உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)
by krishnaamma Yesterday at 10:35 pm

» ஒரு சிறிய கதை : (கோரோனோவில் மறைந்துள்ள கணிதம் )
by krishnaamma Yesterday at 10:34 pm

» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!
by krishnaamma Yesterday at 10:33 pm

» சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ
by krishnaamma Yesterday at 10:31 pm

» சயனத்தில் ராமர்!
by krishnaamma Yesterday at 10:29 pm

» பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்
by krishnaamma Yesterday at 10:27 pm

» டிப்ஸ் கிளி
by krishnaamma Yesterday at 10:24 pm

» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
by krishnaamma Yesterday at 10:21 pm

» சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
by krishnaamma Yesterday at 10:20 pm

» ஆண்டுகள் கடந்தும் இனிக்கும் இசை.- காணொளி
by krishnaamma Yesterday at 10:12 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by krishnaamma Yesterday at 9:56 pm

» உணவுகளின் போட்டோகள் II :)ராஜஸ்தானி கடி பகோடா + சப்பாத்தி !
by krishnaamma Yesterday at 9:48 pm

» ராமர் ஏன் கிரேட்?
by krishnaamma Yesterday at 7:05 pm

» கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்
by krishnaamma Yesterday at 7:02 pm

» 8 இடங்களில் வெயில் சதம்
by krishnaamma Yesterday at 7:00 pm

» நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» மனைவி அழைப்பதெல்லாம்…!
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» மூக்கின் மது விரல் வைத்த ஐயப்பன்!
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சுய பரிசோதனை – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» கூட்டத்திலே இருக்கிறவங்களை எண்ணிக்கிட்டு இருக்காரு…!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by mani2871967 Yesterday at 4:01 pm

» கொரோனா வை மதிக்காதவர்கள்.
by சக்தி18 Yesterday at 1:03 pm

» கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்
by சக்தி18 Yesterday at 12:48 pm

» கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்
by சக்தி18 Yesterday at 12:40 pm

» கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am

» தம்பதியின் பால்கனி மாரத்தான்...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:54 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:52 am

» கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்
by ayyasamy ram Yesterday at 10:14 am

» 'அரசியல் மேடையில் சில சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:50 am

» பாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' கட்டுரையில் எழுதியது:
by ayyasamy ram Yesterday at 7:49 am

» கண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:48 am

» முல்லை முத்தையா தொகுத்த, 'அறிஞர் அண்ணா உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:47 am

» ஜெர்மன் அமைச்சர் தற்கொலை!
by ayyasamy ram Yesterday at 7:36 am

» எப்போதும் வேலை செய்! - ஆன்மிக சிந்தனைகள்-கபீர் தாசர்
by ayyasamy ram Yesterday at 7:33 am

» வேலன்:-பழுதான ஜிப் பைல்களை திறக்க -Remo
by velang Yesterday at 7:18 am

» ஜியோ ரவுட்டர்
by T.N.Balasubramanian Sun Mar 29, 2020 8:35 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -29
by சக்தி18 Sun Mar 29, 2020 6:53 pm

» மனிதன் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:24 pm

» கதாநாயகி – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:22 pm

» பயணம் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:16 pm

» மயிலுக்கு போர்வை..! (ஆறு வித்தியாசம்)
by krishnaamma Sun Mar 29, 2020 5:52 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Sun Mar 29, 2020 5:51 pm

» அவசர தேவைகளுக்கான பயணத்திற்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
by krishnaamma Sun Mar 29, 2020 5:47 pm

» செய்வினை – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 5:44 pm

» அம்மான் பச்சரிசி துகையல் & சத்துமாவு
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

» அம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

» தூக்கம் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 5:30 pm

Admins Online

உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு

உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு Empty உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு

Post by ayyasamy ram on Fri Feb 28, 2020 3:16 pm

சென்னை:

தமிழகம் முழுவதும் 1689 கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்
400-க்கும் மேற்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலைகள் உள்ளன.

இந்த 4 மாவட்டங்களிலும் தினமும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கேன்
குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது.

அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க 2014-ம்
ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள்
அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதை கட்டுப்படுத்த
உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சிவமுத்து என்பவர் பொதுநல
வழக்கும் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர்
முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்
நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் குடிநீர்
ஆலைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதன் காரணமாக கேன்
குடிநீர் உற்பத்தி செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.

எனவே நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமத்தை எளிய முறையில்
பெறுவதற்கான வழிவகைகளை தமிழக அரசு உருவாக்க வலியுறுத்தி கேன்
குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நேற்று மாலை முதல் காலவரையற்ற
வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர்
ராஜசேகரன் கூறியதாவது:-


நிலத்தடிநீர் எடுப்பதை கட்டுப்படுத்த 2014-ம் ஆண்டு சட்டம் கொண்டு
வரப்பட்டது. எனவே 2014-ம் ஆண்டுக்கு பிறகு குடிநீர் ஆலை
தொடங்குவோர்களுக்கே இந்த சட்டம் பொருந்த வேன்டும். ஆனால் 2014-ம்
ஆண்டுக்கு முன்பு குடிநீர் ஆலை நடத்துபவர்களும் உரிமம் பெற வேண்டும்
என உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டு அதற்கான வழிவகைகளை காணும்படி
தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு Empty Re: உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு

Post by ayyasamy ram on Fri Feb 28, 2020 3:16 pm


ஆனால் இதுவரை வழி வகைகள் உருவாக்கப்படவில்லை. தமிழகத்தில் நிலத்தடி
நீர் எடுக்க பாதுகாப்பான பகுதி, அபாயகரமானது, மிகவும் அபாயகரமானது,
அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்ட பகுதி என பல்வேறு வகைப்பாடுகள்
உள்ளன.

ஒரு ஆழ்குழாய் கிணறுக்கும், அடுத்த ஆழ்குழாய் கிணறுக்கும் 175 மீட்டர்
இடைவெளி இருக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளும் உள்ளன.

இதுபோன்ற காரணங்களால் நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் வாங்க
முடியாமல் பலர் தவிக்கின்றனர்.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவால் தமிழகம் முழுவதும் 1300 குடிநீர் ஆலைகள்
மூடப்படும் அபாயத்தில் உள்ளன. இதனால் கேன் குடிநீர் உற்பத்தியை நம்பி
நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறும் 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் உள்ள 1689 குடிநீர் ஆலைகளும் உணவு பாதுகாப்புத்துறை உரிமம்,
பி.ஐ.எஸ்.யிடம் இருந்து தரக்கட்டுப்பாட்டு சான்றிதழுடன் இயங்குகின்றன.
நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் பெறும் வழிமுறைகளை அரசு உடனடியாக
உருவாக்கக்கோரி வேலைநிறுத்தத்தை தொடங்கி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக சென்னை பெருநகர கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க நிறுவனர்
முரளி கூறியதாவது:-

குடிநீர் தேவைக்காக மட்டுமே நாங்கள் நிலத்தடி நீர் எடுக்கிறோம். தொழில்துறையின்
தேவைக்காக எடுக்கவில்லை. குடிநீர் ஆலைகள் எளிய முறையில் நிலத்தடி நீர்
எடுப்பதற்கான உரிமம் பெற அரசு உடனடியாக கொள்கை அடிப்படையில் நடவடிக்கை
எடுக்க வேண்டும்.

சட்டப்படி செயல்படும் எங்கள் ஆலைகளை மூடினால் சட்டவிரோதமாக நிலத்தடிநீர்
எடுப்போர் எண்ணிக்கை அதிகமாகி விடும். இதில் அரசு உடனடியாக நடவடிக்கை
எடுக்காவிட்டால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். குடிநீர் கேன் சப்ளையும் பாதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு Empty Re: உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு

Post by ayyasamy ram on Fri Feb 28, 2020 3:19 pm

கடலூர் பகுதியில் 19 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சீல் வைப்பு

கடலூர்:

தமிழகத்தில் சட்ட விரோதமாக நிலத்தடிநீரை உறிஞ்சி விற்பனை செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வர்த்தக பயன்பாட்டுக்காக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதை கண்காணிக்க கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நிலத்தடிநீரை உறிஞ்சி விற்பனை செய்து வரும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் அன்புசெல்வன் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் பொதுப்பணித்துறை(நிலத்தடி நீர்) செயற்பொறியாளர் தமிழ்செல்வி, கடலூர் தாசில்தார் செல்வகுமார் மற்றும் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் கடந்த 2 நாட்களாக கடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வர்த்தக பயன்பாட்டுக்காக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து சுத்திகரித்து குடிநீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இதில் சட்டவிரோதமாக குடிநீரை உறிஞ்சி எடுத்த 19 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, வர்த்தக பயன்பாட்டுக்காக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க சம்பந்தப்பட்ட நிலையங்கள் பொதுப்பணித்துறையின் நிலத்தடி நீர் பிரிவு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். ஆனால் இந்த அனுமதியை பெறாமல் சிலர் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பது தெரியவந்தது.

இதில் நேற்று முன்தினம் நடந்த சோதனையில் மணவெளி , எம்.புதூர் அரிசிபெரியாங்குப்பம், வழிசோதனைப்பாளையம்ரோடு, காரைக்காடு ஆகிய இடங்களில் உள்ள 7 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கும், நேற்று நடைபெற்ற சோதனையில் கடலூர் முதுநகர் அருகே உள்ள கண்ணாரப்பேட்டை, கங்கமநாயக்கன்பாளையம், புதுக்கடை, சிங்கிரிகுடி, திருமாணிக்குழி, சங்கொலிகுப்பம் ஆகிய இடங்களில் 12 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் என மொத்தம் 19 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சீல் வைத்துள்ளோம் என்றார்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு Empty Re: உரிமையாளர்கள் ஸ்டிரைக்- கேன் குடிதண்ணீர் சப்ளை பாதிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை