ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மலரும் நினைவுகள்.

View previous topic View next topic Go down

மலரும் நினைவுகள்.

Post by kalaimoon70 on Wed Feb 10, 2010 1:06 am

சினிமாவிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆரின் அனுபவங்கள்- லண்டன் ரேடியோவுக்கு அளித்த பேட்டி
லண்டன் (பி.பி.சி.) ரேடியோவுக்கு அளித்த பேட்டியில், சினிமாவிலும், அரசியலிலும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எம்.ஜி.ஆர். கூறினார். 1974_ம்
ஆண்டு, ரஷியத் தலைநகரான மாஸ்கோவில் நடந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்ட
எம்.ஜி.ஆர்., அங்கிருந்து லண்டன் சென்றார். அங்கு ``பி.பி.சி." க்கு
அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-


என்னுடைய 2 வயதில் என் தந்தை இறந்துவிட்டார். என்
தந்தையும், தந்தைக்கு உயிரூட்டிய அறிவைத் தந்த பாட்டனாரும் பெரும்
லட்சாதிபதிகளாக இருந்தவர்கள். ஆனால்; கேரளத்தில் தந்தையின் சொத்துகள்
குழந்தைகளுக்கு இல்லை என்ற காரணத்தால் நாங்கள் அனாதைகளாக ஆக்கப்பட்டோம்.
என் தாயின் அரவணைப்பில்தான் வளர வேண்டி இருந்தது.


என்
தந்தை மாஜிஸ்திரேட்டாக இருந்தார். பிரின்சிபாலாகவும் இருந்தார்.
பிரின்சிபாலாக அவர் இலங்கையில் பணியாற்றும் போது, கண்டியிலே நான்
பிறந்தேன்.
2 வயதில் தந்தையை இழந்து
அதற்கு பிறகு 4, 5 வயதில் தமிழ் நாட்டிற்கு வந்துவிட்டோம். என்னை வளர்த்த
வேலு நாயர் என்பவர் போலீஸ் இலாகாவில் போலீஸ்காரராக பணியாற்றினார். அவரது
ஆதரவில் நாங்கள் வளர வேண்டி இருந்தது.


முதன்
முதலில் நான் எழுதப்படிக்க கற்றுக்கொண்ட மொழி தமிழ். நான்
பார்த்துக்கொண்டு, பழகிக்கொண்டு இருக்கும் மக்கள் தமிழ் மக்கள். என்
உடம்பிலே இத்தனை ஆண்டுகளாக குருதி பாய்ந்து கொண்டு இருக்கிறது, சூடு
தணியாமல் இருக்கிறது, நான் வளர்ந்திருக்கிறேன், வாய்ப்பு பெற்றிருக்கிறேன்
என்றால், அது தமிழ் கூறும் நல்லுலகம் தந்த வாய்ப்பாகும்.


ஆகவே, தமிழ் நாட்டுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் என்னை உந்தித் தள்ளிக்கொண்டிருக்கிறது. அதிகமாகக்
கல்வி பெறுகின்ற வாய்ப்பு எனக்கு இல்லை. எனது 7_வது வயதில், நாடகக்
கம்பெனியில் சேர்ந்துவிட்டேன். நாடகங்களில் நடித்து, பிறகு திரை உலகில்
சேர்ந்தேன்.


தொடக்கத்தில் நான் காங்கிரசில் இருந்தேன். காங்கிரஸ் உறுப்பினராக இல்லாமல் ஊழியனாக இருந்தேன். 1933_
34_ம் ஆண்டில் உறுப்பினரானேன். அதன்பிறகு அங்கே சில குறைபாடுகளை கண்டதால்,
நான் விலகி, அஞ்சாதவாசம் என்று சொல்வார்களே, அதுபோல எந்த அரசியல்
தொடர்பும் இல்லாமல் இருந்து கொண்டிருந்தேன்.


ஆயினும்
நான் மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளில் பிடிப்பும், நம்பிக்கையும்
கொண்டவன். தமிழகத்தில், அக்கொள்கைகள் அனைத்தையும் கொண்டிருந்த ஒரே தலைவராக
அமரர் அண்ணாதான் இருந்தார்கள். அவருடைய புத்தகங்களை படித்தேன். அவருடைய
நியாயமான கோரிக்கைகள்தான், தமிழகத்திற்கும், இந்திய துணை கண்டத்திற்கும்
பயனுள்ளதாக இருக்கும் என்ற காரணத்தால் தி.மு.கழகத்தில் சேர்ந்தேன்.


1972_ல்
தி.மு.கழகத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட பிறகு, தொண்டர்களுடைய, மக்களுடைய
வற்புறுத்தலின்படி அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பை
உருவாக்கினேன். அதில் நான் முதல் தொண்டனாக இருக்கிறேன்."
இவ்வாறு ``பி.பி.சி."க்கு அளித்த பேட்டியில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டார்.

திரைப்படத்துறையிலும்,
அரசியலிலும் நண்பர்களாக இருந்த கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் பிற்காலத்தில்
பிரிய நேரிட்ட போதிலும் தொடக்க காலத்தில், நெருங்கிய நண்பர்களாக
இருந்தார்கள். கோவையில் ரூ.14 வாடகையில் ஒரு அறை எடுத்து
தங்கியிருந்தார்கள். திரைப்படத்துறையில் முன்னேற, ஒருவருக்கொருவர்
உதவிக்கொள்வது வழக்கம்.


சென்னையில்
குடியேறிய பிறகு எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்று, சத்யா அம்மையார் பரிமாற
உணவு சாப்பிட்டிருக்கிறார் கருணாநிதி. அதேபோல் கருணாநிதி வீட்டுக்குச்
சென்று, அவர் தாயார் அஞ்சுகம் அம்மையார் படைத்த உணவை உண்டு மகிழ்ந்தவர்,
எம்.ஜி.ஆர்.


1963 ஜனவரியில் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் மறைந்தபோது எம்.ஜி.ஆர். விடுத்த இரங்கல் செய்தியில் கூறியிருந்ததாவது:-

சகோதரர் மு.க. அவர்களின் அருமை அன்னையார் அவர்களோடு, பழகவும், அவர்களுடைய
ஈடுகாட்ட இயலாத அன்புள்ளத்தை உணரவும் வாய்ப்பைப் பெற்றவன் நான்.


பார்த்தவுடனே,
``தம்பி வா!" என்று அழைப்பதிலேதான் எவ்வளவு பாசம். `சாப்பிடத்தான்
வேண்டும்' என்று வற்புறுத்துவதிலேதான் எவ்வளவு அழுத்தமான தாய்மை உணர்ச்சி.
உட்கார்ந்து பேச ஆரம்பித்தால், வீட்டு விஷயங்களிலேயிருந்து, தொழில்,
அரசியல் வரையிலே அளவளாவும் அன்னையைத் தவிர வேறு யாருக்குமே இராத_
அன்புள்ளம். இவைகளையெல்லாம், என்னாலேயே மறக்க முடியவில்லையே! சகோதரர்
மு.க. எப்படித்தான் மறப்பாரோ?


இன்பத்தைப்
பிரிந்தால், மறுபடி இன்பத்தை அடையலாம். நட்பைப் பிரிந்தால், பிறகு நட்புக்
கிடைக்கலாம். வாழ்க்கைத் துணையைப் பிரிந்தால் கூட வேறொரு வாழ்க்கை துணையை
பெறலாம். மக்கட்செல்வத்தை இழந்தாலும், மறுபடி பெற்று விடலாம். ஆனால்,
அன்னையைm, அன்புத்தாயை, உலகத்தை வளர்க்கும் தாய்மையைப் பிரிந்து விட்டால்,
மறுபடி நமக்கு யார் அன்னை? நினைத்தாலே நெஞ்சம் நடுங்குகிறது."


இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறியிருந்தார்.

எம்.ஜி.ஆரும்,
சிவாஜி கணேசனும் புகழின் உச்சத்தில் இருந்தபோது, ``யார் சிறந்த நடிகர்?
யார் வசூல் சக்ரவர்த்தி?" என்று இருதரப்பு ரசிகர்களும் மோதிக் கொள்வது
வழக்கம்.


ஆனால்,
எம்.ஜி.ஆரும், சிவாஜியும் ஒருவர் மீது ஒருவர் பாசமும், மரியாதையும்
வைத்திருந்தார்கள். எம்.ஜி.ஆரை சிவாஜி ``அண்ணன்" என்றே அழைப்பார்.
சிவாஜியை எம்.ஜி.ஆர். ``தம்பி" என்று குறிப்பிடுவார்.
பொங்கல்
போன்ற முக்கிய பண்டிகைகளின்போது, எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து சிவாஜி
வீட்டுக்கு இனிப்பு போன்ற உணவுப் பண்டங்கள் போகும். அதேபோல்
எம்.ஜி.ஆருக்கு சிவாஜி கணேசன் வீட்டில் இருந்து பொங்கல், பழங்கள் முதலியன
போகும்.


எம்.ஜி.ஆர்.
``டாக்டர்" பட்டம் பெற்றபோது, அவருக்கு திரை உலகத்தினர் பாராட்டு விழா
நடத்தினர். அதில் சிவாஜிகணேசன் கலந்து கொண்டு பேசுகையில், இருவருக்கும்
இடையே இருந்த பாசத்தைக் குறிப்பிட்டார்.
எம்.ஜி.ஆர். தமது ஏற்புரையில் கூறியதாவது:-

``தம்பி
சிவாஜி பேசும்போது நாங்கள் இருவரும் ஒரு தாயின் கையால் உண்டு
வளர்ந்தவர்கள்" என்றார். என் தாய் கையில் அவரும் சாப்பிட்டு இருக்கிறார்.
அவர் தாய் கையில் நானும் சாப்பிட்டு இருக்கிறேன்.


என்
மறைந்த மனைவியின் (சதானந்தவதி) மரணத்தின் போது யார் யாரெல்லாமோ
வந்தார்கள். எனக்கு அழத்தோன்றவில்லை. அப்போது என் வீட்டிற்கு சிவாஜி
வந்தபோதுதான் என்னையும் மீறி அழுகை வந்தது. அஸ்திவாரம் வெடிக்கும் அளவு
என்பார்களே, அந்த அளவு அழுதேன்.
அன்று இறுதி வரை இருந்த சிவாஜி என்றும் இருப்பார்.

எங்களுக்குள்
பிளவு ஏற்படுத்துவதற்காக யார் யாரோ முயன்றார்கள். ``சிவாஜி மன்றத்தை
எம்.ஜி.ஆர். மன்றம் தாக்கியது, எம்.ஜி.ஆர். மன்றம் ஒட்டிய போஸ்டர்களை
சிவாஜி மன்றம் கிழித்தது" என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் ஆடு -மாடு
ஏதாவது போஸ்டரை தின்றுவிட்டுப் போனால்கூட `சிவாஜி மன்றத்தார்
கிழித்தார்கள்', `எம்.ஜி.ஆர். மன்றத்தார் கிழித்தார்கள்' என்று
கூறினார்கள்.


அன்றிருந்த சூழ்நிலையில் அவரும் சிலவற்றை நம்பக்கூடிய நிலையும், நானும் சிலவற்றை நம்பக்கூடிய நிலையும் இருந்தது. தம்பி
சிவாஜி பேசும்போது, ``பாழாய் போன அரசியல் நம்மைப் பிரித்துவிட்டதே" என்று
சொன்னார். அண்ணன்_ தம்பி உறவைப் பிரிக்க முடியாது. எப்போதாவது ஒன்று
சேருவோம். அது எதற்காக என்று எனக்குத் தெரியாது."


இவ்வாறு எம்.ஜி.ஆர். குறிப்பிட்டார்.
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: மலரும் நினைவுகள்.

Post by chellaraj on Mon Feb 15, 2010 5:20 pm

Thank u for this news

chellaraj
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum