ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அருணாவுக்கு வேண்டியது வாழ்வா???

View previous topic View next topic Go down

அருணாவுக்கு வேண்டியது வாழ்வா???

Post by அப்புகுட்டி on Tue Mar 09, 2010 6:20 pm

கண்டிப்பாக இதைப் படிங்கள் அழுகை அழுகை அழுகை


யுதனேஸியா" (Euthanesia) என்ற ஆங்கில வார்த்தையை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? கருணைக்கொலை என்று தமிழ்ப்படுத்தலாம். அதாவது தீராத வியாதியால் கடுமையான உடல் வேதனைகளை நித்தம் நித்தம் அனுபவித்து வருபவர்களுக்கு நிரந்தரத் தீர்வாக மரணத்தை ஏற்படுத்தும் செயல். தற்போது உலகம் முழுவதும் மெல்ல மெல்ல அங்கீகரிக்கப்பட்டு வரும் இந்த தீர்வு சரியா? தவறா? என்று வாதங்கள் எடுத்து வைக்கப்படுகின்றன. நீங்களும் இந்த வாதத் தில் ஒரு கருத்துச் சொல்ல விருப்பம் கொண் டிருந்தால் "அருணா ஷன்பாக்'கைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல் அவசியம்.

"சடக் சாந்தினி'. அருணாவைப் பார்க்கும் போதெல்லாம் தனக்கு இந்த வார்த்தைகளே ஞாபகத்துக்கு வந்ததாக மும்பை மருத்துவமனையில் அவருடன் பணியாற்றிய மூத்த செவிலி துர்கா மேத்தா குறிப்பிடு கிறார். "சடக் சாந்தினி' என்பது குஜராத்தி பிரயோகம். "தனது கிரகணங்களால் மின் அதிர்ச் சியை தரவல்ல சிறிய நிலா என்பதுதான்' அதன் அர்த்தம்.
உண்மையிலியே அருணாவுக்கு அந்த பிரயோகம் மிகப் பொருந்தும்.

இந்தியாவின் கொங்கன் பிரதேசத்தைச் சார்ந்தவர் அருணா ஷன்பாக் (Aruna Shanbaug). கொடுமையான அந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது 25 வயது நிரம்பிய அழகிய பெண். அவர் பணி யாற்றிய மும்பை மாநகராட்சியால் நடத்தப் பட்ட மருத்துவமனையில் அருணா மிகப் பிரபலம். அவரது பிரபலத்துக்கு அவரது அழகு மற்றும் திறமை மட்டுமன்றி விதிகளை கடைபிடிப்பதில் அவர் காட்டிய உறுதியும் எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் சுபாவமுமே காரணமாக இருந்தது. படபடப் பாக அவர் பேசும் வார்த்தைகள் சிலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் அதே மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிய சுந்தீப் சர்தேசாயை (Dr. Sundeep Sardesai) கவர்ந்ததில் அதிக ஆச்சர்யம் இல்லை. அருணா சுந்தீப் காதல் அந்த மருத்துவமனை முழுவதும் அறியப்பட்டு, திருமணத்திற்கான நாளை இருவரும் தேடிக்கொண்டு இருந்தார்கள்.

"அருணா வுக்கு என்ன கவலை? அதிஷ்டசாலி அவள்' என்றுதான் அவளுடன் பணியாற்றிய அனைத்து செவிலிகளும் நினைத்துக் கொண்டிருந்தனர்.அருணா பணியாற்றி வந்தது நாய்கள் அறுவை மற்றும் ஆராய்ச்சிப் பிரிவில். சில நாட்களாக அடிக்கடி நாய்களுக்கான இறைச்சி காணாமல் போனது. அருணாவின் சந்தேகம் அந்தப் பிரிவில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றிக்கொண்டிருந்த சோகன்லால் மீதுதான். ஏற்கனவே ஆராய்ச் சிக்கான நாய்களை இரக்கமில்லாமல் கொடுமையான முறையில் கையாண்டதற்காக அருணா சோகன்லாலை கண்டித்திருக்கிறார்.

காணாமல் போன நாய் உணவுகளைப் பற்றி கேட்டதற்கு, "சிஸ்டர், எப்படியும் மருத்துவர்கள் கையால் சாகப் போகிற நாய்களைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்? அவற்றிற்கு வலித்தால் என்ன? பட்டினி கிடந்தால் என்ன?' என்று திமிராக பதிலளித்தான். அதற்காக அருணா அவனை கடுமையான சொற்களால் கண்டிக்க நேர்ந்தது, "இன்னொரு தடவை இவ்வாறு நடந்து கொண்டால், உன் வேலை போய்விடும்' என்று எச்சரித்தார்.

"அருணா இப்படித்தான். படபடவெனப் பொரிந்து தள்ளி விடுவாள். மற்றபடி அவள் இதயம் தங்கம்' என்கின்றனர் அருணாவின் சக தாதியர். "அவன் ரொம்ப முரடன். நான் அவனை கவனித்துக்கொண்டு இருக்கிறேன்.
அடுத்த முறை இப்படி ஏதாவது நடந்தால், அவனைப் பற்றி கண்டிப்பாக முறையிடப் போகிறேன்' என்று அருணா சோகன்லாலைப் பற்றித் தனது தோழிகளிடம் சொல்லிக் கொண்டிருக்க அங்கே அவனோ, "அருணாவை மானபங்கப்படுத்தி பழிதீர்க்கப் போகிறேன்' என்று அவனது நண்பர்களிடம் கறுவிக்கொண்டு இருந்தான்.

அருணாவின் தோழிகள் பயந்த மாதிரியே ஒரு நாள் நடந்தது. அருணா இரவுப் பணியில் இருக்கும் போது ஒரு தனியறையில் சோகன்லால் "சின்ன நிலா' என்று அழைக்கப்பட்ட அருணாவை பலாத்காரப் படுத்திவிட்டான். அருணாவின் வாழ்க்கையையே ஒரு முடிவுக்கு கொண்டு வந்த அந்த சம்பவம் நடைபெற்றது நவம்பர் மாதம் 1973 ஆம் ஆண்டு.

சம்பவம் உடனடியாக வெளியே தெரிய வர, நடந்தது என்ன என்று விவரிக்கும் சக்தி அருணாவிடம் இல்லை. அருணா கத்தி யாரையும் உதவிக்குக் கூப்பிட்டு விடக் கூடாது என்பதற்காக, சோகன்லால் நாய்களைக் கட்டிப்போடும் சங்கிலியால் அவளது கழுத்தை நெரித்ததில் அவரது மூளைக்குப் போகும் ஒக்ஸிஜன் தட்டுப்பட்டு மூளையின் பல பாகங்கள் செயலிழந்து அருணா ஏறக் குறைய கோமா நிலையிலிருந்தார். பேசும் திறன் முற்றிலும் இல்லை.

முதலில் மறைக்க முயற்சிக்கப்பட்ட சம்பவம், "தங்களுக்குப் பணியிடத்தில் பாதுகாப்பு வேண்டி' மருத்துவமனை செவிலியர்கள் நடத்திய மூன்று நாள் வேலை நிறுத்தத்தால் பரபரப்பு அடைந்தது. அருணா மீதான தாக்குதலுக்காக 1973ஆம் வருடம் நவம்பர் மாதம் நடை பெற்ற வேலை நிறுத்தம்தான் இந்தியாவின் செவிலியர்கள் நடத்திய முதல் வேலை நிறுத்தம். விஷயம் முதல்வர் வரை சென்று சோகன்லால் கைதுசெய்யப்பட்டு 7 ஆண்டு சிறைத் தண்டனைக்கு ஆளானான். ஆனால் பாலியல் பலாத்காரத்திற்காக அல்லாமல் தாக்குதல் மற்றும் வன்திருட்டு ஆகிய குற்றங்களுக்காகத்தான் தண்டனை வழங்கப்பட்டது. ஏனெனில் அருணாவோ எந்தவித உணர்வும் செயற்றிறனும் இன்றி நீதிமன்றம் செல்லவோ அல்லது சாட்சி சொல்லவோ முடியாத நிலையில் இருந்தார். தொடர்ந்த சிகிச்சைகளினாலும், மழிக்கப்பட்ட தலையினாலும் "சின்ன நிலா' என்று வர்க்கப்பட்ட அருணா கசக்கி எறியப்பட்ட குப்பைக் காகிதம் போல உருக்குலைந்து போனார்.

அருணா தாக்கப்பட்டு 30 வருடங்கள் கடந்துவிட்டன. இப்போதும் மும்பை மருத்துவமனைக்குச் சென்றால் அதே வார்டில் அருணாவின் கதறல்களை நீங்கள் கேட்கலாம். அருணா இன்றும் உயி ரோடு இருக்கிறார். எந்தவித உணர்வும் இன்றி பற்கள் உட்பட அவயவங்களில் எவ்விதப் பயனுமின்றி! அவருக்கு கண்பார்வை கிடையாது. நினைவு கிடையாது. பேச முடியாது. ஆனால் 30 வருடங்களுக்கு முன்பு நடந்த அந்தக் கொடூரம் அவர் மனதின் ஆழத்திலிருந்து சகிக்க முடியாத அலறல்களாகவும் கதறல்களாவும் சில சமயங்களில் இதயத்தை சில்லிட வைக்கும் சிரிப்பாகவும் வெளிவருகிறது. அவர் மனதின் ஆழத்தில் உணர்வுகள் மிஞ்சியிருக்கின்றனவா?
இல்லை, ஆழ்மௌனம்தானா? என்பது யாருக்கும் தெரியாது.

அருணாவின் கணவராக வேண்டிய சுந்தீப் சர்தேசாய் அருணாவுக்காக நான்கு வருடங்கள் காத்திருந்து நம்பிக்கை இழந்த நிலை யில் இன்று வேறு எங்கோ மனைவி மக்களுடன் இருக்கிறார். சோகன்லால் தண்டனைக் காலம் முடித்து தில்லியில் தனது குடும்பத்துடன் வசிக்கிறார். அருணாவின் உறவினர்க ளும் நண்பிகளும் கொஞ்சங்கொஞ்சமாக களைத்துப் போய் இன்று சொந்தம் என்று சொல்லிக்கொள்பவர்கள் மும்பை மருத்து வமனையில் வேலைக்கு வந்து சேரும் மருத்துவர்களும், செவிலிகளும், பணியாளர்களும்தான். அவர்கள்தாள் இன்று அருணாவை தத்தெடுத்துக் கொண்டுள்ளனர்.

மும்பை மருத்துவமனையில் பணி யாற்றும் அனைத்து செவிலியர்களுக்கும் அருணா ஒரு காவல் தெய்வம் போல. செவிலியர்களின் தன்னலமற்ற சேவையின் அடையாளமாக அருணா ஷன்பாக் இந்த 53 வயதில், தாய் வயிற்றில் இருக்கும் கருவினைப் போல சுருங்கி இன்றும் மும்பை மருத்துவமனை வார்டில் படுத்திருக்கிறார்....

அருணாவுக்கு வேண்டியது வாழ்வா???

சோகம் சோகம் அழுகை அழுகை
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: அருணாவுக்கு வேண்டியது வாழ்வா???

Post by jayakumari on Tue Mar 09, 2010 6:25 pm


jayakumari
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1612
மதிப்பீடுகள் : 48

View user profile

Back to top Go down

Re: அருணாவுக்கு வேண்டியது வாழ்வா???

Post by Manik on Tue Mar 09, 2010 6:30 pm

அய்யோ என்ன ஒரு கொடுமை இது படிக்கவே கஷ்டமா இருக்கு அருணா ரொம்ப பாவம்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18686
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: அருணாவுக்கு வேண்டியது வாழ்வா???

Post by அப்புகுட்டி on Tue Mar 09, 2010 6:37 pm

@Manik wrote:அய்யோ என்ன ஒரு கொடுமை இது படிக்கவே கஷ்டமா இருக்கு அருணா ரொம்ப பாவம்

படித்ததும் மனமுடைந்து போய் இருக்கிறேன்
”யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
அப்புகுட்டி சோகம்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: அருணாவுக்கு வேண்டியது வாழ்வா???

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum