புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_m10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10 
17 Posts - 55%
heezulia
தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_m10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10 
12 Posts - 39%
T.N.Balasubramanian
தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_m10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10 
1 Post - 3%
rajuselvam
தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_m10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_m10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10 
295 Posts - 45%
ayyasamy ram
தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_m10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10 
279 Posts - 43%
mohamed nizamudeen
தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_m10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_m10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10 
17 Posts - 3%
prajai
தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_m10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_m10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10 
9 Posts - 1%
Jenila
தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_m10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_m10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_m10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10 
4 Posts - 1%
jairam
தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_m10தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 21, 2023 4:38 pm


தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  IXv6Mtb

புற்றுநோய்க்கான சிகிச்சையில் மருந்துச் செலவு மிக மிக அதிகம் என்பதால் பலரும் அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ளனர். இந்த விஷயத்தில், இந்தியா ஒரு தனித்துவமான சிக்கலையும் சந்திக்கிறது

குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் (ICMR), உலக சுகாதார நிறுவனமும் இணைந்து கடந்த ஆண்டில் மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவை, மத்திய - மாநில அரசுகள் சாதாரணமாகக் கடந்து போக முடியாது. அந்த அளவுக்கு அரசுகளைக் கண் விழிக்கச் செய்திருக்கிறது அந்த ஆய்வு தந்திருக்கும் ஒரு புள்ளிவிவரம்.

இந்தியாவின் 26 மாநிலங்களையும், 4 யூனியன் பிரதேசங்களையும் தேர்வு செய்து, அங்கு வாழும் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு என்னென்ன புற்றுநோய்கள் எந்த அளவில் வருகின்றன என்பதில் தொடங்கி நடந்தது இந்த ஆய்வு. சிகிச்சை விவரங்கள், சிகிச்சையின் பலன்கள், சிகிச்சை கொடுத்த மருத்துவமனையின் கட்டமைப்பு, அங்கு புழக்கத்தில் இருக்கும் சேவை விவரங்கள் வரை பல்வேறு விஷயங்களை இதுவரை இல்லாத வகையில் ஆய்வு செய்தார்கள்.

137 மூன்றாம்நிலைப் பராமரிப்பு (Tertiary care) மருத்துவமனைகளிலும், 92 இரண்டாம் நிலைப் பராமரிப்பு (Secondary care) மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சைக்காகப் பதிவு செய்யப்பட்ட குழந்தைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனர். அதன் முடிவை ‘National centre for disease informatics and research - NCDIR’ வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதிலும் 75,000 குழந்தைகள் ஆண்டுதோறும் புதிதாக ஏதேனும் ஒரு வகை புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இது உலக அளவில் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் எண்ணிக்கையில் 20%. ‘மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது புதுடெல்லியில்தான் குழந்தைப் பருவ புற்றுநோய் பாதிப்பு அதிகம்' என்கிறது அந்த அறிக்கை. மேலும், இதில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்பதுதான் நம் கவலையை இன்னும் அதிகரிக்கிறது.

தடைகள் என்னென்ன?


இந்தியாவில், குழந்தைப் பருவ புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கணிப்பதிலும், அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதிலும் உள்ள தடைகளையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. நாள்பட்ட காய்ச்சல், உடல் வலி, எலும்பு வலி, உடல் எடை குறைவது, கடுமையான சோர்வு, கட்டிகள், சில்லுமூக்கு போன்ற ரத்தக்கசிவுகள் ஆகியவை குழந்தைகள் புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகள். இவை சில சாதாரண தொற்றுநோய்களுக்கும் பொருந்தும் என்பதால், இவற்றைப் புற்றுநோய் அறிகுறிகளாக எடுத்துக் கொள்வதில் பொதுநல மருத்துவர்களுக்கே பல நேரங்களில் சந்தேகம் வருவதுண்டு. அதனால், புற்றுநோயை ஆரம்பநிலையில் மருத்துவர்களே கவனிக்கத் தவறி விடுகின்றனர் என்கிறது அந்த அறிக்கை.

பெரியவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் வகைகளோடு ஒப்பிடும்போது, குழந்தைப் பருவ புற்றுநோய்கள் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை மிக அதிகம் தாக்குகிறது. ‘புற்றுநோய் என்பது வயதானவர்களுக்கு வரும் நோய்' என்று இந்தியர்களின் பொதுப்புத்தியில் காலம் காலமாகப் புதைத்து வைக்கப்பட்டிருப்பதால், சாமானியப் பெற்றோர்கள் இந்த அறிகுறிகளை ஆரம்பத்தில் அலட்சியம் செய்துவிடுகின்றனர்.

வளர்ந்த மேற்கத்திய நாடுகளில் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் பரிசோதனைகள் காப்பீட்டுத் திட்டங்களில் அனைவருக்கும் கிடைப்பதாலும், மேம்பட்ட சிகிச்சைகள் தடையின்றிக் கிடைப்பதாலும், குழந்தைப் பருவ புற்றுநோய் பாதிப்பில் 20% பேர் மட்டுமே உயிரிழக்கின்றனர். இந்தியாவிலோ, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தாமதமாக சிகிச்சைக்கு வருவதாலும், அப்போது புற்றுநோய் அவர்கள் உடலுக்குள் பல பகுதிகளில் பரவிவிடு வதாலும், சிகிச்சை பலனின்றி 60% பேர் வரை உயிரிழக்கின்றனர்.

குறைவான பரிசோதனை வசதிகள்


இத்தனைக்கும் இன்றைய நவீன மருத்துவத்தில், குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்களுக்குக் காரணம் தெரிந்து, ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால் 80% வரை குணப்படுத்திவிட முடியும். ஆனால், அப்படிக் காரணம் தெரிவதிலும் நடைமுறைச் சிரமங்கள் இருக்கின்றன. சிலருக்கு சில வைரஸ் தொற்றுகள் காரணமாகின்றன. மற்றவர்களுக்கு தற்போதைய மேற்கத்திய உணவுமுறைகளும் நவீன வாழ்க்கை முறைகளும் காரணமாகலாம். அதேசமயம், இன்னும் தெரியாத காரணங்கள் பலவும் இருக்க வாய்ப்பு உண்டு. சுமார் 10% பேருக்கு மட்டுமே மரபு சார்ந்த காரணங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தக் காரணங்களைக் கண்டறிந்து, புற்றுநோய்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள குழந்தைகளுக்குச் சில பரிசோதனைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு. ‘நோய் முன்கணிப்புப் பரிசோதனைகள்’ (Screening Tests) என அழைக்கப்படும் இந்தப் பரிசோதனை களுக்கு ஆகும் செலவு மிக மிக அதிகம். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், தனியார் பொது மருத்துவமனைகளில்கூட இந்தப் பரிசோதனை வசதிகள் முழுமையாக இல்லை. குழந்தைப் பருவ புற்றுநோய்கள் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

சிகிச்சை பெறுவதில் சிரமங்கள்


புற்றுநோய்க்கான சிகிச்சையில் மருந்துச் செலவு மிக மிக அதிகம் என்பதால் பலரும் அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ளனர். இந்த விஷயத்தில், இந்தியா ஒரு தனித்துவமான சிக்கலையும் சந்திக்கிறது. தனியார் என்றாலும், அரசு சார்ந்தது என்றாலும், பெரும்பாலான தரமான புற்றுநோய் மருத்துவமனைகள் பெரு நகரங்களில்தான் இருக்கின்றன. புற்றுநோய் சிகிச்சையில் மருந்து சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை என இருவகை உண்டு. இந்தச் சிகிச்சைகள் சில வாரங்கள் முதல் சில வருடங்கள் வரை நீடிக்கும் தன்மையுள்ளவை. ஆகவே, அக்காலம் முழுவதும் குழந்தைகள் வெளி நோயாளியாகவோ, மருத்துவமனையில் தங்கியோ சிகிச்சை எடுக்க வேண்டியுள்ளது.

ஆனால், நாட்டில் பெரும்பாலான புற்றுநோய்க் குழந்தைகள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பெற்றோர் தினக்கூலிகளாக இருக்கின்றனர். ஆரம்ப சிகிச்சைக்காக அதிக தூரம் பயணிப்பதற்கும், தொடர் சிகிச்சைக்காகப் பலமுறை பயணிப்பதற்கும், நீண்ட காலம் நகர்ப்புற மருத்துவமனைகளில் தங்குவதற்கும் அவர்களின் பொருளாதாரம் இடம் கொடுப்பதில்லை. இந்த ஒட்டுமொத்த அனுபவமும் அந்தக் குடும்பங்களை மனச்சோர்வுக்கு உள்ளாக்குவதால், அவர்கள் அடிக்கடி சிகிச்சையைக் கைவிட்டுவிடுகின்றனர். இதனால், இந்தியாவில் குழந்தைப் பருவ புற்றுநோய்களுக்கு முழுமையாக சிகிச்சை அளிப்பதும் கடினமாகிறது.

அப்படியே அவர்கள் சிகிச்சை எடுக்க முன்வந்தாலும், இந்தியாவில் பல அரசு மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் இல்லாமலிருப்பதால், அவர்கள் தங்கும் இட வசதிக்கும் சிரமப்படுகின்றனர். இவ்வகையினர் நாட்டில் பல பகுதிகளில் நடைபாதைகளில் படுத்து உறங்கும் அவலத்தையும், அடிக்கடி மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் போதாமையையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அறிக்கை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

அரசுகள் செய்ய வேண்டியது என்ன?


பிரச்னை என்னவென்றால், இப்போதுள்ள தேசிய புற்றுநோய்த் திட்டங்கள் எல்லாமே பெரியவர்களுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு தொடர்பாகவே இருக்கின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சிகிச்சை பெற வழி செய்திருப்பதோடு, மத்திய அரசு தன்னுடைய கடமையை நிறுத்திக் கொள்கிறது. அதிகம் சென்றால், அயல்நாடு களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில புற்றுநோய் மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கிறது. இவைமட்டும் போதாது. தற்போது அதிகரித்து வரும் குழந்தைப் பருவ புற்றுநோய் பாதிப்புகளைச் சரியாக எதிர்கொள்ள, இதற்கென்றே தனியாக ஒரு செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும். போதுமான நிதி ஒதுக்கி, குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சைக்கென மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.

போதுமான குழந்தைநல புற்றுநோய் சிறப்பு மருத்துவர்களைப் (Paediatric Oncologists) பணியில் அமர்த்த வேண்டும். எல்லாப் பொதுநல மருத்துவர்களுக்கும், செவிலியர் உள்ளிட்ட துணைச் சுகாதாரப் பணியாளர்களுக்கும் தேவையான தொடர் கற்றல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம், குழந்தைகளைத் தாக்கும் புற்றுநோயை ஆரம்பநிலையிலேயே கணித்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய முடியும். பயனாளிகள் பெற்றோருடன் குறைந்தது தாலுகா அளவிலாவது மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ளக் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும். மொத்தத்தில், குழந்தைகள் என்பதாலேயே அவர்களின் உயிர் மலிவானதல்ல என்பதை அரசுகள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  1f4a5 இந்தியாவில் 100 புற்றுநோயாளிகளில் 4 பேர் குழந்தைகளாக இருக்கின்றனர்.

தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  1f4a5 குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் முக்கியமானவை ரத்தப் புற்றுநோய் (Leukemia), எலும்புப் புற்றுநோய், மூளைப் புற்றுநோய், நிணநீர்க்கட்டி புற்றுநோய் (Lymphomas).

தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  1f4a5 பெண்களைவிட ஆண் குழந்தைகளுக்கே புற்றுநோய் அபாயம் அதிகம்.

தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் புற்றுநோய்  1f4a5 புற்றுநோய் பாதித்த இந்தியக் குழந்தைகளில் 49% பேர், தங்களுக்குப் புற்றுநோய் இருப்பதையே அறியாமல் இருக்கின்றனர்.

டாக்டர் கு.கணேசன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக