ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 கண்ணன்

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன்

View previous topic View next topic Go down

கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன்

Post by சிவா on Sun Jan 24, 2010 2:31 pmசட்டத்தையும்நீதியையும் பணக்காரர்களால் சுலபமாக வளைக்க முடியும். அவர்களுக்குஅரசாங்கமும் துணை நிற்கும். அதே நேரத்தில், வலிமையானவர்களால்பாதிக்கப்படும் ஏழை எளியவர்களுக்கு யார் உதவுவது? அவர்களின் மனக்குமுறலைக் கேட்டு நியாயம் சொல்பவர் யார் என்று கேட்டால்-

""கொல்லங்குடியில்நானிருக்கிறேன். கஷ்டப்படுகிறவர்களும் நஷ்டப்பட்டவர்களும் பிணியால்வாடுபவர்களும் தூய உள்ளத்தோடு என்னை நாடிவந்து வணங்கினால் உடனடிப்பரிகாரம் கொடுப்பேன்'' என்று உலகத்துக்கே சொல்லிக் கொண்டிருக்கிறாள்வெட்டுடையாள் காளி.

தென்மாவட்ட வெள்ளந்தி மக்கள் உண்மையை உள்ளத்தில் ஏந்தி, தினம் தினம் வந்துகுவியும் ஆலயம்தான்- சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ளஅரியாகுறிச்சி கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் திருக்கோவிலாகும்.

கொல்லங்குடிபேருந்து நிறுத்தத்திலிருந்து தெற்கே பிரியும் கிளைச்சாலையில் இரண்டுகிலோமீட்டர் தூரம் சென்றால், தென்னந்தோப்பின் நடுவில் அமைந்துள்ளது இந்தக்காளியம்மன் கோவில்.

பலபெருமைகளைக் கொண்ட இத்திருக் கோவிலுக்குக் கூடுதல் சிறப்பாகத் தங்கத்தேர்உருவாக்கப்பட்டு, அதற் கான வெள்ளோட்ட விழா கடந்த மே மாதம் 28-ஆம் தேதிமிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதில்,இந்து அற நிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன், முன்னாள் தலைமை நீதிபதிஏ.ஆர். லட்சுமணன், முன்னாள் அமைச்சர் தென்னவன், காளையார் கோவில் சேர்மன்சத்தியநாதன், ராஜ்யசபை எம்.பி. சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

அறநிலையத்துறையின்கீழ் செயல்படும் சிவகங்கை மாவட்டக் கோவில்களிலேயே முதன் முதலில்தங்கத்தேர் உள்ள கோவிலாக கொல்லங்குடி கோவில் இடம் பெற்றுள்ளதுதனிச்சிறப்பாகும்.

கோவில்அறங்காவலர் குழுவினரில் ஒருவரான இரா. தட்சிணா மூர்த்தி, ""பிரபலமான பெண்தெய்வ ஆலயங்கள் அமைந்த மாவட்டம் சிவகங்கை. அதிலும் விசேஷமாக கொல்லங்குடிவெட்டுடை யாள் காளியம்மன் மிகவும் பிரசித்தி பெற்றவள். நம்பிவருபவர்களுக்குக் கருணைப் புன்னகை புரிவாள்; கெடுதல் நினைப்பவர்களுக்குஉடனடி தண்டனை தருவாள். இது வரை நான்குமுறை இக் கோவிலுக்குக் குடமுழுக்குமிகச் சிறப்பாகச் செய்யப் பட்டுள்ளது. அறநிலையத் துறையுடன் இணைந்துஇக்கோவிலுக்குத் தேவையான பணிகளைச் செய்து வருகிறோம். அதில் ஒன்றாகத்தான்ஒன்றரை கோடி ரூபாய் செலவில் இன்று சிறப்பாகத் தங்கத்தேர்உருவாக்கப்பட்டுள்ளது! அதுமட்டுமல்லாமல் விரைவில் இக்கோவிலுக்குத் தங்கக்கொடிமரம், தங்கக் குதிரை வாகனம், வெள்ளி சிம்ம வாகனம் போன்றவற்றைச்செய்வதற்கும் ஏற்பாடு செய்து வருகிறோம்'' என்றார்.

அறங்காவலர்குழுத் தலைவரான கதிரேசன் செட்டியாரின் மனைவி யும் புலவருமான கமலாவதிகதிரேசன், ""நகரத்தார் மக்கள் மிகவும் அஞ்சி நடுங்கி அர்ப்பணிப்புடன் சேவைசெய்யும் திருக்கோவில்களில் இந்த கொல்லங்குடி வெட்டுடையாள் காளிகோவிலுக்கு முதலிடம் உண்டு. நம்பிக்கைத் துரோகம், பித்தலாட்டம் செய்பவர்களை காளியாத்தாள் விடமாட்டாள். நீதி மன்றத்தில் கிடைக்காத நீதியை இந்தக்காளி தருவாள். நாட்டரசன்கோட்டையை கண்ணாத் தாளும், திருவெற்றியூரைபாகம்பிரியாளும் காத்தருள்வது மாதிரி, இந்த வட்டார மக்களை வெட்டுடையாள்காளிதான் காத்து வருகிறாள்'' என்றார்.

திருக்கோவிலின்செயல் அலுவலர் சா. ஜக நாதன், ""இது மிகச் சிறந்த பிரார்த்தனைத் தலம்.மேற்கு நோக்கி அருள்புரியும் இந்தக் காளி சத்தியத்தை நிலைநாட்டுவதில்குறிப்பாக இருப்பவள். தமிழ்நாட்டிலேயே காசு வெட்டிப் போட்டு நியாயம்கேட்டுப் பெறும் ஒரே இடம் இதுதான். இவ்வாறு சிறப்புடன் வீற்றிருந்துஅருள்பாலிக்கும் காளியம் மனுக்குத் தங்கத் தேர் செய்வதற்கு இக்கோவில்அறங்காவலர் குழுவும் பொதுமக்களும் தீர்மானம் செய்து, அது தமிழக அரசுக்குஅனுப்பப்பட்டது. அதை ஆமோதித்து தமிழக அரசும் சட்டசபையில் அறி வித்தது.கடந்த 29-9-2008-ல் மாண்புமிகு அறநிலையத் துறை அமைச்சரால் இதற்கானதிருப்பணி துவங் கப்பட்டது. மிக விரைவாக இத்திருப்பணியைச் செய்துமுடித்துள்ளோம். எல்லாம் அந்தக் காளியின் அருள்தான்'' என்றார்.

இந்தக்கோவிலில் குலவாளர் என்றழைக் கப்படும் வேளார்கள்தான் பல தலைமுறைகளாகஅர்ச்சகர்களாக இருந்து வருகிறார்கள். தற்போதுள்ள அர்ச்சகர்களான மூர்த்தி,புஷ்ப ராஜ், சந்திரன், சுகுமாரன், சேகர் ஆகியோர் கோவிலின் தலவரலாற்றைக்கூறினார்கள். ""இந்தக் காளியம்மன் கோவில் சுமார் 700 வருடங்கள் பழமையானது.ஆரம்பத்துல இங்கு காளிகோவில் இல்லை. ஈச்சங்காடும் காரைச் செடிகளும்முட்புதர்களும் பரவிக் கிடந்த இந்த நிலத்தில் அய்யனார் கோவில்தான்இருந்திருக்கிறது. மக்கள் யாரும் வந்து போகாத காட்டில் வேளார் குடும்பம்ஒன்று அய்ய னாரை வணங்கி வந்திருக்கிறது. அந்தக் குடும் பத்தின் ஆண்வாரிசுகள் இருவர். மூத்தவர் காரிவேளார். இளையவர் கருப்பவேளார். இருவரும்முறை போட்டு அய்யனாருக்குப் பூஜை செய்து வந்தனர்.

ஒருசந்தர்ப்பத்தில் காரிவேளார் கேரளா சென்று பேய், பிசாசு, பில்லி, சூன்யம்ஆகிய வற்றை அகற்றுவதற்குரிய மந்திர சக்திகளையும், தேவதைகளை அடக்கக்கூடியமாந்திரீக வித்தைகளையும் தெரிந்துகொண்டு திரும்பி வந்தார்.

தான்பயின்ற வித்தைகளை நடத்திக் காண்பிக்க சிறு தேவதைகளையும் துஷ்டதேவதைகளையும் ஏவல் கொண்டிருந்தார். இவர் பூஜை செய்துவரும் காலங்களில் அய்யனார் சந்நிதிக்கு முன்பு மணல் பரப்பில் சில அட்சரங்கள் எழுதப்பட்டிருந்தன.மணலில் எழுதப்பட்ட அந்த அட்சரங்கள் அழியாமல் அப்படியே இருப்பதைக் கண்டஅவர், அந்த அட்சரங்கள் யாவும் காளிக்குரியது என்பதை அறிந்து அங்குகாளியின் திருவுருவை பிரதிஷ்டை செய்தார். அவ்வாறு கோவில் கொண்டவளேவெட்டுடையாள் காளியம்மன். "வெட்டுடைய' என்ற பெயர் ஏன் வந்தது என்றால்இங்கு ஆதியிலிருந்த அய்யனார் ஈச்சங்காட்டிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டவர்என்பதால் அவருக்கு வெட்டுடைய அய்யனார் என்றும்; அவர் கோவிலுக்கு முன்புஉருவான காளி என்பதால் வெட்டுடைய காளி என்றும் பெயர் உருவாயிற்று.

இத்திருக்கோவிலுக்குள்அம்பிகையின் நேர் எதிரே அய்யனார் கிழக்கு நோக்கியும், அம்பி கையோ மேற்குநோக்கியும் அமர்ந்திருக்கிறார் கள். அய்யனாரை வழிபட்டும், காளியைப்பிரதிஷ்டை செய்து வழிபட்டும் வந்ததால், வேளார் சமூக மக்களாகிய நாங்களேஇங்கு பரம்பரை அர்ச்சகர்களாக இருந்து வருகி றோம். அறங்காவலர் குழுவிலும்எங்களுக்கு ஒரு பிரதிநிதித்துவம் உண்டு.

இங்குகாசு வெட்டிப் போட்டு நியாயம் கேட்க வருகின்ற பக்தர்கள் இருக்கிறார்கள்.அதே நேரத்தில் தப்பானவர்கள் காசு வெட்டிப் போட்டால், அது அவர்கள்மீதேபாய்ந்துவிடும்! நியாயமான கோரிக்கை உடனே பலிக்கும்.

இங்கு தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழி களிலும் பூஜைகள் செய்கிறோம். ஆகமம் தெரிந்தவர்களும் எங்களிடம் இருக்கிறார்கள்'' என்றனர்.

கொல்லங்குடிகாளி கோவிலின் பரம்பரை அர்ச்சகர்கள் புராண வகையில் தலவரலாறு சொன்னாலும்,சிவகங்கை பகுதி வரலாற்று ஆய்வாளர்களும் தமிழ் ஆய்வாளர்களும் வெட்டுடையாள் காளி கோவில் பற்றி ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக்கூறினர். ""ஆங்கிலேய அரசாங்கத் துக்கு எதிராகக் கலகம் செய்வதற்காகப் புரட்சிப் படையை உரு வாக்கிக் கொண்டிருந்த மருது சகோதரர்கள் சிவகங்கைப்பகுதியில் தீவிரமாகச் செயல் பட்டுக் கொண்டிருந்த னர். அவர்களைக்கொல்வதற்கு அலைந்த ஆங்கிலேயப் படையினர், ஒருமுறை மருது சகோதரர்களைத் தேடிகொல்லங்குடி வந்திருக் கின்றனர். அங்கு ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தஉடை யாள் என்ற தாழ்த்தப் பட்ட சமூகப் பெண்ணிடம் விசாரித்தனர். அவ ளுக்குமருது சகோதரர்கள் மறைந்திருக்கும் இடமும் தெரியும்; அவர்கள் நாட்டுக்காகப்பாடுபடும் கதையும் தெரியும். அதனால் வெள்ளை அதிகாரிகளிடம் அவர்கள்ஒளிந்திருந்த இடத் தைக் காட்டிக் கொடுக்கவில்லை. எவ்வளவோ ஆசை வார்த்தைகள்கூறி யும், அதட்டிக் கேட்டும் உடையாள் சொல்ல மறுத்ததால், கோபம் கொண்டஆங்கிலேயர் கள் உடையாளை இரண்டு துண்டாக வெட்டிப் போட்டனர். அந்தத்தியாகத்தைப் போற்றும் வண்ணம் சிவகங்கை வட்டார மக்கள், வெட்டுப்பட்ட உடையாளுக்குக் கோவில் எழுப்பி, அவளை கிராம காவல் தெய்வமாக வணங்கி வரஆரம்பித்தனர். தமிழர் களிடமுள்ள முன்னோர் களை வணங்கும் மரபு தான்கொல்லங்குடி வெட்டுடையாளுக்கும் தொடர்கிறது'' என்றனர்.

இந்தக்கோவில் தோன்றியதற்கான வரலாறு வெவ்வேறாக இருந்தாலும் அவை சொல்லுகின்ற நீதி ஒன்றுதான்.

அது, "தவறு செய்பவர்களுக்குத் தண்டனை நிச்சயம் உண்டு' என்பதே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன்

Post by தாமு on Sun Jan 24, 2010 2:36 pm

"தவறு செய்பவர்களுக்குத் தண்டனை நிச்சயம் உண்டு'


வாழ்த்துக்கள் நன்றி அண்ணா..
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன்

Post by kirupairajah on Sun Jan 24, 2010 2:47 pm

பதிவிற்கு நன்றி சிவா!

தமிழ்நாட்டில் கோவில்களின் இருக்கும் ஒரு சில பூசாரிகள், பிச்சை வாங்கும் ஏழை மக்களை விட கேவலமாக இருக்கிறார்கள். அர்சனை என்ற பெயரில் இவர்களின் தொல்லை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது.

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன்

Post by சிவா on Sun Jan 24, 2010 2:49 pm
இருப்பிடம் :
மதுரையிலிருந்து சிவகங்கை வழியாக தொண்டி செல்லும் பாதையில் சென்றால் கொல்லங்குடி. அங்கிருந்து 2 கி.மீ., தூரம் சென்றால் அரியாங்குறிச்சி வரும். அங்கு தான் வெட்டுடையார் காளியம்மன் கோயில் உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
சிவகங்கை

அருகிலுள்ள விமான நிலையம் :
மதுரை
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன்

Post by தாமு on Sun Jan 24, 2010 2:54 pm

@kirupairajah wrote:பதிவிற்கு நன்றி சிவா!

தமிழ்நாட்டில் கோவில்களின் இருக்கும் ஒரு சில பூசாரிகள், பிச்சை வாங்கும் ஏழை மக்களை விட கேவலமாக இருக்கிறார்கள். அர்சனை என்ற பெயரில் இவர்களின் தொல்லை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது.


avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன்

Post by சிவா on Sun Jan 24, 2010 3:41 pmLast edited by சிவா on Sun Jan 24, 2010 3:45 pm; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன்

Post by ராஜா on Sun Jan 24, 2010 3:43 pm

நல்ல கட்டுரை ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன்

Post by சிவா on Sat Feb 07, 2015 12:25 am

@kirupairajah wrote:பதிவிற்கு நன்றி சிவா!

தமிழ்நாட்டில் கோவில்களின் இருக்கும் ஒரு சில பூசாரிகள், பிச்சை வாங்கும் ஏழை மக்களை விட கேவலமாக இருக்கிறார்கள். அர்சனை என்ற பெயரில் இவர்களின் தொல்லை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது.


எனக்குத் தெரிந்தவரை பிள்ளையார்பட்டி கோவிலில் மட்டுமே எதற்கும் பணம் வாங்குவதில்லை, காலணிகளை பாதுகாக்கும் இடத்திலும் பணம் கேட்கமாட்டார்கள்! மற்ற அனைத்துக் கோவில் நிர்வாகமும் பணம் பறிக்கும் கொள்ளையர்களைப் போலத்தான் செயல்படுகின்றன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன்

Post by Dr.S.Soundarapandian on Sat Feb 07, 2015 1:18 pm

நல்ல பதிவு ! தொடர்க நண்பரே!
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4547
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum