உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:15 am

» வேலன்:-வார்த்தைகளை கண்டுபிடிக்கும் கட்டங்கள் உருவாக்க-Word Search Architect
by மாணிக்கம் நடேசன் Today at 8:49 am

» நீடுழி வாழ்க இவர்கள் சமூகம்.
by T.N.Balasubramanian Today at 8:34 am

» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft
by velang Today at 7:54 am

» நியூயார்க்கில் குறைகிறது கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Today at 7:16 am

» கொரோனா பீதியால் கப்பலில் இருந்து கடலில் குதித்து பயணிகள்
by ayyasamy ram Today at 7:13 am

» சராசரி வெப்பநிலை நாடு முழுதும் குறைவு
by ayyasamy ram Today at 7:03 am

» கிளிண்டன்-மோனிகா உறவை அம்பலப்படுத்திய லிண்டா காலமானார்
by ayyasamy ram Today at 6:59 am

» ஒன்றல்ல,இரண்டல்ல பரிசோதனையில் 10 மருந்துகள்:டிரம்ப்
by ayyasamy ram Today at 6:56 am

» தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?
by சக்தி18 Yesterday at 8:02 pm

» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா
by சக்தி18 Yesterday at 7:59 pm

» சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்கள்
by ஞானமுருகன் Yesterday at 7:56 pm

» Prabhakaran - Vaazhvum Maranamum ~ Pa. Raghavan
by i6appar Yesterday at 6:29 pm

» கேட்டதும்.., கொடுப்பவனே..?, கிருஷ்ணா..!, கிருஷ்ணா..!, கீதையின்..!, நாயகனே..?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கடவுள் ஏன் கல்லானான்-
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» மலர்களே மலர்களே இது என்ன கனவா
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» தத்துவம் மச்சி தத்துவம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» எங்கிருந்தாலும் வாழ்க
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» வாழ்க்கை தத்துவம்!
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» என் குட்டித் தேவதைக்கு…
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» உணர்ந்துகொள் !
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» தேடல்!- அவள் விகடனில் வாசித்த ஒரு சிறு கவிதை.
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» – பிரிவிற்குப் பிறகான காலம் –
by ayyasamy ram Yesterday at 3:02 pm

» வசந்தத்தில் வேம்பின் இனிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:17 am

» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:39 am

» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா
by kargan86 Wed Apr 08, 2020 10:06 pm

» புத்தகம் கிடைக்குமா
by kargan86 Wed Apr 08, 2020 9:57 pm

» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1
by kargan86 Wed Apr 08, 2020 9:41 pm

» நாவல்கள் வேண்டும்
by kargan86 Wed Apr 08, 2020 9:35 pm

» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:45 pm

» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:41 pm

» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 7:06 pm

» கருத்துள்ள தத்துவ பாடல்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 6:58 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8
by ayyasamy ram Wed Apr 08, 2020 6:12 pm

» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 08, 2020 4:19 pm

» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை
by சக்தி18 Wed Apr 08, 2020 4:19 pm

» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா
by சக்தி18 Wed Apr 08, 2020 4:17 pm

» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai
by சக்தி18 Wed Apr 08, 2020 4:07 pm

» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
by ayyasamy ram Wed Apr 08, 2020 3:33 pm

» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 3:16 pm

» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.
by T.N.Balasubramanian Wed Apr 08, 2020 11:25 am

» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்
by ayyasamy ram Wed Apr 08, 2020 11:22 am

» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft
by velang Wed Apr 08, 2020 9:10 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by velang Wed Apr 08, 2020 9:08 am

» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...!!
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:57 am

» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:35 am

» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:33 am

Admins Online

யுவன் சங்கர் ராஜா: தமிழ் சினிமாவில் தடம் பதித்து 23 ஆண்டுகள்

யுவன் சங்கர் ராஜா: தமிழ் சினிமாவில் தடம் பதித்து 23 ஆண்டுகள் Empty யுவன் சங்கர் ராஜா: தமிழ் சினிமாவில் தடம் பதித்து 23 ஆண்டுகள்

Post by ayyasamy ram on Fri Feb 28, 2020 8:12 pm

யுவன் சங்கர் ராஜா: தமிழ் சினிமாவில் தடம் பதித்து 23 ஆண்டுகள் _111071262_b6bb6114-e879-441a-afbe-335db87ed4da
-
தமிழ் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக
யுவன் சங்கர் ராஜா தடம் பதித்து 23 ஆண்டுகளாகிவிட்டன.
இதனை அவருடைய ரசிகர்கள் '#23YearsOfYuvanism'
என சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்துக்
கொண்டிருப்பவர் யுவன் சங்கர் ராஜா. தற்போது அஜித்
நடிக்கும் 'வலிமை' படத்திற்கும், சிம்பு நடிக்கும் 'மாநாடு'
படத்திற்கும் யுவன் தான் இசையமைக்கிறார்.

1997ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான 'அரவிந்தன்'
படத்தின் மூலம் தன் 16வது வயதில் இசையமைப்பாளராக
அறிமுகமானவர், யுவன் சங்கர் ராஜா.

அந்த காலகட்டத்தில் பட வெற்றியைப் பொறுத்தே படத்தின்
இசை பேசப்படும். தொடர்ந்து வெற்றிப் படங்களுக்கு யுவன்
இசையமைக்கவில்லை.

'அரவிந்தன்' படத்திற்குப் பிறகு இரண்டு படங்களில்
தோல்வியடைந்த யுவன், 'பூவெல்லாம் கேட்டுப்பார்',
'தீனா', 'நந்தா', 'துள்ளுவதோ இளமை', 'மெளனம் பேசியதே'
போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்குத் தன்னை
அடையாளம் காட்டத் தொடங்கினார்.

'இளையராஜா'வின் மகன் என்பதைக் கடந்து தனக்கென ஓர்
அடையாளத்தை உருவாக்க தொடர்ந்து உழைத்துக்
கொண்டிருந்தார்.

பின்னர் இவருக்கென்று இளைஞர் பட்டாளமே திரண்டது.
காதல் தோல்வி குறித்து இவர் இசையமைத்த பாடல்கள் தான்
பெரும்பாலான இளைஞர்களின் காலர் டியூனாகிப் போனது.

சின்ன பட்ஜெட் படம், பெரிய படம், மாஸ் ஹீரோ என்றெல்லாம்
யுவன் பிரித்துப் பார்ப்பதில்லை. தனக்கு கதை பிடித்திருந்தால்
அந்தப் படத்திற்கு இசையமைப்பார்.
இந்த விஷயத்தில் இளையராஜாவும், யுவனும் ஒன்று.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54617
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யுவன் சங்கர் ராஜா: தமிழ் சினிமாவில் தடம் பதித்து 23 ஆண்டுகள் Empty Re: யுவன் சங்கர் ராஜா: தமிழ் சினிமாவில் தடம் பதித்து 23 ஆண்டுகள்

Post by ayyasamy ram on Fri Feb 28, 2020 8:13 pm


'பில்லா-2' திரைப்படத்தில் மாஸ் ஹீரோவிற்காக
இசையமைத்துக் கொண்டிருக்கும் போதே 'ஆதலால் காதல்
செய்வீர்' என்ற புதுமுகம் நடிக்கின்ற படத்திற்கும்
இசையமைத்தார்.

தன் நண்பர்களுக்காக பணம் வாங்காமலும் இசையமைத்துக்
கொடுத்திருக்கிறார்.

யுவன் ஒவ்வொரு இயக்குநர்களுக்கும் ஒவ்வொரு மாதிரியாக
இசையமைப்பார். செல்வராகவன் - யுவன் காம்போ ஒரு
மாதிரியும், ராம் - யுவன் காம்போ வேறு மாதிரியும் இருக்கும்.
கதைக்கு ஏற்ற இசையை மெட்டமைக்கும் திறன் யுவனின்
பலம்.

இவருடைய பின்னணி இசையே கதையின் போக்கை
சொல்லிவிடும். அந்த அளவிற்கு கதைக் களம் அறிந்து
இசையமைப்பார்.

'பருத்திவீரன்' படத்திற்கும், 'மங்காத்தா' படத்திற்கும் வேறு
மாதிரியான இசையை யுவன் கொடுத்திருப்பார். அவரால்
குத்துப் பாடல்களுக்கு மெட்டமைக்கவும் முடியும், அதே
வேளையில் ஹை டெக்கான பாடல்களுக்கு ஏற்ற இசையையும்
கொடுக்க முடியும் என நிரூபித்துக் காட்டியவர்.

இதுவரை யுவனுடன் பணியாற்றிய இயக்குநர்களே யுவனுடைய
இசைக்கு ரசிகர்களாகிவிடுவது கூடுதல் சிறப்பு.

யுவனின் பாடல்களில் பெரும்பாலும் வயலின் ஆதிக்கம்
அதிகமாக இருக்கும். எந்த இசைக் கருவியை எந்த சரணத்தில்
எப்படி கையாள வேண்டும் என்ற மேஜிக் யுவனுக்குத் தெரியும்.

யுவனுக்கு ஏராளமான இசைக்கருவிகளை வாசிக்கத் தெரியும்
என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு பியானோ. பாடல்
தொடங்குவதற்கு முன்னதாக யுவன் மெட்டமைக்கும்
பியானோவின் இசையே அந்தப் பாடலுடைய மையக் கருவை
ரசிகர்களிடம் கடத்திவிடும்.

யுவனும், நா. முத்துக்குமாரும் சேர்ந்து காதலை அவர்களுடைய
பாடல்கள் வழி கொண்டாடியிருக்கிறார்கள்.
காதலிக்கப்படுபவர்களுக்கும், காதலில் தோல்வி
அடைந்தவர்களுக்கும் இருந்த ஆறுதல் நா.முத்துக்குமாரின்
வரியில் யுவன் இசையமைத்த பாடல்கள் என்றாகிப் போனது.

1980களில் இளையராஜாவின் ஆதிக்கம் என்றால், 2000களில்
யுவனின் ஆதிக்கம் என்றாகிப் போனது.

'ரெளடி பேபி' பாடல் மட்டுமில்லாமல் யுவன் இசையமைத்த
பல பாடல்கள் இன்றும் பலருடைய ஃபேவரைட் லிஸ்ட்டில்
இருக்கிறது.

பெரிய அளவிலான விருதுகள் இவரைத் தேடி வராவிட்டாலும்,
'கிங் ஆஃப் பிஜிம்', ' யூத் ஐகான்' என்கிற பட்டங்களை யுவனுக்கு
சூட்டி அழகு பார்த்தார்கள் யுவன் ரசிகர்கள்.

'I will be there for you!' என யுவன் தன்னுடைய
ரசிகர்களுக்காக இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.

இசையமைப்பாளர், பாடகர் என்பதைத் தாண்டி
'பியார் பிரேமா காதல்', ' கொலையுதிர் காலம்' போன்ற
படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

2004ஆம் ஆண்டில் '7ஜி ரெயின்போ காலனி' படத்திற்காக
பிலிம்ஃபேர் விருதையும், 2006ஆம் ஆண்டில் 'பருத்திவீரன்'
படத்திற்காக தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர்
விருதையும் பெற்றிருக்கிறார்.
-
---------------------------------

பிபிசி-தமிழ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54617
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12777

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை