புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாதசுரமும் வாத இருதய நோயும் Poll_c10வாதசுரமும் வாத இருதய நோயும் Poll_m10வாதசுரமும் வாத இருதய நோயும் Poll_c10 
30 Posts - 71%
heezulia
வாதசுரமும் வாத இருதய நோயும் Poll_c10வாதசுரமும் வாத இருதய நோயும் Poll_m10வாதசுரமும் வாத இருதய நோயும் Poll_c10 
11 Posts - 26%
mohamed nizamudeen
வாதசுரமும் வாத இருதய நோயும் Poll_c10வாதசுரமும் வாத இருதய நோயும் Poll_m10வாதசுரமும் வாத இருதய நோயும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாதசுரமும் வாத இருதய நோயும் Poll_c10வாதசுரமும் வாத இருதய நோயும் Poll_m10வாதசுரமும் வாத இருதய நோயும் Poll_c10 
72 Posts - 66%
heezulia
வாதசுரமும் வாத இருதய நோயும் Poll_c10வாதசுரமும் வாத இருதய நோயும் Poll_m10வாதசுரமும் வாத இருதய நோயும் Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
வாதசுரமும் வாத இருதய நோயும் Poll_c10வாதசுரமும் வாத இருதய நோயும் Poll_m10வாதசுரமும் வாத இருதய நோயும் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
வாதசுரமும் வாத இருதய நோயும் Poll_c10வாதசுரமும் வாத இருதய நோயும் Poll_m10வாதசுரமும் வாத இருதய நோயும் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாதசுரமும் வாத இருதய நோயும்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 12:39 am

(RHEUMATIC FEVER AND RHEUMATIC HEART DISEASE)

மிகவும் தாக்கமான வாதசுரத்தை

எப்படிக் கண்டுபிடிப்பீர்.

ஒரு பிள்ளைக்கு மூட்டுக்களில் நோவோடும் வீக்கத்தோடும் காய்ச்சல் இருந்தால் அது வாதச் சுரமாக இருக்கலாம் என்பது தெரிந்து கொள்ளவேண்டும். இதனால் முழங்கால், கணுக்கால், முழங்கை, மணிக்கட்டு போன்ற மூட்டுக்கள் தாக்கம் அடையும். வேறு சில மூட்டுக்களும் பாதிக்கப்படலாம். அதிகமாக வீக்கத்தை விட நோவு தான் கூடுதலாக இருக்கும். ஒரு மூட்டிலே நோவு குறைந்து போக இன்னோரு மூட்டில் நோவு தோன்றலாம். இந்த வீக்கம் சில நாட்களின் பின் தானாகவே வற்றிப் போகும். இந்நோயின் அறிகுறிகள் பலதரப்பட்டவை. ஒருவரில் இருந்து மூட்டு வீக்கமானது அவரைப் படுக்கையாக்கி வைத்தியரின் உதவியை நாடவேண்டிய நிலையை உண்டாக்கும். வேறொருவரின் வீக்கம் தென்படாது நோயும் அறியப்படாது போய்விடும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு களைப்பு, பசியின்மை, மூச்சு விடுவதில் கஷ்டம் போன்ற அறிகுறிகள் காணப்படும். மூட்டுக்கள் மட்டுமல்ல அவர்களின் இருதயமும் பாதிக்கப்படலாம். சிறுவர்களுக்கு இருதய பாதிப்புக்குரிய அறிகுறிகள் அதிகம் எற்படாத காரணத்தினால் அவர்கள் இது பற்றி எதுவும் கூறமாட்டார்கள் .மூட்டுக்களில் தாக்கம் இல்லாமலும் இந்தக் காய்ச்சல் வரலாம். ஆனால் இயற்கைக்கு மாறாக ஒரு கையில் இழுப்பு இருக்கும். இந்த நிலையை றுமற்றிக் கோறியா என்பர். 2 தொடங்கி 4 வாரங்களுக்கு முன்னதாக ஒரு நோயாளிக்கு தொண்டைப்புண் நோய் இருந்திருந்தால் அதைத் தொடர்ந்து காய்ச்சல் வரும்.போது அல்லது முன்பு ஒருமுறை இந்த நோய் ஏற்பட்டிருந்தாலும் திரும்பக் காய்ச்சல் வந்தால் அது வாதச் சுரமாகவும் இருக்கலாம்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 12:40 am

வாதச்சுரத்தை அறிந்து கொள்ள என்ன ஆய்வு கூடச் சோதனைகள் செய்யப்படுகின்றன?

நோயின் அறிகுறியில் இருந்தே வைத்தியர் அதைத் தெரிந்து கொள்வர். பிரிவு A பீற்றர் கீமோலிற்றிக் ஸ்றெப்றோகோக்கஸ் என்னும் தொண்டையில் வளரும் கிருமியை வளர்ப்பு ஊடகத்தில் வளரச் செய்யலாம். நோயாளியின் குருதியை உபயோகித்து ஏஸ் றி, எஸ் ஆர் என்ற இரண்டு வகை சோதனைகளைச் செய்யலாம். இதயம் பாதுக்கப்பட்டிருப்பின் சீ ஜீ எக்ஸ்கதிர் படம் பரீட்சைகளையும் மேற் கொள்ளலாம்.

சுரம் எப்படி பராமரிக்கப்படுகிறது.?

இந்த நோய் ஒரு பிள்ளைக்கு வந்தால் அவரை முதலில் வைத்தியரிடம் காட்டவேண்டும். நோவுக்கும் வீக்கத்திற்கும் மருந்து கொடுக்கலாம். தொண்டையிலிருந்து கிருமியைக் கொல்ல பென்சிலின் கொடுக்கலாம். இருதயத்துடன சம்பந்தம் ஏற்பட்டிராத நிலையில் இந்தப் பிள்ளைகள் 1 வாரம் 10 நாட்களில் வீட்டுக்குச் செல்லலாம். வீட்டிலே சில காலம் ஓய்வு எடுத்த பின் பாடசாலைக்குச் செல்லலாம். ஆனால் அடிக்கடி இவர்களை மருத்துவமனையில் தொடர்ந்து காட்ட வேண்டும்.

சுரம் திரும்பத் திரும்ப வருமா?

இந்த நோயில் தொண்டை மீண்டும் மீண்டும் பாதிப்படையும். இதனால் இருதயத்தின் வால்வுகள் பாதிக்கப்படும். இவ்வாறு மீண்டும் தொற்றுவதைத் தடுக்க மருந்துகள் உண்டு.

இருதய வாத நோய் என்றால் என்ன?

இருதயமும், மூட்டுக்களும் பாதிப்படைவது இந்நோயோடு சம்மந்தப்பட்ட இரண்டு பெரிய அறிகுறிகள். வாத மூட்டு வலி மூட்டுக்கு எந்த விதமான தீங்கும் ஏற்படுத்தாது. தானாகவே மாறிவிடும். ஆனால் இருதயம் சம்பந்நதப்பட்டால் இருதய வால்வுகள் நிரந்தரமாவே பாதிக்கப்பட்டுவிடுகின்றன.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 12:40 am

இருதய வாதசுரத்தின் அறிகுறி என்ன?

சாதாரணமாகக் களைப்பும், சுவாசிப்பதற்குக் கஷ்டமாக இருப்பதுவுமே இந்த நோயாளிகளில் காணப்படும் அறிகுறிகள். மயக்கமும், இருதய படபடப்பும் காணப்படலாம். சிறுவர்களில் வாதசுரம் முதலில் ஆரம்பமாகிறது. பல வருடங்களுக்குப் பின்பு அவர்கள் இன்னும் இளமையாகவும் பாடசாலையில் கற்றுக்கொண்டிருக்கிற காலங்களில் இருதய நோய்க்குரிய அறிகுறிகள் ஆரம்பமாகின்றன. இந்த நோயினால் சிறுவர்கள் நன்றாக வலுவிழந்து போவது ஒரு மிகவும் துக்கமான காரியம். ஆகவே இதற்குரிய தடுப்பு வழிவகைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இருதய வாதசுரத்தை எப்படி இனங் கண்டு கொள்வது?

ஒரு பிள்ளைக்கு வாதக்காய்ச்சல் இருக்கிறது என்று கண்டுபிடிக்கும் போதே அவர்களுடைய இருதய வால்வும் பாதிக்கப்பட்டதற்குரிய குணங்குறிகளும் இருக்கலாம். சிலரில் இந்தக் காய்ச்சல் வந்து சில மாதங்கள் அல்லது வருடங்களுக்குப் பின்பு தான் அவர்களின் இருதய வால்வுகளில் பாதிப்பிற்குரிய அறிகுறிகள் புலனாகும். பிள்ளையை ஸ்ரெதஸ்கோப் பரிசோதனைகள், எக்ஸ்ரே, ஈசிஜி, எக்கோ போன்ற சோதனைக்கு உட்படுத்துவதனால் இந்நோயைக் கண்டுபிடிக்கலாம். இவர்களுக்குச் சிலவேளை ஒரு வித அறிகுறிகளும் காணப்படமாட்டா. எனினும் இருதய வால்வில் சேதம் என்பது பிள்ளைகளிடத்தில் அதிகம் காணப்படும் ஒன்று (முன் வாதக் காய்ச்சலை கவனித்து வைத்தியம் செய்யாதிருந்தால்) வேறு நோய்களின் போதோ அல்லது பாடசாலை வைத்திய பரிசோதனையின் போதோ இது தெரிய வருகிறது. ஆரம்பத்தில் அறிகுறிகள் காணப்பட்டவுடன் மருந்துகளினால் குணமாக்கலாம். வால்வின் சேதம் பாரதூரமாக இருப்பின் சத்திரசிகிச்சை மூலமாகவோ மாற்று வால்வு அமைப்பதன் மூலமாகவோ இதை நிவிர்த்தி செய்யலாம். இந்த அறுவைச் சிகிச்சை இலங்கையிலேயே செய்யப்படுகிறது.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 12:41 am

வாத சுரத்தைத தடுக்க முடியுமா?

ஆம்

இந்தக் காய்ச்சலைத் தடுக்க முறைகள் உண்டு. இவை 2 தலையங்கங்களில் பார்க்கலாம். 1. முன்பு ஒருபோதும் காய்ச்சல் வராதவர்களுக்கு நேரத்தோடு தொண்டை நோயைக் கண்டுபிடித்து தகுந்த சிகிச்சை செய்வதன் மூலம் வாத சுரம் வராது தடுக்கலாம். பொதுவான சுகாதார விதிமுறைகளைக் கைக் கொள்வதுடன் நெருக்கமற்ற நல்ல காற்றோட்டமுள்ள வீடுகளில் வசிப்பதனால் இந்நோயிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். உலகிலேயே வசதியுள்ள அல்லது செல்வாக்கு நிறைந்த நாடுகள் இப் பொதுவான சுகாதார விதிகளைக் கையாண்டு இந் நோயைத் தமது நாட்டிலிருந்து முற்றாக நீக்கி விட்டார்கள். 2. முன்பு ஒரு முறை இந்நோய் வந்தவர்களுக்கு மீண்டு வராது தடுக்கும் வழிவகை பென்சிலினைத் தொடர்ச்சியாகக் கொடுப்பதனால் தொண்டையில் வளரும் கிருமியை நீக்கலாம். இப்படிச் செய்வதனால் மீண்டும் வாதசுரம் வராது தடுக்க பென்சிலின் மருந்தை ஊசி மூலமாக மாதம் ஒரு தடவை அல்லது ஒவ்வொரு நாளும் ஒரு குளிகை மூலமாகவோ கொடுக்கலாம். சிலருக்கு பென்சிலின் ஒத்து வராது. அப்படிப்பட்டோருக்கு சல்வடயிசின் அல்லது எரித்துரோமைசின் எனும் குளிசையை கொடுக்கலாம். ஒழுங்காக பென்சத்தின் பென்சிலினை கொடுத்தால் அதுவே இந்நோய்க்கு அதிக சக்தி வாய்ந்தது.

இளம் வாலிபருக்கு மாதம் ஒருமுறை ஊசி மூலமோ அல்லது நாள்தோறும் வில்லை மூலமோ பென்சிலினை எடுப்பது அவ்வளவு விருப்பம் இல்லை. தாம் சுகமாகவே இருக்கிறோம் என்று இந்த அறிவுரையை அசட்டை செய்கிறார்கள். ஆனாலும் இந்த வாதச் சுரம் மீண்டும் வராதபடி இந்த சிகிச்சையை எடுப்பதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு அறிவு கூறுதல் வேண்டும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 12:43 am

பென்சிலின் மருந்தை எவ்வளவு காலம் எடுக்க வேண்டும்?

முன் ஒரு முறை வாதச் சுரம் வந்தவர்களுக்கு இது திரும்ப ஒருமுறை வராதபடி பின்வரும் அறிவுரைகளை கூறலாம்.இந்நோய் இதயத்துடன் சம்பந்தப்படாவிடின் நோய் கடைசியாக வந்ததிலிருந்து 5 வருடங்களுக்கோ அல்லது 18 வயது வரைக்கோ தொடர்ச்சியாக பென்சிலின் எடுக்க வேண்டும்.

இந்த நோயாளருக்கு இவற்றை விட வேறு ஏதாவது அறிவுரைகள் கூற உண்டா?

முன்பே இதயவால்வுகளில் சேதம் ஏற்பட்டிருப்பவர்களுக்கு இன்னும் கூடிய சேதம் எற்பட வாய்ப்புண்டு. பற்சிகிச்சையின் போது இப்படியான நிலை ஏற்படலாம். பற்சிகிச்சையின் போது வாய்ககுழியில் இருக்கும் நோய்க்கிருமிகள் இரத்தத்தில் சேரும். இரத்தத்தில் சேர்ந்த கிருமிகள் இதயத்திற்கு கொண்டு செல்லப்படும். இவை பாதிக்கப்பட்ட இதய வால்வுகளில் தொற்றுதலை ஏற்படுத்தும். இந்நிலை இன்வெக்ரிவ் என்டோகாடைறிஸ் என்று கூறப்படும். பற்சிகிச்சையின் பின் சில நாட்கள் அல்லது சில வாரங்களுக்கு இது எற்படலாம். இது மிகவும் ஆபத்தான நிலைமை ஒன்றாகும். இதனால் இதயத்திற்கு கூடிய பாதிப்போ அல்லது மரணமும் கூட ஏற்படலாம். ஆகவே இந்த வாதச் சுரத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் பற்சிகிச்சைக்கு போகும் போதும் வேறு சிகிச்சைக்கு போகும் போதும் வியாதி நிர்ணய அட்டையை கூடவே வைத்துக் கொள்ளவும், வைத்தியருக்கு கூறவும் வேண்டும். அப்பொழுது அவர் வைத்தியம் தொடங்கும் முன்னரே கிருமிகளை அழிக்க மருந்தைக் கொடுப்பார். அப்படியில்லாவிடின் இந்த விடயத்தில் அனுபவமுள்ள வேறு எவரிடமும் ஆலோசனையை பெற்றுக்கொள்ளலாம். பற்சிகிச்சைக்கு மட்டுமல்ல வேறு சில நிலைகளிலும் நோய்க்கிருமிகளை கொல்லும் மருந்து வகைகளை பாவிக்க வேண்டும். ஆகவே எந்த வைத்தியரிடம் என்ன சிகிச்சைக்கு போனாலும் அவர்களுக்கு உங்களது வியாதி நிர்ணய அட்டையை காட்டத் தவறவேண்டாம்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 14, 2010 12:44 am

வாதச் சுரம் இருக்கும் போது நான் கர்ப்பம் தரிக்கலாமா?

கர்ப்பிணியாக இருக்கும் போது இதயத்திற்கு மேலதிக வேலை கொடுக்கப்படுகிறது. ஆகவே அது கூடுதலாக வேலை செய்ய வேண்டும். வால்வுகள் கூடுதலாக பழுதடைந்து இருந்தால் இந்த வேலையை செய்ய இதயத்திற்கு கஷ்டமாக இருக்கும். ஆகவே கர்ப்பம் தரிப்பதற்கு முன் உமது வைத்தியரிடம் ஆலோசனையை பெறுவது நலம். இவ்வித இதய வால்வுகளில் பாதிப்பு உடையவர்களில் அனேகர் இலேசாக எதுவித பிரச்சனையுமின்றி பிரசவ காலத்தை கடந்து போகிறார்கள் என்பது உண்மை. எனினும் அடிக்கடி கர்ப்பவதித் தாய்மார்கள் சோதனை நிலையத்துக்கு போய் வைத்தியருக்கு உங்களை காண்பித்து வருவதுடன் பிரசவத்தின் பின் கூடிய காலம் வைத்திய சாலையிலிருப்பது நன்று.

மேற்குறிப்பட்டவாதஇருதயநோய்இருக்கும்போதுநான்விளையாட்டுக்களில்பங்குபற்றலாமா?

ஆம். ஆனால் நீர் எப்படிப்பட்ட விளையாட்டில் சேரலாம் என்பதும் எவ்வளவிற்கு போட்டியில் ஈடுபடலாம் என்பதும் உமது இருதய நிலையில் தங்கியிருக்கிறது. உமது வைத்தியர் இது விடயம் பற்றி உமக்கு அறிவுரை கூறக்கூடும்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக