புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_m10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_m10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10 
77 Posts - 43%
mohamed nizamudeen
புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_m10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10 
6 Posts - 3%
prajai
புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_m10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10 
6 Posts - 3%
Jenila
புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_m10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10 
2 Posts - 1%
jairam
புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_m10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_m10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_m10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_m10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10 
1 Post - 1%
M. Priya
புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_m10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_m10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_m10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_m10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10 
10 Posts - 4%
prajai
புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_m10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10 
8 Posts - 3%
Jenila
புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_m10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10 
4 Posts - 2%
Rutu
புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_m10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_m10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_m10புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 9:53 am

புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Apr07-10

வாவியெலாந் தீர்த்தம் மணலெல்லாம் வெண்ணீறு
காவநங்க ளெல்லாங் கணநாதப் பூவுலகில்
ஈதுசிவ லோகமென் றென்றே மெய்தவத்தோர்
ஓதும் திருவொற்றியூர்.

-பட்டினத்தார்

திருவொற்றியூர். சென்னையை அடுத்த முக்கிய சிவத்தலங்களில் ஒன்று. தமிழ்மொழிக்கும் சைவ சமயத்துக்கும் சோழ மன்னர்கள் வழிவழியாகச் செய்த தொண்டுகளைத் திருவொற்றியூரும் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

சோழர் காலக் கலைச்சிறப்பை எடுத்து இயம்பும் தூங்கானை மடமாக உள்ளது திருவொற்றியூர் ஈசன் கருவறை விமானம். கருவறையின் அடித்தளத்திலிருந்தே ஏகப்பட்ட கல்வெட்டுகள். கருவறை பிரகாரத்தின் தூண்களில் எல்லாம் கல்வெட்டுகள், திருச்சுற்று சுவர்களிலும் கல்வெட்டுகள் என ஏராளமாய் இக் கோயிலில் கல்வெட்டுகள் நிறைந்துள்ளது. அவற்றைப் படித்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் சமூக வழக்கங்கள், கோயில் பரிபாலன முறைகள், அரசர்களின் வம்சாவளி எனப் பல வரலாறுகள் தெரிய வரும்.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் திருவொற்றியூர் முக்கியமான தலமாகும். திருவொற்றியூரும் அங்குள்ள தியாகராஜசுவாமி கோயிலும் காலக் கணிப்புகளுக்கு முந்தையதாகத் தோன்றியவை. எனினும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமயக்குரவர் திருநாவுக்கரசர் திருவொற்றியூர் வந்து ஈசன் மீது பல பாடல்கள் பாடியுள்ளார். அதே காலத்தில் திருஞான சம்பந்தரும் இங்கு வந்து ஈசனை வழிபட்டுள்ளார் என்பதால் அதற்கு முந்தையது எனக் கொள்ளலாம்.

1250 ஆண்டுகளுக்கு முன் தொண்டமான் சக்கரவர்த்தி என்பவர் திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலுக்குத் திருப்பணி செய்ததாகவும் கோயில் வரலாறு கூறுகிறது.

புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 9:54 am

சுந்தரர் - சங்கிலி நாச்சியார் திருமணம்

நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இரு மனைவிகள். முதல் மனைவி பரவை நாச்சியாருக்கு ஊர் திருவாரூர். இரண்டாம் மனைவி சங்கிலி நாச்சியாரின் ஊர் இந்தத் திருவொற்றியூர் தான்.

சுந்தரமூர்த்தி - சங்கிலி திருமணத்தை நடத்தி வைத்தவரே திருவொற்றியூர் ஈசன்தான். திருவொற்றியூரை அடுத்த ஞாயிறு கிராமத்தில் பிறந்தவர் சங்கிலி. பெற்றோர்கள் பார்த்த மணமகனை வேண்டாம் என ஒதுக்கிவிட்டுத் திருக்கோயிலின் அருகில் கன்னிமாடம் அமைத்து அதில் தனது தோழியர்களுடன் தங்கி சிவத்தொண்டில் ஈடுபட்டு வந்தார்.

திருவொற்றியூர் ஈசனுக்குநாள்தோறும் பூமாலை தொடுத்து வழங்குவது அவரது பணிகளில் ஒன்று. பல்வேறு சிவத்தலங்களையும் தரிசித்துவிட்டுத் திருவொற்றியூர் வந்த சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூர் ஈசனுக்குப் பூமாலை கொடுக்க வந்த சங்கிலியைக் கண்டு காதல் கொண்டார்.

ஏற்கனவே ஒரு பெண்ணை மணந்திருந்த அவர் சங்கிலியையும் மணப்பது எப்படி என்று புரியாமல் தவித்தார். தனது தவிப்பை ஈசனிடமே தெரிவித்தார். ஈசனும் தானே சங்கிலியைச் சம்மதிக்க வைப்பதாக வாக்களித்தார்.

அதன்படி ஒருநாள் சங்கிலியின் கனவில் ஈசன் தோன்றினார். ''சுந்தரன் எனது பரமபக்தன். அவனை நீ மணக்க சம்மதிக்க வேண்டும்'' என்றார்.

இறைவனே வந்து சொன்ன பிறகு சங்கிலி எப்படி மறுப்பார். எனினும் ''ஏற்கனவே பரவை நாச்சியை மணந்து கொண்டிருக்கும் அவர் என்னை மணந்து எப்படி இங்கே வாழ முடியும் ?'' என்று கேட்டார்.

''அதற்காக நீ கவலைப்படாதே, உன்னைப் பிரிய மாட்டேன் என சத்தியம் செய்து தரச் சொல்கிறேன்'' என்றார் ஈசன்.

பின்பு சுந்தரரிடம் சென்று ''சங்கிலி சம்மதித்து விட்டாள். ஆனால் நீ அவளுக்கு அவளை விட்டுப் பிரியமாட்டேன் என்று என் கோயிலில் வைத்து சத்தியம் செய்து உறுதியளிக்க வேண்டும் என்கிறாள்'' என்றார்.

காதல் மோகத்தில் சுந்தரரும் அதற்குச் சம்மதித்தார் என்றாலும் சத்தியம் செய்து கொடுத்த பின் வேறு தலங்களுக்குச் செல்வது எப்படி என்று யோசித்தார். உடனே ஈசனிடம், ''அவளுக்கு நான் சத்தியம் செய்து கொடுக்கும் போது நீங்கள் கோயிலில் இருக்கக்கூடாது. எனக்காக சிறிது நேரம் அருகில் உள்ள மகிழ மரத்தடிக்குச் சென்று தங்க வேண்டும்'' என்றார்.

ஈசன் முன் சத்தியம் செய்வதை சுந்தரர் தவிர்க்க நினைத்தார். ஈசனுக்கு அது புரியாதா என்ன? அவர் வேறு ஒரு வேலை செய்தார். மீண்டும் சங்கிலியிடம் போனார். ''சுந்தரன் சத்தியம் செய்யச் சம்மதித்து விட்டான். ஆனால் அவனை நீ மகிழ மரத்தடிக்கு அழைத்து வந்து அங்கு சத்தியம் பெற்றுக் கொள்'' என்றார்.

அதன்படி சங்கிலியை அவரது தோழிகள் அலங்கரித்துக் கோயிலுக்கு அழைத்து வந்தனர். சுந்தரரும் வந்தார். ஆனால் திருமணத்துக்கு முன் சங்கிலி அவரை மகிழ மரத்தடிக்கு அழைத்தாள். சுந்தரர் துணுக்குற்றார். ஆனாலும் வேறு வழியில்லை. அங்கேயே சென்று சத்தியம் செய்தார்.

அவர்களின் காதல் சாட்சியான அந்த மகிழமரம் இன்று கோயிலின் வளாகத்தில் வடக்குப் பிரகாரத்தில் இருக்கிறது. வழிப்பாட்டுக்குரியதாகப் போற்றப்படும் அம் மரத்தைச் சுற்றி இரும்பு கம்பி வேலி போட்டுப் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

சங்கிலியை சுந்தரர் பிரிந்து சென்றதும் பார்வை இழந்ததும் வேறு கதை...

புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 9:56 am

வெள்ளிக் கவசம் பூண்ட புற்று

புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Apr07-11

இப்போதும் மாசி மாதம் பிரம்மோற்சவத்தின் போது அம் மரத்தின் கீழே மக நட்சத்திரத்தன்று சங்கிலி நாச்சியார் திருமண உற்சவம் நடைபெறுகிறது.

சுந்தரருக்கு மட்டுமல்ல தன்னை வந்து வழிபடும் பக்தர் அனைவருக்கும் உதவி செய்து அருள்புரிந்து வருகிறார் திருவொற்றியூர் ஈசன். இங்கு இவருக்குப் புற்றிடம் கொண்டர் என்பது பெயர். மூலவர் புற்றிலிருந்து தோன்றியவர் என்பதால் இப் பெயர். இன்றும் கருவறையில் புற்றுதான் உள்ளது. வெள்ளிக் கவசமிட்டு அதை மூடி வைத்திருக்கிறார்கள்.

கார்த்திகை மாதம் பெளர்ணமி நாள் உட்பட ஆண்டில் சில நாட்கள் மட்டும் கவசம் நீக்கிப் புற்றாக உள்ள ஈசன் மேல் அபிஷேகம் செய்து புனுகு சாத்துகிறார்கள்.

எண்ணெய் வணிகர் கலிய நாயனார்

புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Apr07-12

கருவறை சுற்று மண்டபத்தில் ஆதிசங்கரருக்கு ஒரு சிலையுள்ளது. தென்புறத்தில் 63 நாயன்மார்களின் சிலைகள் உள்ளன. அவர்களில் ஒருவரான கலிய நாயனாருக்குத் தனி சந்நதி உள்ளது. காரணம் கலியநாயனார் திருவொற்றியூரில் வாழ்ந்தவர்.

எண்ணெய் வணிகர் குடும்பத்தில் பிறந்த இவர் கோயிலுக்கு தினமும் எண்ணெய் கொடுத்து விளக்கேற்றும் சேவையைச் செய்து வந்தார்.

பின்னாளில் வறுமை ஏற்பட்டது. எனினும் கூலி வேலை செய்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு கோயிலுக்கு எண்ணெய் வாங்கித் தந்து தனது கடமையைத் தவறாமல் செய்தார்.

இப்படியானவர்களை சோதிப்பதே ஈசனின் வேலை. வறுமையோடு தள்ளாமையும் வந்து கலியனாரை வாட்டியது. அவரால் கூலி வேலையும் செய்ய முடியவில்லை. பார்த்தார் மனிதர். தனது மனைவியை விற்றுப் பொருள் தேட முயன்றார். அதற்கு அவர் மனைவி ஒப்புக் கொண்டாலும் அவரது மனைவியை வாங்க யாரும் முன் வரவில்லை.

இதனால் மனமுடைந்த கலியனார் கடைசியாய் உயிர் விடத் துணிந்து தனது ரத்தத்தையே எண்ணெய்யாக விளக்கில் விட நினைத்துக் கழுத்தில் கத்தியை வைத்தார். உடனே சிவபெருமான் தோன்றித் தடுத்து அவருக்கு அருள் புரிந்தார். இது நடந்ததும் திருவொற்றியூர் கோயிலில்தான்.

புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 9:58 am

ஆதிசங்கரர் அமைத்த ஸ்ரீ சக்கரம்

புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Apr07-13

வடபுறத்தில் ஒரு காளி சந்நதி உள்ளது. இக் காளியை வட்டப்பாறையம்மன் என்று அழைக்கின்றனர். காளி சந்நதி எதிரே ஒரு வட்டபாறையுள்ளதால் இப் பெயர். வட்டப்பாறையின் கீழ் காளியின் உக்கிரத்தை அடக்கி சாந்த ரூபிணியாக்க ஆதிசங்கரர் உருவாக்கிய ஸ்ரீசக்கரம் உள்ளதாம்.

இதனை அடுத்து ஒரு சிமெண்ட் கட்டிடம் உள்ளது. குங்குமத்தால் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கும் அதைத் 'திருப்தீஸ்வரர்' என்ற பெயரில் வழிபடுகின்றனர்.

மகா பெரிய ஆகாசலிங்கம்

இக் கோயிலில் உள்ள பஞ்சலோக விக்கிரகங்கள் மிகவும் பழமையானவை என்பதால் மிகுந்த கலைஅழகுடன் காணப்படுகின்றன. அதிலும் நடராஜர் சிலை மிகவும் சிறப்பாக உள்ளது.

கோயில் வளாகத்தில் பல்வேறு தலங்களைச் சேர்ந்த ஈசனின் சிவலிங்க வடிவங்களும் தனித்தனி சன்னதிகளில் உள்ளன. அதில் பிரம்மாண்டமான ஆகாச லிங்கம் குறிப்பிடத்தக்கது. கோயிலின் தென்மேற்கு மூலையில் திறந்த வெளியில் இந்த லிங்கம் உள்ளது.

தெற்குப் பிரகாரத்தில் வரிசையாக 27 லிங்கங்கள் உள்ளன. அவை அசுவினி, பரணி எனத் தொடங்கி உத்திரட்டாதி, ரேவதி என முடியும் 27 நட்சத்திரங்களையும் குறிக்கும் லிங்க வடிவங்களாகும். அந்தந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அந்த லிங்கத்தைப் பூஜித்துப் பலன் பெறலாம்.

தென்மேற்குப் பிரகாரத்தில் கெளளீஸ்வரர் சந்நதி ஒன்றுள்ளது. இதில் வட இந்தியப் பாணியில் சிவன் தியான நிலையில் அமர்ந்துள்ள வடிவம் உள்ளது. வழவழப்பான கல்லில் செதுக்கப்பட்டுள்ள சிவனின் சிற்பம் கம்பீரமானது.

அச் சந்நதியில் நின்று கூர்ந்து கவனித்தால் உள்ளே 'ஓம்' என்ற ஓங்கார நாதம் ஒலிப்பதைக் கேட்கலாம் என்கின்றனர்.

வடமேற்கு மூலையில் கோயிலுக்குள் கோயிலாக மேலும் ஒரு அழகிய சின்ன தியாகராஜ சுவாமி கோயில் உள்ளது. பிற்காலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் அக் கோயிலின் சிற்பங்கள் அற்புதமானவையாக உள்ளது. கோயில் தூண்களின் மேல் நாரதர், தும்புரு, நந்தி தேவர்கள் உள்பட தேவலோக வாசிகள் பலரின் சிற்பங்கள் கவனிக்கத்தக்கவை.

புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 9:59 am

பெயருக்கேற்ற வடிவுடை நாயகி

புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Apr07-14

வடகிழக்கு மூலையில் அம்பாள் சந்நதியுள்ளது. அம்பாளின் பெயர் வடிவுடைநாயகி. சுமார் ஐந்தடி உயரத்தில் இருக்கும் அம்பாள் பெயருக்கு ஏற்ப அழகே உருவாய் இருக்கிறாள். திருவொற்றியூர் ஈசனை விட அம்பாளின் முகவிலாசம் மிகச்சிறப்பாக உள்ளது. இந்த அம்மனை உச்சி காலத்தில் வணங்குவது சாலச் சிறந்தது என்கின்றனர்.

ஈசன் சந்நதியில் சிரமமில்லாமல் தரிசனம் முடிந்து விடுகிறது. ஆனால் அம்பாள் சந்நதியிலோ நீண்ட வரிசையிம் நிற்க வேண்டும். சிறப்புக் கட்டணம் செலுத்தி நீளம் குறைந்த வரிசையில் சென்றும் தரிசிக்கலாம். அம்பாளின் முகத்தைப் பார்த்துவிட்டாலே கவலைகள் பறந்துவிடும். அவ்வளவு பொலிவான தோற்றம்.

ஈசன் சந்நதியை அடுத்துள்ள தியாகராஜர் திருவாரூரைப் போல சிறப்பு மிக்கவர். திருவொற்றியூர் ஈசனினுக்குப் புற்றிடம் கொண்டார் என்பதோடு ஆதிகாலத்திலிருந்தே இங்கு கோயில் கொண்டுள்ளதால் ஆதிபுரீஸ்வரர் என்றும், ஆதிசேஷனுக்கு வரமளித்ததால் படம்பக்க நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

ஒற்றியூர் சிறப்பு

புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Apr07-15

ஒரு காலத்தில் சிவத்தலங்கள் உள்பட எல்லா ஊர்களுக்கும் வரி விதித்து அரசன் சுற்றறிக்கை அனுப்பினான். அப்பொழுது அரசனுக்கும் ஓலை எழுதியவருக்கும் தெரியாதவாறு வாக்கியம் பிளந்து, ''இவ்வாணை ஏற்றியூர் நீங்கலாகக் கொள்க'' என்று எழுதப்பட்டிருந்ததாம். இதன் காரணமாகவே இவ்வூருக்கு ஒற்றியுள் அதாவது விலக்கப்பட்ட ஊர் என்று பெயர் ஏற்பட்டதாகச் செவி வழிச் செய்தியுள்ளது.

ராஜகோபுரத்தை அடுத்துள்ள கோயிலின் முன்பகுதி பெரும் மணல் வெளியாகவுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அமர்ந்து தெய்வ சிந்தனையில் பொழுதைக் கழிக்க வசதியாக உள்ளது.

ஒற்றியூர் ஈசனின் பாதக்கமலங்களில் ஒருமுறை நம் கண்ணையும் ஒற்றுவோம்.

புற்றிடம் கொண்டாரும் வடிவுடை நாயகியும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக