ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 var49

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 k.sridhar

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ckavin

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 anikuttan

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 10:31 pm

First topic message reminder :

கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு வைரமுத்து


'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா 2006 டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.


[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 10:56 pm

[You must be registered and logged in to see this image.]

கோடாங்கியும் இப்ப எறங்கி வந்து கேக்குறாரு.

"யம்மா சொர்ணக்கிளி! நீ வேற எங்கயும் போயி வெளையாட்டுக் காட்டாம, ஏன் சொந்தக்காரப் பிள்ளையச் சுத்திட்டு அலையிற?

சிங்காரச் சொர்ணக்கிளி
சீதபெத்த எளையகிளி
ஒனக்குக்
குண்டுமல்லிப் பூவு வேணுமா?
கோழிக்கறிச் சாறு
வேணுமா?
வேணுங்கறத வாங்கி
வெளியேறு தாயி..."
"போறேன். அப்பப்ப வருவேன்."

"இது கெட்ட பேச்சு. இனிமே எங்க பிள்ளையத் தொடப்படாது. எங்க பிள்ள வீட்லயிருந்தாலும், வெளியிலயிருந்தாலும், ஆத்தங்கர கொளத்தங்கர வெங்காடு வெள்ளாமக்காட்டு வழி ஒத்தசத்தையில போய்வந்தாலும் இந்த மங்கையத் தொட மாட்டேன்னு சத்தியம் பண்ணி வெளியேறு. என்ன வேணுமோ, எங்க சக்திக்கு உட்பட்டதக் கேளு, தாரோம்."

"பால்பணியாரம், பனநொங்கு, சுட்ட கருவாடு, அச்சுவெல்லம், உப்புக்கண்டம், புதுச் சீல குடுப்பியா?" "ஒரு கொறையில்லாக் குடுத்திடுறோம் தாயி; வந்த வழியே போயிடுறியா?" "போயிடுறேன்."

ராத்திரியெல்லாம் உடுக்கடிச்சு ஓட்டி ஓட்டி விடியக்காலம் பேய் எறங்கிருச்சு. கைத்தாங்கலாப் புடிச்சுக் கருவாச்சிய வெளியே கூட்டியாந்து தலையில கல்லத் தூக்கி வச்சு, தலைவிரி கோலமா ஓட்டமும் நடையுமா அவள முன்னவிட்டுப் பின்னாலயே போறாக ஊராளுக.

உடுக்குச் சத்தமும் போகுது ஊரோட சேந்து.

சுடுகாட்டுப் புளியமரத்தடி வந்ததும் "எறிஞ்சிரு"ன்னு சொன்னதும் கல்ல "மடார்"ன்னு கீழ போட்டா கருவாச்சி. "கட்டையன் தலையில போட்டுருக்கணும்"ன்னான். ஒருத்தன். "ஏன் சடையத்தேவன் தலையில போட்டா "மாட்டேன்"னு சொல்லுமா கல்லு?" இது இன்னொருத்தன். கருவாச்சி குடுமியில ஒரு கத்தைய எடுத்து அதை ஆணியில ரெண்டு மூணு சுத்துச் சுத்தி, புளியமரத்துல அத நச்சு நச்சுன்னு அறஞ்சு, அடிக்குடுமிய அருவாளவச்சு அறுத்து அவள விடுதல பண்ணி "போ! திரும்பிப் பாக்காமப் போ"ன்னு ஓங்கி உத்தரவு போடுறாரு கோடாங்கி.

சொந்த புத்தியோ சுவாதீனமோ இல்லாம ஒறக்கத்துல நடந்து போறவ மாதிரி போறவள ஆளுக்கொரு பக்கமாத் தாங்கிப் புடிச்சுப் போறாக பொம்பளைக. ஊர் எல்லை வந்திருச்சு.

அங்கதான் சாங்கியப்படி சடங்கு பண்ணியாகணும்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 10:56 pm

ஏழு எருக்கில சாணிச்சட்டி பீத்தமொறம் பீத்த செருப்பு பீத்த வெளக்கமாறு... இதுகளயெல்லாம் கருவாச்சி தலைய மூணு சுத்திச் சுத்தி எறிஞ்சுட்டு ஒலக்கையப் போட்டாக அவ குறுக்க. "தாண்டி வாடியம்மா; தாண்டு." அவஒலக்கையத் தாண்டுனா. அஞ்சு பொம்பளைக கூடி அஞ்சு பானத் தண்ணிய அவ தலையில சொதசொத சொதன்னு ஊத்துனாக. அந்த ஊர்ல அவளுக்கு மட்டும் மழ பேஞ்சது மாதிரி நனஞ்சு நடந்து போறா கருவாச்சி.

வெந்நி கொதிக்கவிட்டு வேப்பங்கொழையும் மஞ்சளும் போட்டுத் தலைக்குத் தண்ணி ஊத்தி, பழைய சீலய வச்சுக் கரகரகரன்னு அவ தலையத் தொவட்டிக்கிட்டே பெரியமூக்கி பொலம்ப, பச்சரிசிய ஒரல்ல போட்டு மாவிடிச்சுக்கிட்டிருந்தாக வைத்தியச்சியும் பவளமும். இடிச்ச மாவ நல்லா அவிச்செடுத்து வெள்ளத்துணியில கட்டி வேது குடுக்க, எங்க தொட்டாலும் வலிக்குதுன்னு கத்துறா கருவாச்சி. இவ ஆடின பேயாட்டம் பாதி; இவமேல இவ புருசன் ஆடின பேயாட்டம் பாதி. எப்படித்தான் தாங்கும் அந்த எளவாழத்தண்டு?

வேதுவைக்க அவிச்ச மாவுலயே புட்டுச்செஞ்சு அதுல நல்லெண் ணெய் ஊத்திக் கருப்பட்டித்தூளு போட்டுப் பெணஞ்சு பெணஞ்சு ஊட்றா பெரியமூக்கி மகளுக்கு. ஒரு வாய் ரெண்டு வாய் தின்னதும் தட்டத் தட்டிவிட்டுட்டுப் பாயில போயி விழுந்து சும்மாடு மாதிரி சுருண்டு படுத்துக்கிட்டா கருவாச்சி.

மகளுக்கு அடிச்சு ஊத்த "வெடக் கோழி இருக்கா வெடக் கோழி"ன்னு தேடி நடந்துபோறா பெரியமூக்கி தெருத் தெருவா.

"யப்பே! பஞ்சாயத்துக் கெடு முடிய இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு. நம்ம கூட வம்பிழுக்க அருவா கம்போட வாங்கடான்னு பெரியமூக்கி மொதலக்கம்பட்டிக்கு ஆள் சொல்லி விட்ருக்காளாம். அந்தூருக்காரங்க இந்தூருக்கு வந்து கம்பு சுத்தி வெள்ள வேட்டியோட வீடு போய்ச் சேரவா? நான் சும்மா இருப்பனா?" "நீ செய்யிறதச் செஞ்சுக்கடா மகனே! ஆனா, எதுலயும் ஒரு நிதானம் இருக்கட்டும்."

தகப்பன்ங்கிட்ட நெலமையச் சொல்லி யோசனையும் கேட்டுக்கிட்ட கட்டையன் பன்னியான்பேரன், சலம்பல்பாண்டி, ஒலக்கையன் மூணு பேரையும் கூப்பிட்டான். ஆடுமாடுக அடங்கி, சனங்கள்ளாம் ஒறங்கி, காவல் நாய்கூட கடைசியாக் கொலச்சிட்டு கண்ணு மூடப்போன பின் சாமத்துல, பஞ்சாயத்து நடக்கப்போற அரசமரத்தடி மந்தையில அங்கங்க குழியத் தோண்டி, வெட்டருவா வேல்கம்ப உள்ளவச்சுப் பொதச்சு, மண்ணத் தள்ளி மறைக்கிறாங்க கட்டையன் கையாளுக.

அரசங்கௌ இடுக்கு வழியா இதப் பாத்துக்கிட்டேயிருந்து பயந்து தேயுது நெலா!

விடிஞ்சா பஞ்சாயத்து.

ஊரே ஒறங்குது.

எனக்கும் தூக்கம் வருதுன்னு சந்துபொந்துகள்ல புகுந்து சத்தமும் ஒறங்கிப்போச்சு.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 10:57 pm

[You must be registered and logged in to see this image.]


முழிச்சுக்கிட்டிருக்கிறது காடாவெளக்கும் கருவாச்சியும் மட்டும்தான்.

என்னமோ சோட்டுக்காரிகிட்ட ஒப்பிக்கிற மாதிரி காடாவெளக்குகூடப் பேசுறா கருவாச்சி: "எம் பொழப்பு ஏன் இப்படி ஆகிப்போச்சு காடாவெளக்கே? என்ன குத்தத்துக்கு நான் இப்படிக் குத்துயிரும் கொல உயிருமா கெடக்கேன்? என்னா பாவம் பண்ணேன்? எவ சோத்துல மண்ணள்ளிப் போட்டேன்? கறிய மட்டும் எடுத்துக்கிட்டு எலும்ப நாய் துப்புற மாதிரி துப்பிட்டானே என்னிய. செத்துப்போடீன்னு சொன்னவன்கிட்ட எப்படிச் சேந்து வாழ முடியும்? பஞ்சாயத்துல எப்படியும் அத்துவிட்றப் போறாக. அதுக்குப் பெறகு என்ன பண்ணலாம்?

கல்யாணச் சேலயக் கழுத்துல சுத்தி நான்டுக்கிட்டுச் செத்துப் போகலாம். இல்ல, அரளி வெதைய அரைச்சுக் குடிச்சுட்டுப் பழைய சீலயப் பொத்திப் படுத்துக்கிரலாம். பொம்பளைக பொதுவா இதத்தான செய்வாக! அத நானும் செய்யணுமா? செய்ய மாட்டேன் காடாவெளக்கே. ஒத்தத் திரிய வச்சுக்கிட்டு ஊதக்காத்த எதுத்து நிக்கிற நீயி. சீமத்தண்ணி கடைசிச் சொட்டு வத்திப்போனாலும் திரியில ஊறியிருக்கிற மிச்சத்த வச்சு உசுர் புடிச்சு நிக்கப் பாக்குற. ஒனக்குக் கொறஞ்சவளா நானு? ஒவ்வொரு பெறவிக்கும் ஒரு காரணமிருக்கா இல்லையா? எம் பெறவிக்கு என்ன காரணம்னு தெரிஞ்சுட்டுப் போயிடறேன். சாவு என்னைக்கோ ஒரு நாளைக்கு நம்மளத் தேடி வரத்தான் போவுது. அது வாரப்ப வரட்டும் பாத்திருவோம்; "வா"ன்னு கேட்டிருவோம். இதுவரைக்கும் கொழகொழன்னு இருந்த மனசு, வாங்குன அடியில இப்ப இறுகிக் கெடக்கு; எல்லாம் நல்லதுக்குத்தான். வரணுங்கிற துன்பம் வந்துதான தீரும். ஒல கொதிக்காம அரிசி வேகுமா? ஒவ்வொரு பொம்பள பொழப்பும் ஒரு ஒலதான். இப்ப என் ஒல கொதிக்குது; கொதிக்கட்டும்."

அவ ஒரு முடிவுக்கு வந்துட்டா.

இப்பக் காடாவெளக்கும் ஒறங்கிப் போச்சு; அவ மட்டும் முழிச்சிருக்கா.

அரச மரத்தடி மந்தையில ஊரே கூடி ஒக்காந்திருக்கு. கருவாச்சி பொழப்பு என்னாகப் போகுதோங்கிற கவலையும், பஞ்சாயத்துல கலகம் வந்து ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆகிப்போயிரு மோங்கிற பதட்டமும் திட்டுத்திட்டாத் தெரியுது ஊர்க்காரக மூஞ்சியில.

உருமாப்பெருமாத்தேவரு பெருங்குரலெடுத்துப் பேசுறாரு. "இந்தா பாரப்பா கட்டையா... சொன்னதையே சொல்லிக்கிட்டிருக்காம நல்ல முடிவுக்கு வாப்பா. ஆம்பளைக்கு அருங்கேடு நெனச்சாலும் பொம்பளையப் பொறம்பேசப்படாதப்பா. நாப்பது வருசத்துக்கப்புறம் சேந்த குடும்பம் சேந்ததாவே இருக்கட்டும். ஊரே ஒண்ணுகூடிச் சொல்றோம்... வச்சுப் பொழச்சுக்கப்பா அவள."

உட்கார்ந்திருந்த கட்டையன் விசுக்குன்னு எந்திரிச்சான்.

"பெருசுக கூடி ஒரு தீர்ப்பச் சொல்லிட்டு நீங்க பாட்டுக்குப் போயிருவீக. வச்சு வாழப்போறது நானு. ஒரு ஆணுக்கும் பொண்ணுக்கும் கல்யாணம் எதுக்கு? வீடு வெளங்க. வாரிசு உண்டாக. இந்த ரெண்டுக்கும் லாயக்குப்பட மாட்டா இந்த ரெண்டுங்கெட்ட சிறுக்கி. வேணாம்; வெலக்கிவிட்ருங்க."


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 10:58 pm

"இல்லாதது பொல்லாததச் சொல்லி எம் பிள்ள பொழப்பக் கெடுத்திர வேணாம்னு சொல்லுங்கப்பா. அந்தாளு சொல்றத நம்பாதிக. தங்கத்தட்டு மாதிரி போயிச் சல்லடையாத் திரும்பி வந்திருக்கா என் பொண்ணு." முந்தானைய ஒதறி இழுத்து இடுப்புல செருகிக்கிட்டு, தரையவிட்டுப் பந்து மாதிரி எந்திரிச்சு அழுது பேசுறா பெரியமூக்கி. "ஆமா, பெரிய சீமையில இல்லாத பொண்ணு. மொளகு ரசம் வையிடின்னா எலிப் புழுக்கைய அள்ளிப் போட்டு இதுதான் மொளகுங்குற பொண்ணு; "போ"ன்னா போயிர வேண்டியது தான..."

"ஏய்! "வா"ன்னா வாரதுக்கும், "போ"ன்னா போறதுக்கும் எங்க ஐத்த மக என்ன அவுசாரியாடா? பொண்ணு கேட்டு வந்தது நீதான?" மொதலக்கம் பட்டியிலிருந்து பஞ்சாயத்துக்கு வந்திருந்த பெரியமூக்கி அண்ணன் மகனுங்க நாலு பேரும் ஒண்ணு சொன்னாப்புல எந்திரிச்சுட்டானுக.

"தாட் பூட்"டுன்னு அவன்ங்க தவ்வவும், பல்லக் கடிச்சுக்கிட்டுக் கட்டையன் லேசாத் திரும்பிப் பாக்கிறான். ஆயுதம் பொதைச்ச எடத்துல அடையாளம் வச்சு ஒக்காந்திருந்த பன்னியான் பேரன், ஒலக்கையன், சலம்பல்பாண்டி மூணு பேரும் லேசாப் பள்ளம் பறிக்கிறாங்க.

"வாடா போடான்னு பேசுனா ஏடாகூடமாயிப் போயிருமப்பா. நல்லது கெட்டது பேசத்தான் நாங்க இருக்கம்ல.... ஒக்காருங்க" காவக்காரச் சக்கணன் கையமத்தவும், தோள்ல போட்ட துண்டத் தரையில போட்டு ஒக்காந்துட்டானுங்க நாலு பேரும்.

"ஏம்ப்பா... சடையத்தேவா! நீ பெரிய மனுசன்... நீ என்ன சொல்ற?"'

நடுவெரலையும் கட்ட வெரலையும் ஒண்ணா வாயில வச்சு அழுத்தி, ரெண்டுக்கும் மத்தியில இருக்கிற இடைவெளியில "புளுச்"சுன்னு எச்சி துப்பி, எச்சி விழுந்த எடத்த எடது கையால மண்ணப் போட்டு மூடிக்கிட்டே சடையத்தேவர் சொன்னாரு...

"தவள தண்ணிக்கிழுக்குது, ஓந்தி மேட்டுக்கிழுக்குது... பிரிச்சுவிட்ருங்கப்பா." "சடையத்தேவா! நீ பிள்ளைக பொழப்ப நெனைக்கல. ஏதோ ஒரு மாசு இருக்கு ஒன் மனசுல. அது பரம்பரைக்கு நல்லதில்லப்பா. கடைசியாக் கருவாச்சியையும் ஒரு வார்த்தை கேட்ருவோம்... கூப்பிடுங்கப்பா அந்தப் பிள்ளைய"ன்னாரு உருமாப்பெருமாத்தேவரு.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 10:59 pm

[You must be registered and logged in to see this image.]
வந்தா கருவாச்சி. முன்ன இருந்த பயமில்ல அவளுக்கு. கண்ணுல ஒரு ஒளி இருக்கு. கையெடுத்துக் கும்பிட்டா. "யம்மா கருவாச்சி! ஒம் புருசன் ஒம் மேல குத்தஞ் சொல்லி, 'வேணாம்... வெட்டிவிட்ருங்க'ன்னு பஞ்சாயத்துல பிராது குடுத் திருக்கான்; ஒம் பக்க நியாயத்த நீ சொல்லு தாயி."

அவ ஒரு பேச்சும் பேசாம அரசமரத்துல அணில் பாத்துக்கிட்டிருந்தா. நான் வேற என் வாலு வேறன்னு ஒடம்பு அசங்காம வால மட்டும் என்னா ஆட்டு ஆட்டுது அந்த அணிலு.

"புசுபுசுபுசு"ன்னு என்னா அழகு அந்த வாலு? யான காது கொடைய ணும்னா அணில் வாலுதான் லாயக்கு.

அவ என்ன சொல்லப் போறானு சபையே அவ வாயப் பாத்திருக்க, மரம் ஏறி அணில் வாலத் தொட்டுத் தரையில குதிக் குற அவ மனசு நிதானத்துக்கு வருது.

"எம் மேல ஒரு குத்தமும் இல்லீங்க. இது பஞ்சாயத் துக்கும் தெரியும்; நாங் கும்புடற சாமிக்குந் தெரியும். மத்தபடி கடவுளும் ஊரும் என்ன தீர்ப்புச் சொல்லுதோ கட்டுப்படறேன்."

"சாமி அருள்வாக்குச் சொல்ற மாதிரி பேசுறாய்யா கருவாச்சி. இந்த தெய்வச்செலய வச்சுப் பொழைக்காதவனும் ஒரு மனுசனா?"

"எப்பவோ யாரோ செஞ்ச பாவத்துக்கு இப்பப் பழிவாங்கறானப்பா இந்தப் பச்ச மண்ண."

பஞ்சாயத்தே சோகங்கட்டிக் கெடக்கு.

"ஏம்மா பெரியமூக்கி... பஞ்சாயத்து எப்பவும் பிரிக்க நெனைக்காது. சேத்துவிடத்தான் நெனைக்கும். ஆனா, அந்தப் பயலோ அத்துவிடுங்க ஆளவிடுங்கன்னு புடிச்ச புடியிலயே நிக்கிறான். நீ என்னாத்தா சொல்ற?" விக்கி விக்கி அழுதா பெரியமூக்கி. சல்லுன்னு மூக்குச் சிந்தித் தரையில எறிஞ்சிட்டு முந்தானையில மூக்கத் தொடச்சுக்கிட்டே சொல்றா:

"பிள்ள சேந்து வாழணுமேன்னு பெத்த வயிறு பத்தி எரியுது. ஆனா அனுப்பிவச்சா எம் பிள்ள என்னதில்லேன்னு போயிருமோன்னு பயமா வேற கெடக்கு. இதுக்கு மேல என்ன சொல்லப்போறேன்? பஞ்சாயத்துக்குப் பாத்தியப்படுறேன்."

அம்பலக்கல்லுல ஒக்காந்திருந்தபஞ்சாயத்துப் பெருசுக பெரிசா ரெண்டு மூணு பெருமூச்சு விட்டாக. யோசிச்சு ஒதடு பிதுக்கி தலைய அங்கிட்டும் இங்கிட்டுமா ஆட்டிக்கிட்டாக. பெறகு ஒருத்தருக்கொருத்தர் காது கடிச்சுக் கிட்டாக. கடைசியா அடித் தொண்டையில ஒரு கனைப்புக் கனைச்சாரு உருமாப் பெருமாத்தேவரு. அந்தக் கனைப்பு ஒண்ணும் தொண்டையில பிசிறு போறதுக்கில்ல; சலசலன்னு சலம்பல் பண்ணிக்கிட்டிருக்கிற சபையைத் தம் பக்கம் திருப்புற ஒரு சாடை.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 10:59 pm

"சரி.. வேற வழியில்ல. நெஞ்சுல கல்லக் கட்டிக்கிட்டுத்தான் தீர்ப்புச் சொல்றோம். கட்டையன் கருவாச்சி ஒறவத் தீத்துவிட்டுர் றோம். இன்னிக்கிருந்து அவுக ரெண்டு பேரும் புருசன் பொண்டாட்டி இல்ல. ரெண்டு பேருக்கும் சேர வேண்டிய பொருள ரெண்டு பேரும் வாங்கிக்கிட்டு அவுகவுக பொழப்ப அவுகவுக பாத்துக்க வேண்டியது.பிரிஞ்சாலும் நல்லாருங்க."

தீர்ப்புச் சொன்ன உருமாப் பெருமாத்தேவரு கொரலு கடைசியாக் கரகரத்துப்போச்சு. ஊருக்கு அவரப் போல நல்ல மனுசங்க நாலு பேரு இருப்பதனாலதான் கடந்துபோற மேகம் அந்த ஊரையும் மறக்காம நனைச்சுட்டுப் போகுது.

அதுவரைக்கும் கட்டிவச்சிருந்த கண்ணீரு கயித்த அத்திருச்சு. "கே"ன்னு அழுகையில கூடிட்டா பெரியமூக்கி. "எம்பொழப்பு பாதியில போச்சு... எம் பொண்ணு பொழப்பு ஆதியிலயே போச்சே..."

"யம்மா தங்கச்சி பெரியமூக்கி! அழுகைய நிறுத்து தாயி. இது ஊருக்கு ஊரு உண்டானதுதான.

பத்துக்கு ரெண்டு பழுதாகறதில்லயா? வேணாம்னு போறவன் விக்கிரமாதித்த மகராசனாயிருந்தாலும் நமக்கு எதுக்கு? போனாப் போயிட்டுப் போறான். நல்லது கெட்டதுக்கு நாங்கள்லாம் இல்லையா. அடுத்து ஆக வேண்டியதப் பாரு." வளவிக்காரச் சுப்பஞ்செட்டியாரு பெரிய மூக்கியத் தேத்தித் தெளிய வைக்கிறாரு.

தகப்பன் சடையத்தேவரும் மகன் கட்டையனும் ஒருத்தர ஒருத்தர் பார்த்து, மீசைக்குள்ள பெரிசு சிரிக்க, செயிச்சனா இல்லையான்னு இடுங்குன கண்ணுல அவன் ஒரு பார்வ பாக்க, ஊராளுக இந்த நாடகத்தப் பாக்கிறதுக்குள்ள தலைய வேற பக்கம் திருப்பிக்கிட்டாக ரெண்டு பேரும்.

இங்க நடக்கிற கூத்துக்கும் தனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லேங்கிற மாதிரி கண்ணச் சிமிட்டாம ஒக்காந்திருக்கா கருவாச்சி.

"சரி... அவரவர் பொருளு அவரவருக்குப் போய்ச் சேந்துட்டாப் பஞ்சாயத்து முடிஞ்சிருமப்பா.

அதப் பேசி முடிங்க மொதல்ல." அம்மைய நாயக்கரு சத்தம் போட்டுச் சொன்னதும் கலையப் போன பஞ்சாயத்து ஒக்காந்திருச்சு திரும்பவும்.

"மொதல்ல பிராது குடுத்தவன் கட்டையனா இருப்பதனால, பொருளத் திருப்பித் தர வேண்டிய பொறுப்பு அவனுக்குத்தான். பெரியமூக்கி, நீ சொல்லாத்தா. நீ என்னென்ன சீர் செஞ்சயோ... சொல்லித் திருப்பி வாங்கிக்க."


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:00 pm

அதுவரைக்கும் பொலம்பிக் கிட்டிருந்த பெரியமூக்கி வெவரமாயிட்டா. அழுகையைத் தூக்கி அங்கிட்டு வச்சுட்டுச் சீர்செஞ்ச பொருளையெல்லாம் மனக்கணக்கு லேயே ஓட்டிப் பாத்து ஒப்பிக்கிறா.

ஒரல் ஒண்ணு...
ஒலக்கை ஒண்ணு...
ஒரல் மூடி ஒண்ணு...
அண்டா ஒண்ணு...
தண்ணிக்கொடம் ரெண்டு...
குண்டாச்சட்டி ஒண்ணு...
கும்பா ஒண்ணு...
ஒல வட்டி ரெண்டு...
அம்மி, திருகை, அருவாமண
ஒவ்வொண்ணு...
காமாச்சி வெளக்கொண்ணு...
சொளகு ஒண்ணு...
பாய் ஒண்ணு, தலகாணி ரெண்டு...

வெளக்கமாறும் வாங்கிவச்சேன். ஆனா, அது சீர்ல சேர்றதில்ல"ன்னு சத்தம் போட்டுச் சொன்னவ, "இனிமேதான் குடுக்கணும்"'ன்னு கீழ்க்கொரல்ல முனகிக்கிட்டா.

"கேட்டுக்கிட்டியாப்பா. செஞ்ச சீர் எல்லாம் ஒப்படைச்சிரு பஞ்சாயத்துல." காவக்காரச் சக்கணன் உத்தரவு போட்டாரு கட்டையனுக்கு.

"ஏன் ஒப்படைக்கணும்? கல்யாணச் செலவு நான்தான பண்ணியிருக்கேன். கழிச்சிட்டுப்போறேன்." கட்டையன் எகத்தாளமாகச் சொல்லவும், மொதலக்கம்பட்டி ஆளுக கையக் கால ஒதறி எந்திரிச்சுட்டாக.

"அவ "வாழ்ந்த பங்கு" கேட்டாக் குடுக்கணுமா இல்லையா, அதுல கழிச்சிட்டுப் போ. பொழுதிருக்கப் பொருள் வந்து சேராட்டிப் பொழுதுசாய நீ இருக்க மாட்ட."


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:00 pm

"யாரப் பாத்துடா கைநீட்டிப் பேசுறீக... ஆடு களவாணிப் பயலுகளா. ஒழுங்கு மரியாதையா ஒக்காரல, ஒங்க சுடுகாடு மொதலக்கம்பட்டியில இல்ல; சொக்கத்தேவன் பட்டியிலடி."

சலம்பல் பாண்டியும் ஒலக்கையனும் வேட்டிய வரிஞ்சுகட்டி வெரசு காட்றாங்க. பன்னியான்பேரன் பாவம்... சாராய சந்தோஷத்துல, அருவாப் பொதைச்ச எடம் அடையாளம் தெரியாம மேலயும் கீழயும் முழிக்கிறான்.

அம்பலக்கல்லுல அதுவரைக்கும் ஒக்காந்திருந்த காவக்காரச் சக்கணன் படக்குன்னு எந்திருச்சி பூண்போட்ட காவக்கம்ப அம்பலக்கல்லுல நாலு தட்டுத் தட்டி "ஏலே வெங்கம்பயகளா!

பஞ்சாயத்த நீங்க நடத்துங்கடா, நாங்க வெளியேறிக்கிர்றோம்"னு ஒரு சத்தம் விட்டு அத்தன பேரையும் அமத்திப்பிட்டு, "சீர் செஞ்ச பொருளைச் சேத்துருங்கப்பா"ன்னு முடிவும் சொன்னாரு.

அம்மிக்குழவியிலிருந்து அருவாமணை வரைக்கும் எல்லாம் வந்து எறங்கிருச்சு பஞ்சாயத்துல.

"யாத்தா! எல்லாம் எண்ணிப் பாத்துக்க. நாளைக்கி நாங்க இருக்க மாட்டோம். அப்பறம் அதக் காணோம் இதக் காணோம்னு இங்க வந்து பொலம்புனா அரச மரம் வாங்கித் தராது. சரி பாத்துக்க..."

"எம் பொண்ணே பொழப்பத்து வந்தபெறகு எந்தப் பொருள் வந்தா என்னா... வராட்டி என்னா..?" பெரியமூக்கி பெரும்போக்காப் பேசிட்டாலும், அரப் பார்வையிலே ஒரு அலசு அலசி ஒல வட்டி ரெண்டுல ஒண்ணக் காணோம்னு கண்டுபுடிச்சுட்டா.

"ஒல வட்டி ரெண்டு குடுத்தேன். ஒண்ணக் காணோம். போனாப்போகுது. அண்ணந் தானே... அதுலயே கஞ்சி குடிக்கட்டும்; இல்ல... அத அடகு வச்சுக் கஞ்சி குடிச்சுக்கிரட்டும்."

அந்தச் சொல்லோட சூடு தாங்கமாட்டாத சடையத்தேவருக்கு மீசைக்கு மேல ரோசம் பொத்துக்கிட்டு வந்திருச்சு.

"ஏலே... எங்கடா அந்த ஒல வட்டி? நாய் சம்பாரிச்ச பொருள் நம்மளுக்கெதுக்கு?


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:00 pm

எறிஞ்சிருங்கடா." செத்தவிடத்துல அந்த ஒல வட்டியும் வந்து சேந்திருச்சு.

கடைசிக் கட்டத்துக்கு வந்து நிக்கிது பஞ்சாயத்து.

தொண்டைய ஒரு செருமிச் செருமி சத்தமும் கொஞ்சங் கூட்டி கட்டையன் ஆரம்பிக் கிறான் வெவகாரத்த.

"அவுக பொருள அவுகளுக்குக் குடுத்திட் டோமில்ல; எங்க பொருளு எங்களுக்கு வந்திரணுமில்ல?"

"நியாயந்தானப்பா; ஒம் பொருள் ஒனக்கு வந்திரணும்."

"அப்பக் கேட்டு வாங்கிக் குடுத்திருங்க."

"எத?"

"தாலிச் சரட."

தாலிச் சரடு வாங்குறது தான் தீக்கிற பஞ்சாயத்துல கடைசிச் சம்பவம். அது முடிஞ்சா எல்லாம் முடிஞ்சு போகும்.

பஞ்சாயத்தவிட்டுப் பொம்பளையக் கொஞ்சம் தள்ளி நிறுத்தி, மஞ்சத் தண்ணி தெளிச்சுத் தாலிச் சரட வாங்கிப் புருசன்ட்ட ஒப்படைச்சிருவாரு நாட்டாம. அந்த நிமிசத்துலயிருந்து அவனுக்கும் அவளுக்கும் ஒட்டுமில்ல ஒறவுமில் லன்னு ஆயிரும்.

தாலிச் சரடு வாங்குற போது பல பெருசுக இந்தப் பாவம் நம்மளச் சேர வேணாம்னு சொல்லாமக் கொள்ளாமப் போயிரும்ங்க.

தாலிச் சரடுன்னா வெறும் கயிறா? ஒரு ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் மத்தியில ஊடாடுற உயிரு. அவுக மதிப்பு அப்பிடி.

"சரி... சரி! யம்மா பிள்ள கருவாச்சி, கட்டையனுக்கும் ஒனக்கும் இல்லேன்னு ஆகிப்போச்சு.

நம்ம சம்பிரதாயப்படி தாலிச் சரட்டக் குடுத்திரு தாயி."

காஞ்சுகெடந்த அரசங்குச்சிய வச்சுத் தரையில கோலம் கிழிச்சுக்கிட்டிருந்த கருவாச்சி இந்தச் சொல்லக் கேட்டாளோ இல்லையோ, தீப்புடிச்ச மாதிரி குபீர்னு எந்திரிச்சு நின்னா.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:01 pm

"பஞ்சாயத்துல ஒப்படச்ச பொருள் எது வேணுமோ எடுத்துக்கிருங்க இல்ல, எல்லாமே வேணுமா எடுத்துக் குடுத்துருங்க. என் உசுரே போனாலும் தாலிச் சரடு மட்டும் தரமாட்டேன்;

தாலிச் சரடு வேணுங்கிற ஆம்பள என் தலைய அறுத்தெறிஞ்சிட்டு அப்பறம் தாலியெடுத்திட்டுப் போகட்டும்."

இப்படி ஒரு குண்டத் தூக்கிப் போடுவா கருவாச்சினு யாரும் எதிர்பார்க்கல; கருவாச்சியா இப்படிப் பேசுறான்னு நம்பவும் இல்ல.

ஒரு ஈ காக்கா பேசல.

"ஏண்டி, தாலி கழுத்தில கெடந்தா என்னைக்கிருந்தாலும் ஒன் புருசன் ஒன் கவுட்டுக்குள்ள வந்திருவான்னு பாக்கிறியா?" கத்துறான் கட்டையன்.

"இல்ல. இந்த சென்மத்துல நீ எனக்குப் புருசனுமில்ல; இந்த பூமியில பெறந்த எந்த ஆம்பளையும் எனக்குப் புருசனாகப் போறதுமில்ல.

"பொழச்சிருவியாடி இந்த பூமியில... ஆம்பள தொண இல்லாம?"

"பொழைக்கிறேன்... பொழைச்சுக் காமிக்கிறேன்."

"பந்தயம் போடுறியா? செயிச்சுருவியா?"

"செயிக்கிறேனோ இல்லையோ.. நான் தோக்க மாட்டேன் மாமா."

ஊரே அருளேறி நிக்கிது. ஆம்பளைக பொம்பளைக கண்ணுல கண்ணீரா முட்டுது. "அக்காம விட மாட்டேன்"னு கருவாச்சி மேல பாயப்போன கட்டையன நாலு எளந்தாரிக இழுத்துப் புடிக்க, "அத்துப்பாரு"'ன்னு மொதலக்கம்பட்டி ஆளுக அவளச் சுத்தி அண கட்டி நிக்க... அமளி துமளியாகுது பஞ்சாயத்து.

தாலிச் சரடு தர முடியாதுங்கிற பொம்பளைய தந்தே ஆகணும்னு சொல்லப் பஞ்சாயத்துக்கு அதிகார மில்லன்னு தீர்ப்புச் சொல்லிக் கலையுது பஞ்சாயத்து.

மாரடிச்சு அழுதுபோற பெரியமூக்கி பின்னாலயே கருவாச்சியும் நடந்து போறா நெஞ்சுல தாலியோட... நெஞ்சுக்கூட்ல வைராக்கியத்தோட!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:03 pm

[You must be registered and logged in to see this image.]


அத்துவிட்டுட்டு வந்த வீடு இருக்கே... அதுவும் ஒரு வகையில எழவு வீடுதான்.
வித்தியாசம் என்னான்னா
அங்க ஒடம்பு செத்துப்போகுது; இங்க ஒறவு செத்துப்போகுது.
மத்தபடி ஆள் செத்த வீட்டுக்கு உண்டான அத்தன மரியாதைகளையும் அத்துவிட்ட வீட்டுக்கும்
ஓடிவந்து செய்வாக ஊர் ஆளுக.
பசுமாட்டுச் சாணி கரைச்சுப் "பசேல்"னு வாசல் மொழுகி, கருவாச்சி தலையில "சல்லுச்சல்லு"ன்னு
மஞ்சத் தண்ணி அள்ளித் தெளிச்சு, மகளக் கட்டிப்புடிச்சு "ஊரே கேளு... நாடே கேளு"ன்னு
நெஞ்சு வெடிச்சு விழுக ஒப்பாரியில கூடிட்டா பெரியமூக்கி.

"கருவாச்சி கூந்தலுக்குக்
கைநெறையப்
பூவுவச்சேன்
தலப்பூவு வைக்கயில
தலையெழுத்த அறியலையே

தாலிச் சரடிருக்கச்
சரஞ்சரமாப் பூவிருக்கக்
கட்டுனவன்
வாழ்ந்திருக்க
கைம்பெண்ணா நிக்கிறாளே"

மார் மேல ஒரு அடி... மக மேல ஒரு அடின்னு மாத்திமாத்தி அடிச்சுப் பெரியமூக்கி கத்திக் கதறவும் ஊர்ப் பொம்பளைக கூடித் தாய் மகளைத் தனித் தனியாப் பிரிச்சுவிட்டுத் தெம்புதெறம் சொல்றாக.

"ஏய் விடுடி! என்னமோ பிள்ள சாகக் குடுத்தவ மாதிரி ஒப்புச் சொல்லி அழகுறவ. ஏதோ நீ செஞ்ச புண்ணியம் இந்தளவுல ஒம்பிள்ள வீடு வந்து சேந்துச்சு. இன்னம் மூணு மாசமோ ஆறு மாசமோ அந்த கொலகாரப் பாவியோட குடும்பம் நடத்தியிருந்தா கருவாச்சியக் கண்ல கண்டிருக்க மாட்ட. அவ கட்ன சீலயத்தான் பாத்திருப்ப. 'பத்தே நாள்ல விட்ருச்சு ஏழரை நாடு'ன்னு குலதெய்வத்தக் கும்பிட்டுத் தேங்கா ஒடைக்கறத விட்டுட்டு அழுக என்ன அழுக?"

"இழுத்துவச்சுக் கழுத்தறுத்துப்புட் டானே. இந்தூர்ல இதுக்கு அங்கிட்டு எப்பிடித்தான் பொழைக்கப்போறமோ... கட்டித் தீத்தவன் காலடிக்குள்ள."

"ஈ எறும்பு பொழைக்குது... நாய் நரி பொழைக்குது... நீயும் கருவாச்சியும் பொழைக்க முடியாதா? கண்ணத் தொடச்சுக்கிட்டுக் காரியத்தப் பாராத்தா" உரிச்ச பலாப்பழம் மாதிரி சடையாத் தோல் தொங்கிப்போன மண்டையன் கெழவி கணீர்னு பேசிப்பிட்டா.

துண்டா ஓதுனாத்தான் மந்திரமா? மாசுமருவில்லாத நல்ல மனசிலயிருந்து வயசான நாக்கு வழியா வந்துவிழுகுதா இல்லையா அதுவும் மந்திரம்தான்.

பஞ்சாயத்துல ஒப்படச்ச பொருளைஎல்லாம்எண்ணிக் கொண்டாந்து எறக்கிட்டு, சருவச்சட்டியில குடுத்த மோர ஆளுக்கொரு சொம்பு அண்ணாக்கக் குடிச்சிட்டு, 'போய்ட்டு வாரோம்'னு சொல்லாமப் போய்ட்டாக மொதலக்கம்பட்டி ஆளுக.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:03 pm

தீத்த வீட்லயும் எழவு வீட்லயும், ஒல வைக்கிறதில்ல; ஊரே சாப்பாடு குடுக்கும் அந்த வீட்டுக்கு.

சோளச் சோறு, கேப்பக் களி, கம்பங் கஞ்சி, கத்திரிக்காக் கொழம்பு, கருவாட்டுச் சாறு, அவிச்ச காணப் பயறுன்னு ஈயச்சட்டியில, தூக்குவாளியில, பித்தளக் கும்பாவுல வந்து குமுஞ்சுபோச்சு பெரிய மூக்கி வீட்டுல. கொண்ண வாயனச் சேத்து மூணாளு இருக்கிற வீட்ல இருபதாளுக்குச் சாப்பாடு, ஆனா மூணுல ஒரு ஆள் தொடணுமே யாரும் தொடல.

இங்க இவுக கத இப்படியிருக்க... அங்க மேலயும் கீழயும் தவ்வுறான் கட்டையன். கருவாச்சிய விட்ட பேயி கட்டையனப் புடிச்சுக்கிருச்சு போலருக்கு. அதுலயும் இது சாராயம் குடிச்ச பேயி சட்டையக் கிழிச்சு அலையிது.

"மந்தையில வாங்கிட்டாடா மானத்த. பொழச்சுக் காமிக்கிறேன்னு சம்பிராயம் போட்டுல்ல போறா. பொழச்சுப் பார்றி... பொழச்சிருவியா? பொழைக்கவிட்ரு வேனா? கண்ணுக்குத் தெரியாம ஒன்னிய ஊரவிட்டே ஒதுக்குறண்டி பிள்ளா..." கெடுதல் புத்தி மப்பேறி நிக்கிது கட்டையனுக்கு.

மனுசங்க கூடி ஊருன்னு ஒண்ணு உண்டாக் குனதே ஒரு சவுரியத்துக்குத் தான். வாழ்வோ தாழ்வோ குடுத்து வாங்க ஒரு வசதிக்குத்தான். ஏங்கிட்ட ஒண்ணுருக்கு ஓங்கிட்ட ஒண்ணுருக்கு;

ஒண்ணக் கொடுத்து ஒண்ணப் பண்டமாத்துப் பண்ணிக்கிரலா மேங்கிற கணக்குத்தான்.

ஊருக்கும் ஒரு தனிமனுசனுக்கும் உள்ள நரம்பு அந்துபோச்சுன்னு வச்சுக்குங்க.. ரத்தம் போய்ச் சேராது. ரத்தம்போய்ச் சேராத பாகம் செத்துப் போகுமா இல்லையா?

"ஒனக்கும் எனக்கும் உள்ள ஒறவ அத்துவிட்ட மாதிரி ஊருக்கும் ஒனக்கும் உள்ள ஒறவையும் அத்து விட்றேன்டி" சாராயத்துல அடிச்சுச் சத்தியம் பண்றான் கட்டையன்.

"ஏலே! ஒலக்கையா! சலம்பல்பாண்டி! தண்ணிக் கெணத்துல கருவாச்சிக்கு ஒரு பொம்பளையும் தண்ணி தூக்கிவிடப் புடாதுன்னு சொல்லுங்கடா. அந்தத் தெருவுலயோ அடுத்த தெருவுலயோ எந்தப் பொம்பளையும் அவகூட பேசப்படாது... அடுப்புக்குத் தீ குடுக்கக் கூடாது... அரிசி, பருப்பு, உப்பு, புளி, மொளகா, சீரகம் எண்ணெ, சீமத் தண்ணின்னு அவளுக்கு யாரு மொறக்கடன குடுத்தாலும் மொற கெட்டுப் போயிரும்னு சொல்லிப்புடுங்கடா. அவ தர்ற வருசக் கூலி ஆறு மரக் காலுக்குப் பதிலா நாம ஏழு மரக்கா குடுத்திருவோம்; அவ வீட்ல அழுக் கெடுக்கப்படாதுன்னு சொல்லிருங்க வண்ணாத்திக்கு. அவ காடுகரைக்கு யாரும் வெதைக்கப் போகக் கூடாது; வேலைக்குப் போகக் கூடாது. அதையும் மீறி வெளைஞ்சா...

வெளைஞ்ச வெள்ளாமைய யாரும் வீட்ல வந்து சேக்கப்படாது. ஏலே பன்னியாம்பேரா!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:05 pm

மூணாம்பேரு அறியாம இதப் பண்ணணும்டா. அப்பிடித் தப்பிக்கிப்பித் தெரிஞ்சு ஊர்ப்பெருசுக யாரும் லல்லுப் புல்லுன்னு தவ்வுனாங்கின்னா, பெருமாத்தேவனப் பின்னுக்கு வெட்டுங்க.

சக்கணன முன்னுக்கு வெட்டுங்க. கொலக் கேச நான் பாத்துக்கிறேன். அவன் யார்றா அவன்...

கொண்ணவாயனா..? ஒடிஞ்ச ஒட்டடைக் குச்சிக்கு உருமாக் கட்ன மாதிரி. பெரியமூக்கி வீட்ல தின்டு கழியிற தேவாங்கு. அந்தப் பண்ணைக்கிருக்கிற நாயப் பத்திவிட்ரணும் மொதல்ல!"

சொக்கத்தேவன்பட்டியில ஒரே ஒரு பொட்டிக்கடைதான். உப்பு, புளி, மொளகா, முறுக்கு, முட்டாயி, கருப்பட்டி, அவிச்ச கெழங்கு, அவிச்ச மொச்ச... காய்கறி மாதிரி அத்தியாவசியப் பொருளுகளும்... பீடி, சோடா, சவுக்காரக்கட்டி மாதிரி ஆடம்பரப் பொருளுகளும் அங்க கெடைக்கும், பணங்காசுக்கும் விக்கிறதுண்டு; பருத்தி தவசத்துக்கும் பண்டமாத்துப் பண்ணிக்கிறதுமுண்டு. முத்துக்கருப்பு முத்துக்கருப்புன்னு ஒரு பய பரம்பரையா வச்சிருக்கான் அந்தக் கடைய. புதுசாக் கட்டிக்கிட்டு வந்த பொண்டாட்டியக் கடையில விட்டுட்டு, சந்தைக்குப் போயிட்டான் முத்துக்கருப்பு சாமான் வாங்க. புதுப் பொண்ணு காக்கிவாடன்பட்டிக்காரி.

மதமதமதன்னு ஒடம்பு; எரும மாடு வளத்து ஊருக்குப் பால் ஊத்துற அவுக அப்பன் ஒரு மாட்ட இவளுக்கே நேந்துவிட்டான் போலிருக்கு; சும்மா தளதளதளன்னு இருக்கா.

தாலிக்கயித்து மஞ்சள்லகூட இன்னம் அழுக்கு ஒட்டல. வாக்கப் பட்டு வந்த புதுசுங்கிறதனால ஊர்நாடு பத்தி ஒண்ணுந் தெரியாது அவளுக்கு.

அவ கடையில பீடி வாங்கிப் பத்தவச்சிக்கிட்டே, தொங்கவிட்ட வாழப்பழத்தார்ல காம்பு கறுத்த பழமா திருகித்திருகித் தின்னுக்கிட்டிருக்கான் கட்டையன், கூட்டாளிகளோட.

அப்ப....


[You must be registered and logged in to see this image.]ஒரு கையில சாட்டக்கம்பும் ஒரு கையில ஓரணாவுமா "தவக்" "தவக்"குன்னு நடந்து வாரானய்யா கொண்ணவாயன். பெரியமூக்கி சொல்லிவிட்டிருக்கா "ஓரணாவுக்கு வாழக்கா வாங்கிட்டு வாடா"ன்னு. வந்து நிக்கிறான் பய மூச்சுவாங்க.

"வாடி மாப்ள வா" வசமா மாட்டிக் கிட்டவன வம்பிழுக்க நெனைக்கிற கட்டையன், வச்ச கண்ணு மாறாம அவனையே பாத்து நிக்கிறான்.

அரை ஆள்லயும் கொறையாளு கொண்ணவாயன். சில மரங்க வேர் பரவ முடியாம வருசம் பத்தானாலும் அங்கயே நின்னுபோயிரும் பாருங்க. அப்படி வாலிபத்துக்கேத்த வளத்தியில்லாமக் குறும்பையாகிப் போன பய அவன். சவட்டக் காலு... செம்பட்டத் தல...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:06 pm

அதுல அங்கங்க கால் ரூவா அர ரூவா அகலத்துக்கு ஊடுசொட்ட. கொஞ்சம் கூனு. உள்ள போனநெஞ்சுக்கூடு, முட்டி வெளிய தள்ளிருச்சு முதுக. அவன் தோலு பெறந்த ராசிக்கு முடி மொளைக்காதுமூஞ்சியில. தலையில உருமா. இன்னொரு ஆளும் உள்ள நொழஞ்சு போட்டுக்கிடலாங்கற மாதிரி தொளதொளன்னு ஒரு சட்ட. மடிச்சுக் கட்ன ஒரு காவி வேட்டி.

கால்ல செருப்பு இல்லாட்டியும் பரவாயில்ல, கையில சாட்டக்கம்பு இருக்கணும் அவனுக்கு, கையில சாட்டக்கம்பு இல்லாம அவனால ஒண்ணுக்கு ரெண்டுக்குக்கூட போக முடியாது வராது.

முத்துக்கருப்பு பொண்டாட்டி யையும் கட்டையனையும் மாறிமாறிப் பாத்து மருகி நிக்கிறான் கொண்ணவாயன்.

"என்னாப்பா வேணும்?'"னு கேட்டா முத்துக்கருப்பு பொண்டாட்டி. ரெண்டு வேல செய்ய வேண்டிய மாராப்பு ஒரு வேல மட்டும் செஞ்சு ஒதுங்கி நிக்க, வெவரம் பத்தாது அவளுக்கு;

மத்தபடி வெனயம் இல்ல.

கட்டையனுக்கு பயந்து அவளையே உத்துஉத்துப் பாத்துக்கிட்டிருந்த கொண்ணவாயன், உள்ளங்கை வேர்வையோட ஓரணாவ நீட்டிக் கேக்குறான்: "ஓரணாவுக்கு வா... வா... வா..."

அவன் கொண்ணவாயங் கிறதும், வாழக்கா கேட்டு வந்தவனுக்கு வார்த்தை திக்குதுன்னும் தெரியாத காக்கிவாடன்பட்டிக்காரி, தன்ன ஓரணாவுக்கு வாடின்னு கூப்புடுறான்னு நெனச்சிக்கிட்டு "எடு தூமச்சீல"ன்னு எந்திரிச்சா. பெரம்புத்தட்டுல அடுக்கி வச்சிருந்த கெழங்கையெல் லாம் அவன் மேல தூக்கியெறிஞ்சு, "காச்மூச்"சுன்னு கத்திக் குமிக்கிறா. "நான் உத்தமி யாக்கும் பத்தினியாக்கும்.. என்ன ஓரணாவுக்கு வா வான்னு கூப்பிடுறான் ஒரு குரங்குப்பய.

'சொக்கத்தேவன்பட்டிக்கு வாக்கப்பட்டுப் போகாதடி... கோயில்மாடுகளுக்குப் பதிலா அது ஆம்பளைகள நேந்துவிட்ட ஊருடி'ன்னு சொன்னாகளே, நான் கேக்கலையே!

நல்லது கேக்க இந்த ஊர்ல நாதி இல்லையா...'" எக்கச்சக்கப் பத்தினித்தனத்தக் காமிக்கிறதுக்கு இதான்டா நேரம்னு அவ ஆடம்பரமா அழுகையிலகூட... கொண்ணவாய்ப் பயல ஊரவிட்டு ஓட்டுறதுக்கு சாமியாக் குடுத்த சமயம் இதுதான்னு முடிவு பண்ணிட்டான் கட்டையன்.

"ஏலே, ஏழு மாசத்துல பெறந்தவனே! நம்மள நம்பி இந்த ஊருக்கு வாக்கப்பட்டு வந்தவளையா "வாடி படுக்க"ன்னு கூப்பிடுற?மூஞ்சிலயும் நெஞ்சிலயும் முடி மொளைக்காத பயலுக்கு அடுத்தவன் பொண்டாட்டி கேக்குதா?" கொண்ணவாயன் கையிலிருந்த சாட்டக் கம்பையே புடுங்கி அவனச் சாத்து சாத்துன்னு சாத்திப் பஞ்சு பறத்துறான் கட்டையன். நாய் ஒண்ணு எலும்புத்துண்டப் பெரட்டிப் பெரட்டிக் கடிக்கிற மாதிரி வெரட்டி வெரட்டி அடிக்கிறான். மின்னல் வெட்டி இடி எறங்குற மாதிரி இருக்கு பாவம் பச்சைப் பய ஒடம்புல.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:06 pm

"யா... யா.. யா.. யாத்தே..! யப்பே என்னியக் கோ.. கோ.. கோ.. கொல்றாய்ங்க..."

சதையில்லாத ஒடம்பு; எலும்புல அடி எறங்க எறங்க, கை ரெண்டையும் தூக்கிக் கும்புட்டுக் கும்புட்டுக் கத்துறான் கொண்ணவாயன்.

சாட்டையிலயும் வீசி வெளாசிட்டு, சாட்டக் கம்பாலயும் மொழங்கல்லயும் தோள்பட்டையிலயும் நொக்குநொக்குன்னு நொக்கிட்டு சாட்டக்கம்பு நுனியில இருக்குற தார்முள்ளாலயும் அவன் கூன்ல ஒரு குத்துக் குத்தி ரத்தம் ஒழுகவிட்டுட்டு, "ஓடிப் போ நாயே"ன்னு ஒரு எத்து எத்துத் தள்ளி அவன் சாட்டக்கம்ப அவன்கிட்டயே குடுத்திட்டு, அவன் கொண்டுவந்த ஓரணாவ தன் கணக்குல கழிச்சுக்கன்னு கடக் காரிக்கிட்டச் சொல்லிட்டு "ஊர்காத்த உத்தமனா"ப் போறான் கட்டையன்.

வாழக்கா வாங்கப் போனவன மசங்கியும் காணமேன்னு தெருவெல் லாம் தேடித் திரிஞ்சு, கடைசியில நடந்த கதையக் கேட்டு "நாசமாப் போக"ன்னு கட்டையனுக்கு ஒரு சாபம்விட்டுட்டு ஊருக்குத் தெக்க ஒத்தப் புளியமரக் கல்கட்டுல காயத்தோட மொனகிப் படுத்திருந்த கொண்ணவாயன, "வாடா தங்கம்"னு வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து காயத்துக்கெல்லாம் மஞ்சப்பத்துப் போட்டுவிட்டு, கவுண்டர் வீட்ல காப்படி அரிசி மொறக்கடன் வாங்கிக் கஞ்சி காச்சி, காணத்தண்ணியில ரசம்வச்சுக் குடுத்து, "படுறா மகனே படு"ன்னு படுக்கவச்சுட்டா பெரியமூக்கி.

பொத்திப் படுத்தா வேட்டிபட்டுக் காயம் காந்தும்னு அதையும் ஒதறிட்டு ஒறக்கம் வராமக் கெடந்த கொண்ணவாயனுக்கு ரத்தக்கசிவு நின்னுபோச்சு; கண் கசிவு நிக்கல பாவம்.

கரட்டடியில பெரியமூக்கி புருசன் துரைச்சாமிக்குப் பாத்தியப்பட்ட பூர்விகக்காடு மூணு குறுக்கம் இருக்கு. வருசம் ரெண்டாச்சு, மருந்துக்குக்கூட மழை பெய்யல, வெவசாயம் காணாத பூமியில வீட்டடுப்புக்கு வெறகு வெட்டிக்கிட்டிருக்கா பெரியமூக்கியும் கருவாச்சியும்.

கருவேலமுள்ளு, காஞ்சகள்ளி, கத்தாழமட்ட எல்லாத்தையும் பெரியமூக்கியும் கருவாச்சியும் வெட்டிப்போட, கொண்ணவாயன் கவட்டைய வச்சுக் கட்டி அடைய, ஈசானிய மூலையில ஏறி வருது மேகம். கொச்சக்கயித்த வச்சு முள்ளக் கட்டி முடிச்சுப்போடறதுக்குள்ள அண்ணாந்து பாத்தா ஆகாயத்தக் காணோம்.

மாசம் ஆடி மாசம். எந்த நேரமும் அந்து விழுந்திருவேன்னு மின்னிச் சொல்லுது மேகம்.

"ஒன்னிய ஒரு அண அணச்சுக்கிறேன் ஆத்தா"ன்னு பூமாதேவியப் பாத்து வளஞ்சு எறங்கி வருது ஆகாயம்.

"வருதுடா...

வரப்போகுதடா...

வந்துருச்சுடா..."

சட சடசடன்னு எறங்குன மழையில... காடு தெரியல, கரடு தெரியல, மல தெரியல, வழி தெரியல, வேலியோரம் இருந்து வேலாமரமும் தெரியல.

சும்மா சவட்டு சவட்டுன்னு சவட்டுது மழை. ஒவ்வொரு துளியும் எத்தம் பெரிசுங்கிறீங்க.

கால் ரூவா அர ரூவாயாச் சில்லரை மாத்தி ஆளுக மேல எறியிற மாதிரி எறியுதய்யா மழை.

முள்ளுக்கட்ட அங்கயே போட்டுட்டு வேலாமரத்தடியில ஓடிப்போயி ஒதுங்கறதுக்குள்ள மூணு பேரும் நனைஞ்சிபோனாக.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:06 pm

காடு நனையுது; கல்லு நனையுது. பூமிக்குள் வேர் நனையுது; புத்துக்குள்ள பாம்பு நனையுது.

காட்டுப் புதருக்குள்ள காட முட்டை நனையுது. பறவை ஒண்ணு எப்பவோ இட்டுப் போன எச்சத்துல பாற இடுக்குல போயி விழுந்த வெத நனையுது. நனையாம வாரது மேயப்போயி வீடு வார பசுமாட்டுக்காம்பு தான்.

தறிகெட்டு ஆடுதுக தன்னால மொளச்ச காட்டு மரங்க. எல்லாம் தலைவழியாத் தண்ணி குடிச்ச சந்தோசம்தான்.

பெருங்கொண்ட மழை: ஓடைக் காடெல்லாம் ஒடப்பு எடுத்திருச்சு. மாடு நடந்தா தடத்துல தண்ணி ஊறுதுன்னாப் பாருங்களேன். சொக்கத்தேவன்பட்டியும் சுத்துப்பட்டு ஊர்களும் குளுந்துபோச்சு குளுந்து.

விடிய... ஊரே ஏர்மாடு பூட்டி ஓடுது ஒழவுக்காடு தேடி.

காணி வெதைக்கணும்... கையில துட்டில்ல.

ஆடிக்காத்துல அரசஞ்சருகு மாதிரி அங்கிட்டும் இங்கிட்டுமா அலையிறா பெரியமூக்கி.

பஞ்சாயத்துக்கு வந்த ஆளுகளுக்குக் கஞ்சி காச்சி ஊத்தியே கரஞ்சுபோச்சு கையில இருந்த காசு. வெதத்தானியம் வாங்கணும்... உழுகணும்... முப்பது நாளைக்குள்ள களையெடுக்கணும்.

எங்க போவா துட்டுக்கு?

சீதனம் போயித் திரும்பி வந்த அண்டாவ அடகு வச்சா முத்துக் கருப்பு வீட்ல. பத்து ரூவா கேட்டதுக்கு அந்தப் பாவிப்பய ஏழுக்கு மேல ஏறி வரல.

அம்மைநாயக்கர் வீட்டுக்கு ஓடிப் போயி வெதத்தானியம் வாங்கிக்கிட்டா. மூணு குறுக்கம் காட்டுக்கு மூணுபடி சோளம் போதும். ஊடு வெத வேணுமே! எள்ளு முக்காப்படி மொச்சப்பயறு கல்லுப் பயறு பாசிப்பயறு தட்டாம்பயறு காணம் தொவர இதெல்லாம் வகைக்குக் காலரைக்காப்படி வாங்கித் துண்டு துண்டாத் துணியில முடிஞ்சு மொத்தமாத் தோள்ல சொமந்து வீடு வீடா அலையிறா ஏர்மாடு தேடி.

வெதப்புக்கு மட்டும் ஒத்த ஏர் ஆகாது; ரெட்ட ஏர் வேணும். எவனக் கேட்டாலும், "எங்க காடு உழுதுட்டு ஒங்க காடு வாரேங்"கிறான்.

நாலு நாளாச்சு... அஞ்சு நாளாச்சு.. ஏர் கெடைக் கல: ஈரம் போயிக் கிட்டிருக்கு இவ காட்ல.

நாளைக்குப் பாப்போம்,நாளன்னிக்குப் பாப்போம்னு சொல்றாங்களே தவிர, உறுதி சொல்றானில்ல ஒருத்தனும். எப்பிடியும் ரெண்டு நாள்ல ஏர் கெடைச்சிரும்ங்கற நம்பிக்கையில இருக்காக பெரியமூக்கியும் கருவாச்சியும்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:06 pm

அவுக நம்பிக்கையில நஞ்சு ஊத்தற மாதிரி, காதோட காதா ஊருக்குள்ள கண்ணுக்குத் தெரியாத ஒரு கலவரத்த உண்டு பண்ணிக் கிட்டிருக்கான் கட்டையன்: "என்னிய மீறிக் கருவாச்சி காட்டுக்கு எவன் உழுகப் போனாலும் உழுதமாடு திரும்பி வரும்; உழுதவன் திரும்ப மாட்டான்!"

பந்தயம் காவியம் நிகழும் காலம் இந்திய சுதந்திரத்துக்கு முன்னென்று கொள்க.

பொதுவா மனுசக் கூட்டத்துக்குள்ள குணமே, கெட்டதுக்குப் பயப்படறதுதான். தெம்பு சொல்லிப் பாருங்க... அவ்வளவு சீக்கிரம் தேற மாட்டான் மனுசன். பயமுறுத்திப் பாருங்க... உடனே மெரண்டு உசுர் கொறஞ்சுபோவான்.

"போற வழியில புங்க மரத்துல ஒரு கிளியிருக்கு, பாத்துட்டுப் போப்பா"ன்னு சொல்லிப் பாருங்க. "கிளியா..? இருக்கா..? நான் போறவரைக்கும் இருக்குமா..? பச்சக் கிளியா... பஞ்சவர்ணக் கிளியா..?"ன்னு ஆயிரங் கேள்வி கேப்பான்.

"போற வழியில ஒரு புலி இருக்கு, பாத்துப் போப்பா"ன்னு சொல்லி விட்ருங்க. ஒரு கேள்வியும் கேக்காம "எங்க ஊரு அதுக்கு எதிர்த் தெசை யில"ன்னு ஓடியே போவான். கெட்டது எப்பவுமே கேள்வி கேக்கவிடாம ஒட்டிக்கிரும். கட்டையனுக்கும் அப்படித்தான் பயந்துபோச்சு சொக்கத்தேவன் பட்டி.

"பெரியமூக்கி பாவம் கெழண்டுபோனவ; அத்துவிட்ட கருவாச்சி வேற அத்துவானக்காட்ல நிக்கிறா. வீட்டுக்கு ஒரு ஏரு போயி உழுது குடுங்கப்பா"ன்னு சொல்லியிருந்தா ஒரு பய உழுகப் போயிருக்க மாட்டான் ஊர்ல.

"உழுகப் போனவன் வீடு திரும்ப மாட்டான்; கருவாச்சி காடு உழுக எவனும் போகாத!"ன்னு கட்டையன் கமுக்கமாப் பரப்பவும், "எதுக்குடா பொல்லாப்பு"ன்னு அவனவன் இஞ்சி இறுகிட்டான். பெரியமூக்கி மேல வெறுப்பில்ல; கட்டையன் மேல பயம்.

பொண்டாட்டி தப்பான வழியில போறாங்கிற சங்கதி ஊரு தெரிஞ்சு, நாடு தெரிஞ்சு கடை....சியாத்தான் புருசனுக்குத் தெரியுங்கிற மாதிரி, ஏர்மாடு தடுத்து வச்சிருக்கிறது கட்டையன் வேலதான்ங்கிறது அஞ்சாம் நாளுதான் தெரியவருது பெரிய மூக்கிக்கு.

"அடப்பாவிப் பயலே"ன்னு நெஞ்சப் புடிச்சு ஒக்காந்துபோனாக தாயும் மகளும். காடுகர பூரா ஒழவாயிருச்சு. இந்தா இந்தான்னு ஈரம் போயிக்கிருக்கு. இன்னம் ரெண்டு நாள்விட்டா ஒழவு எறங்காது; விழுந்த வெத மொளைக்காது.

'நான் என்ன பண்ணுவேன், ஏது பண்ணுவேன்?'னு ஆளில்லாத ஊருக்குள்ள அவ அலைய, அரசமரத்து அம்பலக்கல்லுல படுத்துக்கெடக்கான் கேப்பக்களியான். கட்ன வேட்டியோட வெறும் ஒடம்போட தலைக்கு வச்சாக் களவு போயிரும்னு துண்டச் சுருட்டித் தொடையிடுக்குல வச்சுப் படுத் திருக்கான்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:07 pm

பாவம்... பெறவியிலயே வாயும் பேசாது; காதும் கேக்காது அவனுக்கு. குடும்பம் இல்ல; ஒத்த ஆளு. ரெண்டு மாடுகளும் மூணு செம்பிலியாடுகளும் தான் சொந்தபந்தங்க. இவன் கஞ்சிக்கு அதுக பொறுப்பு; அதுக தீனிக்கு இவன் பொறுப்பு. ஒரு கெட்ட பழக்கமில்ல அவனுக்கு; ஒழச்சுப் பொழைக்கிற சந்நியாசி. ஒரு பெறவி முடிஞ்சாத்தான் இன்னொரு பெறவின்னு சாமியாருக சொல்ற மாதிரி, ஒரு வேட்டி கிழிஞ்சாத்தான் இன்னொரு வேட்டிங்கிறது அவன் பொருளாதார ஐதீகம்.

அவனுக்கின்னு உள்ளதெல்லாம் ஒரே ஒரு ஆசதான்... நெல்லுக்கஞ்சி!

நெல்லுக்கஞ்சின்னா உசுரு கேப்பக்களியானுக்கு. தைப்பொங்க தீவாளிக்குத்தான் நெல்லுக்கஞ்சிங்கற ஆடம்பரமெல்லாம் அப்ப. கல்யாண வீடு, கருமாதி வீடுகள்ல ரெண்டு எல வாங்கி ஒண்ணு மேல ஒண்ணு போட்டு ஒக்காந்திருவான். மேல் எலையில மொதப் பந்திச் சோத்த வாங்கித் தின்னுப்புட்டு, அந்த எலைய எடுத்தெறிஞ்சிட்டு வேட்டியில கையத் தொடச்சு ரெண்டாம் எலைய விரிச்சு, ரெண்டாம் பந்திக்கு வந்த மொத ஆளு மாதிரி அங்கேயே ஒக்காந் திருவான்.

இப்ப... மூச்சுவிடற பொணம் மாதிரி ஒறங்குறான்.

கத்திக் கத்திப் பாத்தா பெரியமூக்கி. அவன் எந்திரிக்கல. காத்து சத்தம் போட்டா கல்லு எந்திரிக்கும்? ஒரு குச்சி எடுத்து அடிச்சு எழுப்புனா. கனாக் கண்டு எந்திரிச்சவன் மாதிரி மேலயும் கீழயும் முழிச்சவன், கொறட்டைய நிறுத்திட்டுக் கொட்டாவிய விடுறான்.

எந்த மொழியில பேசுனாலும் காசுல பேசுற மாதிரி வருமா? அதுலயும் இவன் வாய் பேசாதவன். அண்டா அடகுவச்ச ஏழு ரூவாயில விதைத் தானியத்துக்கு ரெண்டே முக்கா ரூவா போக முடிஞ்சுவச்சிருந்த நாலே கால்ல ஒரு ஒண்ணே கால் எடுத்துக் குடுத்து "உழுக வாப்பா"ன்னு சாடையில சொல்லவும், அவன் தலையச் சொரண்டி "கர்று புர்று"ன்னு மொனகுறான்.

சாமியக் கும்பிட்டு அவன் மேல பிரம்மாஸ்திரத்த எடுத்து எறிஞ்சா பெரியமூக்கி. "பச்ச நெல்லுக் குத்தி மத்தியானம் நெல்லுக்கஞ்சி உருண்ட புடிச்சுத் தாரேன்"னு சாடையில சொல்லவும், அதுவரைக்கும் கண்ல ஒட்டியிருந்த ஒறக்கம் ஓடியேபோச்சு கேப்பக் களியானுக்கு. சரின்னு தலையாட்டிட்டான்.

பாதிக் கெணறு தாண்டிட்டா பெரியமூக்கி. இன்னொரு ஏருக்கு என்னா பண்றது?

முக்குறுணி வீட்டுக்கு ஆடிக்கு விருந்தாடி வந்திருக்கான் அவ மருமகன் சவட்டையன்; பின்னத்தேவன்பட்டிப் பெறப்பு. நல்ல எளந்தாரி. மாடு மாதிரி வேல செய்வான். ஆனா சாராயமும் கஞ்சாவும் குடுத்தா வேட்டியக் கழத்திக் குடுத்திட்டு வெறும் ஆளா வீட்டுக்கு வந்திருவான். சுத்தி வளைச்சுப் பாத்தா, பெரியமூக்கிக்கு முக்குறுணி நாத்துனா மொறையில வந்து சேருவா. உழுதுமுடிச்ச அவ மாடுக ரெண்டும் தொழுவுல இருக்கு.

"யப்பா முக்குறுணி மருமகனே! சாமியாப் பாத்து ஒன்னிய அனுப்பிருக்கு ராசா. காடு உழுதுகுடுத்துட்டுப் போ"ன்னு அவ காச எடுத்து நீட்ட விருந்தாடியா வந்திருக்கவன் வேலைக்குப் போனா மதிப்புக் கம்மின்னு அவன் மரியாதி பாக்க முந்தானையில ஒளிச்சுக்கொண்டாந்திருந்த சாராய சீசாவ எடுத்து நீட்டி ஓங்கி அடிச்சு ஒடைச்சா அவன் மரியாதைய.

சீசாவா... லேசா? அவனும் தலையாட்டிட்டான்.

சரின்னு சொன்ன சவட்டையன் இன்னொரு குண்டத் தூக்கி எறியிறான்.

"நான் வந்திருவேன் நல்லத்தா. நேத்து உழுகப்போன மயிலக்காள, பின்னங்கால்ல கொழு எடறி எந்திரிக்க மாட்டாமக் கெடக்கு. கடப்பாரைக் கவுண்டரு விடிய வந்து ஏர்க்கலப்ப வேணும்னு எரவல் வாங்கிட்டுப் போயிருக் காரு. என்னிய என்ன பண்ணச் சொல்றே?"ங்கறான் காசப் பையில போட்டுக்கிட்டு சீசாவையும் இறுக்கிப் புடிச்சுக்கிட்டு.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:10 pm

"எம் பூமியில மழ விழுக வழி காமிச்ச சாமி, வெத விழுக வழி காமிக்கலையே"ன்னு மருகி நின்ன பெரியமூக்கி மூஞ்சியில திடீர்னு ஒரு தெளிச்சி. "யப்பா... சாமியா வந்த சவட்டையா.

எங்க வீட்ல ஒரு ஏர்க்கலப்ப இருக்கப்பா... பூர்வீகக் கலப்ப. அத எடுத்துக்க. ஒத்த மாடு நீ வச்சிருக்க. ஒத்தப் பசு நான் வச்சிருக்கேன். அத ஏர்ல பூட்டி ஓட்டிக்க. கணக்கு சரியாப் போச்சா. காடு வந்து சேரப்பா விடிய. மனுசன் அடைக்கிற கதவ சாமி தொறக்குமடா...

வாடா."

விடி....ய்யக் காடு வந்து சேந்துருச்சு ரெண்டு ஏரும். இல்லாதவன் முழுசாக் கழிக்க முடியாத கடன்கப்பி மாதிரியே இன்னம் மிச்சமிருக்கு இருட்டு. கத்தாழம் புதருக்குள்ள காடைகளும் கதுவாலிகளும், வேப்பமரத்துல காக்காயும், ஒடசாலி மரத்துல மைனாக்களும் "இன்னும் எந்திரிக் கலையா சூரியபகவானே"ன்னு கெழக்கக் கிண்டலடிச்சுக் கத்துதுக.

பாறையில் துண்ட ஒதறித் தூசுதட்டி வேட்டிய அவுத்துச் சுருட்டி அதுலவச்சு, காத்துல பறந்துரும்னு ஒரு கல்லையும் தூக்கிவைக்கிறானுங்க கேப்பக்களியானும் சவட்டையனும். என்னமோ அழுக்குப்பட்ருமாம்... அதுக்கு மேல அழுக்குச் சேர எந்த மூலையிலயும் எடமில்லாத வேட்டியில.

வேட்டியில தூக்கிவச்ச கல்லுக புண்ணியம் பண்ணினதுக... அதுகளுக்கு மூக்கு இல்ல பாருங்க. கிழக்கு முகமா நின்டு பூமியக் கும்பிட்டு, வெதப்பொட்டி எடுத்துட்டா பெரியமூக்கி. ரெண்டு படி புடிக்கும் அந்த வெதப்பொட்டி. ஒரு குறுக் கத்துக்கு இன்ன அளவு தானியம்னு கணக்கு இருக்கு அவளுக்கு.

[You must be registered and logged in to see this image.]ஒரு படி சோளம், காப்படி எள்ளு, கல்லுப்பயிறு, காணப்பயிறு, தட்டாம் பயிறு, மொச்ச, தொவர எல்லாம் வகைக்கு அரைக் காப்படின்னு கலந்து வெதைச்சா ஒரு குறுக்கம் வெதைச்சு முடிக்க ஒரு கை வெத மிச்சம் இருக்கணும். ரெண்டு கையிலயும் வெதப் பொட்டிய எடுத்து, அத எடது மார்புல இருதயத்தோடு வச்சு எணச்சு அணச்சு, குலதெய்வத்த நெனச்சு, வலது கையில வெதய அள்ளி வெதப்பொட்டியில ஓங்கி அடிச்சு வெதச்சுக்கிட்டே நடந்துபோறா பெரியமூக்கி. ரெண்டு பாக தூரத்துக்குச் செதறி ஓடி விழுகுதுக வெதைக.

கோயில் மணிச் சத்தமெல்லாம் சத்தமில்ல ஒரு வெவசாயிக்கு. வெதைக்கையில தானியங்க வெதப் பொட்டிய முட்டி மோதித் தெறிச்சு விழுகிற சத்தமிருக்கே... அந்தச் சத்தத்துக்குக் கீக்கொண்டதுதான் சகல சத்தமும்.

பெரியமூக்கி ஒரு குறுக்கம் வெதச்சு முடிக்க முன்னித்தி ஏரு கேப்பக் களியானும் பின்னித்தி ஏரு சவட்டையனுமா ஒழவுல கூடிட் டாங்க. சும்மா சரபுர சரபுரன்னு சரளக்கல்லுககூட சண்டபுடிச்சுக் கிட்டே செம்மண்ணப் பொளந்து செந்துருக்கம் பூசிக்கிட்டே வெதப்பு ஒழவு போட்டுப் போகுதுக கலப்பைக. கஞ்சிப் பொழுதுக்குள்ள ஒரு குறுக்கம் உழுது முடிச்சு, பெரியமூக்கி கரகரகரன்னு கரச்சு ஊத்துன கம்பங்கூழ, கழுவாத ரெண்டு கையிலயும் வாங்கி, சுட்ட மொளகா வத்தலச் சுரீர்னு கடிச்சு மடமடன்னு குடிச்சுப்புட்டு, ஆவாரங்கொழைய உருவிக் கை தொடச்சு, இடுக்குல இருக்கிற கூழ கோவணத்துல தடவிக்கிட்டு அடுத்த குறுக்கம் பாத்து மேழியழுத்துனாக ரெண்டு பேரும்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:11 pm

இங்க இது இப்படியிருக்க... அங்க, பச்ச நெல்ல ஒரல்ல போட்டுக் குத்தியெடுத்தா கருவாச்சி. அதச் சோறாக்கிக் கொழஞ்சும் கொழையாம எறக்கி, உருண்ட புடிச்சுப் புளிச்ச தண்ணியில போட்டு ஆறாளுக் குண்டான கஞ்சிய எடுத்துக் குத்துச் சட்டியில போடுறா. ஒழவுக்காட்டுல நாலு ஆளு; இவளச் சேத்து அஞ்சாளு. கஞ்சிக் கணக்குல கேப்பக்களியான் ரெண்டாளு. ஆக மொத்தம் ஆறாளு.

மறுமாத்தம் இல்ல. குத்துச் சட்டியத் தலையில வச்சு, தூக்குவாளியக் கையில புடிச்சு, முத்துக்கருப்பு கடையில மறுமாத்தத்துக்கு வெங்காயம் வாங்கி அவ முந்தானையில முடிய... "பெரியமூக்கி காட்ல ஒழவு நடக்குதுடா"ங்கற ஒளவு போயிருச்சு கட்டையனுக்கு.

"நெல்லுக்கஞ்சி வருது... நெல்லுக்கஞ்சி வருது"ங்கிற நெனப்புலயே ரெண்டு குறுக்கத்த நெருக்கி முடிக்க... கருவாச்சி வாரது தெரியுது கரட்டுமேட்டுல.

நெல்லுக்கஞ்சியக் கண்டதும் கேப்பக்களியான் மலந்துபோனான் மலந்து. ஒரு உருண்டைக்கு ரெண்டு வெங்காயம்னு வாங்கிக் கருவேலங்காயத் திங்கிற வெள்ளாடு மாதிரி "கறுச் கறுச்"சுன்னு மெல்லுறான் பாவம்.

இவுகளயெல்லாம் கஞ்சி குடிக்கவிட்டுட்டு மூணாவது குறுக்கம் வெதச்சு முடிச்சு, மூஞ்சி தொடச்சு வந்த பெரியமூக்கி, கடைசி உருண்ட தின்டு கைதொடைக்கறதுக்குள்ள "எந்திரிங்கப்பா எந்திரிங்க... பொழுதிருக்க ஒழுவு முடியணும்"னு எல்லார் கால்லயும் வெந்நிய ஊத்துறா.

பெரியமூக்கி முள்ளு வெட்ட, கருவாச்சியும் கொண்ணவாயனும் கல்லுப் பெறக்கிப்போட, மூணாங் குறுக்கத்துல ரெண்டு சால் ஓட்டி மூணாஞ் சாலுக்குள்ள முன்னித்தி ஏரு நொழைய "நிறுத்துங்கடா ஏர!"ன்னு சத்தங் கேக்குது.

யாரு... என்னான்னு திரும்பிப் பாக்கிறதுக்குள்ள ஏர் உழுகிற ஆளுக மேல சரசரசரன்னு கல்லெறி விழுகுது. மாட்டுத் திமில் மேல விழுந்து ஒடஞ்சு செதறுதுக மண்கட்டிக. "விர்று விர்று"ன்னு காத்தக் கிழிச்சு வந்த கைக் கம்பு ஒண்ணு கேப்பக்களியான் மாட்டுக் கொம்புல மாட்டி நிக்கிது.

என்னா நடக்குது... ஏது நடக்குதுன்னு கண்ணு பாத்தது புத்திக்கு எட்றதுக் குள்ள ஏர வந்து மறிச்சுட்டானுங்க கட்டையன் ஆளுங்க.

ஒலக்கையனும், சலம்பல்பாண்டியும், பன்னியாம்பேரனும், கறிக் கஞ்சிக்கு அலையிற நாலஞ்சு காலிப்பயல்களும் ரெண்டு ஏர் மாட்டையும் சுத்தி வளையங் கட்டி நிக்கிறாங்க.

கெட்ட வார்த்த சொல்லி வஞ்சுக்கிட்டே ஒருத்தன் கேப்பக் களியான் உருமால அவுக்கிறான். அவன் "தஸ்ஸு புஸ்ஸு"ன்னு உருமாலக் காப்பாத்தக் கைய மேல தூக்கவும் கோவணத்த உருவி எறியப் பாக்குறான் ஒருத்தன்.

"ஏய்! யாரக் கேட்றா ஏரப் பூட்னீங்க? அவுத்துவிடுங்கடா."

பெரியமூக்கியும் கருவாச்சியும் பதறி நெஞ்சுலடிச்சு ஓடி வாராங்க.

ஒலக்கையனப் பாத்துக் கேப்பக்களியான் பயந்துபோனாலும் சவட்டையன் சண்ட புடிக்கிறான்.

"இந்தாப்பா! காட்டுக்காரி அவ... காசு வாங்குனவன் நானு. எடையில மறிக்க நீ யாரு?"


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:11 pm

"நான் யாருன்னு கையில சொல்லவா... வாயில சொல்லவாடா? ஏய்! நீ எந்தூர்டா?"

"பின்னத்தேவன்பட்டி."

"சொக்கத்தேவன்பட்டி சும்மா இருக்க பின்னத்தேவன்பட்டிக்கு என்னடா பெரியதனம்?".

இப்பக் குறுக்க வந்து விழுகுறா பெரியமூக்கி.

"ஏலே ஒலக்கையா. இது நல்லால்ல. பொம்பள பாவம் வந்தா நீ புழுத்துச் சாவடா." "நாங்க புழுத்துச் செத்தா, நீ செத்துப் புழுக்கப் போற... போடி கெழவி, போடி!" சலம்பல்பாண்டி புடிச்சு ஒரு தள்ளுத் தள்ளவும், மாட்டுக் கால்களுக்கு மத்தியில ஓடி விழுந்து போனா பெரியமூக்கி.

"யாத்தே"ன்னு கத்தி, கருவாச்சி ஆத்தாளத் தூக்கப் போக, "எலே பொண்டுகப் பயல்களா! கெழவியையும் மகளையும் ஏண்டா இந்தப்பாடு படுத்திறீக?"ன்னு சவட்டையன் சத்தம் போட, நேக்கா இடுக்குல மளார்னு உள்ள புகுந்து, சவட்டையன் சங்கப் புடிச்சுப் புட்டான் பன்னியாம்பேரன்.

"நீ யார்றா அதக் கேக்க? கருவாச்சிய நீ வச்சிருக்கியா?".

"ஏய்... ஏய்... இது நல்லால்ல."

"அப்ப, அவ ஆத்தாள வச்சிருக்கியா?".

"ஏய்! அவ எனக்கு நல்லத்தாடா. கருவாச்சி எனக்கு அக்கா தங்கச்சிடா."

"ஒறவுமொறை தெரியுதுல்ல... ஊருமொறை தெரியுதா ஒனக்கு? எங்கள மீறி எவனும் இந்தக் காடு உழுகப்படாது. ஒன் மாட்ட அவுத்துட்டு ஓடிப்போயிரு."

ஒழவுமாடுகளத் தும்பு திரிச்சுவிட்டு அதுக வாலுகள ஆளுக்கொருத்தனாக் கடிக்க, "விட்டாப் போதுமடா சாமி"ன்னு ஓடுதுக ரெண்டும். ஒழவு காட்டு வழியே மாடுக பின்னாலேயே வெரட்டிப்போறான் கேப்பக் களியான்.

"இது என்னடா இது... கேணப்பயக ஊர்ல கிறுக்குப் பய நாட்டாமையா இருக்கு?"ன்னு உழுதவரைக்கும் போதும்னு ஒத்தமாட்ட அவுத்துட்டு வெளியேறிட்டான் சவட்டையனும். வந்த சோலி முடிஞ்சுதுடா சாமின்னு தவ்வாளம்போட்டு ஓடிப்போயிட் டானுக காலிப்பயலுக.

ஆகாயத்துக்குக் கீழ அந்த அத்துவானக் காட்ல ரெண்டு பொம்பளையும் ஒரு பசுமாடும் அனாதையா நிக்கிறதப் பாத்து விக்கி விக்கி அழுகுறான் ஒண்ணும் பண்ண முடியாத கொண்ணவாயன்.

மகளக் கட்டிப்புடிச்சு ஆத்தா அழுக... ஆத்தாளத் தேத்தி மக அழுக... "பொட்டைகள இப்படி அழுகவைக்கிற பழக்கமெல்லாம் எங்க மாட்டு சாதியில கெடையாது"ன்னு பசுமாடு பாத்தழுக...

எழவு வீடாகிப் போச்சு ஒழவு காடு!

மூணாம் குறுக்கம் மூணு சாலு இன்னும் உழுகல. வெதச்ச வெத பூமியில கெடக்கு. இன்னைக்குள்ள உழுகாட்டி, சோளத்தப் புறா தின்னுட்டுப் போயிரும். மொச்சை, கல்லுப்பயிரு, தட்டாம்பயிரக் காடை கதுவாலிக முழுங்கிட்டுப் போயிரும். எள்ளு, காணப்பயிர எறும்பு இழுத்திட்டுப் போயிரும்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:13 pm

[You must be registered and logged in to see this image.]


படக்குன்னு எந்திரிச்சா கருவாச்சி.

"அழுகாத ஆத்தா"ன்னு கண்ணத் தொடச்சா; வெட்டருவாள எடுத்து நட்டுவச்சா வரப்புல. ஏர்க்கால்ல ஒரு பக்க நேக்கால்ல ஒத்தப்பசு நிக்க, மறுபக்க நேக்காலத் தூக்குனா. பசு ஒயரத்துக்கும் தன் நெஞ்சுக்கும் நேக்கால நேர் பண்ணினா.

"அது ஒத்தமாடு; நான்தாண்டி ஆத்தா ஒன் தொத்த மாடு. ஓட்டு ஏர"ன்னா.

மூக்கச் சிந்தி எறிஞ்சு எந்திரிச்சு, ஒரே ஏர்க்கலப்பையில ஒரு பக்கம் பசுவையும் மறு பக்கம் மகளையும் பூட்டி உழுது வாராய்யா பெரியமூக்கி. தலைக்கு மேல பறந்துபோற சாயங்காலப் பறவைக இந்த பூமியில இப்படி ஒரு கூத்தும் உண்டுமான்னு வானத்துல கொஞ்சம் நேரம் நின்னுபாத்து நிதானமாப் பறக்குதுக. அவ உழுக உழுக செம்மண்ணா ரத்தம் கசியுது பூமி. உழுதுமுடிச்சு, மகளக் கட்டிப்புடிச்சு அவ அழுக, "நானும் ஒம் மகதான; என்னியக் கட்டிப்புடிச்சு அழுக மாட்டியா?"ன்னு பசுமாடு ஒரு பார்வ பாக்க, ரெண்டு மகள்களயும் கட்டிப்புடிச்சு, '"நான் பெறந்த நேரந்தான் நல்லால்ல; நீ பெறந்த நேரமும் நிம்மதியில்லையே"' ன்னு காடு தீப்புடிக்கக் கத்தி அழுகிறா பெரியமூக்கி.

இந்த வேதனையக் காணப் பொறுக்காம நெஞ்சப்புடிச்சுக்கிட்டே மலைக்குப் பின்னால போயி விழுகுது சூரியன்! குங்குமம் திட்டிக்கொண்டே

ஊருக்கே தெரியுது, கட்டையன் ஆளுக பெரியமூக்கி ஒழவு காட்டுல ஏர்மாடுகள மறிச்சுத் தும்பு திரிச்சுவிட்டதும்; ஆத்தாளும் மகளுமா உழுது அழுது வந்ததும். பாவிப்பய இன்னும் என்னென்ன வேசங் கட்டி வெளியேறப் போறானோன்னு ஊரு பதறுது.

"இத விடப்படாது; உருமாப் பெருமாத்தேவருகிட்டயும் சுப்பஞ்செட்டிகிட்டயும் ஒப்பிக்க வேண்டியதுதான்" கூழ்ச் சட்டியில் புடிச்ச அடிக்கறுப்ப, காக்காச் சிப்பியவச்சு "சொர்று சொர்று"ன்னு சொரண்டிக்கிட்டே அவ யோசிக் கறப்ப, நேத்து வெதச்ச ஒழவுக் காடு பாக்கப் போயிருந்த கொண்ணவாயன், ஒரு மாதிரி கலவரத்தோட ஓடி வர்றான். தவிப்படங்காமப் பேசறான் மூச்சு வாங்கிக்கிட்டே.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:20 pm

[You must be registered and logged in to see this image.]"பே... பே... பே... பெரியாத்தா, ஊ... ஊ... ஊ... ஊர்க் காடுக எல்லாம் நெ... நெ... நெருக்கி மொளைச்சிருக்கு. நம்ம காடு மட்டும் அ... அ... அ... அங்கொண்ணும்... இ... இ... இ... இங்கொண்ணுமா மொளச்சிருக்கு..."' விட்டா அழுதிருவான் போலருக்கு.

"கெக்கக் கெக்கக் கெக்கே"ன்னு சிரிக்கிறா பெரியமூக்கி.

ரொம்ப நாளைக்கப்புறம் ஆத்தா சிரிக்கிறாளேன்னு அண்ணாந்து பாக்குறா கொட்டத்துல வெளக்கமாற வச்சு சாணியோட சண்ட புடிச்சுக் கிட்டிருக்கிற கருவாச்சி, தண்ணி குடிச்ச பசுவும் பாக்குது தலையத் தூக்கி.

பெரியமூக்கி சொல்றா: '"வெதைச்சு வீடு வந்தா விடிய்ய மொளைச்சிருமா ஒழவுகாடு? அதுக்கு ஒரு கணக்கு இருக்குடா மகனே! ஏழு நாளு ஆகும் மொச்சையும் தட்டாம்பயிறும் மொளைக்க. கல்லுப்பயிறும் சோளமும் மொளைக்க நாலு நாள் ஆகும். மூணு நாள் ஆகும் எள்ளு மொளைக்க. காணப்பயிறு ஒண்ணுதாண்டா ஒரே ராத்திரியில மண்ணுக்குள்ள மலந்து விடிய்ய மொளைச்சிருக்கும். நீ காணப்பயிறு மொளச்சத மட்டும் பாத்துட்டு வந்திருக்கடா கேணப்பயலே. போடா! போயி வேலயப் பாரு... இந்தாத்தா கருவாச்சி! கும்பாவுல கூழு ஊத்திவச்சிருக்கேன் கொண்ண வாயனுக்கு. பாவம்... ஒரு பட்டமொளகா இருந்தா சுட்டுக் குடு.

பெருமாத்தேவர் வீடு வரைக்கும் ஒரு எட்டுப் போயிட்டு வந்திடுறேன்".

உருமாப்பெருமாத்தேவரும் சுப்பஞ்செட்டியாரும் பொடிநடையாப் பொழுதுசாயப் போனப்ப மேல் குளிச்சுக்கிட்டிருந்தாரு சடையத் தேவர்.

வெதுவெதுங்குற வெந்நி வெளாவி, கைக்கு வாட்டமா அண்டாவ ஒரல்ல தூக்கிவச்சு ஒசரம் பண்ணி, குளிக்கை யில ஒரு அலுப்பு வந்ததுன்னா ஒக்காந்து அழுக்குத் தேய்க்க ஒரு தலைப்பலகையும் வாசல்ல போட்டு, முன் அண்ணாக்கயித்துல சொருகுன கோவணத்த இழுத்துப் பின் அண்ணாக்கயித்துல சொருகிக்கிட்டே "வாங்கப்பா"ன்னாரு.

அவரு சொருகறதுல தப்புக்கிப்பு வந்திரக் கூடாதேன்னு சாமியக் கும்புட்டுக்கிட்டு "வாரோம்"ன்னாங்க ரெண்டு பேரும்.

வயசான காலத்துல முக்கிமுக்கி வர்ற மூத்திரம் மாதிரி சன்னமா கால்வழியா வெந்நி ஊத்திப் பதம் பாத்து நிக்கிற சடையத்தேவரக் கோவணத்தோட பாத்தா, பெரியாளுக செத்துப்போனா அரைக் கம்பத்துல பறக்குமா இல்லையா கொடி... அப்படியிருக்கு.

"என்னாப்பா தெக்கும் வடக்கும் சேந்து வந்தது மாதிரி ஊர்ப் பெருசுக ரெண்டும் ஒண்ணா வந்திருக்கீக?"

திண்ணையில கெடந்த கோழிப் பீய வைக்கோல் எடுத்து வழிச்செறிஞ்சிட்டு ஒக்காந்தாக பெரிசுக ரெண்டு பேரும். சடையத்தேவரு குளிக்கிற கண்காட்சியக் கண்டுக்கிட்டே.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:22 pm

[You must be registered and logged in to see this image.]"வேறொண்ணுமில்லப்பா... இந்த வருசம் நல்ல மழ. காடுகரையெல்லாம் வெதப்பாகிப்போச்சு."

"இதச் சொல்லத்தான் வந்தீகளாக்கும். நான் வெளியூருக்காரன்; இன்னைக்குத் தான் புதுசா இந்த ஊருக்குக் குடி வந்துருக்கேன் பாரு..."

"அதுக்கில்லப்பா... மழ எல்லாருக்கும் பொதுவாப் பெய்ற மாதிரி நீதி நேர்மையும் எல்லாருக்கும் பொதுவாயிருக்கணும்ல..."

"நூத்துல ஒரு பேச்சு. அதுக்கு என்ன இப்ப?"

"வேறொண்ணுமில்லப்பா... அத்துவிட்ட கழுதையப் பொழச்சுப் போடீன்னு சொல்றத விட்டுப்புட்டு, அவுக குடிக்கிற கூழ்ல ஏன் மண்ணள்ளிப் போடணும்?" தொடை வழியா வெந்நி ஊத்தி சொகத்தக் கால்ல இருந்து தரை வரைக்கும் விஸ்தாரமாப் பரவவிட்டு, "தீரப்போகுதுடா அந்த சொகம்"ங் கிறப்ப இன்னொரு கால்ல ஊத்திக் கிட்டே, "யாரு கூழு..? யாரு மண்ணு..? பிடிபடலையேப்பா"ன்னு பிடிகுடுக் காமப் பேசுறாரு சடையத்தேவரு.

"இது என்னாப்பா கதையாயிருக்கு... பழந் தின்ட கொரங்கு கொட்டையறியாதா? ஒழவுகாட்ல போயி ஏர மறிக்கிறதும் பொட்டச்சி களப் புடிச்சுத் தள்ளறதும் நல்லாவா இருக்கு?"

"சாமி சத்தியமா நான் பாக்கலப்பா..."

"நீ பக்கத்துல இருந்து பாத்தேன்னா சொல்றோம். நாளப்பின்ன இது நடக்கப்படாதப்பா.

கட்டையனுக்கும் சொல்லிவை."

"தலைக்கு மேல வளந்த பய... தகப்பன் பேச்சக் கேக்குறானா? கேக்குறேன்."

ஒடம்பு நனையத் தண்ணி ஊத்தி, ஒக்காந்து கால் நீட்டி, எட்டிய பாகத்தக் கையாலயும் எட்டாத பாகத்தச் சொம்பாலயும் அழுக்குத் தேச்சு, பித்த வெடிப்புல வரிவரியாப் பொளந்து நிக்கிற குதிகால அண்டா வச்சிருந்த ஒரல் அடிவாரத்துல கரகரன்னு தேய்க்கவும், விறுவிறு விறுன்னு வெளியேறுதுக உள்ளயிருந்த சீவராசிக.

பெருமாத்தேவரும் சுப்பஞ்செட்டியாரும் வெளியேறிட்டாக.

மூணு வாரமாச்சு. பாக்கப் பாக்க ஆசையா இருக்கு பயிர் மொளைச்ச காடு. சும்மா பச்சைத் தீப்புடிச்சு எரியிற மாதிரியிருக்கு பூமி. ஒரு சாண் உயரத்துக்கு வளந்து தோகையைச் சொழட்டி சிலம்பாடி நிக்கிற சோளப்பயிரும், மொளைச்சு எந்திரிச்சுக் கொடியோடப் பாக்கிற பயத்தஞ் செடிகளும் ஒனக்கு நான் மெதமானு ஒண்ண ஒண்ணு பாத்துச் சிரிச்சுக்கிட்டே காத்தோட பலிஞ்சடுகுடு ஆடிப் பழகுதுக.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by சிவா on Mon Apr 26, 2010 11:22 pm

ஒரு சின்னத் தூத்த விழுந்தாப் போதும்; பதம் கெடைக்கும்; ஒரு வாரத்துல களையெடுத்திரலாம். என்னமோ கடனுக்கு வட்டி மாதிரி காடெல்லாம் மண்டிக்கெடக்கு களை.

அறுகு மகிழி தொகிழி ஊசிக்கோரை குப்பமணி குமிட்டிக்கீரை தும்பை நெருஞ்சி ஆடுதின்னாப்பாலை நாயுருவி எல்லாம், எங்களுக்கும்தான் இந்த பூமி சொந்தம்னு ஏகத்துக்கும் மொளைச்சுக் கெடக்க, சாரணத்தி அடச்சுக்கெடக்கு சரஞ்சரமாக் கொடியோடி.

ஒரு கையில் பசுமாட்டப் புடிச்சு மேய விட்டுக்கிட்டே குத்துக்கல்லு மேல ஒக்காந்து யோசிக்கிறா கருவாச்சி.

"ஆத்தா வெத மட்டுந்தான வெதச்சா... எங்கிட்டிருந்து வந்துச்சு கள? களைக்கு ஏது வெத? பூமியும் பொழப்பும் ஒண்ணுதான் போலருக்கு. நன்மையத்தான் வெதைக்கிறோம். கூடவே தீமையும் மொளைக்குது. தென வெதச்சவன் தெனைய மட்டுமே அறுக்குறதில்லை; களையையும் சேத்துத்தான். வெதச்சு மொளைக்கிறது மதி. வெதைக்காம மொளைக்கிறது விதி. களையக் கொத்தெடுத்துச் சுரண்டி எறியிற மாதிரி விதிய மதியால வெல்லலாமா இல்லையா? பாப்போம்.

செயிச்சா சந்தோசம்... தோத்தா அனுபவம். பாத்திருவோம்."

'கார்த்திகை மாசம் ஏச்சாலும் களையெடுப்பு மழை ஏய்க்காதப்பா!" ஊர்ல சொல்லி அலையுங்க பெருசுங்க. எழுவது எம்பது வருசமா ஆகாயத்தை யும் பூமியையும் பாத்துப் பாத்துப் பழகுன கண்ணுக பொய் சொல்லுமா?

பூவாளி மாதிரி சிந்திச் செதறி விழுந்திருச்சு புரட்டாசி மழை; தூர் நனைய இல்லாட்டியும் வேர் நனைய.

தோள்ல கொத்துவச்சு தூக்குச்சட்டி கையில புடிச்சு, தலையில முண்டு போட்டு, ஊறவச்ச கம்பரிசியோ சாம அரிசியோ வாயில அள்ளிப் போட்டுக்கிட்டு ஊர மென்டுக்கிட்டு, தெசைக்கு அம்பது அறுவது ஆளாப் போறாக பொம்பளை ஆளுக.

அப்ப...

ஊருக்குள்ள காடு கரைகள்ல ஊடுருவி வாரானுங்க கட்டையன் ஆளுக.

"ஏ மாயக்கா! களையெடுக்க ஒனக்குச் சம்பளம் எம்புட்டு?"

"அர ரூவா."

"களையெடுக்காம இருக்கச் சம்பளம் முக்கா ரூவா. போகாத கருவாச்சி காட்டுக்கு; ஒன் ஆளுகளை யும் போகவிடாத."

மாயக்கா வெல போயிட்டா.

"இந்தா பாரு மொண்டியம்மா, கருவாச்சி காட்டுக்குக் களையெடுக்கப் போறதாயிருந்தாப் போ... அப்பறம் எங்க காட்டுக்கோ, எங்க பங்காளிக காட்டுக்கோ ஆயுசு பரியந்தம் வேலைக்குக் கூப்பிட மாட்டோம். யோசிச்சுக்கம்மா. மூணு குறுக்கம் முக்கியமா... முப்பது குறுக்கம் முக்கியமா?"

மொண்டியம்மா மெரண்டு போனா.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum