புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காஞ்சி  மஹான்  Poll_c10காஞ்சி  மஹான்  Poll_m10காஞ்சி  மஹான்  Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
காஞ்சி  மஹான்  Poll_c10காஞ்சி  மஹான்  Poll_m10காஞ்சி  மஹான்  Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
காஞ்சி  மஹான்  Poll_c10காஞ்சி  மஹான்  Poll_m10காஞ்சி  மஹான்  Poll_c10 
5 Posts - 4%
prajai
காஞ்சி  மஹான்  Poll_c10காஞ்சி  மஹான்  Poll_m10காஞ்சி  மஹான்  Poll_c10 
4 Posts - 3%
Jenila
காஞ்சி  மஹான்  Poll_c10காஞ்சி  மஹான்  Poll_m10காஞ்சி  மஹான்  Poll_c10 
2 Posts - 2%
jairam
காஞ்சி  மஹான்  Poll_c10காஞ்சி  மஹான்  Poll_m10காஞ்சி  மஹான்  Poll_c10 
2 Posts - 2%
kargan86
காஞ்சி  மஹான்  Poll_c10காஞ்சி  மஹான்  Poll_m10காஞ்சி  மஹான்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
காஞ்சி  மஹான்  Poll_c10காஞ்சி  மஹான்  Poll_m10காஞ்சி  மஹான்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காஞ்சி  மஹான்  Poll_c10காஞ்சி  மஹான்  Poll_m10காஞ்சி  மஹான்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
காஞ்சி  மஹான்  Poll_c10காஞ்சி  மஹான்  Poll_m10காஞ்சி  மஹான்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காஞ்சி  மஹான்  Poll_c10காஞ்சி  மஹான்  Poll_m10காஞ்சி  மஹான்  Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
காஞ்சி  மஹான்  Poll_c10காஞ்சி  மஹான்  Poll_m10காஞ்சி  மஹான்  Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
காஞ்சி  மஹான்  Poll_c10காஞ்சி  மஹான்  Poll_m10காஞ்சி  மஹான்  Poll_c10 
9 Posts - 5%
prajai
காஞ்சி  மஹான்  Poll_c10காஞ்சி  மஹான்  Poll_m10காஞ்சி  மஹான்  Poll_c10 
6 Posts - 3%
Jenila
காஞ்சி  மஹான்  Poll_c10காஞ்சி  மஹான்  Poll_m10காஞ்சி  மஹான்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
காஞ்சி  மஹான்  Poll_c10காஞ்சி  மஹான்  Poll_m10காஞ்சி  மஹான்  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
காஞ்சி  மஹான்  Poll_c10காஞ்சி  மஹான்  Poll_m10காஞ்சி  மஹான்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காஞ்சி  மஹான்  Poll_c10காஞ்சி  மஹான்  Poll_m10காஞ்சி  மஹான்  Poll_c10 
2 Posts - 1%
jairam
காஞ்சி  மஹான்  Poll_c10காஞ்சி  மஹான்  Poll_m10காஞ்சி  மஹான்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
காஞ்சி  மஹான்  Poll_c10காஞ்சி  மஹான்  Poll_m10காஞ்சி  மஹான்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி மஹான்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 10 Jun 2021 - 21:51

காஞ்சி  மஹான்  193096652_4116757091694808_1394921532195447963_n.jpg?_nc_cat=104&ccb=1-3&_nc_sid=825194&_nc_ohc=0DFZ81XqT6MAX89234C&_nc_ht=scontent.fmaa2-3




எள்ளு புண்ணாக்கும் தையல் இலையும்
தர்மசாஸ்திரத்தை வாழ்வின் அடித்தளமாகக் கொண்ட ஆன்றோர்கள், கடல் கடந்து செல்வதை சாஸ்திரம் அனுமதிக்காது என்பார்கள்.


காஞ்சி மகாபெரியவாளின் பக்தர் ஒருவர், சாஸ்திர நியதிகளை உயிராகப் போற்றி வந்தார். இவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. குடும்ப நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு, வெளிநாடு செல்லும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.

அந்த நாட்டின் சூழலும் பணியின் தன்மையும் திருப்தியே என்றாலும், ‘சாஸ்திரத்தை மீறிவிட்டோமோ’ என்ற உறுத்தல், பக்தரை வாட்டியது. தனது மனக்கலக்கத்துக்கு மருந்தாக… மகாபெரியவாளை அனுதினமும் தியானித்து வந்தார்!

அவருக்கு காஞ்சி மகான் திருவருள் புரிந்த சம்பவத்தை உள்ளம் உருக விவரித்தார் அகிலா கார்த்திகேயன்…

”ஒரு விடுமுறையில் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகளை ஆசை ஆசையாகச் செய்தார். குடும்பத்தாரைப் பார்க்கப் போகிறோம் என்பதைவிட, வெகு நாட்களுக்குப் பிறகு காஞ்சி மகானைத் தரிசிக்கப் போகிறோம் என்ற குதூகலமே அவருக்கு அதிகம் இருந்தது.

சென்னை வந்ததும், விமானநிலையத்தில் இருந்து டாக்சி பிடித்து காஞ்சிபுரம் சென்றார்.

காஞ்சி மடத்தில், அன்றைய சமையல் குறித்து சிப்பந்திகளிடம் பேசிக்கொண்டிருந்தார் மகா பெரியவா. தரிசனத்துக்காக வந்திருந்த அடியவர்களுக்கு வியப்பு. ‘சமையல் இன்னின்ன மாதிரியெல்லாம் இருக்கவேண்டும் என்பது முதற்கொண்டு பெரியவா சிரத்தை எடுத்துக்கொள்கிறாரே? இதுவரை இப்படியெல்லாம் சொன்னது கிடையாதே’ என்ற ஆச்சரியம் அவர்களுக்கு.

இந்த நிலையில்தான் மடத்துக்கு வந்து சேர்ந்தார் பக்தர். மகா பெரியவாளைக் கண்டதும் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங் கினார். அவரை ஆசீர்வதித்த பெரியவா, சிப்பந்திகளை அழைத்து, ”இவருக்கு, உடனே ஆகாரம் பண்ணி வையுங்கோ” என்றார்.


நன்றி முகநூல் --ஸ்ரீ ராகவேந்திரன்

தொடருகிறது



காஞ்சி  மஹான்  Svg%3e




549549

70 கருத்துகள்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 10 Jun 2021 - 21:52

------2----


வந்ததும் வராததுமாக அந்தப் பக்தரை சாப்பிட அழைத்துச் செல்லும்படி பெரியவா சொல்வது ஏன் என்று ஊழியர் களுக்குப் புரியவில்லை. ஆனால், கடல் கடந்து தன் பக்தன் வந்திருக்கிறான்; வந்ததும், தன்னைத் தரிசிக்க ஓடி வந்துவிட்டான். எனில், அவனுடைய நிலை என்ன என்பது பெரியவாளுக்குத் தெரியாதா?!

வயிறாரச் சாப்பிட்டு முடித்த பக்தர், மீண்டும் மகா பெரியவாளுக்கு எதிரில் வந்து நின்றார். அவரை உற்றுப் பார்த்த பெரியவா, ”என்ன… உன் விரதம் பூர்த்தி ஆயிடுத்தா?”

என்றார் கருணையும் கரிசனமும் பொங்க.

அதைக் கேட்டு வியந்து நின்றார் பக்தர்; அவரிடமிருந்து வார்த்தைகளே வரவில்லை! ‘பெரியவா… பெரியவா…’ என்று திருப்பித் திருப்பிச் சொன்னபடியே இருந்தார்; கண்களில் கரகரவென நீர் வழிந்தது!

மெள்ளப் புன்னகைத்த காஞ்சி மகான், ”நானே சொல்லி டறேன்!” என்று ஆரம்பித்தார்… ”இவர், வெளிநாட்டுலே இருந்து வர்றார். அங்கே புறப்பட்டதுலேருந்து எந்த ஆகாரமும் எடுத்துக்கல. என்னை வந்து பார்க்கற வரைக்கும் ஆகாரம் எடுத்துக்கறதில்லேன்னு ஒரு சங்கல்பத்தோட விரதமா இருந்து, இங்க வந்து சேர்ந்திருக்கார்…” என்றவர், பக்தரைப் பார்த்து, ”என்ன நான் சொல்றது சரியான்னோ?” என்று கனிவுடன் கேட்டார்.

அவ்வளவுதான்… தரிசனத்துக்காக நின்றிருந்த அனைவரும் அசந்துபோனார்கள். எனில், அந்தப் பக்தரை கேட்கவும் வேணுமா… நெக்குருகி நின்றார் அவர்!

இதற்கு நடுவில் இன்னொரு சம்பவமும் நடந்தது. அந்த பக்தர் சாப்பிடச் சென்றிருந்த நேரத்தில், தன்னை தரிசிக்க வந்திருந்த மற்ற அன்பர்களிடம், ”வெளிநாட்டுலேருந்து இப்ப இங்கே வந்திருக்காரே… அவர்கிட்டேயிருந்து நான் என்ன கேட்டு வாங்கலாம்னு சொல்லுங்கோ” என்று கேட்டாராம்.

இதுவும் அங்கேயுள்ளவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில், எவரிடமும் ‘இதைக் கொடு, அதைக் கொடு’ என்று எதையும் கேட்டறியாதவர் பெரியவர். ஆகவே, பதில் சொல்லத் தெரியாமல் திகைத்துப் போனார்கள் அந்த அன்பர்கள்.

இந்த வேளையில்தான்… சாப்பிட்டு முடித்து மீண்டும் பெரியவாளைத் தரிசிக்க வந்தார் அந்த பக்தர்! அவரையும் சுற்றியிருந்த மற்ற அடியவர்களையும் மெல்லிய சிரிப்புடன் பார்த்த மகாபெரியவா, ”இவருகிட்டேயிருந்து என்ன கேட்டு வாங்கலாம்னு யாருமே சொல்லலையே…” என்று கேட்டுவிட்டு, அவரே தொடர்ந்தார்…

”சரி சரி… இவரை அழைச்சுண்டு போய், எள்ளு புண் ணாக்கையும் தையல் இலையையும் எனக்காக வாங்கித் தரச் சொல்லி, வாங்கிக்கோங்கோ!” என்றார்.

அந்த பக்தர், பரம சந்தோஷத்தில் திளைத்தார். ‘தெய்வத்துக்கு நிகரான காஞ்சி மகான், தன்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டாரே’ என்று நெகிழ்ந்தார்..ஆனால், மடத்தில் கைங்கர்யம் செய்பவர்களுக்கு மட்டும் சற்று தவிப்பு; ஆனால் பெரியவாளிடம் நேரே கேட்கவும் தயக்கம்!

இதையெல்லாம் உணராமல் இருப்பாரா பெரியவா. அவர்களைப் பார்த்து புன்னகைத்தவர், ”இந்த பக்தர், என் மேல ரொம்ப பக்தியா, அபிமானமா இருக்கார். எங்கிட்ட இருக்கற பிரியத்துனால எனக்கு எதையாவது சேர்ப்பிக்கணும்னு ரொம்பவும் ஆசைப்படறார்.

ஆனா கடல்கடந்து போனவாகிட்டேருந்து, அப்படி எதையும் வாங்கிண்டுட முடியாதபடி, தர்மம் தடுக்கறது. இருந்தாலும் எனக்கு என்னோட பக்தர் முக்கியம் இல்லையா?! அவரோட மனசை நோகவிட்டுட முடியுமா?” என்று கூறிவிட்டு சற்றே நிறுத்தியவர், மீண்டும் தொடர்ந்து பேசினார்.

”இப்போ அவர் வாங்கிண்டு வர எள்ளுப் புண்ணாக்கை, மடத்துல இருக்கிற பசு மாட்டுக்குக் கொடுங்கோ அந்தப் பசுகிட்டே இருந்து தினமும் கறக்கிற பாலை எனக்குக் கொடுங்கோ. நான் சந்தோஷமா ஏத்துக்கறேன். ஏன்னா, இப்போ அவர் கொடுத்த புண்ணாக்கைப் பசுமாடு சாப்பிட்டு, அது கொடுக்கற பாலில் அந்த தோஷம் எல்லாம் போயிடறதோன்னோ?

பசு மாட்டு வழியா வந்தா எல்லாவிதமான தோஷமும் நிவர்த்தியாயிடும். அதனால அவர் மனசுல நெனச்சபடி, எனக்குக் கொடுத்த மாதிரியும் ஆச்சு. அதை நான் ஏத்துண்ட மாதிரியும் ஆச்சு. இல்லையா?” என்றார் விளக்கம் சொல்வது போல!

இப்படி, தர்மத்துக்கும் குந்தகம் இல்லாமல், தன் மீது அபிமானமும் பக்தியும் செலுத்தும் பக்தர் மனமும் ஆனந்தப்படும்படி செயல்பட்ட கருணை, மகாபெரியவாளைத் தவிர வேறு யாருக்கு இருக்கும்?




காஞ்சி  மஹான்  193096652_4116757091694808_1394921532195447963_n.jpg?_nc_cat=104&ccb=1-3&_nc_sid=825194&_nc_ohc=0DFZ81XqT6MAX89234C&_nc_ht=scontent.fmaa2-3
============




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக