உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Today at 2:57 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by சக்தி18 Today at 2:41 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Today at 2:29 pm

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by சக்தி18 Today at 2:27 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Today at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Today at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 1:48 pm

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by ayyasamy ram Today at 1:46 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Today at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Today at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Today at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Today at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Today at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Today at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by ayyasamy ram Today at 7:03 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Today at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Yesterday at 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Yesterday at 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Yesterday at 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Yesterday at 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Yesterday at 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Yesterday at 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி
by ayyasamy ram Yesterday at 11:14 am

» வருடத்துக்கு 15 இடங்களுக்கு சுற்றுலா சென்றால் பயண செலவை அரசே அளிக்கும்: மத்திய அரசு அதிரடி திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» மனித நேயம் - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» சுவரேறி குதித்த பேய்..!
by ayyasamy ram Yesterday at 5:36 am

» மொய்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:35 am

» கிச்சன்ல என்ன சலசலப்பு..!
by ayyasamy ram Yesterday at 5:34 am

» பாத யாத்திரை போக புலட் பரூஃப் வேண்டுமாம்…!
by ayyasamy ram Yesterday at 5:33 am

» ஐடியா- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:33 am

» சக்கரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:31 am

» டைரக்டர் ஏன் டென்ஷனா இருக்கார்?
by ayyasamy ram Yesterday at 5:30 am

» தோல்வியில் சுகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 am

» ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க மிமிக்ரி கலைஞர்…!!
by ayyasamy ram Yesterday at 5:28 am

» மனிதன் விசித்திரமானவன்…!
by ayyasamy ram Yesterday at 5:26 am

» சைபர் கிரைம் (Cyber Crime) விழிப்புணர்வு
by ayyasamy ram Yesterday at 5:24 am

» பேப்பர்ல என் போட்டோ வந்தபிறகுதான் நான் பைக் ஓட்டுறதே வீட்டுக்குத் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» 55 ஆயிரம் மில்லியன் ஜிபி!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» நட்பு- கவிதை
by ayyasamy ram Yesterday at 5:18 am

Admins Online

மரபுப் பா பயிலரங்கம்

மரபுப் பா பயிலரங்கம் - Page 33 Empty மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:16 pm

First topic message reminder :


  • எழுத்து


தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.

இவற்றில்,

அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.


ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.


அடுத்து

மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.

க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும்

மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.எடுத்துக்காட்டு :

க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.

இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.

நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.


புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.


எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.


இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.


அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.


Last edited by தமிழநம்பி on Wed Mar 03, 2010 11:27 pm; edited 1 time in total
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 15

Back to top Go down


மரபுப் பா பயிலரங்கம் - Page 33 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி on Mon Apr 11, 2011 4:23 pm

அன்பு நெஞ்சங்களுக்கு, வணக்கம். நலம்பெற்று வருகிறேன். 'மே' மாதத்திலிருந்து பயிலரங்கம் தொடரும். உங்கள் அனைவரின் அன்புக்கும் நெஞ்சார்ந்த நன்றி. பிறகு விளக்கமாக மடலிடுவேன். அன்பன், தமிழநம்பி.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 33 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by யாதுமானவள் on Tue Apr 12, 2011 5:35 pm

வணக்கம் அய்யா,

தங்கள் பதில் கண்டு மகிழ்ந்தேன். தாங்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்.

அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
மதிப்பீடுகள் : 40

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 33 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by puthuvaipraba on Wed Apr 13, 2011 6:11 am

மகிழ்ச்சி. நன்றி ஐயா
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 19

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 33 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by kirikasan on Fri Apr 15, 2011 11:36 pm

தாங்கள் பூரண குணமடைந்து மீண்டும் உடல்நலம் சிறந்து விளங்கவேண்டும். இதற்காக என்னருள் தரும் இறையை மனதால் வேண்டுகிறேன்!

அன்புடன் கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 33 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி on Tue May 10, 2011 8:21 am

பெருமதிப்பிற்கும் பேரன்பிற்குமுரிய அன்புள்ளங்களே! நாற்பது அகவைக்கு மேல் சிலருக்கு மட்டும் நேரும் கண்ணின் 'பின்புறத் திண்நீர்ம விலக்கலூறு' (posterior vitreous detachment, சுருக்கமாக P.V.D) காரணமாக, என் இடக் கண்ணின் விழித்திரையில் ஒரு துளை ஏற்பட்டுவிட உடனடியாக 'ககிஒளி' (லேசர்) யால் அத்துளை சரிசெய்யப்பட்டது. அதன்பின் முதலில் ஒரு கிழமை கழித்தும், பின் 15 நாள் கழித்தும்,அதன்பின் 1மாதம் கழித்தும் கண் ஆய்வு செய்யவேண்டியிருந்தது. இனி, 2மாதம் கழித்து ஆய்வுக்குப் போக வேண்டும் . இப்போது 80 விழுக்காடு கண் சரியாக இருப்பதாக உணர்கின்றேன். இனி நாம் பயிலரங்கைத் தொடரலாம். என்னால் ஏற்பட்ட இக் காலத் தாழ்த்தத்திற்கு மிகவும் வருந்துகிறேன். உங்கள் அன்பும் நல்லெண்ணமுமே எனக்கு நேரவிருந்த கண்பார்வைக் கோளாற்றை நீக்கியதாக நம்புகிறேன் அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இனி, பயிலரங்கிற்கு வருவோம்.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 33 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி on Tue May 10, 2011 8:29 am

பொய்யா முடைபோர்த்து புழுகெனும் தேரேறி
வையம் வலம்வந்து வாழ்வோரை ஏமாற்றி
உய்தாற் குழிபறித் துன்னை யழிக்கமுன்
மெய்யை உலகுணரச் செய்.

பொய்யா முடைபோர்த்து புழுகெனும் தேரேறி
வையம் வலம்வந்து வாழ்வோரை ஏமாற்றி
உய்யாக் குழிபறித் துன்னை யழிக்குமுன்
மெய்யை உலகுணரச் செய்.

கருத்தை நான் விளங்கிக்கொண்ட வகையில் இரு சிறு திருத்தங்கள் செய்துள்ளேன். நீங்கள் கருதிய கருத்தைச் சரியாகக் கூறியிருந்தீர்களானால், விளக்கிச் சொல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நஞ்சூறும் பாம்பை நடுவீட்டில் கண்டவுடன்
நெஞ்சில் உரம்கொண்டு நீள்தடியும் கைக்கொள்ள,
’அஞ்சியதைக் கொல்லா தணைந்துவிளை யா’டென்போர்
நெஞ்சோ பெருநஞ்சாம் நினை!

ஈற்றடி மட்டும் நெஞ்சதோ நஞ்சாம் நினை! என்று இருக்கலாம். காய் முன் நிரையைத் தவிர்க்க!

கொல்கொல் எனக்குமுறும் கோதையின் காற்சிலம்பு
சொல்லல் எவரென்றே சுந்தரமென் கால்வினவ
பொல்லா வளையலெனைப் போகுமிடம் சாற்றுவனொன்
றில்லாப் பதரென்ற தால்.

சரியாக அமைந்துள்ளது கிரி. பின்னிரண்டு வரிகளின் பொருளை விளங்கச் சொல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 33 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி on Tue May 10, 2011 8:40 am

யாதுமானவர்க்கு,

முப்பால் எழுதிய முத்தமிழ் மூத்தவன்
செப்பா தொருபொருள் உண்டோ மதத்திற்(கு)
அப்பால் நிலையாய்க் கவியாத் துலகினில்
ஒப்பா நிலையடைந் தான்.

சரியாக அமைந்துள்ளது. பாராட்டு.

பிழைபடா வாழ்க்கைக் குறிப்புகள் யாவும்
இழைபட ஈரடி யாக்கிப் பொருந்த
அறத்தைக் காக்கும் அருமருந் தாமெனும்
குறளெனத் தந்தான் நமக்கு.

அறத்தைக் காக்கும் – மா முன் நேர் வருகிறது.
தாமெனும் குறளெனத் – விளம் முன் நிரை வருகிறது.
.திருத்துக.Last edited by தமிழநம்பி on Tue May 10, 2011 8:42 am; edited 1 time in total
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 33 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி on Tue May 10, 2011 8:42 am

அடுத்த வகை வெண்பா எழுத மிக விரைவில் பயில இருக்கிறோம். நன்றி.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 33 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by kirikasan on Tue May 10, 2011 5:54 pm

தாங்கள் குணமடைந்து வந்தது மிக மகிழ்ச்சியை தருகிறது.
மரபுப் பா பயிலரங்கின் தொடர்வுக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றோம்.
தங்கள் உடல் நிலையை பேணி முடிந்தபோது தாருங்கள்.

காத்திருந்து எப்போதும் கல்வியைப் பெற்றுக்கொள்ள ஆவலுடன் பார்த்திருப்போம். தொடர்ந்து என்பயிற்சியைப் பற்றிய குறிப்பு தருவேன்

அன்புடன்
கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 33 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by kirikasan on Tue May 10, 2011 6:18 pm

அன்புடன் ஐயா ,

1.
உய்யாக் குழிபறித் துன்னை யழிக்கமுன்
மெய்யை உலகுணரச் செய்.

தங்களின் திருத்தம் மிகவும் பொருத்தமாக உள்ளது. நான் உய்தாற் குழிபறித்து என்று எழுதியது மனிதன் உய்தால் அவனுக்கு குழிபறிப்பார்கள் என்னும் கருத்தென்றாலும் உய்யாக் குழியே மிகவும் சரியாக உள்ளது

2.
நெஞ்சோ பெருநஞ்சாம் நினை! - நெஞ்சதோ நஞ்சாம் நினை

தவறை தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா!

3.
கொல்கொல் எனக்குமுறும் கோதையின் காற்சிலம்பு
சொல்லல் எவரென்றே சுந்தரமென் கால்வினவ
பொல்லா வளையலெனைப் போகுமிடம் சாற்றுவனொன்
றில்லாப் பதரென்ற தால்.


கொன்றுவிடு என்பதுபோல் ’கொல் கொல்’ என்றுகத்தும் அவள் காற்சிலம்புகளைப் பார்த்து, ‘ யாரைக் கூறுகிறாய் ?’என்று அவற்றை
தாங்கிநிற்கும் கால் கேட்க அவள் கையில் அணிந்துள்ள வளையல்கள் சலசலத்து கால்கள் போகுமிடத்தை மற்றவர் அறியும்படியாக
காட்டிக்கொடுக்கிறதே. புத்தி ஒன்றில்லாத பதர் என்று பேசுவதாக எண்ணியபோதும் தக்க முறையில் வரிகள் அமையவில்லையென்ற
பிழைகளை உணர்கிறேன்
1. வளையலைப்போலவே சிலம்பும் சத்தமிடுகிறது
2. கால்கள் செல்லுமிடத்தை கைகள் காட்டிக்கொடுப்பதாக கற்பனை தகுந்தமாதிரி வெளிப்படவில்லை.
3 வளையலுனை என்றுதான் வரவேண்டும்
அன்புடன் கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 33 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by kirikasan on Tue May 10, 2011 6:43 pm

ஐயா மேற் கூறிய தவறுகளுக்காக இன்னொரு பயிற்சி செய்தேன்


வெல்வெல் எனவெழுந்த வீரரின் வெற்றிதனை
வல்லரசு கள்சூழ்ந்து வஞ்சமிட் டழித்ததுவும்
நல்லதோ ஈழம் நலிந்து கிடத்தலிவர்
சொல்லரிய செயலாற்ற லால்

கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 33 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி on Wed May 11, 2011 10:58 am

@kirikasan wrote:ஐயா மேற் கூறிய தவறுகளுக்காக இன்னொரு பயிற்சி செய்தேன்


வெல்வெல் எனவெழுந்த வீரரின் வெற்றிதனை
வல்லரசு கள்சூழ்ந்து வஞ்சமிட் டழித்ததுவும்
நல்லதோ ஈழம் நலிந்து கிடத்தலிவர்
சொல்லரிய செயலாற்ற லால்

கிரிகாசன்
கருத்தாழ மிக்க பாடல். வஞ்சமிட் டழித்ததுவும் - விளம் முன் நிரை வந்துள்ளது. திருத்துக.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 33 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by தமிழநம்பி on Wed May 11, 2011 12:01 pm

31. நேரிசை வெண்பா

நாம் அடுத்து எழுதப் பயில இருப்பது நேரிசை வெண்பா.
இது நேரிசைச் சிந்தியல் வெண்பா போன்றதே. ஆனால் நான்கடிகளில் வரும். வெண்பாக்களுக் குள்ளே தக்க ஓசையும் தக்க சொற்களும் பெற்று வருதல் பற்றி இது நேரிசை வெண்பா எனப்பட்டது. நேர் – தகுதி. இசை – ஓசை. இனி. விளக்கமாகப் பார்ப்போம்.


நேரிசை வெண்பாவில் –
1. நான்கடிகள் வரும்.
2. ஈற்றடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சீராய் இருக்க வேண்டும்.
3. ஈரசைச்சீரும் காய்ச்சீரும் மட்டுமே வரவேண்டும்.
4. செப்பலோசை பெற்றிருக்க வேண்டும்.
5. பொதுவாக வெண்பாவுக்குரிய தளை (இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை) அமைந்திருக்க வேண்டும்.
6. மற்ற வெண்பாக்களைப் போலவே ஈற்றுச்சீர், நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டால் முடிய வேண்டும்.
7. இரண்டாவது அடியில் நான்காவது சீர், தனிச்சீராய் இருக்கும். இத் தனிச்சீர், முதல் இரண்டடிக்கு வரும் எதுகையில் அமைய வேண்டும்.
8. முதல் இரண்டடியும் தனிச்சொல்லும் ஓர் எதுகையிலும் (இரு விகற்பம் அல்லது ஈர் உறழ்ச்சி), பின்னிரண்டடி ஓர் எதுகையிலும் வரும்.
நான்கடிகளும் தனிச்சீரும் ஒரே எதுகையிலும் (ஒரு விகற்பம் அல்லது ஓர் உறழ்ச்சி) வரலாம்.

எடுத்துக்காட்டு :
1. ஒரு விகற்ப (அல்லது ஓர் உறழ்ச்சி) நேரிசை வெண்பா


நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
நல்லார் ஒருவ ருளரே லவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

2. இரு விகற்ப (அல்லது ஈர் உறழ்ச்சி) நேரிசை வெண்பா

மன்பதையைக் கூறாக்கும் மண்ணரத்த ஆறாக்கும்
புன்மதத்தைச் சாதியுடன் புதையாழம்! – அன்புடனே
நல்லிணக்கம் நாடிடுக; நஞ்சாம் மனுமறைகள்
புல்லர்சொல் தள்ளுபுறம், பொய்.


இனி, எழுதுக.
avatar
தமிழநம்பி
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 33 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by Raja2009 on Sat Jul 09, 2011 10:15 am

அன்புள்ள ஐயா,

தாங்கள் குணமடைந்து வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி. தங்களின் மெளன மாணவனாக இருக்கிறேன். பாடங்களை படிக்கிறேன். ஆனால் பயிற்சி செய்வதற்கு பயமாக (தவறாகி விடுமோ என்று) இருக்கிறது.

ராஜா
avatar
Raja2009
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 33 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by சதாசிவம் on Sat Jul 09, 2011 10:32 am

ஐ யா
இந்த திரியை இன்று தான் கண்டேன். மிக பயனுள்ள தகவல்.
தொடருங்கள் மரபுப் பா பயிலரங்கம் - Page 33 677196 மரபுப் பா பயிலரங்கம் - Page 33 677196
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117

Back to top Go down

மரபுப் பா பயிலரங்கம் - Page 33 Empty Re: மரபுப் பா பயிலரங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை