உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கொரோனா வை மதிக்காதவர்கள்.
by சக்தி18 Today at 1:03 pm

» ராமர் ஏன் கிரேட்?
by சக்தி18 Today at 1:01 pm

» கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்
by சக்தி18 Today at 12:48 pm

» ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்
by சக்தி18 Today at 12:44 pm

» கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்
by சக்தி18 Today at 12:40 pm

» சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ
by ayyasamy ram Today at 12:33 pm

» கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
by ayyasamy ram Today at 12:30 pm

» சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:56 am

» தம்பதியின் பால்கனி மாரத்தான்...
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:54 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:52 am

» 8 இடங்களில் வெயில் சதம்
by ayyasamy ram Today at 10:29 am

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30
by ayyasamy ram Today at 10:20 am

» கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்
by ayyasamy ram Today at 10:14 am

» 'அரசியல் மேடையில் சில சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:50 am

» பாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' கட்டுரையில் எழுதியது:
by ayyasamy ram Today at 7:49 am

» கண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:48 am

» முல்லை முத்தையா தொகுத்த, 'அறிஞர் அண்ணா உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:47 am

» ஜெர்மன் அமைச்சர் தற்கொலை!
by ayyasamy ram Today at 7:36 am

» எப்போதும் வேலை செய்! - ஆன்மிக சிந்தனைகள்-கபீர் தாசர்
by ayyasamy ram Today at 7:33 am

» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 7:28 am

» வேலன்:-பழுதான ஜிப் பைல்களை திறக்க -Remo
by velang Today at 7:18 am

» ஜியோ ரவுட்டர்
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» ஒரு சிறிய கதை : (கோரோனோவில் மறைந்துள்ள கணிதம் )
by T.N.Balasubramanian Yesterday at 8:13 pm

» இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -29
by சக்தி18 Yesterday at 6:53 pm

» மனிதன் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:24 pm

» கதாநாயகி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:22 pm

» பயணம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:16 pm

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by lakshmi palani Yesterday at 6:15 pm

» மயிலுக்கு போர்வை..! (ஆறு வித்தியாசம்)
by krishnaamma Yesterday at 5:52 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Yesterday at 5:51 pm

» அவசர தேவைகளுக்கான பயணத்திற்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
by krishnaamma Yesterday at 5:47 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by krishnaamma Yesterday at 5:47 pm

» செய்வினை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 5:44 pm

» அம்மான் பச்சரிசி துகையல் & சத்துமாவு
by krishnaamma Yesterday at 5:31 pm

» அம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்
by krishnaamma Yesterday at 5:31 pm

» தூக்கம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 5:30 pm

» பல் இருப்பவன் சாப்பிடும் பலகாரம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
by prajai Yesterday at 4:10 pm

» பழநி மலைக்கோயிலில் வாழும் நூற்றுக்கணக்கான குரங்குகளுக்கு உணவளிக்கும் போலீஸ்காரர்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» இசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» பெயரை மாற்றிய ஜீவா
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» டிப்ஸ் கிளி
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» கேலரி கண்மணி & லோன் அலோன் (செயலிகள்)
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» இதுவே வாழ்வின் அனுபவம் - ஜக்கி வாசுதேவ்
by சக்தி18 Yesterday at 11:58 am

» வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்
by சக்தி18 Yesterday at 11:56 am

Admins Online

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! - Page 3 Empty சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !

Post by krishnaamma on Mon Feb 24, 2020 9:36 pm

First topic message reminder :

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் !

இதெல்லாம் ஒருகாலத்தில் வடஇந்திய  உணவுகளாக பார்க்கப்பட்டன. ஆனால் இப்பொழுது பெரும்பாலும் நிறைய வீடுகளில் இரவு உணவு சப்பாத்தி என்று ஆகிவிட்டது. அதில் பல்வேறு வகைகளை இங்கு பார்க்கலாம். அத்துடன் அனைவருக்கும் பிடித்தமான, all  time  hit  என்று சொல்லக்கூடிய பூரி  வகைகள் மற்றும் பரோட்டா வகைகளையும் இங்கு பார்க்கலாம் புன்னகை

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! - Page 3 OXgCnH9eQDicDQvJV7Iw+20130616_174332 சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! - Page 3 8KIyh7dGQiGBElmtmsw8+IMG-20150910-WA0003


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60927
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12359

Back to top Go down


சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! - Page 3 Empty காரட் இனிப்பு சப்பாத்தி !

Post by krishnaamma on Sat Mar 07, 2020 6:28 pm

காரட் இனிப்பு சப்பாத்தி !

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.

அரைக்க:

வேகவைத்தகாரட் (நடுத்தரமான அளவு) - 2
வெல்லம் அல்லது கருப்பட்டி நாலு டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி அரை டீ ஸ்பூன்

செய்முறை:

காரட்டை வெல்லத்துடன் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டிய சாறுடன் கோதுமை மாவு, நெய், உப்பு, ஏலப்பொடி சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
இந்த மாவை வழக்கம்போல சப்பாத்தியாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் கலவை விட்டு எடுக்கவும் .
அழகிய பிங்க் கலரில் கண்ணைக் கவரும் இந்த சப்பாத்தி, குழந்தைகளுக்கு பிடித்தமான அயிட்டம்.
தித்திப்பாக இருப்பதாலும் குழந்தைகள் விரும்புவர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60927
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12359

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! - Page 3 Empty காரட் சப்பாத்தி !

Post by krishnaamma on Sat Mar 07, 2020 6:31 pm

காரட் சப்பாத்தி !

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
துருவிய காரட் - 2 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.



செய்முறை:

ஒரு பேசினில், துருவிய காரட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கோதுமை மாவு, நெய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
இந்த மாவை வழக்கம்போல சப்பாத்தியாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் கலவை விட்டு எடுக்கவும் .
அழகிய கலரில் கண்ணைக் கவரும் இந்த சப்பாத்தி, குழந்தைகளுக்கு பிடித்தமான அயிட்டம்.
நமக்கும் பார்க்க ஆரஞ்சு கலரில் உள்ள சப்பாத்தி பிடிக்கும். புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60927
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12359

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! - Page 3 Empty காரட் மசாலா சப்பாத்தி !

Post by krishnaamma on Sat Mar 07, 2020 6:33 pm

காரட் மசாலா சப்பாத்தி !

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
துருவிய காரட் - 2 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - அரை டீ ஸ்பூன்
'ஆம் சூர்' எனப்படும் மாங்காய் பொடி - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.



செய்முறை:

ஒரு பேசினில், துருவிய காரட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கரம் மசாலா, 'ஆம் சூர்', கோதுமை மாவு, நெய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
இந்த மாவை வழக்கம்போல சப்பாத்தியாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு எண்ணெய், நெய் கலவை விட்டு எடுக்கவும் .
சுவையான காரட் மசாலா சப்பாத்தி தயார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60927
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12359

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! - Page 3 Empty Re: சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !

Post by krishnaamma on Sat Mar 07, 2020 6:46 pm

முளைப்பயறு ஸ்டஃப்டு பரோட்டா !  / பச்சை பயிறு ஸ்டஃப்டு பரோட்டா !


தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
எலுமிச்சை சாறு - இரண்டு டேபிள் ஸ்பூன்

பூரணத்துக்கு:

முளைப்பயறு - முக்கால் கப்
பனீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் ( தேவையானால் )
பச்சை மிளகாய் - 2
பூண்டு (விருப்பப்பட்டால்) - 3 பல்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

முளைப்பயறை ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
ஆறியவுடன் பூண்டு, பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
வாணலி இல் எண்ணெயைவிட்டு, அரைத்த விழுதை போட்டு , உப்பு போட்டு வதக்கவும்.
வாசனை போன பிறகு, அந்த விழுதுடன் பனீர் துருவல், எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.
கோதுமை மாவை வழக்கம்போல பிசைந்து, சப்பாத்திகளாக இட்டு , நடுவே முளைப்பயறு பூரணத்தை வைத்து, சொப்பு போல செய்து, மெல்ல இடவும்.
பூரணம் வெளியே வராமல் இடுவது என்பது பழக்கத்தில் தான் வரும். ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
சரியாக வராவிட்டால், ஒரு சப்பாத்தி இன் மேல் பூரண கலவை வைத்து பரத்தி, மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து, ஓரங்களை ஒட்டி மேலடுவாக தோசைக்கல்லில் போட்டு, இரண்டுபக்கமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
சுவையான, 'பச்சை பசேல்' என்கிற முளைப்பயறு ஸ்டஃப்டு பரோட்டா தயார்.
வழக்கம் போல கெட்டி தயிர் போதும் இதற்கு தொட்டுக்கொள்ள புன்னகை

குறிப்பு : இதில் எலுமிச்சை சாறுக்கு பதில் தக்காளியும் சேர்க்கலாம். அல்லது ஆம் சூர் சேர்க்கலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60927
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12359

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! - Page 3 Empty Re: சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !

Post by krishnaamma on Sat Mar 07, 2020 6:56 pm

வெஜிடபிள் ஸ்டஃப்டு பரோட்டா !

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
காய்கறிக்கலவை (பட்டாணி, பீன்ஸ், கேரட் போன்றவை) - ஒரு கப்
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - அரை கப்
இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
கொத்துமல்லி பொடியாக நறுக்கியது - 2 டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

காய்கறிகளை அளவான தண்ணீரில் உப்பு சேர்த்து, வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
வாணலி இல் எண்ணெயை விட்டு, அரைத்த விழுது, மசித்த உருளைக்கிழங்கு, மசித்த காய்கறி கலவை, எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
இதுதான் பூரணம்; இது நல்லா கெட்டியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
சமமான உருண்டைகளாக பிரித்து உருட்டி வைத்துக் கொள்ளவும்.
கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளுங்கள்.
பிசைந்த மாவிலிருந்து, கொஞ்சம் எடுத்து சின்ன சப்பாத்தியாக இட்டு, அதன் நடுவே ஒரு காய்கறி உருண்டையை வைத்து, கொழுக்கட்டை போல மூடி, கைகளால் பரத்தி, பிறகு மெல்ல சப்பாத்தியாக இடவும்.
பிறகு தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு எடுங்கள்.
அருமையான, வெஜிடபிள் ஸ்டஃப்டு பரோட்டா ரெடி.
எஸ், இதற்கும் தயிர் தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60927
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12359

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! - Page 3 Empty லட்சா பரோட்டா / கோதுமை பரோட்டா !

Post by krishnaamma on Sat Mar 07, 2020 8:01 pm

லட்சா பரோட்டா / கோதுமை பரோட்டா !

நாம் மைதாவில் பரோட்டா செய்வோம் வடக்கே கோதுமை பரோட்டாவும் செய்வார்கள். பிரி பிரியாக நன்றாக இருக்கும் அது. அதை எப்படிச்செய்வது என்று இங்கே பார்க்கலாம்.

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
சோடா உப்பு - அரை சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்னெய் - நெய் கலவை - தேவையான அளவு.

செய்முறை:

மேலே கூறியுள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
நன்கு அழுத்திப் பிசைந்து, சிறிது நேரம் வைத்திருக்கவும்.
பிறகு அதிலிருந்து சிறிது மாவை எடுத்து, நன்கு மெல்லிய, பெரிய சப்பாத்தியாக இடவும்.
அதைப் புடவை கொசுவம் போல மடித்துக் கொள்ளவும்.
இதுவும் பழக்கத்தில் தான் வரும்.
மடித்ததை வட்டமாக சுருட்டி, சற்றுக் கனமாக இடவும்.
இதேபோல மொத்த மாவையும் செய்து கொள்ளவும்.
தோசைக்கல்லில் மிதமான தீயில், எண்ணெய், நெய் சேர்த்து இரண்டு பக்கங்களும் நன்கு வேகும் வரை பொறுத்திருந்து எடுக்கவும்.
ருசியாக இருக்கும் இந்த கோதுமை பரோட்டா.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60927
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12359

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! - Page 3 Empty புல்கா / அதாவது மிருதுவான சப்பாத்தி !

Post by krishnaamma on Sat Mar 07, 2020 8:12 pm

புல்கா / அதாவது மிருதுவான சப்பாத்தி !

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்
உப்பு - அரை டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

கோதுமை மாவுடன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 'மெத்' என்று பிசைந்து கொள்ளவும்.
அந்த மாவிலிருந்து சிறிதளவு எடுத்து, ஓரளவிற்கு மெல்லிய சப்பாத்தியாக இடவேண்டும்.
பிறகு, தோசைக்கல்லை காய்ந்ததும், இட்ட சப்பாத்தியைப் போட்டு, இருபுறமும் திருப்பித் திருப்பிவிடவும்.
பிறகு, பக்கத்து அடுப்பில், மிதமான தீயில், சப்பாத்தி சுடும் வலையிலோ அல்லது நேரடியாக அடுப்பிலோ சப்பாத்தியைப் போட்டால் அது நன்கு எழும்பி வரும்.
அவ்வாறு வந்தபின், திருப்பிவிட்டு மறுபுறமும் வெந்ததும் எடுத்து விடவும்.
இதுதான், எண்ணெயில்லாத புல்கா.
புல்காவை எடுத்தபிறகு அதன் மேலே விருப்பம் போல, நெய் தடவி அல்லது அப்படியேவும் சாப்பிடலாம்.
எந்த சப்ஜியுடனும் இது நன்றாக இருக்கும்.

குறிப்பு: புல்காவுக்காக, சப்பாத்தி இடும் போது ஒரே சீராகத் இடவேண்டும். ஒரு பக்கம் கனமாக வும், ஒரு பக்கம் லேசாகவும் இருந்தால் எழும்பி வராது. மாவு நல்ல 'மெத்' என்று இருக்கவேண்டும். மேலும், எப்பொழுதுமே சப்பாத்தி இடும்பொழுது, ஒரே பக்கமாக இடவேண்டும், திருப்பி போட்டு திருப்பி போட்டு இடக்கூடாது. புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60927
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12359

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! - Page 3 Empty காக்ரா / கரகரப்பான சப்பாத்தி !

Post by krishnaamma on Sat Mar 07, 2020 8:17 pm

காக்ரா / கரகரப்பான சப்பாத்தி !

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்
நெய் ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை:

மாவை உப்பு சேர்த்து, ‘மெத்’தென்று பிசைந்து கொள்ளவும்.
மிக மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போடவும்.
எண்ணெய் தடவத் தேவையில்லை.
இரண்டு சப்பாத்திகளை ஒன்றன் மேல் ஒன்றாக தோசைக்கல்லில் போட்டு, கனமான துணி கொண்டு இருபுறமும் நன்கு அழுத்தி எடுங்கவும்.
சப்பாத்திகள் அப்பளம் போல நன்கு மொறுமொறுப்பாக வரும்வரை, இப்படியே திருப்பித் திருப்பிவிட்டு, துணியால் அழுத்திவிட்டு எடுத்தால், ‘கரகர’ காக்ரா ரெடி.
காக்ராவை பல நாட்களுக்கு வைத்திருந்து சாப்பிடலாம். கெட்டுப்போகாது.
பயணங்களுக்கு ஏற்றது.

குறிப்பு: இதில் மேத்தி இலைகள் அதாவது வெந்தயக் கீரை  இலைகள் சேர்த்தும் செய்யாலாம், அல்லது மசாலா போட்டும் செய்யலாம். மீந்து போன சப்பாத்திகளை ஓவனில் காயவைத்தும் வைத்துக் கொள்ளலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60927
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12359

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! - Page 3 Empty நான்' .............+ 'பட்டர் நான்'

Post by krishnaamma on Sat Mar 07, 2020 9:28 pm

நான்' .............+ 'பட்டர் நான்'

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! - Page 3 WdfCytAQVuyHPINrE5xC+20141122_113121

அடுப்பில் காட்டப்படும் 'நான்' !

வட இந்திய உணவுகளில் எல்லோருக்குமே ரொம்ப பிடிக்கும் இது .................இதை செய்ய முட்டை வேண்டும்...................... தந்துரி அடுப்பு வேண்டும்............... அது இது என்று ரொம்ப சொல்வார்கள்................ஆனால் நம்ப வேண்டாம் கூடாது கூடாது கூடாது இது ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக் கூடியது.......நிஜம் தான்......................நாம் சாதாரணமாக செய்யும் ரொட்டியை விட இதை சுலபமாக செய்யலாம்..........நான் அப்படித்தான் 'நான்' செய்தேன்...................நீங்களும் செய்து பார்க்கலாம் புன்னகை

தேவையானவை :

மைதா 2 கப்
எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை 1 டீ ஸ்பூன் ( நன்கு பொடிக்கவும் )
உப்பு 1/2 ஸ்பூன்
பேகிங் சோடா 1/2 ஸ்பூன்
தயிர் 1/4 கப் ( குழப்பி வைக்கவும் )

செய்முறை:

மைதாவை பேக்கிங் சோடா போட்டு சலிக்கவும்.
அதில் நடுவில் குழி செய்து எண்ணெய், சர்க்கரை, உப்பு எல்லாம் போட்டு கலக்கவும்.
இப்போ குழப்பி வைத்துள்ள தயிரை அதில் விடவும்.
மாவை மிருதுவாக பிசையவும்.
அநேகமாய் தண்ணிரே வேண்டி இருக்காது.
இந்த மாவை சுமார் 6 - 7 நிமிடங்கள் தொடர்ந்து ( கடிகாரத்தை பார்த்து கொண்டு ) பிசையவேண்டும்.
அப்படி பிசைந்த மாவை சுமார் 4 மணி நேரம் ஊர வைக்கவும்.
இந்த நேரம் சென்னை வாசிகளுக்கு மட்டும் தான்புன்னகை .............குளிர் பிரதேசம் என்றால் 12 மணி நேரம் கூட வைக்கலாம்.
அல்லது இரவே மாவு பிசைந்து வைத்து விட்டு காலை செய்யலாம்..............சரியா?
ஸோ, இப்போ மாவு தயார்.
மேலே சொன்ன அளவிற்கு சுமார் 8 வட்டமான 'நான்கள்' வரும்.
வட்டமாக இடாமல் 'ஓவல்' ஆக கூட இடலாம்.............. ஆனால் அப்படி செய்தால் கல்லில் இருந்து விழுந்து விடுகிறதுசோகம்.................எனவே தான் வட்டம் புன்னகை
மொத்த மாவையும் 8 சமமான உருண்டைகளாக பிரித்து உருட்டி வைத்துகொள்ளவும்.
மாவை நல்ல கனமான சப்பாத்தி போல வட்டமாக இடவும்.
கையை தண்ணீரில் நனைத்துக்கொண்டு, அதை சப்பாத்தி போல இட்டு வைத்திருக்கும் பகுதி இல் தடவவும்.
கைப்பிடி உள்ள தோசைக்கல்லில் ஈரமான பகுதி படும்படி 'நானை' போடவும்.
ஒரே நிமிடத்தில் அதில் கொப்புளங்கள் போல வரும், அந்த நேரத்தில் மெல்ல தோசைக்கல்லை எடுத்து அடுப்பிற்கு நேரே காட்டவும்.
கண்டிப்பாக 'நான்' அடுப்பில் விழாது................கொஞ்சம் சாய்த்து சாய்த்து முழுவதும் நெருப்பில்  காட்டவும்.
அது வெந்ததும், மெல்ல தோசைக்கல்லை பழயபடி அடுப்பில் வைத்து விட்டு, அடுப்பை சின்னதாக்கவும்.
இப்போது தோசைக்கல்லில் இருந்து 'நானை' எடுக்கவும்.
உங்களுக்கு பிடித்த 'சைட் டிஷ்' உடன் பரிமாறுங்கள்.
அவ்வளவுதான் சூப்பர்...........மெத் மெத் என்கிற  'ப்ளைன் நான்' ரெடி.
'பட்டர் நான்' வேண்டும் என்றால்....................எடுத்த சூடான நானில் கொஞ்சம் வெண்ணையை தடவி பரிமாறவும்........அவ்வளவு தான் .

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! - Page 3 J1XbUpV0QcSuYh1N4lIX+20141122_113628

தயாரான 'பட்டர் நான்' தொட்டுக்கொள்ள 'ஆலு சோளேயுடன்'

குறிப்பு : ஒருவேளை................ஒருவேளை..................'நான்' விழுந்து விட்டால் அடுத்த முறை நிறைய ஈரம் இருக்கும்படி தண்ணீர் தடவவும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60927
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12359

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! - Page 3 Empty சோளே பட்டூரா !

Post by krishnaamma on Thu Mar 19, 2020 8:21 pm

சோளே பட்டூரா !

அடுத்து சோளே பட்டூரா அல்லது சனா பட்டூரா: வட இந்தியாவைப் பொறுத்த வரையில் இது ஒரு முக்கிய உணவு. தவறாமல் விருந்துகளில் இடம் பிடிக்கும் ஒன்று
இதற்குச் சோளே அல்லது சனா செய்ய முதல் நாளே கொண்டைக்கடலையை ஊற வைக்க வேண்டும். இது செய்ய வெள்ளைக் கொண்டைக்கடலையே ஏற்றது.

பட்டூரா செய்ய தேவையானவை :

மைதா மாவு 1/2 கிலோ
வெண்ணெய் அல்லது டால்டா(விருப்பம்போல்) 100 கிராம்
உப்பு தேவையான அளவு
ஒரு சிட்டிகை சமையல் சோடா
தயிர் ஒரு கப்
பொரிக்க எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை :

முதலில் மாவைப் பிசைந்து வைத்துக்கொள் ளவும் , மாவு நன்கு ஊறினால் தான் பூரி உப்புக்கொண்டு கரகரப்பாயும் கையால் பிய்த்தால் உள்ளே பொரபொரவென்றும் வரும்.

ஒரு அகலத் தட்டு அல்லது பேசனில் சிட்டிகை சோடாவைப் போட்டுக்கொண்டு நூறுகிராம் வெண்ணெயைப் போட்டு நன்கு குழைக்கவும். குழைக்க்க் குறைந்த்து ஐந்திலிருந்து பத்து நிமிஷம் ஆகவேண்டும். இப்போது தேவையான உப்பைச் சேர்த்துக் கலக்கவும். இதைச் சிறிது நேரம் நன்கு கலந்து விட்டுப்பின்னர் மைதாமாவைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்துக்கொண்டே கலக்கவும். மாவும், வெண்ணெய் விழுதும் நன்கு கலக்க வேண்டும். கலக்க்க் கலக்க நம் கைகளுக்கே மாவின் வழவழப்புத் தன்மை மாறி பொரபொரவென வருவது புரியும். இப்போது கொஞ்சம் கொஞ்சமாய்த் தயிரைச் சேர்க்கவும். மாவை நன்கு பிசையவும். மாவு நன்கு கெட்டியாகப் பிசைந்த்தும், ஒரு ஈரத்துணியால்  மாவை  மூடி வைக்கவும். குறைந்த்து ஆறு மணி நேரமாவது மாவு ஊற வேண்டும். நடு நடுவே எடுத்து மாவைப் பிசைந்து திரும்ப மூடி வைக்கவும்.

சன்னா செய்ய தேவையானவை :

1 கப் ஊறவைத்த வெள்ளை கொத்துக்கடலை
2 உருளை கிழங்கு
2 வெங்காயம்
1 துண்டு இஞ்சி
சிறிய எலுமிச்சை அளவு புளி
1 ஸ்பூன் கடுகு
1/4 ஸ்பூன் மஞ்சள் பொடி
1 ஸ்பூன் மிளகாய்  பொடி
1/2 ஸ்பூன் கரம் மசாலா
1 சின்ன துண்டு வெல்லம்
உப்பு
ஒரு சிட்டிகை சோடா உப்பு
2 ஸ்பூன் எண்ணை அல்லது டால்டா

செய்முறை :

ஒரு குக்கரில் ஊறிய கொத்துக்கடலை மற்றும் உருளை கிழங்கை உப்பு மற்றும் சோடா உப்பு சேர்த்து வேகவிடவும்.
வெந்ததும் அதிலிருந்து 2 ஸ்பூன் கொத்துக்கடலை , வெங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும் .
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு கடுகு தாளித்து அரைத்த விழுது போட்டு வதக்கவும்.
மிளகாய் பொடி மஞ்சள் பொடி சேர்க்கவும்.
நன்கு வதங்கியதும் புளியை கரைத்து விடவும்.
அது நன்கு கொதிக்கும் போது, வெந்த கடலை மற்றும் உருளைக்கிழங்கை போடவும்.
கரம் மசாலா பொடி யை போடவும்.
நன்கு கொதித்து  கொஞ்சம் இறுகும் வரை பொறுக்கவும்.  
வெல்லத்தை தட்டி போடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.

பட்டூரா செய்யும் விதம்: பிசைந்து வைத்த மாவைச் ரொட்டிக்கு எடுப்பது போல், உருண்டை எடுத்துக்கொண்டு பூரியாக இடவும். எண்ணெயைக் காய வைத்துப் பொரித்தெடுக்கவும். பூரி நன்கு உப்பிக்கொண்டு வெண்மையாக அப்படியே உப்பல் குறையாமல் இருக்கும்.

செய்து வைத்துள்ள சன்னா வுடன் பரிமாறவும். தேவையானால் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி , கொத்துமல்லி தூவி பரிமாறலாம்.
புளிப்பு அதிகம் தேவைபடுபவர்கள், சன்னா மேல் எலுமிச்சை பிழிந்து கொள்ளலாம்.

குறிப்பு: நாம் இட்லி மாவு பிரிட்ஜ் இல் வைத்திருப்பது போல பஞ்சாபிகள் சோளே பட்டுராவிற்கு மாவை தாயாராக பிரிட்ஜ் இல் வைத்திருப்பார்களாம் புன்னகை


Last edited by krishnaamma on Thu Mar 19, 2020 8:49 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60927
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12359

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! - Page 3 Empty சௌதி 'கர கர' சப்பாத்தி !

Post by krishnaamma on Thu Mar 19, 2020 8:38 pm

சௌதி 'கர கர' சப்பாத்தி !

அங்கு கடை இல் இது போல் கிடைக்கும், மிக அருமையாக இருக்கும். வாங்கி வைத்துக் கொள்வோம். மாலை டீ அல்லது காபியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். வயிற்றுக்கு நிறைவாகவும் இருக்கும் புன்னகை

தேவையான பொருட்கள்:

- 1 கப் கோதுமை மாவு
- 1 டீஸ்பூன் எள் (வெள்ளை அல்லது கருப்பு)
- 1 ஸ்பூன் பெருஞ்சீரகம் அல்லது சோம்பு போடலாம்
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- உப்பு


செய்முறை:

- அனைத்து பொருட்களையும் எண்ணெயுடன் கலக்கவும்.
- தண்ணீரை தெளித்தது, சப்பாத்திமாவு போல கலக்கவும்.
- இந்த மாவில் சப்பாத்திகளை இட்டு, இரண்டு பக்கமும் தோசை கல்லில் போட்டு நன்கு சூடாக்கவும்.
-பிறகு அதை மைக்ரோவேவ் ஓவனில் (ஒவ்வொரு பக்கமும் ஒரு நிமிடம்) வைத்து நல்ல கரகரப்பாக வரும்வரை காய்ச்சி எடுக்கவும்.
- காற்று இறுக்கமான டப்பாக்களில் சேமிக்கவும்.
- உங்கள் மாலை தேநீருடன் ஒரு சிற்றுண்டியாக இதை சாப்பிடுங்கள்!
- நல்ல மசாலா வாசனையுடன் கரகரப்பான புதுவித சிற்றுண்டி இது.
- ஒருமுறை செய்து பாருங்கள் , உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
- பிரயாணங்களை ஏற்றது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60927
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12359

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! - Page 3 Empty மைதா பரோட்டா !

Post by krishnaamma on Thu Mar 19, 2020 8:41 pm

மைதா பரோட்டா !

தேவையானவை:

மைதா  மாவு - 2 கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
சோடா உப்பு - அரை சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.

செய்முறை:

மேலே கூறியுள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
நன்கு அழுத்திப் பிசைந்து, சிறிது நேரம் வைத்திருக்கவும்.
பிறகு அதிலிருந்து சிறிது மாவை எடுத்து, நன்கு மெல்லிய, பெரிய சப்பாத்தியாக இடவும்.
அதைப் புடவை கொசுவம் போல மடித்துக் கொள்ளவும்.
இதுவும் பழக்கத்தில் தான் வரும்.
மடித்ததை வட்டமாக சுருட்டி, சற்றுக் கனமாக இடவும்.
இதேபோல மொத்த மாவையும் செய்து கொள்ளவும்.
தோசைக்கல்லில் மிதமான தீயில், எண்ணெய், நெய் சேர்த்து இரண்டு பக்கங்களும் நன்கு வேகும் வரை பொறுத்திருந்து எடுக்கவும்.
ருசியாக இருக்கும் இந்த மைதா பரோட்டா.


Last edited by krishnaamma on Thu Mar 19, 2020 8:48 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60927
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12359

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! - Page 3 Empty மைதா பரோட்டா 2!

Post by krishnaamma on Thu Mar 19, 2020 8:46 pm

மைதா பரோட்டா 2!

தேவையானவை:

மைதா  மாவு - 2 கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
சோடா உப்பு - அரை சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.


செய்முறை:

மேலே கூறியுள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
நன்கு அழுத்திப் பிசைந்து, சிறிது நேரம் வைத்திருக்கவும்.
பிறகு அதிலிருந்து சிறிது மாவை எடுத்து, நன்கு மெல்லிய, பெரிய சப்பாத்தியாக இடவும்.
இதே போல எல்லா மாவையும் பெரிய பெரிய சப்பாத்திகளாக இட்டுக்கொள்ளவும்.
முதலில் ஒன்றை மேடைமேல் வைத்து, அதன் மேல் நெய்யை தாராளமாக தடவவும்.
அடுத்த சப்பாத்தியை அதன் மேல் போடவும்.
இதேபோல குறைந்தது ஆறு சப்பாத்திகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கவும்.
பிறகு அதை மெல்ல சுருட்டவும்.
இப்புதுசு அதை குறுக்கு வாட்டில் ஆறு துண்டுகளாக 'கட்' செய்து கொள்ளவும்.
இப்பொழுது அதை கனமான பரோட்டாவாக இடவும்.
தோசைக்கல்லில் மிதமான தீயில், எண்ணெய், நெய் சேர்த்து இரண்டு பக்கங்களும் நன்கு வேகும் வரை பொறுத்திருந்து எடுக்கவும்.
வரி வரியாக, ருசியாக இருக்கும் இந்த மைதா பரோட்டா.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60927
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12359

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! - Page 3 Empty Re: சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை