உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கத் தயார்: நடிகர் ரஜினிகாந்த்
by சிவனாசான் Today at 2:30 am

» தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக கமல் ஆவேசம்
by சிவனாசான் Today at 2:27 am

» மதுரை:ஓட்டு எண்ணிக்கை மையத்தில் நுழைந்த அதிகாரி யார்?
by ayyasamy ram Today at 12:37 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 10:37 pm

» செய்திகள்
by சிவனாசான் Yesterday at 8:42 pm

» வெஜ் பேலியோ பா.ராகவன்
by aeroboy2000 Yesterday at 6:34 pm

» பல ஆண்டுக் கனவான கருந்துளை (black hole ) படமாக்கப்பட்டது.
by சக்தி18 Yesterday at 6:09 pm

» மனைவியை அடிப்பது எப்படி?
by சக்தி18 Yesterday at 6:01 pm

» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» வண்ணப்பறவைகள் போல் விளையாடு
by ayyasamy ram Yesterday at 3:06 pm

» கண்கவர் அந்தமான் போட்டோக்கள் ! by Krishnaamma !
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» தொழில் நுட்பம் புது வரவு
by சக்தி18 Yesterday at 2:50 pm

» பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து!
by சக்தி18 Yesterday at 2:34 pm

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by சக்தி18 Yesterday at 2:30 pm

» இந்தியாநீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது : பாலியல் புகார் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» பூந்தி லட்டு
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண் - கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» இந்தாண்டு 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» நாளை நிழல் இல்லா நாள்: புதுச்சேரியில் கண்டு ரசிக்க ஏற்பாடு
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» சிவகார்த்திகேயன் படம்: வெளியீட்டுத் தேதியில் மாற்றம்!
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» நுங்கம்பாக்கம் தொழிற்சாலையில் தீ விபத்து
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» அமமுக பொதுச் செயலாளரானார் டிடிவி தினகரன்: கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» இடைத்தேர்தல்: 4 தொகுதிகளுக்கான திமுக பொறுப்பாளர்கள் நியமனம்
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல்
by ayyasamy ram Yesterday at 11:34 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 6:13 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 6:10 am

» புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 6:06 am

» பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக்கொண்ட தலித் இளைஞர்
by கோபால்ஜி Fri Apr 19, 2019 4:33 pm

» புன்னகைத்துப் பாருங்கள்...!!
by ayyasamy ram Fri Apr 19, 2019 3:51 pm

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by ayyasamy ram Fri Apr 19, 2019 3:48 pm

» வாழ்க்கையை வாழும்போதே ரசித்து வாழுங்கள்...!!
by ayyasamy ram Fri Apr 19, 2019 3:43 pm

» கவிதை தூறல்...
by ayyasamy ram Fri Apr 19, 2019 2:52 pm

» குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க….(டிப்ஸ்)
by ayyasamy ram Fri Apr 19, 2019 2:44 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Apr 19, 2019 2:32 pm

» அக்காவும், அப்பாவும், காங்., மகனும், மருமகளும், பா.ஜ.
by ayyasamy ram Fri Apr 19, 2019 1:40 pm

» நாங்கள் என்ன நாற்றமடிக்கிறோமா? - பாஜக வேட்பாளர் ஹேமமாலினியைச் சாடிய விவசாயி
by ayyasamy ram Fri Apr 19, 2019 12:51 pm

» பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
by ayyasamy ram Fri Apr 19, 2019 12:48 pm

» சசி இயக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
by ayyasamy ram Fri Apr 19, 2019 12:13 pm

» தேர்தல் முடிந்த பிறகு வெளியாகும் 3 தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Fri Apr 19, 2019 12:11 pm

» திருக்கழுக்குன்றம்:-ஒளிமயமான எதிர்காலம்.-ஜிதமிழ் தொலைக்காட்சியில்.
by velang Fri Apr 19, 2019 8:16 am

» பஞ்சராக்ஷரம் - திரைப்படம்
by krishnaamma Fri Apr 19, 2019 12:44 am

» காய்கறி ஓவியங்கள் !
by krishnaamma Thu Apr 18, 2019 9:45 pm

» சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்
by krishnaamma Thu Apr 18, 2019 9:31 pm

» திரை விமர்சனம் - Shazam!
by krishnaamma Thu Apr 18, 2019 9:21 pm

» தமிழ் மின் புத்தகங்கள்
by krishnaamma Thu Apr 18, 2019 9:17 pm

» அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.....
by krishnaamma Thu Apr 18, 2019 9:13 pm

» ஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி!
by krishnaamma Thu Apr 18, 2019 9:13 pm

Admins Online

தமிழ் அகராதி - அ

தமிழ் அகராதி - அ - Page 6 Empty தமிழ் அகராதி - அ

Post by சிவா on Mon Feb 01, 2010 11:08 pm

First topic message reminder :

அகிலம் - உலகம்
அகம் - உள்ளே
அருகே - பக்கத்தில்
அடுத்த - வேற


அரசர் - மன்னர்
அதிகாரி - வேலைப் பார்ப்பவர்
அதிகம் - நிறைய
அறிவிப்பு - சொல்லுதல்


அசைவு - நகருதல்
அபிப்ராயம் - தன் விருப்பத்தை கூறுதல்
அமருதல் - உட்காருதல்
அவசரம் - மிக வேகமாக


அடிப்படை - அத்தியாவசியமான
அஞ்சுதல் - பயப்படுதல்
அங்கீகாரம் - உரிமை
அழைத்தல் - கூப்பிடுதல்


அதிர்ச்சி - வியப்பு
அருள்வாக்கு - தெய்வவாக்கு
அலுவலகம் - வேலை பார்க்கும் இடம்
அனுப்புதல் - கொடுத்தல்


அழகு - பெண்
அமைப்பு - நிறுவனம்
அறிஞர் - திறமையானவர்
அலைகள் - காற்றால் கடலில் உருவாகும் நீரின் மோதல்கள்

அல்லிப்பூ - பூ வகைகளுள் ஒன்று


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down


தமிழ் அகராதி - அ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா on Mon Feb 01, 2010 11:36 pm

அறிவு மடம்படுதல் - அறிந்தும் அறியோர் போன்றிருத்தல்.
அறிவுறுத்தல் - அறிவித்தல்.
அறிவுறால் - அறிவுகொளுத்துகை.
அறிவொப்புக் காண்டல் வினா - தானறிந்ததைப் பிறனறிவோடு ஒப்பு நோக்கக் கேட்குங் கேள்வி,
அறீஇய - அறிய : அறிந்த.
அறுகரிசி - அறுகம்புல்லோடு கூடிய மங்கலவரிசி.
அறுகழி - நீரற்ற கழி.
அறுகால் - வண்டு : பாம்பு : அறுகிற பொழுது : இல்லாத போது : தேனீ.
அறுகாற் பீடம் - ஆறு கால்கள் அமைந்த பீடம்.
அறுகிடுதல் - திருமணத்தில் அறுகிட்டு வாழ்த்துதல்.அறுகுணன் - கடவுள்.
அறுகுறை - கவந்தம் [ தலையற்ற முண்டம்].
அறுகெடுத்தல் - அறுகிட்டு வாழ்த்துதல்.
அறுசமயம் - சைவம் : வைணவம் : சாக்தம் : செளரம் : காணாபத்தியம் :
கௌமாரம் ஆகிய ஆறு சமயங்கள்.
அறுசுவை - கைப்பு : இனிப்பு : புளிப்பு : உவர்ப்பு : துவர்ப்பு : கார்ப்பு.அறுதல் - தீர்தல் : பாழாதல் : அறுந்தது : இல்லாமற் போதல் : எதற்குங் கூடாத
தாதல் : கைம்பெண் : நூல் கயிறு முதலியன அறுதல் : பயனற்றதாதல் :
அற்றுப் போதல் : கொலையுண்டல் : தங்கல் : வகை செய்தல்.
அறுதிச் சாசனம் - கிரயப் பத்திரம்.
அறுதிப் பரிவட்டம் - கோயில் மரியாதையாகத் தலையில் கட்டிக் கொடுக்கும் பட்டு.
அறுதியிடுதல் - முடிவுக்குக் கொண்டு வருதல் : காலங் குறித்தல்.
அறுதொழிலோர் - பார்ப்பனர்.அறுத்தல் - ஊடறுத்தல் : அரிதல் : இல்லாமற் செய்தல் : இடை விடுதல் :
முடிவு செய்தல் : வளை தோண்டல் : வெட்டுதல்.
அறுத்திசைப்பு - வேற்றிசை கலந்து வரும் ஒருவகை யாப்பு : வழு.
அறுத்துப் பேசுதல் - முடிவாகக் கூறுதல்.
அறுத்து முறி - மனைவியைத் தள்ளி விடுகை.
அறுத்துரைத்தல் - வரையறுத்துச் சொல்லுதல் : பிரித்துச் சொல்லுதல்.அறுந்தருணம் - அறுந்தருவாய் : அவசர சமயம்.
அறுந்தொகை - மிச்சமின்றிப் பிரிக்கப் பெறும் எண்.
அறுபகை - காமம் முதலியன.
அறுபதம் - ஆறு கால் : வண்டு : ஒரு பூண்டு.
அறுபதாமாண்டுக் கலியாணம் - சஷ்டியப்த பூர்த்தி.அறுபான் - அறுபது.
அறுபொருள் - பரம்பொருள்.
அறுப்புச் சுகம் - கைம்பெண்ணுக்குக் கொடுக்கும் வாழ்க்கைப் பொருள்.
அறுமணை - அரிவாள்மணை : அழகற்றவள் : சீர்கேடி.
அறுமர் - எண்ணெய் வகை.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா on Mon Feb 01, 2010 11:37 pm

அறுமான் - ஒருவகைப் புழு.
அறுமீன் - கார்த்திகை மாதம் : கார்த்திகை நாள்.
அறுமீன் காதலன் - முருகன்.
அறுமுறை வாழ்த்து - முனிவர் : பார்ப்பார் : ஆனிரை : மழை : முடியுடை வேந்தர் : உலகு என்னும் ஆறினையும் பற்றிக் கூறும் வாழ்த்து.
அறுமை - நிலையின்னை : ஆறு.அறும்பு - கொடுமை : பஞ்சம்.
அறுவகைப்படை - மூலப்படை : கூலிப்படை : நாட்டுப்படை : காட்டுப்படை :
துணைப்படை : பகைப்படை.
அறுவடை மேரை - கிராம ஊழிய சுதந்திரம்.
அறுவாய் - வாள் முதலியவற்றால் அறுபட்ட விடம் : குறைவிடம் : கார்த்திகை.


அறுவாப்போதல் - முற்றுஞ் செலவாதல்.
அறுவிதி - தீர்ப்பு.
அறுவு - முழுமை.
அறுவையர் - ஆடை நெய்வோர்.
அறைகாரன் - கோயில் உக்கிராணக்காரன்.அறைகுறை - முடிவுபெறாதது.
அறைகூவல் - போருக்கழைத்தல்.
அறைதல் - அடித்தல் : அலை : காற்று முதலியன அறைதல் : ஒலித்தல் : துண்டித்தல் : பறை முதலியன கொட்டுதல்.
அறைநன் - அறுப்பவன்.
அறைபோக்கு - ஒதுங்குகை.அறைபோதல் - கீழறுக்கப்படுதல் : கெட்டழிதல் : வஞ்சித்துச் செல்லல்.
அறைப்படுத்தல் - கீழறுத்துத் திறப்பித்தல்.
அறை முறையிடுதல் - குறைதெரிவித்தல்.
அறையல் - சொல்லல்.
அறையிடுதல் - அறைகூவுதல்.அறையுண்ணல் - அடிக்கப்படுதல்.
அறையோ - முறையிடும் மொழி : ஒரு வஞ்சினச் சொல்.
அறையோலை - வரையறைசெய்யும் உறுதி மொழி.
அறைவனர் - சொல்லுவோர்.
அறைவாய் - மலைநெறி.அற்கம் - அடக்கம் : பொருள் விலை : அலரி : தும்பை : துளசி : முருக்கு :
வெள்ளெருக்கு : வேம்பு.
அற்கன் - கதிரவன்.
அற்கா - நிலையாத.
அற்காமை - நிலையாமை.
அற்குதல் - அடைதல் : தங்குதல் : நிலைபெறுதல்.அற்சிரம் - அச்சிரம்.
அற்சிரை - அற்சிரம்.
அற்பகேசி - வசம்பு.
அற்பக்கிலன் - சிற்றறிவுடையவன்.
அற்பசங்கை - ஒன்றுக்குப் போதல் : சிறுநீர் விடுதல்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா on Mon Feb 01, 2010 11:37 pm

அற்பரம் - மக்கட் படுக்கை.
அற்புத உவமை - உவமையலங்கார வகையுள் ஒன்று.
அற்புதக்கண் - அபிநயக்கண் வகை.
அற்புதமூர்த்தி - கடவுள்.
அற்புத்தளை - நேசபந்தம்.அற்றகாரியம் - முடிந்து போன வேலை.
அற்றவன் - பற்றற்றவன் : பொருளற்றவன்.
அற்றூரம் - மரமஞ்சள்.
அற்றேல் - அப்படியானால்.
அற்றைப் பரிசம் - விலைமாதர் அன்றன்று பெறுங்கூலி.அன - அன்னம் : ஒப்பான்.
அனகம் - பாவமற்றது : புல்லுருவி.
அனங்கத்தானம் - காமன் கோட்டம்.
அனதிகாரி - உரிமைபெறாதவன்.
அனத்தம் - பயனற்றது : பொல்லாங்கு.அனந்தசக்தி - வரம்பில்லாத ஆற்றல்.
அனந்தசுகம் - கடையிலா இன்பம்.
அனந்தஞானம் - கடையிலாவறிவு.
அனந்தரம் - பிறகு : பின்னர்.


அனந்தவிபவை - உமையவள்.
அனந்தை - பூமி : சிவசக்திகளில் ஒன்று : திருவனந்தபுரம் : அறுகு : சீந்தில் :
செங்காந்தள் : சிறுகாந்தள் : சிறுகாஞ்சொறி : நன்னாரி : குப்பைமேனி :
சோடச கலையுள் ஒன்றான யோகத்தானம்.
அனபை - ஓர் யோகம்.
அனலம் - தீ : கொடுவேலி.
அனலன் - தீக்கடவுள் : அட்டவசுக்களுள் ஒருவன்.அனலாச்சியம் - ஒரு நரகம்.
அனலாடி - சிவன்.
அனலேறு - இடி.
அனல்காலி - சூரியகாந்தக்கல்.
அனவத்தை - முடிவு பெறாமைக்குற்றம்.அனற்கல் - சிக்கிமுக்கிக் கல்.
அனற்றுதல் - தகித்தல் : எரித்தல் : வயிறுளைதல் : சினத்தல் : வீணே உளறுதல் : முணங்குதல்.
அனனிலம் - பாலைநிலம்.
அனன்னியம் - வேறன்மை.
அனாகதம் - ஆறு ஆதாரங்களுள் ஒன்று.அனாதரவு - உதவியின்மை.
அனாதிசைவம் - சைவம் பதினாறனுள் முப்பொருள் உண்மையை உறுதிப்படுத்துவது.
அனாமயம் - நோயின்மை.
அனாயாசம் - வருத்தமின்மை.
அனாவிதம் - வீணை வகை.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா on Mon Feb 01, 2010 11:38 pm

அனாவிருட்டி - மழையின்மை.
அனி - நெற்பொரி : பத்தாயப் பெட்டி.
அனித்தம் - அனிச்சம்.
அனிவன் - வாயுதேவன்.
அனீகம் - அக்குரோணியில் பத்தில் ஒரு பங்கு.அனீகினி - படை.
அனு - பிரதிசெயல் : மோனையெழுத்து : தாடை : அற்பம் : ஒழுங்கு : கதுப்பு :
கீழ் : கூட : அன்மை : தனிமை : பங்கு.
அனுகதம் - தொடர்ந்து வருவது.
அனுகம் - செஞ்சந்தனம்.
அனுகமனம் - உடன் கட்டையேறுதல்.அனுகம்பம் - இரக்கம்.
அனுகரணம் - ஒன்றன் செயல் போல் செய்கை : அனுகாரம்.
அனுக்கம் - வருத்தம் : முணக்கம் : அச்சம் : நோய்.
அனுக்கிரமணி - நூற்பதிகம்.
அனுக்குதல் - வருத்துதல் : கெடுத்தல்.அனுக்கை - அனுஞ்ஞை : தட்சிணை வகை.
அனுங்கல் - அசைதல் : இழுகல் : ஒன்றோடொன்று முட்டுதல் : கெடுதல் : புலம்பல் : வருந்தல் : வாடல் : முணுமுணுத்தல்.
அனுங்குதல் - அனுங்கல்.
அனுசந்தானம் - சிந்திக்கை : இடையறாது ஓதுகை.
அனுசயம் - கழிவிரக்கம் : பச்சாத்தாபம்.அனுசரணம், அனுசரணை - சார்ந்தொழுகுதல்.
அனுசரிப்பு - பின்பற்றுகை : இணக்கம்.
அனுசாசனம் - உபதேசம்.
அனுசாரி - பின்பற்றுவோன்.
அனுசிதம் - தகாதது : பொய் : சத்தி செய்கை.அனுசை - தங்கை.
அனுசைவர் - சிவதீட்சை பெற்ற சத்திரியர் : வைசியர்.
அனுச்சை - விடை.
அனுட்டானம் - அனுஷ்டானம் : வழக்கம் : தீக்கை பெற்றவர்கள் செய்யும் நாட்கிரியை : ஒழுக்கம்.
அனுதாத்தம் - படுத்தல் ஓசை.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா on Mon Feb 01, 2010 11:38 pm

அனுபவை - பார்வதி.
அனுபூதன் - காரணன்.
அனுப்படி - கையிருப்பு : காரியங்கள் : கடந்த ஆண்டு வருவாய்.
அனுப்பிராசம் - வழியெதுகை.
அனுப்பத்தி - பொருத்தமின்மை.அனுபோகம் - இன்பநுகர்ச்சி : பழக்கம் : கையாட்சி.
அனுமதை - ஒருவகைப் புல்.
அனுமாசக்காய் - பொன்னாங்கண்ணி.
அனுமானம் - கருதலளவை : ஐயம் : சமுசயம்.
அனுமிதி - அனுமானத்தால் உண்டாகும் ஞானம்.அனுமேயம் - அனுமானத்தால் அறியத்தக்கது.
அனுமோனை - இனவெழுத்தால் வரும் மோனைத்தொடை.
அனுயோகம் - வினா.
அனுலோமன் - உயர்குல ஆடவனுக்கு இழிகுலப் பெண்ணிடம் பிறந்த பிள்ளை.
அனுவாதவொத்தி - மறு ஒத்தி.அனுவெழுத்து - மோனையெழுத்து.
அனேகான்மவாதம் - ஆன்மாக்கள் பல உண்டென்னுங் கொள்கை.
அனை - அத்தன்மை : ஒரு மீன் : தாய் : அத்தனை.
அனைத்தும் - எல்லாம்.
அனைய - அன்ன : அத்தன்மையான.அனையம் - அத்தன்மையினேம்.
அன்பிலி - அன்பில்லாதவன்.
அன்புகூர்தல் - பற்றுக் கொள்ளுதல்.
அன்புடைக்காமம் - ஐந்திணை பற்றி நிகழுங் காமம்.
அன்மயம் - மாறு.அன்மொழித்தொகை - ஐந்தொகை மொழிமேற் பிற தொக்கு வரும் தொகை.
அன்வயம் - அந்நுவயம்.
அன்வியத்தல் - பின்தொடர்தல் : செய்யுளிலும் உரைநடையிலும் ஒரு மொழியை மற்றொன்றோடு
பொருட் பொருத்தமுறப் பொருத்துதல்.
அன்றியுரைத்தல் - மாறுபட்டுச் சொல்லுதல்.
அன்றினர், அன்றினார் - பகைவர்.அன்றுதல் - மாறுபடுதல் : கெடுதல்.
அன்னக்கொடியோன் - நான்முகன்.
அன்னசாரம் - கஞ்சி.
அன்னசுத்தி - நெய்.
அன்னதாழை - அன்னாசி.அன்னதானக் குறுவை - மூன்று திங்களில் விளையும் ஒருவகை நெல்.
அன்னது - அப்படிப்பட்டது : போன்றது : ஒத்தது.
அன்னத் துவேடம் - உணவில் வெறுப்பு.
அன்னபானம் - சோறுந் தண்ணீரும்.
அன்னப்பால் - கஞ்சி.அன்னப் பிராசனம் - சோறூட்டல்.
அன்னம்பாறுதல் - புலம்புதல்.
அன்னல் - புகை.
அன்னவத்திரம் - உணவு உடைகள்.
அன்னவம் - கடல்.


அன்னவூர்தி - நான்முகன்.
அன்னாய் - ஓர் அசைநிலை : தாயை விளித்தல்.
அன்னாள் - அத்தன்மையள் : அவள் : ஒப்பானவள்.
அன்னியபரன் - வேறோர் இடத்தில் மனம் பற்றியவன்.
அன்னியூர் - ஓர் ஊர்.அன்னுவயம் - அன்வயம்.
அன்னுவயம்பண்ணுதல் - செய்யுட்டொடரைப் பொருட் பொருத்தமுற ஒழுங்குபடுத்துதல்.
அன்னுழி - அப்பொழுது.
அன்னுழை - அவ்விடம்.
அன்னையோ - அத்தன்மையோ.
அன்னோன்றி - வலியற்றவன்.
அன்னோன் - அவன் : ஒத்தவன்.


மூலம்: தமிழுலகம்.காம்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by Dr.S.Soundarapandian on Sat Jan 05, 2013 12:13 pm

சிவா அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது! பல அரிய சொற்களை நமக்கு அறிமுகம் செய்துவைப்பது போற்றத்தக்கது ! மொழியியல் (Linguistics) நோக்கில் எழுத்துக்களின் சேர்க்கையை (Combinationof words ) ஆய்வதற்கு மிகவும் பயன்படும்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 4796
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2559

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by ராஜு சரவணன் on Sat Jan 05, 2013 3:37 pm

சிறப்பான பனி.

இதை இடையில் நிறுத்தாது தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by dhilipdsp on Sat Jan 05, 2013 3:55 pm

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by dhilipdsp on Sat Jan 05, 2013 4:30 pm

பாசம் கொண்டது நிஜம்
மோசம் இல்லாத பாசம்
நேசம் கொண்ட பாசம்
வேஷம் இல்லாத பாசம்
என் அப்பாவின் மீது
நான் கொண்ட பாசம் ஜாலி ஜாலி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by balakarthik on Sat Jan 05, 2013 4:33 pm

@dhilipdsp wrote:பாசம் கொண்டது நிஜம்
மோசம் இல்லாத பாசம்
நேசம் கொண்ட பாசம்
வேஷம் இல்லாத பாசம்
என் அப்பாவின் மீது
நான் கொண்ட பாசம் ஜாலி ஜாலி

அப்படியே இது எந்த பதிவிற்கான பின்னூட்டமுன்னு சொன்னா ரொம்ப ரொம்ப சந்தோஷம்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by Guest on Sat Jan 05, 2013 7:11 pm

@balakarthik wrote:
@dhilipdsp wrote:பாசம் கொண்டது நிஜம்
மோசம் இல்லாத பாசம்
நேசம் கொண்ட பாசம்
வேஷம் இல்லாத பாசம்
என் அப்பாவின் மீது
நான் கொண்ட பாசம் ஜாலி ஜாலி

அப்படியே இது எந்த பதிவிற்கான பின்னூட்டமுன்னு சொன்னா ரொம்ப ரொம்ப சந்தோஷம்

சிரி சொல்லுங்க திலிப் சொல்லுங்க
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by Muthumohamed on Sun Jan 06, 2013 12:21 am

சூப்பருங்க
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15331
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 6 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை