ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

குழந்தைகளுக்கு தனி அறை:

View previous topic View next topic Go down

குழந்தைகளுக்கு தனி அறை:

Post by தாமு on Fri Jan 15, 2010 6:00 am

குழந்தைகளுக்கு தனி அறை:முன்பெல்லாம் கூட்டுக்குடும்பமாக இருந்தோம் அப்பா அம்மா தனியாகவும் குழந்தைகள் பாட்டி, தாத்தாவுடன் படுப்பாங்க. ஆனால் இப்ப தனி குடும்பமாக இருப்பதால் குழந்தைகளை அப்பா,அம்மாவுடன் படுக்கும் சூழ்நிலை வந்துள்ளது. அப்படி ரூம்மில் ஒன்றாக படுக்கும் குழந்தையின் முன்பு பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும்..

2 வயது முதல் 13 வயது வரை இருக்கும் குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் மிகந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகள் மனதில் பார்க்கும் அனைத்து விஷயங்களும் மனதில் பதியும் நேரம். மனதில் ஏதாவது விஷயங்கள் பதிந்துவிட்டால் பெரியவர்கள் ஆனாலும் மனதினை விட்டு நீங்காது மனநலக் கோளாறுகள் வரலாம்முடிந்த வரை சிறு வயதில் குழந்தையினை தொட்டிலில் போட்டு பழக வேண்டும். அப்பொழுது கூட கட்டிலின் அருகில் தொட்டியில்லாமல் இருப்பது நலம். சின்ன சின்ன சப்தங்கள் கூட இனம் புரியாத பயத்தை ஏற்படுத்தலாம்.

குழந்தைகள் தூங்காமல் இருக்கும் பொழுது கட்டாயமாக கணவர்,மனைவி நெருக்கமாக இருக்கக்கூடாது. பார்க்ககூடாதை குழந்தைகள் பார்த்துவிட்டால் தாய் தந்தை மீது குழந்தைக்கு வெறுப்பு காட்ட தொடங்கும். அவர்கள் பெரியவர்கள் ஆனாலும் ஒருவித வெறுப்புடனே இருப்பதாக மனநல மருத்துவர் கூறுகிறார்கள். ஆகையல் அவங்களுக்கு திருமணத்தில் கூட நாட்டமில்லாமல் போகுமாம்.

அல்லது குழந்தைகளுக்கு வேறு விதமான பாதிப்புகள் கூட வரலாம். குழந்தைகள் பார்த்த காட்சி என்னவாக இருக்கும் என்று ஆராயுமாம். இந்த தேடல் அவர்களை கெட்டழிந்த போய்விடவும் வாய்ப்புண்டு.
குழந்தையினை நாமே கெட்டுபோக வழி செய்யாமால் நாமும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நலம். அதுக்கு சிறு குழந்தையாக இருக்கும் பொழுது அப்பா அம்மாவுக்கு நடுவில் குழந்தையினை படுக்க வைத்துவிட்டு குழந்தை நன்றாக தூங்கிய பின்பு வேறு ரூம்மிலோ அல்லது அதே ரூம்மிலோ இல்லறத்தில் ஈடுபடலாம்.

5 வயதுக்கு மேல் வெளி நாடுகளில் இருக்கும் பழக்கம் போல் தனி அறையில் படுக்க வைப்பது நல்லது. முதல் கொஞ்ச நாட்களுக்கு கஷ்டமாக இருக்கும். போக போக பழகிவிடும். அவர்களை தனிமையில் படுக்க வைத்தாலும் உங்கள் மேல் பார்வையில் குழந்தையிருப்பது போல் பார்த்துக்கொள்ளவும்.

ஒரே ரூம் தான் இருக்கு நாங்க என்ன செய்வது என்று கேட்கிறிங்களா? வளரும் குழந்தைகள் வீட்டில் இல்லாத பொழுது இல்லறத்தில் ஈடுபடலாம்..
இதற்கு கணவர் மனைவி இருவரும் குழந்தையின் நலன் கருதி சில விஷயங்களை தியாகம் செய்து தான் ஆகனும்.

இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறிங்கனு சொல்லிவிட்டு போங்க
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: குழந்தைகளுக்கு தனி அறை:

Post by தாமு on Fri Jan 15, 2010 6:00 am

சின்ன குழந்தைகளுக்கு படிப்பு

 • இப்பவுள்ள குழந்தைகள் பாட புத்தகத்தை வீட்டில் எடுத்தாலே அம்மா எனக்கு வயிறு வலிக்குது, தலைவலிக்குது, தூக்கம் வருது அல்லது பசிக்குதுனு ஏதாவது காரணம் சொல்லி படிக்க விரும்பமாட்டார்கள்.
  அவங்களுக்கு படிக்கும் ஆர்வத்தை நாம் குழந்தை பருவத்தில் இருந்தே சொல்லிக்கொடுக்கனும்.

  2வயது ஆனவுடனே படிக்க சொல்லிக் கொடுங்க.
  அந்த புத்தகம் கிழியாததாகவும் சைனிங் பக்கமாகவும், கலர் கலராய் படங்கள் இருக்கும் புக்காக முதலில் வாங்கி கொடுங்க. அவங்களே ஆர்வமாக வந்து அம்மா சொல்லிக்கொடுங்க என்று கேட்பாங்க.

  மிருகங்கள்,விலங்குகள்,பழங்கள், பூக்கள் ,காய்கறிகள் போன்று படங்களை காட்டி சொல்லிக்கொடுங்கள். சிறிது நோரம் கழித்து அவங்களே ஆப்பிள், பனானா என்று சொல்லுவாங்க.


  • அடுத்ததாக காக்கை, சேவல் போன்ற விலங்குகளின் ஓலிகளை சொல்லிக் கொடுக்கவும்.

   ஆக்க்ஷன் புத்தகம் வாங்கி கொடுங்க. அதில் நடப்பது, ஓடுவது, குதிப்பது என்று எல்லாமே இருக்கும். நீங்களும் ஆக்க்ஷனுடன் சொல்லி கொடுத்தால் குழந்தைகள் ஆசையுடன் கற்றுக்கொள்வார்கள்.

   தொடர்ந்து மணிக்கணக்காக படிக்க சொல்லாதிங்க. முதல் நாள் 10 நிமிடம் அப்பறம் 15 நிமிடம் என்று கால அளவை கூட்டுங்கள்.
   • புத்தகத்தில் இருப்பதை மட்டுமே சொல்லிக்கொடுக்காதிங்க.

    படிப்புடன் கூடிய நிறைய பொது விசயங்களையும் சொல்லிக்கொடுங்க. அவங்களுக்கு ஆர்வம் வருவது போல் நீங்கள் சொல்லிக்கொடுக்கவும்.

    நிறைய கேள்வி கேளுங்கள் அப்ப தான் அவங்களுக்கு பேச்சு திறன் வெளிப்படும், அறிவு வளரும், மனதில் படும் விஷயங்களை பேசும் தைரியம் வரும்.

    புத்தகங்களை வாசிப்பதுடன் இல்லாமல் முடிந்த வரை செயல் முறை விளக்கம் கொடுங்கள். வீட்டிலே சின்ன தொட்டியில் விதை போட்டு செடி எப்படி வளர்கிறது என்று காட்டுங்கள்.

    அதிகமாக டீ.வி, கேம்ஸ் விளையாட அனுமதிக்கதிங்க. படிப்பின் ஆரவம் குறைந்துவிடும்.

    குழந்தைகள் படிக்கல படிக்கல என்று சொல்லாமல் அவங்களை ஊக்கபடுத்தி படிக்க வைக்கவும்.avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: குழந்தைகளுக்கு தனி அறை:

Post by தாமு on Fri Jan 15, 2010 6:49 am

போலியோ சொட்டு மருந்து


தமி‌ழ்நாட்டில் 40,399 சிறப்பு மையங்கள் மூலம் போ‌லியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செ‌ய்யப்பட்டுள்ளன. எனவே 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளு‌க்கு சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுமாறு பெ‌ற்றோ‌ர்களை த‌மிழக அரசு கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளது.

போலியோவை நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிப்பதற்காக வரும் 10.1.2010 மற்றும் 7.2.2010 ஞாயிற்றுக் கிழமைகளில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் நாடு முமுவதும் நடத்தப்பட உள்ளன. தமி‌ழ்நாட்டிலும் முகாம்கள் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செ‌ய்யப்பட்டுள்ளன. 5 வயதிற்குட்பட்ட எல்லா குழந்தைகளுக்கும் மேற்கண்ட முகாம் நாட்களின் போது போலியோ சொட்டுமருந்து கூடுதலாக வழங்கப்படும்.

பல்ஸ் போலியோ முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதன் மூலம், தமி‌ழ்நாட்டில் தொடர்ந்து ஆறாம் ஆண்டாக போலியோ இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும், உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில், இப்போதும் போலியோவினால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த மாநிலங்களிலிருந்து தமி‌ழ்நாட்டுக்கும் போலியோ நோ‌ய்க் கிருமிகள் பரவ வா‌ய்ப்பு உள்ளதால், இந்த ஆண்டும் போலியோ சிறப்பு முகாம்களை வெற்றிகரமாக நடத்த நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளன.

முகாம் நாட்களில் போலியோ சொட்டுமருந்து கொடுக்க வேண்டியதன் அவசியம்:

போலியோவை உண்டாக்கும் வைரஸ் நுண் கிருமிகள் குழந்தைகளை பாதிக்கச் செ‌ய்வதோடு, அவர்களின் கை, கால்கள் மற்றும் உடம்பின் சில பகுதிகளை நிரந்தரமாக ஊனமடையச் செ‌ய்கின்றன. போலியோ நுண் கிருமிகள் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலம் குழந்தைகளிடையே பரவுகின்றன.

இந்நோ‌ய் வருமுன் காப்பதே மேலாகும். அதற்கு ஒரே வழி, ஆண்டுதோறும் நடத்தப்படும் பல்ஸ் போலியோ முகாம்களில் 5 ­வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து கொடுப்பதுதான். பாதுகாப்பான தடுப்பு மருந்து கொடுக்கப்படும் போது, நோ‌ய் பாதிப்பை உண்டாக்கும் கொடிய நுண்கிருமிகள் அழிக்கப்படுகின்றன.

வழக்கமாக கொடுக்கும் தடுப்புமருந்தின் மூலம் போலியோ நோ‌ய் பரவாமல் தடுக்கப்பட்டாலும், ஒரே சமயத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் போலியோ நுண்கிருமிகள் பரவாமல் சுற்று சூழலிலிருந்து அறவே ஒழிக்க முடியும். ஆகவே ஒரு குழந்தை கூட விடுபடாமல் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து கொடுக்கப்படவேண்டும்.

வெளிமாநிலத்தவர் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து:

கட்டுமானப் பணிகள், மேம்பாலம் மற்றும் இரயில்வே இருப்புப்பாதை சீரமைப்புப் பணிகளில் வெளி மாநிலத்தவர் ஏராளமானோர் தமி‌ழ்நாட்டில் வேலை பார்க்கின்றனர். பிற மாநிலங்களில் போலியோ நோ‌ய்க் கிருமிகள் தற்போது இருந்து வருவதால் அங்கிருந்து வந்து போகும் மக்கள் மூலம் தமி‌ழ்நாட்டு குழந்தைகளுக்கு போலியோ நோ‌ய் பரவும் ஆபத்து உள்ளது. எனவே இத்தகைய இடம் பெயர்ந்தோர் குழந்தைகளை தமி‌ழ்நாடு முழுவதும் கணக்கெடுப்பு செ‌ய்து, அவர்களுக்கும் தவறாமல் சொட்டு மருந்து கொடுக்க சிறப்பு ஏற்பாடு செ‌ய்யப்பட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:

1. அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் 10.1.2010 (ஞாயிற்றுக்கிழமை) முதல் சுற்றின்போது ஒரு தவணை சொட்டு மருந்தும் மீண்டும் (7.2.2010) ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் சுற்றின்போது இன்னொரு தவணையும் கொடுக்கப்பட வேண்டும்.

2. போலியோ சொட்டு மருந்து மிகவும் பாதுகாப்பானது. எத்தனை முறை வேண்டுமானாலும் கொடுக்கலாம், அதனால் எந்த பாதிப்பும் இல்லை.

3. ஓரிரு நாட்களுக்கு முன்பு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் கொடுக்கவேண்டும்.

4. முகாம் நாட்களில் கொடுக்கப்படும் சொட்டு மருந்து வழக்கமான நடைமுறை தவணைகளில் கொடுக்கப்படும் சொட்டு மருந்திற்கு மாற்று அல்ல. இது ஒரு கூடுதல் தவணையாகும்.

5. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

தமி‌ழ்நாட்டில் 40,399 சிறப்பு மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செ‌ய்யப்பட்டுள்ளன. சொட்டுமருந்து வழங்கும் சிறப்பு மையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக் கூடங்கள் மற்றும் முக்கியமான பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பேருந்து நிலையம், இரயில் நிலையம், விமான நிலையம், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சுற்றுலா மையங்கள் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, முகாம் நாட்களில் பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செ‌ய்யப்பட்டுள்ளன. தனியார் மருத்துவர்களும் தங்களது மருத்துவ மனைகளில் முகாம் நாட்களின் போது இலவசமாக சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செ‌ய்யப்பட்டுள்ளது.

சுமார் 70 லட்சம் குழந்தைகள் இதன் மூலம் பயன் பெறுவார்கள். இப்பணியைச் சிறப்பாகச் செ‌ய்ய பல்வேறு அரசுத் துறைகள், ரோட்டரி சங்கம் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் சேர்ந்த சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் ஈடுபடுகிறார்கள்.

சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதற்கான அடையாளம் தெரிந்து கொள்வதற்காக, குழந்தையின் இடது கை சுண்டு விரலில் அடையாள “மை” வைக்கப்படுகிறது. விடுபட்ட குழந்தைகளை கண்டறிந்து, அடுத்தடுத்த நாட்களில் சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செ‌ய்யப்பட்டுள்ளன.

பொதுமக்களின் நலன் கருதி சொட்டு மருந்து முகாம்கள் தமி‌ழ்நாடு முழுவதும் அவரவர் வசிப்பிட பகுதிகளுக்கு அருகாமையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பெற்றோர்கள் அனைவரும் 5 வயதிற்குட்பட்ட தங்கள் குழந்தைகளை போலியோ முகாமிற்கு அழைத்துச் சென்று சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். “சொட்டு மருந்து கொடுப்போம்; போலியோவை ஒழிப்போம்; குழந்தை நலம் காப்போம்” எ‌ன்று ம‌க்க‌ள் ந‌ல்வா‌ழ்‌வு‌த்துறை அமை‌ச்ச‌ர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இ-மெயில் வந்த தகவல் உங்களுக்காக
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: குழந்தைகளுக்கு தனி அறை:

Post by தாமு on Fri Jan 15, 2010 8:38 am

இன்றைய பெற்றோர்கள்


அந்த காலத்தில் தாத்தா, பாட்டிகள் டஜன் கணக்காக குழந்தை பெற்று அழகாக வளர்த்தார்கள்.

இன்று உள்ள சில பெற்றோர்கள் கட்டுபாடுடன் 1, 2 குழந்தைகளை பெற்று அவர்களை நல்லமுறையில் வளர்க்கனும் என்று முழுநேரமும் அவர்களை கவணிப்பிலே வளர்கிறார்கள். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தையினை வளர்ப்பது பெரிய கடமையாகவும் பெரிய பொறுப்பு தலையில் சுமப்பதாக நினைக்கிறாங்க.

நல்ல படிக்க வைக்கனும். நல்ல நிலையில் உயரனும் என்று குழந்தையினை படிப்பின் மீது மட்டுமே அக்கரை காட்டுறாங்க. இது தவறில்லை ஆனால் ரொம்ப கண்டிப்பு வேண்டாமே என்று தான் சொல்லவருகிறேன்.இப்படி ஒரு பதிவு போட காரணம் எனது தோழியின் அக்காவுக்கு 2ம் பெண் குழந்தைகள் இதே சென்னையில் தான் இருக்காங்க. மூத்த பெண் 6ம் வகுப்பும் 2வது முதல் வகுப்பும் படிக்கிறாள். ஒரே மருமகள் மாமாவும் ,மாமியாரும் கூட தான் இருக்காங்க. ஆனால் அவங்க குழந்தையினை விளையாடவே விடுவதில்லை.

காலையில் ஹிந்தி க்ளாஸ் பிறகு காலையிலிருந்து மாலை 3மணி வரை பள்ளி படிப்பு வீட்டுக்கு வந்தவுடன் கராத்தை க்ளாஸ், பிறகு பாட்டு க்ளாஸ், பிறகு டியூஷன், இரவு வீட்டுக்கு வர 9 மணி பாவம் குழந்தை சோர்வாகிவிடுகிறாள். ஞாயிறு மட்டும் தான் விடுமுறை ஆனால் வீட்டில் அம்மா குழந்தையினை பிழிந்து எடுக்குறாங்க

படிப்பு படிப்பு ... படிப்பு இது தான் வாழ்க்கையா.. என்று எண்ணவைக்கிறது.. இப்படி படிப்பை மட்டுமே நினைத்து குழந்தையினை வளர்க்கும் பெற்றோருக்கு என்னுடைய சின்ன அறிவுரை. (இது தவறாக இருந்தால் என்னை மன்னிக்கவும்)
குழந்தைகளுடன் அன்பாக பழக முயற்சி செய்யுங்கள்.

கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் குழந்தையினை எந்த வகுப்பில் சேர்க்கலாம் என்று நினைக்காதிங்க.
குழந்தையுடன் நல்ல விளையாடுங்கள். சின்ன குழந்தையாக இருந்தாள் விளையாட்டு மூலமாக பாடம் சொல்லிக்கொடுங்க.

95% மார்க்கு வாங்கினாலும் சில பெற்றோர் சந்தோஷபடுவதில்லை. 100% மார்க் வாங்கவில்லையே என்று திருப்தியில்லாமல் இருக்காதிங்க.

குழந்தைகள் மார்க் கம்மியாக வாங்கினாலும் அவங்களை ஊக்கபடுத்துங்க. மற்றவர்களுடன் கம்பேர் பண்ணாதிங்க.

அவங்களுக்கு பிடித்தது போல் படிப்பு சொல்லிக்கொடுக்கபாருங்க. நிச்சயமாக படிப்பு அவர்கள் மனதில் பதியும்.


குழந்தைகளை நல்லமுறையில் வளர்ப்பது பெற்றோரின் கடமை, அதுக்காக உங்கள் விருப்பதின் கீழ்படிதான் நடக்கனும் என்று கட்டளை போடாதிங்க. அவங்களை ப்ரீயாக விடுங்க. குழந்தைகள் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அதன் அன்னை வளர்ப்பதிலே...

குழந்தைகள் மீது தேவையில்லாமல் உங்கள் கோபத்தை கொட்டாதிங்க. அது உங்கள் மீது வெறுப்பு வர காரனமாகும்.

குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை வார்த்தைகளை சொல்லிக்கொடுங்க...

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: குழந்தைகளுக்கு தனி அறை:

Post by krishnaamma on Mon May 31, 2010 11:05 pm

@தாமு wrote:இன்றைய பெற்றோர்கள்

குழந்தைகள் மார்க் கம்மியாக வாங்கினாலும் அவங்களை ஊக்கபடுத்துங்க. மற்றவர்களுடன் கம்பேர் பண்ணாதிங்க.
அவங்களுக்கு பிடித்தது போல் படிப்பு சொல்லிக்கொடுக்கபாருங்க. நிச்சயமாக படிப்பு அவர்கள் மனதில் பதியும்.
குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை வார்த்தைகளை சொல்லிக்கொடுங்க...
நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்


ரொம்பசரி. மார்குகள் மட்டுமே நம் வாழ்கையை முடிவு செய்வதில்லை . அவர்களை (குழந்தைகளை) 100 வாங்க சொலும்முன் நம் மார்க்கை நெனைவுபடுதிகனும். என்ன நான் சொல்றது சரியாய்? மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: குழந்தைகளுக்கு தனி அறை:

Post by krishnaamma on Mon May 31, 2010 11:07 pm

That too comparison is toooooooooooooo wrong. dont compare we dont want cloning. each and every person has his or her own individuality. So please dont compare children even they are brothers or sisters.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: குழந்தைகளுக்கு தனி அறை:

Post by எஸ்.எம். மபாஸ் on Mon May 31, 2010 11:11 pm

avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: குழந்தைகளுக்கு தனி அறை:

Post by சம்சுதீன் on Mon May 31, 2010 11:14 pm

avatar
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8220
மதிப்பீடுகள் : 21

View user profile http://shams.eegarai.info/

Back to top Go down

Re: குழந்தைகளுக்கு தனி அறை:

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum