உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--
by சக்தி18 Today at 1:52 pm

» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்
by Guest Today at 1:08 pm

» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader
by velang Today at 8:37 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Guest Yesterday at 11:27 pm

» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Yesterday at 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Yesterday at 6:40 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 6:31 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:50 am

» பெண் குழந்தைகளுக்கு மரியாதை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:49 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3
by velang Yesterday at 7:20 am

» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)
by ayyasamy ram Yesterday at 5:23 am

» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்
by ayyasamy ram Yesterday at 5:18 am

» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 4:45 am

» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
by ayyasamy ram Yesterday at 4:38 am

» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
by ayyasamy ram Yesterday at 4:35 am

» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
by ayyasamy ram Yesterday at 4:30 am

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:05 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Sun Jan 19, 2020 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Sun Jan 19, 2020 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Sun Jan 19, 2020 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Sun Jan 19, 2020 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Sun Jan 19, 2020 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Sat Jan 18, 2020 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Sat Jan 18, 2020 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Sat Jan 18, 2020 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:48 pm

Admins Online

தமிழ் அகராதி - அ

தமிழ் அகராதி - அ - Page 2 Empty தமிழ் அகராதி - அ

Post by சிவா on Mon Feb 01, 2010 11:08 pm

First topic message reminder :

அகிலம் - உலகம்
அகம் - உள்ளே
அருகே - பக்கத்தில்
அடுத்த - வேற


அரசர் - மன்னர்
அதிகாரி - வேலைப் பார்ப்பவர்
அதிகம் - நிறைய
அறிவிப்பு - சொல்லுதல்


அசைவு - நகருதல்
அபிப்ராயம் - தன் விருப்பத்தை கூறுதல்
அமருதல் - உட்காருதல்
அவசரம் - மிக வேகமாக


அடிப்படை - அத்தியாவசியமான
அஞ்சுதல் - பயப்படுதல்
அங்கீகாரம் - உரிமை
அழைத்தல் - கூப்பிடுதல்


அதிர்ச்சி - வியப்பு
அருள்வாக்கு - தெய்வவாக்கு
அலுவலகம் - வேலை பார்க்கும் இடம்
அனுப்புதல் - கொடுத்தல்


அழகு - பெண்
அமைப்பு - நிறுவனம்
அறிஞர் - திறமையானவர்
அலைகள் - காற்றால் கடலில் உருவாகும் நீரின் மோதல்கள்

அல்லிப்பூ - பூ வகைகளுள் ஒன்று


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down


தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா on Mon Feb 01, 2010 11:15 pm

அசுவகந்தி - அமுக்கிரா.
அசுவதாட்டி - தங்கு தடையின்மை.
அசுவத்தை - நெட்டிலிங்கம் : நெடுநாரை.
அசுவமேதம் - குதிரையைக் கொண்டு நடத்தும் வேள்வி.
அசுவம் - குதிரை : குதிரைப் பல் : பாஷாணம் : தூய்மையற்றது: அமுக்கிராக்கிழங்கு.


அசுவவாரியர் - குதிரை செலுத்துவோர்.
அசுவாமணக்கு - சிறுபூளை.
அசுவாரசியம் - இனிமையற்றது : பிரியமில்லாமை.
அசுவினி - அச்சுவினி : அசுவதி.
அசுழம் - நாய்.


அசூயை - பொறாமை : அவதூறு.
அசேதனம் - அழிவற்ற பொருள்.
அசேடம் - முழுவதும் : மிச்சம் இல்லாமை.
அசை - செய்யுளுறுப்புகளில் ஒன்று : மாடுகள் மீட்டு மெல்லும் இரை: தூக்குதல் : செயலுறவு : மெல்லப்போ.
அசைகொம்பு - கட்டுகொம்பு.


அசைச்சொல் - சார்ந்து வரும் இடைச்சொல்.
அசைதல் - ஆடுதல் : துடங்குதல் : தளர்தல் : சோம்பல் : இருத்தல் : தங்கல் : துவளல் : வருந்தல்.
அசைத்தல் - கட்டுதல் : இயக்குதல் : சொல்லுதல்.
அசைந்த - தங்கிய.
அசைப்பு - சொல் : இறுமாப்பு.


அசைவு - மடி : இளைப்பு : வருத்தம் : தோல்வி : தப்பு : உண்கை.
அசையும் பொருள் - சங்கமம்.
அசையாப்பொருள் - தாவரம்.
அசையாமணி - ஆராய்ச்சிமணி.
அசோகம் - நெட்டிலிங்கம் : மருது : பிண்டி : துக்கமின்மை : அசோகு.


அசோகன் - அருகன் : சோகமற்றவன் : காமன் : பீமன் : தேர்ப்பாகன்.
அசோகு - அசோகமரம் : அசோகவனம் : மருது : வாழை : அரம்பை : கதலி.
அசோண்டி - குறட்டை : அசோகவனம்.
அச்சகம் - நீர்முள்ளி : அச்சுக் கூடம்.
அச்சகாரம் - முன்பணம் : அச்சாரம்.


அச்சடிஓலை - முத்திரையிட்ட ஓலைப்பத்திரம்.
அச்சடையாளம் - உடலுறுப்பு : ஒப்புமை : அடிமை என்பதைக் காட்டுங்குறி : முத்திரையச்சு.
அச்சத்தி - கத்திரிப்பூண்டு.
அச்சந்தெளித்தல் - அறுகும் அரிசியும் இடல்.
அச்சபரம் - நாணல்.


அச்சபல்லம் - கரடி.
அச்சமாடல் - அச்சமுண்டாகப் பேசுதல்.
அச்சம் - பயம் : இலேசு : சரிசமானம் : அகத்தி : ஈரப்புல் : ஓர் அணி :
அச்சத்தில் ஈயுங்கடைப்படுதானம் : கரடி : கோரைப்புல் : தகடு : பளிங்கு : முன்புறம்.
அச்சரம் - நாவில் உண்டாகும் ஒரு நோய் : எழுத்து.
அச்சனம் - நெய்வார் கருவி வகையில் ஒன்று.


அச்சன் - தந்தை : கடவுள்.
அச்சாணி - கடையாணி.
அச்சாப்பொங்கா - மகளிர் ஆட்ட வகை.
அச்சாறு - ஊறுகாய்.
அச்சாணியம் - தீக்குறி முதலியவற்றால் நேரும் மனவிகற்பம் : அமங்கலம்.


அச்சி - நாயர் சாதிப் பெண் : ஒரு தேயம்.
அச்சியர் - ஆரியாங்கனைகள்.
அச்சிரம் - முன்பனிக்காலம்.
அச்சு - உருள்கோத்த மரம் : கட்டளைக் கருவி : எந்திரவச்சு : உடல் : அச்சம் : துன்பம் : உயிர் எழுத்து : வலி.
அச்சுக்கட்டி - ஆடையில் அச்சுவேலை செய்வோன் : நாட்டு ரண வைத்தியன்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா on Mon Feb 01, 2010 11:15 pm

அச்சுக்கட்டு - வரம்புகட்டிய பெருவயல்.
அச்சுக்கம்பி - துப்பாக்கியில் மருந்து இடிக்கும் இரும்புக் கருவி.
அச்சுதம் - அறுகும் அரிசியும்.
அச்சுதன் - அழிவில்லாதவன் : திருமால்.
அச்சுதை - இறைவி.


அச்சுத்தாலி - காசுமாலை.
அச்சுத்திரட்டுதல் - வண்டியச்சு உருவாக்குதல்.
அச்சுரம் - நெருஞ்சில் குருங்கை.
அச்சுறுத்து - பயமுறுத்து.
அச்சோ - வியப்புக் குறிப்புச் சொல்.


அஞராட்டி - நோயுள்ளவன்.
அஞர் - சோம்பல் : துன்பம் : நோய் : வழுக்கு நிலம் : அறிவிலார்.
அஞலம் - கொசுகு : மின்மினி : துளம்பு.
அஞல் - கொசுகு.
அஞ்சதி - காற்று.


அஞ்சம் - அன்னப்புள் : அசபா மந்திரம்.
அஞ்சலர் - பகைவர்.
அஞ்சலளித்தல் - அபயங்கொடுத்தல்.
அஞ்சலி - கும்பிடுகை : வௌவால் : காட்டுப்பலா : மாவிலிங்கம்.
அஞ்சலினவர் - பாஞ்சராத்திரிகள்.


அஞ்சல் - பயப்படல் : கலங்கல் : தபால் : நிறுத்துமிடம்.
அஞ்சற்குளச்சி - குங்குமபாஷாணம்.
அஞ்சனக்கலிக்கம் - மறைபொருளைக் காட்டும் மந்திர மை.
அஞ்சனம் - கண்ணுக்கிடும் மை : கருமை : இருள் : நீக்கல்.
அஞ்சனவுருவன் - திருமால்.


அஞ்சனவெற்பு - திருவேங்கட மலை.
அஞ்சனாதார் - சாகுபடி மதிப்பிடுபவன்.
அஞ்சனி - காயா : நாணற்புல்.
அஞ்சனை - அனுமன்தாய்.
அஞ்சி - அதியமான் : தலைவன் : தபால் : அஞ்சிதம் : கண்.


அஞ்சிகம் - கண் : நாணயம் : விழி.
அஞ்சிதம் - உண்டாதல் : தலைசாய்த்தல் : நல்லறிவு : பூசித்தல் : பொருந்தல் : வணக்கம்.
அஞ்சுகம் - கிளி.
அஞ்சுதல் - பயப்படுதல்.
அஞ்செவி - உட்செவி.


அஞ்செழுத்து - பஞ்சாக்கரம்.
அஞ்ஞன் - அறிவற்றவன்.
அஞ்ஞாதசுகிர்தம் - தன்னை அறியாமல் வந்த புண்ணியம்.
அஞ்ஞாதம் - அறியப்படாதது.
அஞ்ஞானம் - அறியாமை.


அஞ்ஞை - அன்னை : அறிவிலான்.
அடகு - இலைக்கறி : கீரை : ஈடு : மகளிர் விளையாட்டுவகை.
அடக்கம் - மனமொழி மெய்கள் அடங்குகை : வரம்பு கடவா தடங்குகை : வாங்கினவிலை : ஒரு தோற் கருவி.
அடக்கல் - மறைத்தல் : பணியச் செய்தல்.
அடக்கியல்வாரம் - சுரிதகம்.


அடக்கு - அடங்கச் செய் : கீழ்ப்படுத்து : சுருக்கு.
அடக்குமுறை - கண்டித்தடக்குகை.
அடங்கக் கேள் - சுருங்கக் கேள்.
அடங்கலர் - மனவடக்கம் அற்றவர் : பகைவர்.
அடங்கல் - சுருங்கல் : விடுதல் : அடங்குகை : முழுதும் : தங்குமிடம் : சாகுபடிக் கணக்கு : நெருங்குதல்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா on Mon Feb 01, 2010 11:16 pm

அடங்கல் முறை - முதல் ஏழு தேவாரத் திருமுறைகள்.
அடங்காப்பிடாரி - எவர்க்கும் அடங்காதவள் : அடங்காமாரி.
அடங்கார் - பகைவர்.
அடங்காவாரிதி - கடல் உப்பு : மூத்திரம்.
அடசுதல் - செறித்தல் : சிறிது விலகுதல்.


அடஞ்சாதித்தல் - வன்மங்கொள்ளுதல்.
அடதாளம் - தாளவகை.
அடத்தி - வாசி : தரகு.
அடந்தை - திருவரங்கத்தில் உள்ள ஒரு துழாய் வனம்.
அடம்பம்விதை - வாதுமைப் பருப்பு.


அடப்பன் - கடப்பமரம் : பரவர் : பட்டப் பெயர்.
அடப்பான் - பைரிப்புள்
அடம் - பிடிவாதம் : வர்மம் : பொல்லாங்கு : சஞ்சாரம்.
அடம்பு - அடம்பங்கொடி.
அடயோகம் - நால்வகை யோகங்களில் ஒன்று.


அடரடிபடரடி - பெருங்குழப்பம்.
அடரார் - பகைவர்.
அடர் - நெருக்கம் : நொய்ம்மை : தகடு : இதழ் : ஐயம்.
அடர்த்தி - நெருக்கம்.
அடர்ந்தேற்றம் - கொடுமை : நெருக்கிடை.


அடலை - துன்பம் : போர் : நீறு : சுடுகாடு.
அடலைமுடலை - வீண்வார்த்தை.
அடல் - வலிமை : வெற்றி : கொல்லுதல் : மீன் வகை.
அடவி - காடு : மலை சேர்ந்த நாடு : மிகுதி.
அடவிச் சொல் - கோரோசனை.


அடவியன் - துடைப்ப வகை.
அடவியல் திருடி - சதுரக்கள்ளி.
அடளை - கடல் மீன் வகை.
அடா - இகழ்வு : வியப்புகளின் குறிப்பு : அடக்கி.
அடாசனி - புளியாரை.


அடாணா - ஓர் இராகம்.
அடாதது - தகாதது : சமைக்காதது.
அடாதுடி - தீம்பு : தீச்செயல்.
அடாத்தியம் - அடாதது : பொருந்தாதது.
அடாத்து - பலாத்காரம் : அவமதி : தகாதது : பொருந்தாதது.


அடாப்பழி - தகாத நிந்தை.
அடார் - விலங்குகளை யகப்படுத்தும் பொறி.
அடாவந்தி - இட்டேற்றம் : துன்பம் : அநியாயம்.
அடாற்காரம் - பலாத்காரம்.
அடி - களவு : காலடி : ஆதி : தாக்கு : கீழ் : மகடூஉ முன்னிலை : செருப்பு : செய்யுள் உறுப்பில் ஒன்று.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா on Mon Feb 01, 2010 11:16 pm

அடிகள் - ஆசாரியர் : முனிவர் : கடவுள்.
அடிகாற்று - பெருங்காற்று : சண்டமாருதம்.
அடிகோலுதல் - தொடங்குதல் : அடிப்படையிடுதல்.
அடிக்கடி - திரும்பத் திரும்ப.
அடிக்கணை - கணைக்கால்.


அடிக்கலம் - சிலம்பு : அடிக்க மாட்டோம் : காலணி : கப்பல்தளம்.
அடிக்கழஞ்சி பெறுதல் - பெருமதிப்புப் பெறுதல்.
அடிக்காயம் - அடியாலுண்டான ரணம்.
அடிக்கீழ் - அடியுறை மாக்கள் : வணக்கமொழி : அடியுறை : ஆதரவின் கீழ்.
அடிக்குச்சி - அளவுகோல்.


அடிக்குடில் - அடிமைக்குலம் : அடிச்சேரி : வேடர் இருக்கும் ஊர் : நகர்ப்புறம் : சிற்றூர்.
அடிக்கொருக்கால் - அடிக்கடி : அடிக்கொருக்க.
அடிக்கோலுதல் - தொடங்குதல் : அடிப்படையிடுதல் : அடி கோலுதல்.
அடிசாய்தல் - அடியின் நிழல் சாய்தல்.
அடிசில் - உணவு.


அடிசிற்சாலை - அன்னசத்திரம்.
அடிசிற்புறம் - உணவுக்காக விட்ட இறையிலி நிலம்.
அடிச்சிற்றளி - மடைப்பள்ளி.
அடிச்சால் - உழவின் முதற்சால்.
அடிச்சி - அடிமைப் பெண் : அடியவள்.


அடிச்சீப்பு - வாழைக் குலையின் அடிச்சீப்பு.
அடிச்சுவடு - காலடிச் சுவடு.
அடிசூடு - பாதத்தில் உறைக்கும் வெப்பம்.
அடிச்செருப்பாதல் - அடிமைப்பட்டு உழைத்தல்.
அடிச்சேரி - பணியாளர் குடியிருப்பு : நகர எல்லையில் இருக்கும் ஊர்.


அடிச்சேரியாள் - குச்சுக்காரி : ஒழுக்கம் பிழைத்தவள்.
அடிஞானம் - அருள் ஞானம் : சிவ ஞானம்.
அடிதடி - சண்டை : அடிதண்டம்.
அடிதண்டம், பிடிதண்டம் - முழுமையாக வசப்பட்ட பொருள்.
அடிதண்டா - மண்வெட்டி : கதவை இறுக்கும் நீண்ட தாழ்.


அடிதலை தடுமாற்றம் - முதல் முடிவு தெரியாது தடுமாறுதல் : முன் பின்னறியாது விழித்தல்.
அடிதிரும்புதல் - பொழுது சாய்தல்.
அடித்தடம் - அடிச்சுவடு.
அடித்தாறு - உள்ளங்கால் இரேகை.
அடித்தலம் - கீழிடம் : அத்திவாரம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா on Mon Feb 01, 2010 11:17 pm

அடித்தளம் - அடிவரிசை : அடிமட்டம்.
அடித்தி - வியாபாரப் பிரதிநிதி : அடியவள்.
அடித்திப்பை - ஆதாரம்.
அடித்தி வியாபாரம் - மொத்த வணிகம்.
அடித்துகளாற்றல் - காலைச் சுத்தஞ் செய்தல் : விருந்தோம்பும் முறையில் ஒன்று : கால் கழுவ நீர் உதவுதல் : துகளவித்தல்.


அடித்தாறு - மரத்தின் அடிக்கட்டை.
அடித்தொழில் - குற்றேவல்.
அடித்தோழி - தலைமைத் தோழி.
அடிநகர்த்தல் - இடம் விட்டுப் பெயர்தல்.
அடிநாள் - முதல் நாள் : ஆதிகாலம்.


அடிநிலை - மரவடி.
அடிநிழலார் - குடிகள்.
அடிநீறு - பாதத்தூளி.
அடிபடுதல் - பழமையாதல் : தாக்குண்ணுதல் : நீக்கப்படுதல் : வழங்குதல் : எட்டுதல்.
அடிபறிதல் - வேரோடு பெயர்தல்.


அடிபாடு - மாடு முதலியவற்றின் உழைப்பு.
அடிபார்த்தல் - நிழல் அளந்து பொழுது குறித்தல்.
அடிபிடி - சண்டை.
அடிபிழைத்தல் - நெறி தவறி நடத்தல் : பெரியோர்கட்குத் தவறு செய்தல்.
அடிபிறக்கிடுதல் - பின்வாங்குதல்.


அடிபுதையரணம் - செருப்பு : தொடுதோல்.
அடிபெயர்த்தல் - காலெடுத்து வைத்தல்.
அடிப்படுதல் - அடிச்சுவடுபடுதல் : கீழ்ப்படுதல் : பழகுதல்.
அடிப்படுத்தல் - நிலைபெறச் செய்தல்.
அடிப்படை - சுவரின் அடித்தளம் : ஆதாரம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா on Mon Feb 01, 2010 11:17 pm

அடிப்பட்டசான்றோர் - பூர்வீகமான புலவர்.
அடிப்பட்ட வழக்கு - பழைமையாக வரும் வழக்கு.
அடிப்பட்டு - ஆதிநாள் தொடங்கி : வழிமுறையாய்.
அடிப்பணி - குற்றேவல்.
அடிப்பந்தி - உண்போரின் முதல் வரிசை : முதற்பந்தி.


அடிப்பலன் - முதற்பலன்.
அடிப்பற்றுதல் - தீந்துபோதல் : திருவடியைப் பற்றுதல்.
அடிப்பாடு - அடிச்சுவடு : அடிப்பட்ட வழி : பகுதி : வரன்முறை : வழக்கம் : உறுதியான நிலை.
அடிப்பாய்தல் - தாவிக் குதித்தல்.
அடிப்பாரம் - அடிக்கனம் : அத்திபாரம்.


அடிப்பிச்சை - பிச்சைக்குப் போகும் போது கலத்தில் இட்டுக் கொள்ளும் பொருள் : சிறு மூலதனம்.
அடிப்பிடித்தல் - பின் தொடர்தல் : முதலில் இருந்து தொடங்குதல்.
அடிப்பிரதட்சணம் - அடி அடியாகச் சென்று வலம் வருகை.
அடிப்பினை - வங்கமணம் : வங்கம்.
அடிப்பெருங் கடவுள் - எல்லாவற்றிற்கும் மூலமான கடவுள்.


அடிப்போடுதல் - தொடங்குதல்.
அடிமடி - ஆடையின் உள்மடிப்பு.
அடிமடை - முதல் மடை.
அடிமணை - ஆதாரம் : அடிமணைத் தட்டு : படகின் உட்பலகை : வண்டியினுட்டைத்த பலகை : கால் வைக்கும் பலகை.
அடிமண் - கீழ்மண் : சூனியத்திற்கென்றெடுக்கும் காலில் ஒட்டிய மண்.


அடிமயக்கு - அடிமயங்குதல்.
அடிமறி மண்டிலம் - அகவற்பா வகையுள் ஒன்று.
அடிமறிமாற்று - பொருள்கோள் எட்டினுள் ஒன்று.
அடிமனை - சுற்றுச் சுவர்.
அடிமரம் - கிளைக்கும் வேருக்கும் இடைப்பட்ட மரத்தின் பாகம் : கோழரை : பொருட்டரை : பொரியாரை :
முன்னரை என நான்கு வகைப்படும்.


அடிமாடு - கொல்லுதற்குரிய மாடு.
அடிமாண்டுபோதல் - அறவே ஒழிதல்.
அடிமுடி - தலைமுதல் கால் வரை.
அடிமுன்றானை - சேலையின் உள் முகப்பு.
அடிமை - தொண்டுபடுந்தன்மை : தொண்டன்.


அடிமையோலை - அடிமைப் பத்திரம்.
அடிமோனைத்தொடை - அடிகள் தோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது.
அடியடியாக - தலைமுறை தலைமுறையாக.
அடியம் - அடியேம்.
அடியந்திரம், அடியேந்திரம் - திருமணம் முதலிய விசேடம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா on Mon Feb 01, 2010 11:17 pm

அடியரேங்கள் - அடியேமாகிய நாங்கள்.
அடியல் - சொரியல் : கதிரடித்தல் : அடியாதே : சூடடித்தல்.
அடியறிதல் - மூலகாரணந் தெரிதல்.
அடியறுக்கி - மட்கலம் அறுக்குங் கருவி.
அடியறுத்தல் - மூலத்தோடு நீக்குதல்.


அடியனாதி - தொன்றுதொட்டுள்ள காலம்.
அடியாட்டி - அடியாள்.
அடியார் - தொண்டர்.
அடியிடுதல் - தொடங்குதல்.
அடியிலேயுறைதல் - வழிபடுதல்.


அடியீடு - தொடக்கம் : அடியிடுதல் : நடத்தல் : காலில் தூவப்படும் அறுகு முதலியன : அடியுறை.
அடியுணி - அடிபட்டவன்.
அடியுள் - அந்நிலையில் : உடனே.
அடியுறை - பாதகாணிக்கை : வழிபட்டுறைகை : ஒரு வணக்க மொழி : பன்னீருயிரும் பதினெட்டு மெய்யுமாகிய முதலெழுத்து.
அடியொட்டி - உள்ளங்காலைப் பிடித்துக் கொண்டு செல்ல வொட்டாமல் செய்யும் கருவி.

அடியொத்த காலம் - நடுப்பகல்.
அடியொற்றுதல் - பின்பற்றுதல்.
அடிவட்டம் - பாத அளவு : நாகசுரத்தின் அடிப்பூண்.
அடிவரையறை - பழைய வரலாறு : அடி எல்லை: அடிக்கட்டுப்பாடு : அடிக்கணக்கு.
அடிவாரம் - மலைச்சாரல்.


அடிவானம் - கீழ்வானம் : அஸ்திவாரம்.
அடிவிள்ளுதல் - அடிவிரிதல் : பாத்திரத்தின் அடி பழுதாதல்.
அடிவினை - ஆடையொலிக்கை.
அடிவீழ்ச்சி - வணங்குதல்.
அடிவைத்தல் - தொடங்குதல் : தலையிடல் : நடக்கத் தொடங்குதல் : நுழைதல் : புகுதல்.


அடுகலன் - சமையல் ஏனம்.
அடுகளம் - போர்க்களம்.
அடுகுறல் - கொல்லுதல்.
அடுகைமனை - மடைப்பள்ளி.
அடுக்கடுக்காய் - வரிசை வரிசையாய்.


அடுக்கம் - செறிவு : சோலை : பக்க மலை : வரிசை : படுக்கை : பாறை : மலைச்சாரல்.
அடுக்கல் - ஒன்றின் மேல் ஒன்று ஏற்றல் : பலவாதல் : மலை.
அடுக்களை - மடைப்பள்ளி.
அடுக்கான கன்னி - அழகும்,குணமும் நிறைந்தவள் : பவளப் புற்றுப் பாஷாயணம்.
அடுக்கு - வரிசை : அடுக்குக் கலம் : செழிப்பு நிலை.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா on Mon Feb 01, 2010 11:18 pm

அடுக்குக்குலைதல் - நிலையழிதல்.
அடுக்குப் பாத்திரம் - ஒன்றனுள் ஒன்று அடங்கி அடுக்காக உள்ள பாத்திரம்.
அடுக்கு மெத்தை - ஒன்றன்மேலொன்றான உப்பரிகை : அடுக்காயுள்ள பஞ்சணை.
அடுங்குன்றம் - யானை.
அடுசில் - அடிசில்.


அடுதல் - காய்ச்சுதல் : சமைத்தல் : கடைதல் : மேற்கொள்ளல் : வெல்லுதல் :
தடுத்தல் : குற்றுதல் : கொல்லல் : போரிடுதல் : வருத்துதல்.
அடுத்தல் - மேன்மேல் வருதல் : ஏற்றதாதல் : சார்தல் : சேர்த்தல்.
அடுத்துணல் - பலகாலும் நுகர்தல்.
அடுநறா - காய்ச்சிய சாராயம்.
அடுநிலை - கொன்ற நிலை.


அடுபுணை - கடக்குந் தெப்பம்.
அடுபோர் - வெல்லும் போர்.
அடுப்பது - பொருந்துவது : தக்கது : அடுத்தல் : பொருத்தமான செயல் : கிடைப்பது.
அடுப்பம் - களம் : நெருங்கிய உறவு.
அடுப்பல் - சேர்த்துவேள்.


அடுப்பு - நெருப்பிடும் அடுப்பு : பரணிமீன்.
அடும்பு - அடம்பு : அடுப்பங்கொடி : ஒரு பூ : அடப்பங்கொடி.
அடைகல் - கம்மப்பட்டடை : மதகடைக்கும் கல்.
அடைகாத்தல் - கோழி அடைகாத்தல்.
அடை - அடைக்கலம் : சொல்லைச் சிறப்பிக்கும் சொல் : அப்ப வருக்கம் : பொருந்துகை :
முனை : தண்ணடை : அடைகிடத்தல் : இலை : உவமை : கோதுமை : சேரென்னேவல் :
தோசை : நிலவிறை : கீரைக்கறி : சும்மாடு : அடுத்தல் : கையடை : அடைகுறடு :
வயல் : ஊர் : உருவம்.


அடைகாய் - ஊறுகாய் : வெற்றிலை : பாக்கு.
அடைகுடி - சார்ந்த குடும்பம்.
அடைகுளம் - பாய்தல் இல்லாத குளம்.
அடைக்கலம் - புகலிடம் : அடைக்கலப் பொருள்.
அடைசல் - பொருள் நெருக்கம்.


அடைசீலை - பாளச்சீலை.
அடைசுதல் - ஒதுங்குதல் : செருகல் : நெருங்குதல் : சேர்தல் : உடுத்தல் : புதைத்தல்.
அடைதூண் - கடைதறி.
அடைத்தது - இட்ட கட்டளை.
அடைத்தல் - அமைக்கப்படுதல் : சாத்துகல் : சிறை வைத்தல் : புகுத்தல்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா on Mon Feb 01, 2010 11:18 pm

அடைபு - சேர்ந்து.
அடைப்பம் - நாவிதன் கருவிப்பை : வெற்றிலை கைப்பை.
அடைப்பகம் - சிறைச்சாலை.
அடைப்பான் - மூடும் பொருள் : கால் நடை : நோய் வகை.
அடைப்புக்குறிகள் - ( ) இவ்வாறு இடப்படுங் குறிகள்.


அடைப்பை - வெற்றிலை பாக்குப் பை.
அடைமண் - வண்டல் மண்.
அடைமதிற்படிதல் - முற்றுகையிடுதல்.
அடைமழை - விடாமழை.
அடைமானம் - ஈடு.


அடைமொழி - விசேடணம் : சிறப்புச் சொல்.
அடைய - முழுவடும் சேர.
அடையடிமை - விலைக்குப் பெற்ற அடிமையாள்.
அடையலர், அடையார் - பகைவர்.
அடையாண்கிளவி - அடையாளச் சொல்.


அடையாளம் - அறிகுறி.
அடையோலை - அடைமானப் பத்திரம்.
அடைவு - அடைதல் : சேர்தல் : முறை : ஏது : எல்லாம் : ஈடாகக் கொடுக்கும் பொருள்.
அட்சதை - மங்கலவரிசி.
அட்சயபாத்திரம் - ஐயமேற்குங்கலம் : குறையாத உணவுக் கலம்.


அட்சயம் - கேடின்மை.
அட்சயன் - கடவுள் : இறைவன் : பகவான் : அமரன் : அழிவற்றவன்.
அட்சி - கண்.
அட்டகம் - வசம்பு.
அட்டகருமக்கரு - மாயவித்தைக் கூட்டுச் சரக்குகள்.


அட்டகாசம் - பெருநகை.
அட்டணை - குறுக்க : மடித்தல்.
அட்டணைக்கால் - கால்மேலிடுங்கால் : அட்டணங்கால்.
அட்டமாசித்தி - அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம்,
ஈரத்துவம், வசித்துவம் என்ற எண்வகைச் சித்திகள்.
அட்டம் - எட்டு : அருகிடம் : மேல் : வீடு : குறுக்கு : சாதிக்காய்.


அட்டரக்கு - உருக்கிய அரக்கு.
அட்டவணை - வரிசைக் குறிப்பு.
அட்டவன் - அழித்தவன்.
அட்டவீரட்டம் - அதிகை, கடவூர், கோவூர், வழுவூர் முதலிய எட்டு வீராட்டானப் பதிகள்.
அட்டாணி - கோட்டை மதில் மேல் மண்டபம்.


அட்டாதுட்டி - தாறுமாறு : குறும்பு.
அட்டாலகம் - கோட்டை மதில் மேலுள்ள காவற் கூடம்.
அட்டாலை - பரண் : அட்டாளை : காவற்காரன்.
அட்டாவதானம் - ஒரே காலத்தில் வேறு வேறான எட்டுப் பொருள்களிற் கவனஞ் செலுத்துகை.
அட்டி - தடை : தாழ்த்தல் : இட்டு.


அட்டிகை - கழுத்தணி.
அட்டிலம் - வீக்கம்.
அட்டில் - சமையல் அறை.
அட்டு - பனாட்டு : சமைத்தது.
அட்டுதல் - வார்த்தல் : குற்றுதல் : இடுதல் : வடிதல்.


அட்டுப்பு - காச்சப்பெற்ற உப்பு.
அட்டூழியம் - தீம்பு.
அட்டை - நீர்வாழ் உயிர்களில் ஒன்று : மேலுறை.
அட்டோலகம் - ஆடம்பரம்.
அணங்கயர்தல் - விழாக் கொண்டாடுதல்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா on Mon Feb 01, 2010 11:19 pm

அணங்காடல் - வெறியாடல்.
அணங்கியோன் - வருத்தியவன்.
அணங்கு - வருத்தம் : அச்சம் : ஆசை : மோகினி நோய் : அழகு : பெண் :
பேய் மகள் : தேவர்க்காடுங் கூத்து : கொல்லிப் பாவை : தெய்வத் தன்மை.
அணங்குடையாட்டி - தெய்வவெறி கொண்டு ஆடுபவன் : அணங்குறைவாள்.
அணங்குதல் - வருந்துதல் : இறந்துபடுதல் : பின்னி வளர்த்தல் : பொருந்துதல் : வருத்துதல் : ஒலித்தல்.


அணத்தல் - கூடுதல் : தலையெடுத்தல்.
அணந்து - அண்ணாந்து : மேல் நிமிர்ந்து.
அணரி - அண்ணம்.
அணரிடுதல் - கொக்கரித்தல்.
அணர் - மேல்வாய்ப்புறம்.


அணர்தல் - மேல்நோக்கி யெழுதல்.
அணல் - கழுத்து : கீழ்வாய் : மிடறு : தாடி : அலைதாடி : மேல்வாய்ப்புறம்.
அணவல் - கிட்டல் : புல்லுதல் : மேலெழுதல்.
அணவன் - பொருந்தினவன் : தக்கவன்.
அணவால் - அண்ணாத்தல் : மேலே நோக்குதல் : சேர்தல் : மேலெடுத்தல் : தூக்குதல்.


அணவி - நெருங்கி : பொருந்தி : திளைத்து : கலந்து : பொருந்தியவள்.
அணவு - நடு.
அணற்காளை - தாடியையுடைய வீரன்.
அணன் - பொருந்தியவன்.
அணாப்புதல் - ஏய்த்தல்.


அணார் - கழுத்து.
அணி - அணிகலம் : அலங்காரம் : அழகு : வேடம் : கோலம் : அண்மை :
படைவகுப்பு : கூட்டம் : பெருமை : ஒழுங்கு : (ஓர் உவம உருபு : ஓர் இலக்கணம்).
அணிஅயர்ப - அணிகளை அணிவார்.
அணிகம் - ஊர்தி : அணிகலம்.
அணிகலச் செப்பு - ஆபரணப் பெட்டி.


அணிகலம் - நகை : ஆபரணம்
அணிஞ்சில் - அழிஞ்சில் : கொடிவேலி : சிற்றாமுட்டி : நொச்சி : முள்ளி ஒரு மரம்.
அணிதல் - பூணல் : அலங்கரித்தல்.
அணிநிற்ப - திரண்டு நிற்ப.
அணிந்தன்று - அணிந்தது : அழகு செய்தது.


அணிந்துரை - பாயிரம்.
அணிமலை - திரண்ட மலை.
அணிமா - அணுவளவாகச் சுருங்கும் வன்மை : சித்திகள் எட்டனுள் ஒன்று.
அணிமை - அருகு : அண்மை : சமீபம் : பக்கம்.
அணியம் - படை வகுப்பு : கப்பலின் முன் பக்கம்.


அணியல் - அணிதல் : மாலை : வரிசை.
அணியவர் - அழகினையுடையவர்.
அணியியல் - அணியிலக்கணம்.
அணிலம், அணில் - அணிற்பிள்ளை.
அணில்வரிக்கொடுங்காய் - வெள்ளரிகாய்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா on Mon Feb 01, 2010 11:19 pm

அணில்வரியன் - வெள்ளரி வகை : வரிப்பலாப்பழம் : ஒருவகைப் பட்டு : முதுகில் வரியுள்ள பசு.
அணிவில் - பேரேடு.
அணிவிளக்குதல் - அலங்கரித்தல்.
அணுகலர், அணுகார் - பகைவர்.
அணு - நுண்மை : உயிர் : இனம் : சிறுமை : ஒரு வகைத் தானியம் : சூக்குமசத்திரூபம் :
நுண்ணுடல் : பேரணு : சிற்றணு : ஓர் அளவைப் பெயர்.


அணுகு - நெருங்கு.
அணுக்கத் தொண்டன் - அடுத்துப் பணி செய்வோன்.
அணுக்கம் - அணிமை.
அணுக்கன் - அணிமையில் இருப்பவன்.
அணுக்கன் திருவாயில் - கருப்பகிரக வாயில்.


அணுக்கு - அணிமை.
அணுசதாசிவர் - சாதாக்கிய தத்துவத்தில் இன்பம் அனுபவிக்கும் ஆன்மாக்கள்.
அணுத்துவம் - சிறுமை.
அணுமை - அணிமை.
அணை - இருக்கை : தலையணை : பஞ்சு மெத்தை : கரை : பாலம் : தறி : படுக்கை.


அணைதல் - சேர்தல் : புணர்தல் : சார்தல் : அவிதல்.
அணைப்பு - தழுவுகை : ஓர் உழவுச்சால் அளவு.
அணைப்புத்தூரம் - ஓர் உழவுச் சால் தூரம்.
அணையல் - தழுவல் : அடையல் : நெருங்கல் : நெருங்குக : நெருங்கற்க : வியக்கோள் வினை.
அணையார் - பகைவர்.


அண்கணாளன் - கண் முன்னே வந்து நிற்கும் தலைவன்.
அண்டகடாகம் - நிலவுருண்டையின் ஓடு.
அண்டகோசம் - அண்டகடாகம் : பீசப்பை.
அண்டகோளகை - அண்டவுருண்டை.
அண்டசம் - முட்டையிற் பிறப்பன.


அண்டபகிரண்டம் - நிலவுருண்டையும் அதன் புறத்த வானக் கோள்களும்.
அண்டபித்தி - அண்டச்சுவர்.
அண்டப் புரட்டன் - பெரு மோசக் காரன்.
அண்டம் - முட்டை : தலையோடு : உலகம் : வெளி : பீசம்.
அண்டயோனி - ஞாயிறு : முட்டையிற் பிறப்பது.


அண்டரண்டம் - பகிரண்டம்.
அண்டர் - வானோர் : இடையர் : பகைவர் : அண்டலர்.
அண்டல் - நெருங்குதல் : பகைத்தல்.
அண்டவாணன் - கடவுள் : தேவன் : இந்திரன் : போகி.
அண்டன் - கடவுள்.


அண்டா - பெரிய ஏனம்.
அண்டிகம் - செந்நாய்.
அண்டிரன் - ஆய் என்னும் வள்ளல்.
அண்டுதல் - நெருங்குதல்.
அண்டை - அருகிடம் : முட்டு : நீர் தூவுங் கருவி.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா on Mon Feb 01, 2010 11:19 pm

அண்ணணி - மிகவும் நெருக்கத்தில்.
அண்ணந்தாள் - தண்டனை வகை.
அண்ணம் - உண்ணாக்கு : மேல் வாய்.
அண்ணன் - தமையன்.
அண்ணல் - தமையன் : தலைமை : பெருமையிற் சிறந்தோன் : முல்லை நிலத் தலைவன் : மன்னன் : கடவுள்.


அண்ணா - அண்ணன் : தகப்பன் : உள்நாக்கு : திருவண்ணாமலை.
அண்ணாத்தல் - அங்காத்தல் : தலை நிமிர்தல்.
அண்ணாவி - ஆசிரியர்.
அண்ணார் - பகைவர்.
அண்ணி - அண்ணன் மனைவி : தாய்.


அண்ணித்தல் - இனித்தல் : அணுகியருள் புரிதல் : பொருந்துதல்.
அண்ணுதல் - சார்தல் : கிட்டுதல் : நெருங்குதல்.
அண்ணை - பேய்.
அண்பினார் - அண்டினவர்.
அண்பல் - மேல்வாய்ப்பல்.


அண்முதல் - கிட்டுதல்.
அதண்மை - சார்பு : சமீபம் : குறுமை.
அதகம் - மருந்து : சுக்கு.
அதகன் - வலிமையுள்ளவன்.
அதக்குதல் - கசக்குதல் : அடக்குதல்.


அதட்டம் - பாம்பின் கீழ்வாய்ப்பல்.
அதட்டுதல் - உறுக்குதல் : வெருட்டுதல் : ஒலித்து உரப்புதல்.
அதப்பு - மரியாதை.
அதமம் - கடைத்தரம்.
அதமாதமம் - மிகக் கீழ்மையானது.


அதம் - அழிவு : பள்ளம் : அத்திமரம்.
அதம்புதல் - அதட்டல் : உறுக்குதல் : உரப்புதல் : சினத்துக் கூறுதல் : கடுகடுத்தல்.
அதரபானம் - மகளிர் இதழ் சுவைக்கை. (நீர்)
அதரம் - கீழ் உதடு : உதடு.
அதரிகொள்ளுதல், அதரிதிரித்தல் - நெற்கதிரைக் கடாவிட்டுழக்குதல் : சூடடித்தல்.


அதரிடைச் செலவு - வீரர் கரை மீட்சிக்குப் புறப்படும் புறத்துறை.
அதர் - ஆட்டின் கழுத்துத் தாடி : நுண்மணல் : வழி : முறைமை : புழுதி : நீளக்கிடங்கு.
அதர்கோள் - வழிப்பறி.
அதர்படயாத்தல் - மொழி பெயர்த்தல்.
அதர்மம் - அறமில்லாத.


அதர்வணம் - நான்காவது மறை.
அதர்வை - வழி.
அதலகுதலம் - பெருங்குழப்பம்.
அதலம் - கீழேழ் உலகத்தொன்று : அத்திமரம் : பள்ளம் : பின்பு.
அதலன் - சிவபெருமான் : கடவுள் : இறை.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா on Mon Feb 01, 2010 11:20 pm

அதவம் - அத்தி : நெய்த்துடுப்பு.
அதவா - அல்லது.
அதவு - அத்தி : நெய் : பள்ளம் : படுகுழி.
அதவுதல் - கொல்லுதல் : எதிர்த்து நெருங்குதல்.
அதவை - கீழ்மகன் : அற்பன்.


அதழ் - இதழ்.
அதளி - குழப்பம்.
அதனை - நிலப்பீர்க்கு : புளியுருண்டை : வயல்வெளிக்காவற் குடிசை.
அதள் - தோல் : மரப்பட்டை.
அதறுதல் - உதிர்த்தல் : பதறுதல் : நடுங்குதல்.


அதற்கொண்டு - அக்காலந்தொடங்கி.
அதற்பட - அதன் கண்ணே பட.
அதனம் - மிகுதி.
அதன்தலை - அதன்பிறகு.
அதான்று - அதுவல்லாமலும்.


அதி - மிகுதி : சிறப்புப் பொருள் தரும் இடைச் சொல் : வலைச்சி.
அதிகடம் - பானை : மதவேழம் : களிறு : மாதங்கம்.
அதிகநாரி - கொடிவேலி : அதிபதுங்கி.
அதிகமாதம் - மூன்று ஆண்டுக்கொரு முறை அதிகப்பட்டு வரும் மாதம்.
அதிகம் - மிகுதி : உயர்ந்தது : இலாபம் : குருக்கத்தி.


அதிகன் - மேம்பட்டவன் : அதிகமான்.
அதிகரணம் - நூற்பொருட் கூறுபாடு.
அதிகரித்தல் - அதிகாரஞ் செலுத்துதல் : மிகுதல்.
அதிகர் - பெரியோர்.
அதிகாரம் - ஆட்சி : தலைமை : நூற் கூறுபாடு.


அதிகாரி - தலைவன்.
அதிகிருதர் - அதிகரித்தவர் : உயர்ந்தவர்.
அதிகுணன் - சிறந்த குணமுள்ளவன் : கடவுள்.
அதிக்கிரமம் - மீறுகை.
அதிங்கம் - அதிமதுரம் : குன்றி : மிக இனிமை.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா on Mon Feb 01, 2010 11:20 pm

அதவம் - அத்தி : நெய்த்துடுப்பு.
அதவா - அல்லது.
அதவு - அத்தி : நெய் : பள்ளம் : படுகுழி.
அதவுதல் - கொல்லுதல் : எதிர்த்து நெருங்குதல்.
அதவை - கீழ்மகன் : அற்பன்.


அதழ் - இதழ்.
அதளி - குழப்பம்.
அதனை - நிலப்பீர்க்கு : புளியுருண்டை : வயல்வெளிக்காவற் குடிசை.
அதள் - தோல் : மரப்பட்டை.
அதறுதல் - உதிர்த்தல் : பதறுதல் : நடுங்குதல்.


அதற்கொண்டு - அக்காலந்தொடங்கி.
அதற்பட - அதன் கண்ணே பட.
அதனம் - மிகுதி.
அதன்தலை - அதன்பிறகு.
அதான்று - அதுவல்லாமலும்.


அதி - மிகுதி : சிறப்புப் பொருள் தரும் இடைச் சொல் : வலைச்சி.
அதிகடம் - பானை : மதவேழம் : களிறு : மாதங்கம்.
அதிகநாரி - கொடிவேலி : அதிபதுங்கி.
அதிகமாதம் - மூன்று ஆண்டுக்கொரு முறை அதிகப்பட்டு வரும் மாதம்.
அதிகம் - மிகுதி : உயர்ந்தது : இலாபம் : குருக்கத்தி.


அதிகன் - மேம்பட்டவன் : அதிகமான்.
அதிகரணம் - நூற்பொருட் கூறுபாடு.
அதிகரித்தல் - அதிகாரஞ் செலுத்துதல் : மிகுதல்.
அதிகர் - பெரியோர்.
அதிகாரம் - ஆட்சி : தலைமை : நூற் கூறுபாடு.


அதிகாரி - தலைவன்.
அதிகிருதர் - அதிகரித்தவர் : உயர்ந்தவர்.
அதிகுணன் - சிறந்த குணமுள்ளவன் : கடவுள்.
அதிக்கிரமம் - மீறுகை.
அதிங்கம் - அதிமதுரம் : குன்றி : மிக இனிமை.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா on Mon Feb 01, 2010 11:20 pm

அதேயம் - கொடுக்கத் தகாதது : அரியது.
அதைப்பு - வீக்கம் : பெருமை : தாக்கி மீளல்.
அதைரியம் - திட்பமின்மை : அச்சம் :
அதோகதி - தாழ்நிலை : பாதலம் : நரகம்.
அதோமாயை - அசுத்த மாயை.


அதோமுகம் - கீழ்நோக்கிய முகம் : தலைகீழான நிலை : கடற்கழி முகம்.
அதோளி - அதோள் : அவ்விடம்.
அத்தக - அழகு பொருந்த.
அத்தகம் - ஆமணக்கு : கருஞ்சீரகம்.
அத்தகிரி - மேற்கு மலை.


அத்தங்கார் - அத்தை மகள்.
அத்தசாமம் - நள்ளிரவு.
அத்தம் - கண்ணாடி : கை : பொருள் : ஆண்டு : பாதி : ஒரு விண்மீன் : அருநெறி : காடு :
பாலை நிலம் : சிவப்பு : கதிரவன் மறையும் மலை.
அத்தவாளம் - மேலாடை : காடு.
அத்தன் - கடவுள் : குரு : தந்தை : மூத்தோன் : செல்வன் : உயர்ந்தோன்.


அத்தாட்சி - சான்று : அறிகுறி : திருட்டாந்தம்.
அத்தாணி - திருவோலக்க மண்டபம்.
அத்தாழம் - மாலைக்காலம்.
அத்தாளம் - இராச் சாப்பாடு.
அத்தி - ஒரு மரம் : எலும்பு : கொலை : யானை : பாதி : கடல் : இரப்போன் : உள்ளது :
அக்காள் : அத்தினாபுரி : ஆனை வணங்கி : அதவு : அத்தன்மையன் : கருவினை : திப்பிலி :
செய்யென்னேவல் : ஓர் அரசன் : தெய்வயானை : ஓர் நாடி : பெண்பால் விகுதி : நிகண்ட
வாத வழக்கு : ஆட்டனத்தி : சேரன் படைத் தலைவர்களில் ஒருவன்.


அத்திநத்தி - உண்டு இல்லை.
அத்திம்பேர் - அத்தை கணவன் : தமக்கை கணவன்.
அத்தியக்கம் - காண்டல் என்னும் அளவை.
அத்தியட்சன் - மேற்பார்வைக் காரன் : தலைவன்.
அத்தியந்தம் - மட்டற்றது.


அத்தியந்தாபாவம் - முழுதுமின்மை.
அத்தியயம் - அத்தியாயம் : அறிவு : ஆக்கினை : இக்கட்டு : ஒரு பொருளின் பேதத்தை
ஐயத்துளறிதல் : குற்றம் : சட்டம் : பொல்லாங்கு : மானம் : மீறுதல் : மிகுதல் : மிகை.
அத்தியயனம் - மறையோதுகை.
அத்தியாபகன் - மறையோதுவோன்.
அத்தியாகாரம் - அவாய் நிலையாய் வருவித்து முடித்தல்.


அத்தியாசம் - ஒன்றன் குணத்தை மற்றொன்றின் மேல் ஏற்றுகை.
அத்தியாயம் - நூற்கூறுபாடு : படலம் : சருக்கம்.
அத்தியாரோபம் - ஒன்றின் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுகை.
அத்தியாவசியம் - இன்றியமையாதது.
அத்தியாவாணிகம் - கணவன் வீட்டுக்குச் செல்லுங்கால் பெண் பெறும் சீதனம்.


அத்திரசத்திரம் - கைவிடு படை : கைவிடாப் படை.
அத்திரம் - அம்பு : நிலையின்மை : கழுதை : குதிரை : மலை : இலந்தை : கடுக்காய்ப்பூ.
அத்திரி - உலைத்துருத்தி : ஒட்டகம் : கோவேறு கழுதை : அம்பு : மலை : விண் : ஒரு முனிவர் : அற நூல்கள் பதினெட்டில் ஒன்று.
அத்தினி - பெண் யானை.
அத்து - இசைப்பு : தைத்தல் : அறைப் பட்டிகை : துவர் : சிவப்பு : செவ்வை : எல்லை (ஒரு சாரியை அசைச் சொல்.)


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 2 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை