்மௌகு எல்லாத்தையும் வறட்டோடுல போட்டு வறுத்தாக. ஒரல்ல போட்டு நொறுங்க இடிச்சாக. ஒரு சிரட்டை மேல எளந்துணி போட்டு அதுல இடிச்சதப் போட்டுச் சலிச்சாக. அரை வீச வெள்ளப்பூட எடுத்துப் பல்லு பல்லா உரிச்சு எளஞ்சூட்ல நல்லெண்ணெ விட்டு அரைவேக்காடா வதக்குனாக. இடிச்ச பொடிய அதுல கொட்டி ஒடைச்ச கருப்பட்டிய உள்ள போட்டு, பெரட்டு பெரட்டுன்னு பெரட்டியெடுத்தாக,

ஒரு பஞ்சாமிர்தப் பதத்துக்கு வந்ததும் மாமியாளுக்கு மருமக ஊத்துற மாதிரி பட்டும் படாம நெய்விட்டு விளாவி, ஒரே பதமா எறக்கி உறியில தூக்கி வச்சுட்டாக. உறியில வச்சுட்டா எறும்பு கிறும்பு ஏறாது நாய் பூன நக்காது எப்பப்ப வேணுமோ அப்பப்பப் பிள்ள பெத்தவ எடுத்து தின்டுக்கிட்டேயிருக்க வேண்டியது தான். அத்தன சக்தி அந்தக் காயங் கருப்பட்டிக்கு. ஊறாத பாலையும் இழுத்து ஊத்திப்பிடும் ஊத்தி.

யாரும் நெனைக்கல. அஞ்சாம் நாளு குளுர் காய்ச்சல் வந்திருச்சு பிள்ளைக்கு. மழையில நனைஞ்சு பிள்ளைக்கு மார்ச் சளி புடிச்சிருந்துச்சு அதான் காய்ச்சல் வந்திருச்சு. இன்னிக்கி நாளைக்குள்ள எறங்கிரணும் காய்ச்சல். இல்லாட்டி ஜன்னி வந்தாலும் வந்திரும். பிள்ளைக்கு இப்பவே பத்து போட்டாகணும். அடுப்புல வறட்டோட்ட வச்சு அளவா கேப்ப மாவ வச்சா. வேணுங்கிற தண்ணிவிட்டுக் கெட்டிப்படாமக் கிண்டுனா. களிப் பதத்துக்கு அது கூடிவாரப்ப ஒரு சிட்டிகை குங்குமத்தப் போட்டுக் கொழகொழன்னு எறக்குனா. ராமர் அணிலுக்குக் கோடு போட்டார்னு சொல்ற மாதிரி, அதை எடுத்து, பிள்ள உச்சந்தலையில மூணு வெரலு இழுகிவிட்டா நெத்தியில பத்துப் போட்டா அடிக் காது வரைக்கும் இழுத்து இழுகிவிட்டா. ரெண்டு நாளா சூடு கொஞ்சம் கொறையுதே தவிர அடங்கல. "எம்பிள்ளைக்கு ஒண்ணும் ஆகிறாதே..?"பெத்த வகுறு நடுங்குது கருவாச்சிக்கு.

பிள்ளைக்கு ஒண்ணும் ஆகல அவளுக்குத்தான் ஒண்ணு ஆகிப்போச்சு.

காய்ச்ச வந்த பிள்ள தாய் மார்புல வாய் வைக்காதில்லையா... ரெண்டு நாளா பிள்ள குடிக்காததுனால கட்டிப்போச்சு மார்பு கருவாச்சிக்கு. நெஞ்சு நெறபெருக்கா இருப்பதனால விண்ணு விண்ணுன்னு தெறிக்குது விட்டு விட்டு. பொதுவாப் பேறுகாலம் ஆன பொம்பளைகளுக்கு ரெண்டு வலி வரும். வகுத்துல சுண்டு வலி மாருல நெஞ்சு வலி.

சுண்டு வலி வரல கருவாச்சிக்கு நெஞ்சு வலி வந்திருச்சு இப்ப. சொல்லிவிட்டதும் கையில இருந்த கஞ்சித் தட்டத் தரையில வச்சுட்டுக் கூடவே ஓடி வந்துட்டா மருத்துவச்சி சீலையம்மா. எத்தன மார்புக்கு எடுத்து விட்டவ? இது அவளுக்கு லேசு.

"அஞ்சாத பயப்படாத செத்தவெடத்துல சொடக்கெடுத்த வெரலு மாதிரி சொகப்படுத்திடறேன் தாயி."

[You must be registered and logged in to see this image.]


பாதி கிழிஞ்ச பழைய சீலய எடுத்தா. எளம் வெந்நியில நனைச்சா. முறுக்கிப் புழிஞ்சா. கருவாச்சிய மண்டிபோட்டு ஒக்காரவச்சா. கனத்த மார்பு ரெண்டையும் துணிக்குள்ள அள்ளிப் போட்டுக் கட்டிப் பின் பக்கம் முதுகுல ஒரு சுத்துச் சுத்தி முடிச்சுப் போட்டா. மார்பு தரை பாக்கக் குனின்னா குனிஞ்சா இப்ப மொழங்கால அவ முதுகுல அழுத்தி இறுக்குறா சீலய. ஈரத்துணி வழியா சாரை சாரையா ஒழுகுதய்யா பாலு.

தாய்ப்பாலே சுத்தம் இது வடிகட்டின தாய்ப்பாலு. மருத்துவச்சி கசக்காமக் கசக்குறா. அழுத்தாம அழுத்துறா. காம்பு வழியா வீசம்படி பால் வெளி யேறுது. பாலுக்குப் பின்னாலயே வாரேன் வாரேன்னு வலியும் வெளியேறுது.

"இப்ப எப்படி இருக்கு தாயி?"

"வகுத்துலயிருந்து ஒரு பிள்ளைய எறக்கிவச்ச மாதிரி இப்ப நெஞ்சிலிருந்து ஒரு பிள்ளைய எறக்கிவைக்கிற மாதிரியிருக்கு."

ரெண்டு பேரும் முதுகக் காட்டிக்கிட்டு சுவத்துப் பக்கம் நின்னு வைத்தியம் பாத்து முடிச்சாகளா... திரும்பிப் பாத்தா பிள்ளையப் போட்டுவச்ச பாய் கெடக்கு பாயில போட்டுவச்ச பிள்ளையக் காணோம்!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:06 am

கருவாச்சிக்குத் தெரியாமப் பிள்ளையத் தூக்கிட்டுப்போன சுப்பஞ் செட்டியாரு நேர வந்து நின்னாரு, சடையத்தேவர் வீட்டு வாசல்ல.

"யப்பா... சடையத் தேவா! பெரிய மனுசா! எங்கையில இருக்கிறது யாருன்னு கண்ணக்கொண்டு பாரப்பா. ஒன் வம்ச வாரிசு வந்திருக்கப்பா ஓங் குலக்கொழுந்து. ஒன்னியவே உரிச்சு வச்சிருக்கான் பாரு களவாணிப் பய. ஓங்கிட்ட சொத்துக்கேட்டு வரலப்பா முத்தங்கேட்டு வந்திருக்கான். ஏலே பயலே! முழிச்சு பார்றா ஒன் தாத்தன... உரிமை இல்லேன்னு போயிருமா? எங்க... ஒரு எத்து எத்தி எச்சியத் துப்பு கெழவன் மேல. வம்பு புடிச்சவன்டா ஒன் தாத்தன் அவன் வைராக்கியத்துல எட்டி ஒரு மிதி மிதி!"

ஆடுறா ராமா ஆடுறானு குரங்கக் குட்டிக்கரணம் போட வைப்பானா இல்லையா குரங்காட்டி... அந்த மாதிரி, கையில பிள்ளைய வச்சுக் கிட்டே சகல வித்தையும் பண்ணிப் பாக்குறாரு சுப்பஞ் செட்டியாரு சாயல சடையத் தேவரு.

மேனகை பிள்ளையத் தூக்கிட்டு வந்து காமிக்க, விசுவாமித்திரர் வச்சிருந்தாரு பாருங்க ஒரு மூஞ்சி... அந்த மூஞ்சிய இன்னைக்கு மட்டும் குடுங்கன்னு இரவல் வாங்கி மாட்டிக் கிட்டு, கடைவாய்ப் பல்லுல சிக்குன கறிய வெளக்கமாத்துக்குச்சி ஒடிச்சுப் பல்லுக் குத்திக்கிட்டே பராக்கு பாத்துக்கிட்டிருக்காரு சடையத் தேவரு.

"பேரு வையப்பா பேரனுக்கு" கடைசியா ஒரு அம்ப விட்டுப் பாத்தாரு சுப்பஞ் செட்டியாரு.

பார்வை பிள்ள பக்கம் விழுந்திரு மோன்னு வலிய முயற்சி பண்ணி மூஞ்சிய முதுகுப் பக்கம் வெச்சுக்கிட்டு, இன்னிக்கி மழை கிழ வருமான்னு அண்ணாந்து ஆகாயம் பாத்துக்கிட்டே சாவகாசமாச் சொல்றாரு சடையத் தேவரு "நாயி பேயி பன்னிக்கெல்லாம் நான் பேரு வைக்கிறதில்லப்பா!"

சுண்டிச் சூம்பிக் கறுத்துப்போச்சு சுப்பஞ் செட்டியாரு மூஞ்சி. சீ! இந்தாள மனுசக் கணக்குல சேக்க முடியாதுன்னு நெனச்சுக்கிட்டாரு மனசுக்குள்ள. "பிள்ளையக் காட்டிக் கருவாச்சிக்கு நல்லது பண்ணிப்புடலாம்னு நெனச்ச நெனப்புல மண்ணடிச்சுட்டானே மனுசன். சாகப்போற கெழட்டு மாட்டுக்கே இம்புட்டு வீம்பு இருந்தா, சல்லிக்கட்டுக் காள ஒனக்கு எம்புட்டு வீம்பு இருக்கும்? ஒரு நாளைக்கு ஒன்னியத் தேடி வருவான்டா கெழவன். அன்னிக்கு ஒண்ணுக்கடி ஒந் தாத்தன் மடியில" பிள்ளையத் தூக்கிக்கிட்டு விறு விறு விறுனு வெளியேறிட்டாரு சுப்பஞ் செட்டியாரு.

சுப்பஞ் செட்டியார் பிள்ளையத் தூக்கி நடக்க, முதுகுல வச்சிருந்த மூஞ்சியத் திருப்பி, பேரன் மூஞ்சியில தன் சாடை தெரியுதா பாத்திராலாம்னு சடையத் தேவர் நெனைக்க, சுப்பஞ் செட்டியார் முதுகுதான் தெரியுது பிள்ள மூஞ்சி தெரியல போய்ட்டாரு மனுசன்.

அதுக்குள்ள பிள்ளையக் காணோமேனு கதறி, நெஞ்சு வெந்து, அடிவகுத்துக் குடலு அந்து வந்துக்கிட்டிருக்காக கருவாச்சியும் வைத்தியச்சியும். "உசுரு போயி உசுரு வந்துருச்சு எங்களுக்கு. காய்ச்ச அடிக்கிற பிள்ளய எங்க தூக்கிட்டுப் போயிட்டீக எங்களக் கேக்காம?"

"வேறொண்ணுமில்ல ஆத்தா... தப்பையை வச்சுக் கட்டி நாய் வால நிமித்தலாம்னு நெனச்சேன். தப்பையே வளஞ்சுபோச்சு வந்துட்டேன்."

"என்ன சொல்றீக?"

"ஒடஞ்சு போன குடும்பத்த இந்தப் பச்ச மண்ண வச்சு ஒட்டவைக்கலாம்னு பாத்தேன் நடக்கல. பேர் வைக்கக்கூட யோக்யதை இல்ல. பெரிய மனுசனாம் பெரிய மனுசன்."

"மதியாத வாசப்படி மிதிக்க வச்சுட்டீகளே, எம் பிள்ளைய. பெத்துத் தரையில விழுந்தன்னைக்கே பேரும் வச்சிட்டனே எம் பிள்ளைக்கு."

"என்ன பேரு தாயி?"

"அழகு சிங்கம்."

"போடு அப்படிப் போடு. அடிச்சுக் கெளப்புடா தங்கம், அழகு சிங்கம்." பிள்ளையத் தலைக்கு மேல தூக்கி ரெண்டு சுத்துச் சுத்தி ஆனந்தக் கூத்தாடி மகிந்து மலந்துபோனாரு சுப்பஞ் செட்டியாரு. அவரு போட்டுவிட்ட தங்கச் சங்கிலிய வாயில கவ்விச் சப்பிச் சப்புக்கொட்டுது சவலப் பிள்ள. அந்தத் தங்கச் சங்கிலிதான் அவர் பொழச்ச பொழப்பையே பொரட்டிப் போடப்போகுதுனு அப்பத் தெரியாது பாவம் அவருக்கு.

"யப்பா! அக்கா வந்திருக்கா ஊருலயிருந்து."

உச்சியிலிருந்த பிள்ளைய உச்சுனாப்புல எறக்கி கருவாச்சி கையில குடுத்துட்டு, தகவல் சொல்ல வந்த எளைய மகளப் பாத்துக் கேக்குறாரு சுப்பஞ் செட்டியாரு "தனியா வந்திருக் காளா? தொணையா வந்திருக்காளா?"

"தனியாத்தான் வந்திருக்கா."

சொன்னது சொல்லு இல்ல காதுல தச்ச முள்ளு. மூத்த மக என்னா வேசங்கட்டி வந்திருக் காளோ... நெஞ்சப் புடிச்சுக் கிட்டே கெழட்டு நடை நடந்துபோறாரு சுப்பஞ் செட்டியாரு.

ஏறு வெயிலு, முள் முருங்கை மரத்து நெழல்ல பள்ளம் பறிச்சுப் படுத்திருக்கு கோழி. நல்லவகளப் பாத்தாலும், கெட்டவ களப் பாத்தாலும் உர்ருனு ஒரே மாதிரி உறுமிட்டுத் திரும்பவும் கண்ண மூடி அனத்திக்கிட்டே படுத்துக்கெடக்கு சொகமில்லாத ஒரு சொறி நாயி. காத்து இல்லாத சித்திரை மாத்தையில மேலயும் கீழயும் ஆடி அடங்குது காக்கா உக்காந்து போன வேப்பங்கொப்பு. பூனக்குட்டி ஒண்ணு உக்காந்திருக்கு வளவிப் பொதியப் பொத்திவச்ச கம்பளி மேல. வீட்டுக் குள்ள நொழையிறாக தகப்பனும் மகளும்.

"மகளே கனகம்! என்னாத்தா இது? மூஞ்சி வீங்கிப்போயி வந்திருக்கவ?"

"அது ஒண்ணும் வேற வீக்கமில்லப்பா... பொன்னுக்கு வீங்கி" தேங்காய்க்கு ஒரு கல்லெறிய மாங்கா விழுகிற மாதிரி, மூத்த வளக் கேள்வி கேட்டா எளையவ பட்டுன்னு பட்டாசு வெடிக்குறா.

புளிச்ச தண்ணிப் பானை யில ஊறிக் கெடக்கற சோளக் கஞ்சிக்கு மறுமாத்தமா பச்ச மொளகா வெங்காயம் வதக்கி, உப்புக் கருவாடு வறுக்க அடுப்புப் பத்தவைக்க ஆரம்பிச்சுட்டா பவளம்.

"ஒத்தையா வந்திருக்கி யேம்மா."


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:06 am

"ஒத்தையில வந்ததுனாலதான், ஒத்த உருண்ட சோளச்சோற வச்சு ஒப்பேறுது பொழப்பு. அக்காவோட மாமனும் சேந்து வந்திருந்தா நித்தம் எங்க போறது நெல்லுச் சோத்துக்கு?"

அடுப்பு இன்னும் பத்தல அவளாப் பத்தி எரியிறா பவளம். எந்தக் கேள்வி கேட்டாலும் ரெண்டே பதில்தான் வச்சிருக்கா கனகாம்பரம். ஒண்ணு கண்ணீரு... இன்னொண்ணு விசும்பல். தெரியும் தெரியாதுங்கிற ரெண்டே வார்த்தையில எல்லாக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியுமா இல்லையா, அப்பிடி! மகள உத்துப் பாத்ததுல பகீர்னு பதறிப்போனாரு சுப்பஞ் செட்டியாரு.

"இதென்னம்மா இது... புருவத்துல காயம்?" இந்தக் கேள்விக்கும் அடுப்புப் புகைக்குள்ளயிருந்து அசரீரி மாதிரி வருது பதிலு.

"கழுத்துல கெடந்த சங்கிலியையும் புடுங்கிட்டுப் போயிட்டான் வைர மோதிரம் போடச் சொன்னா ஒங்கப்பன் வளவி போட்டுவிட்ருவான் போலிருக்கேனு நாழிய எடுத்து எறிஞ்சா புருவம் கிழியாம என்ன பண்ணும்? அந்தாளுக்குப் புத்தி கலங்கிப்போச்சு இவளுக்குப் புருவம் கலங்கிப்போச்சு."

கிட்ட வந்தாரு சுப்பஞ் செட்டியாரு. மக புருவத்த ஒத்த வெரல்ல பட்டும் படாமத் தொட்டுத் தடவுனாரு. அவ தலையில கைவச்சு ஆதரவா ஒரு செல்ல அழுத்து அழுத்திச் சொல்றாரு: "ஏஞ் செல்லங்களா, ஒங்க ஆத்தா ஒங்கள வகுத்துல சொமந்து பெத்துப் போட்டுட்டுப் போயிட்டா. நான் தோள்ல வளவி சொமந்து ஒங்கள வளத்தெடுத்தனம்மா. அப்பன் வச்சுக்கிட்டு வஞ்சகம் பண்ணுவேனா? முந்தி மாதிரி செமக்க முடியல. ஊரு ஊரா அலைய முடியல. அதான் நான் கும்புடுற சாமிமேல குட்டிப் பூன உக்காந்திருக்கு."

சீ போ கழுத அங்கிட்டுன்னு பூனக்குட்டிய வெரட்டுனவரு, ரெண்டு கையிலயும் அடியில கோத்து ஏந்தி வளையல் பொதியத் தூக்குனாரு.

க்ளங்... க்ளுங்... களுங்... கிணுங்... அந்த சங்கீதச் சத்தம் வெரட்டோ வெரட்டுனு வெரட்டி அடிச்சிருச்சு அங்கிருந்த வெறுமைய ஒரு நாதம் கசிஞ்சு வழிஞ்சு நனச்செடுக்குது வீட்ட. தலையில ஒட்டி இறுக்கி உருமாக் கட்டி, வளவிக சொருகிவச்ச ஜம்பைத் திண்டுகள அடுக்கிவச்ச பைகளத் தோள்ல போட்டு, அதுக்கு மேல பக்கத் துக்குப் பத்துத் தோடா மேனிக்கு எடப் பக்கத்துலயும் வலப் பக்கத்துலயும் நூல் கயித்துல கோத்துவச்ச இருவது தோடா வளையலச் சொமந்துக்கிட்டு அதுக்கு மேல கம்பளியும் போட்டுப் பொத்திப் பெருஞ்செருப்பெடுத்து மாட்டி, ஒரு கறுப்புக் கொடைய நீட்டிச் சுப்பஞ் செட்டியார் நடந்துபோனா ஆம்பளைகளே ஆசைப்படணும், அவர்கிட்ட வந்து வளவி போட.

எந்த ஊருக்குள்ள போனாலும் அந்த ஊர ஒரு சுத்துச் சுத்தி வந்து "வளையல்... வளையல்"னு ஒரு சத்தம் விடுவாரு. ஆயிரம் வளவிக ஒண்ணுகூடி மொத்தமாச் சத்தமாச் சொல்ற மாதிரி இருக்கும் அவர் வளையல்னு ஆசையோடு விடுற ஓசை. வந்திருக்கேன் வளவிக்காரன்னு அறிவிச்சிட்டு, ஊரு மந்தையிலயோ கோவில்லயோ கம்பளி விரிச்சுக் கடை போட்ருவாரு.

கல கல கலன்னு வளவி பேசுறது பாதி சல சல சலன்னு அவர் வாய் பேசுறது பாதி. வளவிச் சத்தத்துல நீட்டிருவாக பொம்பளைக கைய வாய்த் தாட்டியத்து லயே இவரு மாட்டிரு வாரு வளவிய. நூல் கயித்துல கோத்திருக்கிற இருபது தோடா வளையலயும் ரெண்டு திருகுத் திருகி ஒரு முறுக்கு முறுக்கி எறக்கி வப்பாரு பாருங்க... ராசா வீட்டுப் பிள்ளைய வேலக்காரன் தரையில எறக்கிவிடுற மாதிரி அம்புட்டுப் பக்குவமா எறக்கிவைப்பாரு. அவரு ஆயுசில ஒத்த வளவி ஒடஞ்சதில்ல. கடை விரிச்சு ஊரக் கூட்டி வர்ணிப்பாரு பாருங்க வளவிய சும்மா கெறக்கமாவந்திரும் கெழவிகளுக்கும்.

" யம்மா! நீங்க வானவில்லப் பாத்தி ருப்பீக. அது ஏழு நெறம். அதுக்கு மேக்கொண்டதம்மா என் வளவி இது ஒம்போது நெறம். இந்தா அடுக்கி வச்சிருக்கேன் எண்ணிப் பாத்துக்குங்க." பச்சை செவப்பு ஆரஞ்சு மஞ்சள் காப்பி நீலம் செந்தூரம் வெள்ள ஊதா சும்மா கண்ணப் பறிச்சு மின்னும் கண்ணாடி வளையல். "என்னிய எடுத்துக்கிர்றியா... என்னிய எடுத்துக்கிர் றியா..."னு எல்லா நெறமும் கூப்பிடும்.

எந்தப் பொம்பள கண்ணு எந்த நெறத்துல நெலகுத்தி நிக்கிதோ அந்த வளையல எடுத்து, "சும்மா போட்டுப் பாரு தாயி!"னு மாட்டிவிடுவாரு.

ஒரு பொம்பள கை பெறந்த ராசியப் பாத்தவுடனயே அது என்னா அளவுனு அவரு கண்ணு சொல்லிப்பிடும். வளவிக்கு நெறம் ஒம்போதுங்கிற மாதிரியே வளவி போடுற பொம்பளைக கை அளவும் ஊர் தேசம் பூரா சுத்துனாலும் ஒம்போதுக்குள்ள தான் அடங்குது. அரையரைக்கா முக்கா முக்காலே யரைக்கா ஒண்ணே காலரைக்கா ஒண்ணரை ரெண்டு ரெண்டேயரைக்கா ரெண்டே கால் ரெண்டே காலரைக்கா இதுதான் பொதுவா பொம்பளைக கைகளுக்கு ஒலகத்துல உண்டான அளவு.

என்னமோ தொட்டிலை ஆட்டுற கையி தொல்லுலகை ஆள்ற கையினு பாட்டுக் கட்டிப் பாடுறாகளே... ஒலகத்துல எந்தக் கையா இருந்தாலும் இந்த ஒம்போதுக்குள்ள அடக்கம். சிலதுக யானைக் கால கையின்னு வச்சுப் பொறந்திருக்கும் அதுகள்லாம் கணக்குல சேராது.

சுப்பஞ் செட்டியாரு ஒரு பொம்பளைக்கு வளவி மாட்டிவிட் டாருன்னா, அந்தப் பொம்பள வேற ஊருக்கு வாக்கப்பட்டுப் போனாலும் சுப்பஞ் செட்டியார் அந்த ஊருக்கு வார வரைக்கும் வேற யாருகிட்டயும் வளவி போட மாட்டா. வளவி போட வார எல்லாப் பொம்பளையையும் மக மாதிரிதான் பாப்பாரு மகராசன். அவர் வளவி போடுற சோங்கும் பாங்கும் வேற யாருக்கும் சொல்லிக் குடுத்தெல்லாம் வராது. வளவி போடுற பிள்ள கைய நீட்ன வுடன, அத வாங்கி வசதி பண்ணி லேசா ஒரு சொடக்கெடுத்து விடுவாரு. கொஞ்சம் மோட்டுக் கையி முரட்டுக் கையா இருந்தா எடது கையில ஏந்தி வலது கையால மணிக்கட்ட ஒரு எளம் நசுக்கு நசுக்கி விடுவாரு. அவருக்குத் தெரியும் எந்தமேடு வளவிய வழி மறிக்கும்னு. மெல்லுசா சல்லுசா அந்த மேடு கோடு தட்டி விடுவாரு. வளவி என்னதான் எடக்குப் பண்ணாலும் எக்கார ணத்தக் கொண்டும் எண்ண போட்டுத் தள்ளுறதில்ல தொழிலுக்கு அது இழுக்காம். "நான் வளவிக்காரச் செட்டியாரு தான் தாயி எண்ணக்காரச் செட்டியார் இல்லே"ம்பாரு சிரிச்சுக்கிட்டே.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:06 am

வலது கையில பதிமூணு எடது கையில பன்னெண்டு. மொத்த வளவியக் கூட்னா ஒத்தப்படையில வரணும். இதான் ஊர் நாட்ல உண்டானது. ஒண்ணே முக்கால் ரூவாய்க்கு வித்தா, கால் ரூவா லாபங்கிறது கணக்கு. இதுல சில பேர் குடுப் பாக. சில பேர் நவதான்யம் வாங்கிட்டுப் போறீகளாம்பாக. சில பேர் நடையா நடக்கவிடுவாக.

வளவி விக்கப்போன எடத்துல குள்ளப்பக் கவுண்டன்பட்டியில ஒரு கூத்தாகிப்போச்சு. வழியில போயிக்கிட்டிருந்த வளவிக் காரரை வான்னு கூப்பிட்டான் வெள்ளையுஞ்சொள்ளையுமா இருந்த ஒரு எளந்தாரி. அவனப் பாத்தாச் சிரிப்பா இருந்துச்சு. உள்ள போட்டிருக்கிற முண்டா பனியன் வெள்ளையா வெளிய தெரியிற மாதிரி மெல்லுசா ஒரு சட்ட. உள் கால் சட்டப் பட்டைக பளீர்னு வெளிய தெரியற மாதிரி ஒரு மல்லு வேட்டி. பாவம் வேட்டிக்கும் சட்டைக்கும் வீணாச் செலவழிச்ச பய.

"எஞ் சொந்தபந்தம் எல்லாத்துக்கும் வளவி போடு"ன்னான். சும்மா ரேசனுக்கு அரிசி வாங்குற மாதிரி வரிசையா வந்து நின்னுட் டாக பொம்பளைக. "இன்னைக்கி நரி முகத்துல முழிச்சமடா சாமி"ன்னு வந்தவுக போனவுகளுக்கெல்லாம் வளவி போட்டு முடிக்க, "நான் வெள்ளிக் கெழமை யாருக்கும் துட்டுத் தாரதில்ல நாளைக்கு வந்து வாங்கிட்டுப் போ"ன்னுட்டான் அந்த ஆளு. சனிக்கெழமை போயிக் கேட்டா, அவன் ஊர்லயே இல்ல. மாமன் பெருமையை மச்சினிகளுக்குக் காமிக்கிறேன்னு காமிச்சுட்டு, வளையல அங்க மாட்டி விட்டுட்டு இவரு காதுல பூமாட்டி விட்டுட்டு ஓடியே போனான் புது மாப்பிள. சல்லிக் காசுகூட வரல போனது போனதுதான்.

அப்பிடிக் காத்துலயும் வெயில்லயும் மழையிலயும் குளுர்லயும் ஊர் ஊரா அலைஞ்சு எச்சிய முழுங்கிக்கிட்டே எட்டணா ஒரு ரூவானு சேத்துவச்சு ஒரு மகளக் கரை சேத்துட்டோம்னு நெனச்சா, கரை சேந்தவ திருப்பித் தண்ணியில விழுந்து கெடக்கா. இப்ப இருக்கிறவளக் கரை சேக்குறதா? வந்தவளக் கரை சேக்குறதா?

"கண்ணாடி வளவிக சத்தம் போடும் ரப்பர் வளவிக போடாது. நான் பெத்த மகளுகளா, நீங்க கண்ணாடி வளவிக. சத்தம் போடுறீக. அப்பன் ரப்பர் வளவி என்னத்தப் பேசுவேன்? ஆனா ஒண்ணு... ஒங்க ரெண்டு பேரையும் கரை சேக்காம என் கட்டை வேகாது." தான் ஒண்ணு நெனச்சா தெய்வம் ஒண்ணு நெனைக் கும்னு சொல்லுவாக. ஆனா, செத்துச் சீலப் பேனாகிப் போன சுப்பஞ் செட்டியார் கதையக் கேட்ட தெய்வம் ஏதொண்ணும் நெனைக்கலன்னு தான் சொல்லத் தோணும், ஏன்னா... அப்படியெல்லாம் ஒரு கருமாயத்தக் கற்பனை பண்ணி நெனைக்க தெய்வத்துக்கே தெரியாது.

"அடியே கருவாச்சி! எனக்கும் ஒனக்கும் சின்ன வயசிலிருந்தே வித்தியாசம்டி. நீ கறுப்பு நான் செவப்பு. நீ மாடு மேய்க்கப் போன நான் பள்ளிக்கூடம் போனேன். ஒனக்குத் தாய் இருந்திச்சு தகப்பன் இல்ல. எனக்குத் தகப்பன் இருக்க, தாயில்ல. எனக்கு வெளியூர்ல கல்யாணம் ஒனக்கு உள்ளூர்ல கல்யாணம். ஒனக்குப் பிள்ளை இருக்கு புருசன் இல்ல. எனக்குப் புருசன் இருக்க, பிள்ளை இல்ல.

கருவாச்சி மகன் அழகுசிங்கத்த வாங்கி மடியில போட்டுக்கிட்டு சோகத்த மறந்து கெக்கக்கெக்கக் கெக்கேனு சிரிக்கிறா கனகம். துன்பம்ங்கிறது விருந்தாடி மாதிரிதான் எப்பவாச்சும் வந்தாத்தான் மரியாதை. நித்தம் நித்தம் துன்பம் வந்தா மனசு மரத்துப்போகுதா இல்லையா? அப்படி மரத்து மறந்துபோனாக பொம்பளைக ரெண்டு பேரும்.

"யம்மா கனகாம்பரம்! வீட்டுக்குப் போ தாயி ஒரு விசேசம் வந்திருக்கு" - போறபோக்குல சொல்லிட்டுப் போனாரு அம்மைய நாயக்கரு.

என்னமோ ஏதோன்னு லொங்கு லொங்கு லொங்குனு ஓடுறா கனகாம்பரம் ஒடம்பத் தூக்கிக்கிட்டு. வீட்டுக்கு வந்து பாத்தவ நெலப்படிய ஒரு கையிலயும் நெஞ்ச ஒரு கையிலயும் புடிச்சு நின்னே போனா. பவளத்துக்குச் சொக்குப் பொடி போட்டு சோங்கு பண்ணிக்கிட்டிருக்கான் கனகம் புருசன் முத்துக்காமு.

"ஏ பவளம்... இங்க வா பிள்ள, வா. ஒன்னிய நான் கடிச்சா தின்னுபிடப் போறேன்? என்னமோ சொல்றாகளே ஊரெல்லாம். நீ பேன் பாக்குறதுல பெருங்கொண்ட கையின்னு. ஒங்க அக்காகூட படுத்துப் படுத்து எந்தலையில ஏறிக்கெடக்கு ஏகப்பட்ட பேனு. வா கண்ணு வா மண்ட காயுதுடி மாமனுக்கு. வந்து பேன் பாரு வா."

மச்சினிச்சிக்காக வெல்லப்பாகு மாதிரி எளகி ஓடுன மூஞ்சி, பொண்டாட்டியப் பாத்ததும் கருப்பட்டி மாதிரி இறுகிப்போச்சு. "ஏண்டி! புருசன் வீட்லயிருந்து ஓடி வந்தவ அப்பன் வீட்லயும் தங்குறதில்லையா? எங்கடி போயிட்டு வாரவ?"


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:07 am

நியாயப்படி கேள்வி கேக்க பாத்தியப் பட்டவளும் பாதிக்கப்பட்டவளும் அவதான். ஆனா, அவ கேள்வி கேக்குறதுக்கு ஒரு சந்துவிடாம முந்திக்கிட்டு மூஞ்சியில எள்ளு வெடிக்கிறான் முத்துக்காமு. நிலைப்படி கொள்ளாம நிக்கிறவளத் திரும்பவும் ஒரு அமட்டு அமட்டுறான்:

"சொல்லுடி, எங்கடி போயிருந்த?"

உடம்பு அலுங்காம உதடு மட்டும் அசைய அவ சொல்றா: "மாப்ள பாக்க."

"பாப்படி பாப்ப! ரெண்டு கையிலயும் வளவி போடுறவன் மகதான? கைக்கொரு புருசன் கேப்ப."

கையில இருந்த மோர்ச் செம்ப எடுத்து எறியப்போனவன ஓடி வந்து தடுத்து உள்ள விழுந்த பவளம், மோர்ச் செம்பப் புடுங்கித் துண்டாத் தூர எறிஞ்சிட்டுச் சொல்றா: "அவ ஒரு வெனயங்கெட்ட சிறுக்கி நீ ஒரு வெவரங்கெட்ட மாமன். கருவாச்சி மகனப் பாக்கப் போனாளா... அவனத்தான் மாப்ளைங்கிறா. அவள நாத்துனா ஒறவு சொல்லித்தான் நாங்க வளந்திருக்கோம். ஆமா... எடுத்ததுக்கெல்லாம் கை நீட்றது என்ன பழக்கம் மாமா?"

மச்சினிச்சி தொட்டதுல சன்னஞ் சன்னமா சாமி எறங்கிப்போனான் முத்துக்காமு.

முத்துக்காமு ஒரு சவங்கப் பய. அவன் இழுத்த இழுவைக்குத்தான் ஊருலகம் வந்து சேரணும்னு நெனைப்பானே தவிர, ஊருலகம் இழுக்கிற இழுவைக்கு அவன் போக மாட்டான். நித்தம் காசு சம்பாதிக்கணும் நித்தம் கறி திங்கணும். இந்த ரெண்டையும் தவிர, பெறவிக்கு அர்த்தம் பெருசா என்ன இருக்குன்னு நெனைக்கிறவன் முத்துக்காமு.

ஆள் செத்த வீட்ல * கவிச்சி பொழங்கக் கூடாதுங்கிறது ஐதீகம். அப்படிச் சொந்தபந்தத்துல ஆள் செத்துப்போனா, பொணம் தூக்குறவரைக்கும் பொறுமையா இருப்பான். பொணம் தூக்குனதும் கால்ல தண்ணி ஊத்திக்கிட்டே ஈரங் காயுமுன்ன கறிக் கடைக்குப் போயிருவான். வீடு, வாச, சொந்தம், பந்தம், பொண்டாட்டி, பொட்டிக் கடை, ஊரு, உலகம் எல்லாம் காசு பண்ணவும் கறி திங்கவும் கடவுள் அவனுக்குச் செஞ்சுகுடுத்த ஏற்பாடுங்கறது அவன் தீர்மானமான முடிவு. அன்னிக்கி ஒண்ணும் வழியில்லையா, உப்புக் கருவா டாச்சும் சுட்டு வைக்கலேன்னா பொண்டாட்டிய அடிக்கிற அடியில, வீடு வீங்கிப் போகும்.

சில பேருக்கு மூக்குல மச்ச மிருக்கிற மாதிரி இவன் மூக்குல கோவம் எப்பவும் ஒட்டிக்கிட்டேயிருக்கும். ரெண்டு கொணம், ரெண்டு பேச்சு இருக்கு அவன்கிட்ட. இவனுக்குக் காசு தர வேண்டிய ஆளுககிட்ட வழுவழுனு பேசுவான். இவன் காசு குடுக்க வேண்டிய ஆளுககிட்ட கடுகடுனு பேசுவான். கொடுக்கும் காம்பும் ஒரே எடத்துல இருக்கிற பிராணிய நீங்க பாத்திருக்கீகளா? அவன்தான் அது. கொடுக்கு எப்ப கொட்டும் காம்பு எப்ப சொட்டும்?

அதுக்கெல்லாம் காலதேச வர்த்தமானத்துல கணக்கெல்லாம் ஒண்ணும் கெடையாது. அப்பன் அவன் கிட்ட ஒப்படைச் சிட்டுச் செத்தது அவன் ஆத்தாளையும் ஒரு பொட்டிக்கடையை யும். ஆத்தாள செலவுக் கணக்குல சேத்துட் டான் பொட்டிக் கடையை வரவு வச்சுக் கிட்டான்.

அவன் அப்பன் ஒரு சத்தியவந்தன். "பொருளு வித்துப் பொழைக்கலாம் புத்திய வித்துப் பொழைக் கலாம். நேர்மைய வித்துப் பொழைக்கக் கூடாதுடா மகனே"னு சொல்லிட்டுச் செத்தாரு. அவரு பொணத்தோட சேத்து அவர் புத்திமதியையும் புதைச்சிட்டான் முத்துக் காமு. போதுமடா அப்பன் பொழைச்ச பொழப்புனு பொட்டிக்கடையில களவாணிப் பொருள் வாங்கி விக்க ஆரம்பிச் சான். கெழங்கு, வாழத் தாரு, முட்டை, நெலக்கடலையெல்லாம் களவாண்டு வர்ற ஆளுகளுக்குப் பத்துக்கு ஒரு வெல குடுத்தாப் போதும் குடுத்தத வாங்கிக்கிட்டுக் கும்பிட்டுப் போயிருவாக. அதுல அடிப்பானய்யா முத்துக்காமு லாபம். ஒண்ணுக்கு அஞ்சா வெல சொல்லி, ஒண்ணுக்கு மூணா வித்திருவான். அப்படிச் சம்பாரிச்சுக் கல்லாவும் ஆளும் கனத்துப்போனான் அதுலதான் வந்து சேந்துச்சு ஒரு ஆபத்து.

அவுக ஆத்தா செத்து ஆறு மாசமிருக்கும். விடிய்ய கடை தெறக்க ஒரு அம்பது திருட்டுத் தேங்காயத் தலைச் சொமையா சொமந்து கடையில கொண்டுவந்து எறக்கிட்டான் பொத்தக் காதன் திருட்டு ஆளாயிருந்தாலும் மொரட்டு ஆளு. ஒரு தேங்காய்க்கு ஒரணா மேனிக்கு வாங்கிட்டு, "போயிட்டு வாரனப்பா"னு போயிட்டான். போனவன் மறுநாள் திரும்பி வந்து, "காளியம்மன் கோயிலுக்குச் செதறு தேங்கா போடணுமப்பா... ரெண்டு தேங்கா குடு"னு கேட்டிருக்கான். "ஆறணா எடுத்து வையி. ஒரு தேங்கா மூணு அணா"னான் முத்துக்காமு.

"இதென்னப்பா கூத்தாயிருக்கு. ஒனக்கு ஒரணாவுக்கு நான் வித்த காயை எனக்கே மூணு அணாவுக்கு விக்கிறியே இது நியாயமா?"னு பொத்தக் காதன் கேக்க, "ஊரான் பொருளுக்கு நான் ஒரணா குடுத்தனே... என் பொருளுக்கு நீ மூணு அணா குடுத்தா என்ன?"னு முத்துக்காமு கேக்க... காசக் குடுத்துட்டுப் பேசாம வாங்கிட்டுப் போயிட்டான் பொத்தக் காதன். கோயில்ல போயி ஒடைச்சுப் பாத்தாரெண்டும் அழுகுன தேங்கா. கெட்ட கோவத்தோட புத்தி மாறி வாரான் பொத்தக் காதன்.

"ஏண்டா... ஆறணா வாங்குனது மில்லாம அழுகுன தேங்காயா குடுத்துவிட்ட? மாத்துத் தேங்கா குடுக்கல.... மரியாதை கெட்டுப் போகும்."

"அதெல்லாம் குடுக்க முடியாது. ஒன் நேரம் நல்லாயில்லைன்னா நான் என்னா பண்ணுவேன்?"

"என் நேரமா நல்லால்ல... ஒன் நேரந்தான் நல்லா இல்லடீ."

சும்மா தேங்காக் கடையில யான புகுந்த மாதிரி அடிச்சு ஒடச்சு மிதிச்சு அப்பளம் பண்ணிப் பொருள்கள எடுத்து வீதியில எறிஞ்சு பொட்டிக் கடையை இழுத்துத் தரையில போட்டு சாச்சுத் தேச்சு வீட்டுக்குள்ள புகுந்து அதுவரைக்கும் அவன் சன்னஞ்சன்னமாச் சேத்துவச்சிருந்த சம்பாத்தி யத்தையும் எடுத்துக்கிட்டு, போடி மெட்டு மேல ஏறி மூணாறுல ஓடி ஒளிஞ்சுபோனான் பொத்தக் காதன்.

சோளம் அடிச்ச களம் மாதிரி சிந்திச் செதறி நொறுங்கிக் கெடக்குற பலகையும் தகரமும் கூரையும் கொஞ்ச நேரத்துக்கு முன்னால எங்க பேரு பொட்டிக் கடைனு முழியா முழிக்குதுக. முத்துக்காமு பாவம்! மூக்குல இருந்த கோபத்தையும் காணம் மூக்கையும் காணம்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:07 am

"விழுந்த கடையை நிமித்திக் குடுத்திருங்க ஒரு வைர மோதிரம் போட்ருங்க கண் கலங்காம வச்சுக் கிறேன் கனகாம்பரத்த... பொண்ணு வீடு பாக்க வந்தப்ப அவன் கேட்டது இந்த ரெண்டே ரெண்டுதான். நியாயமாத் தான் தெரியுதுனு சரி சொல்லிட்டாரு சுப்பஞ் செட்டியாரு.

"மாப்ள! குருவி மாதிரி சேத்த காச வச்சுப் போட்டுக் குடுத்திடறேன் பொட்டிக் கடையை. தங்கச் சங்கிலி ஒண்ணு எரவல் தாரேங்கிறா பெரிய மூக்கி. பொண்ணு கழுத்துல போட்டு அனுப்புறேன் வைர மோதிரம் குடுத்துட்டு வாங்கிக்கிறேன்."

முடிஞ்சுபோச்சு கல்யாணம் முடியல பிரச்னை. நாலு வருசமா அவளுக்குப் பிள்ளையுமில்ல வைர மோதிரமும் வரல. முள்ளங்கி மாதிரி சிக்குன்னு இருந்த கனகம், ஒரே எடத்துல ஒக்காந்து ஒக்காந்து, ரெண்டே வருசத்துல சொரைக்கா மாதிரி பெருத்துப்போனா. ஒடம்பு சொகம் கொறையக் கொறைய குத்தங் கொறைக பெருசாத் தெரியுமா இல்லையா? புதுசாப் போட்ட பொட்டிக் கடையில ஏவாரமும் கம்மி. ரெண்டு காதுலயும் பூரான் புகுந்த மாதிரி "வைரமோதிரம் வைரமோதிரம்"னு அவளக் குத்திக் கொடஞ்சுக்கிட்டேயிருக்கான்.

"எங்கப்பன் வச்சுக்கிட்டு ஒண்ணும் வஞ்சகம் பண்ணலேனு இவளும் சொல்லிச் சொல்லிப் பாத்தா. கொடுக்கும் காம்பும் உள்ள பிராணினு அவனச் சொன்னமா இல்லையா... இப்ப காம்பக் கழத்தி வச்சுட்டுக் கொடுக்கு மட்டும் வச்சு அவளக் கொட்டிக் கிட்டேயிருக்கு அந்தப் பிராணி.

பழனிசெட்டிப்பட்டிக்கு அவ அப்பனும் வாரதில்ல சொக்கத்தேவன் பட்டிக்கு இவளும் போறதில்ல. வைர மோதிரத்துக்கு என்னடா வழினு யோசிச்சுக் கணக்குப் போட்டுக் காய் நகத்துறான் பய. அவ சோறு போட்டு வச்சுட்டு அந்தப் பக்கம் திரும்பி ரசத்துல கரண்டி போடுறதுக்குள்ள, ஒரு கை உப்ப அள்ளிக் குழம்புல போட்டுட்டு "கைக்கிது கைக் கிது"னு கத்திக் கெடுக்கிறான். அவன் பண்ணின இந்த மொதக் கூத்துலயே மூச்சுப் பேச்சில்லாமப் போனா அவ. அது தெளியுமுன்ன ரெண்டாவது கூத்த ஆரம்பிச்சுட்டான். ஆடு உரிக்க உரிக்கக் கடையிலயே கால்கடுக்க நின்னு கறியும் ஈரலுமா வாங்கிட்டு வந்தான். அரைவேக்காட்டுல கொழம்பு மொதக் கொதி கொதிக்க அகப்பைய விட்டு ஈரல மட்டும் எடுத்து வாயில போட்டுத் தின்டுபுட்டு "ஈரலக் காணம்... ஈரலக் காணம்"னு கத்திக் கெடுத்து ஊரக் கூட்டி அவளக் கிறுக்குப்புடிக்க வச்சுப்புட்டான்.

இத்தன எடக்குமடக்குப் பண்ணி எடஞ்சல் பண்ணியும் அழுகுறாளே தவிர, அவ அசையிறா இல்ல. கடைசியா அவளச் சண்டபோட்டு வெளியேத்த சாமியத் தொணைக்கிழுத்துக்கிட்டான். பண்ணக் கூடாத ஒரு காரியம் பண்ணினான் பாவி. வீட்டுக்குள்ள அவன் வேட்டிசட்டை போட்டு வக்கிற கொடியில, அவ மூலையில சுருட்டிவச்சிருந்த முட்டுச்சீலையக் கலந்து தொங்க விட்டுட்டான்.

"அய்யோ அநியாயமே! இந்த அசிங்கத்தப் பாத்தீகளா? கட்ற வேட்டியோட சேத்து முட்டுச்சீலையக் கொண்டாந்து முட்ட விட்ருக்காளே முண்டச்சி மக. இப்படித் தீட்டுப்பட்ட வீட்ல தெய்வமிருக்குமா? தெய்வம் இல்லாத வீட்ல பிள்ள இருக்குமா?" அது இதச் சொல்லி, அவள நொக்கு நொக்குன்னு நொக்கி நிம்மதியில்லாமப் பண்ணிப்புட்டான்.

நாலு வருசம் வாழ்ந்ததுக்குள்ளயே நடு முதுகுல ஏறி மிதிக்கிறவன்... இவன்கூட காலமெல்லாம் எப்பிடிக் காலந் தள்றது? அவன் நெனச்ச மாதிரியே "நான் போறேன் எங்க அப்பன் வீட்டுக்கு"னு புறப்பட்டுட்டா.

"போடீ போ. நான் இல்லாத நேரத்துல தங்கச் சங்கிலியையும் அவுத்திட்டுப் போயிட்டான் ஒங்கப்பன். வந்தா வைர மோதிரத்தோட வா இல்ல வளவிக்காரன் வீட்லயே விழுந்து சா." அன்னைக்கி வந்தவதான் அவ ஒரு மாசம் கழிச்சு இன்னைக்குத்தான் வந்திருக்கான் இவன். கறி கெடைக்கலேன்னா நாக்கக் கடிச்சுத் திங்கிற மாப்பிள்ளைக்கு எலும் பாச்சும் போடணும்னு அம்மாபட்டிக் கறிக் கடையில கடன் சொல்லி, ஆட்டுத் தலையும் எலும்புக் கறியும் வாங்கி ரத்தம் சொட்டச்சொட்ட மஞ்சப் பையில புடிச்சுட்டு வந்தாரு சுப்பஞ் செட்டியாரு.

தலைக் கறி வறுத்து, எலும்புக் கொழம்பு வச்சுக் குடுக்கவும், சட்டியிலருந்த மொத்தச் சோத்தையும் தட்டுல கவுத்து சோறு தெரியாமக் கொழம்பு ஊத்தி ஒரு முங்கு முங்குறான் முத்துக்காமு. அந்த வீட்ல இன்னம் ரெண்டு எள உசுரும் ஒரு கெழட்டு உசுரும் கெடக்கேன்னு நெஞ்சுல ஒரு ஓரத்துலகூட நெனைக்காம எலும்புக்குள்ள இருக்கிற வெந்த ரத்தம் வெளிய வரட்டுமேனு அத வாயில வச்சு உறியோ உறின்னு உறியிறான், உஸ்ஸு உஸ்ஸுன்னு. இருந்தாத்தானே... அது சுப்பஞ் செட்டியாருகிட்டயிருந்து வைர மோதிரம் மாதிரி வரவே மாட்டேங்குது.

ரெண்டு கன்னமும் உப்ப உப்ப சோத்த அள்ளி வாயில அடைச்சுக்கிட்டுக் கேக்குறான்: "நல்ல சாப்பாடு சாப்பிட்டு நாளாச்சு. சொல்லுங்க மாமு... எப்ப அனுப்பப்போறீங்க எங்கூட எம் பொண்டாட்டிய?"

"வந்தா இப்பக்கூட கூட்டிட்டுப் போங்க மாப்ள."

"அது கழுதை வந்திரும் தரையில தவ்வுற மீனு தண்ணிக்கு வான்னா வராமலா போகும்? வர வேண்டியது வருதாங்கிறேன்" சாப்பாட்டுக்குள்ள இருந்த எச்சிக் கைய வெளியில எடுத்து மோதிர வெரல மட்டும் ஒரு ஆட்டு ஆட்டுறான்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:07 am

"மாப்ள... ஒங்களுக்கு நான் கடன்பட்ருக்கேன் இல்லேங்கல. வளவி ஏவாரம் படுத்திருச்சு வளஞ்சும் போச்சு முதுகு. வாழ்ந்த பொண்ணு வாழா வெட்டியா இருக்கா. வளந்த பொண்ணு வீட்ல இருக்கா. நான் வைர மோதிரம் போடுவேனா? வளந்தவளக் கரை சேப்பனா?"

"ரெண்டும் ஒரே வேலையாப் போச்சுன்னா?"

"என்ன சொல்றீக மாப்ள?"

"எளையவளயும் கட்டிக்கிட்டு மூத்தவளயும் கூட்டிட்டுப் போயிடறேங்கிறேன். வைர மோதிரம் மட்டும் போட்டு விட்டுருங்க. மூத்தவளக் கர சேத்ததாவும் இருக்கும். எளையவ எனக்கொரு பிள்ள பெத்துக் குடுத்ததாவும் இருக்கும். என்ன நான் சொல்றது?"

மூணு பேருக்கும் நெஞ்சுக்கூட்டுச் சத்தம் நின்னுபோச்சு மூச்சுப் பேச்சும் நின்னுபோச்சு. கத்துற காக்கா உறுமுற நாயி ஒலக்கைச் சத்தம் சகலமும் நின்னுபோச்சு. அவன் எலும்பு கடிக்கிற சத்தம் மட்டும் கேட்டுக்கிட்டேயிருக்கு.

நகச்சுத்தி வந்தாலும் வீக்கம் வெரலுக்குத்தான..?

கனகாம்பரமும் பவளமும் நெஞ்சுக்கூடு ஒடஞ்சு வந்து அடைமழையா அழுகவும் கண்ணுமுழி கலங்கிப்போனா கருவாச்சி. ஒடைஞ்ச மனச ஒண்ணு சேத்துக்கிட்டு, அக்காதங்கச்சிக ரெண்டு பேருக்கும் நல்ல வார்த்தையா நாலு வார்த்த சொல்றா:

"மூத்தவளுக்குப் பிள்ளையில்ல இளையவள கட்டிக்குடுனு கேக்குறாரு அந்த ஆளு. பொண்ணு கேக்குற ஆள ரெண்டு மூணு கேள்வி கேளுங்கடி. வருசம் நாலுதான் ஆச்சு அதுக்குள்ள மலடின்னா எப்படி? கல்யாணமாகிப் பத்து வருசம் கழிச்சும் பிள்ளையெடுக்கிறவ இருக்காளா, இல்லையா? இன்னொண்ணும் கேக்கணும், பிள்ளை யில்லாததுக்குக் காரணம் மலடியா? மலடனா? அதை எதை வச்சு அளக்குறது?

சரி. ஒன் புருசன் வீரியக்காரன்னே வச்சுக்க... கட்டிட்டுப்போன ஓந் தங்கச்சிக்கும் பிள்ளையில்லாமப் போச்சுனா அதுக்கு மேல கட்டிக்குடுக்க ஒனக்குத் தங்கச்சியில்ல. மூணாவது பொண்டாட்டி கட்ட வேற யாரு தங்கச்சியத் தேடுவான்?

இருக்கட்டும் பொண்டாட்டி ரெண்டுனு ஆன பெறகு, பொட்டைப்பய அவன்தான்னு முடிவாகிப் போச்சுனு வச்சுக்க... ஒரு மலட்டுப் பயலுக்கு ரெண்டு பொண்டாட்டினு ஆகிப் போகுமே, நியாயமா?

மூக்குல குத்துற மாதிரி இன்னொரு கேள்வியும் கேளுங்கடி:

தண்டியும் தரமும் கொப்பும் குலையுமா அக்கா இருக்க ஏன் கேட்டு வாரான் எளையவள? வாரிசுக்கா? அவ வயசுக்கா? இல்ல, வைர மோதிரத்துக்கா?" கருவாச்சி பேசப் பேச அவ வாயையே பாத்து வாயடைச்சு நிக்கிறாக கனகாம்பரமும் பவளமும்.

"ஏண்டி கருவாச்சி, எங்கிட்டிருந்துடி வந்துச்சு இத்தந்தண்டி அறிவு? பல்லாங்குழியில புளிய வெதைய எண்ணிப் போடக்கூட புத்தியில்லாம இருந்தவ சொட்டாங்கல் வெளையாடறப்ப ஒத்தைக் கல்ல ஒழுங்கா எடுத்துட்டு ரெட்டைக் கல் எடுக்கக் குட்டிக்கரணம் போடுறவ அயிரை மீனப் புடிக்கப் போறேனு போயி அரட்டாவளைய அள்ளிட்டு வந்து ஆத்தாகிட்ட பெத்தவ, என்னைக்கிடி வந்துச்சு ஒனக்கு இம்புட்டுப் புத்தி?"

ஒரு பக்க உதட்டுல ஓரமாச் சிரிச்சுக் கிட்டா கருவாச்சி: ஒண்ணும் பேசல. பால் குடிக்கிற பிள்ளைக்கு ஒரு பக்க முந்தானைய ஒதுக்கிக் குடுத்துட்டு, பிள்ள முண்டிமுண்டி முட்டுற சொகத்தக் கண்ணு மூடி அனுபவிச்சுக் கிட்டே சீ கடிக்குது பாரு கழுதைனு பிள்ள தலையில ஒரு செல்லத் தட்டுத் தட்டிட்டுக் கருவாச்சி சொல்றா:

"புத்தி யாருக்கு இல்ல? எல்லாருக்கும் இருக்குடி. என்னா ஒண்ணு... எல்லா புத்தியும் அடைச்சுக் கெடக்கு. கையில ஒரு சுத்தி வச்சு அலைசுக் கிட்டேயிருக்கு காலம். அப்பப்ப புத்தியில பொட்டு பொட்டுனு போட்டுப் போயிக் கிட்டேயிருக்கு. போடுற போட்டுல சில புத்தி தெறந்திருது இதுக்கெல்லாம் அசந்திருவனானு சிலது அடைச்சே கெடக்கு. இருக்கட்டும் பெருசு என்ன சொல்றாரு?"

"புத்தி மாறி உக்காந்திருக்காரு எங்கப்பன். மானம் மரியாதிக்கு அஞ்சி இஞ்சிக் கெடக்கறோம் நாங்க."

"ஒரு ஆறு மாசம் ஆறவிடுங்கடி. மனுசன் கேக்குற கேள்விக்கு மாசம் பதில் சொல்லுமடி. ஆள் செய்யாததை நாள் செய்யும்னு சும்மாவா சொன்னாக?"

யோசிக்கிறா கருவாச்சி. அவளுக்கு அவளே பேசிக்கிறா.

காடு இருக்கு உழுக மாடு இல்ல.
வீடு இருக்கு ஆள் இல்ல.
பிள்ள இருக்கு புருசன் இல்ல.
கை காலு இருக்கு காசில்ல.
மண்ட வலி காய்ச்சல்னு விழுந்தாலும் ஒரு சுக்குத் தண்ணி வச்சுக் குடுக்கச் சொந்தபந்தம் இல்ல.

"செயிக்கிறனோ இல்லையோ தோத்துப் போக மாட்டேன் மாமா" பஞ்சாயத்துல சொன்ன சொல்லு மட்டுந்தான் நெஞ்சாங்குலையப் புடிச்சு நிமிண்டிக்கிட்டேயிருக்கு. பொழைச்சுக் காமிக்கணும்.பொழைக்கிறது முக்கியமில்ல மானத் தோட பொழைக்கணும். நெல்ல வெதைக்கிறோம்... உள்ள அரிசியிருக்கு, வெளிய உமி இருக்கு. அரிசிதான் மொளைக்கிது. ஆனா, உமி இல்லாம அரிசியை மட்டும் வெதைச்சா மொளைக்குமா? மொளைக்காது. அரிசிதான் பொழப்பு உமிதான் மானம். உமியில்லாத அரிசி மொளைக்காது மானமில்லாத பொழைப்புக்கு மதிப்பேது?

சொல்லிக் குடுக்கல யாரும் அவ புத்திக்குள்ள புதுசு புதுசா முட்டுது என்னென்னமோ! ஒடம்பு நோக ஒழைக்கணும். பாடுபட்ட மேனி பவுனு படாத மேனி புண்ணு. ஒரே வேல செஞ்சு ஒண்ணுக்கும் ஆகாது சகல வேலையும் பழகணும். தண்ணியில விட்டாலும் இருக்குமாம் தரையில விட்டாலும் பொழைக்குமாம் தவள மாதிரி இருக்கணும். அண்ணந் தம்பி ஒறவுனாலும் தள்ளி நின்னே பழகணும் சொலவம் சொல்லுதா இல்லையா?


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:08 am

"மெத்தப் பழகுனாப் பித்தாளையும் பீ நாறும்."

என் வாய் உண்டது வகுறு கொண்டது போக மிச்சத்தக் கஞ்சியில்லாமக் கெடக்குற உசுருகளுக்கும் கைகால் வெளங்காத கெழடு கெட்டைகளுக்கும் ஆடு மாட்டுக்கும் காக்கா குருவிக்கும் குடுக்கணும் அள்ளிக் குடுக்கலேனாலும் கிள்ளிக் குடுக்கணும். பிள்ள பெத்த மேனி ஆம்பள சொகம் என்னான்னு அறிஞ்ச ஒடம்பு மூடி மூடி வச்சாலும் உள்ளுக்குள்ள என்னமோ முணு முணுங்கிற பருவம். ஆசைகள எரிச்சு அந்தச் சாம்பல அள்ளிப் பூசாட்டி அந்த ஆசை என்னிய எரிச்சுப்புடும். பிள்ளையப் பெத்த குடிசைக்குள்ள மாசு பொதைச்ச பள்ளத்தி லயே என் ஆசையையும் பொதைச்சுப் புட்டேன். பொதைச்ச ஆச மொளைக்காமப் பாத்துக்க ஆத்தா ஒன்னியக் கையெடுத்துக் கும்புடறேன் காளியாத்தா. நரி நாட்டாம பண்ற ஊர்ல தாய்க் கோழி இல்லாத குஞ்சாத் தனிச்சு நிக்கிறேன். நரி அடிக்க வந்தா, திருப்பி அடிக்கத் திராணி வேணாம் சாமி தப்பிச்சு ஓடி ஒளிய சந்து பொந்து காமி. மானத்துக்குப் பங்கமில்லாத எந்த வேலையும் செய்யலாம்னு முடிவெடித்துட்டா கருவாச்சி.

பூமி வானம் பாத்த பூமி. மனுசங்க பூமி பாத்த மனுசங்க. வேறென்ன தொழில் இருக்கு, விவசாயத்த விட்டா? களையெடுத்தா கருதறுத்தா குழை யறுக்கப் போனா கரட்டுக்குப் போயி வெறகெடுத்து வித்தா.

ஒரு நாள் மலையடிய ஒட்டியிருக்கிற கம்பங்காட்டுக்கு மறுகு கருது பெறக்கப் போனா. மறுகு கருதுங்கிறது வேறொண்ணு மில்ல. கம்பங்காட்ல தலக் கருது வெளைய விலாச் சிம்புகள்ல வெடிச்சு வெளியேறும் இன்னொரு கருது. தலக் கருது அறுத்து முடிச்ச இருபதாம் நாளு அதையும் அறுக்கலாம். பொதுவா அந்தக் கருதுக சக்கை யாத்தான் இருக்கும் சாவியாத்தான் கெடக்கும். அதனால் காட்டுக்காரக அத அறுக்கறதில்ல. வந்த சனம் போற சனம் அறுத்திட்டுப் போகட்டும்னு விட்ருவாக.

தோள்ல தொட்டி கட்டிப் பிள்ளையப் போட்டுக்கிட்டு, அதுக்கொரு சீனி முட்டாயி வாங்கிக் குடுத்து அழுகைய அமத்திட்டு, மசங்கற வரைக்கும் மறுகு கருது அறுத்துப் பாத்தும் குட்டிச் சாக்குல முக்காச் சாக்கு நெறையல. பிள்ளைய இடுப்புல சொமந்து கருதுச் சாக்கத் தலையில சொமந்து மொட்டக் கெணத்துப் பொலி வழியா நடந்து வாரப்ப எதுக்க வந்து நில்லுனு நிறுத்துனான் பன்னியான் பேரன்.

"எங்கருந்து கருதறுத்து வாரவ?"

"நாயக்கர் வீட்டுக் காட்ல."

"அது அப்ப எங்கண்ணன் கட்டையன் குத்த கைக்கு எடுத்த காடு."

"அறுக்கிறப்ப யாரும் தடுக்கல அறுத்த பெறகு ஏம்ப்பா மறிக்கிற?"

"தீத்துட்டுப் போன சிறுக்கிக்குப் பேச்சென்ன பேச்சு?"

அவ தலையிலிருந்த கருதுச் சாக்க விசுக்குனு புடுங்கி வீசியெறிஞ்சான் மொட்டக் கெணத்துல. கருதுச் சாக்கு கெணத்துக்குள்ள விழுந்த சத்தம் அடங்கு முன்ன அவன் கம்பங்காட்ல ஓடிக் காணாமப் போனான்.

"இருங்கடா... தெய்வம் கேக்குமடா ஒங்கள..." ஆத்தாளுக்கு என்னமோ ஆகிப்போச்சுனு பிள்ள வீல்னு கத்துன கத்துல கெணத்துக்குள்ளிருந்து ஆகாயத் துல- யாரோ அம்பு தொடுத்த மாதிரி சிவ்வுனு பயந்து பறந்து வருதுக, அப்பத்தான் போய் அடைஞ்ச நெய்க் குருவிக.

ஒரு வாய்க் கூழ்கூட இல்லாம ஏறு வெயில்ல கருதறுத்து அதையும் பறிகுடுத் திட்டு, கண்ணெல்லாம் பஞ்சடைஞ்சு கைப் பிள்ள சொமந்து போறா கருமாயப் பட்ட கருவாச்சி. கொண்ணவாயன நெனச்சாத் தான் கும்பி எரிஞ்சுபோகுது கருவாச்சிக்கு. யாரு பெத்த பிள்ளையோ? கஞ்சியில்லாத வீட்டுக்கு நீதாண்டா ராசானு ஈசன் இவன் தலையில எழுதிருச்சோ? கட்டை வேகிற காலம் வரைக்கும் காலடி நிழல்லயே கெடக்கப் போற ஒரே சொந்தம் இந்தக் கிறுக்குப் பயலாத்தான் இருப்பான் போலிருக்கு. தான் கொலபட்டினியாக் கெடந்தாலும் அவன் கும்பாவப் பழைய கஞ்சி ஊத்தியாச்சும் நெப்பிவிட்றணும். இப்படியெல்லாம் நெனச்சுக் கெடந்தவ நெஞ்சிலயும் நெருப்பு விழுகுது லேசுலேசா. அவன் முன்ன மாதிரி இல்ல. விடிஞ்சும் ஒறங்குறான் வெறிச்சு விட்டம் பாக்கிறான் கூடையில அள்ள வேண்டிய சாணியச் சட்டியில அள்ளுறான். அழகு சிங்கத்தத் திண்ணையில விட்டுட்டுத் தெருவுக்கு ஓடிப் போறான். ஒண்ணும் புடிபடல அவன் போற போக்கு. சடையத்தேவர் வீட்டு ஆளுக செய்வினை செஞ்சிருப்பாகளோ? பாப்பம்.

பொழைக்க ஒரு புது வழி பாக்கணுமே!

கருவாச்சி பெரிய மனுசியான அணுசுல ஆத்தா பெரியமூக்கி அவளுக்குப் பருத்திப் பால் பாயாசம் வச்சுக் கொடுத்திருக்கா. அந்த மாதிரி ஆயுசுல குடிச்சதில்லனு சொல்லியிருக்காக அத ருசி கண்டவுக. பருத்திப் பால் பாயாசம் செய்யிற கம்பசூத்திரம் தெரியும் கருவாச்சிக்கு. பாயாசம் போட்டு ஊருக்குள்ள வித்தா என்னன்னு யோசிச்சா மறுநாள் செஞ்சேபுட்டா. அன்னக்கி ராத்திரி அரை வீச பருத்தி வெதையத் துண்டா ஊறப் போட்டா. அரைப்படி பச்சரிசி கொஞ்சம் உளுந்து இத்துனூண்டு வெந்தயம் மூணும் கலந்து மொத்தமா ஊறவச்சா. அரைக்காப்படி பாசிப் பயறைப் போட்டு இன்னொரு ஏனத் துல தண்ணி ஊத்திவச்சா. ஊறவச்ச பருத்தி வெதையோட இஞ்சியும் ஏலக்காயும் கலந்து ஒரல்ல போட்டு, கோழி கூப்பிடக் கொண்ணவாயன எழுப்பி "ஆட்றா மகனே ஆட்றா"ன்னா. அவன் ஒறங்கி விழுந்துக்கிட்டே ஒரல ஆட்றான். சக்கைப் பதம் வரவும் அதுல தண்ணி ஊத்திப் பருத்திப் பாலப் புழிஞ்சா பாத்திரத்துல. அப்படி மூணு ஆட்டி ஆட்டி மூணு புழி புழிஞ்சா. ஊறப் போட்ட பச்சரிசியக் குருணப் பதத்துக்கு ஆட்டி அள்ளிவச்சுக்கிட்டா. ரெண்டு வீச கருப்பட்டிய நுணுக்கிவச்சுக் கிட்டா அரைத் தேங்காயத் துருவிவச்சுக் கிட்டா.

இப்பப் பத்துப் படி தண்ணிய ஒரு அடுப்புக் கூட்டிக் கொதிகொதினு கொதிக்கவிட்டா. ஊத்துனா அதுல பருத்திப் பால. கிண்டிக்கிட்டே முழுப் பாசிப் பயற உள்ள அள்ளிக் கொட்னா. அது முக்காப் பதம் வேக்காடு கண்டதும் பச்சரிசி மாவ உள்ள கொட்டிக் கலக்கோ கலக்குனு கலக்குனா. கொதி பதம் வந்ததும் கருபட்டித் தூளை வெதச்சு தேங்காத் துருவலைத் தெளிச்சு எறக்கிவச்சா. நான் இங்கே இருக்கேன்னு தெருவுல போற ஆளுக்கெல்லாம் தகவல் சொல்லுது பாயாசம். ஒரு போணி ஓரணானு அவ விக்க ஆரம்பிச்சதும் கஞ்சிப் பொழுதுக்குள்ள காணாமப்போயிருச்சு பாயாசம்.

பத்தே நாள்ல கருவாச்சி பாயாசத்துக்குக் கிறுக்குப் புடிச்சுப் போயிருச்சு ஊரு. விடிய்ய பல்லு வெளக்காமப் பாயாசம் குடிச்சுப் பழகிருச்சு சொக்கத்தேவன் பட்டி. செலவெல்லாம் போக அவ கையில நித்தம் நிக்கிது ஒண்ணே முக்கா.

கட்டையன் பதறிப் போனான். "ஏய்! இப்படியே விட்டா ஈரு பேனாகிப் போகும் பேனு பெருமாளாகிப் போகும். அவ பாயாசச் சட்டியில பல்லியடிச்சுப் போடுங்கடா."


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:08 am

"நீ சும்மா இருண்ணே... அவ பொழப்புல ஆப்படிக்கிறதுக்கு இன்னொரு வழி வச்சிருக்கேன்." மறுநாள் பாயாசப் பானையத் தலையில சொமந்து கோழி கூப்புட கருவாச்சி தெருவுல எறங்கி நடக்க... அதுக்கு முன்ன பாயாசம் வாங்கிக் குடிச்சுக்கிட்டிருக்கு ஒரு கூட்டம். அதே மாதிரி ஈயக்குண்டா, அதே மாதிரி போணி வச்சு ஓரணாவுக்கு ரெண்டு போணின்னு ஊருக்கே ஊத்திக்கிட்டிருக்கா கன்னியம்மா. ஊர்ல ஒரு மாதிரியான பொம்பள அவ. முப்பது முப்பத்தஞ்சு வயசிருந்தாலும் சும்மா செவ்வாழத்தாரு மாதிரி சிலுப்பி நிக்கிறவ. அவளுக்கும் வேற பொம்பளைகளுக்கும் தெருவுல சண்டகிண்ட வந்து "தெரியாதா ஒன்னிய... அவனத்தான நீ வச்சிருக்க"னு கேட் டுட்டா... "ஒனக்குத் தெரிஞ்சு அவன் ஒருத்தன்தாண்டி... எனக்குத்தான தெரியும் என்னிய வச்சிருக்கிற நாலு பேர்ல ஒம் புருசனும் ஒரு ஆளுனு"இப்படிப் பதில் சொல்ற ஏடாகூடமான பொம்பள.

அவளுக்குக் கட்டையன் ஆளுக துட்டக் குடுத்துத் தட்டேத்திவிடவும் ஓரணாவுக்கு ஒரு போணினு விக்கிற பாயாசத்த இவ ஓரணாவுக்கு ரெண்டு போணினு வித்து கருவாச்சி பொழப்பக் காலி பண்ணிப்புட்டா.

ஏவாரம் அத்துப்போச்சு, கைக் காசு கொறஞ்சுபோச்சு, சென மாடு தீவனமில்லாமக் கெடக்கு, சதசதசதனு ஈரமிருந்தும் உழாமக் கெடக்கு காடு. காய்ச்ச(ல்) தடுமன்னு பத்துப் போட்டுக் கெடக்கு பெத்த புள்ள.

இந்த வருசச் சம்பளம் வேற குடுக்கல கொண்ணவாயனுக்கு. கொட்டத்துல சாணியள்ளி, தூக்குச் சட்டியில கூழ் ஊத்தி வச்சுக்கிட்டு "மேய்ச்சலுக்கு ஓட்டிட்டுப் போடா மகனே பசுமாட்ட"னு கொண்ணவாயனக் கூப்பிட்டா, அவன் சாட்டக் கம்பத் திண்ணையில போட்டுட்டு ஒடிஞ்ச ஒடம்பு வளைஞ்சு நின்னு சொல்றான்: "சி... சி... சின்னத்தா... நான் ஊர்ல போயிக் க...க...க... கல்யாணம் பண்ணிக் கு...கு...கு... குடும்பம் நடத்தப் போறேன். ச...ச...ச... சம்பளத்தக் குடுத்திட்டா... நான் வே...வே... வே... வேலைய விட்டு நின்னுக்கிறேன்."

அவன்கிட்ட எதிர்பாக்கல அவ அந்த வார்த்தைய...

காதுக்குள்ள பாஞ்ச முள்ளு கண்ணுக்குள்ள எட்டிப்பாக்குற மாதிரி அவ கண்ணவிட்டுத் தவ்விருச்சு கண்ணீர்த் துளி ரெண்டு.

செத்தவடம் நெஞ்சப் புடிச்சு ஒக்காந்துபோனவ நொட்டாங்கையில ரெண்டு கண்ணையும் தொடச்சுக்கிட்டா.

"போடா! ஏலே போடா. எல்லாம் அந்து போயி என் இத்த வேருக்குக் கீழ ஒட்டிக்கிட்டிருந்த ஒத்த வேரு நீயும் அத்துக்கிட்டுப் போறயா? போ! ஒத்தையில பிள்ள பெத்தவளுக்கு ஒத்தையில சாகத் தெரியாதா? போங்கடா, போறவனெல்லாம் போங்கடா!"

அழுகை நிக்கல பாவம் அழுகப் பெறந்தவளுக்கு!

சொக்கத்தேவன் பட்டியைக் கடக்கிற வரைக்கும் மாருல கல்லக் கட்டி நடந்த மாதிரி, மனசு கனத்துத்தான் கெடந்துச்சு கொண்ணவாயனுக்கு. கஞ்சி ஊத்துன வீட்ட விட்டுப் போறமே, காத்தா அலஞ்சு திரிஞ்ச காட்ட விட்டுப் போறமே, தீனிக்கு ஏங்குற சென மாட்ட விட்டுட்டுப் போறமேங்குற வருத்தம் ஒரு பக்கமிருக்க, நாம போனா ஊடும் பாடும் ஒத்தாச பண்றதுக்குச் சின்னத்தாவுக்கு நாதி இல்லையே, அழகு சிங்கத்தத் தூக்க ஆளில்லையேங்கிற கவல தான் குறுக்குல குத்துது கொண்ணவாயன.

ஊரு கடந்து ஒத்தையடிப் பாதையில வந்து சேர, நெஞ்சில இருந்த பாரம் கொஞ்சமா எறங்கி பையில இருந்த பாரம் கனக்குது லேசா. பையத் தாண்டி எண்ணெயப் பையக் கசியவிட்டு, நான் இங்கே இருக்கேங்குது உள்ளுக் கிருக்கிற அதிரசம். முறுக்கும், சீடையும் ஒண்ணுக்கொண்ணு முட்டி, குட்டிக் கலாட்டாப் பண்ணி வருதுக.

என்னியக் கட்டப் போறவ பேரென்ன... பேரென்ன?னு பையிக்கு வெளிய பிதுங்கி நாக்கத் தொங்கப்போட்டுக் கேக்குது, தேனிச் சந்தையில வாங்கித் திணிச்ச மஞ்சச் சீல. அவ பேரு அய்யக்கா அவ பேரு அய்யக்கானு க்ளிங் மொழி பேசுதுக காயிதத்துல சுத்திவச்ச கண்ணாடி வளவிக.

அவுந்த வேட்டியக் கட்ட அவன் கையத் தூக்கவும், எதேச்சையா மேல வந்த பையி மூக்குல ஒரு முட்டி முட்டிப் போனதுல, அடிக்குது பைக்குள்ள அய்யக்கா வாசம். இன்னைக்கு நேத்துப் பழக்கமா அவனுக்கும் அய்யக்காவுக்கும். பத்துப் பதினோரு வயசுல ஊர் மாடு மேய்க்கப் போனவன் இவன். ஊர் மாட்டுக்குப் பின்னாலயே சாணி பெறக்க வந்தவ அவ. சாட்டைக்கம்புக்குக் கால் சட்டை போட்டுவிட்ட மாதிரி இவன். முருங்கக் காய்க்கு முந்தான சுத்துன மாதிரி அவ. இவனவிட மூணு மாசம் அவ பெரியவ தான் ஆனா, பெரிய வித்தியாசமில்ல உருவத்துல. கொண்ணவாயன் அப்பன் ஒரு குடிகாரன் அய்யக்கா அவுக ஆத்தா ஒரு ஓடுகாலி. பொழச்சாப் பொழைங்க செத்தா சாங்கனு ரெண்டு பேரையும் தெருவுல விட்டுட்டாக அவன் அப்பனும் இவ ஆத்தாளும்.

மாடுதான் சொந்த பந்தம்னு ஆகிப்போச்சு இவனுக்கு சாணிதான் கஞ்சினு ஆகிப்போச்சு அவளுக்கு. கஞ்சிப் பொழுதுக்கு ஊர் மாடு ஓட்டிக் கெளம்பிடுவான் கொண்ண வாயன். நாப்பது அம்பது மாடுகள முன்னுக்குவிட்டு இவன் பின்னுக்குப் போக கூடையத் தூக்கிக்கிட்டு கூடவே வருவாக சாணி பெறக்கிற அஞ்சாறு பொம்பளைக. அந்தப் பொம்பளைக போடுவாளுகய்யா ஒரு சண்ட, சும்மா பானிப்பட்டு யுத்தம் மாதிரி ஒரு சாணிப்பட்டு யுத்தம். எந்த ஒரு மாடும் சாணி போடுற துக்கு முன்ன மொதல்ல வாலத் தூக்கும்.

தூண்டிக்காரன் தக்கையிலயே கண்ணு வச்சிருக்கிற மாதிரி வால்லயே கண்ணு வச்சிருப்பாளுக சாணி பெறக்கிற பொம்பளைக. எந்த மாடு வாலத் தூக்குதுனு கண்டுபுடிச்சு ஏஞ்சாணி... ஏஞ்சாணினு எவ மொதல்ல கத்துறாளோ, அவளுக்குதான் சட்டப்படி பாத்தியப்படும் சாணி.

அய்யக்காவுக்கு ஒரு காலு இழுவை வெரசா நடக்க மாட்டா. சாணியப் பாத்தாக் கூடைய விட்டுருவா கூடையப் பாத்தா சாணிய விட்ருவா. எத்தனையோ நாள் ஏமாந்து போயி வெறுங்கூடையோட வீடு சேந்திருக்கா. அவளப் பாக்கப் பாக்கக் கொண்ணவாயன் மனசு ஓரமா உருகுது. எப்பிடியும் அவ கூடைய நெப்பி அனுப்பணுங்கற ஒரு நெனப்பு நெஞ்சுக்குழியப் பிறாண்டுது.

இவனே ஒரு ஏற்பாடு பண்ணுனான் எந்த மாடு வயிறு நெறையக் குழை தின்டுச்சோ, எந்த மாட்டுக்குச் சாணிச் சத்து அதிகமோ, அந்த மாடுகள எடது பக்கமா நிறுத்தி ஓட்டி, அய்யக்காவ அதே பக்கம் முன்னுக்கவிட்டு இவன் பின்னுக்கப் போறான். மாடு வாலத் தூக்க ஒரு எம்பு எம்ப, இவன் அய்யக்கா தோளத் தடவுவான். அதுக்குள்ள அவ "ஏஞ்சாணி... ஏஞ்சாணி"னு கத்திருவா. இப்பவெல்லாம் நித்தம் நித்தம் நெறஞ்சுபோகுது கூடை.

இப்படியே அஞ்சாறு மாசம் அவுக காலம் நடக்குது. வரவர கூடையில சாணியும் மனசுல காதலும் பெரும்கனம் கனக்குது.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:09 am

நித்தம் கூடைய நெப்பிக் குடுக்கிற சாணீஸ்வரனுக்கு அச்சுவெல்லம், பணியாரம், அவிச்ச மொச்சையெல்லாம் கொண்டு வந்து குடுக்க ஆரம்பிச்சுட்டா. இப்படிச் சேந்த கூட்டுக் கிளிக ரெண்டும் கூட்டு ஏவாரம் பண்ணப் பழகிருச்சுக. அதாவது சாணி தட்டி விக்கிதுக. சாணியில மாட்டுச் சாணி கொஞ்சம் கெட்டி எருமச் சாணி கொஞ்சம் கூழு. ரெண்டையும் சேத்துப் போட்டு கொழச் சாத்தான் கெடைக்கும் எருத்தட்ட ஏத்த பதம். அய்யக்காவுக்கு நல்லாப் புடி பட்டிருக்கு சாணிய எருவாக்குற சங்கதி. உமிக்கருக்கு, புளியஞ்சருகு, நெல்லுச்சண்டு மூணையும் போட்டு ரெண்டு சாணியிலயும் கலப்பா. என்னமோ மண்டவெல்லம் புடிக்கிற மாதிரி ஆசைஆசையா உருண்ட புடிப்பா. உருண்டைய எடுத்துத் திரும்பவும் உமியில வச்சு ஓங்கித் தட்ட... அது சப்பட்டையாப் போகும். அத அப்படியே எடுத்துப் புளியமரத்துலயோ சுவத்திலயோ அடிச்சு ஒரு வாரம் காயவிடுவா எருவாயிரும்.

உற்பத்தி அய்யக்கா ஏவாரம் கொண்ணவாயன். ஆப்பக்கடை ராசம்மாவுக்கும் தோட்டி துடியாண்டிக்கும் எருவ வித்து வடையும் கெழங்கும் வாங்கித் தின்ட காலம் கரையாத அச்சுவெல்லக்கட்டியா இனிச்சுக் கெடக்கு மனசுக்குள்ள இன்னும். அய்யக்காவ நெஞ்சுல சொமந்து வெயில்ல நடந்து வேர்த்து வந்தவன் எருத் தட்டுற புளியமரத்து நெழல்ல ஒதுங்குனான். புல்லரிக்குது தேகம் பூரா. அய்யக்கா அய்யக்கானு கத்துது புளியமரத்துல ஒரு காக்கா. புளியமரத்து அடித்தண்டுல எருத் தட்டுன பழைய தடத்துல போயிப் படுத்துக்கிட்டு இன்னிக்கி எந்திரிக்கிறாப்பில இல்லேங்குது இருதயக்கூடு.

வெவரம் தெரியாத வயசுல மனசுல பச்ச குத்துது பாருங்க ஒரு பழைய நெனப்பு... அழியிறதில்ல அது ஆயுசு பரியந்தம்.

புளியமரம் கடந்து கிளியாம்பாறை எறங்குனா வந்திரும் பாம்பாறு. பாம் பாத்துல எறங்கி நின்னானோ இல்லையோ ஒடம்பெல்லாம் அவனுக்குப் பாயாசம் பாயுது. உள்ளங்கால் நனைக்கிற தண்ணியில நின்னு ஓடவிடுறான் மனச பழைய காலத்துமேல. அன்னக்கி ஓடுன தண்ணி இன்னக்கி இல்ல அந்தப் பழைய மணலுமில்ல ஆத்துல. அன்னக்கி இச்சி மரத்துல நின்னு எங்கள வேடிக்க பாத்த கொக்கும் குருவியும் செத்தேபோயிருக்கும் இந்நேரம்.

அவளையும் என்னையும் அல்லாட விட்டு அழகு பாத்த அந்த நாளு, கால சமுத்திரத்துல விழுந்த ஒத்த மழைத் துளியா உருவழிஞ்சு போயிருக்கும். ஆனா ஞாபகம் சாகுமா? சாகாது. அந்தா! அந்த எடந்தான் அவ விடுகதை போட்டது. இந்தா! இந்த எடந்தான் நான் மீன் சுட்டுக் குடுத்தது.

உச்சிப் பொழுது.

கம்முனு இருக்கு காடு. இல தழை ஆடல. காசு குடுங்க, இல்லாட்டிக் காயிதம் போடுங்க... அப்பத்தான் வருவேங்குது காத்து. எல்லாக் கைகளையும் தூக்கி ஆகாயத்தக் கும்பிட்டு ஆடாம அசையாம மழை வரம் கேக்குதுக மரங்க. வடை சட்டியில போட்டு ஈரல வறுத்தெடுக்கிற மாதிரி, வெயில் சட்டியில போட்டு பூமிய வறுத் தெடுக்குது சித்திரை மாசம். தரிசுக் காடு மேஞ்சு வந்த மாடுக தாகத்துக்கு எறங்குதுக ஆத்துக்குள்ள, ஆத்துக்குத் தேமல் விழுந்த மாதிரி அங்கங்க திட்டுத்திட்டாக் கெடக்கு தண்ணி. மூங்கி மரத்து நெழல்ல சரிஞ்சு சாஞ்சாக கொண்ணவாயனும் அய்யக்காவும்.

எருவு வாங்குனதுக்குத் துட்டுக்குப் பதிலா சுடுகாட்டுப் பொரியும் தேங்காச் சில்லும் குடுத்திருந்தான் தோட்டி துடியாண்டி. ஒரு வாய் பொரி, ஒரு கடி தேங்கா யுமா மாத்திமாத்தித் தின்டுக்கிட்டுக் கத பேசுதுக ரெண்டும்.

"எ... எ... எ... எங்க வீட்டுக்கு வா... வா... வா... வாக்கப்பட்டு வாரப்ப... எ... எ... எ... என்ன கொண்டு வருவ?"

"மொறையா வந்து பெண்ணு கேளு மொற செய்யிறத அப்புறம் பாக்கலாம்."

"எங்கப்பன் சொ... சொ... சொ...சொல்லிருச்சில்ல. எங்க வீட்டுக்கு நீ மொ... மொ... மொ... மொறப் பொண்ணாம். மூ... மூ... மூணு முடிச்சில மூக்கணாங்கயிறு போ... போ... போட்டுற மாட்டேன்."

"மூணு முடிச்சு அப்புறம் மொதல்ல மூணு கதை சொல்றேன் அத விடுவி பாப்பம்."

"சொ... சொ... சொ... சொல்லு. கே... கே... கேப்பம்."

வாயில கெடந்த பொரிய ஒரு கடவாப் பல்லுலயிருந்து மறு கடவாப் பல்லுக்குத் தள்ளி மென்னு அரைச்சு ஒரே முழுங்கா முழுங்கி உள்ள தள்ளிட்டுச் சொல்றா அய்யக்கா.

"பொட்டு வைக்காத சாமி ஒரு சாமி
காலு கழுவாத சாமி ஒரு சாமி
ஒட்டுத்துணி கட்டாத சாமி ஒரு சாமி
மொத்தம் மூணு சாமி என்ன சாமி?"


"சொ... சொ... சொல்லிப்பிட்டா?"

அவளுக்குத் தெரியாதா? அவன் தலையைத் தரையில ஊன்டி மருத வரைக்கும் போனாலும் இந்த மூணு சாமியும் சொல்றதுக்கு அவனுக்கு மூளை இல்லைனு... அந்த தைரியத்துல
சொல்றா."கோழியடிச்சுக் கொழம்புவச்சு உள்ளங்கையில சோறாக்கிப் போடுறேன் ஒனக்கு. சொல்லாட்டி?"

"சொ... சொ... சொ... சொல்லாட்டி... இ... இ... இ... இங்கேயே மீன் சுட்டுத் தாரேன்."

"அதையும் பாப்பம்."

அவன் முக்குறான், மொனகுறான் உருமால அவுக்குறான் உள்ள முடியிலயும் ஒண்ணு ரெண்டு கொட்டிப் போக தலையச் சொறியிறான். என்னமோ ரெண்டு கைகளுக்கு மத்தியில தேங்காய வச்சு ஒரே அமுக்குல அமுக்கி ஒடைக்கிறவன் மாதிரி, ஒண்ணுமில்லாத உள்ளங்கைய நசநசனு நசுக்கிறான். வாய்க்கு வந்த வார்த்தையெல்லாம் கொண்ணிக் கொண்ணிச் சொல்லிப் பாக்குறான் ஒண்ணும் கதையாகல.

"நீ... நீ... நீ... நீயே சொல்லு?"


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:09 am

ஒண்ணுஞ் சொல்ல முடியாமத் தோத்துப்போன தொத்தப்பய, அவ குதிகால எடுத்து உள்ளங்கையில போட்டு உருவோ உருவுனு உருவவும், மண்ணாங்கட்டி மேல மழை பேஞ்ச மாதிரி அவ கரைஞ்சுபோனா கரைஞ்சு. கேட்டுக்க கேணனு வாய்க்குள்ளயே மொனகிக்கிட்டு, அவ போட்ட கதைய அவளே விடுவிக்கிறா.

"வருணபகவான்னு கும்புடுறமா இல்லையா தண்ணிய... அதுல பொட்டு வச்சா நிக்குமா? அதான் பொட்டு வைக்காத சாமி. கோமாதானு கும்புடறமா இல்லையா பசுவ... அது சாணி போட்டாக் கால் கழுவுதா? அதான் காலு கழுவாத சாமி. அக்கினி பகவான்னு கும்புடறமா இல்லையா தீய... அது துணி கட்டுமா? அதான் ஒட்டுத்துணி கட்டாத சாமி."

அவ சொல்லச் சொல்ல... அவன் கண்ணும் வாயும் விரிஞ்சது பாருங்க... "ஒனக்கு ரொம்பப் பெ... பெ... பெ... பெருசுடியாத்தா மூ... மூ... மூ.... மூள."

அவ சொன்ன கதைக்கு அவளே பதிலைச் சொல்லிட்டா. அவன் சொன்ன வேலைய அவன் செய்யணுமா இல்லையா? செஞ்சான்.

ஆத்தோரமா இருந்த கோரைக்குள்ள கையவிட்டு ரெண்டு மூணு குரவ மீனப் புடிச்சான். சொறிக் கல்லுல ஒரசி, கொதிக்கிற ஓடை மணலுக்குள்ள குழி தோண்டிப் புதைச்சான். அந்த வேக்காட்ல வெந்து தணிஞ்சிருச்சு மீனு. எடுத்தான் முள்ளிருக்கக் கறிய மட்டும் உருவி உருவி ஊட்டிவிட்டான். ஓடி முடிஞ்சுபோச்சு காலம் ஆனா ஆத்துக்குள்ள சுத்திக்கிட்டேயிருக்கே மீன் வாசம்.

அதுக்குப் பெறகு குடிகாரத் தகப்பன் துட்டுக்கு ஆசப்பட்டு அவன சொக்கத் தேவன்பட்டியில பண்ணைக்கிருக்க வச்சதும் திருவிழா தீபாவளிக்கு வாரப்பெல்லாம் வளவியும் பலகாரமும் வாங்கியாந்து குடுத்து ஓடையில ஒளிச்சுத் தின்னதும் ஆடு மாடுகளோட அய்யக்கா நெனப்பையும் சேத்து மேச்சதும் ஈசானிய மூலையிலருந்து மழை எறங்கி வந்தா, அ... அ... அய்யக்கா எருவ ந... ந... நனச்சிராதனு ஆகாயத்தச் சாட்டக்கம்ப வச்சு அடிக்கப்போனதும் அவளுக்குத் தாலித் தங்கம் வாங்க எச்சியக் குடிச்சுக்கிட்டே காச மிச்சம் பண்ணுனதும் இந்தா இப்ப மஞ்சச் சீலையோட, கருவாச்சி குடுத்த காசோட, புது மாப்ள முறுக்கோட ஊர் திரும்புறதும் நெனச்சா, கனாக் கண்ட மாதிரியிருக்கு கிள்ளிப் பாத்தா வலிக்குது நெசந்தான்.

ஆறு தாண்டி, மேடு ஏறி இறங்கி, ஒத்த ஆலமரம் கடந்தா ஊரு வந்திரும். அந்தி மசங்க இந்த ஆகாயம் என்னென்னா கூத்துக் கட்டி ஆடுது? புதுசா மருதாணி போடுது புளிச் புளிச்சுனு வெத்தல போட்டுத் துப்புது மார்லயும் மூஞ்சியிலயும் மஞ்சப் பூசிக் குளிக்குது எத்தன நிறமடா சாமினு ஒண்ணு ரெண்டு மூணு எண்ணி முடிக்குமுன்ன கரேர்னு கருப்புத் தார் பூசி அத்தன நெறத்தையும் அழிச்சிட்டுப் போயிருது.

வந்திருச்சு ஊரு. எருக்குழி தாண்டி எடப்பக்கம் திரும்புனா அவன் தெருவு. அடுத்த சந்து அய்யக்கா வீடு. கோழி கூப்பிட சாணியக் கரச்சுச் சட்டியில எடுத்துக்கிட்டு வாசத் தொளிக்க வந்த கருவாச்சி பலகைக் கல்லுல படுத்திருந்த உருவத்தக் கண்டதும் பயந்து போனா. கதவு தொறந்த சத்தம் கேட்டதும் பளிச்சுனு முழிச்சு, கருவாச்சி கால்ல மளார்னு விழுந்து உருண்டு உருண்டு அழுகிறான் கொண்ணவாயன் புடிச்ச கால விடாமப் பெரண்டு பெரண்டு அழுகிறான்.

"ஏய்! என்னடா இது..? எந்திர்றா..." அவ சாணி சட்டியக் கீழ போட்டுட்டுப் பதறிப்போனா.

நல்ல நாள்லயே சொல்லு சொந்த மில்ல அவனுக்கு. நெஞ்சில முள்ளுத் தச்சு நெல கொலஞ்சு அழுகிறவன் என்னத்தச் சொல்லப்போறான் பாவம்.

"ஏலே! கால விடுறா கண்ணத் தொடச்சுக்கடா எந்திர்றா என்னாச்சுனு சொல்றா?"

மண்ணுல மூஞ்சியத் தேச்சுக் கிட்டே அழுது சொல்லுது அந்த அரைப் பெறவி.

"அவுக ஆ... ஆ... ஆத்தா பட்ட கடனுக்கு அய்யக்காவக் க... க... க... கல்யாணம் பண்ணிக்கிட்டான் எ... எ... எ... எங்கப்பன். எனக்கு சா... சா... சாகத் தைரியம் இல்ல ஆத்தா. ஓ... ஓ... ஓடியாந்துட்டேன். என் கட்ட வேகுமட்டும் ஒங் காலடியவிட்டுப் போ... போ... போ... போகமாட்டனத்தா! இ... இ... இருந்தாச் சோறு. செ... செ... செத்தா வாய்க்கரிசி போடுவியா?"

ஆத்தா செத்தன்னக்கிக்கூட அழுகாத கருவாச்சி அன்னக்கி அழுதா. கொட்டிக் கெடந்தவனக் குனிஞ்சு அள்ளுனா. "நீதாண்டா எம் மூத்த மகன். காலமெல்லாம் ஒனக்குக் கஞ்சி ஊத்துறண்டா! நான் செத்தா நீ தூக்கிப் போடு நீ செத்தா நான் தூக்கிப் போடுறேன் அழுகாதடா."

அவன் கொண்டு வந்த பை மேல கோழி ஒண்ணு தவ்விப்போனதுல க்ளிங்... க்ளிங்னு சத்தம் போட்டுது ஒடைஞ்சுபோன ஒரு வளவி. என்னிய எடுத்துக் கண்ணத் தொடச்சுக்கனு எட்டிப்பாக்குது பைக்கு வெளிய மூஞ்சியத் தொங்கப்போட்ட மஞ்சச் சீல. வாசத் தொளிக்கிற வரைக்கும் காத்திருக்குமா? விடிஞ்சிருச்சு பொழுது!

"சீ...சீ...சீ... சின்னத்தா... கெ...கெ...கெ... கெடையவிட்டு ஒ...ஒ...ஒ... ஒதுங்கி வந்துருச்சு ஒரு கெ...கெ...கெ... கெடாக்குட்டி. வீ...வீ...வீ... வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டேன்." பிள்ளையத் தூக்கி வச்சிருக்கிற தாய் மாதிரி நெஞ்சுல சொமந்து கொண்டாந்த செம்பிலி ஆட்டங்குட்டியக் கொண்ணவாயன் தாங்கித் தரையில எறக்கிவிடவும் புது எடத்தச் செத்தவடம் வெறிச்சு வெறிச்சுப் பாத்த குட்டி, மளார்னு ஒரு தவ்வுத் தவ்வி மான் குட்டி மாதிரி ஓடுது.

பிள்ளைக்கு ஒரு பக்க மார ஒதுக்கிப் பால் குடுத்துக்கிட்டிருந்த கருவாச்சி, பிள்ளையப் பிரிச்சு மாரை ஒழுங்குபண்ணிக்கிட்டே புடி புடி புடினு ஓடி வாரா பிள்ளையத் தூக்கிக்கிட்டே. தவ்வி ஓடி காடிக்குள்ள விழுந்துபோன கெடாக் குட்டியக் கொண்ணவாயன் புடிச்சுத் தூக்கி வரவும், புடிக்கி அடங்காம அவன் கைய விட்டு ஒழுகுது கழுத. கைத்தாங்கலா கருவாச்சிகிட்ட எறக்கிவிட்டுட்டுப் பின்னங்கால் ரெண்டையும் புடிச்சு உக்கார்றான் கொண்ணவாயன்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:09 am

குட்டியத் தொட்டுத் தொட்டுப் பாக்குறா கருவாச்சி. தலையத் தடவுறா தாடைய உருவுறா எளங் காது ரெண்டையும் வருடி வருடிப் பாக்குறா. வெள்ள வெளேர்னு இருக்கு தோலு. பளிங்காங் குண்டுக மாதிரி மினுக்மினுக்குனு மின்னுதுக கண்ணுக ரெண்டும். ரெண்டு நாளோ மூணு நாளோதான் இருக்கும் குட்டி பெறந்து. பெறந்த பிள்ளையக் கழுவித் தொடச்சு வெயில்ல காயவச்ச மாதிரியே இருக்கு குட்டி.

நீங்க வேணும்னா பாருங்க... எல்லா மனுசங்களையும் உத்துப் பாத்தா ஒரு மிருக மூஞ்சி தெரியும் எல்லா மிருகங்களையும் உத்துப் பாத்தா ஒரு மனுச மூஞ்சி தெரியும். கருவாச்சி குட்டிய நேராப் பாத்தா ஆடாத் தெரியுது அட்டத்துல பாத்தா ஒரு ஆளாத் தெரியுது. உத்துப் பாத்தா உள்...ளுக்கத் தெரியுது ஒரு சொந்தக்கார மூஞ்சி.

"புடிடா பிள்ளைய"னு அழகுசிங்கத்த அவன் கையில குடுத்துட்டு, ஆட்டுக் குட்டியத் தூக்கி மடியில போட்டு மாரோட அழுத்திக் கிட்டா. அவ அழுத்துன அழுத்தத்துல பிதுக்குனுப் பிதுங்கிப் பீச்சியடிச்சு முந்தானைய நனைச்சுட்டுப் போகுது ரெண்டு மூணு சொட்டுத் தாய்ப்பாலு.

கெடாக் குட்டிக்கு முத்தங்குடுத்து மோந்து பாத்துக்கிட்டே சொல்றா... "இது காட்ல வந்த பொருள் இல்லடா கொண்ணவாயா, கடவுளாப் பாத்துக் குடுத்தது. ஒத்தையில பிள்ளப் பெத்தன்னக்கே, தாயும் பிள்ளையும் தனித்தனியா ஆக்கிட்டா ஒனக்குக் கெடா வெட்டுறேன் தாயினு காளி யாத்தாவுக்கு நேந்துக்கிட்டேன். என்னைக்கி வெட்டுறது? பொழைச்சுக் கெடந்தன்னிக்கி வெட்டிக்கிரலாம்னு புத்தி சொல்லிச்சு. நீ என்னக்கிப் பொழைக்கிறது... என்னைக்கி எனக்கு வெட்டுறது... இந்தா வளத்து வெட்டிக்கனு கெடாக் குட்டியக் குடுத்துருக்கா காளியாத்தா... தெய்வம் தந்த பொருள் தெய்வத்துக்கே சேக்கணுமடா."

"ஆட்டுக்குட்டிக்கு ஒரு பே...பே...பே... பேருவைக்கணும் சின்னத்தா."

"இது செம்பிலி ஆடு இல்லடா, செம்புலிடா. பூலித்தேவன்னு வைடா."

"பூ...பூ...பூ... பூலித்தேவா! ஒ...ஒ...ஒ... ஒனக்குப் புல்லு வைக்கிறேன் வா." வச்சு முடிச்சவுடனயே ஒரு திக்கு வாய் மூலமாப் பேரு தொலங்க ஆரம்பிச்சுருச்சு. பிள்ள பெத்த வீடு தானியம் அடிச்ச வீடு வயசுப் பொண்ணு கொலுசு மாட்டி அங்கிட்டும் இங்கிட்டும் அலையற வீடு கல்யாணம் நிச்சயமான வீடு மாடு கன்டு போட்ட வீடு... இதெல்லாம் எப்பவும் கலகலப்பாயிருக்கும் பாத்துக்குங்க. இதுல கெடையில கெடாக் குட்டி கெடச்ச வீட்டையும் சேத்துக்கிரலாம் இப்ப. அழுத பிள்ளைக்கு பால் குடுத்தமாங்கிறதும் ஆட்டுக் குட்டிக்குத் தண்ணி வச்சமாங்கிறதும் ஒண்ணாகிப்போச்சு கருவாச்சிக்கு.

அருகம்புல்லுல எளம்புல்லாப் புடுங்கிக் கூடையில போட்டுவச்சா குட்டி கடிக்க. அகத்திக் கீரையில எளந்தழையா வாங்கி, கடிக்க ஏதுவான எடத்துல கட்டிவிட்டா. குட்டியக் கயிறுபோட்டுக் கட்டிவச்சா இழுக்கிற இழுப்புல கழுத்து புண்ணாகிப்போகுமா இல்லையா... அதுக்காக கொண்ணவாயனவிட்டுக் கொட்டத்துல குச்சி கட்டச் சொல்லி ஒரு படலும் போட்டுவிட்டு, இந்த எல்லைக்குள்ள நீ தவ்விக்க... வெளை யாடிக்க... செல்லச்சேட்டை பண்ணிக்கனு விட்டுட்டா குட்டிய.

மிருகங்க, மரங்களப் பொறுத்துப் பொதுவா ஒரு விதி வச்சிருக்கு இயற்கை. பூமியில நெடுங்காலம் இருந்து வாழப்போறதெல்லாம் நின்னு நிதானமா வளரும். ஆயுசு அற்பமானதெல்லாம் பட்டுனு வளந்து பொட்டுனு போயிரும். விறுவிறுனு வளந்து பூத்துக் காஞ்சு ஓஞ்சுபோகுது முருங்கமரம். நூறு வருசம்... எரநூறு வருசம் நிக்கிற புளியமரம் நான் வாரபோதுதான் வருவேனு பையத்தான் வருது. பதினஞ்சு பதினாறு வருசந்தான் ஒரு கெடாய்க்கு ஆயுசு. ஆனா, அது வளர்ற வேகம் ஒங்க வீட்டு வேகம் எங்க வீட்டு வேகம் இல்ல. கையில புடிச்சுப் பாத்துக்கிட்டேயிருந்தாலே கண்ணுக்குத் தெரியும் அது வளர்றது. ரெண்டே மாசத்துல ஒரு கெடாய்க் கான லட்சணத்தோட நின்னு நிமிந்துபோச்சு குட்டி.

"ஏலே கொண்ணவாயா! அழகுசிங்கம் நான் பெத்த பிள்ளடா. பூலித்தேவன் என் தத்துப் பிள்ளைடா"சொல்லிச் சொல்லிக் குளுந்துபோனா கருவாச்சி. சொன்னது மட்டுமில்லாம செய்யிறா.

அழகுசிங்கத்துக்குப் பாலு பூலித்தேவனுக்குப் புளிச்ச தண்ணி.
அழகுசிங்கத்துக்குப் பருப்புச் சோறு பூலித்தேவனுக்குப் பழைய கஞ்சி.
அழகுசிங்கத்துக்கு முட்டாயி பூலித்தேவனுக்கு ஆமணக்கங் கொழ.
அழகுசிங்கத்துக்குத் தொட்டிலு பூலித்தேவனுக்கு திண்ணை.
அழகுசிங்கம் வயித்துக்கு வேப்பெண் ணெய் பூலித்தேவன் வயித்துக்கு உப்பு.

பிள்ளைக வயித்துல புழுவுக பூச்சிக இருந்தாப் பசி குடுக்காது தவிரவும் குடுக்கிற பால புழுப் பூச்சிக குடிச்சுட்டுப் போயிரும். அதுக்குத்தான் வேப்பெண் ணெயச் சுடவச்சு எளஞ்சூட்ல
புகட்டி விட்டா பிள்ளைக்கு. அகத்திக் கொழ அந்தக் கொழ இந்தக் கொழனு திங்கிறதுல பூலித்தேவன் வகுத்துக்குள்ளயும் புழு பூச்சிக வருமா இல்லையா... அதுக்கொரு வைத்தியம் பண்ணுனா கருவாச்சி. கையில அஞ்சாறு உப்புக்கல்ல எடுத்தா பூலித்தேவன் வாயத் தெறந்து உப்புக்கல்ல உள்ள போட்டு அலசோ அலசுனு அலசிவிட்டா. நாக்குல ஒரு சொரசொரப்புத் தட்டுப்படற வரைக்கும் தேய்தேய்னு தேய்ச்சுவிட்டுத் தூக்கியெறிஞ்சா கொளத்துல நடுத் தண்ணிக்குள்ள. உப்புத் தின்னவன் தண்ணி குடிச்சாகணுமா இல்லையா? தண்ணியக் குடிச்சுக் குடிச்சு வாயில இருந்த உப்ப உள்ள முழுங்கிட்டு, ஒரே நீச்சுல கரைக்கு நீந்தி வந்து கருவாச்சி காலடியில எந்திரிச்சு ஒரு சிலுப்புச் சிலுப்புது பாருங்க... என்னமோ அங்க மட்டும் மழை பெய்யற மாதிரி சிலுசிலுசிலுனு தெறிக்குது தண்ணி.

நீச்சுத் தண்ணி மொச்சத் தோலு துவரம் பொட்டு புண்ணாக்குத் தண்ணி அகத்திக் கீர, ஆமணக்கு எல வேப்பங் கொழ கம்பங் கூழு பாலாட்டாங் கொழ எல்லாம் மாத்தி மாத்திக் குடுக்க... ஆறே மாசத்துல பூசுனாப்புல வடிவம் குடுத்து நிக்கிது பூலித் தேவன். பின்பக்கத் தொடையில வயித்த ஒட்டி அழுத்துனா கொழ கொழனு பிடிபடுது கொழுப்பு. காட்டுல அடிச்ச மின்னல்ல காளான் முட்டுற மாதிரி லேசா முட்டி மொளைச்சு வருது கொம்பு ரெண்டும். காவக்காரச் சக்கணன் ஆடு வளக்குறதுல ஒரு வல்லாளகண்டன். ஆடு இருமுனா என்னா அர்த்தம், செருமுனா என்ன அர்த்தம், செனையாடு எத்தன குட்டிபோடும். அதுல எத்தன கெடா, எத்தன மருக்க... எல்லாம் சொல்வாரு. அவரு ஆட்டுக்குன்னே பெறந்தவரா இல்ல, ஆட்டுக்கே பெறந்தவராங்கிற கொழப்பம் ரொம்ப நாளா இருக்கு ஊருக்குள்ள தீந்த பாடு இல்ல. அவருதான் சொல்லிக்குடுத்தாரு: கெடாய்க்கு மட்டும் அப்படியே விட்டுரக் கூடாதாம் மொதல்ல மொளைக்கிற கொம்ப வெரசா வளராதாம் வளந்தாலும் பலமிருக்காதாம். நாளப் பின்ன முட்டுக்கெடா எதாச்சம் முட்டவந்தா அடி தாங்காம முறிஞ்சு போயிருமாம். கொம்பு ஒடிஞ்சா ஒடிஞ்ச எடம் புண்ணுவச்சிருமாம் புண்ணுவச்ச எடம் புழுவு வச்சிருமாம். அதனால புடுங்கி எறிஞ்சிரணுமாம் மொதல்ல மொளைக்கிற கொம்ப. சக்கணன் சொன்னாச் சரியாயிருக்கும்.

கெடாய்க்குக் கொம்பு புடுங்குறா கருவாச்சி. பிள்ளையத் தூக்கிப் போடுற மாதிரி கெடாயத் தூக்கி மடியில போட்டுக்கிட்டா. செல்லமா கொஞ்சித் தாடையத் தடவிக் கொடுத்துக் கொம்ப இழுத்துப் பாத்தா வரல. ஆனமட்டும் திருகிப் பாத்தா அசையல. கல்லெடுத்து ரெண்டு போடு போடலாமானு யோசிச்சா. மொளைச்ச கொம்பு வாரதுக்குப் பதிலா மூள வெளிய வந்துட்டா? வேணாஞ் சாமினு விட்டுட்டா படக்குனு குனிஞ்சு வாயில கவ்விக் கடவாப் பல்லுல அணைச்சுக் கடக்குனு ஒரு கடி கடிச்சா கொம்ப. களக்குனு கழண்டு துண்டா வந்திருச்சு கொம்போட கூடு. கூடு கழண்டோடி விழுந்ததுல குருத்துலயிருந்து கொப்புளிக்குது ரத்தம். கசியிற ரத்தத்து மேல அடுப்புச் சாம்பல அள்ளிச் சப்புனு அடிக்கவும் சட்டுனு நின்னுபோச்சு ரத்தம். அதுக்குப் பெறகு ஆறே மாசத்துல சும்மா திருகி வளந்து திமிறி நிக்குது கொம்பு. கருவாச்சி கெடாக் கொம்பு, வருசநாட்டு யானையக்கூட வகுந்துபுடும் வகுந்துனு பேசுது ஊரு.

பூலித்தேவன்னு என்ன நேரத்துல பேருவச்சாளோ, வேங்கப்புலி மாதிரி படந்து நிக்கிது பதினெட்டு மாசத்துல. ஊருக்கெல்லாம் புலியாத் தெரியிற கெடா அவகிட்ட மட்டும் குட்டிபோட்ட பூனையா, காலுக்குள்ளயே சுத்தி வருது. ஆட்டு மொழி அவளுக்குப் புரியுது. அவ மொழி ஆட்டுக்குப் புரியுது. அவ ஒரு வார்த்தையும் சொல்லாம உதட்டுல பிர்ருனு ஒலியெழுப்புனா, எக்கால் போட்டு அது எம்புட்டு ஒசரத்துல மேஞ்சுக்கிட்டிருந்தாலும் இந்தா வாரேன்னு ஓடி வந்துருது. கெச் கெச் கெச்னு பல்லி கத்துன மாதிரி கத்துனா, தப்பான பாதையவிட்டுச் சரியான பாதையில கூடிருது. பூலித்தேவன முன்னுக்கவிட்டு இவ முள்ளு கிள்ளு தச்சு உக்காந்து போனா... கருவாச்சி வாசனையக் காணமேனு முன்னுக்கப் போன கெடா ஓடிவந்து இவ மூஞ்சிய மோந்து பாத்துக் கூட்டிக்கிட்டுப் போகுது.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:10 am

ஒரு நாள் பூலித்தேவனக் கையில புடிச்சுக் கொளத்தங்கரை மேல வந்துக் கிட்டிருக்கா ஒத்தையில. அலத் தண்ணி அடிச்சு அடிச்சு கரையில ஒரு கல்லு கழண்டு இருந்திருக்கு. கல்லு மேல காலு வச்சவ யாத்தேனு அலறிக் கல்லோட கொளத்துல விழுந்துபோனா. திரும்பிப் பாத்துச்சோ இல்லையோ பூலித்தேவன் மளார்னு தவ்விருச்சு தண்ணியில. கருவாச்சிய முதுகுல ஏத்திக்கிட்டுக் கசக்கு புசுக்குனு நீச்சலடிச்சுக் கரைய யேறிருச்சு. அவளும் கொம்பு ரெண்டையும் கெட்டியாப் புடிச்சுக்கிட்டு, புலி மேல ஏறி வர்ற அய்யப்பன் மாதிரி பூலித்தேவன் மேல ஏறிக் கரை சேர்ந்துட்டா. கரை சேந்தவ பூலித் தேவனக் கட்டிப்புடிச்சு அழுதிருக்கா பாருங்க ஆத்தா ஞாபகம் வந்திருச்சு. ஆத்தோட போகத் தெரிஞ்சவளக் காப்பாத்துனா ஆத்தா கொளத்துல விழுந்தவளக் காப்பாத்துச்சு ஏம் பிள்ள. பெத்தவ என்னியக் காப்பாத்துனது பெரிசில்ல வளத்தவளக் காப்பாத்திடுச்சே நான் வளத்த புள்ள இதான் பெருசு. அன்னிக்கிருந்து பூலித்தேவன நெனச்சா கண்ணு கலங்குது கருவாச்சிக்கு. பிள்ளைக்குப் பால் குடுத்துக்கிட்டே கும்பாவுல சோறு போட்டுத் திம்பா அப்பவெல்லாம் ஒரு வாய் தான் தின்னுக்கிட்டு ஒரு வாய் ஊட்டிவிடுவா பூலித்தேவனுக்கு.

முன் திண்ணையில பாய் போட்டு, பாயில பிள்ளையப் போட்டு படுத்திருப்பா ஒரு ஓரத்துல அதே திண்ணையில பூலித்தேவனும் படுத்திருக்கும் கொஞ்ச தூரத்துல. அந்த இடைவெளிய நெரப்புமய்யா பூலித்தேவன்கிட்டயிருந்து வர்ற கோமிய வாசம். அந்த வாசன தூக்கத்தத் தூக்கியாந்து அவ கண்ல உக்கார வச்சிட்டு ஓடிப்போயிரும். எல்லாருக்கும் புடிச்சிராது அந்த வாசம். சில பேருக்கு அந்த வாசன கொடலப் புடுங்கிக் கூடையில போட்டுட்டுப் போயிரும். மத்தவகளுக்கு அது நாத்தம் அவளுக்கு அது வாசம்.
ஒரு கதையிருக்கா இல்லையா, மீன்காரிக அஞ்சாறு பேரு சேந்து மீன் விக்கப் போயிருக்காக பக்கத்து ஊருக்கு. வித்துட்டு வெறுங் கூடையத் தலையில கவுத்து வீடு வாரப்ப மழை புடிச்சிருச்சு. அனாதிக் காடு ஒதுங்க எடமில்ல. சுத்திமுத்தியும் பாத்தா ஒரே ஒரு ஓல வீடு தெரியுது. ஓடிப்போயி ஒதுங்குறாக.

அது ஒரு பூக்காரி வீடு.

"விடிய விடிய விடாது மழை, உள்ள வந்து படுங்க"னா பூக்காரி. மீன் கூடைய வெளிய கவுத்து வச்சிட்டு உள்ள போயிப் படுத்தாக ஒருத்திக்கும் ஒறக்கம் வரல. மீன் வாசத்துலயே பழகிப்போன பொம்பளைகளுக்குப் பூவாசம் பொறுக்க முடியல. பெரண்டு படுக்கிறாக மூக்கப் பொத்திப் படுக்கிறாக கவுந்து படுக்கிறாக கதைக்கு ஆகலை கண்ணு மூடல. பூ வாசத்துல மூச்சுப் போகுது பொம்பளை களுக்கு. கடைசியா என்ன பண்ணாக தெரியும்ல... வெளிய வச்சிருந்த மீன் கூடைய எடுத்து வந்து தலைக்கு வச்சுப் படுத்தாக. பூ நாத்தம் போயி மீன் வாசம் வந்துருச்சா, ஊர் சுத்தப் போயிருந்த ஒறக்கம் ஓடிவந்திருச்சு ஓடி. வாசமா... நாத்தமாங்கிறது யாருக்குத் தெரியும்? அந்தந்த மூக்குதான அறியும்! அப்படித்தான் பூலித்தேவனோட சாணி வாசம் சந்தன வாசம் ஆகிப்போச்சு கருவாச்சிக்கு. பொடிய எடுத்து மூக்குக்குள்ள இழுக்கிற ஆளுகளுக்கு ஒரு கிறுக்குப் புடிக்கிற சொகம் இருக்கிற மாதிரி, பூலித்தேவன் தோல்ல அடிக்கிற கவிச்சி வாசத்துல ஒரு பித்தேறிப் போச்சு கருவாச்சிக்கு.

பாசத்தக் குடுத்து வாங்க ஆளில்லாமப் போற மனசு, ஏதாவது ஒரு பிராணி கெடச்சாலும் ஓடிப் போயி ஒட்டிக்கிருது. பூலித்தேவன் மேல பாசமாகிப்போன கருவாச்சி, அது நேந்துவிட்ட கெடாங்கிற நெனப்பழிஞ்சு போனா.

"யம்மா கருவாச்சி! காளியாத் தாளுக்கு நேந்துவிட்ட கெடாங்கிற. காலா காலத்துல வெட்னாத்தானத்தா காளியாத்தாளுக்கும் சந்தோசம் கறி திங்கிற ஆளுக்கும் சந்தோசம். ஒன்றரையிலேந்து ரெண்டரை வயசுதான் கெடா வெட்டுற பதம். கறி தீங்கறியாயிருக்கும். என்னப் போல பல்லுப்போன ஆளுகளும் தின்னுக் கிறலாம் ரெண்டு துண்டு. ரெண்டரை வயசுக்கு மேல போச்சுனு வச்சுக்க வெளங்காது கறி. சவசவனு ஆகிப் போகும். பல்லில்லாதவன் ரப்பர் செருப்ப வேகவச்சுத் திங்கிற மாதிரி ஆகிப்போகும், கறி திங்கிறவன் கதை. கெடா பெருங்கெடா, முத்திப்போறதுக் குள்ள வெட்டிப்புடு தாயி பங்குனிப் பொங்கலுக்கு."

உருமாப் பெருமாத்தேவரு சொல்லிட்டுப்போன சொல்லக் கேட்டதும் ஒறக்கம் வரல கருவாச்சிக்கு. ஊத்தெடுத்து ஒழுகுது கண்ணீரு. நெசந்தான் இத நான் ஆடா வளந்திருந்தா பலி குடுத்திருப்பேன். பிள்ளையாவில்ல வளத்திருக்கேன். எப்படிப் பலிகுடுக்க?

விடிய்ய... அழகுசிங்கத்த இடுப்புல வச்சு பூலித்தேவனக் கையில புடிச்சுக் கருவாச்சி நடந்துட்டா காளியம்மன் கோயிலுக்கு, சாமிகூடச் சண்டை புடிக்க!

"ஆத்தா! காளியாத்தா! நெஞ்சில வஞ்சகமில்ல கண்ணுல கபடமில்ல ஒங்கிட்ட ஒப்பிக்க வந்திருக்கேன் கேட்டுக்க. ஒனக்குக் கெடா வெட்டுறேனு நான் நேந்துக் கிட்டது நெசந்தான். இந்தாடியாத்தா வளத்து வெட்டிக்கனு கெடாக்குட்டி குடுத்தவளும் நீதான். ஒம் மேல சத்தியமாச் சொல்றேன் கெடாவ ஒனக்குனுதான் வளத்தேன். அதுக்குப் புல்லு வச்சதும் ஒனக்காகத்தான் புளிச்சத் தண்ணி வச்சதும் ஒனக்காகத்தான். போகப் போக எனக்குப் புத்தி மாறிப்போச்சு. புல்லு திங்க வந்தது புள்ளையாப்போச்சு. ஆடா வந்தது ஆளாப்போச்சு. கைவளப்பு வளத்தேன் காலுக்குள்ளேயே கிடக்கு. ஏங்கூட அது பேசுது அதுகூட நான் பேசுறேன். என் சிணுக்குப்புடிச்ச சீல வாசன அதுக்குப் புடிச்சுப்போச்சு. அந்த மேல் குளியாத தோல் வாசம் எனக்குப் புடிச்சுப்போச்சு. இப்ப எப்படி வெட்றது? இந்தா... முழிச்சு முழிச்சு மூக்கொழுகி நிக்கிறானே நான் பெத்த பிள்ள... இவன் பெறப்புக்குத்தான் ஆடு வெட்டறதா நேந்துக்கிட்டேன். பெத்த பிள்ளைக்காகத் தத்துப் பிள்ள தலய வெட்டலாமா? நீயே சொல்லு நியாயமா? ஆத்தா ஒன் நேத்திக்கடன நான் இல்லேங்கல. தெரிஞ்சதப் பாருனு சொல்லிட்டுத் திரும்பிப் போக வரல. எம் பொழப்புதழப்பு நல்லாருந்தா சந்தையில ஒரு கெடாய வெலைக்கு வாங்கி வெட்றேன். அதுக்கும் எனக்கும் விதியில்லையா... நான் வளத்த பூலித்தேவன் தன் சாவு வந்து செத்தா ஒன் வாசல்ல குழியெடுத்துப் பொதைச்சுக் கும்புட்டுப் போயிடறேன். என்ன நான் சொல்றது?"!

சொல்றதச் சொல்லிப்பிட்டேன் செய்யிறதச் செஞ்சுக்கனு நெனச்சுக் கிட்டு, பூலித்தேவன ஒரு கையிலேயும் பிள்ளைய ஒரு கையிலேயும் புடிச்சு விறுவிறுனு கருவாச்சி வெளி யேறிட்டா கோயிலவிட்டு.

சுத்துவட்டாரமெல்லாம் பூலித்தேவன்... பூலித்தேவன்னு பெரும் பேராகிப்போச்சு. அது வீட்டவிட்டு வெளியேறி வீதிக்கு வந்து, கடகடகடனு தலையாட்டிக் கொம்ப ஒரு சிலுப்புச் சிலுப்பி, ரெண்டு பக்கமும் அண்ணாந்து பாக்கிற அழகப் பாக்கவே வேலவெட்டியப் போட்டுட்டு வெளியே நிக்கிது ஊரு சனம். "புலிக்கும் பூலித்தேவனுக்கும் சண்ட வந்தா, புலியப் போட்டுத் தள்ளிருமப்பா பூலித்தேவன்"னு பேசுது ஊரு. அஞ்சாறு ஊருக்குப் பொலிகடா அதுதான். அப்பப்பப் போயி வம்சவிருத்தி வேற பண்ணிட்டு வருது.

"பூலித்தேவன் கொம்பத் தொட்டுப்புட்டா ஒரு ரூவா"பல பேரு பந்தயம் போட்டுத் தொடப்போயி, துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஓடி விழுந்து ஒளிஞ்சிருக்காக. மந்தையில இருந்த ஒரு செந்நாயி எப்பவும் இதப் பாத்து உர்றுஉர்றுனு உறுமிக்கிட்டேயிருந்துச்சு. பூலித்தேவன் தலையெடுத்த பெறகு தன் பதவி போச்சேனு காமாரம் அதுக்கு. பூலித்தேவன் பதவிய அது பறிக்க முடியலைனாக்கூட நானும் இருக்கேன்னு அப்பப்ப உறுமி அறிக்கை விட்டுக்கிட்டேயிருந்துச்சு. அந்தப் பல்லுச் செத்த நாயி தன்னப் பாத்துப் பம்மிப் பம்மிக் குலைக்கிறத, கொஞ்ச நாளாவே அட்டஞ் சாச்சுப் பார்த்துக்கிட்டேயிருந்துச்சு பூலித்தேவன். ஒரு நாள் வள்ளுனு அது வாயத் தெறக்கவும், தலையத் தரையில சாச்சுக் கொம்புக்கு மத்தியில கோத்து எடுத்து, ஓங்கி ஒரு சுத்துச் சுத்தி வீசியெறிஞ்சதுல வேலியோரத்துல போயி விழுந்துபோச்சு நாயி. முள்ளு மேல விழுந்த வாழப்பழத் தோலு மாதிரி மூஞ்சி தொங்கிக் கெடக்கு பாவம். ஒடிஞ்ச ஒரு காலத் தூக்கிக்கிட்டு, இனி ஒன் வம்புக்கே வரல சாமினு மூணு கால்ல நடந்து போனதுதான். அப்புறம் கண்ணுள்ளவுக யாரும் அந்த நாய ஊருக்குள்ள பாத்ததா ஒரு தகவலும் இல்ல.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:10 am

"கருவாச்சி ஒரு கெடா வளக்குறா ளாமப்பா காளமாடு மாதிரி"முத்தணம் பட்டி, மொதலக்கம்பட்டி, கரட்டுப் பட்டி, பிராதுக்காரன்பட்டி இங்க யெல்லாம் இதே பேச்சாகிப்போச்சு.

பொறுக்குமா கட்டையன் வகையறாவுக்கு? கட்டையன் ஏற்கெனவே கொம்பு கூரான ஆளு. இதுல கொம்பு சீவி விடவும் ஒரு கூட்டம் கூடவேயிருக்கு. நான் சும்மாயிருக்கேன்... சும்மாயிருக்கேன்னு மரம் சொன்னாலும் காத்து ஒறங்கவிடுதா?

"யண்ணே! கட்டையண்ணே! ஒனக்குத் தொழுவெல்லாம் மாடு இருக்கு. என்னா புண்ணியம்? மந்தை மந்தையா ஆடு இருக்கு. எவனும் எட்டியாச்சும் பார்த்ததுண்டா? ஒத்த ஆட்ட வச்சுக்கிட்டு ஊரே பாரு... நாடே பாருனு கண்காட்சி காட்டிக் கிட்டிருக்காளே கருவாச்சி."

"அவளே ஆம்பளையில்லாத வீட்டுக்கு அவசரத்துக்கு ஆகும்னு ஆட்டுக்கெடா வளத்துக்கிட்டிருக்கா. விடுங்கடா, ஏலே விடுங்கடா."

"அதுக்கில்லண்ணே அவ என்ன சொல்லி அலையிறா தெரியுமா? என் கெடாய ஒரு கெடா முட்ட வந்துச்சு என் கெடா அடிச்ச அடியில அது தோல் கிழிஞ்சு தொங்கிப்போச்சு. என் கெடாக் கொம்புல ஒரு நாய் சிக்குச்சு. இது ஒரே தூக்காத் தூக்கி எறிஞ்சதுல அது ஊரவிட்டே ஓடிப்போச்சு. என் கெடாக் கொம்புல கட்டையன் மட்டும் மாட்டட்டும். பெறகு, பொதைக்கப் பொணம் கெடைக்காதுனு சொல்றாளாமில்ல."

"அப்படியா சொன்னா?"

"அதான் கேள்வி."

"தீர மாட்டேங்குதே திமிரு, அத்து விட்டும் பெத்து அலையிற கழுதைக்கு. ஏலே, அவள வழிமறிச்சு வம்புக்கு இழுங்கடா."

"வேணாம்ணே நல்லால்ல..." உலகத்துல இன்னம் மிச்சமிருக்கிற நல்லவங்கள்ல ஒருத்தன் சொடக்கெடுக்கிற மாதிரி சொல்லிப் பாத்தான். அவன ஆளுக்கொரு சாத்துச் சாத்திக் கும்மி நொறுக்கிக் கூடையில அள்ளிட்டானுங்க. அவன ஆச தீர அடிச்சுக்கிட்டான் பொண்டாட்டி கிட்ட நித்தம் மிதி வாங்குற ஒருத்தன்.

"போறோம்... ஆடு மாட்டுதா அவ மாட்றாளானு பாக்குறம்ணே..."

அடுப்பெரிக்க ஆகுமேனு கவுண்டர் வீட்டு அழிவு காட்ல பருத்திமாரு புடிங்கிச் சொமந்து வாராக கருவாச்சியும் கனகாம்பரமும். சிறுத்த பொம்பளையாயிருந்தாலும் கனத்த கட்டு கருவாச்சி கட்டு. கனத்த பொம்பளையாயிருந்தாலும் கட்டு சின்னக் கட்டு கனகாம்பரத்துக்கு. காடு மேடு ஓடி வம்பாடுபடாத பொம்பளைங்கிறதால கனத்த கட்டுச் சொமந்தா கழுத்து செத்துப்போகும்னு சிறு கட்டு சொமந்து வாரா கனகாம்பரம். முன்னுக்க போறா கனகாம்பரம் பின்னுக்க வாரா கருவாச்சி. மூஞ்சிக்கு முன்னால பறக்கிற ஈயோட மல்லுக் கட்டித் தலையத் தலைய ஆட்டிக்கிட்டு இவங்க ரெண்டு பேரையும் தொடுத்து வருது பூலித்தேவன். பாதையில கெடந்த கருவேல முள்ளு ஒண்ணு, போயிக்கிட்டிருந்த கருவாச்சியப் போட்டுப் பாத்துருச்சு. முள்ளுத் தச்ச கால மேல தூக்கி, கட்டு மேல இருந்த கையக் கீழ எறக்கி, தச்ச முள்ள அவ எடுக்கவும், வாரேன்னு ஒரு பாதி முள்ளு வெளிய வந்திருச்சு போறேன்னு ஒரு பாதி உள்ள போயிருச்சு.

அதுக்கே கலங்கிப்போனா கனகாம் பரம் "அய்யய்யோ முள்ளா?"

"பொழப்பே முள்ளுக்குள்ள கெடக்கு. இதுல உள்ளங்கால்ல முள்ளுத் தச்சா உசுரா போயிரும்?"முறிஞ்ச முள்ளத் தூக்கி எறிஞ்சா கருவாச்சி.

"நீயாச்சும் முள்ளுக்கு வாக்கப்பட்டு முறிச்சுப் போட்டுட்ட. முள்ளோடதான என் பொழப்பே போய்க்கிட்டிருக்கு."

"இப்ப என்ன சொல்றான் ஒம் புருசன்?"

"கட்னா மச்சினிச்சியக் கட்டுவேன்... இல்லாட்டிக் காவி கட்டுவேங்கிறாரு."

"மச்சினிச்சிக்கும் பிள்ள பெறக்க லேனு வச்சுக்க... காவிதான் கட்டி யாகணும் கடைசியில. மூணு வருசமா ஒன்னிய வாழாவெட்டியாவே விட்டுட்டான் பாரு, பாறாங்கல்லுக்குப் பெறந்த பய. அவன் ஒன்னையும் நெனைக்கல சாகப்போற நாளையில ஒங்கப்பனையும் நெனைக்கலையே."

"அந்த ஆளுக்கு எங்க மூணு பேரு மேலயும் ஆசை இல்ல கருவாச்சி ஒரே நோக்கம் மோதிரத்து மேலதான்."

"இதென்னடி கூத்தா இருக்கு. மோதிரமா பிள்ள பெறப்போகுது முழுகாம இருந்து? எனக்கு எங்க ஆத்தாள நெனச்சாலும் கண்ணீர் வருது. ஒங்கப்பன நெனச்சாலும் கண்ணீர் வருது. ஒங்களக் கரை சேப்பாரோ... இல்ல கரை சேர்ந்துருவாரோ தெரியலையே. ஒண்ணாமண்ணாக் கெடந்து ஒண்ணா மண்ணா வளர்ந்து நம்ம ரெண்டு பேரு பொழப்பும் இப்படி ஆகிப்போச்சே!

எனக்கு அப்பப்ப ஒரு ஏக்கம் வரும் கனகு."

"என்னா ஏக்கம்?"

"பொம்பளப் பிள்ளைக வயசு பத்துப் பன்னண்டோட நின்டுபோகக் கூடாதா? அந்த ஓடை மண்ணு, நெலா வெளிச்சம், கிளித்தட்டு வெளையாட்டு, அவிச்ச மொச்ச, அச்சுவெல்லம், ஆத்தாகிட்ட ஒரு அடி, அப்பன்கிட்ட ஒரு வசவு, தாத்தன்பாட்டி மடியில பொதைஞ்சு ஆத்தா அடிச்சுப்புட்டானு அழுகுற சொகம், வெவரமில்லாத மனசு வெள்ளந்தி வயசு, அது அப்படியே இருந்திருக்கப்படாதா? பெரிய மனுசியாகாமலே கெழவியாகி, போதும் பொழப்புங்கிறப்ப போய்ச் சேந்திரக் கூடாதா?"

பொழப்பு சலிச்சுப்போறபோதோ, சிக்கலுக்குச் சிக்கெடுக்க முடியாமப் போறபோதோ, இதுக்கு மேல என்னாலானது எதுமில்லேனு நடை செத்துப் போகும்போதோ மனுசக் கூட்டம் இயற்கைக்கு விரோதமா கற்பன செஞ்சு பாத்துக்கிருது. அந்தக் கற்பன இந்தா இந்தா இந்தானு இழுத்துக் கடவுள்கிட்டப் போய் முடிஞ்சிருது. இதுக்கு மேல ஈசன் தலையெழுத்து என்னானு பாப்போம்ங்கிற முடிவோட பருத்திமாரு சொமந்து போகுதுக பாவப்பட்டதுக ரெண்டும்.

பொழுதுபோற நேரம்.

ஊர் எல்லையில அரச மரத்தடிக் கல் திட்டு மேல சீட்டு வெளையாடிக் கிட்டிருக்காக அஞ்சாறு வெடலப் பயக. மொளகாப் பழமாயிருக்கு கண்ணுல செவப்பு முழுச் சாராய மப்பு. அரச மரத்த ஒரு ஒரசு ஒரசித்தான் போகுது ஒத்தையடிப் பாதை. கனகாம்பரம், கருவாச்சி, பூலித்தேவன் மூணு உருப்படிகளும் அவுகளக் கடந்து தான் போகணும்னு தெரிஞ்சுபோச்சு சீட்டு வெளையாட்டு ஆளுகளுக்கு.

கட்டையன் வீட்ல கஞ்சாவும் கஞ்சியும் குடிக்கிற மூணு பயக வம்பிழுக்க முடிவு பண்ணிட்டானுக. பத்தடி தூரத்துல வந்துக்கிட்டிருக்காக பருத்திமாருக்காரிக. கையில் இருந்த சீட்டக் கவுத்துப் போட்டுட்டு, தகரத் தொண்டையில பேச ஆரம்பிச்சான் ஒருத்தன்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:11 am

"ஏய்! அங்க பாருங்கடா! ரெண்டு மாருல எந்த மாரு பெருசு..? முன் மாரா? பின் மாரா?"

"பின்னுக்க வாரது கட்டு நல்லாருக்கு மாரு சிறுசா இருக்கு. முன்னுக்க வாரது கட்டு நல்லால்ல மாரு பெருசா இருக்கு."

பருத்திமாரப் பேசற மாதிரி சாடை பேசுறாக சண்டாளப் பயகனு தெரிஞ்சு போச்சு கருவாச்சிக்கு. நின்னா. நான் பாத்தா நீங்க எரிஞ்சுபோயிடுவீங்கடானு ஒரு மொற மொறச்சா நடந்துட்டா.

போயிட்டாளே! வம்பு இழுத்தாலும் வராது போலிருக்கே. வம்புக்கு அடுத்த அம்பு போட்டான் அக்கா தங்கச்சி கூடப் பெறக்காத அயோக்கியப் பய.

"மாரு... வீட்டுக்குப் போறதா? வெலைக்குத் தாரதா?"

மூணு எட்டு முன்ன போனவ படார்னு திரும்பி, அந்தத் தறுதலப் பய தலையில தூக்கி எறிஞ்சா பருத்திமார. மப்புல கெடந்த பயக குப்புனு எந்திரிச்சானுக. ஆத்தாளுக்கு என்னமோ ஆகப் போகுதுனு புரிஞ்சுபோச்சு பூலித் தேவனுக்கு தலைய மடக்கிக் கொம்ப முன்னால நீட்டிக்கிட்டே ஒரே தவ்வாத் தவ்வி ஏறுச்சு கல் திட்டு மேல. நாப்பது நாப்பத்தஞ்சு வீசை எடையுள்ள கெடா மொத்தமா ஆளுக மேல முழுசா வந்து விழுந்ததுல இன்னதுதான் நடக்குதுங்கிற சேதி முதுகுத்தண்டு வழியா மூளைக்குப் போகல ஒருத்தனுக்கும். காலுக்குக் கீழ ரெண்டு பேரப் போட்டு மிசுங்கவிடாம மிதிச்சுக்கிட்டுக் குத்தி எறியுது கொம்புல சிக்குன ஒருத்தன. அவன் யாத்தேனு அலறி, தாடை கிழிஞ்சு தனியாப் போயி விழுகிறான். கெடா நடத்துற வெறிக் கூத்தப் பாத்து ஓடி ஒளிஞ்சுபோனானுங்க ரெண்டு மூணு பேரு. காலுக்குக் கீழ கெடந்தவன்கள்ல ஒருத்தன் இடுப்புல இருக்கிற சூரிய எடுக்க எக்கி எக்கிப் பாத்தான். அதைக் கண்டுபுடுச்ச பூலித்தேவன், ஒரு அடி பின் எட்டு வச்சு, உழுகுற கலப்பை மாதிரி தலைய பூமியில சாச்சு, அவன் வகுத்துல ஆரம்பிச்சுத் தொண்டக் குழி வரைக்கும் நூல் புடிச்ச மாதிரி கொம்புலயே ஒரு கோடு கிழிச்சிருச்சு. இன்னும் வெறியடங்காமத் தவ்வித் தாண்டி ஓடுது கட்டையனுக்குச் சாயங்காலச் சாராயம் வாங்கப் போனவன முட்டிச் சாய்ச்சதில, அவன் தள்ளி ஓடி விழுந்துபோனான் சாணிக்குழியில. பூலித்தேவன் தானாத்தான் அடங்கணும். இனி தனக்கு அடங்காதுனு ஒரு ஓரமா ஒதுங்கிட்டா கருவாச்சி.

"கொம்புல குத்துப்பட்டவனுக்கு ஒண்ணும் ஆயிரப்படாது. பொழைக்க வச்சிரு சாமி." சேதி போயிருச்சு கடலக் காட்டுல உடும்புக்கறி உரிச்சுக்கிட்டிருந்த கட்டையனுக்கு. அடுத்த நாள் அந்தக் கூத்து நடக்கும்னு ஈ, காக்கா, குருவிகூட நெனச்சிருக்காது. உச்சிவெயில்ல வெள்ளக்கரட்டுல புல்லுக் கடிச்சுக்கிட்டிருந்த பூலித் தேவனை அஞ்சாறு கெடாப்பயலுக சேந்து உச்சுனாப்புல தூக்கிக் கொண்டு வந்துட்டானுக பளிங்கான் பாறைக்கு.

"ஒன்னியக் காயடிக்காம வளத்துட்டாளா கருவாச்சி? அதான் கொம்புல குத்திக் கொல்லப் பாக்குறியா? ஆளத் தேடிவந்து அள்ளையில குத்துறியா? இன்னிக்கு ஓயப் போகுதுடி ஓங் கதை"பூலித்தேவனுக்குக் காயடிக்கத் தயாராகிவிட்டான் கட்டையன்.

முரட்டாளுக நாலு பேரு வேணும் ஒரு கெடாயக் காயடிக்க. கொம்பு ரெண்டையும் அழுத்தி அமுக்கிக்கிட்டான் ஒருத்தன், மிசுங்க விடாம முன்னங்கால் ரெண்டையும் உக்காந்து புடிச்சுக்கிட்டான் ஒருத்தன். பூலித்தேவனோட பின்னங்கால் ரெண்டையும் அகட்டி வசதிபண்ணி அசங்காமப் புடிச்சுக்கிட்டான் ஒருத்தன். கல்லு மேல சாக்கப்போட்டு, பூலித் தேவனை ஒரு தினுசா உக்கார வச்சு அதோட கனத்த காயில துணியச் சுத்தினான் கட்டையன். காயின்னா பெருங் காயி கைக்கடங் காத காயி. உள்ளங்கை ரெண்டும் ஒண்ணு சேந்து மூடுனாலும் மூட முடியாத பெரும் பொருளு. புலித்தேவன் காயை இறுக்கிப் புடிச்சான் கட்டையன் தொங்கு சவ்வுல சரடு கட்டி இறுக்கி ஒரு முடி போட்டான். காய ஒரு கையில புடிச்சிக்கிட்டு மறு கையில நெரிநெரினு நெரிச்சான் கும்முகும்முனு கும்முனான். ஒரு சின்னக் கல் ஒலக்கையை எடுத்து ஒரு பக்கமா நச்சு நச்சுனு குத்தினான். பை இருக்க, படக்படக்குனு ஒடையுது உட்சவ்வு. உசுரு போற வலியில கத்திக் கதறுது பாவம் வாயில்லாத சீவாத்தி. மறு காயும் அடிச்சான் உட் சவ்வு ஒடைச்சான். கல் ஒலக்கையை வச்சுக் காயில பொய்க் குத்தாக் குத்திக் கெட்டியா இருந்த காயப் பிதுக்கிப் பிதுக்கி நசுக்கி நசுக்கிக் குறுண குறுணையா ஆக்கிக் கூழாக்கிட்டான். கூழ் தண்ணி தண்ணியா ஆகுற வரைக்கும் கசகசனு கசக்குறான்.

"என்னிய விட்டுருங்க... என்னிய விட்ருங்க"னு ஆட்டு மொழியில கத்துது ஆவி துடிக்கிற சீவன். கட்டியாயிருந்த காயி தண்ணிப் பையாத் தொங்க ஆரம்பிச்சதும் அடிப்பாகத்துல தேங்குன தண்ணிய மேல் ஏத்தி முடிச்சுப்போட்டுவிட்டுட்டு தண்ணிய அள்ளி, சப்புச் சப்புச் சப்புனு அடிச்சான் குத்திக் குத்திக் கூழாப் போன காய் மேல.

"இப்ப விட்ருங்கடா..."

எல்லாரும் விட்டு விலகிட்டாங்க.

"புலியாமில்ல புலி... காயடிச்சு விட்டுட்டேண்டி இன்னைக்கிருந்து நீ பூன."

எந்திரிக்கத் தெம்பில்லாம விழுந்து கெடக்குற பூலித்தேவன், அவன வெறிச்சு ஒரு பார்வ பாக்குது. அந்தக் கண்ணுலருந்து கண்ணீரும் ஆண்மையும் ஒண்ணு சேந்து வடிஞ்சு ஒழுகிற மாதிரியே இருக்கு. மசுங்குன இருட்டுல ஒடியாந்த கொண்ணவாயன், தலையிலயும் நெஞ்சுலயும் அடிச்சுக்கிட்டுக் கட்டிப்புடிச்சு அழுகிறான் காயடிச்ச கெடாய! மூணு நாளைக்கு எரையெடுக்காது காயடிச்ச கெடா. புல்ல மோந்தும் பாக்காது புளிச்ச தண்ணியில வாயும் வைக்காது. பூலித்தேவன் கொம்புல தலையச் சாச்சு, தாடையத் தடவிக்கிட்டே அது அழுகிறதப் பாத்து அழுகிறா கருவாச்சி. "மானங்கெட்ட பயலுகளாச் சேந்து ஒன்னிய ஊனப்படுத்திட்டாங்களே பூலித்தேவா"அவ அழுக, ஆடு அழுக, என்னமோ ஏதோன்னு பிள்ளையும் சேந்தழுக, கொண்ணவாயனும்கூடவே அழுக, பாதி எழவு வீடாகிப்போச்சு கருவாச்சி வீடு.

காயடிக்கிறது ஒண்ணும் புதுசில்ல ஊர்நாட்ல உள்ளதுதான். கெடா வர்க்கத்துக்கு மனுசன்வழி வழியாச் செஞ்சு வந்த துரோகந்தான். ஆனா, அதுக்குமொரு கணக்கு இருக்கு. ஆறே மாசத்துல வயசுக்கு வந்திருது கெடா. காலும் தலையும் மத்ததும் நீண்டு நிமிந்திருது. பொலிச்சல் நெனப்பு வந்துட்டா அப்புறம் அதப் புடிக்க முடியாது கையில. திமிரும் தெனவெடுத்து அலையும் முத்தங் குடுக்க வந்தாலும் முட்டவரும் பொலிச்சல் போடக் கிறுக்குப் புடிச்சு அலையும். பொட்டைய நோங்கிட்டாப் புல்லு கடிக்காது. அதே நோக்கமா அலைபாயும். மேய்ச்சல மறந்து மேய அலையிறதுனால நீத்துப் போகும் ஒடம்பு. எலும்புல கறி சேராது கறியில கொழுப்புச் சேராது. கறி திங்க ஆடு வளக்கிறவன் சும்மா இருப்பானா? கனத்த வெதைய நசுக்கிக் காயடிச்சு விட்டுர்றான். காயடிச்ச பெறகுதான் மேல பாத்த கெடா கீழ பாக்கும். ஒழுங்காப் புல்லு கடிக்கும் தவிச்ச நேரம் தண்ணி குடிக்கும் ஆட்டம் பாட்டம் அடங்கிரும். வீரமெல்லாம் வத்திப்போகும். ஒருகைப்பிள்ள கூப்பிட்டாலும் வாரேஞ்சாமின்னு வந்திரும். பொட்டை வர்க்கம்னு ஒண்ணு இருக்கிறதே அதுக்கு மறந்துபோகும். காயடிச்ச மூணே மாசத்துல அது புதுச் சதை போடும் பாருங்க... சும்மா காஞ்சுகெடந்த கம்மா கார்த்திக மாசம் பெருகுற மாதிரி கடகடகடன்னு கறிகட்டும். ஆனா, நேந்துவிட்ட கெடாய யாரும் காயடிக்கிறதில்ல. "ஆத்தா கெடாயாவது... அப்பன் கெடாயாவது..." காயடிச்சு விட்டுட்டான் கட்டையன்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:11 am

காளியாத்தா கோயிலுக்கு வந்து கண்ணு ரெண்டுலயும் அடைமழை கட்டி அழுகுறா கருவாச்சி. "நேர்த்திக்கடன முறிச்சிட்டேன்னா என் நெத்தியில அடிச்சுட்ட ஆத்தா? கோவம் எம் மேலன்னா என் ரெண்டு கண்ணுல ஒரு கண்ண எடுத்திருக்கலாம். ஆனா, என் ரெண்டு பிள்ளையில ஒரு பிள்ளையத் தண்டம் வாங்கிட்டியே! அது சரி, நேர்த்திக்கடன் கட்டாதவள நெஞ்சுல ஏறி மிதிச்சுட்டியே. ஒன் பொருள ஒச்சம் பண்ணுன ஆளுகள இன்னம் மிச்சம் வச்சிருக்கியே. எப்பத் தண்டம் வாங்கப்போற?" ஆத்தாகிட்ட ஒப்பிச்சுட்டு அவ அழுதுபோறா. கஞ்சி ஊத்துறவ பின்னாலயே ஒரு நொண்டி நாய்க்குட்டி அண்டிப்போற மாதிரி, வீரம் கொறஞ்சு வீரியம் கொறஞ்சு அவ கொசுவம் பாத்துக் கூடவே போகுது பூலித்தேவன்.

ஊரே வையுது கட்டையன.

"கருவாச்சி மேல இருக்கிற கோவத்துல கெடாயப் பொட்டையாக்கி விட்டுட்டானே பொண்டுகப் பய", "எதுத்துக் கேக்க ஆளு இல்ல. மொள்ளமாறிப் பயலுகளை எல்லாம் கஞ்சா வாங்கிக் குடுத்துக் கையில போட்டுக்கிட்டான். இப்படியேவா போயிரும் இவன் காலம்? எளைச்சவன வலுத்தவன் அடிச்சா வலுத்தவன வல்லூறு அடிக்காதா?" காத்து வழி வருது எல்லாம் கட்டையன் காதுக்கு. சிரிச்சுக்கிர்றான் அவன் சிரிச்சா நல்லால்ல, நரி சிரிச்சா நல்லாவா இருக்கும்?

கொளத்தங்கரையில அன்னைக்கி அப்படி ஒரு சம்பவமாகிப் போகும்னு கட்டையனும் நெனைக்கல ஆடுகளும் நெனைக்கல. களையெடுத்து முடிச்ச சோளக்காட்டப் பாத்துட்டு ஒத்தையில கரை வழியா வாரான் கட்டையன். வந்தவன் கரையிலயே ஒரு கிளுவம் புதரோரம் உக்காந்துட்டான் ஒண்ணுக்கிருக்க. கரை வழியா வந்த செம்பிலி மந்தைகள அவன் கவனிக்கல பாவம். உக்காந்தவன் தன்ன மறந்து தன் நாமம் கெட்டு அந்த இளம் சோகத்துல கரைஞ்சு கண்ண மூடி இருக்க, செம்பிலி ஆடுக ஒண்ணொண்ணாக் கடந்துபோகுதுக அவன் முதுக ஒரசிக்கிட்டு அவன் எந்திரிக்கல. அவனுக்கு என்னா நம்பிக்கைன்னா சொக்கத்தேவன்பட்டி சுத்துவட்டாரத்துல தன்ன முன்னுக்கப் பாத்தாலும் பின்னுக்கப் பாத்தாலும் ஆடு மாடு முதற்கொண்டு அத்தன சீவராசிகளுக்கும் அடையாளம் தெரியும். தான் ஒண்ணுக்கிருக்கிறதப் பாத்தா ஆனையே ஒதுங்கிப் போகுமே, ஆடா ஒதுங்கிப் போகாது? கட்டையன் நம்பிக்கை வீண் போகல. அவனக் கண்டு ஏதோ ஒரு கெட்ட ஆவி உக்காந்திருக் குன்னு எல்லா ஆடுகளும் ஒதுக்கித்தான் போச்சுக ஒரு ஓரமா. மந்தையில மையத்துல வருது பூலித்தேவன். அது கொம்பு நீளம் உடம்பு பெருசு கரை வேற சிறுசு. அது கொஞ்சம் ஒதுங்கிப்போனாலும் கொளத்துல விழுந்திரும். அதனால சித்தம் போக்கு சிவம் போக்குன்னு தன்போக்குல போகுது. அப்பத்தான் அந்தக் கதையாகிப்போச்சு.

கட்டையன அது கடக்க... அந்த நேரம் பாத்து அது மூக்கு மேல ஒரு முள்ளு ஒரச... அந்த அதிர்ச்சியில அது கொம்ப அங்கிட்டும் இங்கிட்டும் ஒரு ஆட்டு ஆட்ட... அது அவன் முதுகுல குத்திச் சட்டையக் கிழிக்க... அவன் என்னமோ ஏதோன்னு எந்திரிச்சுத் திரும்ப... அப்பக் கடந்து போன கனத்த வகுறு அவன எம்பி ஒரு தள்ளுத் தள்ள... நெல குலஞ்சு பள்ளத்துல சரிஞ்சு உருண்டு கத்தாழம் பொதர் ஓரமா காயாத நரகல் மேல விழுந்து போனான் கட்டையன்.

சீ! வேட்டியெல்லாம் ஆகிப்போச்சே வெளிக் கிருந்த பொருள்னு அருவருப்பாகி, உருண்டு பெரண்டு தடால்னு எந்திரிக்க இடுப்புல குத்தி இழுக்குது இண்டம் புதரு. முள்ளப்புடுங்கி எறிஞ்சிட்டு மூக்கு வெடைக்கிற கோபத்துல கரை மேல கண்ணச் செலுத்திப் பாக்குறான் கட்டையன். இந்தச் சம்பவத்துக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல சாமின்னு போயிக்கிட்டேயிருக்கு பூலித்தேவன்.

அஞ்சாறு நாளாவே சொகமில்ல பிள்ளைக்கு. அழுதுக்கிட்டே யிருக்கான் அழகுசிங்கம். ரவ்வும் பகலும் ஒறங்கல சோறுதண்ணி செல்லல இருட்டப் பாத்தா அலறி எந்திரிக்குது பிள்ள. வெளிச்சத்தப் பாத்தாலும் வீல்னு கத்துது. சுட்டுக் கெடக்கு நெத்தி குளுந்து கெடக்கு வகுறு. ஊர்ப்பட்ட மருந்து குடுத்துப் பாத்தா வைத்தியச்சி ஒண்ணும் ஆகல. "இருளடிச்சிருக்கு பிள்ள பயந்துபோயிருக்கு. இனிமே மருந்து மாயம் கேக்காது ஆத்தா மந்திரிச் சாத்தான் கேக்கும்." வைத்தியச்சியே இப்படிச் சொன்னதுக்கு அப்பறம் மறுபேச்சு இருக்கா? பிள்ளையத் தூக்கி நடந்துட்டா வடவீர நாயக்கன்பட்டிக்கு.

வடவீர நாயக்கன்பட்டி நாயக்கரு மந்திரிக்கிறதுல மன்னன். வேப்பங்கொழ நாயக்கருன்னுதான் சொல்றது அவர. சொந்தப் பேரு மறந்துபோற அளவுக்குத் தொழில் பெருத்த கையி. வத்திப் போனாலும் கரையெல்லாம் பச்சை கட்டி நிக்கிற ஆத்தாங்கர மாதிரி வயசானாலும் லட்சணம் மாறாத ஆளு. பச்ச உருமா செவப்புக் கடுக்கன் கரும்புச் சக்கை மாதிரி கனத்த மீசை. கழண்டு விழுந்திர்ற மாதிரி ரெண்டு கண்ணு ஈரக்கொலைய இழுத்து இறுக்கிப் புடிக்கிற பார்வை. கனத்த கம்பளிய விரிச்சு உட்காந்தாரு தாய் மடியில பிள்ளைய உட்காரவச்சாரு. பொங்கப் பானையில புதுத் தண்ணி ஊத்தி ஒடிச்ச வேப்பங்கொழைய ஊறப்போட்டாரு. கண்ண மூடி முணுமுணுமுணுன்னு எதோ மந்திரம் சொன்னாரு. வேப்பங்கொழையச் சட்டுன்னு எடுத்து, பிள்ள மூஞ்சியில தண்ணி தெறிக்க அடிச்சு மந்திரிச்சாரு. வேப்பங்கொழத் தண்ணிய நீ குடி மொதல்லன்னு தாய் குடிக்க வச்சாரு பிள்ளைக்கும் குடுன்னு குடுத்தாரு.

அழுகை அடங்கிப்போச்சு அழகுசிங்கத்துக்கு.

நாயக்கரு மந்திரிச்சதும் குணக் குறி தெரியுதேன்னு குளுந்துபோனா கருவாச்சி மந்திரம் போட்டு மந்திரிச்சதுல புடிச்ச பீடை விட்டுப்போச்சுங்கறது அவ கணக்கு. ஆனா அது இல்ல காரணம். குண்டாச்சட்டியத் தலையில கவுத்த மாதிரி நாயக்கரு கட்டியிருந்த உருமா, சிவீர்ன்னு கண்ணுல அடிக்கிற கடுக்கன், வாய மூடித் தாடையத் தடவுற மீச, அழுதேன்னா கொன்னேபுடு வேன்னு கண்டிப்பாச் சொல்ற கண்ணு... இதுகளை யெல்லாம் பாத்துப் பாத்து இந்தப் புது பயத்துல பழைய பயத்த மறந்துபோனான் பய.

இந்த நெசம் நாயக்கருக்கும் சின்னப்பயலுக்கும் மட்டும்தான் தெரியும். இது தெரியாததனால கண்ணீர் முட்டுது கருவாச்சிக்கு. இன்னதுதான் காணிக்கைங்கிறது இல்ல குடுத்தத வாங்கிக்கிட்டுக் கும்பிட்டு அனுப்பிருவாரு நாயக்கரு.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:11 am

"ஏதோ என்னால ஆனது"ன்னு காலே அரைக்கா ரூவா காணிக்கை வச்சா பிள்ளையத் தூக்கிட்டுப் புறப்பட்டு வந்துட்டா
.
வெள்ளையாங்கரட்டுல வெயில் தாந்திருச்சு. கரடுகள்ல ஆடு மாடு மேய்க்க வந்த ஆணும் பொண்ணும் நக்கிலிச்சாம் பாறையில மொது மொதுன்னு வந்து குமுஞ்சுபோச்சுக.

"பாறைக் கறி போடுறாகளாம்...
பாறைக் கறி போடுறாகளாம்..."

ரொம்ப நாளாக் கவுச்சி காணாத நாக்குல எல்லாம் எச்சி ஊறி ஒழுகுது. தின்டுபாத்த ஆளுகளுக்குத்தான் தெரியும் பாறைக் கறி மாதிரி ருசியான கறி அம்பத்தாறு தேசத்துலயும் இருக்க முடியாதுன்னு. அடுப்புங் கெடையாது சட்டியுங் கெடையாது ஆனாலுங் கறி திங்கலாம்.

என்ன பண்ணுவாக தெரியுமா?

ஒரு பாறையில தண்ணி ஊத்திக் கசகசன்னு கழுவி விடுவாக சுத்தமாயிடும் பாறை. பாறையக் காய விட்டு அது மேல கட்டையப் போடுவாக. கட்டையில தீ மூட்டி எரியவிடுவாக. கட்டை எரிய எரியச் சுட்டுப்போகும் பாறை. கட்டை எரியும்போதே, உப்பும் மொளகாத்தூளும் போட்டுப் பச்சைக் கறியப் பெரட்டு பெரட்டுன்னு பெரட்டி வச்சுக்கிரணும். கட்டை எரிஞ்சு ஓஞ்சதும் சாக்க எடுத்து ரெண்டு வீசு வீசுனா சாம்பல் பறந்திரும். கொதிச்சுக் கெடக்குமய்யா பாறை வெரல் தொட்டா நகம் வெந்துபோகும். பெரட்டி வச்ச கறிய அதுல அள்ளி எறியணும். சும்மா சொய்ங் சொய்ங்கிற சத்தத்தோட சுருங்கி வேகும் கறி. எண்ணெயெல்லாம் எதுக்கு? எல்லாக் கறித் துண்டுகள்லயும் உருகுற கொழுப்பு ஓடி ஓடிச் சேரும். வெந்ததும் உள்ளங்கையில எடுத்து ஊதி ஊதி வாயில போட்டா தேவாமிர்தம் தேவாமிர்தம்ங்கிறாகளே அதுகூட இம்புட்டுச் சூடா இருக்கு மான்னு தகவல் இல்ல இது இருக்கும்.

அன்னைக்குப் பாறைக் கறி போட ஆள் சேத்தான் கட்டையன். சுட்டுக்கிட்டிருக்கு பாறை உரிக்கப் போறாங்க ஆட்டை.

"ஏ பக்கிகளா! ஓடிப் போறீகளா இல்ல ஒங்களயும் பாறைக் கறி போட்டுப் பங்கு போடவா?" ஒரு அமட்டு அமட்ட வும், ஆடு மாடு மேய்க்கிற கூட்டம் ஒரே ஓட்டமா ஓடி எட்டி நின்னு வேடிக்கை பாக்குது.

பாறைக் கறி போடக் கொண்டாந்த ஆட்ட சடார்னு சாய்க்குறாக தரையில. அது மிசுங்காம இருக்க, பின்னங் கால் ரெண்டையும் பின்னிக் கொளம்போட கொளம்பு மூட்டி மாட்டிட்டாக. முன்னங்கால் ரெண்டுல ஒரு கால ஒதறவிட்டு, ஒரு கால மட்டும் அமுக்கிக் கிட்டு, பெருவிரல வச்சுக் கழுத்துல ஒரு அழுத்து அழுத்திச் சங்க லேசா ஒதுக்கிட்டு சங்குக்குக் கீழே கத்திவச்சான் சலம்பல் பாண்டி. ஆடு அறுக்கவே பெறந்தவன் அவன். ஆத்தா தொப்பூழ்க் கொடியக்கூட அவ அறுக்குமுன்ன இவன் அறுத்துட்டு வந்தவன்னு பேசுவாக ஊர்ல. அழுத்துன கத்தி அறுத்ததுமே பீச்சியடிக்குது ரத்தம். அமுக்குன ஆளுகளத் தூக்கித் தூக்கிப்போட்டுத் துடிக்குது ஆவி போற ஆடு.

பரம்பரையா ஆடு அறுக்கிறவன் மொத்த ரத்தத்தையும் கத்தி முனையிலேயே வடியவிடுவான் அப்படித்தான் வடியவிட்டான் அவனும். நெம்பிப்போச்சு சருவச்சட்டி. பீச்சியடிச்ச ரத்தவரத்து கம்மியானதும் அறுத்த சங்க மடக்குன்னு ஒடிக்க அது படக்குங்கிற சத்தத்தோட மிச்சமிருந்த ரத்தத்தையும் துப்பிருச்சு துப்பி. அறுபடுற எல்லா ஆட்டுக்கும் மொதல்ல ரத்தம் போயிரும் அப்புறம் சிறுநீர் பிரியும் சிறுநீர் பிரிய உயிரும் போயிரும்.

"உசுர் போயிருச்சு... உசுர் போயிருச்சு..."

எட்டி நின்னு கத்திக் கைதட்டுது ஆடு மாடு மேய்க்கிற கூட்டம்.

"அந்தா பாரு தோல உரிக்கிறாக..." பின்னங்கால் சப்பையில ஆரம்பிச்சுத் தொடை வழி புகுந்து சும்மா ஆகாயத்துல அம்பு போற மாதிரி பரபரபரன்னு பரவுது கத்தி. அதே மாதிரி மறு தொடையிலயும் கத்திவச்சுக் கீறிக் கிழிச்சு, கருவேலங்கிளையில தலைகீழாத் தொங்கவிட்டு என்னமோ வாழப்பழத்த உரிக்கிற மாதிரி மேலயிருந்து உரிச்சு வாரான் தோல. பெருவிரலச் சதையில பதிச்சு அழுத்தி அழுத்தி இழுத்தா சரசரன்னு வந்திரும் தோலு. ஆனா ரெண்டே ரெண்டு எடத்துல மட்டும் வர மாட்டேன்னு வம்பு பண்ணும். ஒண்ணு காயைக் கடக்கும்போது ரெண்டு நெஞ்சத் தாண்டும்போது. அந்த ரெண்டு எடத்துல மட்டும் லேசாக் கத்தி போட்டு ஓட்டை விழுகாம உரிக்கணும். ரெண்டு எடத்துலயும் முத்தம் வைக்கிற மாதிரி கத்தி வச்சு லேசா உருவணும். வெடலப்புள்ள மொதல்மொதல்ல கட்டின சீல அள்ளையில குத்துனா அவுந்திரும் பாருங்க... அப்படிக் கழண்டு துண்டா வந்து விழுந்துபோகும் தோலு. பெருங்கனம் கனக்குது தோலு தோல் மட்டும் பத்து வீச இருக்கும் போலருக்கு.

சும்மா வெண்ணெயப் பூசிவச்ச மாதிரி வெண் சவ்வும் செங்கறியுமாத் தொங்குற ஆட்ட உயிர்த்தலத்துல இருந்து நெஞ்சு வரைக்கும் ஒரு கீறுக் கீறி, அட்டத்துல ரெண்டு பக்கமும் ரெண்டு கீறு கீறவும் குபுக்குன்னு வெளிய வந்திருச்சு கொடலு. பெருங்கொடலச் சுத்திக் கொழுப்போ கொழுப்பு! கொழுப்புல ஒரு கீத்த அறுத்து வாயில போட்டுத் தேங்காச் சில்லு மாதிரி நறுச் நறுச்னு தின்னும் பாத்துக்கிட்டான் சலம்பல் பாண்டி.

கொடலு, ஈரலு, நுரையீரலு மூணையும் எடுத்துத் தனிச் சட்டியில துண்டாப் போட்டுட்டு, கழுத்துக் கறி, முன் சப்பைக் கறி நெஞ்சுக் கறி மூணையும் அறுத்தறுத்துச் சுடுபாறை யில எறியிறான் சலம்பல் பாண்டி. சதை சதையா வந்து விழுகவும் சங்கீதம் படிக்குது பாறை. கறிகறிப்ரியா ராகமோ என்னமோ?

"அண்ணனுக்கு மொதல்ல ஈரலச் சுட்டுக் குடுங்கடா..."


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:12 am

"தின்னும்போதே ரத்தம் ஊறுதடா"ன்னு வெறியேறிப் பேசுறான் கட்டையன்.

அப்புறம் என்ன சொல்ல! காடே கறி மணக்குது சாராயத்த ஊத்தித் தாளிச்சுப்பிட்டாங்க தாளிச்சு. வடவீர நாயக்கன் பட்டியில மந்திரிச்சு, பொடி நடையாப் பொழுசாய வீடு வந்து சேந்தகருவாச்சி பிள்ளையப் படுக்கப் போட்டுட்டு அடுப்புக் கூட்ட ஆரம்பிச்சா. நெய் மாதிரி லேசாச் சீமத்தண்ணி தெளிச்சுப் பருத்திமாரப் பத்தவச்சா. மேயப்போன தொழுமாடுகளும் மந்தையாடுகளும் ஊருக்குள்ள வந்திருச்சுக. மாட்டு மணிச் சத்தத்துல அந்தச் சாயங்காலமே நெம்பி வழியுது. இவ வீட்டு மாடு கன்டு மட்டும் காங்கல பூலித்தேவனும் வரல கொண்ண வாயனும் வந்து சேரல. புல்லுகில்லு சேத்துப் பொழுது போயி வருவான்னு இருந்தவளுக்கும் நேரம் ஆக ஆக நெஞ்சு பதறுது.

வாசலப் பாக்குறா வாசலத் தாண்டித் தெருவுக்கு ஓடி வாரா. தெருவுக்கு வந்து வந்து திரும்பித் திரும்பிப் போறா. வரல வர்ற அறிகுறியும் தெரியல. நல்லா இருட்டிருச்சு.தண்ணியக்கூட பத்தவச்சிரலாம், என்னியப் பத்தவைக்க முடியாதுன்னு முரண்டுபண்ற காடா வெளக்கத் திரியத் திரிச்சுவிட்டு, அடுப்புல கெடந்த நெருப்பெடுத்து அவ பத்தவைக்க... தெறந்த வாசல்ல தொப்புட்டீர்னு விழுந்துச்சு என்னமோ. என்னாது அது? நனஞ்ச சீலமாதிரி என்னமோ விழுந்துகெடக்கே. கையில புடிச்ச வெளக்கோட ஓடிவந்து பாத்தா. நெளிநெளிநெளின்னு கெடக்கு ஒரு பொருள் தரையில.

தொட்டுப் பாத்தா தோலு. எடுத்துப் பாத்தா ஆட்டுத் தோலு மோந்து பாத்தா "பூலித்தேவா!"

உசுர் கிழியக் கத்துனவ தோல் மேல மயக்கம் போட்டு விழுந்துட்டா மல்லாக்கா. விளக்கவிட்டு வெளிய குதிச்சு வாயிலயும் வயித்துலயும் அடிச்சுத் துடிச்சுத் துடிச்சு எரியுது திரியில இருந்த தீபக்கொழுந்து!

குய்யோ முறையோன்னு ஊரே கூடி நிக்குது கட்டையன் வீட்டு வாசல்ல. தகவல் தெரிஞ்சு மொதலக்கம்பட்டி ஆளுக வேற சாமியாடி வந்துட்டாக சண்ட புடிக்க.

"பொறுமையா இருங்கப்பா"ன்னு சொல்லிப்பாக்குதுக உள்ளூர்ப் பெருசுக.

"பொறுமை என்னய்யா பொறுமை. இன்னைக்கி ஆட்டக் கடிச்சான் நாளைக்கி மாட்டக் கடிச்சு மனு சனக் கடிப்பான்.பாத்துக்கிட்டே பல்லாங் குழி ஆடச் சொல்றீகளா?"

"பதறாதீகப்பா. பஞ்சாயத்துல பேசிக் கிருவோம்."

"பஞ்சாயத்தென் னய்யா பஞ்சாயத்து? ஒலக்கையக் கள வாண்டு புட்டான்னு பிராது குடுத்தா, துரும்பு அபராதம்னு தீர்ப்புச் சொல்ற பஞ்சாயத்து. விடுங்கய்யா, தகப்பனையும் மகனையும் சேத்துப் பாறைக்கறி போட்டு, காக்கா நீ தின்னு, கழுகு நீ தின்னுன்னு பரசி விட்டுப் போயிர்றோம் பரசி."

இம்புட்டுச் சலம்பல் நடக்குது. தகப்பனும் மகனும் வீட்டுக்குள்ள இருக்காங்களே தவிர வெளியே வந்தபாடக் காணம்.

"ஏ கூப்பிடுங்கடா அவன, இல்ல உள்ள வந்து கொல்லுவோம்."

"ஏம்ப்பா இந்தத் தவ்வுத் தவ்வுறீகளே, கொலக்குத்தமா ஆகிப்போச்சு?"

"ஒன் வீட்டு ஆட்ட நீ வெட்டிக்கிட்டா அது கொலை இல்ல என் வீட்டு ஆட்ட நீ வெட்னா அது கொலதான்."

கிறீச்னு தொறக்குது தலவாசக் கதவு. என்னமோ விருந்துக்கு வந்தவுகள விசாரிக்க வந்த மாதிரி சத்தமில்லாம நடந்து வாராரு சடையத்தேவரு. அவர் வழக்கமா வெத்தல இடிக்கிற கல்லுமேல தன்ன இடுப்புக்குக் கீழ கொஞ்சங் கொஞ்சமா எறக்கிவச்சு உக்காந்துட்டாரு. பையில இருந்த பாக்க எடுத்து வெத்தல ஒரல்ல போட்டு டொக்கு டொக்குனு தட்டிக்கிட்டே கேக்குறாரு: "ஆடு சுட்டுத் தின்டவன் என் மகன் தான்னு சாட்சி இருக்கா?"

"சாட்சி வேணுமா சாட்சி... வரச் சொல்லு ஒன் மகன வகுத்த வகுந்து உள்ளயிருக்குற ஈரல எடுத்து இந்தான்னு காமிக்கிறோம்."

"இருக்கலாம்... ஈரல்கூட இருக்கலாம். அது ஒங்க வீட்டு ஆடுன்னு எழுதியிருக்குமா ஈரல் மேல."

"யப்பா சடையத்தேவா! நீ வாய் பெருத்த ஆளு வக்கீல் மாதிரி பேசுவ. சாட்சி இல்லாம நியாயம் கேக்க வர மாட்டமப்பா" உருமாப் பெருமாத் தேவரு பொறுப்பா பதில் சொல்ல,

"என்ன சாட்சி?"னு சாணியில விழுந்த மறு மாத்தத்த எடுக்கிற மாதிரி சடையத்தேவரு அலட்சியமாக் கேட்கவும் கடுப்பாகிப் போனாரு காவக்கார சக்கணன்.

"கொண்ணவாயன அடிச்சு உப்பந்தரிசு ஓடையில போட்டது, மாடுகளப் புடிச்சு ஒடசாலி மரத்துல கட்டி வச்சது, கருவாச்சி கெடாய நக்கிலிச்சான் பாறையில வெட்டிப் பாறைக்கறி போட்டது எல்லாத்துக்கும் கண்ல பாத்த சாட்சி இருக்கு. என்னமோ நாங்கள்லாம் கேணப் பயக மாதிரி கிறுக்குக் குத்தாத பெருசு".

"இப்ப எல்லாரும் கூடி எதுக்கு வந்திருக்கீக?"

"தண்டம் வாங்க வந்திருக்கோம்" உள்ளூர்ப் பெருசு நிதானமாகச் சொல்ல, "தண்டத்த நீங்க வாங்கிக்கங்க, அவன் தலைய நாங்க வாங்கிக்கிறோம்"னு மொதலக்கம்பட்டி ஆளுகள்ல ஒருத்தன் எருமைத் தொண்டையில கரகரன்னு பேச, "எவன் தலையடா வாங்குவீக?"ன்னு வீச்சரிவாளோட வெளிய தவ்வி வந்துட்டான் கட்டையன்.

அதுக்குள்ள அவன் கைத்தடி களுக்குத் தகவல் போயி வேல்கம்பு வெட்டரிவாளோட வந்து குமுஞ்சு போனாக. அவன் ஒண்ணு சொல்ல, இவுக ஒண்ணு சொல்ல, அவன் அரிவாள் எடுக்க, இவுக சூரிய எடுக்க "வேணாம்டா வெட்டுப்பலி குத்துப்பலி ஆகிப்போச்சுன்னா ஏழு தலமொறைக் கும் எந்திரிக்க முடியாதடா"ன்னு பெருசுக சத்தம் போட்டு அமத்த, கடைசியில பதிமூணே கால் ரூவா தண்டத்தோட முடிஞ்சுபோச்சு பஞ்சாயத்து.

காளியம்மன் கோயில் வாசல்ல மொனையில்லாத மம்பட்டி, மூக்கில்லாத கடப்பாரைய வச்சுக் கண்ணீரு ஒழுக ஒழுகக் குழி தோண்டிக்கிட்டிருக்கா கருவாச்சி. கால்சட்ட வழியா ஒண்ணுக்குப் போயிக்கிட்டு மூக்கு ஒழுக அழுது நிக்கிறான் சின்னப் பய அழகுசிங்கம். பொணங் கெடக்குற மாதிரி அட்டத்துலேயே கெடக்கு பூலித்தேவன் தோலு.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:12 am

"நான் ஒன்னிய ஏய்க்க நெனைக்கல நீ என்னிய ஏச்சுப்பிட்டியே ஆத்தா. வளத்த பாசத்துல புத்தி மாறிட்டேன் வெட்ட மாட்டேன், விட்ருன்னேன். வெட்டவச்சுட்டியே. ஒன் வாசல்ல வந்து கெடா அறுத்திருந்தா ரத்தம் ஒனக்கு கறி எங்களுக்கு. இப்ப ஒனக்குக் காணிக்கை செலுத்த நான் புடிச்சு வளத்த பூலித்தேவன் தோல்தானாத்தா இருக்கு இந்தா ஏத்துக்க."தோலத் தூக்கிக் கடைசியா ஒரு தடவ மோந்து பாத்துட்டு அதுல மஞ்சத் தண்ணி தெளிச்சுக் கும்புட்டுப் போட்டா குழியில அழுதா. "வாடா மகனே"னு அவன இழுத்துப் பெறங்கையில மண்ணுத் தள்ளவச்சா. மிச்ச மண்ண மம்பட்டிவச்சு இழுத்தா குழிய மூடுனா. மம்பட்டிய எறிஞ்சிட்டு தலைப்பிள்ளையப் புதைச்சவ மாதிரி தலையில அடிச்சு அடிச்சு ஒப்புச் சொல்லிஅழுதா.

"பெத்தெடுத்து நான் வளத்த
பெரியமகன் மண்ணுத் தள்ள
தத்தெடுத்து நான் வளத்த
தங்கமகன் காங்கலையே!
புல்லு மணம் மாறலையே!
புழுக்கை இன்னும் காயலையே!
காயடிச்ச பிள்ளையப் போய்
நாயடிச்சுத் தின்னுருச்சே!
பெறவின்னு ஒண்ணிருந்தா
பிள்ளையாக நீ வாடா!
ஆடாகப் பெறந்தாலும்
அடிவயித்தில் சுமப்பனடா!"


குழி மேல விழுந்து அழுது கெடந்தவளப் பதறிப்போயித் தூக்குனாக பஞ்சாயத்துக்குப் போயி வந்த ஆளுக. "ஆத்தா செத்தே பொழச்சுக் காமிக்கிறவ ஆடு செத்தாப் பொழைக்க மாட்டியா? எந்திரி தாயி எந்திரி."

அவ கையில குடுத்த தண்டப் பணம் பதிமூணே கால் ரூவாயையும் காளியம்மன் கோயில் உண்டியல்ல போட்டுக் கண்ணத் தொடைச்சுக் கிட்டா கருவாச்சி. "பிள்ளைக்கும் சொகமில்ல ஒன் ஒடம்பும் சுடுது. வா எங்க வீட்டுல வந்து ரெண்டு நா இரு வா."

கனகாம்பரமும் பவளமும் கருவாச்சியக் கூட்டிட்டுப் போறாக கையோட.

"அழுகாதடா மகனே!"அழுகுசிங்கத்தத் தூக்கித் தோள்ல வச்சுக்கிட்டான் மொதலக்கம்பட்டி அன்னக்கொடி கருவாச்சியக் கட்டிக்கிற வேண்டிய மொறமாமன். மொதலக்கம்பட்டி அன்னக்கொடி நல்ல வளத்தி. ஆள் கறுப்புன்னாலும் அம்சமான அழகன். சின்ன வயசுல ஊளமூக்கு ஒழுக கருவாச்சிய மொதலக்கம்பட்டிக் குத் தூக்கிட்டுப் போறப்பவெல்லாம் "அந்தா பணியாரம் கேட்டு ஆத்தாகிட்ட அழுதுக்கிட்டிருக் கான் பாரு. அவன் தான்டி ஒம் புருசன்"னு அன்னக்கொடியக் காமிப்பா பெரியமூக்கி. குடும்பம் இடையில நொந்து நொடிச்சுப் போச்சு பஞ்சம் பொழைக்க, வடக்க கண்காணாத தேசத்துக்குப் போயித் தகவல் அத்துப் போச்சு. உண்மையா ஒழச்சு, நேர்மையாப் பொழைச்சு முறுக்குச் சுட்டு வித்து நிமிந்திருச்சு குடும்பம். காலுக்குச் செருப்பு, கைக்குக் கடிகாரம்னு ஏகத் தடபுடலாகி சொந்த ஊருக்குத் திரும்பி நெலபுலம் வாங்கி வட்டிவாசிக்கெல்லாம் குடுத்து, வாழ்வு பெருத்துப்போனாலும், பழைய பந்தம் பாசம் உறவு மட்டும் கரையாத கல்லா நெஞ்சுக்குழியிலயே கெடக்கு.

சுப்பஞ் செட்டியார் வீட்டு உள் திண்ணையில உக்காந்து அழகுசிங்கத்தை இழுத்து மடியில உக்காரவச்சுக்கிட்டு "முட்டாயி வாங்கிக்கடா மகனே முட்டாயி"ன்னு உள் பையில கைய விட்டு எட்டணாவ எடுத்து நீட்னான் அன்னக்கொடி. வாங்கக் கைய நீட்டிட்டு அன்னக் கொடிய ஒரு பார்வை, ஆத்தாள ஒரு பார்வை மாத்திமாத்திப் பாத்தான் அழகுசிங்கம்.

"நாங்க அசலாள் இல்லப்பா, ஒன் சித்தப்பன்தான் வாங்கிக்கடா ராசா வாங்கிக்க."

காசை அவன் சட்டைப் பையில போட்டுவிட்டுக் கண்ணையும் தொடச்சு விட்டான்.

"அழுகப் பெறந்த வம்ச மாடா, நீயும் ஒங்க ஆத்தாளும்? ஆம்பள இல்லாத வீடுன்னுதானடாஆட்டப் புலி அடிச்சுப் புடுச்சு. ஒன் சித்தப்பன் ஒன்கூடவே இருக்கேன்னு வச்சுக்க... இது நடந்திருக்குமா? ஒங்க வீட்டுச் சாணியிலயாச்சும் ஈ ஒட்டியிருக்குமா?"

கதவுல முதுகு சாச்சுக் கால்நீட்டி உள்வீட்டுல ஒக்காந்திருந்த கருவாச்சிக்குத் துணுக்குன்னுச்சு.

அவன் இன்னும் சத்தம் கூட்டிப் பேசுறான்... காது கேக்கட்டும் கருவாச்சிக் குன்னு. "எச்சிபட்டுப் பண்டம் பழுதாகிப் போச்சுன்னு நான் நெனைக்கலப்பா பொதைச்சு வச்சு எடுத்தாலும் தங்கம் தங்கந்தானடா மகனே. ஏங்கூடவே இருந்திர்றியா?"

பையில போட்ட துட்ட எடுத்துத் தொட்டுத் தொட்டுப் பாத்துக்கிட்டு ஆகட்டும்னு தலையாட்டினான் அழகுசிங்கம்.

உள்ளயிருந்து கத்திச் சொன்னா கருவாச்சி, "துட்டத் திருப்பிச் சித்தப்பன் பையிலயே போட்டுர்றா செல்லம்."

அவன் போடல கையில வச்சுக்கிட்டுக் கனாக் கண்டுக்கிட்டே யிருக்கான்.

"நீ வெவரமாயிருக்க. ஆத்தாளுக்குத் தான் பத்தாது... சின்ன வயசுலயே மனசுல முடிச்சுப் போட்டு விட்டாகளா... அவுத்தாலும் அவுக்க முடியல அத்தாலும் அக்க முடியல. மனசு மறுகுதடா மகனே. வசதி இருக்குடா சித்தப்பனுக்கு வந்திரு. அப்பன் நானிருக்க நீங்க அனாதை ஆகலா மாடா? நாளப்பின்னப் பள்ளிக்கூடத்துல போயிச் சேரப் போறன்னு வச்சுக்க ஒம் பேரு என்னான்னு கேட்டா என்ன சொல்லுவ?"

எழுத்துக்கூட்டி எழுத்துக்கூட்டி அந்தச் சின்னப்பய சொன்னான், "அ...ல...கு... சி...ங்...க...ம்..."

"சரி... என்னா அழுகுசிங்கம்னா என்ன சொல்லுவ?" பய மேலயும் கீழயும் முழிச்சான். உள்ளயிருந்து ஆத்தாகாரி கத்துனா "க.அழகுசிங்கம்!"

இதெல்லாம் கேட்டுக்கிட்டேயிருந்த பவளம் இப்ப உள்ள புகுந்தா. "இன்னும் பழச மறக்கல போலருக்கு. க... கட்டையன் தானே.?"

"இல்ல கருவாச்சி."

கொஞ்சநேரம் அது ஆளில்லாத வீடா அமைதியாகிப்போச்சு.

"குடுத்த துட்ட சித்தப்பன் பையில போடுறா"ன்னு போடச் சொல்லிட்டு, அவன அடிச்சு இழுத்துத் தூக்கி உள்ள ஓடிப்போனா கருவாச்சி.

சொக்கத்தேவன் பட்டியக் கடக்கிற வரைக் கும் அன்னக்கொடி குனிஞ்ச தல நிமிரல. கண்ணுல விழுந்த தூசியத் தொடைக்கிறவன் மாதிரி கண்ணீரையும் தொடைச் சுக்கிட்டான், தலையில கட்டுன துண்ட அவுத்து. அவ பொழப்புக்குள்ள வந்த ஒரு நல்ல ஆத்மாவும் வேட்டிய மடிச்சுக் கட்டிக் கிட்டுப் பொடி நடையாப் போயிருச்சு.

ரெண்டாம் நாளு கருவாச்சி லேசாப் பேச்சு குடுத்தா: "ஒம் புருசன் இங்க வாரதே இல்லையா கனகம்?"


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:13 am

"வருவாக. வாழப்பழச் சீப்பு ஒண்ணத் தோள்ல போட்டு, முறுக்கு மிச்சரு சிலேபின்னு வாங்கி ஒண்ணாச் சரடு சுத்தி ஒரே பையில போட்டு எப்பவுமே சாயங்காலம் வருவாக. என் பொண்டாட்டிய விடிஞ்சு கூட்டிட்டுப் போறேன்னு ராத் தங்கல் தங்குவாக. சோலி முடிஞ்சதும் சொல்லாமப் போயிருவாக."

"இது என்னாடி பொழப்பு..? வாழவும் வாழாம தீக்கவும் தீக்காம..? எதுக்கும் ஒரு முடிவு இருக்கு. இதுக்கு இருக்கா இல்லையா?"

"நான் ஒரு முடிவுக்கு வந்துட்டனக்கா. காஞ்ச கத்தாழ நாராப் போயிட்டாரு எங்கப்பன். ஒரு மகளக் கட்டிக் கொடுத்தும் வாழல ஒரு மகளக் கட்டிக் குடுக்கவே முடியல. நான் மண்டையக் கிண்டயப் போட்டுட்டாப் பொம்பளப் பிள்ளைக ரெண்டும் அனாதிக்காட்ல அலைஞ்சிருமேன்னு பொலம்பிப் பொலம்பி இத்துப் போனாரு. பொழப்பு தான் நல்ல பொழப்பா இல்லாமப் போச்சு அவருக்கு. சாவாவது நல்ல சாவு சாகட்டுமேன்னு அக்கா தங்கச்சிக கூடி ஒரு முடிவு பண்ணிட்டோம்."

"என்னா முடிவு பண்ணீக?"

என் புருசனுக்குக் கழுத்து நீட்ட என் தங்கச்சியச் சம்மதிக்கவச்சுப் புட்டேன்."

கருவாச்சி ஒரு பேச்சும் பேசல.

"ஒனக்கு அது புடிக்காத முடிவா இருக்கலாம். ஒம் பொழப்புலயும் எம் பொழப்புலயும் நம்மளுக்குப் புடிச்சதா நடந்துக்கிட்டிருக்கு?"

"இது ஒங்க அப்பனுக்குத் தெரியுமா?"

"தெரியும்."

"என்ன சொன்னாரு?"

"ஓட்டச் சட்டின்னாலும் கொழுக்கட்ட வெந்தாப் போதும்"னு பெருசா இழுத்துப் பெருமூச்சுவிட்டுச்சு பெருசு."

பொம்பளைக ரெண்டு பேரும் போயிட்டா, இந்தக் கெழவன் கதி என்னான்னு யோசிச்சு யோசிச்சு மண்ட காஞ்சுபோனா கருவாச்சி. மறுநாள் பொழுசாய வந்துட்டானய்யா முத்துக் காமு, காடுமேடு மேஞ்ச ஆடு மாடு வீடு சேர. இந்த மொற வாழப்பழச் சீப்பையும் முறுக்கையும் காணோம். செக்குல தலையக் குடுத்தவன் மாதிரி தலையில எண்ணெய் ஒழுக வந்தவன், கையில மஞ்ச மஞ்சேர்னு ஒரு மஞ்சப் பைய வச்சிருக்கான். பிரிச்சுப் பாத்தா அர வீசை ஆட்டுக் கறி எலும்பு கிலும்பு இல்லாம. "குழம்பு வை பாதிய வறுத்திரு பாதிய"ன்னு சொல்லிப்புட்டு வாசம் புடிக்க உக்காந்துட்டான் வாசல்லயே.

"யண்ணே! எப்பக் கூட்டிட்டுப் போகப் போற எங்க கனகத்த?"கருவாச்சி லேசா அவன அசைச்சுப் பாக்குறா.

"நானா மாட்டேங்குறன்...? ஒருத்திக்கு ரெண்டு பேரையும் வச்சுப் பொழைக்கிறேங்கறேன். மாமனுக்கும் மனசு இல்ல மச்சினிச்சிக்கும் மனசில்ல."

சுவர்ல பூச்சி புடிக்கிற பல்லிய வேடிக்கை பாத்துக்கிட்டிருந்த சுப்பஞ் செட்டியாரு, பல்லியப் பூச்சி முழுங்கினதும் பார்வையத் திருப்பினாரு. "மனசக் கல்லாக்கிக்கிட்டுச் சொல்றேன் தாயி. கல்யாணம் பண்ணி அவளயும் கூட்டிட்டுப் போகச் சொல்லு"இத்துப்போன போர்வையை இழுத்துப் பொத்தி இருமிக்கிட்டே சொன்னாரு சுப்பஞ் செட்டி.

"பழைய பாக்கியக் கழிச்சிவிட்ருங்க. பவளத்தையும் கூட்டிட்டுப் போயிடறேன்."

"பழைய பாக்கின்னா?" "வளவியிலேயே பொழங்கிப் பொழங்கி மாமனுக்கு வைர மோதிரம்ங்கிறது மறந்தே போச்சே."

"ஒரு ஈயச் சொம்பு வாங்கக்கூட வக்கில் லாமக் கெடக்கேன். வைரமோதிரத்துக்கு எங்க போவேன் மாப்பிள்ள?"

செத்தவடம் அங்க சத்தம் செத்துப்போச்சு யாரும் பேசல. தட்டுல வச்ச சோளக்களியில ஈ ஒண்ணு மாட்டிக்கிட்டு முழிக்கிறதப் பாத்துக் கிட்டே கழுத்துல கெடந்த தங்கச் சங்கிலியச் சப்பிக்கிட்டு நிக்கிறான் அழகுசிங்கம். அவன உத்து உத்துப் பாத்தா கருவாச்சி. அந்த மூணு பவுன் சங்கலிய படக்குன்னு கழத்துனா. அழுத பிள்ளைய அணச்சு வாயப் பொத்துனா. "இந்தாங்க இத வைங்க. நான் நகை போடப்போறதில்ல. நகை போட்டு அழகு பாக்க எனக்குப் பொம்பளப் பிள்ளையும் இல்ல. இத உருக்கி ஒரு மோதிரம் செஞ்சு குடுத்திருங்க. என் தங்கச்சிக பொழப்பு கரையேறிடும், இவளுக போனாப் போறாளுக. ஒங்களுக்கு என்னைக்கும் கூட இருக்கப்போற மக நாந்தான்."

படுத்துக்கெடந்த மனுசன் படார்னு எந்திரிச்சு அவ கையப் புடிச்சு மூஞ்சியில வச்சுக்கிட்டு மாடுமாதிரி அழுதாரு.

அக்கா தங்கச்சிக ரெண்டு பேரும் நெஞ்சுல கைவச்சு நின்னு போனாக.

"எங்களுக்குக் குடுத் துட்டு நீ என்ன செய்வ தாயி? என்ன செய்வ?" பொத்தல் விழுந்த போர்வைய எடுத்துக் கண்ணத் தொடச்சுக் கிட்டே கதர்றாரு சுப்பஞ் செட்டியாரு.

"எனக்கு என்னய்யா இருக்கு? ஒரு முழக் குச்சுன்னாலும் ஒழுகாத குச்சு கால் வயித்துக் கஞ்சின்னாலும் கடனில்லாத கஞ்சி."

இந்தக் குழப்பத்துல இன்னும் கறித்தண்ணி வைக்கலையேங்கிற கவலையில காதுல இருந்த அரைப்பீடி பத்தவச்சு, புண்பட்ட நெஞ்சப் புகையவிட்டு ஆத்துன்னு ஆத்திக்கிட்டி ருக்கான் முத்துக்காமு.

"கேட்டுக்க மாமு..." ஆரம்பிச்சான் முத்துக்காமு. "ஆனி இருவத்தேழு நாளு நல்லாயிருக்கு. அதுதான் கடைசி முகூர்த்தம். அதவிட்டா ஆடி வந்துரும். நாளைக்கு ஒரே நாள்தான் ஊட இருக்கு. ஒன்னிய நானு கொட்டுக்காரனக் கூப்பிடச் சொல்லல கூத்துக் காமிக்கச் சொல்லல பந்தல் போடச் சொல்லல பந்தி வைக்கச் சொல்லல மோதிரம் போட்டு ஓட்டிவிட்ரு கழுதைகள எங்கூடங்கறேன். ஆனி இருவத்தேழு போயிருச்சுன்னு வச்சுக்க, நான் போயிருவேன். அப்பொறம் ஒன் விக்காத வளவிக மாதிரி அவளுகள வீட்லயே வச்சுக்க நான் எவளையோ வச்சுக்கிர்றேன்." வீடே கேக்க வீர வசனம் பேசிட்டு, "வார வழியில பாத்தேன். அன்னஞ்சி யில ஆடு உரிக்கிறாக இன்னக்கி"ன்னு தணிஞ்ச குரல்ல சொன்னான்.

விடியுது.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:13 am

சுப்பஞ் செட்டியார் ஆணியில தொங்குன சட்டைய எடுத்தாரு உள்ள கைய விட்டுப் புரட்டி தலை வழியாப் போட்டாரு. கழுத்தத் தாண்டி எறங்குறப்ப ஒரு இழு இழுத்தாரு பாருங்க... தோள்பட்டத் தையல் மூட்டு பிரிஞ்சு "இதுக்குமேல எங்களக் கொல்லாத சாமி"ன்னு சர்ருபுர்ருன்னு சத்தம் போட்டுருச்சு. தொத்தக் கொடையக் கையில எடுத்தாரு இத்த செருப்ப மாட்டிக்கிட்டாரு. சில வருசமாவே சீக்காக் கெடக்குற செருப்புக ஊசி குத்தாத எடம் ஒரு எடம் பாக்கியில்ல. "காதறுந்தும் ஒங்க பேச்சக் கேக்கறது நாங்க மட்டுந்தான்" இளிச்சுக்கிட்டே சோகமாச் சொல்லுதுக செருப்புக.

"போயிட்டு வாரேன் கண்ணுகளா... பொழுதிருக்க வந்திடறேன். உருமாப் பெருமாத் தேவருகிட்டச் சொல்லிருக்கேன். நாளைக்கி வீட்டளவுல விசேசம் வச்சுக்கிரலாம். கவுண்டர் வீட்டுல ஒரு கோழிக்குஞ்சு கடன் கேட்ருக்கேன் புடிச்ச மாதிரி செஞ்சு குடுங்க புதுமாப்ளைக்கு. நாளைக்கி ஒரு பொழுது மட்டும் பொறுத்துக்கச் சொல்லுங்க கல்யாண வீட்டுல கவிச்சி ஆகாது." பொடிநடையாப் புறப்பட்டாரு சுப்பஞ் செட்டியாரு.

பொன்னாசாரிக பெருத்த ஊரு நிலக்கோட்டை. முப்பது மைல் சுத்தளவுக்கு அங்கதான் எல்லாரும் நகை செய்ய வருவாக. அந்த ஊர் ஆசாரிககிட்ட தொழில் சுத்தமும் இருக்கும் நேர்மையும் இருக்கும். உமி ஓட்டுல ஊதி ஊதிக் கரியக் கங்காக்கிக்கிட்டிருந்த அங்காசாரி, சுப்பஞ் செட்டியாரப் பாத்ததும் "வாய்யா, வாய்யா, வாய்யா"ன்னாரு வாய் நெறைய.

"கடவுளா நெனச்சு வந்திருக்கேன் கைவிட்ராதய்யா." பையில கையவிட்டு எடுத்து நீட்டினாரு கருவாச்சி குடுத்த தங்கச் சங்கிலிய.

"என்ன பண்ணுவீகளோ, ஏது பண்ணுவீகளோ தெரியாது. இன்னைக்கிப் பொழுதுக்குள்ள ஒரு வைர மோதிரம் வேணும். கூலி குடுக்கச் சத்தில்ல குறுக்கொடிஞ்சு நிக்கறேன். செய்கூலி சேதாரம் இதுலயே கழிச்சிக்கிட்டு உள்ளதுக்குச் செஞ்சு குடுங்க ஒரு ஒத்தக் கல்லு மோதிரம்."

உள்ளங்கையில விழுந்த சங்கிலிய ஒரு புடிச்சபுடி புடிச்சுப் பாத்தாரு அங்காசாரி உள்ளங்கைய மூடிக்கிட்டுக் கண்ணையும் தெறக்காமச் சொல்றாரு "செட்டியாரய்யா ஒங்க சங்கிலி மூணு பவுன நெருங்கும் உருக்குனாச் சுருங்கும்." பொன்னாசாரிக அப்பப்ப தமிழ்லயும் கொஞ்சம் விளையாடிக்கிருவாக. அரிசியில சிற்பம் செய்யிற மாதிரி பொன்னத் தட்டிப் பூ வேல செய்யிற மனசா இல்லையா?

"ஏனய்யா நகை சுருங்குது?"ன்னு எதார்த்தமாக் கேட்டாரு சுப்பஞ் செட்டியாரு.

"அம்பில்லாத வில்லும் செம்பில்லாத பொன்னும் வேலைக்காகாது செட்டியாரய்யா. உருக்க உருக்கச் செம்பு ஒதுங்கிருமா இல்லையா..? சொக்கத் தங்கம் மட்டும் இதுல ரெண்டரை தேறும் இப்பப் பாருங்க." நான் பத்திக்கிட்டேன்னு செவப்பு முழி முழிச்சுக் காமிக்குது கரிக் கங்கு. ஆசாரி ஒரு மங்கொகைய எடுத்தாரு. சங்கிலிய அதுல போட்டாரு. ஒரு ஒல கொறடு எடுத்து மங்கொகையப் புடிச்சு நடு அடுப்புல வச்சாரு. ஊதுறாரு. உயிர் மூச்ச உள்ள ஊதுறாரு. குடுத்தா மட்டும் சிரிக்கிற மனுசப் பயக மாதிரி காத்து வந்தா மட்டும் கண்ணச் சிமிட்டுது கங்கு. முதுகத் தூக்கிச் சுவத்தில போட்டுட்டு மனசத் தூக்கி உமி ஓட்டுல போட்டுட்டு தங்க வேடிக்க பாக்கத் தயாராயிட்டாரு செட்டியாரு.

கால் மணி நேரத் துல உருகி உருகித் தண்ணியா ஓடுதய்யா தங்கம். தங்கம் தண்ணியாப் போனதும் பதறிப் போனாரு சுப்பஞ்செட்டியார். நெருப்புல போட்டாத் தங்கமே உருவழிஞ்சு தண்ணியா ஓடிப்போயிருது. இந்தச் சொத்த எலும்பும், சுருங்குன தசையும் என்னத்துக்காகும்? சுப்பஞ் செட்டியாரு சொல்லிப்பாத்துக்கிட்டாரு மனசுக்குள்ள சொல்லல வெளியில.

உருகுன தங்கத் தண்ணியில நவச்சாரத் தூள அள்ளி எறிஞ்சாரு ஆசாரி. பொண்ணு மாப்ளைய ஒண்ணு சேத்துவச்சுட்டு, கதவுக்கு வெளிய காணாமப் போற தாய்க் கெழவி மாதிரி, உருகுன தங்கத்த ஒண்ணு சேத்துவிட்டுட்டு போயிருச்சு நவச்சாரம். மங் கொகையில உருகுன தங்கத்த மாத்தி ஊத்த ஏனம் வேணுமா இல்லையா? உள்ளங்கை அகலத்துல இருந்த இரும்புப் பாளம் எடுத்தாரு. அதுல ஊத்துனவுடன் எட்டுத் தெசையும் எந் தெசைதான்னு அங்கிட்டும் இங்கிட்டுமா ஓடுது கழுத. ஓடுன தங்கத் தண்ணிய ஒரு பக்கமா அண கட்டி நிறுத்த அதுல உமியக் கொட்னாரு. இதப் பாத்ததும் சுளீர்னு யாரோ சவுக்க எடுத்து அடிச்ச மாதிரியிருந்துச்சு சுப்பஞ் செட்டியாருக்கு. ஒன்னியத் தங்கத்துக்கு வாங்குனாக என்னிய மட்டும் தவிட்டுக்கு வாங்குனாகளான்னு கேக்குறானே மனுசன், என்னமோ தங்கம் பெருசு தவிடு சிறுசுன்னு. இங்க வந்து பாருங்கடா, ஏலேய்! இங்க தவிடுதானடா தங்கத்துக்கே அண கட்டுது. ஏத்தமும் இறக்கமும் இடம் பொறுத்துத்தான்டா."

தங்கத்துல தத்துவார்த்தம் பாத்ததுல தன்னத்தானே மெச்சிக்கிட்டு உக்காந்திருக்காரு சுப்பஞ் செட்டியாரு.

சூடு ஆறவும் இரும்புப் பாளத்துல ஊத்திவச்ச தங்கத் தண்ணி செத்தவடத்துல கெட்டியாகிப்போச்சு அப்பறம் கெட்டி கட்டியாகிப் போச்சு.

இப்பத் தொழில் ரகசியம் சொல்றாரு ஆசாரி. "அய்யா செட்டியாரய்யா! நகையா இருக்கறபோது தங்கம் ஒவ்வொரு அங்குலத்துலயும் வேற வேற தரத்துல இருக்கும். உருக்கி ஒண்ணுசேத்தா ஒரே தரத்துக்கு வந்திருது."

"நெசந்தானய்யா. ?"


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:13 am

"இல்லய்யா. இதுல மாசு மருவு கலந்திருக்கு. இதச் சொக்கத் தங்கமாக்க இன்னும் ரெண்டு வேல பாக்கியிருக்கு. இந்தாங்க. காப்பித்தண்ணி குடிங்க. பாத்துக்கிட்டேயிருங்க." திரும்பவும் தங்கக் கட்டியச் சுட்டுப் பட்டறையில வச்சாரு. எடுத்தாரு சுத்தியல. அடிச்சாரு தங்கத்த. அது எங்க எளக்கம் குடுக்குது எங்க இறுக் கம் குடுக்குதுன்னு விரல் வழியா மூளைக்குச் சொல்லிக்கிட்டேயிருக்கு சுத்தியலு. இறுக்கம் குடுத்த தங்கத்த எடுத்தாரு இளஞ் சூடு காமிச்சாரு பொறிகாரத்துல போட்டுப் பெரட்டி எடுத்தாரு உலையில தூக்கிவச்சாரு உருகும் பதம் கண்டதும் உமியடிச்சாரு தண்ணிக்குள்ள முக்கினாரு சூடு அமத்திட்டாரு ஆறிப் போன தங்கத்த அடிச்சு அடிச்சு, தங்கக் கட்டியத் தகடா மாத்திப்பிட்டாரு. என்னமோ அருவாமணையில வெண்டக்காயக் குடுத்து வெட்டி எடுக்கிற மாதிரி நீண்டுபோன தங்கத்த அங்குல அங்குலமா வெட்னாரு அடுக்கியும் வச்சுக்கிட்டாரு. இப்பத்தான் புடம் போடப்போறாரு. சலிச்செடுத்தாரு செம் மண்ணை அதுல கரைச்சு ஊத்துனாரு புளிய உள்ள போட்டாரு உப்ப. மூணையும் கொழகொழன்னு கொழச்சாரு. களிப்பதம் வந்ததும் தங்கத் துண்டுகள்ல தடவிட்டாரு.

காப்பித் தண்ணியக் குடிச்சுக்கிட்டே கடைவாய்க்குள்ள சிரிச்சுக்கிட்டாரு சுப்பஞ் செட்டியாரு.

"ஏ பவுனு! நாந்தான் தங்கம்னு மேனாமினுக்கியா அலஞ்சியே! ஒங் கதியப் பாத்தியா? எங்க மனுசப் பொம்பளையெல்லாம் மஞ்சப்பூசிக் குளிக்கிறாக. நீ பாவம்! மண்ணப் பூசித்தானக் குளிக்கிற. ஒன் வகிசி தெரிஞ்சு போச்சடி பிள்ளா இனி வாயத் தெறக்காத." என்னமோ காலங்காலமாத் தங்கம் இவருகூட குடுமிப்பிடிச் சண்ட போட்டதாகவும் இன்னக்கி அது கொட்டத்த இவரு அடக்கிட்டதாகவும் ஏழக் கெழவனுக்கு ஒரு ராச சந்தோசம்.

மண் கொழச்சு அப்புன தங்கத் தகடுகள ஓட்டுல போட்டு ஒல மூடி வச்சு மூடி, அடியில எருக்கூட்டி எரிக்க ஆரம்பிச்சாரு ஆசாரி. சோறு வெந்துருச்சா கொழஞ்சுருச்சாங்கிறத குழவியில தொவையல் அரைச்சுக்கிட்டே சொல்ற கெழவிக மாதிரி, புடம் போட்ட தங்கம் வேக்காடு குடுத்துருச்சா இல்லயாங்கிறத அனுபவம் சொல்லுது ஆசாரிக்கு. ஒல மூடி தொறந்து பாத்தா தடவுன உப்பு, புளி, மண்ணு ஒண்ணையுங் காணோம். அத்தனையும் பஸ்மமாகி ஆவியாப் போக, சொதசொதன்னு கெடக்கு சொக்கத் தங்கம். ஆறவச்சு எடை போடுறாரு ஆசாரி.

"கை அளக்காததையா தராசு அளக்கப்போகுது? சொன்னது சொன்னதுதானய்யா. ரெண்டரைப் பவுனு."

"ஒங்க செய்கூலிக்குச் சேர வேண்டியத எடுத்துக்கிட்டு மிச்சத்துக்கு ஒரு வைர மோதிரம் செஞ்சா கணக்கு என்ன வரும்னு சொல்லுங்க, காதாரக் கேட்டுக்கிர்றேன்."

கண்ண மூடி வாய்க்குள்ளயே முணுமுணுத்து அவரா ஒரு கணக்குப் போட்டாரு ஆசாரி. "அய்யா, காப் பவுனு செய்கூலி முக்காப் பவுன் மதிப்புக்கு ஒரு வைரக் கல்லு... போக ஒன்றரைப் பவுன்ல மோதிரம் செய்யலாம்."

"செய்யுங்கய்யா. பொழுதிருக்கக் குடுத்திட்டாப் புண்ணியமாப் போகுமய்யா."

ரெண்டு மூணு வைரக் கல்ல எடுத்து கரும் புள்ளி இருக்கான்னு நீரோட்டம் பாத்து ஒரு கல்ல ஆசாரி ஒதுக்கிவைக்க, பட்டிவீரன் பட்டியிலிருந்து வந்துட்டான் ஒருத்தன் எழவு சொல்ல. அவுந்த வேட்டியக்கூட ஒழுங்காக் கட்டாம அலறிப்பதறி எந்திரிச்சிட்டாரு ஆசாரி.

"அய்யா! பட்டிவீரன்பட்டி மருதாசாரி அடியாகிப் போனாரு. அவரு எனக்குச் சித்தப்பன் மட்டுமில்ல. கொறடு புடிக்கச் சொல்லிக்குடுத்த குரு. ஒரு நாள் பொறுத்துக்குங்க. காரியம் முடியட்டும். வைர மோதிரத்தக் கையில குடுத்துடறேன்."

கனிஞ்சு எரிஞ்சுக்கிட்டிருந்த உமி ஓட்டுல விழுந்து எந்திருச்சு வந்துச்சு சுப்பஞ்செட்டியாரு உசுரு.

"அய்யா ஆசாரி அய்யா, கைவிட்றாதீக. விடிஞ்சாக் கல்யாணம். வைர மோதிரத்தோட நான் போகல எங்க வீட்லயும் ஏதாகிலும் ஒண்ணு ஆகிப்போகும். பெரிய மனசு பண்ணுங்கய்யா."

ஆசாரி யோசிச்சாரு. அங்கிட்டும் இங்கிட்டும் தலையாட்டுனாரு. ஆழமா ஒரு மூச்சு இழுத்து நீளமா வெளியவிட்டாரு. வீடும் பட்டறையும் ஒண்ணு அவருக்கு. பின்பக்கக் கதவு வழியா உள்ள போயி மேல் சட்ட போடாத பட்டு வேட்டி மட்டும் கட்ன ஒரு வாலிபப் பயலக் கையோட கூட்டியாந்தாரு.

"அய்யா செட்டியாரய்யா. இந்தப் பையன் என் புது மாப்ள. பரம்பரையாப் பொன்னாசாரிக இவுக குடும்பம். திருமல நாயக்கருக்கு செவப்புக் கடுக்கன் செஞ்சுக்குடுத்த வகையறா. மோதிரம் செய்யுறதுல மன்னன். எல்லா வெவரமும் சொல்லிருக்கேன். இருந்து வாங்கிட்டுப் போயிருங்க."

சுப்பஞ் செட்டியார் கையெடுத்துக் கும்பிடறதக்கூடக் கவனிக்காம வைரக் கல்ல மாப்பிள்ள கையில வச்சுட்டு அவசரமாப் போயிட்டாரு ஆசாரி.

வேட்டிய மடிச்சுக் கட்டி ஒழுங்காத் தான் உக்காந்தான் மாப்ள உலை முன்னுக்க. தக்காளிக்குத் தங்க முலாம் பூசுன மாதிரி தளதளன்னு இருந்தான் ஆளு.

ஒரு செப்புக் கம்பிய எடுத்தான் வளைச்சான். மோதிரத்துக்கு மாதிரி அளவெடுத்தான். தங்கக் கட்டி ரெண்டரையில ஒன்றரைய மட்டும் சதுரிச்சு எடுத்து ஒரு பவுனுக்கு ஒரு குண்டுமுத்து மேனிக்கு ஒன்றரைக் குண்டுமுத்து செம்பு கலந்தான். தங்கத்தத் தட்டித்தட்டி வளைச்சு வளைச்சு அடிச்சு அளவுக்குத் தக்கன வளையம் பண்ணுனான். மோதிர வளையம் இருபத்திரண்டு கேரட்டோ முன்னபின்னவோ இருக்கலாம். ஆனா வைரத்த உக்காரவைக்கிற மேல்தட்டு இருபத்துநாலு கேரட்டாத்தான் இருக்கணும். அந்தச் சொக்கத் தங்கத்துல சுத்துளி செலுத்தி, வைரம் ஒக்கார ஒரு தங்கப் பள்ளம் இழைக்க ஆரம்பிச்சானோ இல்லையோ வீட்டுக்குள்ளருந்து ஜல்ஜல்... ஜல்ஜல்னு சாடை பேசுது ஒரு சங்கீதச் சத்தம். குழியெடுக்க ஒக்காந்தவனக் கூப்பிடுது கொலுசுச் சத்தம். செதறுது கவனம் பயலுக்கு. தங்கத்து மேல தப்பாட்டம் ஆடுது சித்துளி. வேட்டி மனசு ரெண்டையும் இறுக்கிப்புடிச்சு ஒக்காந்தான். ஜல்ஜல்... ஜல்ஜல்... திரும்பவும் கூப்பிடுதய்யா கொல்லப் பெறந்த கொலுசு. இத்து விழுந்து நொறுங்குது இறுக்கிப் புடிச்ச மனசு. போட்டது போட்டபடி கெடக்க பொண்டாட்டிகிட்ட ஓடிப்போனான் புதுமாப்பிள.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:14 am

மத்தியானச் சாப்பாடும் இல்லாத சுப்பஞ் செட்டியாரு பகவானக் கும்புட்டுப் பலியாக்கெடக்காரு. புதுமாப்ள இல்லையா...போனவன், போனவன்தான். உலை ஓட்டுல சிவப்பா எரிஞ்ச கங்கு வெள்ளை பூத்துப்போன பெறகு வெளிய வாரான் பய. நெருப்புக்கு முன்னால உக்காந்தும் வேர்க்காதவன் உள்ளபோயி வேர்த்து வாரான். அவன் ஏற்கெனவே உக்காந்தபோது உள்கால் சட்டை பாத்ததா செட்டியாருக்கு ஞாபகம் இப்ப அது இல்ல. தங்கத் தகட்டுல உருண்ட அரம் போட்டுக் கொஞ்சமாக் குழியெடுத்துட்டுப் போன பய இப்ப ஆழந் தேடிப் போயி அரக்கிறான். வைரக் கல்லோட கனபரிமாணத்துக்குத் தக்கன குழியளவு சரியான்னு வச்சு வச்சு எடுக்கிறான் வைரத்த. கல்லுப் பதிச்ச பள்ளத்துக்கும் கல்லுக்கும் மத்தியில ஒரு சன்னமான நூலு ஊடாட முடிஞ்ச அளவுக்குத்தான் சந்து இருக்கணும். இப்ப எடுத்த குழியில சந்து பெருஞ் சந்தாகிப்போச்சு. அதனால போவரை உளியெடுத்துத் தங்கத்தச் செல்லமாச் செதுக்கி எளசா ஒரு இழையெடுத்துக் கல்லுக்கு ஆதரவா அணவு பண்ணணும்னு முடிவு பண்ணுனான். சித்துளி எடுத்து வைரக் கல்லச் சுத்தித் தங்கத்துல அடிச்சுக்கிட்டே வந்தா, தங்கம் ஒரு இத்துனூண்டு தகடா எந்திருக்கும். சித்துளி எடுத்து அவன் மொதத் தட்டு தட்டவும் க்ளிங் க்ளிங் க்ளிங் க்ளிங் வந்துட்டுப் போ ராசானு வளவி கூப்பிடுது. காலால கூப்பிட்ட சத்தத்துக்கே கரைஞ்சுபோயிப் போன பய, கை கூப்பிட்ட சத்தத்துக்குப் போகாம இருப்பானா? போயிட்டான்.

"யாத்தே! திரும்பவும் போயிட்டானே" உருமால அவுத்து மடியில போட்டுப் பெருமாளக் கும்பிட்டுக் கண்ண மூடிக்கிட்டாரு சுப்பஞ் செட்டியார்.

நேரஞ் சென்டு திரும்பி வந்தப்ப வேட்டியப் பெரட்டிக் கட்டியிருந்தான் பய. மேல் சட்டையில்லாத மேனி வேறயா, அவன் தொப்பூழ்ப் பள்ளத்துக்குள்ள தலயக் குடுத்துப் பச்சக் காம்ப மட்டும் வெளிய நீட்டிக்கிட்டிருக்கு மல்லியப்பூவு ஒண்ணு.

"பொழுதிருக்கப் போகணுமப்பா. தயவு பண்ணு ராசா."

"இருங்க பெருசு இப்பக் குடுத்திடறேன்."

கல் பதிக்கிறதுல முக்கியமான வேல மசை அடிக்கிறது. கல்லச் சுத்தி இருக்கிற தங்கத்த இழைச்சு எழுப்பி, மெருகு வலை வச்சு உருட்டி ஒரு துளித் தண்ணியும் உள்ள எறங்காத அளவுக்கு நெருக்கி அணைச்சுவிடுறதுதான் மசையடிக்கிறது. புதுப் பொண்டாட்டி சோங்கு... போயிட்டுப் போயிட்டு வந்த சொகம்... கண்ணு தங்கத்துல இருந்தாலும் கவனம் அவ மடியில இருந்த மயக்கம்... எல்லாம் சேந்து சரியா மசையடிக்காம மோதிரத்தத் தூக்கிக் கையில குடுத்துட்டான் பாவிப் பய.

அவன்குடுத்த மோதிரத்தக் கும்பிட்டு வாங்கி மடியில கட்டிப் புறப்பட்டாரு சுப்பஞ் செட்டியாரு.

அந்த வைரக் கல்லு, அணவு பத்தாம லொடக்கு லொடக்கு லொடக்கு லொடக்குன்னு சன்னமாச் சத்தம் போட்டுக்கிட்டே போகுது. இது சத்தமில்ல சாமி. ரெண்டு உசுருக்கு அடிக்கிற சங்குன்னு வழியெல்லாம் சொல்லிக் கிட்டே போகுது அந்த லொடக்கு, லொடக்கு.

கெட்டி ராத்திரி. நிலா இன்னும் எழும்பல. அழுகுணி வெளிச்சம் அடிச்சிட்டிருக்குக அங்கங்க மொளைச்ச வெள்ளிக. இடைகாட்டுப் பாதை வழி விழுந்து போறாரு சுப்பஞ் செட்டியாரு.

"கடவுளே! என்னியப் பொழுதோட சேத்திரு எம் பொருளோட சேத்திரு" ஆகாயம் பாத்துப் பெருமாளுக்குப் போட்டாரு ஒரு பெருங் கும்பிடு. "அந்து கிந்து என்னிய அநாதிக் காட்ல விட்றாத"கீழ குனிஞ்சு செருப்புக்கும் போட்டாரு ஒரு சின்னக் கும்பிடு. நிலக்கோட்டையிலயிருந்து கோட்டப் பட்டி மார்க்கமா குள்ளப்புரம் புடிச்சு, மெட்டூரு சாவடிப்பட்டி வழியா சொக்கத் தேவன்பட்டி எல்லைய மிதிக்க, தலைக்கோழி கூவிருச்சு.

அக்கா தங்கச்சிக ரெண்டு பேருக்கும் ஒரு சொட்டு ஒறக்கமில்ல. சாகப்போற நாளையில அப்பன் படுற பாட்ட நெனச்சு அழுது கண்ணு வீங்கிப்போனதுல முன் ஜாம ஒறக்கமில்ல. உள் திண்ணையில வெலகுன வேட்டி தெரியாம, கால் ரெண்டையும் அகட்டிப் படுத்துக்கெடக்குற முத்துக்காமு விட்டான் பாருங்க கூரையைப் பிரிக்கிற ஒரு கொறட்ட அந்தப் பெருங்கொண்ட ஓசையில பின் ஜாமத்துல ஒறக்கமில்ல.

சுப்பஞ் செட்டியாரு செருப்புச் சத்தம் கேட்டு எந்திருச்சு உக்காந்திருச்சு மொத்த வீடும்.

"வைர மோதிரம் வந்திருச்சா?" மூஞ்சி கழுவாத முத்துக்காமு கண்ணுல ஏறித் துடிக்குது இருதயம்.

உள் பையில கையவிட்டு உசுரையே வெளியே எடுக்கிற மாதிரி, பொத்துனாப்புல எடுக்கிறாரு செட்டியாரு பொத்திக் கொண்டுவந்த மோதிரத்த.

லாந்தர் வெளக்கு வெளிச் சத்துல மோதிரம் சுத்திவச்ச கருஞ்செவப்புக் காகிதத்த அவரு லேசா உரிச்சுக் காமிக்கவும், அவர் குடுக்கிற வரைக்கும் பொறுமையில்லாத பய வெடுக்குன்னு புடிங்கிப்புட்டான் மோதிரத்த. தொட்டுத்தொட்டுப் பாக்குறான் தடவித்தடவிப் பாக்குறான் கிட்ட வச்சுப் பாக்குறான் எட்டவச்சுப் பாக்குறான். மூக்குக்கிட்டக் கொண்டாந்து மோந்து மோந்தும் பாக்குறான். மோதிர விரல்ல போட்டுப் பாத்து மூஞ்சி மலந்துபோனவன் ஒவ்வொரு விரலாப் போட்டு உருவி உருவி எடுக்கிறான்.

ஒத்த வாழப் பழத்தக் கைப்பத் துன கொரங்கு, கூட்டத்துல சேட்ட பண்ணிக் கும்மாளமடிக்குமா இல்லையா... அப்படியிருக்கு அவன் கூத்து.

"இந்த முத்துக்காமு சொன்ன சொல்லு மாற மாட்டேன் மாமா கட்றேன் தாலிய."

"குடு மாப்ள எங்கையால நானே மாட்டிவிடுறேன் மோதிரத்த." அத வாங்கி அவன் இடது கை மோதிர வெரல்ல அவரு மாட்டவும், மூக்கு மேல கோவம் தவ்விருச்சு முத்துக்காமுக்கு.

"எங்க வம்சத்துல யாரும் போட்டதில்ல வைர மோதிரம். கடைசியில குண்டி கழுவுற கையில மாட்டிக் குடியக் கெடுத்துப்புட்டியே..?" அவர மடார்னு தள்ளி மோதிரத்தப் படார்னு உருவி வலது கை மோதிர வெரல்ல அவனா மாட்டிக்கிட்டு அழகு பாக்குறான் முத்துக்காமு.

கிறுக்குப்புடிச்ச புள்ள கிலுகிலுப்பை வச்சு வெளையாடுறத நீங்க பாத்திருக்கீங் களா..? அதப் பாக்கலேன்னா நீங்க இதப் பாக்கலாம்.

இது ரெண்டாம் கல்யாணம். ஊரே வா நாடே வான்னு ஓல விட முடியுமா? பழைய சோத்த உலையில கொதிக்கவச்சுப் பந்திவச்ச கதையாப் போயிரும். அளந்து அஞ்சு பேரக் கூப்பிட்டாரு சுப்பஞ் செட்டியாரு. உருமாப் பெருமாத் தேவரு, காவக்காரச் சக்கணன், சடையத் தேவரு, அம்மைய நாயக்கரு, கடப்பாரக் கவுண்டரு அஞ்சு பேரும் மொத்தமா வந்துட்டாக கெழக்கு வெளுக்க. மத்த நாலு பேரும் மனசால பெரிய மனுசக் கணக்குல வந்து சேந்துர்றாக வயசால பெரிய மனுசக் கணக்குல சேந்துர்றாரு சடையத் தேவரு.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:14 am

மரிக்கொழுந்துக் குஞ்சம்வச்ச ரெண்டு மல்லியப்பூ மால மஞ்சக் கெழங்கு முடிஞ்ச ஒரு மஞ்சக் கயித்துத் தாலி ஓலக் கொட்டான் ஒண்ணு உப்பு ரெண்டு படி இதானய்யா கல்யாணத்துக்கு அன்னைக்கித் தேதிக்கு உண்டானது.

குறுணிக் கேப்ப மாவு அரைப் படிப் பச்சரிசிக் குறுண மூஞ்சி செத்த கத்திரிக்கா ஒரு வீச முத்திப்போன முருங்கக்கா ஆறு அரைப் படித் துவரம் பருப்பு அரைக்காப் படி பசுமாட்டு நெய்யி பந்தியில விரிக்க இருளப்பக் கோடாங்கி இணுங்கிக் கொண்டாந்த ஆமணக்கு எல பதினாறு. இதான் கல்யாணப் பந்திக்கு உண்டான கணக்கு.

கருவாச்சி, ரங்கம்மா, முக்குறுணி, மூணு பேரும் மொடாவுல தண்ணி காயவச்சுக் கேப்ப மாவ உள்ள போட்டுக் கிண்டோகிண்டுன்னு கிண்டுறாக.

"பொழுது ஏறுபொழுதாயிட்டி ருக்கப்பா எடுங்க மாலைய கட்டுங்க தாலிய."

புதுச் சேல சுத்திப் பூவும் பொட்டும் வச்சுத் தங்கச்சியக் கூட்டிட்டு வாரா அக்காகாரி. தோழிப் பொண்ணுக்குத் தொணப் பொண்ணா வாரா கருவாச்சி.

"மாத்திக்குங்க மாலைய."

மாத்திக்கிட்டாக.

"ஓலக்கொட்டான்ல இருக்கிற உப்புல வலது காலவச்சுக் கட்டப்பா தாலிய."

கட்டிட்டான் தாலிய.

ஒரு முடிச்ச அவன் போட்டான் மிச்ச ரெண்டு முடிச்ச மூத்த பொண்டாட்டி வந்து முடிஞ்சு விட்டா.

கருவாச்சிக்கு மட்டும் தெரியிற மாதிரி அவளக் கையெடுத்துக் கும்புட்டாரு சுப்பஞ் செட்டியாரு. ஒடஞ்ச கண்ணுல ஒழுகுது தண்ணி. வந்திருக்கிற ஆளுகளுக்கெல்லாம் வைர மோதிரம் தெரியட் டும்னு அரிக்காத மூக்க அடிக்கடி சொறிஞ்சு நிக்கிறான் முத்துக்காமு.

"பெரிய மனுசங்க வாங்கப்பா. வாழப் போற வாழக்குருத்துகளுக்கு விபூதி வச்சு விடுங்கப்பா." அழுக்குத் துண்டெடுத்து அழுத கண்ணத் தொடச்சுக்கிட்டே கூப்பிட்டாரு சுப்பஞ் செட்டியாரு.

உருமாப் பெருமாத் தேவரும் சக்கணனும் அம்மைய நாயக்கரும் கடப்பாரக் கவுண்டரும் விபூதி வச்சுவிட்டு, கால்ல விழுந்தவுக கையில ரெண்டு, ஒண்ணே கால், ஒண்ணுன்னு செய்மொறை செய்ய, நல்லா இருங்கன்னு உக்காந்த எடத்துலயே சொல்லிட்டு ஒதுங்கி ஓரமாகி, செருப்பு மாட்டிக் கெளம்பிட்டாரு சடையத் தேவரு.

விரிச்ச ஆமணக்கு எலையில கேப்பக் களிய அகப்பையில அள்ளி மொத்தமொத்தமா மோந்துபோடவும் அவுகவுக பருப்புச் சாம்பாருக்குப் பள்ளம் பறிச்சுக்கிட்டாக நடுவுல. கேப்பக் களிச் சூட்டுல உருகி ஓடுது உள்ள போட்ட நெய்யி. யார் யாருக்கு ஜாதகத்துல அந்த வருசம் சுக்கிர தெசைன்னு போட்ருக்கோ அவுகளுக்கு மட்டும் விழுகுது முருங்கக்காத் துண்டும், கத்திரிக்காக் கீத்தும்.

இதப் பாத்ததும் கெட்ட கிறுக்கு வந்திருச்சு முத்துக்காமுக்கு.

"கல்யாணத்துக்கே நெல்லுக் கஞ்சி ஊத்த வக்கில்லாத மாமன், பொண்ணு எதுக்குப் பெத்த பொண்ணு?" பித்துப்புடிச்ச கொரங்கு மாதிரி பிச்சு எறிஞ்சான் மாலைய. அது ஓடி விழுந்துபோச்சு களிக்கிண்டிவச்ச அடுப்புல.

"எந்திரிங்கடி போகலாம். எங்கூருக்குப் போயாச்சும் நெல்லுச் சோறு திம்போம்."

ஒத்தப் பொண்ணக் கொடுத்தன்னைக்கே மனசுக்கு ஒத்தத் தாப்பாப் போட்டுக்கிட்டேன் இப்ப ரெட்டப் பொண்ணும் குடுத்ததனால ரெட்டத் தாப்பாப் போட்டுக்கிர வேண்டியது தான். நெனச்சாரு சொல்லல. இருதயத்துக்குள்ள உடைஞ்சுபோன சில்லுகளுக்கு மத்தியில சொல்லுகளும் மாட்டிக்கிருச்சு சுப்பஞ் செட்டியாருக்கு. மால மாத்துன பொம்பளையச் சீல மாத்தவிடல. அழுத்தித் தல வாரவிடல அழுது சொகங் காணவிடல பொருந்தி உக்காந்து பொண்டாட்டிக ரெண்டு பேரையும் களி திங்கவிடல. பட்டியில மாடுகளக் கெளப்புற மாதிரி பொண்டாட்டிக ரெண்டு பேரையும் முத்துக்காமு பத்திட்டான் பத்தி.

நெத்தி நெலப்படியில இடிக்க சாமி வீட்டுக்குள்ள புகுந்த சுப்பஞ் செட்டியாரு இத்துப்போன பழைய தகரப் பொட்டியத் தெறந்தாரு. அந்தப் பொட்டியப் பாத்தாக் களவாணிப் பயலுக்கும் கண்ணீர் வந்திரும். வந்தவன் கையில ஒண்ணு ரெண்டு இருந்தா அவன் போட்டுட்டுப் போயிரு வான். அந்தப் பொட்டி அடியில கெடந்த பழைய காகிதப் பொட்டலம் ஒண்ண எடுத்துப் பிரிச்சுக்கிட்டே, "இந்தா மகளே! இதுல காதோலையும் முருகுத் தட்டுமிருக்கு. ஆத்தா செத்தன்னைக்கி ஒம் பங்குக்குன்னு அப்பன் எடுத்துவச்சது." பசுமாடு செத்த வீட்ல கன்னுக்குட்டி கதர்ற மாதிரி ஓன்னு கதறி அழுது உசுர் வத்திப்போனா பவளம் அப்பன் சீதனம் தரச் சேத்துவச்சிருந்த பழைய குடத்தையும் வாங்கிக்கிட்டா.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Tue Nov 09, 2010 3:14 am

ஏறு வெயில்ல கொட புடிச்சு முத்துக் காமு முன்னப் போக, பொண்டாட்டிக ரெண்டு பேரும் ஆளுக்கொரு சுமை சொமந்து அவன் பின்னால போக, ஊர் எல்லையில ஓடக்கரைக் கருவேல மரத்தடியில கருவாச்சி கட்டிப்புடிச்சு அழுகுறா அக்கா தங்கச்சிக ரெண்டு பேரையும் அணச்சு. "ஒரு ஊர்ல பெறந்தோம் ஒண்ணாவே வளந்தோம். எந் துன்பம் கேட்டழுக நீங்க இருந்தீக ஒங்க துன்பம் கேட்டழுக நான் இருந்தேன் இன்னைக்கித்தாண்டி நான் நாதியில்லாம நிக்கிறேன் நடுத்தெருவுல. என்னிய மறந்துராதீங்கடீ. அப்பன் இல்லாத காலத்துலயும் நம்பி வாங்கடி நம்மூருக்கு கருவாச்சி இருக்கேன் கஞ்சி ஊத்த." மூணு பொம்பளைகளுக்கும் ஒண்ணு சொன்னாப்புல ஊத்துது கண்ணீரு. அதுக்கு மேல ஒரு பேச்சும் பேச முடியல உள்கூடு வேகுது.

"என்னமோ ராச்சியத்த எழந்து வார ராணிக மாதிரி இந்த ஏங்கு ஏங்குறீக. வாங்கடி ஏலா... வாங்கடி..."

புருசன் சத்தம் விடவும் கடைசியாக் கண்ணத் தொடச்சுப் பொறப்புடப்போன பொம்பளைக, ஒத்தக் கையில அவுந்த வேட்டியப் புடிச்சுக்கிட்டே அப்பன் ஓடி வாரதப் பாத்து, நின்ட எடத்துல நின்டு போனாளுக.

"மாப்ள! கேப்பக் களி போட்டுட்டான் மாமன்னு கேவலமா நெனச்சிராதீக. வீடு போய்ச் சேந்ததும் மொத வேலையா இத அடிச்சுக் கொழம்புவச்சு ஆசையாக் குடிங்க... இந்தாங்க." கெக்கக் கெக்க கெக்கன்னு கத்துற சேவலக் கால்ல சரடு கட்டிக் கொண்டாந்து நீட்டி மாப்பிள்ளைக்குச் சீர் செய்யிறாரு மாமனாரு.

சேவலப் பாத்ததும் கல்லு சிரிக்கிற மாதிரி சிரிக்குது இறுகிப்போன முத்துக்காமு மூஞ்சி. வலது கையில புடிச்ச குடைய மாத்தாம எடது கையில சேவல வாங்கி எடை போட்ட பய, ஒரு வீசைக்கு மேல ஒண்ணே காலுக்குள்ளன்னு முணுமுணுத்துக்கிட்டான் எச்சி ஊறுற வாயில. திடீர்னு அவன் மூஞ்சி மாறுது மேலுதட்டுல பெறந்த சிரிப்பு கீழுதட்டுல செத்துப்போகுது. "சேவல் இருக்கட்டும் மாமு. செய்முறைக் காச எவகிட்டக் குடுத்த? மூத்தவகிட்டயா? இளையவகிட்டயா?"

"மூத்தவகிட்டத்தான்."

செத்துப்போன ராமர் படை சஞ்சீவி மலை வந்தவுடன எந்திரிச்ச மாதிரி, அவன் உதட்டுல செத்துக்கெடந்த சிரிப்புக்கு உசுர் வந்திருச்சு திரும்பி.

பழனிசெட்டிபட்டி வந்து சேந்தப்ப கெடை மாடுக வீடு வார நேரமாகிப் போச்சு. வீடு தெறந்து உள்ள போனவுடன தங்கச்சிய வெளக்கேத்தச் சொன்னா அக்கா. திரியில கற்பூரம் வச்சுத் திரிச்சும்விட்டா.

"இந்தாங்கடி பசி உசுர்போகுது. பச்ச நெல்லக் குத்திக் கஞ்சி காச்சுங்க. நான் சேவல அடிச்சுப் பறிச்சு உரிச்சுக் குடுக்குறேன்." சொன்ன வேகத்துல முத்துக்காமு அருவாமணையில வச்சுக் கரகரகரன்னு கழுத்தறுத்தான் சேவல. ஒழுகுன ரத்தத்தைக் கரண்டியில புடிச்சு அதுல ரெண்டு மூணு உப்புக்கல்லும் போட்டு ஓரமாவச்சான். சேவலப் பறிச்சு வாட்டி அறுத்துக் குடுத்திட்டு கரண்டியில இருந்த கோழி ரத்தத்த அவனாப் பொரிச்சு அவனாத் தின்டுபுட்டான்.

"ஒங்க அப்பன் மாதிரியே சேவலும் கொஞ்சம் முத்தலாயிருக்கு தடியம்மா. ஒரு அடுப்பு சேத்தே எரிங்க"ன்னு சொல்லிப்பிட்டு வைர மோதிரத்தப் பட்டிதொட்டி யெல்லாம் காட்டிப் பகுமானம் பண்ண மந்தைக்குக் கெளம்பிட்டான் முத்துக்காமு.

பச்ச நெல்ல ஒரல்ல கொட்டி, மாத்திமாத்தி ஒலக்க போடுறாக அக்கா தங்கச்சிக ரெண்டு பேரும், புழுங்க நெல்லா இருந்தாப் போடுபோடுன்னு போடலாம் இது பச்ச நெல்லு. ஓங்கி ஒலக்க போட்டாக் குறுணையாப் போகும்னு தாங்கி ஒலக்க போடுறாக. ஒரல்ல குத்துனத அள்ளிப் பொடச்சதுல ஒன்றரைப் படி அரிசி தேறுது. அக்கா வச்ச ஒலையில சோறு கொதிக்க... தங்கச்சி வச்ச அடுப்புல கொழம்பு கொதிக்க... வந்துட்டா னய்யா மகராசன். முக்காக் கும்பாவுக்குச் சோத்த அமுக்கி, முழுக் கும்பாவுக்கும் கொழம்ப ஊத்தி, கறியையும் சோத்தையும் பெணைஞ்சு பெணைஞ்சு சாப்பாடுகூடச் சண்ட புடிக்கிறானய்யா முத்துக்காமு. சுடு சோத்துக்கு ஒடம்பெல்லாம் வேர்த்து ஊத்துது. ஒறச்ச கொழம்புக்குக் கண்ணெல்லாம் தண்ணி வடியுது மூக்கெல்லாம் நீர் ஒழுகுது.

கால் சப்பைக் கறிய ஒரே கடியில கடைவாய்ப் பல்லுல கடிச்சு இழுத்து, சொரசொர சொரன்னு சோத்த மெல்லவும் கடுக்குன்னு கடிபட்டுச்சு பல்லுல ஒரு கல்லு.

கடிக்கிறத நிறுத்திட்டுக் கண்ண மூடிக்கிட்டு யோசிச்சான். கல்லத் துப்புனாக் கறியும் சேந்து விழுந்திரும். கறியோட சேத்துக் கடிச்ச கல்லையும் முழுங்கிப்புட்டான்.

"அடியே பொண்டுகளா! நீங்க அரிசியில கல்லக் கொட்டிச் சோறாக்கிப் போட்டாலுஞ் சரி இல்ல கல்லையே கொட்டிச் சோறாக்கிப் போட்டாலுஞ் சரி முழுசாச் செமிக்காம விடமாட்டான் இந்த முத்துக்காமு." கையக் கழுவி வாய் கொப்புளிச்சுட்டுப் பவளத்தைப் பாத்துக் கண்ணடிச்சு உத்தரவு போட்டுட்டு, உள்ள படுக்கப் போயிட்டான் முத்துக்காமு.

தன் சோத்தையும் தன் பங்குக் கறியையும் தங்கச்சியச் சாப்பிடவச்சு, சுடவச்ச பாலச் சொம்புல குடுத்துத் தாராளமாப் போயிட்டு வாடீன்னா தங்கச்சிய அக்கா. பாயப் பகிர்ந்து கொடுத்தவ பாய் இல்லாமத் தலகாணி மட்டும் போட்டுப் படுத்துக்கிட்டா வெளியில.

மனசிலயும் ஒடம்புலயும் அலுப்பு கன்னத்துல ஒழுகின கண்ணீர்ல உப்பு ஒறையுமுன்ன ஒறங்கிப்போனா.

"யக்கா! மோசம் போயிட்டோம் யக்கா!"

விடிஞ்சும் விடியுமுன்ன பழனிசெட்டி பட்டியவே பொரட்டிப்போட்ட சத்தம் கேட்டுக் கலைஞ்ச சீலையையும் ஒடைஞ்ச உசுரையும் ஒண்ணு சேத்து எந்திரிச்சு உக்காந்தா கனகம்.

"என்னாடி? அடியே என்னாடி?"

உள்ள ஓடிப்போயிப் பாத்தா யானை செத்துக்கெடக்கிற மாதிரி பாயில பொணமாக் கெடக்கான் முத்துக்காமு.

"அய்யோ அய்யோ"ன்னு சுவர்ல முட்டி முட்டி அழுகுறா பவளம். "மாமா"ன்னு பொணத்தோட மார்ல விழுந்து கதர்றா கனகம். அவன் நெத்தி தடவி, மூஞ்சி தடவி, மாரத் தழுவி, தோளத் தடவி, கையத் தடவிக் கடைசியில பாத்தா அவன் வலது கையில மோதிர மிருக்கு வைரக் கல்லக் காணோம். சோத்துல கெடந்த கல்லுன்னு நெனச்சு வைர மோதிரத்திலிருந்து உதிந்து விழுந்த வைரக் கல்லக் கடிச்சும் கடிக்காம முழுங்கிருக் கான் பாவிப்பய. அது கொடல அறுத்துக் கொன்டுபுடிச்சு.

இந்த இழவுச் சேதி போச்சோ இல்லையோ, கிழிஞ்ச சட்டைக்கு ஊசிநூல் தச்சுக்கிட்டிருந்த சுப்பஞ் செட்டியாரு "எம் மக்கா"ன்னு கத்துனாரு வளவிப் பொதி மேல சுருண்டு விழுந்து செத்தேபோனாரு.

பெறந்துவாரது மட்டும் தானய்யா ஒரே வழி சாவுக்குப் பல வழி!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum