ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆன்ம தத்துவம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஆன்ம தத்துவம்

Post by சிவா on Thu Mar 18, 2010 12:13 am

ஆன்மஞானம்

ஆன்மாவும் அதன் ஆற்றலும் எண்ணிலா கோடி அண்டங்கள் பேரண்டங்கள் இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்குவது, அடிப்படையாக இருப்பது, ஒரு அணுசக்தி. அதையே சித்தர்கள் ஞானிகள் பரமாணு என்று சொல்கிறார்கள்.


பரமாணு


பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமாணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட, பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றன. அதையே பரமாத்தமா என்றனர். அதே மூல அணுவின் ஆற்றலோ ஒவ்வொரு ஜீவராசிகளின் இயக்கங்களுக்கும் காரணமாக விளங்குவதால் ஜீவாத்மா என்றனர். ஆகவே ஆன்மா என்பது அளப்பறிய ஆற்றல் மிக்கது. அந்த ஆற்றல் நம்மிடம் உள்ளது, உருவமாற்றது, அதன் சக்தியை, ஆற்றலை, உணர்ந்தவர்கள் மட்டுமே பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்த முடியும்.

நம்மிடம் உள்ள மகத்துவம் வாய்ந்த ஆற்றல் மிக்க ஆன்மாவின் சக்தியை உணர்ந்து அதை நமக்காகப் பயன்படுத்திக் கொள்வதுதான் ஆன்மஞானமாகும். ஆனால் நம்மிடம் உள்ள ஆன்மாவின் ஆற்றலைப் புரிந்து கொள்ளாமல், நம்மிடம் உள்ள ஆற்றலை எப்படி வெளிக்கொணர்வதுடூ எப்படி இயக்குவதுடூ எனத்தெரிந்து கொள்ளாமல் வாழ்க்கையில் பலவித அல்லல்களுக்கு ஆளாகிறோம். இப்படிப்பட்ட அல்லல்களிலிருந்து விடுதலை பெற முயன்று வெற்றி கண்டவர்கள்தான் ஞானிகளும், சித்தர்களும்.

இறைவன் என்பவன் யார்?

எண்ணிலா கோடி அண்ட பேரண்டங்களின் இயக்கம், கோடான கோடி அணுக்கள், அணுக்கள் தொகுப்பான ஜீவராசிகள் அனைத்திலும் உள்ளும், புறமும், மேலும், வெளியும் அதுவதில் உயிர்சக்தியாக விளங்கும் பேராற்றலே இறைவன். இதை வள்ளலலார் பெருமான் சொல்லும்போது,

குலவு பேரண்டப்பகுதியோர் அனந்த
கோடி கோடிகளும் ஆங்காங்கே
நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும்
நிகழ்ந்த பற்பல பொருள் திரளும்
விலகுறாது அகத்தும் புறத்தும் மேலிடத்தும்
மெய்யறி வானந்தம் விளங்க
அலகுறாது ஒழியாது அதுவதில் விளங்கும்
அருட் பொருஞ்சோதி என் அரசே.

இந்த மாபெரும் இயக்க சக்தியான இறைவன் மனம் என்னும் மாயக்கருவியால் பிறந்தது முதல் இறக்கின்ற வரை நமது உடம்பை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த இயக்க சக்தி நமது உடலில் எப்படிச் செயல்படுகிறது என அறிந்து அதே இயக்க சக்தியை நாம் உணர்ந்து அந்த சக்தியை நம்முடைய உடலையும், உயிரையும் பேணப்பயன்படுத்தும் வழிவகைகளை தெரிந்து கொள்வதே ஆன்மஞானம். ஆன்மஞானம் பெற்றால் நம்முடைய வாழ்க்கையில் துன்பங்கள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்து கொண்டு, வெற்றி கண்டு நிம்மதியாக வாழலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா on Thu Mar 18, 2010 12:13 am

ஞானம்

ஞானம் என்றாலே அறிதல், அறிவின் தெரிந்த நிலை என்று சொல்லலாம். இன்னொரு வகை விளக்கம் ஞாலத்தை அறிதல் என்றும் சொல்லலாம்.

ஆன்மா

ஆன்மா என்றால் நம்முடைய உடலை, உயிரை இயக்குகின்ற எளிதில் புரிந்து கொள்ளமுடியாத சூட்சமக் கருவி என்று சொல்லலாம். உயிர் இல்லையேல் உடல் இருக்காது, உடலை வைத்துத்தான் உயிர் உண்டா? இல்லையா? என்பததை அறிய முடியும். ஆகவே உயிர் உடல் இரண்டையும் இணைத்து வைக்கின்ற ஒப்பற்ற கருவியே ஆன்மா எனப்படுவது. இந்த இரண்டும் அதாவது உடலும், உயிரும் சேர்ந்து செயல்படுகின்ற ஒரு பொருளைத்தான் சீவன் என்கிறோம்.

உயில் சக்தி

உடலின் உள்ளே உயில் சக்தியானது அதாவது வெட்ட வெளியிலே உள்ள ஆற்றல்கள் பிராணவாயுவின் மூலம் மூச்சுக் காற்றால் உடலின் உள்ளே இழுக்கப்பட்டு கோடிக்கணக்கான நமது உடல் அணுக்களுக்கு ஆற்றலைக் கொடுத்து உடலை இயக்க வைக்கிறது. இப்படி இயக்குகின்ற அந்த சக்தியைத்தான் சுருக்கமாக உயில் சக்தி என்கிறோம். உடலின் உள்ளே உயில் சக்தியானது சுழன்று இயங்கும்போது அந்தந்த உடலின் அணுக்கூறுகளுக்கு ஏற்ப உயிரின் சிறப்பாற்றலாக எழும் விளைவுகளே உணர்ச்சிகள். இந்த உணர்ச்சிகளைத் துய்த்து உயிரானது பெரும் உண்மைத் தெளிவு, அறிவு, அல்லது ஞானம் எனப்படும் சீவனின் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே நடைபெற்ற தொடர்பயணமே வாழ்க்கையாகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா on Thu Mar 18, 2010 12:16 am

வாழ்க்கை

வாழ்க்கை என்பது மூன்று அமைப்பிலே செயல்படுகிறது. இயற்கை, சமுதாயம், இன்ப துன்பங்கள். இம்மூன்றும் மனிதன் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. ஆகவே, இம்மூன்று பகுதிகளையும் தெளிவாக ஆராய்ந்து அறிவிலே முழுமை பெற்று வாழ்வதே ஞான வாழ்வு. தெளிந்த நீரிலே நீரின் ஆழத்திலே இருக்கின்ற கற்களை காண்பது போல வெளிச்சத்திலே பொருள்களைக் காண்பது போல ஒரு வியாரியானவனுக்கு தன்னுடைய பொருள் விற்பனை விலைநிர்ணயம் செய்வது எளிது. காரணம் கொள்முதல் விலை தெரிந்தவன் விற]பனை விலை எளிதாக நிர்ணயம் செய்வான். அதைப்போலவே ஆசையினால் குடும்பமும், என்னங்களால் உடலும், அறநெறியால் சமுதாயமும், தத்துவ ஞான விளக்கத்தால்ஞானமும் சமாதான வாழ்வும் நம்மை ஆக்கவும், காக்கவும் உதவுகின்றன. ஆகவே நம்முடைய வாழ்க்கையில் எந்த அளவு ஞானம் இடம்பெறுகிறதோ அந்த அளவிலே நமக்குச் சிறப்பான வாழ்வு இன்புற்று வாழ்கின்ற நிலை, ஆழ்ந்த அமைதி கிடைக்கும்.

ஆன்ம ஞானம் என்பது சுடர்விட்டு பிரகாசிக்கும் விளக்கு, இருண்ட வாழ்க்கைக்கு வழிகாட்டி. ஆகவே ஒவ்வொருவரும் ஆன்ம ஞானம் பெற முயலவேண்டும். இயலாதவர்கள் ஞானிகள் வழியைப் பின்பற்றி நடக்க வேண்டும்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்
முதற்றே உலகு.

என்ற வள்ளுவர் குறளின்படி உலகத்து உயிர்கள் முதல் இந்த உலகம் தோன்றுவதற்கு மூலகர்த்தா பகவன் அ என்ற ஒலியால் தோன்றின. ஆகவே அதுவே முதல் ஒலியான அ என்பதாகும். பிராணிகள் முதல் மனிதன் இயந்திரம் வரை வாயைத்திறக்கின்ற துடங்குகின்ற ஒலி அ என்பதாகும். ஆகவே தான் வள்ளுவப்பெருமான் மேற்கண்ட குறளின் மூலம் அ கரத்தை முதன்மைப்படுத்தினார். இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாமே அறிவு சீவன்களாக உள்ளன. ஆனால் மனிதன் என்ற சீவனுக்கு மட்டுமே சிறப்பறிவு உண்டு. இந்த சிறப்பறிவின் மூலம் தெளிந்த நிலைபெற்ற தெளிந்தோரே ஞானிகள் எனஅழைக்கப்படுவர்.

துரிசற்ற தூய அறிவு வடிவான இயற்கையின் நல்ல சக்திகளை நினைத்து உணர்ந்து தெளிவு அடையாவிட்டால் ஒருவன் எத்தனை கற்றிருந்தும் பயன் இல்லை. உலகிலேயே மிகப்பெரிய கல்வி ஒன்ற உண்டு என்றால் அதுவே ஞானக் கல்வி.

ஞானமே கடவுள். ஆன்மஞானம் அடைந்தோரே கடவுள் ஆவார். இயற்கையில் உரைகின்ற பேராற்றலையே இறைவன் என அழைக்கிறார்கள். அகவே இயற்கையே இறைவன். அவன் பாதங்களை வணங்குவதே சிறப்பிறவு ஆகும். அதுவே ஞானமார்க்கத்தின் திறவுகோல் என்பதை மறவாதீர்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா on Thu Mar 18, 2010 12:19 am

மனித அறிவு

7 வகைபிறப்பு, 4 வகைத்தோற்றம், 84 லட்சம் ஜீவராசிகள் அனைத்துமே ஆன்மாக்கள் கூட்டம்தான். ஆனால் இவற்றில் மனிதனுக்கு மட்டுமே சிறப்பறிவு உண்டு. அதைத்தான் ஆறாவது அறிவு என்று ஆன்றோர்கள் கூறுகின்றனர். மனிதனால் மட்டுமே தான் யார்? என்று அறியும் சிறப்பாற்றல் இருப்பதால் மனிதன் மனிதனாகி, புனிதனாகி, பின் கடவுள் ஆகின்ற பேராற்றலைப் பெறமுடிகிறது. அதனால் மனிதன் மிகச்சிறந்தவனாகப் போற்றப் படுகிறான். காரணகாரியங்களைக் கண்டறியும் ஆற்றல் மனித அறிவுக்கு உண்டு. அதனாலே தான் உடல் இயக்கம் என்ற காரியத்திற்கு புலன் இயக்கம் காரணம், புலன் இயக்கத்திற்கு காரணம் எண்ணம், இப்படி ஒவ்வொன்றையும் கண்டறியும் ஆற்றல் மனித ஆன்மாவுக்கு உண்டு. அதனால்தான் புலன்கள் ஐந்தையும் கடந்து அதற்கு மேல் சென்று ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், தோற்றத்திற்கும் காரணம் என்ன? காரியம் எது? என்று கண்டு பிடிக்கும் ஆற்றல் ஆன்மாவிற்கு உண்டு. புலன்கள் கட்டுப்பாடு நீங்கிய ஆன்மா தூய ஆன்மாவாக மாறுகிறது. அந்த தூய ஆன்மாவால்தான் பிற உயிர்கள் பெறுகின்ற துன்பங்கைள, இன்பங்களை, அவற்றின் உணர்ச்சிகளின் அளவுகளை கனித்து இரங்கி உதவும் கருணையுள்ளம் பெறுகிறது. மனிதனின் உடல் கருவிகளுக்குத் தேவையான துணையாக பலவிதமாக ஆயுதங்கள், இயந்திரங்கள் கண்டு பிடித்து, செய்து, பயன்படுத்தவும் தகுதி பெற்றதும் மனித ஆன்மாதான்.


தன் இனம் தோன்றி வழிவழியாக பட்ட அனுபவங்களின் பிரதிபலிப்பாக மனித வாழ்க்கையை வளமாக்கும் ஆற்றலும் இதே மனித ஆன்மாவிற்கு உண்டு. பலகோடி உயிரினங்கள் வாழுகின்ற இந்த பூமியே உலகம். இந்த உலகத்தைப் போன்று எத்தனையோ உலகம் எத்தனையோ கோட்கள் அண்ட பேரண்டங்கள் கொண்ட பிரபஞ்சமாக உள்ளது. இந்தப் பிரபஞ்சத்தில் மனிதன் என்பவன் சிறு அணு போன்றவன் தான். பேரியக்க மண்டலத்தில் மனித ஆன்மா அணுபோன்றது. இருந்தாலும் மனித ஆன்மாதான் இந்த பிரபஞ்சத்தை அளிக்கிறது. பேரியக்க மண்டலத்தின் ஒப்பற்ற சக்திகளை கண்டுபிடிக்கிறது. பேரியக்க மண்டலத்தின் அசைவுகளைக் கூட கணக்கிட்டுக் கூற முடிகிறது. கோட்களின் தோற்றங்களையும், அதன் சஞ்சாரத்தையும், நட்சத்திரக் கூட்டங்களையும் செயல்பாடுகளையும் கணக்கிட முடிகிறது என்றால் பேரியக்க மண்டலத்திற்கு அதன் இயக்கத்தின் ஆற்றல்களை எல்லாம் மனித ஆன்மா கணக்கிடுகின்ற ஆற்றலைப் பெற்றுள்ளது என்றால் இந்த மனித ஆன்மாவிற்கு பேரியக்க மண்டலத்தைப் போன்ற மாபெரும் ஆற்றல் உள்ளது என்பது அறிய முடிகிறது. அந்த ஆற்றல் இல்லையென்றால் பேரியக்க மண்டல நிகழ்ச்சிகள் அறியமுடியாது.


மனித ஆன்மா மகத்தான சக்தி பெற்றது. சிறப்புப் பெற்றது. அதனால் தான் கோட்களில் நடைபெறும் இயக்கங்களையும், அதில் காணும் தோற்றுகளை, குணங்களை, கண்டறிந்து சிறப்பளித்து ஆன்மா வாழ்கிறது. அதன் சிறப்பை மனித ஆன்மா மட்டுமே உணர்கிறது. அதனால் தான் மனித ஆன்மா இயற்கைப் பிரஞ்சத்தை உணர்ந்து போற்றி வழிபட்டு அதில் கலக்க முயற்சிக்கிறது. மனிதன் ஒருவனே இந்த இயற்கையின் பேராற்றல் உண்மையை உணர்ந்தான். ஆன்மாவின் வளர்ச்சி அறிவிலே பரிணாமத்திலே மனித அறிவே முடிவான உச்சமான முடிவைத்தருகிறது. மனித அறிவலேதான் பேரியக்க மண்டல நிகழ்ச்சிகளை அறியமுடிகிறது. பேரியக்க மண்டலத்தின் முடிவுகள் கூட மனித அறிவிலே சங்கமமாகிறது. அத்தகைய அறிவு உடற்கூறு, பெற்றவன் மனிதன்.

அவன் தன் ஆன்மாவை உணர்கின்ற தூய வேரறிவே ஞானம். ஆன்மா தனது தீய பதிவுகளை நீக்கிப் பரம்பொருளை உணர்ந்து மீண்டும் பிறவாத மொழி உணர்ந்த கரையேறவே உடலை கட்டிக் கொண்டது. அதைக் காத்தும் வருகிறது. புலன்களால் சிக்கித் தவித்து கட்டுண்டு மாயை என்கிற விலங்கின் வாயில் அகப்பட்டு அறிவு தெளிவு அற்ற நிலையிலும் அதுவே தன்னுடைய பற்றினால் தெளிந்த அறிவு பெற்று தெளிந்த நிலையிலும் செயலாற்றுகின்றது. மனித உடலை உணர்ச்சி என்ற செயல்பாடு பெரிதும் முடித்துக் கொண்டுள்ளது. மனித உடலில் இரத்தம், வெப்பம், காற்று, அதனதன் பாதைகளில் சீராக செயல்பட்டு வருகிறது.

உடலிலுள்ள அணுக்கள் கூட்டத்திற்கு அதுவே ஆரொக்கியத்தைக் கொடுக்கிறது. இவை சீராக, முறையாக, செயல்படாமல் இரத்தமோ, காற்றோ, வெப்பமோ, மாறுபட்டு செயல்படுமானால் எந்த இடத்தில் மாறுபாடாகச் செயல்படுகிறதோ அந்த இடத்தில் உள்ள அணுக்கூட்டம் நலிவுறும். அப்போது ஜீவசக்தியான உயிருக்குத் துன்பம் என்கிற உணர்வைத்தரும். இத்தகைய துன்பத்தில் இருந்து விடுபட ஏதாவது ஒரு வழியைத்தேடுகிறது. அது ஒரு செயலாகவோ பொருளாகவோ சூழ்நிலையாகவோ இருக்கலாம். இந்தத் தேடலே, நாட்டாகிறது, முயற்சியாகிறது, பின்பு செயலாக்கம். இந்த தேடலின் தொடர்பயணம் துன்ப உணர்வாகவும், தேவையுணர்வாகவும், முயற்சியாவும் செயலாகவும், இன்பதுன்ப விளைவுகளாயும், தெளிவாகவும் முடிவாகவும் விரிந்து செயல்படுகின்றது. இவ்வாறாக உடலோடு கொண்ட தொடர்பால் உயிருக்கு ஏற்படும் அனுபவங்களின் தொகுப்பாக மனம் என்ற சூட்சுமக்கருவி செயல்படு்கிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா on Thu Mar 18, 2010 12:25 am


மனம்


மனதில் உதயம் ஆகும் ஒரு செயல்பாட்டை எண்ணம் என்றுகூறுகிறோம். எண்ணம் என்பது மனதின் ஒரு சக்தி ஆகும். வெட்டவெளி வெளியுலகில் புறப்பொருளிடம் ஆகர்ஷணம் என்ற கவர்ந்திழுக்கும் ஈர்ப்புச் சக்தி இருப்பதைப் போலவும் அந்த ஈர்ப்புச் சக்தியை எதிரிடையாக விலக்கித்தள்ளும் விகர்ஷண சக்தி இருப்பதைப் போலவும் எண்ணம் என்பது மனதில் இருக்கும் ஒருவகை சக்தியாகும். இயற்கையில் எல்லையற்ற ஆற்றல் அடங்கியுள்ளன. இயற்கையான இந்த இயற்கைக் களஞ்சியத்திலிருந்து மனது என்ற கருவியானது சிறிதளவு கிரகித்து எடுத்துக் கொள்கிறது. அவ்விதம் கிரகித்த அந்த சக்தியை மனம் தன்னுடையதாக தனக்குரியதாக ஆக்கிக்கொள்கிறது. பிறகு அந்தச் சக்தியை அது எண்ணங்களாக வெளியே செலுத்துகிறது. இந்த சக்தி நமது உணவின் மூலமும், சுவாசிக்கின்ற காற்றின் மூலமும், உணவின் மூலம் உடல் இயக்கம் நடைபெறுவதுபோல, இதுபோலவே அதே உணவின் மூலம் சூட்சமமான வேறு சக்திகளும் உண்டு பண்ணப்படுகின்றன. இந்த சூட்சும சக்திகளை அது நாம் எண்ணங்கள் என்று சொல்லும் வடிவத்தில் வெளியே துள்ளுகிறது. ஆகவே மனம் என்று சொல்லப்படுவது அறிவுள்ளதல்ல என்பதை அறிகிறோம்.

ஆனால் அது அறிவுள்ளது போல் தோன்றுகிறது. அவ்விதம் அது தோன்றுவாதற்கு என்ன காரணம்? என்றால் அறிவுள்ள ஆன்மா அதன் பின்னால் இருக்கிறது. உண்மையில் ஆன்மா ஒன்றே ஒன்று மட்டும்தான் அறிவுப் பொருளாக இருக்கிறது. மனம் என்பது வெளியுலகத்தை ஆன்மா பற்றுவதற்குப் பயன்படும் கருவியாக மட்டுமே இருக்கிறது. உதாரணமாக இந்தப புத்தகத்தை எடுத்துக்கொள்வோம். புறத்தில் புத்தகம் என்ற வடிவத்தில் இருக்கும். இந்தப்பொருளை உண்மையில் நாம் அறிந்து கொள்வதில்லை. அறிந்து கொள்ள முடியாத இந்தப்பொருள் நமது மனதைச்சென்று தாக்கி ஒரு தூண்டுதலை அதாவது அலைகள் உண்டு பண்ணுகின்றன. இந்த தூண்டுதலுக்கு பதில் தரும் வகையில் மனம் புத்தகம் என்ற வடிவத்தைப் பொருள்படுத்துகிறது.

இவ்விதமாக தண்ணீரில் அலைகள் உண்டாவதைப்போல மனதில் எண்ண அலைகள் தோன்றுகின்றன. வெளியே இருக்கினற உலகம் மனதில் அலைகள் தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது. புகத்தகத்தின் உருவமோ யானையின் உருவமோ மனிதனின் உருவமோ வெளி உலகத்தில் இல்லை. அதாவது அவற்றைப்பற்றி வெளியிலிருந்து வரும் தூண்டுதலுக்குப் பதிலாக நமது மனதில் ஏற்பட்ட விருத்திகளைப் பற்றி மட்டும்தான் நாம் அறிந்திருக்கிறோம். புறத்தில் இருப்பது மனதில் விசத்தியை உண்டுபண்ணுவதற்கு காரணமாக மட்டுமே அமைந்திருக்கிறது.

இந்த உண்மையை விளக்குவதற்கு ஒரு முத்துச்சிப்பியை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். முத்து எப்படி உண்டாகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. புறத்தில் இருக்கும் ஒட்டுண்ணியாக ஒரு கிருமி முத்துச்சிப்பியின் ஓட்டுக்குள் புகுந்து அதை உறுத்துகிறது. அதாவது சிப்பிக்குள் இருக்கும் பூச்சியை அது தினவுக்கு உட்படுத்துகிறது.

இந்த தொந்தரவிலிருந்து விடுவிப்பதற்காக சிப்பி மினுமினுப்பாக ஒருவித திராவகத்தை அதாவது எனாமல் வகையை கக்கி வெளிப்படுத்துகிறது. பிறகு சிப்பி தனக்கு உபத்திரவம் விளைவித்த கிருமியை சுற்றிலும் அந்த எனாமல் பசையைப் பூசிக்கிருமியை மூடி மறைத்து விடுகிறது. இதனால் முத்து உண்டாகிறது. நமது அனுபவத்தில் முத்து உண்டாவதற்கு ஒட்டுண்ணி கிருமி காரணமாக இருப்பதுபோல வெளிஉலகம் நமது அனுபவத்திற்கு அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கிறது. சிப்பிக்குள் கிருமி புகுவது போல் ஐம்புலன்கள் வழியாக புகுந்து பிரபஞ்சம் நமக்குப் புலப்படுகிறது.

சிப்பி எனாமல் பசையை வெளிப்படுத்துவது போல இந்த பிரபஞ்ச செயலை நாம் அறிகிறோம். இவ்விதம் மனதில் நடைபெறும் செயலை சாதாரண மனிதன் ஒருபோதும் அறிந்து கொள்ளமாட்டான். ஏனெனில் அவ்விதம் அவன் தெரிந்து கொள்ள முயற்சி செய்யும் அதேசமயத்தில் தன் எனாமல் பசையை வெளியே அனுப்புகிறான். பிறகு தன்னுடைய அந்த எனாமல் பூச்சையே பார்க்கிறான். ஆகவே மனம் உண்டுபண்ணிய அனுபவத்தைத் தவிர வேறு எதையும் மனிதனால் புரிந்து கொள்ள இயலுவதில்லை. உண்மையான ஆன்மா மனதிற்கு பின்னால் இருக்கிறது. அதன் கையில் உள்ள கருவியாக மனம் இருக்கிறது. உண்மையான மனிதனாகிய நீ (ஆன்மா) நிற்கும்போதுதான் மனம் அறிவுடைய தாகிறது.

அப்போதுதான் மனதுக்கு அறிந்து கொள்ளும் திறமையுண்டாகிறது. ஆன்மா மனதைக் கைவிட்டுவிடும்போது அது தூள்துளாகச் சிதறிப்போய் ஒன்றுமே இல்லாமல் வெறுமை அடைந்து விடுகிறது. இப்போது மனம் என்ன? என்பதைப் புரிந்து கொண்டீர்கள். சித்தம், மனம், எல்லாம் ஒரு இருப்பிடமாகும். அதில் எழுகின்ற அலைகளும், சுழிகளுமே விருத்தி என்ற பெயர். இந்த விருத்தியின் மூலமே நம்மால் அறியப்படும் நமது பிரபஞ்சமாக விளங்குகிறது. ஆன்மா, மனம் என்ற நிலையில் விருத்தி என்றகிற அலைகளாலும், சுழிகளாலும், இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவித்து அதிலேயே ஆழ்ந்த லயித்து தனது பிறவி நோக்கத்தை மறந்து மாய உலகில் வாழும்போது அடிக்கடி உணர்ச்சி வசப்படுகிறது. அத்தகைய உணர்ச்சிவசப்படும் ஆன்மாவின் நிலைதான் பேராசை, சினம், பற்று, பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு, வஞ்சம்போன்ற அறுவகை குணங்களைப் பெறுகின்றன. ஆன்மா இப்படிப்பட்ட குணங்களின் எழுகின்ற எழுச்சியின் காரணமாக மீண்டும், மீண்டும் பழிச்செயல்கள் செய்து, தனக்கும், பிறர்க்கும் துன்பத்தை உண்டாக்கிறது. ஆகவே பிரஞ்ச மாயையில் ஆன்மா உழன்று தவிப்பதை தவிர்த்து மாயை மயக்கத்திலிருந்து விடுபட உண்டாக்கிய சித்தர்கள் பயிற்சியே யோகா என்பதாகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா on Thu Mar 18, 2010 12:29 am

யோகம்

யோகத்திற்கு முக்கியமாக பயன்படும் கருவியே மனமாகும். இந்த மனமானது தூய்மையாக இருக்கவேண்டும், மனம் மனசு, மருவற்ற தூய்மையில் இருக்கும் போது, தெளிந்த நீரில் நீரின் அடிமட்டத்தைக் காண்பதுபோல, தெளிந்த மனத்தால் உண்மைப் பொருட்களைக் காண முடியும். அந்த மனத்தைப் பண்படுத்தும் நெறியே யோகம். மனமானது அறிவாகி, ஆன்ம உணர்வைப் பெற்று விழிப்பில் தன் மூலம் நாடி ஒடுங்கும்போது தன்னை மெய்பொருளாகவே உணர்ந்து கொள்கின்ற இந்த முழுமை பேற்றினை அடைவதற்குத் தேவை யோகம் என்ற உடற்பயிற்சியே ஆகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா on Thu Mar 18, 2010 12:31 am


பிரபஞ்சம்அணுக்கள் தோன்றி அணுக்களின் இணைப்பு இயக்கங்களால் அண்ட பேரண்டமாகி பிரபஞ்சமாகி உலகாகி உயிர்கள் பலவுமாகி, எத்தனையோ கோடி சீவராசிகளில் நானும் ஒருவன் என்கிற தெளிவு பெறுவதே ஞானமாகும். முடிவைப் பிடித்துக் கொண்டு போனால் தொடக்கத்தை அறியலாம். தொடக்கத்தைப் பிடித்தால் முடிவையும் அறியலாம். ஆக பிறப்பின் தொடக்கத்தையும் முடிவையும் அறிவதே ஞானம். இதையேதான் அகத்தியர் கூறும்போது,

மகத்தான ரகஸ்யமடா ஞானமார்க்கம்
இணங்கியதோர் அருதரங்க மான சூட்சம்
ஏகாந்த சூட்கமென்ற கதையைக் கேளு
குணங்குவிய ஆதி அந்தக் குறியை நன்றாய்


மேற்கண்ட பாடல் மூலம் ஆதி அந்தம் தெரிவதுதான் ஞானம் என்பதை அறியலாம். வெட்டவெளிதான் உண்மையான மெய்ப்பொருள். அப்பொருளிலே நானும் இருக்கிறேன் என்று உணர்ந்து வெட்ட வெளியிலே தோன்றிய உயிரினங்கள் அத்தனையும் என் உடன் பிற்ந்தோர்களே என்ற அக உணர்வு பிறந்து எந்த உயிரினங்களுக்கும் துன்பம் அளிக்கக்கூடாது, துன்பப்படுகின்ற உயிர்கள் மீது கருணை காட்டி இன்பத்துடன் வாழும் வாழ்க்கைதான் வீடுபேறு ஆகும். இதை அடையும் ஜீவன்தான் ஆன்மாவாகும். வெட்டவெளி, பெருவெளியாகிய மெய்ப்பொருளையே வானம் என்றும், வான் என்றும் கூறுவர். வீடு பேறு பெற்றவர்களை வான் அவா,; வானவர் என்று கூறுவர். தேவர் என்றும் கூறுவர். தான் அவர் தன்னை அவராகக் கண்ட காரணத்தால் தானவர், தலைவன் என்றும் கூறுவர். தனது பரந்த அறிவால் எப்பொழுதும் வெட்ட வெளி மெய்பொருள் இணைத்து சதாகாலம் நிலவும் செயலுமாக இருக்கின்றவர்களுக்கு அவர்களின் உள்ளத்தின் நிலை சுவர்க்கம், சுவர் அகம். சுவர் என்றால் பேரின்பம். கடுந்தவத்தின் மூலம் ஆன்மாவானது தன்னிலை விளக்கம் பெறுகிறது. அப்படி விளக்கம் பெறுகின்ற தூய நிலையைத்தான் ஞானம் என்கின்றனர்.

இந்த முழுமை பேற்றையே சான்றோர்கள் வீடுபேறு என்றும் கூறுகின்றனர். வீடு என்றால் இடம் அல்லது ஆதாரம் என்று பெயர். காரணம் இல்லாமல் காரியம் முடிப்பதில்லை. ஆதாரம் இல்லாமல் ஆதேயம் பிறப்பதில்லை. எந்த தோற்றத்திற்கும் ஒரு ஆதாரம் இருந்தேயாகவேண்டும். அதுபோல் ஆன்மாவிற்கும் ஓர் இடம் இருந்தாகவேண்டும். அதற்கு ஆதாரம் (எது) இடம் ஆக உள்ளது என ஆராய்ந்தால் முடிவாக நமக்குக் கிடைக்கும் விடை எந்த ஆதாரமும் இல்லாத ஒரு பொருளே எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும், இடமாகவும் இருப்பது உணரப்பெறும். உதாரணமாக கோயில்மேல் கலசம் இருக்கிறது. கலசத்திற்கு கோயில் கோபுரம் ஆதாரமாக உள்ளது, கோபுரத்திற்கு பூமி ஆதாரமாக உள்ளது. பூமிக்கு வெட்டவெளி இடமாக உள்ளது. வெட்டவெளிக்கு ஆதாரம் இருக்கிறதா? இல்லை. அதன் அடிமுடியைக் காணமுடியாது என்பதை விளக்கவே அகத்தியரும்,

பாரப்பா அடிமுடியுந் தேடிப்போன
பதிவான மாலயனுங் காணா ரென்று
நேரப்பா வேத முரைத்திட்ட செய்தி
நீள் புவியில் யாவர்க்கும் உரைத்திட்ட செய்தி


வெட்டவெளியை அளக்க இயலாது என்பதை விளக்கவே திருமால் பன்றி அவதாரம் எடுத்து சிவன் பாதத்தைக் காணச் சென்றார் எனவும், திருமால் அன்னப்பட்சி வடிவம் கொண்டு சிவன்முடி காண மேலே சென்றார் எனவும், கதை மூலம் சொன்னார்கள். வெட்டவெளி என்றால் அதற்கென்று ஆதாரம் இல்லை. ஆகவே அது முதலாகிறது. அதிலிருந்துதான் தோற்றப்பொருள் தோன்றியி ருக்கவேண்டும். எனவே வெட்ட வெளியே ஆதியானது. அதற்கு வேறு ஆதாரம் இல்லாததால் அதுவே அநாதியானது. வெட்டவெளி என்கிற வீட்டின் இயக்க சக்தியால் அணுதோன்றி, அகம் என்றால் உள்ளம் என்பது பேரின்ப உள்ளத்தைப் பெற்றவர்களே சுவர்கலோக வாசிகள் என்பதாகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா on Thu Mar 18, 2010 12:33 am

வெட்டவெளிதான் மெய்ப்பொருள் என்பதற்கு மெய்ப்பொருள்
கண்டு விளங்கும் மெய் ஞானிக்கு,
கற்பங்கள் ஏதுக்கடி?
காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு வீணாசை
ஏதுக்கடி?
நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு முத்திரை
ஏதுக்கடி?
தந்திரமான தலந்தன்னில் நிற் போர்க்கு மந்திரம் ஏதுக்கடி?
முத்தமிழ் கற்று முயங்கும் மெய் ஞானிக்கு சத்தங்கள்
ஏதுக்கடி?
உச்சிக்கு மேல் சென்று உயர்வெளி காண்போர்க்கு
இச்சிப்பிங்கு ஏதுக்கடி?
வேகாமல் வெந்து வெளியினைக் காண்போர்க்கு மோகாந்தம்
ஏதுக்கடி?
சாகாமல் தாண்பு தனிவழி போவோர்க்கு ஏகாந்தம் ஏதுக்கடி?
ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்போர்க்கு தூனந்தான்
ஏதுக்கடி?
சத்திக் கூடத்தை தினம் தினம் காண்போர்க்கு பத்திரம்
ஏதுக்கடி?
தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப் பின்னாசை
ஏதுக்கடி?
செத்தாரைப் போர்த் திரியும் மெய் ஞானிக்கு கைத்தாளம்
ஏதுக்கடி?

- குதம்பைச்சித்தர்


பிறப்பின் ஆதியையும் முடிவையும் அறிந்த ஞானிகளுக்கு எதுவுமே தேவையில்லை என்பதை விளக்கவே குதம்பைச்சித்தர் மேற்கண்ட பாடல் மூலம் கூறுவதைக் காணலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா on Thu Mar 18, 2010 12:36 am


மனிதன்


மனு தன்வசமாக இருந்து ஆட்டிப் படைத்ததால் மனிதன் (மனது தன்) என்று பெயர் வந்தது. அதேபோல் நான் என்ற ஆவணம் மேலோங்கி இருந்தவனை நர அகம் கொண்டதால் நரன் என்றும் பெயர் உண்டாயிற்று. இன்னொன்று நரகம் என்று ஏன்? பெயர் உண்டாயிற்று என்றால், நான், எனது, என் மக்கள், என்பொருள், என் ஆஸ்தி, என்று குறுகிய வட்டத்திற்குள் சிக்குண்டு அவனுடைய அறிவானது செயல்படும்போது காமம், குரோதம், கோபம், மோகம், மதம், மாச்சர்யம், டம்பம், ஈர்தை போன்ற தீய குணங்களினால் உண்டாகும் அறிவால் அதன் விளைவாய் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். இதையே நரகம் என்பது (நர அகம்), தீமையான அகத்தால் (தீமை அகம்) எழும் தொலைகளையே நரகம் என்று கூறினார். எனவேதான் ஆன்ம ஞானம் அடையவேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆன்மாவானது ஞானம் பெற்றார் அறிவை தன்மயமாக வைத்துக் கொண்டு முறையாவும், சிறப்பாகவும் வாழலாம். எனவே ஆன்மஞானம் மட்டுமே வாழ்விற்கு உயர்வும், இன்பமும் அளிக்கும். ஆத்மஞானம் என்றாலே மனிதனை அதற்குத்தகுதியாக்கும் சிறப்பறிவு என்பது பொருள். சிறப்பறிவு என்ன என்கிற விளக்கத்தைப் பெறுவதே ஞானம் ஆகும். ஞானியாக வேண்டும், ஞானம் பெறவேண்டும் என்பதற்காக வாழ்க்கையை, வாழ்க்கைத் துணையை அர்ப்பணம் செய்யத்தேவையில்லை.

இன்றைய மனிதன் வாழ்க்கையே இயந்திரமயம், இன்றைய உலகம் விஞ்ஞான உலகம், தேவைகள் மிகுந்து இயந்திரசாதனங்கள் நுட்பமான கருவிகள், வாழ்க்கைக்கு தேவையான பொருட்களின் அதிகரிப்பு, இவை மிகுந்து கொண்டே போகின்றன. இப்படிப்பட்ட இக்காலத்தில் எல்லோரும் ஞானம் பெற முடியுமா? என்பது எல்லோர் மனதிலும் எழுகின்ற மலைப்பான கேள்வி? மலைப்புத் தேவை இல்லை. எல்லோரும் ஞானம் பெறமுடியும். தங்கள், தங்களின் கடமைகளை கடமையுணர்வோடு செய்து, மகிழ்வோடு இல்லறத்தையும் செம்மையாக நடத்தி நன்மக்களைப் பெற்று ஒழுக்கத்திலும், அறத்திலும், சிறந்தவர்களாக பயிற்றுவித்து அதன் மூலம் குடும்பம், ஊர், நாடு, உலகம் என்ற அளவில் அமைதியும், இன்பமாக வாழலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா on Thu Mar 18, 2010 12:39 am

துறவு நிலை

இப்படிப்பட்ட தூய்மையான வாழ்க்கையால் அறிவு விளக்கம் பெற்று அறிவிலே முழுமை பெற்றபின் அதன் மூலம் ஆன்மா உலகுக்கு நலம்புரிய ஆர்வம் கொண்டு தன்னை மனித குலநன்மைக்கே ஆர்பணித்துக்கொண்டு இல்லறத்தை விட்டு, பொருள் தேடுதல், காப்பாற்றுதல் என்கிற அறிவை உதாதரித்தள்ளி அறிவை, தனது உடலை அறவழியில் தொண்டுக்கே பயன்படுத்தி தன்னுடைய பசிக்கு பிறர் கொடுத்து வாழ்கின்ற வாழ்க்கையே துறவு வாழ்க்கையாகும். சிறந்த முறையில் தன்னுடைய ஆற்றலை பயன்படுத்தி சேவை செய்ய வாய்ப்பும், தேவையும் இருக்குமானால் அந்தத் துறவறமே மிகச்சிறந்ததாகும். ஆன்மா என்பது பரமாத்தலின்ஆற்றல்.

அறிவு என்பது ஆன்மாவின் இயக்கச் சிறப்பு. ஜீவ ஆன்மாவோ தன் நிலை மறந்து ஜம்புலன்களில் செயல்களுக்கு ஆட்பட்டு, புலன்களின் கவர்ச்சியில் சிக்கி மயங்குகின்ற மயக்க நிலையே மாயை எனப்படுவது. தன்னுடைய தவவலிமையால் புலன்கவர்ச்சியில் இருந்து மீட்டு, மாயை விட்டு விலகி அறிவை ஆன்மாவில் லயிக்கச் செய்து அதோடு ஒன்றோடு ஒன்று பிணைந்து லயமாகின்ற நிலையில் இருக்கின்றபோதுதான,; அந்த நிலையும் பிறழாமல் இருக்கும் போதுதான், ஞானம் என்கிற விழிப்பு நிலையில் ஆன்மா என்பது இயக்க ஆற்றலாகவும், உடல் ஆன்மாவிற்கு கருவியாகவும் இருக்கின்ற நிலை உணரப்படும். உடலுக்கு ஆன்மா அடிமையாகாமல் ஆன்மாவுக்கு உடலை கருவியாகக்கொள்ளும் தெளிந்த அறிவு நிலையே உண்மையான துறவு ஆகும்.

ஆன்மாவானது தெளிந்த அறிவிலே முழுமை பெற்ற பின் இல்லறத்திலிருந்தே துறவு நிலையில் வாழலாம். இன்று பலபேர் இல்லறக் கடமைகள் மறந்து, அறம் பிறழ்ந்து, சோம்பல் பேராசை இவற்றோடு பிறர் பொருள் மீது உயிர்வாழ்வது துறவறம் என கருதுகின்றனர். இத்தகைய இழிந்த வாழ்வைத் துறவறம் என்று தவறாகக் கூறி நம்பி தாம் ஏமாறுவதோடு பிறரையும் ஏமாற்றியும் உலவுகின்ற காட்சியைக் காணுகிறோம். துறவிகள் என்று வெளியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் அறிவின் நிறைவு பெற்று துறவறம் என்றால் என்ன? எப்படி இருக்க வேண்டும் என்கிற இலக்கணம் தெரிந்தவர்கள் துறவு வாழ்க்கைக்கு வரவில்லை.

அறியாமை, ஏழ்மை, வேலையின்மை, நோய், சோம்பேறித்தனம், பேராசை, வெறுப்பு குடும்பச் சண்டை, இவற்றால் இல்லறத்தை விட்டு கடமை மறந்து வெளியேறியவர்களே அதிகமாக உள்ளனர். சூழ்நிலைக் கைதிகளாகி வெளியேறி துறவு ஏற்றவர்களும் உண்டு. இவர்களில் ஏதோ ஒரு சிலரே நகரில் குருநாதன் கிடைக்கப்பெற்று தொடர்பு கொண்டு ஞான பேறு பெற்வர்கள், மற்ற பெரும்பாலோ வாழ்வு பாழாகி துன்புற்று மடிந்தார்கள், மடிந்து கொண்டு இருக்கிறார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா on Thu Mar 18, 2010 12:46 am

ஆன்ம தெளிவு

ஆன்மா அறிவின் தெளிவே ஞானம். அது அறம், தவம் என்கிற முயற்சியுள்ளவர்கட்கே கிடைக்கும். தவப்பயிற்சி, தத்துவங்களின் விளக்கங்களை அறிந்தவர்களுக்கே அது சாத்தியம். அவர்கள் மட்டும்தான் மற்றவர்க்கு தொட்டுக் காட்டியும், விளக்கிக் கூற முடியும், ஞானத்தை அளிக்க இயலும். எங்கேயோ வெட்டவெளியில் தோன்றிய பராமாத்மாவில் தோன்றியதுமான ஜீவாத்மா, பரமாத்மாவிற்கு ஆதாரம் இல்லை. அதையே வள்ளலார், தாய் வயிற்றில் பிறவாது தானே முளைத்தமைக்கு தெண்டனிட்டேன் என்று சொல்லடி என்ற பாடல் மூலம் அறியலாம். ஜீவாத்மாவிற்கு பரமாத்மா ஆதாரம். பரமாத்மாவிற்கு ஜீவாத்மாவிற்கு என்ன ஆற்றல் உண்டோ அதே ஆற்றல் ஜீவாத்மாவிலும் உண்டு. பரமாத்மா ஓர் இயற்கை. அதேபோல பரமாத்மாவில் தோன்றிய ஜீவாத்மாவும் இயற்கையின் கூறு.

பரமாத்மாவில் அளப்பறிய ஆற்றல்கள் இருக்கின்றன. அதேபோல ஜீவாத்மாவிலும் உண்டு. இந்த ஜீவாத்மாவின் அபூர்வ சக்தியை பயன்படுத்துவதே, ஆத்ம ஞானம் ஆகும். இதை அறியாமல் இக வாழ்க்கையில் சிக்கி மாயைக்கு ஆட்பட்டு நமது ஆன்மாவை பல துன்பத்திற்கு ஆளாக்குகிறோம், உண்டாக்குகிறோம். அதனால் தான் ஆன்மாவை துன்புறுத்தல் கூடாது. ஆன்மநேயம் வேண்டும் என்று சான்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆன்மாவை வதைக்க கூடாது, ஆன்மா பல துன்பங்களுக்கு ஆளாக்குகிறோம், உண்டாக்குகிறோம். அதனால்தான் ஆன்மாவைத் துன்புறுத்தக்கூடாது ஆன்மநேயம் வேண்டுமென்று சான்றோர்கள் வலியுறுத்து கின்றனர். ஆன்மாவை வதைக்ககூடாது, ஆன்மா பலதுன்பங்களுக்கு அளாகின்றது. அது எப்படி என்றால்? கடவுளைத்தேடி அடைய முயன்றும் அவனால் கடவுளைக் காண முடியாத நிலை. வாழ்வில் வறுமையெனும் பற்றாக்குறை. செய்கின்ற செயல்களின் விளைவுகளைப் பற்றி அறியாமை, அறிந்தும் அலட்சியம் செய்கின்ற நிலை, அவமதித்து அதனால் துன்பம் அனுபவிக்கும் நிலை.

ஆன்மாவின் மகத்துவம் புரியாமல், பிறர் மீது அச்சமும் பகை, துன்புறுத்தல், போன்றவற்றால் அல்லலுறும் நிலை, காமம், மோகம், மதம், மாசிகர்யம், டம்பம், ஈர்சை போன்றவைகள். மேற்கண்ட குறைகள் ஒன்றோடொன்று இணைந்து வாழ்க்கை பலவித சிக்கல்களுக்கு ஆளாகி அவற்றை லகுவாகத் தீர்க்க முடியாமல் தவிர்த்து தான் துன்புற்று, பிறரைத் துன்புறுத்தியும் வாழ்கிறான். இப்படிப்பட்ட சிக்கலான இக்கட்டான சூழ்நிலை வருகிறபோது மனிதன் தெரிந்தோ, தெரியாமலோ இந்த இக்கட்டிலிருந்து விடுதலை பெறவேண்டும் என முயல்கிறான். ஒவ்வொரு ஜீவாத்மாவிடமும் குறை நீங்கி முழுமை பெறவேண்டும் என்ற ஆர்வம் ததும்பிக்கொண்டிருக்கிறது. அதன் விளைவு சிந்தனை ஓட்டம் பிறக்கிறது, சிந்திக்கிறான், முயற்சி செய்கிறான், முயற்சியின் விளைவு செயல்களில் இறங்கி ஓராளவு உணரவும் செய்கிறான். அவன் செயலுக்கேற்ற விளைவுகளைக் காண்கிறான்.

மனிதனின் நெடுந்தூரப் பயணத்தில் பரசிந்தனை வாதிகள், சீர்திருத்தவாதிகள், வல்லுனர்கள், சித்தர் பெருமக்கள் போன்றோர்கள் பல நூல்கள் எழுதியும், போதனைகள் கூறியும் மனிதன் குறைபாடுகளை முழுமையாக நீக்க முடியவில்லை, காரணம் மனிதன் சமுதாயம் என்கிற சங்கரிப் பிணைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். இருப்பின் குறைபாடுகள் எல்லாரிடமும் இருக்கின்றன காரணம் அவனின் தேவை, பழக்கம், அறிவின் வளர்ச்சி, சந்தர்ப்ப சூழ்நிலைகள் இவனைக்குறை உள்ளவனாக ஆக்குகிறது. இவற்றில் அறிவில் சிறந்த சிலர்மட்டும் சிந்திக்கிறார்கள். காரண, காரியங்களை பகுத்து உணருகிறார்கள். அதனால் தன் அளவில் பயிற்சி பெற்று தன்னுடைய குறையை நீக்கிக் கொள்கிறார்கள். இவற்றை உணர்ந்தோரால் உணர்த்தப்பெறுகிறார்கள் பலர்.

இப்படி பலர் உணர்ந்தும் உபதேசம் பெற்றாலும் அவர்களில் பலபேர் தாங்கள் பெற்ற விளக்கங்களுக்கு ஏற்ப பழக்கத்தை மாற்றிக்கொள்ளும் அளவு துணிவு பெறுவதில்லை. இப்படி சில பழக்கத்திற்கு ஆன்மாவை மனிதன் அடிமையாக்குகிறான். ஒவ்வொரு மனிதனும் ஒன்றை மறந்துவிடுகிறான். ஒவ்வொரு செயலும் ஆன்மாவில் பதிப்பிக்கப்படுகிறது. ஆகவே நாம் பழிச்சொல், இழிவான செயல், போன்ற பதிவுகளை சுத்தப்படுத்தி தூய்மையாக்கி பரம்பொருளோடு இரண்டறக் கலக்கவே நம் உடல் ஒரு கருவியாகச் செயல்படுகிறது என்பதை மறந்து உண்மைகளை உணராமல் இகவாழ்வு மாயையில் உழன்று கொண்டு இருக்கிறார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா on Thu Mar 18, 2010 12:47 am

ஆன்மா அறிவு முதிர்ந்து சிந்தனையில் தான் தெளிவு பெறும்போது தெளிந்தவர் சுட்டிக்காட்டி உணர்த்தும் போது அறிவு விழிப்பு நிலை அடைகிறது. அதையே வள்ளலார் பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்று கூறுகிறார்.

பசித்திரு, தனித்திரு, விழித்திரு

பசித்திரு என்றால் எப்பொழுதும் ஞானப்பசியோடு இரு என்பதாகும். தனித்திரு என்பது மாயையில் புலன்களை செலுத்தாமல் தனித்திரு என்பதாகும். விழித்திரு என்பது ஆன்மா மாசுபடாமல் விழிப்போடு இருப்பது என்பதாகும். இறைவனைக் காணவேண்டும் என்ற ஆர்வத்தில் தன் அறிவின் விளக்கத்தால் குறையைப்போக்கிக் கொண்டவர்கள் சிலர். அப்படிப்பட்ட குருமார்களால், போதனைகளால் பயன் பெற்றவர்கள் பலர். அப்படி பயன்பெற்ற மனிதர்கள் தாங்கள் குருமார்க்களுக்கு அளித்த மதிப்பையும் மாதரியாதையையும் கண்டு தாமும் குருநாதர் ஆகவேண்டுமென்று ஒரு சிலர் ஞானிகளைப் போன்று, துறவிகளைப் பலர் வேடமிட்டு நடிக்கிறார்கள். மக்களை மயக்கி, பொருளையும் சுரண்டி வாழமுற்பட்டார்கள். இதனால் தூய்மையான மெய் ஞான விளக்கத்திற்கு ஒரளவு களங்கம் ஏற்பட்டது. எப்படி இருப்பினும் இதன் உண்மைகளை அறிந்தவர்கள் முயற்சி இப்படிப்பட்ட தீய்மைகளை வென்று வெற்றியடைந்த கொண்டுதான் இருக்கிறது.

* இன்பம், துன்பம் என்கிற வாழ்வு நிலை.
* இயற்கை விதிக்கப்பட்டது ஊழ்வினை, இறைநிலை.
* சமுதாய அமைப்பு நீதி, அறநெறி.
* அரசாங்கம்.

மேற்கண்ட நிலைகளில் மனித ஆன்மாவானது பட்டு தெளிவடையும் தெளிவுதான் வாழ்வை உய்விக்கவல்லது. துன்பங்களை களைந்து இன்பத்தைக் காக்க வல்லது. மேற்கண்ட துறைகளில் வெற்றி காணவே சான்றோர்கள் நல்ல நூல்களை எழுதி சிறப்பாக வாழவழி வகைகளைச் கூறிச் சென்றார்கள். அவற்றில் கதை வாயிலாகக் கூறுகின்ற நூல்கள் பகவத்கீதை போன்றது, கற்பனையாகக்கூறும் கதைகள் சில இராமாயணம் போன்ற காவியங்கள். இத்தகைய நூல்களை படிப்பதின் மூலம் வாழ்க்கையின் அனுபவங்களின் மூலம் பயின்று அறநெறி பிறழாது சத்தியம், தர்மம், நீதி, என்கின்ற ஒழுங்கு முறையில் உறுதியான பழக்கத்தை கடைபிடித்து வாழ்ந்தால் மனிதனுடைய வாழ்வு சிறப்பாகவும், இன்பமாகவும், அமைதியாகவும் அமையும்.

இதுவே ஆன்மீக பயணத்திற்கு திறவுகோலாக அமையும். இந்த உயர் நெறியே அன்மீக வாழ்வு என்று கூறலாம். ஆன்மாவின் நிலையறிந்த அதன் இயல்பையும் உணர்ந்து எண்ணம், சொல், செயல் இவற்றால் அறநெறி பிறழாது வாழ்ந்து வருவது ஆன்மீக வாழ்வாகும். இப்படி அறநெறி போற்றி ஒழுகி வாழ்வதால் ஆன்மா தூய்மை பெற்று முழுமை அடைகிறது. இது ஒரு சிறப்பான ஆன்மீகப் பயணம் என்று கூறலாம். தன்னுடைய அறிவின் தெளிவால் இப்படி வாழ்க்கை மேற்கொள்வதால் இவற்றை ஒருவகை ஆன்ம ஞானம் என்று கொள்ளலாம். இன்றைய சமுதாயம் மேம்பாடு அடைய வேண்டுமென்றால் முதலில் சமுதாய நிர்வாகம், அரசியல், பொருளாதாரம் போன்ற துறையில் உள்ள சீர்கேடுகளைக் களையவேண்டும். எங்கும் தூய்மை நிலவ வேண்டும். ஆட்சி சட்டங்களை கருவியாகக் கொண்டு ஆன்ம ஞானத்தை வளர்க்க இயலாது. இன்றைய உலகம் விஞ்ஞான உலகம், கணனி உலகம் என்பதால் ஆன்ம ஞானத்தின் தத்துவ உண்மைகளை விளக்கத்தை எடுத்துச்சொல்லி பரப்பி மக்கள் மனதில் ஒரு நல்லபண்பாடுகளை வளர்த்து பண்படுத்தி அதன் மூலம் அரசியலை தூய்மைப்படுத்துதே சிறந்த முறை. தனிமனித ஒழுக்கம் என்பது ஆன்ம ஞானத்தால் மட்டுமே செயல்படுத்த முடியுமே தவிர மற்ற செயல்பாடுகளால் முடியாது. தனிமனித ஒழுக்கமே ஒப்பற்ற ஒழுக்கமான சமுதாயமாக மாறும் என்பதில் ஐயமில்லை. அறவழி பிறழாது வாழும் மெய்ஞான விளக்கத்தின் மூலமே உலக மக்கள் நலம்பேண முடியும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா on Thu Mar 18, 2010 1:03 am

தத்துவ விளக்கம்

அண்ட வெளியில் உண்டான ஆற்றலுக்கு ஏற்ப நமது உடலானது 24 தத்துவங்களோடு கூடியது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய ஐந்து பூதங்களின் கூட்டுக்கலவையால் உண்டானதே மனித உடல். மேற்கண்ட பூதம் ஒவ்வொன்றிற்கும் வடிவம், குணம், நிறம், எழுத்து உண்டு என்று ஞானிகள் கூறியுள்ளனர்.


பூதம்
வடிவு
நிறம்
எழுத்து
குணம்
தொழில்
குறி
தெய்வம்
கலை
மண்
நாற் கோணம்
பொன்மை

கடினம்
தாங்கல்
வச்சிகரம்
அயன்
நிவர்த்தி
நீர்
பிறை
வெண்மை

தன்மை

பாதம் செய்தல்தாமரைதிருமால்
பிரதிஷ்டை
தீ முக் கோணம்செம்மைவெம்மைஒன்று
விதித்தல்
சுவாதிகம்வித்தை
காற்று
அறு கோணம்
கருப்பு பரந்துசரித்தல்
அறுபுள்ளி மகேசன்சாந்தி
ஆகாயம்
வட்டம்
புகைமைவெளியாதல்இடம் கொடுத்தல்அமுத பிந்துசதாசிவம்
சாந்திய கீதை


ஐந்து பூதங்கள் ஒவ்வொன்றுக்கும் எட்டு விதமான குணாம்சங்கள் இருக்கின்றன. இதில் சூட்சம குணங்கள் என்கிற தன்மாத்திரை உண்டு. அதுசே சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் எனப்படும். இதையே ஓசை, ஊறு, ஒளி, சவை மணம் எனப்படும். இந்த ஐம்பூதங்கள் எப்படி உடலில் தொழில புரிகின்றன? என்று ஆராயும் போது பரமாணு என்கிற ஆதியில் தோன்றிய சிவசக்தியின் தன்னியக்க சுழற்சியினால் அண்ட பேரண்டங்கள் உருவாயின.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா on Thu Mar 18, 2010 1:10 am

அணு

அணு என்றால் ஏதோ இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததல்ல. என்றோ ஞானிகளால் அலசி ஆராயப்பட்டவை. அணுக்கள் பற்றி வைசேசிக சித்தாந்தம் முழுக்க முழுக்க கூறுகிறது. அவைகள் அந்த ஏடுகள் இன்று காலத்தால் அழிந்து விட்டன. அணு என்பது தத்துவ ஞானத்தில் முடிவுக்கு முடிவான ஒரு உண்மையைக் கூறுவது. இந்த பிரபஞ்சம் அல்லது உலகத்தின் தொடக்கத்தின் அறிய முயற்சித்தால் முதலில் முடிவை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். முடிவு எங்கேயோ அங்கேதான் தொடக்கமும் ஆரம்பமாகும். எங்கோ வெட்ட வெளியிலிருந்து ஒரு நூல் தொடங்குமானால் அதன் முடிவைப்படித்துக் கொண்டு ஏறினால் அதன் தொடக்கத்தை அறியலாம். அதுபோல பிரபஞ்சத்திற்கு அழிவினையும், ஆரம்பத்தையும் அறிய மூன்று நிலையான அளவு கோலைக் கண்டார்கள். ஒரு வாஸ்துவுக்கு அழிவு என்பது பகுதிகளாகப் பிரித்தல். இதற்கு மேல் அழிக்க முடியாத நிலைவரை அழிந்து கொண்டேபோனால் அணுக்களில் முடியும்.

இவ்வாணுக்கள்தான் உலகின் ஒடுக்கம். இவற்றிலிருந்துதான் உலகம் உற்பத்தியாகிறது. ஆணு கொள்கைகளை வேத காலத்திற்கு முன்பிருந்த அணு பூதிமான்கள், சான்றோர்கள் (கி.மு.500) ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளனர். இவற்றையெல்லாம் நமது ஆகம நூல்களில் காணலாம். தமிழறிஞர்கள் சித்தர்கள் ஆய்வுத்திறனானது பிரபஞ்சத்தின் மூலை முடுக்களையெல்லாம் அலசி ஆய்வுக் களமாக்கி அதனையும் சுருட்டி தனது சுகத்தில் வைத்துள்ள சித்தர்கள் அவர்களைப் பாராட்ட நமக்கு நாவில்லை. புலன்களை வென்று தன்னுடைய கூர்மையான ஆற்றலால் பிரிக்க முடியாத பரமணுவில் இருந்து அண்ட பேரண்டங்கள் தோன்றியதை அதன் அணுத்திறனை ஆய்ந்தவர்கள் அறிந்தவர்கள்.

கதிரவன் ஒளியில் மின்னுகின்றன என்றால் அதற்கு என்ன காரணம்? வானவில் குளிர்ந்து அழகாக காட்சி தருகிறது என்றால் என்ன பொருள்? என்று ஆராய்ந்தனர். அதன் விளைவு சின்னஞ்சிறு துளிகள் இருந்தாக வேண்டும் என்று கண்டனர். ஒரு பொருளை துண்டித்துக் கொண்டே சென்றால் கடைசியில் அதன் நிலை பற்றி சித்தர்கள் ஆய்ந்தனர்.

அணுவில் அணுவினை ஆதிபிரனை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவினை அணுக வல்லார்க்கு
அணுவில் அணுவினை அணுகலுமாமே

- திருமுலர்

அணுவைத் துளைத்து ஏழ்கடலை புகட்டி
-ஒளவையார்

மேற்கண்ட பாடல் மூலம் சித்தர்கள் அணுவைப் பற்றிய ஆய்வை என்றோ கூறியுள்ளதாக அறியலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா on Thu Mar 18, 2010 1:16 am

ஒளியும், வெப்பமும்

கண்ணுக்கு எட்டாத துகல்களான இவை உரு, பண்பு முதலிய இயல்புகள் இல்லாதன. இத்துகள்கள் ஆற்றலை மேற்கொண்டு தன் மாத்திரைகள் என்னும் துகள்களாக மாறுகின்றன. பல தன்மாத்திரைகள் ஒன்றுகூடி ஒரு பரமனுக்காகத் திரள்கின்றன. தன்மாத்திரைகள் விரைவாய்த்துடிப்பதால் ஒளியும், வெப்பமும் தோன்றுகின்றன. பொருள்களில் விளையும் இராசாயன விளைவுகளையும் சித்தர்கள் தன் கொள்கையில் விளக்கியுள்ளனர்.

இருக்கில் இருக்கம் எண்ணிலா கோடி
இருக்கின்ற மூலத்தூர் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரடில் வீச
உருக்கிய ரோமம் ஒளி விடுந்தானே

- திருமந்திரம் -21

மேற்கண்ட பாட்டின் பொருள் கோடிக்கணக்கான அணுக்களில் அதன் மூத்துள்ளே இருக்கின்ற ஒளியும், வெப்பமும், அழல்கள் வீசுகின்றன என்று கூறுவதைக் காணலாம். ஒளியும், வெப்பமும் அணுத்தன்மை கொண்டவை என்று சித்தர்கள் கூறினார். அண்டம் என்றாலே முட்டை வடிவம் என்பது பொருள். எப்படி பூமியானது தன்னிலை சுழற்சியால் வட்ட வடிவம் பெற்றுள்ளதோ, அதேபோல பூமியில் பிறக்கும் அனைத்தும் வட்ட வடிவமுடன் தோற்றம் உண்டாகிறது, விதை முளைக்கும்போது வட்ட வடிவம், பறவை முட்டை வட்ட வடிவம், பூமியில் விழும் மழைத்துளி வட்ட வடிவம், யோனியில் கருவட்ட வடிவம், இப்படியாக தோற்றம் உண்டாவதைக் காணலாம்.

இப்படியாக அண்டத்தில் உள்ள கோடான கோடி கோட்கள் அத்தனையும் உருண்டை வடிவமாகவே விளங்கும். இவற்றின் இயல்புகள் அதனதன் மின்காந்த ஈர்ப்பு அலைகளுக்கேற்பஉண்டான எழுச்சியின் வேறுபாடுகளானது. கணக்கிட முடியாத கோடிக் கணக்கான வேறுபாடுகள் கொண்டது. இவைகள் தம்மோடு தாமும், பிறிதுமாக கலந்து, அணுக்களாகவும், அணுத்திரளாகவும், பொருளாகவும் ஆகின்றன. இப்படிப்பட்ட அணுத்திரள்களின் கலவைகள் கொண்டதுதான் ஜீவராசிகள், அண்டம், பிரபஞ்சம் அனைத்தும் ஆகும். சித்தர்கள் தங்களின் யோக வல்லமையால் உலகம் படைப்புக்கும் காத்தலுக்கும், உலக அழிவிற்கும் உண்டான காரண காரியங்கள் கண்டு தெளிந்து காரண காரியங்கள் எல்லாம் அணுவாக உள்ளது என்று கூறினார்கள். அணுக்கள் எல்லா உயிர்களும், எல்லா உலகங்களும், எல்லா உலகியற்பொருள்களிலும் நிறைந்து இருக்கிறபடியால் எங்கும் அணுக்கள் உள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா on Thu Mar 18, 2010 1:27 am

சிவசக்தி


இப்படிப்பட்ட அணுத்திரளான இப்பிரபஞ்சத்தில் இருந்து மனித ஜீவன் எப்படி உற்பத்தி ஆகி புலன்கள் தோன்றி, அனுபவிக்கிறது என்பதை பார்ப்போம்.

ஆதியிலே இப்பிரபஞ்சப் படைப்புக்கு மூலமானது இரண்டு சக்திதான். அதைத்தான் சிவசக்தி என்கிறோம். இதுவே பரமாணுவாகும். அதே போல மனித ஜீவன் உருவாவதற்கு இரண்டு மூல அணுக்கள் காரணமாக விளங்குகின்றன. சிவம் என்கின்ற ஆண் சுக்கிலப்புழுவும், சக்தி என்கிற பெண் சுக்கிலபுழுவும் இரண்டின் கலப்பினால் ஜீவன் உற்பத்தியாகிறது. பரமாணுவினால் பஞ்சபூதம் உண்டானது. அதன் கலப்பால் ஜீவராசிகள் உண்டாயிற்று.

ஜீவராசிகளே பஞ்சபூத கலப்பின் ஆற்றலைக்கொண்டதாகும். அந்தப் பஞ்சபூத ஆற்றல் எப்படி மனித சரிரத்தில் செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம். இவ்வுலகமே ஐம்பெரும் பூத அணுக்களால் ஆனது. இவ்வையம் பெறும் பூத அணுக்களில் ஒவ்வொன்றும், ஒவ்வொரு அணுவும் 96 தத்துவங்கள் அமைந்துள்ளன. இந்த 96 தத்துவங்களே மனித சரிரத்தில் செயல்படுகின்றன.

தத்துவங்கள் 96

1. முதல் தத்துவம் - 30
2. இரண்டாம் தத்துவம் - 30
3. மூன்றாம் தத்துவம் - 36

முதல் தத்துவ விபரம்

பூதம்-5,
பொறி-5,
புலன்-5,
கன்மேந்திரியம்-5,
கன்மவிசயம்-5,
கரணம்-4,
அறிவு-1,
ஆக 30.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா on Thu Mar 18, 2010 1:29 am

அதன் விபரம் வருமாறு

பூதம்-5

* பிருதிவி-மண்,
* அப்பு-நீர்,
* தேயு-அக்னி,
* வாயு-காற்று,
* ஆகாயம்-வெளி.

பொறி-5

* செவி,
* தோல்,
* கண்,
* நாக்கு,
* மூக்கு

புலன்-5

* சத்தம்-கேட்கப்பட்டது (செவிக்கு உயிர்க்கூறு),
* பரிசம்-தொடு உணர்வு அறிவது (உடம்புக்கு உயில்கூறு),
* உருவம்-காண்பது (கண்ணுக்கு உயிர்கூறு),
* இரசம்-அறுசுவை அறிவது (நாக்குக்கு உயிர்க்கூறு),
* கந்தம்-வாசன அறிவு (மூக்குக்கு உயிர்கூறு)

கன்மேந்திரியம்-5

* வாய்,
* கால்,
* கை,
* அபானம்,
* குறி

கன்ம விசயம்-5

* பேசுதல்-வாக்குக்கு உயிர்க்கூறு,
* கடத்தல்-காலுக்கு உயிர்க்கூறு,
* கொடுத்தல், வாங்கல்-கைக்கு உயிர்க்கூறு,
* விடுதல்-எருவாய் உயிர்க்கூறு,
* மகிழ்தல்-குறிக்கு உயிர்க்கூறு

கரணம்-4

* மனம்-ஒன்றை இணைப்பது,
* புத்தி-அதனை விசாரிப்பது,
* அகங்காரம்-அதனைக் கொண்டு மேல் எழும்புவது,
* சித்தம்-அதனைச் செய்து முடிப்பு,

அறிவு-1

* தன்னைக் கண்டு மகிழ்ந்திருத்தல்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா on Thu Mar 18, 2010 1:35 am


இரண்டாம் தத்துவம்-30


நாடி-10
வாயு-10
சயங்கள்-5
கோசம்-5


நாடி-10

* பிராணன்,
* அபானன்,
* வியானன்,
* உதானன்,
* சமானன்,
* நாகன்,
* கூர்மன்,
* கிரிகரன்,
* தேவத்தன்,
* தன்செயன்

1. பிராணன்:

புருவ மத்தியில் தோன்றி சித்த நாடியில் புகுந்து மூலாதாரத்தை அடைந்து, தொப்புள், பின் மூக்குத் தானத்தில் முட்டி இடகலை, பின்காலைகளில் ஓடி கபாலத்தைச் சுற்றி, மூக்கு துவாரத்தில் வெளிவரும் சுவாசம் 12 அங்குலம் நீண்டு வெளிவந்து நான்கு அங்குலம் கழிந்த 8 அங்குலம் உள்ளே சென்று மீண்டும் புறப்பட்ட இடத்திலிருந்து சுவாசம் துவங்குகிறது. இப்படிச் செயல்படும் சுவாசம் நாழிகை ஒன்றுக்கு 360 சுவாசம் இரவு பகல் 60 நாழிகைக்கு 21,600 சுவாசம் மனித உடலில் செயல்படுகிறது. ]24 நிமிடம் கொண்டது-1 நாழிகை]

இந்த சுவாசம் 21,600-க்கு விபரம்:


1. மூலாதாரத்தில் சுவாசம் - 6000
2. சுவாதிட்டானத்தில் சுவாசம் - 6000
3. மணிபூரகத்தில் சுவாசம் - 6000
4. அனாதகத்தில் சுவாசம் - 6000
5. விசுத்தியில் சுவாசம் - 1000
6. ஆக்கினையில் சுவாசம் - 1000
7. சுகன்ரகாரம் சுவாசம் - 1000

நாள் ஒன்றுக்கு 21,600 சுவாசம் இயங்கி இதில் 7,200 சுவாசம் கழன்று 14,400 சுவாசம் உள்ளே சென்று மனித உடலை செயலாக்கப் படுத்துகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா on Thu Mar 18, 2010 1:39 am

2. அபானன் - குதத்தையும், குய்யத்தையும் பற்றி நின்று மலசாதிகளை கழிப்பது

3. வியானன் - தோலிலே நின்று பரிசங்களை அறிவிப்பது


4. உதானன் - பிசயை உணடாக்கி உண்ட உணவை உணவின் சக்தியை அதாவது சாரத்தை 72,000 நாடி நரம்புகளில் செலுத்தி சரிரத்தை வளர்ப்பது.

5. சமானன் - எல்லா வாயுவயும் ஏறுதல், இறங்குதல் இல்லாமல் சமனாகக் கொண்டு இயங்குவது

6. நாகன் - விக்கலும், கக்கலும் உண்டாக்குவது

7. கூர்மன் - கண்ணிலே நின்று இமைப்பது

8. கிரிதரன் - புருவமத்தியைப் பற்றி நின்று தும்மல், அழுவித்தல் செய்வது

9. தேவதாத்தன் - வழித்திருக்கும்போது ஓடுவித்தலும் உலாவுதலும், யுத்தம் பண்ணுவித்தல் செய்வது

10.தனஞ்செயன் - பிராணன் உடம்பை விட்டுப்போனலும் தான் பிரியாமல் நின்று உடம்பை இயங்கச் செய்து விரிவித்தலும் செய்து மூன்று நாட்களுக்குப் பிறகு கபாலத்தைப் பிளந்து ஓடிப்போவது

சயம் - 5

* அமர்வாசாயம்,
* பகிர்வாசாயம்,
* சாலவாசாயம்,
* மனவாசாயம்,
* சுக்கில வாசாயம்


1. அமர்வாசாயம் - உண்ட உணவு சாரம் அமருமிடம்
2. பகிர்வாசாயம் - அன்ன சாரம் பகிர்ந்து கொடுக்குமிடம்
3. சாலவாசாயம் - நீர் இறங்கும் இடம்
4. மனவாசாயம் - மலக்குழி இறங்கும் இடம்
5. சுக்கில வாசாயம் - சுகிலன் பிரியும் இடம்

கோசம்-5


* அன்னமய கோசம்,
* பிராணமைய கோசம்,
* மனோமைய கோசம்,
* விஞ்ஞானமய கோசம்,
* ஆனந்தமய கோசம்.

1. அன்னமய கோசம் - துலதேகமாகிய உடம்பு
2. பிராணமைய கோசம் - பிராணனும் கன்மேந்திரியமும் கூடி நிற்பது
3. மனோமைய கோசம் - மனமும் ஞானேந்திரியமும் கூடி நிற்பது
4. விஞ்ஞானமய கோசம் - புத்தியும் ஞானேந்திரியமும் கூடி நிற்பது
5. ஆனந்தமய கோசம் - பிராணவாயும் சுமத்தியும் கூடி நிற்பது
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா on Thu Mar 18, 2010 1:42 am


மூன்றாம் தத்துவம் 36-ன் விபரம்


ஆதாரம்-6,
மண்டலம்-3,
மலம்-3,
தோசம்-3,
ஏடனை-3,
குணம்-3,
இரக்கம்-8,
வினை-2,
அவஸ்தை-5
ஆக 36.


ஆதாரம்-6

* மூலாதாரம்,
* சுவாதிட்டானம்,
* மணிபூரகம்,
* அனாகதம்,
* விசுத்தி,
* ஆக்ஞை

1. மூலாதாரம்-எருவாய், நாற்சதுரக்குள்ளே நாளிதழ் முக்கோண வடிவமாக இருக்கும் எழுத்து ஓங்காரம், நிறம் மாணிக்க நிறம், கணபதி.

2. சுவாதிட்டானம்-எருவாய்க்கும் மேலே இரண்டு வரற்கடை அளவும் தொப்புளுக்குக் கீழேயும் இருக்குமிடம், நாற்கோணம், ஆறு இதழ், எழுத்து நா காரம், படைப்பு பிரம்மா, செம்பொன் நிறம்.

3. மணிபூரகம்-தொப்புழ், பிறைகோணமானது, இதன் நடுவே நிற்கும் எழுத்து மா காரம், பத்து இதழ், மரகத நிறம், தேவதை விஷ்ணு

4. அனாகதம்-இருதயம், முக்கோணமானது, இதன் நடுவே இருக்கும் எழுத்து சி காரம், பன்னிறன்டு இதழ், ஸ்படிக நிறம், உருத்திரன்

5. விசுத்தி-காண்டம் (கழுத்து), அறுகோணம், 16 இதழ், கேம நிறம், எழுத்து வா காரம், தேவதை மகேசுவரன்

6. ஆக்ஞை-புருவ மத்தி, வட்டமாயிருப்பது, 3 இதழ், படிக நிறம், எழுத்து ய காரம்

மேற்கண்ட விபரத்தின் மூலம் ஆதாரம் ஆறிலேயும் ஆறு எழுத்து ஓம் நமச்சிவாய, ஆறு ஆதாரம் ஆறுவிடாகவும், இதழ்கள் கூட்டினால் 51 அட்சரம் என்பதும் கண்டுகொள்ள வேண்டும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா on Thu Mar 18, 2010 1:45 am

மண்டலம்-3

* அக்னி மண்டலம்,
* ஆதித்த மண்டலம்,
* சந்திர மண்டலம்

1. அக்னி மண்டலம்-இது மூலாதாரம் ஆகும்
2. ஆதித்த மண்டலம்-இருதய ஸ்தானம் ஆகும்
3. சந்திர மண்டலம்-சகன்கார தளமாகும்.

மலம்-3

* ஆணவம்,
* காமியம்,
* மாயை

1. ஆணவம்-உடம்பை நான் என்று இருப்பது
2. காமியம்-கண்டவற்றில் மனம் ஆசைப்படும்
3. மாயை-தனக்கு வருவதை அறியாமல் இருப்பது.

தோசம்-3

* வாதம்,
* பித்தம்,
* திலோத்தமம்

1. வாதம்-வாயுவின் செயல் விளைவு
2. பித்தம்-அக்கினியின் விளைவு
3. திலோத்தமம்-கபத்தின் விளைவு

ஏடனை-3

* அர்த்த ஏடனை,
* புத்திர ஏடனை,
* உலக ஏடனை

1. அர்த்த ஏடனை-திரவியத்தை தேடி ஆசைப்படல்
2. புத்திர ஏடனை-புத்திரர்கள் தேடி ஆசைப்படல்
3. உலக ஏடனை-உலக விசயங்கள் தேடி ஆசைப்படல்

குணம் -3

* இராட்சகம்,
* தாமசம்,
* சாத்வீகம்

1. இராட்சகம்-அகங்காரமாய் வெட்டவும், குத்தவும், கடிக்கவுமாயிருப்பது

2. தாமசம்-மந்த புத்தி, உன்மத்தமாய், மத்தியமாய் இருப்பது

3. சாத்வீகம்-அடக்கம், அன்பு, விவேகம், ஐம்பொறியாக்கல், அருள், ஞானம், தவம், பொறை, மேன்மை, வாய்மை முதலியவற்றையுடையதாய நாட்டங் கொண்டிருப்பது
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா on Thu Mar 18, 2010 1:48 am

இராகம்-8

* காமம்,
* குரோதம்,
* உலோபம்,
* மோகம்,
* மதம்,
* மாச்சரியம்,
* இடும்பை,
* அகங்காரம்

1. காமம்-ஆசை
2. குரோதம்-பிணக்கு
3. உலோபம்-பிடிபாடு
4. மோகம்-பிரியம்
5. மதம்-கர்வம்
6. மாச்சரியம்-உதட்டில் உறவும், உள்ளத்தில் பகையும் வைப்பது
7. இடும்பை-உதாசீனம்
8. அகங்காரம்-கோபித்தல்

வினை-2


* நல்வினை,
* தீவினை

1. நல்வினை-புண்ணியம் செய்தல்
2. தீவினை-பாவம் செய்தல்

அவத்தை-5

* சாக்கிரம்,
* சொப்பனம்,
* சுழத்சி,
* துரியம்,
* துரியாதீதம்

1. சாக்கிரம்-லலாடத்தானம்
2. சொப்பனம்-கண்டஸ்தானம்
3. சுழத்சி-இருதய ஸ்தானம்
4. துரியம்-நாபி (தொப்புழ்)
5. துரியாதீதம்-குறியிடம்

முப்பது முப்பது முப்பத்தவறுவருஞ்
செப்பு மதிலுடைக் கோயிலுள் வாழ்பவர்
செப்பு மதிலுடைக் கோயில் சிதைந்த பின்
லொப்பிலன் வரு மோட்டெடுத்தாரே

96 தத்துவங்களும் நம்முடைய சரீரத்தின் எப்படி செயல்படுகின்றன என்று பார்த்தோம்.

இதில் ஆன்மத்துவம் என்பது 24. அவையாவன,

* பூதங்கள்-5,
* தன்மாத்திரைகள்-5,
* ஞானேந்திரியங்கள்-5,
* கன்மேந்திரியம்-5,
* அந்தக்காரணம்-4

ஆகிய இந்த 24-ம் ஆன்மாவுக்கு தூய வடிவாக இருந்து நேரே தொடர்பு கொண்டு விளங்குவதால் ஆன்ம தத்துவம் எனப்பட்டது. மேற்கண்ட ஆன்மதத்துவத்தின் விளக்கத்தை எவர் அறிவாரோ அவரே இவ்வுலகத்தில் வாழத்தெரிந்தவன் ஆவான். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றமுமனிறைந்தின் வகை தெரிவான் கட்டே உலகு என்ற வள்ளுவர் வாய்மை பொழியின் மூலம் காணலாம். மேற்கண்ட பூதங்களின் ஐந்தின் சூட்சும குணங்களே தன்மாத்திரைகளாகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா on Thu Mar 18, 2010 1:52 am

தன்மாத்திரைகள்

தன்மாத்திரைகள் என்பது உருபண்பு இல்லாதவை, அணுக்கள் ஒன்று கூடி தன்மாத்திரை ஆகின்றன. தன் மாத்திரைகளிலிருந்தே பூதங்கள் தோன்றுகின்றன என்று ஏற்கனவே படித்தோம்.

பஞ்சபூதங்கள் பிறப்புக்குக் காரணம் தன்மாத்திரைகள். இதே தன்மாத்திரைகள்தான் பஞ்சபூதங்களின் தொடர்பால் இந்திரியங்கள் நுகர்ச்சியில் தொழிற்படுவதற்குத் துணை செய்வனவாயும் உள்ளன. தன்மாத்திரை என்றாலும் சூக்கும பூதம் என்றாலும் பொருள் ஒன்றே. இவைகள் இயந்திரிய இயக்கங்களுக்கு ஆற்றலைக் கொடுத்து செயல்படவைக்கும். ஞானேந்திரியமான மெய், வாய், கண், மூக்கு, செவி இவ்வனைத்தும் பஞ்சபூதங்களின் தொடர்பு, அது அதன் உணர்ச்சிகளை அறியும். கண்மேந்திரியம் வாய், கால், கை, இருவாய், குறி, இவைகள் அதன் அதன் வேலைகளைச் செய்யும்.

அந்தக் காரணம்-4

* மனம்,
* புத்தி,
* சித்தம்,
* அகங்காரம்

என நான்கு வகைப்படும். ஒரு பொருளை அறிய புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி என்பவை புறத்தே இருந்து செயல்படுகின்றன. அவை தரும் விசயங்களைப் பதிவு செய்து அகத்தின் உள்ளே இருந்து செயல் படுகின்றன. அகத்தே நின்று செயல்படும் கருவி அகக்கருவிகள் ஆகும். ஏதேனும் ஒரு பொறிவாயிலாக வரும் பொறிகளின் செய்திகளை அந்தப்பொருளின் மீது நிறுத்தி இது இன்னதாக இருக்கலாம் என நினைத்து சந்தேக நிலையில் இருப்பதே மனம் எனப்படும். புத்தி அது இதுதான் என நிச்சயிக்கும்.

இந்த நிச்சய உணர்வு செயல்வடிவம் பெற கருவி, கரணாதிகள் ஊக்குவிக்க எழும்பும் நிகழ்ச்சியே அகங்காரம் ஆகும். இந்த செயல்பாடுகைள முடிவுக்குக் கொண்டு வருதல் சித்தம் என்பதாகும். ஆன்மாவானது மனம் முதலிய கருவிகளைக் கொண்டு உணரும்போது அவ்வுணர்வு பற்றுதல், நிச்சயித்தல், ஒருப்பட்டு எழுதல், சித்தித்தல், என நான்கு வகைப்படும். இனி ஒரு பொருளை இன்னது என நிச்சயிக்கும் புத்தி, அதனை முன்னைய பழக்கம் பற்றி அதன் வினைக்கு ஈடாக அதைத் தனக்கு உறவாகவோ, பகையாகவோ பொதுவாகவோ உணரும். இப்படி உணர்தலார் இன்பம், துன்பம், மயக்கம் என மூன்று வித குணங்களுள் ஒன்றாக பரிணமிக்கும். இவ்வாறு பரிணமித்து நிற்கும் புத்தியை ஆன்மா இது துன்பம், இது இன்பம், இது இரண்டுமில்லாதது என அறிந்து பின் அக்குணம் தோன்றுகின்ற காரணத்தால் நான் இன்புற்றேன், துன்புற்றேன், மயங்கினேன் என உணரும் இவ்வுணர்வுகள் வேதனைக் காட்சிகள் ஆகும்.

புறத்தேயுள்ள வேதனைக் கண்ணுக் கினியதொரு பொருளைக் கண்டு இன்புறும் போது முன்னர் இது தோன்றாகாட்சியும் இன்னதென உணரும் மானசக்காட்சியும், இது இன்ன இன்பம் என்னும் தன் வேதனைக் காட்சியும் ஒன்றன்பின் ஒன்றாக காரண காரிய முறையில் கடல் அலைபோல் ஆன்மாவின் உணர்வில் வந்து தோன்றும்.

இப்படியாக ஆன்மத்துவம் 24-ம் ஆன்மாவுக்குத் தூயவடிவில் நேரே தொடர்புடன் செயல் படுகின்றன. உலகில் உள்ள ஒவ்வொருவரும் தனது ஜீவனின் சரித்திரத்தைக் கண்டு கொண்டால் உலகில் எல்லாம் இன்பம்தான் இவ்வுலகில் எதுவும் நல்லதும் இல்லை நண்பன் பகைவன் கிடையாது. ஒவ்வொரு ஆன்மாவும் தன் சுய தூய அறிவை அறிந்து விட்டால் எல்லாம் சமம், எல்லாம் இன்ப மயம் ஆகும். ஆகவே ஆத்மஞானம் பெறுவது இன்றிமையாதது. மனிதன் வாழத்தெரிந்தவன். வாழவேண்டும். தெரியாதவர் தெரிந்தவர் காட்டும் வழியை நம்பியும், பின்பற்றியும் வாழ வேண்டும். வாழத்தெரிந்து வாழ்பவர்களான அறிஞர் பெருமக்கள் ஞானிகளை நம்பி அவர்களைப் பின்பற்றியும் வாழ்பவர்களே பக்தர்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா on Tue Mar 23, 2010 7:37 am

பஞ்சபூதமும் உடலும்


உண்மையான பொருளின் விளக்கத்தை ஆன்மா அறியும்போதுதான் நம்முடைய மயக்கமான மாயை நம்மை விட்டு விலகி தெளிவாகிறது. அப்போதுதான் பொருளாக இருக்கும் பொருளாகக் கருதும் மெய்யுணர்வும் ஏற்படுகின்றது. இப்போது மெய்ப்பொருள் என்றால் என்ன என்பதற்கு விளக்கம் கிடைத்துள்ளது. அதன் முதல் நிகழ்ச்சியான பரமாணு நிலை விளங்கிவிட்டது. இந்த அடிப்படையில் தொடர்ந்து சிந்தித்தால் அணுக்கள் இணைந்து விண், காற்று, வெப்பம், நீர், நிலம் என்ற ஐந்து பிரிவுகளும் அவற்றிலிருந்து அழுத்தம், ஒலி ஒளி சுவை மணம், அறிவு என்ற ஆறுவகையான நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன என்பது தெரியும். மெய்நிலையாகிய பரவெளியும் உயில் நிலையாகிய பரமாணுக்களும் ஒரு எல்லைக்குள் அமையும் அளவின் விகிதாசாரத்திற்கு ஏற்ப, அங்கு நடைபெறும் இயக்கம் பல்வேறு நிலைகளை அடைகின்றது. அத்தகைய வேறுபாடுக்ளதான் குறிப்பாக அறிவினால் உணரப்பெறும் முக்கிய பிரிவுகளாகிய விண், காற்று, வெப்பம், தண்ணீர், நிலம் என்பனவாகும்.


இவ்வைந்து பிரிவுகளில் ஒரு நிலையோடு மற்ற நிலையை எந்த அளவில் கூடி இணைந்து இயங்குகின்றதோ அதற்கு ஏற்ப அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், அறிவு என்ற ஆறுவகையான நிகழச்சிகளும் அவற்றின் ஒவ்வொரு பிரிவிலும் பலவித ஏற்ற தாழ்வு நிலைகளும் உண்டாக்குகின்றன. இப்படி ஒவ்வொரு இயக்கத்திலும் தன்னியக்கம், தொடரியக்கம், பிரதிபலிப்பு இயக்கம், தரம், மாற்றம் ஏற்பட்டு ஒன்று பலவாக இயங்கும் நிகழச்சிகளாகின்றன. இந்த முறையிலே இயங்கும் தொடர் நிகழச்சிகள் அணுவாகி, அணுக்கள் கூடி காற்றாகி, வெப்பாகி, நீராகி அண்டவெளியிலே தன்னைத்தானே சுழன்று சுற்றி மிதந்து கொண்டு இருக்கின்றன. அதன் மத்தியில் பகுதியில் விரைவு குறைந்த அணுக்கள் நெருக்க முற்று கனற்குழம்பாகி மேல்நோக்கி நீர்வரம்பிற்கு மேல் வந்து கெட்டியான பரிணாமமே நிலமாகும். மேலும் பூமியின் நடுமையத்தில் ஏற்படும் அணுக்கள் அழுத்தத்தால் வெப்பம் அதிகமாகி அதன் விளைவாக உலோகங்கள், இரத்தினங்கள், இரசாயனங்கள் இவையாவும் உற்பத்தியாகின்றன. மேலும் மேலும் விளைந்து கொண்டே இருக்கின்றன.


முறையாகத் தானாக உண்டாகும் அணு அடுக்குப்பெற்ற ஒரு இயக்க மண்டலத்தில் காந்தம், மின்சாரம், காற்று, நீர், ஆகிய நால்வகைச் சுழல்களும் ஏற்பட்டு கொள்ளல், தள்ளல் என்ற இயக்க நிகழ்ச்சிகள் முறையாக நடைபெறும்போது அது வித்தாகின்றது. மேலும் அவ்வித்தானது ஆற்றலால் எழுச்சி பெற்று இயங்கி தாவர இனமாகிய ஓரறிவு ஜீவனாகியது. அதிலிருந்த ஈரறிவு இனமான புழு தோன்றி, அதைத் தொடர்ந்து மூவறிவு, நாலறிவு, ஐயறிவுப் பிராணிகள், ஆறறிவுள்ள மனித இனமும் தோன்றியுள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்ம தத்துவம்

Post by சிவா on Tue Mar 23, 2010 7:49 am

இவ்வாறு பரமே அணுவென்ற உயிராகி அதுவே தன்னழுத்த இயக்கத்தால் உடலாகி உடலுள் இயங்கும் உயிர்சசக்தியாகிஅச்சக்த்தியே ஒலியாகி, ஒளியாகி, சுவையாகி, மணமாகி, உணரும் திறனுமாகி, உயிர்கள் என்ற பரிணாம சிறப்பை பெற்றது. இத்தகைய பரிணாமத் தொடரும் இயக்கங்களும் இணைந்த ஒரு பேரியக்க மண்டலம்தான் பிரபஞ்சம், பஞ்சபூதம் என்றழைக்கப் படுகின்றது. மனிதனான ஜீவனிடம் அனுபவமும் சிந்தனையும் கூடி அறிவுப் பெருக்கம் ஏற்பட்டு தன் காரண நிலைநாடி ஆராயும் போது, பரநிலை நாடி ஆராயும்போது அந்நிலை உணர்ந்த மனிதனால் தத்துவ விளக்கம் ஏற்பட்டது. பிரபஞ்ச பரிணாமம் ஒரு வளையத்தைப் போன்றது.

இது பரத்திலே தொடங்கி அணு, காற்று, வெப்பம், நீர், நிலம், ஓர் அறிவு ஜீவன் முதல் ஐயறிவு ஜீவன் வரையுள்ள மனிதன். மனிதனே தன் இயல்பையும், நிலையும் உணர்ந்தபோது தான் தேவன் என்று கடைசியிலே பரத்திலே முடிவு பெறுகிறது. கடலிலே தோன்றும் அலைகள் கடலிலே அடங்குவது போலவும், நீரின் அசைவை அலையென மதிக்கப்பெறுவது போலவும் பரம்ம தனது இயக்கக் கட்டங்களுக்கேட்ப்ப பல்வேறு அளிவலும் வலுவிலும் ஏற்ற தாழ்வுகளை கொண்ட இயக்கங் களாகவும் காட்சிகளாகவும் இருக்கினறன. இவை அறிவால் உணரப் படுகின்றன.

எனவே நாம் காணும் எந்தத் தோற்றமும் பொருள் நிலையில் பரமேயாம் பரத்தை; தவிர்த்து வேறு பொருள்தான் ஏது? காணும் தோற்றமும் காண்பவனும் இயக்க நிலைகளில் ஒப்பிட்டு உணரும் கருத்துக்கு வேறு வேறாக விளக்கப்பெற்ற போதும், ஆழ்ந்த ஆராய்ந்த விளக்கத்தில் பொருள் நிலையாகிய பரமும், அதன் நிலையாகிய காட்சியும், நிகழ்ச்சியின் நிழச்சியாகிப் பரத்திலே முடிந்து கொண்டிருக்கும் அறிவும் மூன்றும் ஒன்றாகவே இருக்கும் பேருண்மை அக்காட்சியாகும். உலகத்திலுள்ள பொருட்கள் யாவும் மனித இனம் உட்பட ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலப்பொருளால் ஆனவை. அவை அழியும் போது ஏதாவது ஒரு தனிப்பொருளில் சேர்ந்துவிடும். இது இயற்கையின் விதி. இதற்கு யாரும் எவையும் விலக்கல்ல.

இத்தனிப்பொருட்கள் தன் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை ஆகும். இந்த தனிப்பொருட்கள் தனித்து இயங்கினாலும் இவை ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தியவாறு உள்ளன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்ம தத்துவம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum