உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிறகுகளைத் தேடி,,,!தாலும் வரும் மழை
by ayyasamy ram Today at 1:39 pm

» தோற்றவர்களின் கதை
by kuloththungan Today at 12:53 pm

» புதிய மின்னூல் வேண்டல்.
by prajai Today at 11:41 am

» இந்திய வானம் எஸ்.ரா
by pkselva Today at 8:56 am

» KAVITHAI
by ANUBAMA KARTHIK Yesterday at 11:52 pm

» சென்னையில் ஒரு திருக்கடையூர்
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by சிவனாசான் Yesterday at 8:53 pm

» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
by சிவனாசான் Yesterday at 8:45 pm

» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Yesterday at 7:06 pm

» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்
by mani2871967 Yesterday at 6:43 pm

» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா ???
by மாணிக்கம் நடேசன் Yesterday at 5:13 pm

» தமிழ் மகனே வாடா! தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா! தரணி வெல்ல வா வா!
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு
by T.N.Balasubramanian Yesterday at 1:57 pm

» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...!!
by T.N.Balasubramanian Yesterday at 1:50 pm

» மூச்சுக்கலை
by kuloththungan Yesterday at 1:29 pm

» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.
by T.N.Balasubramanian Yesterday at 1:27 pm

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
by SK Yesterday at 10:57 am

» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am

» வாட்ஸ் அப் -நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:34 am

» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,
by SK Yesterday at 12:11 am

» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
by SK Yesterday at 12:07 am

» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்
by T.N.Balasubramanian Wed Feb 20, 2019 9:52 pm

» குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Feb 20, 2019 9:33 pm

» மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு
by சிவனாசான் Wed Feb 20, 2019 8:39 pm

» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்
by சிவனாசான் Wed Feb 20, 2019 8:27 pm

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Wed Feb 20, 2019 8:18 pm

» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி
by T.N.Balasubramanian Wed Feb 20, 2019 7:37 pm

» டலாஸ் டெக்சாஸ் இல் ஒரு மொய் விருந்து.
by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 6:10 pm

» இது புதிது - தொழில்நுட்பம்.
by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 6:07 pm

» காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை
by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 6:04 pm

» மன முதிர்ச்சி என்றால் என்ன?
by மாணிக்கம் நடேசன் Wed Feb 20, 2019 1:39 pm

» டெக்சாஸில் துயரம்.
by சக்தி18 Wed Feb 20, 2019 1:21 pm

» இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை
by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 9:40 am

» சுஜாதா நாவல்கள்
by pkselva Wed Feb 20, 2019 9:26 am

» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf
by Monumonu Wed Feb 20, 2019 6:13 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Feb 20, 2019 4:17 am

» படப்பிடிப்பில் விபத்துநடிகர் கோபிசந்த் படுகாயம்
by ayyasamy ram Wed Feb 20, 2019 4:02 am

» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது
by ayyasamy ram Wed Feb 20, 2019 3:56 am

» மதுரை அடகு கடையில் 1400 பவுன் நகை கொள்ளை
by ayyasamy ram Wed Feb 20, 2019 3:47 am

» அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்?
by சக்தி18 Tue Feb 19, 2019 10:28 pm

» நீர்ப்பரப்பில் ஒரு மீன் - கவிதை
by ayyasamy ram Tue Feb 19, 2019 8:23 pm

» குழந்தை பெற்ற பின் முதன்முறையாக டாப் 10ல் இடம் பிடித்த செரீனா வில்லியம்ஸ்
by ayyasamy ram Tue Feb 19, 2019 7:26 pm

» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
by ayyasamy ram Tue Feb 19, 2019 7:11 pm

» நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி: புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்தார்
by ayyasamy ram Tue Feb 19, 2019 6:25 pm

» உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள்
by ayyasamy ram Tue Feb 19, 2019 6:18 pm

» இந்திய மிரட்டலால் பதட்டம்- ஐ.நா. சபை தலையிட பாகிஸ்தான் கெஞ்சல்
by ayyasamy ram Tue Feb 19, 2019 6:11 pm

» அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக கூட்டணி
by ayyasamy ram Tue Feb 19, 2019 6:07 pm

» இன்று ஒரு தகவல் - தொடர் பதிவு
by சக்தி18 Tue Feb 19, 2019 2:45 pm

» 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்
by சக்தி18 Tue Feb 19, 2019 2:38 pm

Admins Online

தமிழ் அகராதி - உ

தமிழ் அகராதி - உ

Post by சிவா on Thu Feb 04, 2010 1:30 am

First topic message reminder :

உ - தமிழ் நெடுங்கணக்கில் ஐந்தாம் உயிர் எழுத்து; இரண்டு என்ற எண்ணின் குறியீடு; ஒரு சுட்டெழுத்து (எ.கா - உது, உம் மனிதன்); ஒரு பெயர்ச்சொல் விகுதி (எ.கா - தரவு, இழவு); ஒரு வினையெச்ச விகுதி (எ.கா - செய்து)
உக்கா - புகைகுடிக்க உதவும் கருவி
உக்கிரம் - கோபம்; மிகுந்த ஊக்கம்; கொடுமை
உக்கிராணம் - சாமான் அறை
உகம் - யுகம்; ஊழிக்காலம்; பூமி; நுகம்; பாம்பு; தலைப்பாட்டு; ஒரு ஜோடி

உகிர் - நகம்
உகு - கீழே உதிர்; சிதறி விழு; சிதறி விழச் செய்; தேய்வுறு; அஸ்தமனம் அடை; பறத்தல் செய்; சொரியச் செய் [உகுதல், உகுத்தல்]
உகை - செலுத்து; எழுப்பு; உயர்ந்தெழு; குதித்தெழு; செலுத்தப் பட்டுச் சொல் [உகைத்தல், உகைதல்]
உங்கு - உவ்விடம்
உச்சம் - தலைக்கு நேரான வானமுகடு; சிறப்பு; உயரம்; ஒரு கிரகத்தின் மிகவுயர்ந்த நிலை; மிக உயர்ந்த எல்லை அளவு

உச்சரி - எழுத்துக்களை ஓசையுடன் பிறப்பி; மந்திரங்களைச் செபித்தல் செய்; [உச்சரித்தல், உச்சரிப்பு, உச்சாரணம்]
உச்சசாடனம் - பேயோட்டுதல்; பிசாசை ஏவுதல்
உச்சி - வான முகடு; உச்சந்தலை; தலை; சிகரம்; நடுப்பகல்; மேல் எல்லை; உண்ட உண்கலத்தில் மீதியுள்ளது
உச்சிட்டம் - ஒருவர் எச்சில்; எஞ்சியுள்ள பொருள்; சேடம்
உச்சிமோத்தல் - (குழந்தையின்) தலையில் உச்சியை மோந்து அன்பு காட்டுதல்

உசாத்துணை - நம்பகமான நண்பன்
உசாவு - ஆலோசனை செய்; விசாரணை செய் [உசாவுதல், உசாதல்]
உசிதம் - தகுதி; மேன்மை
உசுப்பு - வெருட்டு; எழுப்பு [உசுப்புதல்]
உஞற்று - முயற்சி செய்; செய்; தூண்டு [உஞற்றுதல்]

உட்கார் - அமர்ந்திரு [உட்கார்தல்]; பகைவர்
உட்கிடை - உள்கருத்து; பேரூரின் பகுதியான சிறு கிராமம்
உட்கு - அச்சம்; நாணம்; வலிமை; மிடுக்கு; மதிப்பு
உட்கொள் - உண்ணுதல் செய்; உள்ளிழு; உள்ளே கருது [உட்கொள்ளல்]
உடந்தை - சேர்க்கை; துணை; ஆதரவு

உடம்படு - ஒத்ததாகச் செய்; இசைதல் செய் [உடம்படுதல்]
உடம்பாடு - சம்மதம்; ஒற்றுமை
உடம்பிடி - வேல்
உடம்பு - சரீரம்; மெய்யெழுத்து
உடல் - சினங்கொள்; சச்சரவிடு; ஆசையால் வருந்து [உடலுதல், உடலல்]


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down


Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா on Thu Feb 04, 2010 1:42 am

உரோகதி - நாய்.
உரோகம் - நோய் : இறங்குதல் : உயர்தல் : எழும்புதல் : ஏறுதல் : பூவரும்பு : தளிர் : ஒளியின்மை.
உரோகி - நோயாளி.
உரோகிதம் - இந்திரதனு : சிவப்பு.
உரோசம் - சினம் : பெருமை : மானம் : முலை : வெட்கம்.உரோசமானம் - முள்ளிலவு.
உரோசனை - கடுகு : கோரோசனை : செந்தாமரை.
உரோஞ்சல் - உரிஞ்சுதல்.
உரோடம் - சினம்.
உரோணி - உரோகிணி : ஒரு நோய்.உரோதனம் - அழுகை கண்ணீர்.
உரோபணம் - இறங்குதல்.
உரோபம் - அம்பு : பாணம் : பகழி : கணை.
உரோமகூபம் - மயிர்ச்சிலிர்ப்பு : உரோமபுளகம்.
உரோமக்கிழங்கு - வசம்பு.உரோமபூமி - தோல்.
உரோமரேகை - மயிரொழுக்கு.
உரோமலம்பம் - வண்டு.
உலகங்காத்தான் - அவுரிச் செடி : அரி : திருமால்.
உலகசயன் - புத்தன்.உலகசீலம் - உலக நோன்பு.
உலகஞானம் - உலகத்தைப் பற்றிய அறிவு : கருவி நூலறிவு.
உலகத்தார் - உலகிலுள்ளார் : உயர்ந்தோர் : உலகப் பற்றுடையார் : மாந்தர் : மனிதர் : மக்கள்.
உலகபாரணன் - திருமால்.
உலகப்புரட்டன் - மிகுபுரளிக்காரன்.உலகமலைவு - நூற்குற்றங்களுள் ஒன்று.
உலகமுண்டோன் - திருமால்.
உலக வழக்கம் - உலக நீதி உலகாசாரம் : உலகமுறை.
உலகவறவி - எல்லாச் சாதியாரும் வந்து தங்குதற்குரிய தருமசாலை.
உலகவிடைகழி - ஊர்வாயில்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா on Thu Feb 04, 2010 1:43 am

உலகவிருத்தம் - உலகவழக்கோடு மாறுபடுதல்.
உலகளந்தோன் - திருமால்.
உலகாசாரம் - உலக வழக்கம்.
உலகாயதம் - உலக இன்பமே மேலான தென்னும் நரீச்சுரவாதம்.
உலகாயிதம் - உலகாயதம்.உலகிகம் - இலௌகீகம்.
உலகியற்கை - உலகியல்.
உலகுரை - உலகவாதம்.
உலகோர் - பெரியோர்.
உலக்கைக்கழுந்து - உலக்கைப் பிடி.உலக்கைக்கொழுந்து - அறிவு குறைந்தவன்.
உலக்கைப்பாட்டு - வள்ளைப் பாட்டு.
உலக்கைத்திங்கள் - ஆவணி மாதம்.
உலக்கைப்பாலை - பாலை மரவகை.
உலக்கையாணி - பூட்டின் நடுவாணி.உலங்கலம் - கற்பாத்திரம்.
உலங்கு - கொசுகு : திரண்ட கல் : உலம் : கீடம்.
உலண்டம், உலண்டு - கோற்புழு : பட்டு.
உலத்தல் - குறைதல் : நீங்குதல் : அழிதல் : வற்றுதல் : கெடுதல் : சாதல் : முடிதல்.
உலந்தவர் - அழிந்தவர்.
உலப்பேறி - திருத்தப்பட்ட நிலம்.
உலமரல் - அலமரல் : சுழற்சி : துன்பம் : வருத்தம் : அச்சம்.
உலம்புதல் - அலப்புதல் : முழங்கல் : இரைதல் : அஞ்சுதல்.
உலம்வரல் - சுழலல்.
உலரல் - காய்தல்.உலர்தல் - அழிதல்.
உலர்ந்தபுல் - திரணம்.
உலர்ப்பெலி - ஓர் எலி.
உலவமரம் - இலவமரம்.
உலவாக்கிழி - எடுக்க எடுக்கக் குறைவுபடாத பொன் முடிப்பு.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா on Thu Feb 04, 2010 1:43 am

உலவாநிற்றல் - பரத்தல்.
உலவுதல் - உலாவல்.
உலவை - தழை : கிளை : மரக் கொம்பு : உடைமரம் : கிலுகிலுப்பை : விலங்கின் கொம்பு : காற்று :
குடி : முல்லை நிலக் கான்யாறு.
உலவையான் - காற்றுக் கடவுள்.
உலறல் - கடுஞ்சினம் : வற்றல்.உலறுதல் - உலருதல் : வற்றுதல் : சிதைதல் : பொலிவழிதல் : சினத்தல் : காய்தல் : சிலம்புதல் : உரைதடுமாறல்.
உலாத்துக்கட்டை - கதவு நின்றாடும் சுழியாணி.
உலாத்துதல் - உலாவுதல் : உலாவச் செய்தல் : பரவச் செய்தல்.
உலாமடல் - நூல் வகை.
உலாம் - ஓர் உவமச் சொல்.உலாய் - இயங்கி : சூழ்ந்து.
உலாவரல் - உலாவுதல்.
உலாவுதல் - சஞ்சரித்தல் : பவனி வருதல் : இயங்குதல் : ஓடிப்பரவுதல் : சூழ்தல் : நிறைதல்.
உலு - தினை முதலியவற்றின் பதர்.
உலுக்கல் - உலுக்குதல்.உலுக்குதல் - குலுக்குதல் : நடுங்குதல்.
உலுக்குமரம் - மிண்டிமரம் : நெம்பு கட்டை.
உலுண்டணம் - உருட்டுதல் : களவு செய்தல் : கொள்ளையிடுதல் : மருட்டல் : கூட்டுண்ணல்.
உலுத்தல் - உதிர்த்தல்.
உலுப்புதல் - உதிர்த்தல்.உலுப்பை - அடைந்தோர்க்களிக்கும் ஊன் பண்டம் : காய் வருக்கம் : கோயில் முதலியவற்றிற்கு அனுப்புங் காணிக்கை : சாமான்பை : சிறு காய் : பெரியவர்களுக்கு அனுப்பும் ஊன் பண்டம்.
உலும்பினிவனம் - கௌதம புத்தர் பிறந்தவிடம்.
உலுவம் - வெந்தயம்.
உலுவா - பெருஞ்சீரகம்.
உலூகம் - கோட்டான் : ஒருவகைப் பரி : குங்கிலியம் : கூகை.உலூகலம் - உரல்.
உலூகன் - இந்திரன் : சகுனி மகன்.
உலூகாரி - காக்கை.
உலூதம் - சிலந்திப் பூச்சி : உலுதைப் பூச்சி.
உலூபி - அருச்சுனனை மணந்த நாக கன்னிகை : ஒருவகை மீன்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா on Thu Feb 04, 2010 1:43 am

உலைதல் - நிலைகுலைதல் : வருந்துதல் : அஞ்சுதல் : அழிதல் : அலைதல் : கலைந்து போதல் : கெடுதல் : சீரழிதல் : பலங்குறைதல் : மனங்கலங்கல் : வருந்தித் திரிதல்.
உலைத்தல் - கெடுத்தல் : கலைத்தல் : வருத்துதல் : முறியடித்தல் : அழித்தல் : மனங்கலங்கச் செய்தல் : அலைத்தல்.
உலைப்பு - அலைப்பு : அழித்தல் : வருந்துதல் : முறியடிக்கை.
உலைமுகம் - கொல்லன் உலை இடம்.
உலைமூக்கு - கொல்லன் உலையில் துருத்தி வைக்கும் துவாரம்.உலோகதருமிணி - போககாமிகட்குச் செய்யப் படுவதான தீட்சை.
உலோகபாலர் - அரசர் : திக்குக்காவலர் : இந்திரன் : அக்கினி : இயமன் : நிருதி : வருணன் : வாயு : குபேரன் : ஈசானன்.
உலோகாதீதம் - உலகத்திற்கு எட்டாதது : மேற்பட்டது : எல்லாங் கடந்தது : கடவுள் மயம்.
உலோகராட்டு - கடவுள்.
உலோகிதம் - இரத்தம் : சிவப்பு : செவ்வாய் : மஞ்சள் : யுத்தம் : சந்தனம் : சூதாட்டம்.
உலோகிதன் - செவ்வாய்.
உலோசனம் - கண்.
உலோகிதம் - சந்தனமரம்.
உலோச்சுதல் - தன் தலைமயிரைத் தானே பறிக்கை.
உலோட்டம் - ஓடு : மண்கட்டி.உலோத்திரம் - வெள்ளிலோத்திரமரம்.
உலோபத்துவம் - உலோபத்தன்மை.
உலோபம் - பேரவா : கடும்பற்றுள்ளம் : தானும் நுகராது பிறர்க்கும் ஈயாக்குணம் : அகப்பட்ட பொருளைக் கைவிடாமை :
அற்பம் : அவா : குறைவு.
உலோபர் - பேரவா உடையவர்.
உலோமம் - ஒழுங்கு : வால் : வால் நுனி : புறமயிர்.உலோலம் - அசைவு : விருப்பம் : ஆசை : அவா.
உலோலன் - மிகுகாமி.
உல் - கழு : தேங்காயுரிக்குங் கருவி.
உல்பகம் - மறைப்பது.
உல்லங்கனம் - மீறுகை : அவமதிப்பு : கடக்கை : கலக்கம் : நிந்தை.உல்லரி - தளிர்.
உல்லாடி - மெல்லிய ஆள்.
உல்லாப்பியம் - கயமை : வஞ்சகத் தன்மை : யானை.
உல்லி - ஒல்லி : மெல்லிய ஆள்.
உல்லிங்கனம் - அவமதிப்பு : கடக்கை : கலக்கம் : சண்டைமிகுதி : நிந்தை : அலட்சியம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா on Thu Feb 04, 2010 1:43 am

உல்லியம் - கிணறு.
உல்லியர் - கூபநூலோர்.
உல்லு - உல்.
உல்லுகம் - கொள்ளி.
உல்லோசம் - மேற்கட்டி : கூடாரம்.உல்லோலம் - கடற்பெருந்திரை.
உவகுருவாணன் - இல்லறத்தையடையும் நிலையிலிருக்கும் பிரமசாரி.
உவகைப்பறை - மங்கலப் பறை.
உவக்காண் - உப்பொழுது : உங்கே : உவ்விடம்.
உவச்சர் - ஓச்சர்.உவட்சி - தவளுகை : அசைப்பு.
உவட்டி - அருவருப்பு.
உவட்டுதல் - அருவருத்தல் : தெவிட்டுதல் : மிகுதல் : நீர்ப்பெருக்கு : குமட்டுகை.
உவட்டுரை - இகழ்ச்சிச் சொல்.
உவட்டுறல் - பெருகுதல் : தெவிட்டல்.உவணர் - கருடர்.
உவணவூர்தி - திருமால்.
உவணி - வாட்படை.
உவணை - உவ்விடம் : தேவலோகம்.
உவதி - பதினாறாட்டைப்பெண்.உவிதை - மலையின் வீழருவி.
உவத்தல் - மகிழ்தல் : அவாவல் : விரும்பல்.
உவமன் - ஊமன் : உவமை.
உவமானிலம் - சுவர்.
உவமேயம் - உபமேயம்.உவமையுருபு - உவமை : அற்று : அனைய : அன்ன : இகல : இன்ன : என்ன : ஏய்ப்ப : ஒப்ப : கடுப்ப : கேள் :
செத்து : தூக்கு : நிகர : நேரபுரை : பொருவ : போல : மான் : ஒன்ற : ஒடுங்க : ஓட : ஆங்க : வென்ற : வியப்ப : எள்ள :
விழைய : நிகர்ப்ப : கள்ள : காய்ப்ப : மதிப்ப : திகைய : மருள : மாற்ற : மறுப்ப : வெல்ல : வீழ : நாட : நடுங்க முதலியன.
உவமையுருவகம் - ஓர் அணி : அஃது உருவகஞ் செய் பொருளைத் திரும்பவும் ஒரு சிறப்பினால் ஒன்றோடு ஒப்புமைப் படுத்துவது.
உவமைவிரி - ஓர் அணி : அஃது உவமைச் சொல் விரிந்து நிற்பது.
உவராகம் - கிரகணம்.
உவரிக்கெண்டை - ஒருவகை மீன்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா on Thu Feb 04, 2010 1:44 am

உவரோதம் - உப்புக்கடல் : இடையூறு.
உவர்க்கம் - கடற்கரை.
உவர்த்தல் - அருவருத்தல் : உப்புக் கரித்தல் : வெறுத்தல்.
உவர்நிலம் - உவர் சேர்ந்த நிலம்.
உவர்மண் - உப்புச் சேர்ந்த மண்.உவலை - ஓட்டை : தழை : சருகு : இழிவு : பொய்.
உவல் - தழை : சருகு.
உவவனம் - உபவனம் : பூங்காவனம் : சோலை : உய்யானம்.
உவவு - உவப்பு : மதிநாள் : உவா : தவம்.
உவவேசம் - இருத்தல்.உவளகம் - அந்தப்புரம் : இடைச்சேரி : சிறைச்சாலை : மதில் : ஒரு பக்கம் : அகழி :
உப்பளம் : பள்ளம் : குளம் : பிரித்தல் : வாயில்.
உவளம் - சோறு : யானைக்கவளம்.
உவளித்தல் - தூய்மை செய்தல்.
உவளு - தவளு.உவளுதல் - துவளுதல் : நடுங்கல் : பரத்தல்.
உவள்தல் - கம்பித்தல் : துவளுதல்.
உவறுதல் - சுரத்தல் : ஊற்றுதல்.
உவற்றுதல் - சுரக்கச் செய்தல்.
உவனாயம் - துவைத்துக் கட்டுமருந்து.உவனி - வாள்.
உவனித்தல் - வில்லை எய்யத் தொடங்கல் : தூய்மை செய்தல்.
உவனிப்பு - ஈரம்.
உவன் - பின்புறத்துள்ளவன் : முன் நிற்பவன்.
உவன்றி - நீர்நிலை.உவாதி - எல்லை : கடுந்துன்பம்.
உவாதை - வேதனை.
உவாத்தி - கற்பிப்போன்.
உவாநாடி - கிரகணபரிசனநாடி : இளநாடி : உபநாடி.
உவாந்தம் - பௌர்ணிமை : அமாவாசை.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா on Thu Feb 04, 2010 1:44 am

உவாந்தி - சக்தி.
உவாய் - ஒரு மரம்.
உவாளி - பூட்டை : அறுகு.
உவிதல் - சாதல் : நீர் வற்றியவிதல் : நெருக்கத்தினாலவிதல் : காற்றில்லாமற் புழுங்கல்.
உவித்தல் - அவித்தல்.உவியல் - சமைத்த கறி.
உவைச்சன் - உவச்சன் : ஓச்சன் : கணக்கன்.
உவையம் - உபயம்.
உவ் - உவை.
உவ்வி - தலை : தலைவி.உவ்விடம் - நடுவிடம்.
உவ்வு - தவம்.
உவ்வை - உப்பை.
உழ - பழக : முயல் : வேலை செய்ய : உழவுத் தொழில் நடத்த : வருந்த : உழவென்னேவல்.
உழக்கல் - உழக்குதல்.உழக்கால் - உழவுகோல்.
உழக்குதல் - கலக்குதல் : உழுதல் : வெல்லல் : விளையாடுதல் : மிதித்தல்.
உழக்குருட்டுதல் - சூதாடுதல்.
உழக்கோல் - தாற்றுக்கோல் : உழவு கோல்.
உழச்சியர் - உழத்தியர்.
உழத்தல் - வெல்லுதல் : வருந்துதல் : துவைத்தல் : பழகுதல் : செய்தல் : முயலுதல் : புரளல் : பட்டனுபவித்தல்.
உழத்தொறும் - நுகருந்தோறும்.
உழத்திப்பாட்டு - நூல் வகைகளில் ஒன்று.
உழத்தியர் - மருத நிலப் பெண்கள்.உழப்பல் - குழப்பிப் பேசல் : பழகல் : நட்டல்.
உழப்பாளி - முயற்சியுள்ளவன் : கள்ள நியாயம் பேசுவோன்.
உழப்புதல் - மழுப்புதல் : போலிவாதஞ் செய்தல் : காலங் கடத்துதல் : பழகுதல் : குழப்பிப் பேசுதல்.
உழமண் - அழுக்கெடுக்கும் மண்.
உழம்பு - ஒலி : குழம்பு.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா on Thu Feb 04, 2010 1:44 am

உழம்புதல் - பல ஒலிகள் கலந்தொலித்தல் : குழம்புதல்.
உழலைமரம் - மாட்டின் கழுத்திற் கட்டுங் கட்டை.
உழலைவேலி - வழிநடைப்பட்டுப் போகிறவர்களுக்கு இடங் கொடுத்துப் பின் உழன்று கொண்டு
தன் நிலையில் நிற்கும் உழலைமரம் பொருந்திய வழியினையுடைய வேலி.
உழவடை - உழவு நிலத்தின் குடியுரிமை.
உழவர் - மருதநில மக்கள்.உழவுகட்டல் - உழுதல்.
உழவுகுண்டை - உழவுமாடு : உழவெருது.
உழவுமழை - உழுதற்கு வேண்டிய மழை.
உழறுதல் - கலக்குதல் : கலங்குதல் : சுழலுதல் : உலாவல் : அளைதல் : மோதும்படி தள்ளுதல்.
உழற்சி - அலைகை : சுழற்சி : வருத்தம் : ஆடுகை : திரிதல் : சுற்றித் திரிகை.உழற்றி - மிகுதாகம் : சுழற்சி.
உழற்றுதல் - உழலச் செய்தல் : அலையச் செய்தல் : சுழற்றுதல் : உடம்பு நோயாற் புரளுதல்.
உழன்றறுத்தல் - கடின வேலை செய்தல் : பழகித் தேர்தல்.
உழன்றி - மாட்டின் கழுத்திலிருந்து உழலும் கட்டை.
உழாநாஞ்சில் - நாஞ்சில் மலை.உழால் - உழுதல் : கிண்டுதல்.
உழிஞை - எண்வகை மாலைகளில் ஒன்று : கொற்றான் : சிறுபூனை.
உழிதரல் - கழலல் : திரிதல்.
உழிதல் - அலைதல்.
உழுதல் - நிலத்தைக் கிளைத்தல் : கிண்டுதல்.உழுதுண்போர் - வேளாளர்.
உழுதூண் - பயிர்த்தொழில் செய்து வாழ்தல்.
உழுத்தல் - பதனழிதல்.
உழுத்து - ஓர் அணி.
உழுநர் - உழவர்.உழுபடை - கலப்பை.
உழுபடைச்சால் - சீதை.
உழுவம் - எறும்பு : பீலிகை.
உழுவல் - இடைவிடா அன்பு : முறை : குணம் : முறைமை : உழுவேன்.
உழைக்கண்ணாளன் - தோழன் : உடனிருப்போன்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா on Thu Feb 04, 2010 1:44 am

உழைக்கலம் - பொன் : வெள்ளியாலான ஏனங்கள்.
உழைச்செல்வான் - நோய் தீர்த்தற் பொருட்டுச் செல்லும் மருத்துவனோடு உதவிக்குச் செல்பவன்.
உழைஞர் - ஏவலாளர்.
உழைதல் - துன்பமுறல் : இரைதல்.
உழைத்தல் - பாடுபடுதல் : வருந்துதல்.உழைநின்றார் - ஏவல் செய்வார்.
உழைப்பறித்தல் - சேற்றிலுழலுதல் : வருந்தி முயலுதல்.
உழைப்பு - முயற்சி : ஈட்டம்.
உழைமை - வரிக்கூத்தில் ஒன்று.
உழையிருந்தான் - அமைச்சன் : உடனிருப்போன் : நோயாளிக்கு உதவி புரிபவன்.
உழையோர் - உழையர்.
உழைவு - யாழின் உள்ளோசை.
உளகர் - உள்ளானவர்.
உளகு - யாழின் தண்டு : கிராம ஒழுங்கு.
உளதாதல் - தோன்றியிருத்தல்.உளது - மெய்ம்மை.
உளபடி - உள்ளபடி.
உளப்படுதல் - ஒப்புக் கொள்ளுதல் : இணங்குதல் : உட்படுத்துதல்.
உளப்படுத்தல் - உட்படுத்தல்.
உளப்பு - நடுக்கம்.உளமிகுதி - மனச்செருக்கு.
உளமை - உண்மை.
உளம்புதல் - அலைத்தல் : ஓலமிகுதல்.
உளரு - உளர்.
உளர்செரு - எடுப்புஞ் சாய்ப்புமான போர்.உளர்ச்சி - உளர்வு : உளர்தல் : சுழற்சி : உளர்ப்பு.
உளர்தல் - கோதுதல் : கிண்டுதல் : தலைமயிராற்றுதல் : அசைத்தல் : சிதறுதல் : பரப்புதல் : பூசல் : தடவுதல் : யாழ் முதலியன வாசித்தல் : தாமதித்தல் : சுழலுதல் : உறுதியற்றாடுதல்.
உளர்த்தல் - உணரச் செய்தல்.
உளர்ப்பு - அலைக்கை : உதிர்ப்பு : குரவை.
உளர்வு - அசைகை : யாழ் வாசிக்கை : சுழலுகை : ஈடாட்டம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா on Thu Feb 04, 2010 1:45 am

உளவன் - துப்பாள் : உளவுகாரன்.
உளவாடம் - முன் பணம் : அச்சாரம் : உறுதிப் பணம்.
உளறல், உளறுதல் - குழறுபடையான மொழி : தடுமாறிப் பேசுதல் : ஆரவாரித்தல்.
உளறுபடை - பேச்சிற் குழறுகை.
உளிஞை - கோபுரவாயில் படை.உளித்தலைக்கோல் - இருப்புப் பாரை : உளிப்பாரை.
உளிநர் - எண்ணுபவர்.
உளு - அரிக்கும் புழு : உளுத்தது.
உளுக்காத்தல் - இருத்தல்.
உளுக்குதல் - நெளிதல் : மெருகிடுதல் : சுளுக்குதல்.உளுத்தல் - மரம் முதலியன புழுவால் அரிக்கப்பட்டுக் கெடுதல்.
உளுவை - மீன்வகை.
உளைக்கால் - மயிர்க்கால்.
உளைச்சல் - உளைவு.
உளைதல் - மிகவருந்துதல் : குடைச்சல் : நோயடைதல் : விடுபடுதல் : சிதறிப் போதல் :
அழிதல் : தோற்றம் : ஊளையிடுதல்.உளைத்தவர் - வெறுத்தவர்.
உளைத்தல் - வருத்துதல் : வெறுத்தல்.
உளைந்து பேசுதல் - மனம் நொந்து பேசுதல்.
உளைப்பறித்தல் - சேற்றிற் புரளல் : போராட்டப்படல்.
உளைப்பு - அழைப்பு : ஒலிப்பு : வருத்தம் : தேகக் குடைச்சல்.உளைப்பு - விரிந்தபூ.
உளைமந்தை - கடுநோய்.
உளைமயிர் - பிடரிமயிர்.
உளைமான் - சிங்கம் : குதிரை.
உளைய - வெறுப்ப.உளைவு - உடல் வருத்தம் : மனவருத்தம் : வலி : குடைவு : வலிப்பு : வயிற்றுளைவு.
உள்கல் - உள்குதல்.
உள்குதல் - உள்கல் : நினைத்தல் : உள்ளழிதல்.
உள்படுதல் - மனமொப்பி நடத்தல் : அறிதல்.
உள்வட்டம் - நாணயமாற்றிற் பெறும் ஊதியம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா on Thu Feb 04, 2010 1:45 am

உள் வணக்கம் - மன வணக்கம் : அந்தரங்க வழிபாடு.
உள்வரி - வேற்றுவடிவங் கொள்ளல்.
உள்வலிப்பு - ஒரு நோய்.
உள்வழக்கு - உள்ளதை உண்டென்பது.
உள்வழி கடந்தோன் - கடவுள்.உள்வாசல் - முற்றம்.
உள்வாரம் - அந்தரங்கச் சார்பு : மேல்வாரம்.
உள்விழுதல் - உள்ளே போதல் : நட்புக் கூடுதல் : குறைதல் : காரியத்தின் பொருட்டு நட்புக் கொள்ளுதல் :
உள்ளாதல் : உள்வீழ்தல் : அடங்குதல்.
உள்வீழ்தல் - சுருங்குதல் : குறைதல்.
உள்ளகம் - நெஞ்சு.உள்ளக்காட்சி - மானதக்காட்சி.
உள்ளடி - மறைவு : உள்ளங்கால் கட்டி : நெருங்கிய சுற்றம்.
உள்ளடிக்குள் - வீட்டில் உள்ளவர்களுக்குள்ளே.
உள்ளடியார் - உறவர்.
உள்ளது - உடையது : உண்மை : ஆன்மா.உள்ளத்துறைவோன் - கடவுள்.
உள்ள நிகழ்ச்சி - மனக்கருத்து.
உள்ளந்தண்டு - கழுத்தெலும்பு.
உள்ளந்தாள் - உள்ளங்கால்.
உள்ளப்படிறு - மனவஞ்சகம்.உள்ளப் புணர்ச்சி - தலைவனும் தலைவியும் உள்ளத்தாற் கூடும் கூட்டம்.
உள்ளமிகுதி - ஊக்கம் : உள்ளக்கிளர்ச்சி.
உள்ளரங்கம் - அந்தரங்கம்.
உள்ளரவம் - மனக்கலக்கம்.
உள்ளறிவு - விஞ்ஞானம்.உள்ளவன் - பொருளுடையவன்.
உள்ளளவு - உண்டான மட்டும்.
உள்ளாங்கு - உள்ளபடி.
உள்ளார் - உடையவர் : வாழ்ந்திருப்போர் : நினையார் : பகைவர்.
உள்ளாளம் - இசைவகை : கூத்துவேறுபாடு.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா on Thu Feb 04, 2010 1:45 am

உள்ளாள் - உள்ளாகப் பயிலும் ஆள்.
உள்ளாற்றுக்கவலை - ஆற்றிடைக் குறை.
உள்ளான் - ஒரு குருவி : பொருளுள்ளவன்.
உள்ளிடுதல் - உள்ளடக்குதல் : உட்படுதல் : தொகைக்குட்படுதல்.
உள்ளிடை - உள்ளிடம் : மறை : அந்தரங்கம் : உட்காரியம்.உள்ளிட்டார் - கூட்டாளிகள் : முதலானவர்கள்.
உள்ளிந்திரியம் - மனம்.
உள்ளிப்பல் - பூண்டின் உரி.
உள்ளிருப்பு - வைப்புநிதி.
உள்ளுடை - கோவணம்.உள்ளுடைதல் - மனங்கலங்குதல் : மனம் முறிதல்.
உள்ளுபு - நினைத்து : உள்ளி.
உள்ளுயிர் - கடவுள்.
உள்ளுதல் - நினைதல் : ஆராய்தல் : நன்குமதித்தல் : இடைவிடாது நினைத்தல்.
உள்ளுயிர்க்குன்று - நத்தை.உள்ளுருகல் - மனங்கரைதல்.
உள்ளுவது - உளதாயிருப்பது : கருதுவது.
உள்ளுறுத்தல் - உட்செலுத்தல் : உட்கருதுதல் : உள்ளிடுதல்.
உள்ளுறையுவமம் - வெளிப்படையாகக் கூறாது கருப்பொருண்மேல் ஏற்றிக் கூறும் உவமம் தோன்றாமல் உவமித்தல்.
உள்ளூர் - ஊர்நடு : சொந்தவூர்.
உள்ளூன்றல் - கடுஞ்சொற் சொல்லல்.
உள்ளெரிச்சல் - பொறாமை.
உள்ளொற்றுதல் - உண்ணிகழ்ச்சியை உற்றறிதல்.
உள்ளோசை - அகவொலி : உள்ளொலி.
உள்ளோர் - உள்ளவர்.உற - மிக : கிட்ட : உறவென்னேவல்.
உறக்கு - உறக்கம் : உறக்கென்னேவல்.
உறக்குதல் - தூங்கச் செய்தல் : இமையை மூடச் செய்தல் : நாசப்படுத்துதல் : கிள்ளியெடுத்தல்.
உறங்காப்புளி - இரவில் இலை குவியாத புளியமரம்.
உறங்கி - புளியமரம் : முழுச் சோம்பேறி : தூங்கி : மடிந்து.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா on Thu Feb 04, 2010 1:45 am

உறங்குதல் - தூங்குதல் : ஒடுங்குதல் : சோர்தல் : தங்குதல்.
உறட்டவன் - வறண்டவன்.
உறட்டுதல் - வறட்டுதல்.
உறட்டை - தீநாற்றம்.
உறண்டு - முரட்டுக் குணம்.உறண்டை - உறண்டு.
உறத்தல் - கிள்ளியெடுத்தல் : பிளத்தல் : அழுத்துதல் : உறிஞ்சுதல் : சிறிதாதல் : செறிதல்.
உறந்தை - உறையூர்.
உறப்பு - செறிவு.
உறமுறை - உறவின் முறை.உறவன் - உறவுடையவன்.
உறவாடுதல் - உறவுகொண்டாடுதல் : நட்புச் செய்தல்.
உறவாளி - உறவு கொண்டவன்.
உறவி - உயிர் : எறும்பு : உறவு : கிணறு : நீரூற்று : உலைக்களம் : பிரவிருத்தி :
பொருத்தம் : சுற்றம் : நட்பு : உறுகை : விருப்பம் : ஊறுபுனல் : ஒரு புழு : மலை முருங்கை.
உறவின் முறையார் - உறவர்.உறவோர் - சுற்றத்தார் : நண்பர் : அடைந்தோர் : இனத்தார் : தக்கார் : நட்டோர் : தாயம்.
உறழ - ஓர் உவம உருபு [ ஒப்ப] : காலம் : பெருக்கல் : பொது : இடையீடு : உறழவென்னேவல்.
உறழல் - ஒத்தல் : எண்கூட்டிப் பெருக்கல்.
உறழ்கலி - கலிப்பா வகை.
உறழ்குறித்தல் - வாது செய்யக் கருதல்.உறழ்ச்சி - மாறுபாடு : திரிகை : உறழ்வு : விகற்பம்.
உறழ்தல் - பெருக்குதல் : ஒத்தல் : எதிராதல் : மிகுதல் : செறிதல் : விகற்பித்தல் : வீணை நரம்பு தெறித்தல்.
உறழ்பொரு - உவமையினும் பொருளை மிகுத்துக் கூறும் ஒப்பு.
உறழ்பொருள் - ஒப்பு மாறுபடக் கூறுவது.
உறழ்ப்பு - காந்தார பஞ்சமம்.உறன்முறை - உறவுமுறை.
உறாதவன் - நொதுமலன்.
உறாமுதல் - கிடைக்காத காரணம்.
உறாமை - நிந்தனைச் செயல்.
உறாவரை - முற்றூட்டு : பிறர் உள்ளே வராத எல்லையை உடைய நிலம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா on Thu Feb 04, 2010 1:46 am

உறாவுதல் - சோர்தல்.
உறான் - உறவினன் அல்லான் : பகைவன்.
உறிக்கா - இரு பக்கமும் உறிதொங்கும் காவடி.
உறிஞ்சுதல் - உள்ளிழுத்தல்.
உறிதல் - உறிஞ்சுதல்.உறியடி - கண்ணன் பிள்ளைப் பருவத்தில் உறிவெண்ணெய் எடுத்ததைக் கொண்டாடுந் திருநாள்.
உறீஇ - அழுத்தி : உறுவித்து.
உறுகணாளன் - வறிஞன் : தீவினையாளன்.
உறுகை - உறுதல்.
உறுகோள் - பற்றுக்கோடு : நிகழ்ச்சி.

உறுக்கல் - உறுக்குதல் : அதட்டல் : கடத்தல் : சினத்தல் : அச்சுறுத்தல்.
உறுக்குதல் - அதட்டுதல் : சினத்தல் : தண்டித்தல் : தாண்டுதல்.
உறுசுவை - சாராலங்காரம்.
உறுசூது - பெருவஞ்சகம்.
உறுதல் - இருத்தல் : தங்குதல் : நேர்தல் : பொறுத்தல் : வருந்துதல் : பயன்படல் : நிகழ்தல் : பொருந்துதல் : மிகுதல் : சேர்தல் : தொடுதல் : ஒத்தல் : நினைத்தல்.உறுதரல் - தீண்டல்.
உறுதிக்கட்டுரை - கழறல் : இடித்தல் : நெருங்கல்.
உறுதிச் சுற்றம் - உற்றதுணைவர் : நட்பாளர் : மறையவர் : மருத்துவர் : நிமித்திகப் புலவர்.
உறுதிப்பாடு - திடப்படுத்தல்.
உறுதிப் பொருள் - கடவுள் : அறிவு : உண்மைப்பொருள்.உறுதுணை - உற்றதுணை.
உறுத்துதல் - உண்டாக்குதல் : அமைத்தல் : அடைவித்தல் : ஒற்றுதல் : பதித்தல் : அழுத்துதல் :
வருத்துதல் : மிகுத்தல் : விரித்தல் : செலுத்துதல் : உண்பித்தல் : சீறுதல் : நாட்டுதல்.
உறுத்தை - அணில்.
உறுநர் - சேர்ந்தவர்.
உறுந்தறுவாய் - தற்சமயம்.உறுபடை - பெரும்படை.
உறுபு - பாலையாழ்த்திறம் : மிகுதி.
உறுபொருள் - உடையவன் இன்மையால் தானே வந்தடையும் பொருள்.
உறுப்படக்கி - ஆமை.
உறுப்பணங்கெட்டவன் - அங்க ஈனன் : மூடன்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தமிழ் அகராதி - உ

Post by சிவா on Thu Feb 04, 2010 1:46 am

உறுப்பறை - அங்கவீனன் : உறுப்புக் குறைத்தல்.
உறுப்பா - ஒரு மரம்.
உறுப்பில்பிண்டம் - உறுப்பற்ற தசைத்திரள்.
உறுப்பினகவல் - ஒரு பொருண் மேல் பத்திசைப்பது.
உறுப்புத்தோல் - பூணூலிற் கட்டிய மான்தோல்.உறுப்பு நலன் அழிதல் - பிரிவால் துன்பப்படுவோருடைய உறுப்புகளின் அழகு கெடுதல்.
உறுப்புள்ளவன் - திறமுடையவன்.
உறுமல் - ஒரு பறை : தோற் கருவி.
உறுமாலை, உறுமால் - மேல் வேட்டி : உருமால்.
உறுமு - முறு முறு : உருமல்.உறுமுதல் - உறுமென்று ஒலித்தல் : குமுறுதல் : எழும்புதல்.
உறும் - உறுதியுடைத்து.
உறும்பு - உலர்ந்த கரம்பை மண்ணின் கூரிய சிறுகட்டி.
உறுவது - வரற்பாலது : இலாபம் : ஒப்பது.
உறுவரர் - தேவர்.உறுவர் - அடைந்தோர் : அருகக்கடவுள் : எதிர்ந்தவர் : முனிவர்.
உறுவலி - மிக்க வலியுடையோன்.
உறுவல் - துன்பம் : உறுவேன்.
உறுவன் - அருகன் : உறுவேன் : முனிவன்.
உறுவித்தல் - பொருத்துதல்.உறுவை - ஔவை உடன் பிறந்தாள் : அடைவாய்.
உறூஉ - உறுத்தல்.
உறைகாலம் - மழைக்காலம் : வாணாள்.
உறைகுத்துதல் - பாலுக்குப் பிரை குத்துதல்.
உறைகோடல் - பெய்ய வேண்டுங் காலத்துப் பெய்யாமை.உறைகோடுதல் - பருவ மழை கெடுதல்.
உறைக்கப்பார்த்தல் - உற்றுப் பார்த்தல்.
உறைக்கிணறு - சுடுமண் உறையிட்ட கிணறு.
உறைச்சாலை - மருத்தில் : மருத்தகம்.
உறைதல் - தோய்தல் : தங்குதல் : வசித்தல் : இறுகுதல் : ஒழுகுதல் : செறிதல் : உறுதியாதல்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Re: தமிழ் அகராதி - உ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை