புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெற்றான் சாம்பான் Poll_c10பெற்றான் சாம்பான் Poll_m10பெற்றான் சாம்பான் Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
பெற்றான் சாம்பான் Poll_c10பெற்றான் சாம்பான் Poll_m10பெற்றான் சாம்பான் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றான் சாம்பான் Poll_c10பெற்றான் சாம்பான் Poll_m10பெற்றான் சாம்பான் Poll_c10 
53 Posts - 60%
heezulia
பெற்றான் சாம்பான் Poll_c10பெற்றான் சாம்பான் Poll_m10பெற்றான் சாம்பான் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
பெற்றான் சாம்பான் Poll_c10பெற்றான் சாம்பான் Poll_m10பெற்றான் சாம்பான் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பெற்றான் சாம்பான் Poll_c10பெற்றான் சாம்பான் Poll_m10பெற்றான் சாம்பான் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றான் சாம்பான்


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Apr 05, 2024 5:26 pm



இப்போது நான் பெற்றான் சாம்பான் 6Ze1Voe
பெற்றான் சாம்பான் Ag2crYe

பெற்றான் சாம்பான் பற்றிக் கூறப்போகிறேன்

அநேகமாகப் பலருக்கு திருநாளைப்போவார் எனும் நந்தனாரைப்பற்றித் தெரியும் .
ஆனால் பெற்றான் சாம்பான் பற்றிஅதிகம் தெரியாது .
உமாபதி சிவம், தாழ்த்தப்பட்ட குலத்தி்ல் தோன்றிய பெற்றான் சாம்பான் என்பவருக்கு முத்தியளித்தார்.
பெற்றான் சாம்பான் நாள்தோறும் தில்லைத திருக்கோயிலுக்குன் திருவமுத்துக்கு சமையலுக்கு வேண்டிய விறகு வெட்டி்க்கொண்டு வந்து சேர்க்கும்பணியை சிவத்தொண்டாகக்கருதி செய்துவந்தார் .
அவரின் இந்தத்தொண்டு ஒரு அர்ப்பணிப்பு மனோநிலையில் ஒரு தவமாக நடைபெற்றது
இவரின் திருப்பணிகண்டு மகிழ்ந்த தில்லைக்கூத்தன், பெற்றான் சாம்பான் கனவில்தோன்றி, தில்லைவாழ் அந்தணர்களால் தீண்டத்தகாதவர் போல் ஒதுக்கிவைக்கப்பெற்ற உமாபதிசிவத்திற்கும் கொற்றவன் குடிக்கு விறகு கொண்டுபோய்க் கொடுக்கும்பணியினைச் செய்யும்படி கூறினார்.
அவரும் அவ்வாறே உமாபதி சிவத்தின் மடத்திற்கும் விறகுகொண்டுவந்து கொடுத்துவந்தார். ஆனால், உமாபதிசிவத்திற்கு இது தெரியாது
இவ்வாறு நிகழ்ந்துவரும் நாளில், ஒருநாள் கடும்மழை காரணமாக விறகு கொண்டுவரத் தடைஏற்பட்டது. அன்று விறகு வந்துசேரவில்லை. எனவே, மடத்தில் உணவுசமைக்கக் காலதாமதம் ஆனது.
அதற்குக்காரணம் என்ன என உமாபதி வினவ, மடத்திற்கு நாளும் விறகு கொண்டுவரும் சாம்பான் வரவில்லை என்றனர். அதைக்கேட்டு ஆச்சரியப்பட்ட உமாபதிசிவம், அவர் வந்ததும் தமக்குத் தெரிவிக்கும்படி கூறினார். மறுநாள் சாம்பன் மடத்திற்கு விறகு கொண்டுவந்தார்.
அவர் மடத்திற்கு வரும்முன் தில்லைக்கூத்தன் ஒரு பெரியவர் வடிவில் அவன்முன்தோன்றி, ஒருசீட்டினைச் சாம்பானிடம் கொடுத்து அதனை உமாபதிசிவத்திடம் கொடுக்கும்படி கூறினார்.
அவரும் அச்சீட்டை, விறகு கட்டுடன் கொண்டுவந்தார். அவர் வந்ததை அறிந்த சீடர்கள் இச்செய்தியை உமாபதிசிவத்திடம் கூறினர்.
அவரைக் கண்டு மகிழ்ந்த உமாபதிசிவத்திடம் சாம்பான், பெரியவர் கொடுத்த ஓலையைக் கொடுத்தார். அதனைப்பெற்ற உமாபதிசிவம், அவ்வோலையில் இருந்த செய்தியைக் கண்டு திகைப்படைந்து பேரானந்தம் அடைந்தார்.
இறைவனே எழுதி அனுப்பிய ஓலை அது. அந்தச்சீட்டில் இருந்த செய்தி:
“அடியார்க் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங்
குடியாற் கெழுதியகைச் சீட்டுப் – படியின்மிசைப்பெற்றான் சாம்பானுக்குப் பேதமற தீக்கைசெய்துமுத்தி கொடுக்க முறை”
என்று வெண்பா யாப்பில் பாடல் ஒன்று வரையப்பட்டிருந்தது.
இதன்பொருள்அடியவர்களுக்கு எல்லாம் எளியவனான சிற்றம்பலவன், கொற்றங்குடியார்க்கு- உமாபதி சிவத்துக்கு- எழுதியனுப்பிய சீட்டு. , இச்சீட்டினைக்கொண்டுவரும் பெற்றான் சாம்பானுக்கு, வேறுபாடு கருதாது சிவதீக்கைசெய்து, அவனுக்கு முறையாக முத்திகொடுக்க என்பதாம்.
இதன்படி பெற்றான் சாம்பானுக்கு உமாபதிசிவம் ஞானதீக்கை தொடங்கினார். அவர் படிக்காத பாமரனாக, தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவராயினும், பலன்கருதாது தொண்டுப்பணியால் அவர் வீடுபேறு எய்துதற்கு உரியபக்குவத்தினைப் பெற்றிருந்தார்.
அவருக்கு முறையாக அருள்பூசைகள் செய்தவுடன் அவர் முத்திஅடைந்தார்;
அதாவது, ஒளிப்பிழம்பாகத் தீத்தோன்றி, அவ்வொளிப்பிழம்பினுள் அனைவரும் பார்க்கப் பெற்றான் சாம்பான் மறைந்துபோனார்.
செய்தி காட்டுத் தீ போல ஊர் எங்கும் பரவியது.
சாம்பானின் மனைவியால் இதை நம்ப முடியவில்லை. அரசனிடம் சென்று தன் கணவரை மடத்தில் உள்ளவர்கள் கொலை செய்து விட்டனர் என்று முறையிட்டாள்.
அரசனும் உடனே நடந்ததை அறிய தகுந்த அதிகாரிகளை அனுப்பினான்.
அவர்கள் நடந்ததை உணர்ந்து உமாபதி சிவாசாரியரின் நயன தீக்ஷையால் சாம்பான் ஒளி உருவில் சிதாகாசத்தில் கலந்ததைக் கூறினர்.
அரசன் பெரிதும் வியப்புற்றான்.தானே நேராக கொற்றங்குடிக்கு வருகை செய்தான்.
சிவத்திடம், தனது முன்னால் இன்னும் யாரேனும் ஒருவருக்கு முக்தி அளிக்கப் பணித்தான்.
சிவாசாரியரோ, ‘நல்ல பக்குவம் வாய்ந்த ஒருவருக்கே முக்தி அளிக்க முடியும்’ என்றார்.பின்னர் இப்படி வேண்டுவது அரசன் என்பதால் தன் பார்வையை நாலா பக்கமும் செலுத்தினார்.
அங்கு சிவம் தினசரி லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த போது அந்த நீர் வழிந்தோடி வந்து, அந்த நீர் மூலம் வளர்ந்த ஒரு முள்ளிச் செடி அவர் கண்களில் பட்டது.
அது நல்ல பக்குவ நிலையில் இருப்பதை உணர்ந்த சிவம் அதன் மீது நயன தீக்ஷையத் தர அது உடனே ஒளி உருவமாகி சிதாகாசத்தில் கரைந்தது.அரசன் இதைப் பார்த்து பிரமித்தான்.
இது ஒரு கண்கட்டு வித்தையோ என நினைத்தான்.“நீவீர் நடராஜரின் ஓலை பெற்று இப்படி செய்ததாகக் கூறுகிறீர். நடராஜர் என்ன சொல்கிறார் என்பதை அவரிடமே கேட்டு விடுவோம்” என்றான் அரசன்.
அனைவரும் நடராஜரிடம் சென்று பூஜை செய்து கற்பூர ஆரத்தியைக் காட்டினர்.அங்கே நடராஜருக்கு இரு புறமும் சாம்பானும் முள்ளிச் செடியும் தோற்றமளிக்க அனைவரும் விக்கித்துப் போயினர்.சிவாசாரியரின் அடி பணிந்து அனைவரும் மன்னிப்புக் கேட்டனர். அரசன் சாம்பானின் மனைவிக்கு தகுந்த நிலம் முதலியவற்றைக் கொடுத்து அவள் வாழ்வதற்கான வகையைச் செய்தான்.இந்தச் சம்பவம் உலகிற்கு ஒரு பெரிய உண்மையை அளித்தது. கேவலம், மனிதப் பிறவி பெற்றவர்கள் மட்டுமே முக்திக்கான அருகதை பெற்றவர்கள் அல்லர்; புல்லும் பூடும் மிருகங்களும் கூட முக்தி பெற அருகதை பெற்றவர்கள் என்பதே அந்த உண்மை.
இந்த வரலாறு முழுவதையும் புலவர்களைப் பற்றிக் கூறும் பழைய நூலான புலவர் புராணத்திலும், லெட்டர்ஸ் ஃப்ரம் ரமணாசிரமம் (Letters From Ramanasramam) என்ற ஆங்கில நூலிலும், தருமபுர ஆதீன வெளியீட்டிலும் காணலாம். மேலும் சில இணையதளத்திலும் விரிவாக இந்த செய்திகள் கிடைக்கிறது
கொள்ளிடக்கரையில் ஆதனூரில் பிறந்த ,வைத்தீஸ்வரன் கோயில் அருகே உள்ள திருப்புங்கூர் ல் நந்தி விலக நசிவனைத்தரிசித்த நந்தனார் தில்லையில் வந்து முக்தி அடைந்த கதை மிக பரவலாக தமிழ் மக்களால் அறியப்பட்டுள்ளது .
நந்தனாரின் பெயரால் ஒரு தங்குமிட வசதியுடன் கூடிய உயர்நிலை பள்ளியும் சிதம்பரத்தில் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது .
ஆனால் ஏனோ பெற்றான் சாம்பானுக்கு மக்களிடையே அதிக அறிமுகம் கிடைக்கவில்லை
நான் இந்த உமாபதி சிவம் பெற்றான் சாம்பான் வரலாறுகளைக்கூற க்காரணம் நம்மிடம் நிலவும் சில வரலாறுகளை பலரும் அறி யச் செய்வதற்க்கு தான்
.சில ஆண்டுகளுக்கு முன் நந்தனார் தில்லையில் புகுந்த தெற்கு வாசல் கோபுரம் அண்மையில் உள்ள தற்போது ஓமக்குளம் என்று வழங்கப்படும் அப்போது ஹோமம் நடந்ததாகக்கூறப்படும் அந்தக்குளத்தில் அகழ்வாயவு முனைவர்சத்தியமூர்த்திஅவ ர்களால் நடத்தப்பெற்று
சில சான்றுகளும் அங்கே கிடைத்ததாக படித்தேன் .
தில்லையில் திருஅண்ணாமலையிலும் அமைந்துள்ள மடங்களையும் சத்திரங்களில் பல தொன்மை வரலாறுகள் காத்திருக்கின்றன .
நான் திருபு வாதி அல்ல ஆனால் தமிழ் பற்றும் ,இறைப்பற்றும் ஒருங்கே உள்ளவன் .
சித்தர்களால் வளர்ந்த மொழி இது
நமது தமிழ் தெய்வத்தமிழ்! .இறையுடன் இணைந்தது .சேர்ந்தே வளர்ந்தது .!
அண்ணாமலை சுகுமாரன் 29/4/2021Repost 3/4/2024
படம் நன்றி தினமணி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 06, 2024 1:32 pm

பெற்றான் சாம்பானின் மனைவி அரசினிடம் முறையிட்டபோது கூறியதே உண்மை ! ‘சோதியிலே கலந்தார்’ என்று வரும் இடங்களில் எல்லாம் கொலைதான் நடந்துள்ளது !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக