புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10 
53 Posts - 50%
ayyasamy ram
தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10 
3 Posts - 3%
prajai
தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10 
3 Posts - 3%
manikavi
தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10 
2 Posts - 2%
Rutu
தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10 
216 Posts - 42%
heezulia
தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10 
194 Posts - 38%
Dr.S.Soundarapandian
தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10 
18 Posts - 3%
sugumaran
தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10 
6 Posts - 1%
manikavi
தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10 
4 Posts - 1%
prajai
தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 6 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அகராதி - இ


   
   

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:08 am

First topic message reminder :

இ - தமிழ் நெடுங்கணக்கில் மூன்றாம் உயிரெழுத்து; ஒரு சுட்டெழுத்து (எ.கா - இவன், இவ்வீடு); ஏவல்; வியங்கோள் ஒருமை வினைமுற்று விகுதி (எ.கா - செல்லுதி, வருதி); வினையெச்ச விகுதி (எ.கா - நாடிச் சென்றான்); பெண்பால் பெயர் விகுதி (எ.கா - மனைவி); தொழிற்பெயர் விகுதி (எ.கா - வெகுளி); பறவைகளுள் ஆந்தையைக் குறிப்பது; அண்மைச்சுட்டு.
இஃது - இது; அஃறிணை ஒருமைச்சுட்டு:அண்மைச்சுட்டு
இக்கட்டு - துன்பம்; நெருக்கடி; நிலை; இடுக்கண்; தடை; இடையூறு; வெல்லக்கட்டி
இக்கு - கரும்பு; சாராயபானம்; இடை: கரும்பு: .இடுக்கி: கள்: தேன்: சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு.
இக - தாண்டிச் செல்; கடந்து செல்; பிரிந்து செல்; நீங்கு; போ [இகத்தல்]

இகபரம் - இம்மையும் மறுமையும்
இகம் - இம்மை; இவ்வுலகம்
இகல் - பகை; விரோதம்; போர்; வலிமை; சிக்கல்; புலவி: அளவு
இகழ் - அவமதித்தல் செய்; மற; கவனக் குறைவகு [இகழ்தல், இகழ்ச்சி]; நிந்தை செய்
இகழ்வு - நிந்தை

இகுளை - தோழி; சுற்றம்; நட்பு; உறவு
இங்கண் - இவ்விடம்
இங்கிதம் - இனிய மன உணர்ச்சி; கருத்து; நோக்கம்; இனிய நடத்தை; இனிமை: சமயோசித நடை: குறிப்பு.
இங்கு - இவ்விடம்; இவ்விடத்தில்
இங்குலிகம் - (பாதரச -கந்தகக் கூட்டுப் பொருளான) சாதிலிங்கம்

இங்கே - இங்கு; இவ்விடத்தில்
இங்ஙன், இங்ஙனம் - இங்கு; இவ்வாறு
இச்சகம் - முகத்துதி; முகமன்: நேரில் புகழ்ந்துரைப்பது: பெறக் கருதிய தொகை.
இச்சாசத்தி (இச்சாசக்தி) - (சிவனின் ஐந்து சக்திகளில் ஒன்றான) நினைப்பு மாத்திரையால் பிறக்கும் சக்தி; விருப்பாற்றல்
இச்சை - விருப்பம்; ஆசை; தொண்டு; வினா: அறியாமை

இசி - ஒடித்தல்; உரித்தல்; சிரிப்பு; உரிக்கை: ஒடிக்கை
இசிப்பு - இழுத்தல்; நரம்பு; வலிப்பு; சிரிப்பு; இழுப்பு.
இசின் - செய்யுளில் வரும் ஓர் அசை நிலை; ஓர் இறந்தகால இடைநிலை; ஓர் அசைச் சொல்.
இசும்பு - ஏற்ற இறக்கங்கள் மிகுந்த கரடு முரடான வழி; செங்குத்துச் சரிவு
இசை - ஓசை; ஒலி; பாட்டு; புகழ்; சொல்; பொருத்தம்; இசைவு; இலாபம்; ஒலி செய்; பாட்டு பாடு; இசைக் கருவியை வாசி; சொல்லு; பேசு; பொருந்து; கிடைக்கப்பெறு; சக்திக்கு உட்பட்டிரு; உண்டுபண்ணு; போன்றிரு; தாராளமாக வழங்கு [இசைதல், இசைத்தல்]; பொன்: ஊதியம்: நரம்பில் பிறக்கும் ஓசை:இனிமை: இணக்கம்: பண்கூடி நிற்பது.

இசைகேடு - ஸ்வரத்தில் பிழை; அபகீர்த்தி; சீர்கேடான நிலை; இகழ்வு: பழியுண்டாதல்: இசை பாடுவதில் தவறு உண்டாதல்.
இசைத் தமிழ் - (முத்தமிழுள் ஒன்றான) பாடுவதற்கு ஏற்ற தமிழ்ப்பாட்டு
இசைவாணர் - பாடகர்; இசை வல்லோர்
இசைவு - பொருத்தம்; தகுதி; உடன்பாடு; பெருந்துகை; ஏற்றது
இஞ்சி - இஞ்சி என்ற மருந்துப் பூடு; கோட்டையின் மதில்; இஞ்சிக்கிழங்கு.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:27 am

இரமடம் _ பெருங்காயம்.
இரமணம் _ இன்புறச்செய்கை : காம சேட்டை : சுரத விளையாட்டு : கழுதை.
இரமணன் _ கணவன் : மன்மதன் : தலைவன்.
இரமணியம் _ சரச விளையாட்டு : இன்பம் செய்வது.
இரமணீயம் _ அழகுள்ளது.



இரமதி _ காகம் : மன்மதன் : காமம் உடையவன் : காலம் : துறக்கம்.
இரமா _ திருமகள் : இன்பம் தருபவள் .
இரமாப்பிரியம் _ தாமரை.
இரமாபதி _ திருமால்.
இரமித்தல் _ மகிழ்தல் : புணர்தல்.




இரமியம் _ அழகு : மனநிறைவு : இரமிய வருடம் : நவ வருடத்துள் ஒன்று.
இரமை _ திருமகள் :செல்வம் : மனைவி.
இரம்பம் _ மரம் அறுக்கும் வாள் : கத்தூரி விலங்கு.
இரம்பிகம், இரம்பிலம் _ மிளகு.
இரம்பை _ இரம்பம் : கத்தூரி விலங்கு : தேவருலகப் பெண்டிருள் ஒருத்தி.



இரலை _ கலைமகள் : புல்வாய் : அசுவினி நாள் : துத்தரி என்னும் ஊது கொம்பு.
இரவச்சம் _ மானம் தீர வரும் இரத்தலுக்கு அஞ்சுவது.
இரவணம் _ ஒட்டகம் : குயில் : வண்டு : கழுதை : வெப்பம் : பரிகாசம் செய்தல் : வெண்கலம்.
இரவதம் _ குயில்.
இரவம் _ இருள் மரம் : ஒலி.



இரவரசு _ சந்திரன்.
இரவலன் _ யாசகன் : பரிசில் விரும்புவோன்.
இரவல் _ யாசகம் : திருப்பித் தருவதாகக் கொண்ட பொருள்: சொந்தமில்லாதது.
இரவறிவான் _ சேவற்கோழி.
இரவற் குடி _ குடியிருக்கும் குடும்பம்.



இரவற் சோறு _ பிறரைச் சார்ந்து பிழைக்கும் பிழைப்பு.
இரவன் _ சந்திரன்.
இரவி _ சூரியன் : மூக்கின் வலது பக்கத்துளை : மலை : எருக்கு :வாணிகத் தொழில்.
இரவி கன்னம் _ பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு.
இரவி காந்தம் _ சூரிய காந்தக் கல்: தாமரை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:27 am

இரவிகுலம் _ சூரிய குலம் : சூரிய மரபு.
இரவிக்கை _ மாதர் உடை வகை.
இரவி நாள் _ இரேவதி நாள்.
இரவி மது _ வெள்ளி.
இரவி மைந்தர் _ அசுவினி தேவர்.



இரவி வாரம் _ ஞாயிற்றுக்கிழமை.
இரவு _ இராத்திரி :இருள் மரம் : இரத்தல் : இரக்கம் : பன்றி வாகை: மஞ்சள்.
இரவுக்குறி _ இரவில் தலைவனும் ,தலைவியும் சேரும்படி தோழியால் குறிக்கப்படும் இடம்.
இரவுபகல் _ இரவுற் பொழுதும் பகற் பொழுதும்.
இரவெரி _ இரவில் ஒளி மயமாக விளங்கும் மரவகை: சோதி விருட்சம்.


இரவேசு _ தளிர் வெற்றிலை.
இரவை _ நுட்பமான பொருள் : கோதுமைக் குறுநொய் : வயிரம் : துப்பாக்கியில் இடும் ஈயக்குண்டு.
இரவோன் _ சந்திரன் : இரவலன் .
இரளி _ கொன்றை.
இரற்றுதல் _ அரற்றுதல் : ஒலித்தல் : சத்தமிடுதல் .



இரா _ இரவுப்பொழுது : இராத்திரி .
இராகங் கலத்தல் _ ஒரு பண் மற்றொன்றோடு சேர்தல்.
இராகதத்துவம் _ சுத்தா சுத்த தத்துவங்களுள் ஒன்று.
இராகப்பறவை _ கின்னரப் பறவை.
இராகமாலிகை _ ஒரு பாடலில் பல பண்களும் தொடர்ந்து வரப்பாடுவது.



இராகமெடுத்தல் _ ஆலாபனம் செய்தல்.
இராகம் _ பண் : இராகத்தத்துவம் : நிறம் : கீதம் : சிவப்பு : ஆசை.
இராகவம் _ திமிங்கிலத்தை விழுங்க வல்ல பெரிய மீன்.
இராகவர்த்தனி _ முப்பத்திரண்டாவது மேள கர்த்தா.
இராகவன் _ இரகு குலத்தில் தோன்றிய இராமன்.


இராகவி _ ஆனை நெருஞ்சி.
இராக விண்ணாடகம் _ சரக் கொன்றை.
இராக விராகம் _ வேண்டுதல் வேண்டாமை: விருப்பு வெறுப்பு.
இராகவேகம் _ ஆசை மிகுதல்.
இராகாதனம் _ யோகாசன வகை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:29 am

இராகி _ கேழ் வரகு :பற்றாசு.
இராகினி _ வெற்றிலை.
இராகு _ கரும் பாம்பு : கோமேதகம் : ஒனடபது கோள்களுள் ஒன்று.
இராகு காலம் _ இராகுக் கோளுக்குரிய வேளை.
இராகு மண்டலம் _ பூமியின் சாயை.


இராக்கடைப் பெண்டிதர் _ பொது மகளிர்.
இராக்கதம் _ எண் வகை மணங்களுள் ஒன்று.
இராக்கதன் _ அரக்கன்.
இராக்கதி _ அரக்கி.
இராக்கதிர் _ சந்திரன்.


இராக்கினி _ அரசன் மனைவி: அரசி.
இராக் குருடு _ மாலைக்கண்.
இராச கனி _ எலுமிச்சம் பழம்.
இராச கன்னி _இளவரசி : அரிசிளம் பெண்.
இராச காரியம் _ அரசியல் :அரசர்க்குச் செய்யும் ஊழியம் : மேலான செயல்.


இராச கீரி _ வெண் கீரி.
இராச குஞ்சரம் _ அரசுவா : அரசர் தலைவன்.
இராச குமாரன் _ இளவரசன் : அரசன் புதல்வன்.
இராச குலம் _ அரச குடும்பம்.
இராச கேசரி _ சோழர் காலத்து அளவு கருவி: சோழ மன்னருள் சிலரின் பட்டப்பெயர்.


இராச கோலம் _ அரசன் திரு வோலக்க உடை.
இராச சக்கரம் _ அரசாணை.
இராச சபை _ அரசவை.
இராச சிங்கம் _ அரசரேறு.
இராச சின்னம் _ அரசர்க்குரிய முடி , குடை ,முரசு , கொடி முதலிய உறுப்புகள் : அரசர் சின்னம்.


இராச சூயம் _ வெற்றி வேந்தனால் செய்யப்படும் வேள்வி: தாமரை.
இராச சேகரன் _ அரசர் தலைவன்.
இராச தந்தம் _ முன்வாய்ப்பல்.
இராச தந்திரம் _ அரசியல் நூல் : அரசியல்.
இராசதம் _ முக்குணங்களுள் ஒன்று: இரசோகுணம் : அரச பதவி.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:29 am

இராசதாலம் _ கமுக மரம்.
இராசதானி _ மாநிலம் : தலை நகரம்.
இராசத்துரோகம் _ அரசர்க்குச் எதிராக செய்யும் செயல்.
இராசத்துவாரம் _ அரண்மனை வாயில்.
இராச நாகம் _ நாகப்பாம்பு வகை.



இராசநீதி _ அரசன் அறநெறி.
இராசப் பிரிதி நிதி _ அரசனுக்குப் பதிலாள்.
இராச பக்தி _ இராசனிடம் வைக்கும் அன்பு.
இராச பட்டம் _ ஒரு வகைத் தலைப்பாகை : முடி சூட்டு.
இராச பத்திரம் _ அரசனுடைய ஆணை.



இராச பத்தினி _ அரசி : அரசன் மனைவி.
இராச பாட்டை _ பெரு வழிப்பாதை.
இராச பிளவை _ முதுகில் உண்டாகும் பெரும் புண்.
இராச புத்தி _ கூர்ந்த அறிவு.
இராச புத்திரன் _ அரசன் மகன் : கோமகன்.



இராச மகிஷி _ அரசன் தேவி.
இராசமணி _ நெல்வகை.
இராச மானியம் _ அரசனால் விடப்பட்ட இறையிலி நிலம்.
இராச முடி _ அரசன் முடி : தெய்வச் சிலைகளுக்குச் சாத்தும் கொண்டை.
இராச முத்திரை _ அரசன் இலச்சனை.





இராச மோடி _ அரச மிடுக்கு.
இராச யோகம் _ அரசனாவதற்குரிய கோள் நிலை: பெரு வளப்பேரு : யோக நிலைகளுள் ஒன்று.
இராசராசன் _ மன்னர் மன்னன் : பேரசன் : சக்கரவர்த்தி : குபேரன் :இராசராச சோழன்.
இராசராசேச்சரம் _ இராசராசன் கட்டிய பெரிய கோயில் : தஞ்சைப் பெரிய கோயில்.
இராசராசேச்சுவரி _ உமாதேவி வடிவங்களுள் ஒன்று.



இராச ரிஷி _ அரசனாயிருந்து முனிவனானவன். விசுவா மித்திரன்.
இராசருகம் _ அகில் : வெள்ளைத்தும்பை.
இராச லட்சுமி _ எட்டு லட்சுமிகளில் ஒன்று.
இராசவரிசை _ அரசர்க்குச் செய்யும் சிறப்பு .
இராசவள்ளி _ கொடி வள்ளி வகை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:29 am

இராச வாகனம் _ அரசன் ஊர்தி : சிவிகை: கோவேறு கழுதை.
இராச வாய்க்கால் _ தலைமையான நீர்க்கால்.
இராச வாழை _ குலை ஒன்றிக்கு 1000 காய்கள் காய்க்கும் வாழை வகை.
இராச விருட்சம் _ கொன்றை மரம்.
இராச வீதி _ அரசர் உலா வருவதற்குரிய பெருந் தெரு.



இராச வைத்தியம் _ பத்தியம் இல்லாத மருத்துவம்.
இராசனை _ வெள்ளைப்பூண்டு.
இராசன் _ அரசன் : சந்திரன் : இந்திரன் : தலைவன் : இயக்கன் .
இராசாங்கம் _ அரசாட்சி.
இராசாணி , இராசாத்தி _ அரசி.



இராசாதனம் _ முருக்கு : முரள் :அரியணை.
இராசாளி _ பறவை வகை: வல்லூறு.
இராசான்னம் _ ஒரு வகை உயர்ந்த நெல்.
இராசி - வரிசை : கூட்டம் : குவியல் : இனம் : மொத்தம் : அதிட்டம் : சுபாவம் : மேடம் முதலிய இராசி.
இராசிக்காரன் _ நற்பேருடையவன்.



இராசிகம் _ வரி : இயற் கணிதம் : அமிசம் : அரசனால் வருவது : குவியல் : நரம்பு : ஓர் இராசி.
இராசிகை _ வயல் :இரேகை : ஒழுங்கு : கேழ்வரகு .
இராசி சக்கரம் _ இராசிகளை எழுதி அடைத்த சக்கரம் : இராசி மண்டலம்.
இராசி பண்ணுதல் _ சமாதானம் செய்தல் .
இராசிப் படுதல் _ மனம் பொருந்துதல்.



இராசிப் பொருத்தம் _ கலியாணப் பொருத்தம் பத்தனுள் ஒன்று.
இராசிப் பொன் _ கலப்பில்லாத பொன்.
இராசியடி _ அளந்த பின் கிடக்கும் கள நெல்.
இராசியத் தானம் _ மறைவிடம் .
இராசியம் _ மறைவு : மாதர் மறைவுத்தானம் : தாமரை : அந்தப்புரம்.



இராசிலம் _ சாரைப்பாம்பு .
இராசீகம் _ அரசனால் வருவது.
இராசீவம் _ தாமரை: மான் வகை.
இராசை _ திரு நெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர நயினார் கோயில் என்னும் தலம்.
இராசோத்துங்கன் _ அரசருள் சிறந்தவன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:30 am

இராச்சியம் _ ஆளுகை : உலகு : அரசாளும் நாடு.
இராடம் _ பெருங்காயம் : வெண்காயம் : இலாடம் : கழுதை.
இராட்சச _ ஒரு தமிழ் வருடம்.
இராட்சசன் _ அரக்கன்.
இராட்டிரம் _ நாடு : நகரில் உள்ள மக்கள்.



இராட்டினம் _ நூற்கும் பொறி : நீர் இறைக்கும் கருவி : ஏறி விளையாடும் சுழல் தேர்.
இராட்டின வாழை _ வாழை வகை.
இராட்டு _ இராட்டினம் : தேன் கூடு .
இராணம் _ மயில் தோகை : இலை.
இராணி _ அரசி.



இராணுவம் _ படை.
இராதம் _ கடைக்கொள்ளி .
இராதினி _ சல்லகி மரம் : ஓர் ஆறு : வச்சிரப்படை : இடி : மின்னல்.
இராதை _ கண்ணன் விரும்பிய கோபியருள் ஒருத்தி : விஷ்ணு கிராந்தி :விசாசகம் : கண்ணனின் வளர்ப்புத் தாய் : மின்னல் : நெல்லி.
இராத்திரி _ இரவு : மஞ்சள்.




இராத்திரி காசம் _ வெள்ளாம்பல்.
இராத்திரி வேதம் _ சேவல்.
இராந்து _ இடுப்பு.
இராந்துண்டு _ இலந்தை.
இராப்பண் _ இராக்காலத்தில் பாடுவதற்குரிய பண்.



இராப்பத்து _ திருமால் ஆலயங்களில் ஏகாதசியை யொட்டி இரவில் நடைபெறும் சாற்று முறை விழா.
இராப்பாலை _ மரவகை.
இராப்பிச்சை _ சந்திப்பிச்சை : முன்னிரவில் வரும் பிச்சைக்காரன்.
இராப்பூ _ இரவில் மலரும் மலர்கள்.
இராம கவி _ ஒரு பண்.



இராமக் கிரி _ குறிஞ்சிப் பண் வகை.
இராமக் கோவை _ கற்கேவை என்னும் கொடி வகை.
இராமக் கோழி _ நீர்க் கோழி.
இராம சீத்தா _ மரவகை.
இராம சேது _ இராமர் கட்டிய அணை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:30 am

இராமடம் _ பெருங்காயம்.
இராமதாபனி _ 108 உபநிடதங்களுள் ஒன்று.
இராம துளசி _ துளசி வகை.
இராம தூதன் _ அனுமன்.
இராம நவமி _ சித்திரை மாத வளர்பிறையில் வரும் நவமி நிதி: இராம பிரான் திரு அவதாரத் திருநாள்.



இராமநாதன் சம்பா _ சம்பா நெல்வகை.
இராமப் பிரியா _ ஒரு பண்.
இராம பாணம் _ இராமர் அம்பு : ஏட்டுச் சுவடிகளைத் துளைத்துக் கெடுக்கும் ஒரு பூச்சி : பாச்சை வகை : மல்லிகை வகை : ஒரு வகை மருந்து.
இராம முழியன் _ கடல் மீன் வகை.
இராமம் _ அழகு : விரும்பத்தக்கது : வெண்மை : வெண்மான் : கருமை.



இராமராச்சியம் _ இராம பிரானுடைய அரசாட்சி போன்ற நல்லாட்சி.
இராமலிங்கம் _ இராமபிரானால் வழிபடப்பட்ட இராமேச்சுரத்துச் சிவலிங்க மூர்த்தி : ஆறுபடி கொண்ட மரக்கால்.
இராமவாசகம் _ தவறாத வாக்கு .
இராமன் _ சந்திரன் : பரசுராமன் : பலராமன் : இரகுராமன்.
இராமன் சம்பா _ சம்பா வகை.




இராமாயணம் _ இதிகாசங்களுள் ஒன்று : திருமாலின் திரு அவதாரமான இராமபிரான் சரிதத்தைக் கூறும் நூல்.
இராமாலை _ கருக்கல் நேரம் : இருளடைந்த மாலைப்பொழுது.
இராமாவதாரம் _ தசரதன் புதல்வனாகத் திரு அவதாரம் செய்த திருமாலின் தோற்றம்.
இராமானம் _ இரவு : தினந்தோறும் உள் இரவுப்பொழுது.
இராமானுச கூடம் _ வைணவ வழிப்போக்கர்கள் தங்கும் சாவடி.



இராமானுசம் _ வைணவர் பயன் படுத்தும் ஒரு வகைச் செப்புப் பாத்திரம்.
இராமானுசீயர் _ ஸ்ரீ வைணவர் : இராமானு சர்மத்தைப் பின்பற்றுவோர்.
இராமிலன் _ மன்மதன் : கணவன்.
இராமை _ மன்மத நூல் கற்றவள் : சிறு வழு தலை.
இராயசக்காரன் _ எழுத்து வேலை செய்பவன் : எழுத்தன்.


இராயசம் _ எழுத்து வேலை: ஆணைப் பத்திரம்.
இராயணி _ அரசி.
இராயர் _ விசய நகர அரசர் பட்டப் பெயர் : மகாராட்டிர மருத்துவப் பிராமணர் பட்டப் பெயர்.
இராயன் _ மன்னன் : விளக்கு : பழைய நாணய வகை.
இராயிரம் _ இரண்டாயிரம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:30 am

இராவடம் _ அசோகு : அராவுந் தொழில்.
இராவடி _ ஏலம் :துடி.
இராவண சன்னியாசி _ தன் வடிவிலிருந்து அவச் செயல் செய்பவன்: மோசடிக்காரன்.
இராவணம் _ அழுகை : விளக்கு.
இராவணன் _ இலங்கை வேந்தன் : கடவுள்.



இராவணன் புல் _ கடற்கரையில் உள்ள ஒரு வகைக் கூரிய புல்.
இராவணாகாரம் _ பயங்கர வடிவம்.
இராவாசுரம் _ வீணை வகை.
இராவணி _ இராவணன் மகனான இந்திரசித்து.
இராவதம் _ சூரியன் குதிரை : மேகலோகம்.



இராவதி _ ஒரு கொடி : ஓர் ஆறு : யமபுரம்.
இராவுத்தராயன் _ குதிரைச் சேவகரின் தலைவன்.
இராவுத்தன் _ குதிரை வீரன் : தமிழ் முகமதியருள் ஒரு பிரிவினரின் பட்டப் பெயர்.
இராவுதல் _ அராவுதல்.
இராவோன் _ சந்திரன்.



இரிகம் _ இதயம்: மனம.
இரிக்கி _ பெருங்கொடி வகை.
இரிசல் _ பிளவு : மன முறிவு.
இரிசியா _ பூனைக் காலி.
இரிஞன் _ பகைவன்.



இரிட்டம் _ வாள் : நன்மை : தீமை : பாவம்.
இரிணம் _ உவர் நிலம்.
இரிதல் _ கெடுதல் : ஓடுதல் :அஞ்சுதல்.
இரித்தல் _ தோற்றோடச் செய்தல் : கெடுத்தல் : ஓட்டுதல்.
இரித்தை _ சதுர்த்தி : நவமி : சதுர்த்தசி என்கின்ற திதிகள் : நாழிகை.



இரிபு _ அச்சம் : ஓடுதல் : பகை: தோல்வி: வெறுப்பு.
இரிபேரம் _ வெட்டி வேர்.
இரிப்பு _ அச்சுறுத்தல் : தோல்வியுறச் செய்வது : நிலை குலைவிப்பது.
இரிமான் _ எலி வகை.
இரியல் _ நிலை கெடுதல் : அழுதல் : விரைந்து செல்லுதல் .



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:30 am

இரீதி _ பித்தளை : இரும்புக்கறை : எல்லை : நாட்டு வழக்கம் : முறைமை.
இரு _ பெரிய : கரிய : இரண்டு : இருத்தல்.
இருகண் _ ஊனக் கண் : ஞானக் கண்.
இருகால் _ அரை : இருமுறை : இரண்டு பாதம்.
இருவகை _ இரண்டு கைகள் : இரண்டு பக்கம்.



இரு குரங்கின்கை _ முசுமுசுக்கை.
இருக்கம் _ கரடி : இராசி : நட்சத்திரம் .
இருக்கன் _ பிரமன் : இருக்கு வேதம் உணர்ந்தவன்.
இருக்காழி _ இரண்டு விதைகளையுடைய காய்.
இருக்கு _ வேத மந்திரம் : இருக்கு வேதம்.



இருக்குக் குறள் _ சிறிய பாவகை.
இருக்கை _ ஆசனம் : இருப்பிடம் : குடியிருப்பு : ஊர் : கோயில் : கோள்கள் இருக்கும் இராசி.
இருங்கரம் _ பதக்கு.
இருசகம் _ மாதுளை .
இருசால் _ கருவூலத்திற்கு அனுப்பும் பணம் : அரசு வரிப் பணம் செலுத்துகை.



இருசி _ பெண் பேய் : பூப்படையாத பெண்.
இரு சீர்ப் பாணி _ இரட்டைத்தாளம்.
இருசு _ நேர்மை : மூங்கில் : வண்டியச்சு.
இருசுகந்தபூண்டு _ மருக்கொழுந்து.
இரு சுடர் _ சந்திர சூரியர்.




இரு சுழி _ இரட்டைச் சுழி.
இருஞ்சிறை _ காவல் : மதில் : நரகம்.
இருடி _ முனிவன் : வேதம் : ஆந்தை.
இருடிகம் _ இந்திரியம்.
இருடிகேசன் _ திருமால்.



இருட்கண்டம் _ கழுத்தணி வகை.
இருட்கண்டர் _ சிவபிரான்.
இருட்சரன் _ இராக்கதன் : இருட்டில் திரிவோன்.
இருட்சி _ இருள் : மயக்கம் : இருட்டு.
இருட்டு _ இருள் : மயக்கம் : அறியாமை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:31 am

இருட்பகை _ சூரியன்.
இருட் பிழம்பு _ இருளின் தொகுதி.
இருட் பூ _ ஒரு வகை மரம்.
இருண பாதகன் _ கடன் தீர்க்காது மோசம் செய்பவன்.
இருணம் _ கடன் கழிக்கப்படும் எண் : நிலம் : நீர் : கோட்டை : உவர் நிலம்.



இருணாள் _ இருண்ட நாள் : தேய் பிறைப் பக்க நாள்.
இருணி _ பன்றி.
இருணிலம் _ நரகம்.
இருண்டி _ சண்பகம்.
இருண்மதி _ அமாவாசை : தேய் பிறைச் சந்திரன்.



இருண் மலர் _ ஆணவ மலம்.
இருண்மை _ இருளுடைமை.
இருதம் _ நீர் : உஞ்சவிருத்தி : மெய்ம்மை.
இருதய கமலம் _ உள்ளத் தாமரை.
இருதயத் துடிப்பு _ மார்பு படபட என்று அடித்துக்கொள்ளுதல்.


இருதயம் _ நடுவு : இதயம் : மனம் : கருத்து.
இருதலை _ இருமுனை.
இருதலைக் கபடம் _ விலாங்கு மீன்.
இருதலைக் கொள்ளி _ இருபக்கத்திலும் தீ உள்ள கட்டை: எல்லாப் பக்கங்களிலும் துன்பம் செய்வது.
இருதலை ஞாங்கர் _ முருகன் வேல் : இருபக்கமும் கூர் உள்ள வேர்.




இருதலைப் புடையன் _ ஒரு வகைப் பாம்பு.
இரு தலைப்புள் _ இரண்டு தலைகள் உடைய பறவை.
இருதலை மணியன் _ பாம்பில் ஒரு வகை : கோள் சொல்பவன்.
இரு தலை மாணிக்கம் _ முத்தி பஞ்சாட்சரம் : ஒரு மந்திரம்.
இரு தலைவிரியன் _ பாம்பு வகை.



இருதிணை _ உயர் திணை : அஃறிணை.
இருது _ ருது : இரண்டு மாத பருவம் : மகளிர் பூப்பு ஏற்ற காலம் : கடவுளின் முத்தொழில்.
இருது சங்கமனம் _ பூபுற்ற நாளில் முதன் முதலாகத் தலைவன் தலைவியரைக் கூட்டுதற்குச் செய்யும் சடங்கு.
இருது நிகர்வு _ பருவங்களுக்குரிய நுகர்வு.
இருது மதி _ பூப்படைந்த பெண் : கருத்தரித்தற்குரிய நிலையில் இருப்பவள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக