உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நீடுழி வாழ்க இவர்கள் சமூகம்.
by T.N.Balasubramanian Today at 8:34 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:29 am

» வேலன்:-வார்த்தைகளை கண்டுபிடிக்கும் கட்டங்கள் உருவாக்க-Word Search Architect
by velang Today at 7:55 am

» வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft
by velang Today at 7:54 am

» நியூயார்க்கில் குறைகிறது கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Today at 7:16 am

» கொரோனா பீதியால் கப்பலில் இருந்து கடலில் குதித்து பயணிகள்
by ayyasamy ram Today at 7:13 am

» சராசரி வெப்பநிலை நாடு முழுதும் குறைவு
by ayyasamy ram Today at 7:03 am

» கிளிண்டன்-மோனிகா உறவை அம்பலப்படுத்திய லிண்டா காலமானார்
by ayyasamy ram Today at 6:59 am

» ஒன்றல்ல,இரண்டல்ல பரிசோதனையில் 10 மருந்துகள்:டிரம்ப்
by ayyasamy ram Today at 6:56 am

» தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா?
by சக்தி18 Yesterday at 8:02 pm

» 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» கொரொனா ஆபத்தை முன் கூட்டியே சொன்ன இளம் சோதிடர் அபிக்கியா
by சக்தி18 Yesterday at 7:59 pm

» சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்கள்
by ஞானமுருகன் Yesterday at 7:56 pm

» Prabhakaran - Vaazhvum Maranamum ~ Pa. Raghavan
by i6appar Yesterday at 6:29 pm

» கேட்டதும்.., கொடுப்பவனே..?, கிருஷ்ணா..!, கிருஷ்ணா..!, கீதையின்..!, நாயகனே..?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கடவுள் ஏன் கல்லானான்-
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» மலர்களே மலர்களே இது என்ன கனவா
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» தத்துவம் மச்சி தத்துவம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» எங்கிருந்தாலும் வாழ்க
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» வாழ்க்கை தத்துவம்!
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» என் குட்டித் தேவதைக்கு…
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» உணர்ந்துகொள் !
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» தேடல்!- அவள் விகடனில் வாசித்த ஒரு சிறு கவிதை.
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» – பிரிவிற்குப் பிறகான காலம் –
by ayyasamy ram Yesterday at 3:02 pm

» வசந்தத்தில் வேம்பின் இனிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:17 am

» சென்னையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ மூலம் காய்கறிகள் விநியோகம்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:39 am

» இராவண - அமிஷ் திரிபாதியின் நாவல் கிடைக்குமா
by kargan86 Wed Apr 08, 2020 10:06 pm

» புத்தகம் கிடைக்குமா
by kargan86 Wed Apr 08, 2020 9:57 pm

» மேத்தா காமிக்ஸ் பகுதி - 1
by kargan86 Wed Apr 08, 2020 9:41 pm

» நாவல்கள் வேண்டும்
by kargan86 Wed Apr 08, 2020 9:35 pm

» கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:45 pm

» கொரோனா வைரஸ்:காசநோய் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்தும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் 6 மடங்கு குறைவு
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:41 pm

» தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 7:06 pm

» கருத்துள்ள தத்துவ பாடல்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 6:58 pm

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8
by ayyasamy ram Wed Apr 08, 2020 6:12 pm

» கொரோனாவை விரட்ட எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் கண்டறிந்த ஐஐடி மாணவர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 08, 2020 4:19 pm

» கொரானாவிற்கு ஏன் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை
by சக்தி18 Wed Apr 08, 2020 4:19 pm

» துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா
by சக்தி18 Wed Apr 08, 2020 4:17 pm

» மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai
by சக்தி18 Wed Apr 08, 2020 4:07 pm

» உடற்பயிற்சிகள் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.
by ayyasamy ram Wed Apr 08, 2020 3:33 pm

» அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணிகளில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள்
by ayyasamy ram Wed Apr 08, 2020 3:16 pm

» மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.
by T.N.Balasubramanian Wed Apr 08, 2020 11:25 am

» மாணவர்கள் இணையதளம் மூலம் சுயமாகக் கற்கலாம்
by ayyasamy ram Wed Apr 08, 2020 11:22 am

» வேலன்:-கணிணியில் உள்ள சாப்ட்:வேர்களின் கீ யை கண்டுபிடிக்க.-My Key Finder.abelssoft
by velang Wed Apr 08, 2020 9:10 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by velang Wed Apr 08, 2020 9:08 am

» உனக்கான உணவை உற்பத்தி செய்ய பழகு...!!
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:57 am

» இஞ்சி, தனியா, கறிவேப்பிலை, வேப்பம் பூ என, இந்த நான்கில், ஏதாவது ஒரு துவையல் தினசரி உணவில் இருக்க வேண்டும்.
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:35 am

» சளி, இருமல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.
by ayyasamy ram Wed Apr 08, 2020 8:33 am

Admins Online

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !

Post by krishnaamma on Mon Feb 24, 2020 9:36 pm

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் !

இதெல்லாம் ஒருகாலத்தில் வடஇந்திய  உணவுகளாக பார்க்கப்பட்டன. ஆனால் இப்பொழுது பெரும்பாலும் நிறைய வீடுகளில் இரவு உணவு சப்பாத்தி என்று ஆகிவிட்டது. அதில் பல்வேறு வகைகளை இங்கு பார்க்கலாம். அத்துடன் அனைவருக்கும் பிடித்தமான, all  time  hit  என்று சொல்லக்கூடிய பூரி  வகைகள் மற்றும் பரோட்டா வகைகளையும் இங்கு பார்க்கலாம் புன்னகை

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! OXgCnH9eQDicDQvJV7Iw+20130616_174332 சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! 8KIyh7dGQiGBElmtmsw8+IMG-20150910-WA0003

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12432

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty Re: சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !

Post by krishnaamma on Mon Feb 24, 2020 9:41 pm

சாதாரண சப்பாத்தி !

தேவையானவை :

1 கப் கோதுமை மாவு
2 கரண்டி எண்ணெய் அல்லது நெய்
உப்பு

செய்முறை:

ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
அரை மணி நேரம் அப்படியே வைத்துவிடவும்.
பிறகு சிறிது சிறிதாக உருட்டிக்கொள்ளவும்.
சப்பாத்தியாக இடவும்.
அடுப்பில் தோசைக்கல்லை போடவும்.
கல் சூடானதும், ஒரு சப்பாத்தியை எடுத்து அதில் போடவும்.
இருபுறமும் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி சப்பாத்திகள் செய்யுங்கள்.
மிருதுவான சப்பாத்திகள் தயார்.
ஏதாவது ஒரு சைடிஷ் செய்து , அத்துடன் சப்பாத்தியை பரிமாறவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12432

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty மிகவும் மிருதுவான சப்பாத்தி !

Post by krishnaamma on Mon Feb 24, 2020 9:41 pm

மிகவும் மிருதுவான சப்பாத்தி !

தேவையானவை :

1 கப் கோதுமை மாவு
1 கரண்டி நல்லெண்ணெய்
2 கரண்டி நெய்
உப்பு

செய்முறை:

ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
அரை மணி நேரம் அப்படியே வைத்துவிடவும்.
பிறகு சிறிது சிறிதாக உருட்டிக்கொள்ளவும்.
சப்பாத்தியாக இடவும்.
அடுப்பில் தோசைக்கல்லை போடவும்.
கல் சூடானதும், ஒரு சப்பாத்தியை எடுத்து அதில் போடவும்.
ஒரு துணியால் அழுத்திவிடவும்.
அது 'புஸு புஸு' என்று உப்பி வரும்.
இருபுறமும் திருப்பிப்போடவும்.
அதை வெளியே எடுத்து ஒரு தட்டில் போட்டு, இரண்டுபக்கமும் நெய் தடவவும்.
அவ்வளவுதான், மிருதுவான சப்பாத்திகள் தயார்.
ஏதாவது ஒரு சைடிஷ் செய்து , அத்துடன் சப்பாத்தியை பரிமாறவும்.

Last edited by krishnaamma on Sat Mar 07, 2020 8:12 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12432

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty சுக்கா ரொட்டி !

Post by krishnaamma on Mon Feb 24, 2020 9:42 pm

சுக்கா ரொட்டி !

தேவையானவை :

1 கப் கோதுமை மாவு
2 கரண்டி நல்லெண்ணெய்

செய்முறை:
ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
அரை மணி நேரம் அப்படியே வைத்துவிடவும்.
பிறகு சிறிது சிறிதாக உருட்டிக்கொள்ளவும்.
சப்பாத்தியாக இடவும்.
அடுப்பில் தோசைக்கல்லை போடவும்.
கல் சூடானதும், ஒரு சப்பாத்தியை எடுத்து அதில் போடவும்.
சப்பாத்தியை தவாவில் வைத்த பிறகு, 2-3 முறை திரும்பவும்.
இப்போது அதை நேரடியாக நெருப்பில் காட்டவும்.
அப்பளம் சுடுவது போல இரண்டுபக்கமும் சுட்டு எடுக்கவும்.
கருகாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
அதை நெருப்பிலிருந்து அகற்றி சைட் டிஷ் உடன் உடனே பரிமாறவும்.
சப்பாத்தி சூடாக இருக்கும்போது இதை நீங்கள் சாப்பிட வேண்டும்.
இதில் எண்ணெய் இல்லை; என்றாலும் இது 'மெத் மெத்' என்று இருக்கும்.
எண்ணெய் இல்லதாதால் , வழக்கம் போல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12432

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty Re: சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Feb 25, 2020 10:51 am

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! 3838410834 சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! 103459460 சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 13703
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3518

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty Re: சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !

Post by krishnaamma on Wed Feb 26, 2020 8:33 pm

நன்றி ஐயா, வெகுநாட்களாக இந்தப்பக்கம் நான் வரவில்லை...........இனி கொஞ்சம் கொஞ்சமாக போடவேண்டும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12432

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty வெந்தயக் கீரை சப்பாத்தி / மேத்தி பரோட்டா

Post by krishnaamma on Thu Mar 05, 2020 9:20 am

வெந்தயக் கீரை சப்பாத்தி / மேத்தி பரோட்டா

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்,
கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்,
வெந்தயக் கீரை - 2 கட்டு ( நன்கு வளர்ந்த வெந்தயக் கீரைதான் இதற்கு வேண்டும் )
வறட்டு மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன், (தேவையானால் )
பச்சை மிளகாய் 8 - 10
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.

செய்முறை:

வெந்தயக் கீரையை இலைகளாக ஆய்ந்து கொண்டு, தண்ணீரில் அலசி, வடியவிடுங்கள்.
தனியே ஒரு கிண்ணத்தில், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
மற்றும் ஒரு பேசினில், ஒரு டீஸ்பூன் நெய் + ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, கோதுமை மாவு, கடலை மாவு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி எல்லாம் சேர்த்து, தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும்.
இப்பொழுது ஆய்ந்த கீரையைப் போட்டு, நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
உப்பு மிளகாய் கலவையையும் சேர்த்து நன்கு பிசையவும்.
தேவையானால் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் மூடி வைத்திருங்கள்.
பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் பவுன் நிறமாக எடுங்கள்.
சுவையான மேத்தி பரோட்டா தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள கெட்டித்தயிர் மற்றும் ஏதாவது ஊறுகாய் போதும்.

குறிப்பு: எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12432

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty Re: சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !

Post by krishnaamma on Thu Mar 05, 2020 9:21 am

மேற்கோள் செய்த பதிவு: 1313812

நன்றி ஐயா, என்னுடைய அந்த திரி பார்த்திர்களா ஐயா?...உங்களுக்காகவே போட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12432

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty கொத்துமல்லி சப்பாத்தி !

Post by krishnaamma on Thu Mar 05, 2020 9:26 am

கொத்துமல்லி சப்பாத்தி !

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்,
கொத்துமல்லி - 2 கட்டு
பச்சை மிளகாய் 8 - 10
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.

செய்முறை:

கொத்துமல்லியை  இலைகளாக ஆய்ந்து கொண்டு, தண்ணீரில் அலசி, வடியவிடுங்கள்.
தனியே ஒரு கிண்ணத்தில், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
மற்றும் ஒரு பேசினில், ஒரு டீஸ்பூன் நெய் + ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, கோதுமை மாவு சேர்த்து, தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும்.
இப்பொழுது ஆய்ந்த கொத்துமல்லியைப் போட்டு, நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
உப்பு மிளகாய் கலவையையும் சேர்த்து நன்கு பிசையவும்.
தேவையானால் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் மூடி வைத்திருங்கள்.
பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் கருகாமல் எடுங்கள்.
சுவையான, பச்சை பசேல் என்கிற கொத்துமல்லி சப்பாத்தி தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், தேவையானால் கெட்டித்தயிர் போதும்.

குறிப்பு: எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12432

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty காலிஃப்ளவர் பரோட்டா !

Post by krishnaamma on Thu Mar 05, 2020 5:11 pm

காலிஃப்ளவர் பரோட்டா !

உலகத்திலேயே மிகவும் சுவையான பரோட்டா ஒன்று உண்டு என்றால் அது இது தான் என்பது என் அபிப்பிராயம். அத்தனை நன்றாக இருக்கும் இந்த காலிஃப்ளவர் பரோட்டா புன்னகை

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்,
பொடியாக துருவிய காலிஃப்ளவர் - 2 கப்
பச்சை மிளகாய் 8 - 10
கரம் மசாலா 1  ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
அதில் இப்பொழுது பொடியாக துருவிய காலிஃப்ளவர் மற்றும் கரம் மசாலா போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
இப்பொழுது , கொஞ்சம் கொஞ்சமாக கோதுமை மாவை போட்டு கலக்கவும்.
தண்ணீர் துளியும் விடவேண்டாம்.
பூவில் இருக்கும் ஈரமே போதும்.
அநேகமாய் இரண்டு கப் மாவும் கலக்க வரும்.
ஒருவேளை, எல்லா மாவும் போட்டு பின் தண்ணீர் தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் விட்டுக்கொள்ளுங்கள். புன்னகை
மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் மூடி வைத்திருங்கள்.
பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் கருகாமல் எடுங்கள்.
சுவையான, அருமையான காலிஃப்ளவர் பரோட்டா  தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், தேவையானால் கெட்டித்தயிர் போதும்.

குறிப்பு: எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12432

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty வாழைப்பழ சப்பாத்தி !

Post by krishnaamma on Thu Mar 05, 2020 5:21 pm

வாழைப்பழ சப்பாத்தி !

தேவையானவை:

கோதுமை மாவு - ஒரு கப்,
கனிந்த வாழைப்பழம் - 1  - 2
சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை,
நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

வாழைப்பழத்தை நன்கு மசித்துக்கொள்ளுங்கள்.
மேலே கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.
தண்ணீர் தேவை இருக்காது, வேண்டுமானால்  கொஞ்சம் தெளித்துக் கொள்ளுங்கள்.
பிறகு, சப்பாத்திகளாக  இட்டு,  நெய் விட்டு, இரண்டு பக்கமும்  வேகவிட்டு எடுங்கள்.
இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும்.
இனிப்பு பிடிக்கும் குழந்தைகளுக்கு , தேன் அல்லது வெல்லம் அல்லது சர்க்கரை தொட்டுக் கொடுக்கலாம்.
நெய் விட்டும் கொடுக்கலாம்.
எனவே, சிறு குழந்தைகளுக்கும், மெல்ல முடியாத வயோதிகர்களுக்கும் கூட ஏற்ற சப்பாத்தி.

Last edited by krishnaamma on Sat Mar 07, 2020 8:42 pm; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12432

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty ஆப்பிள் சப்பாத்தி !

Post by krishnaamma on Thu Mar 05, 2020 5:25 pm

ஆப்பிள் சப்பாத்தி !

தேவையானவை:

கோதுமை மாவு - ஒரு கப்,
பெரிய ஆப்பிள்  - 1
சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை,
நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

ஆப்பிளை நன்கு துருவிக் மசித்துக்கொள்ளுங்கள்.
மேலே கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.
தண்ணீர் தேவை இருக்காது, வேண்டுமானால் கொஞ்சம் தெளித்துக் கொள்ளுங்கள்.
பிறகு, சப்பாத்திகளாக  இட்டு,  நெய் விட்டு, இரண்டு பக்கமும்  வேகவிட்டு எடுங்கள்.
இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும்.
இனிப்பு பிடிக்கும் குழந்தைகளுக்கு , தேன் அல்லது வெல்லம் அல்லது சர்க்கரை தொட்டுக் கொடுக்கலாம்.
எனவே, சிறு குழந்தைகளுக்கும், மெல்ல முடியாத வயோதிகர்களுக்கும் கூட ஏற்ற சப்பாத்தி.

Last edited by krishnaamma on Thu Mar 05, 2020 5:37 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12432

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty பச்சை பட்டாணி  சப்பாத்தி !

Post by krishnaamma on Thu Mar 05, 2020 5:29 pm

பச்சை பட்டாணி  சப்பாத்தி !

தேவையானவை:

கோதுமை மாவு - ஒரு கப்,
பச்சை பட்டாணி - 1 ஆழாக்கு - 200  கிராம்
பச்சை மிளகாய்  8  - 10
கரம் மசாலா = ஒரு ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 2 டீஸ்பூன் (மாவு கலக்க )
நெய் எண்ணெய் கலவை சப்பாத்தி செய்ய

செய்முறை:

பட்டாணியை நன்கு அலசி, மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.
தனியே ஒரு கிண்ணத்தில், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
ஒரு பேசினில் போட்டுக்கொண்டு, மேலே கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.
தண்ணீர் தேவை இருக்காது, வேண்டுமானால் கொஞ்சம் தெளித்துக் கொள்ளுங்கள்.
பிறகு, சப்பாத்திகளாக இட்டு, நெய் எண்ணெய் கலவையை விட்டு, இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுங்கள்.
இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும்.

குறிப்பு: அதிக காரம் தேவைப்படுபவர்கள் கொஞ்சம் வறட்டு மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன் சேர்த்துக்  கொள்ளலாம் .

Last edited by krishnaamma on Sat Mar 07, 2020 8:42 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12432

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty பச்சை சோள கார்ன் சப்பாத்தி !

Post by krishnaamma on Thu Mar 05, 2020 5:36 pm

பச்சை சோள கார்ன் சப்பாத்தி !

தேவையானவை:

கோதுமை மாவு - ஒரு கப்,
பச்சை சோளம் - 1 ஆழாக்கு - 200 கிராம் அல்லது ஒன்றோ இரண்டோ சோளக் கதிர்
பச்சை மிளகாய் 8 - 10
கரம் மசாலா = ஒரு ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 2 டீஸ்பூன் (மாவு கலக்க )
நெய் எண்ணெய் கலவை சப்பாத்தி செய்ய

செய்முறை:

சோளத்தை துருவிக் கொள்ளவும்.
அல்லது உதிர்த்து மிக்சி இல் ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.
பிறகு, தனியே ஒரு கிண்ணத்தில், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
ஒரு பேசினில் போட்டுக்கொண்டு, மேலே கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.
தண்ணீர் தேவை இருக்காது, வேண்டுமானால் கொஞ்சம் தெளித்துக் கொள்ளுங்கள்.
பிறகு, சப்பாத்திகளாக இட்டு, நெய் எண்ணெய் கலவையை விட்டு, இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுங்கள்.
இந்த சப்பாத்தியும் மிக மிருதுவாக இருக்கும்.
இப்படி நாம் காய்கறிகளை அரைத்து செய்வதால், குழந்தைகளுக்கு விதம் விதமாய் செய்தது போலவும் இருக்கும், காய்கறியும் உடம்பில் சேரும்.

குறிப்பு: அதிக காரம் தேவைப்படுபவர்கள் கொஞ்சம் வறட்டு மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம் .

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12432

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty முள்ளங்கி பரோட்டா !

Post by krishnaamma on Thu Mar 05, 2020 5:55 pm

முள்ளங்கி பரோட்டா !

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்
நெய் - 2 டீஸ்பூன் மாவு கலக்க
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - சப்பாத்தி செய்ய

பூரணத்துக்கு:

முள்ளங்கி துருவல் - ஒன்றரை கப்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
தனியா பொடி - அரை டீஸ்பூன்
கரம்மசாலா - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

பூரணத்துக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து அப்படியே வைக்கவும்.
ஒரு பத்து நிமிடங்கள் கழித்து பார்த்தால் , 'சத சத' வென தண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கும் அது.
ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
தண்ணீரை ஒட்டப்பிழிந்து விட்டு, அதை கோதுமைமாவுடன் போட்டு நன்கு பிசையவும்.
தண்ணீர் வேண்டி இருக்காது.
ஒருவேளை தேவையானால், பிழிந்து வைத்துள்ள தண்ணீரை உபயோகித்துக் கொள்ளவும்.
சப்பாத்திகளாக இட்டு, எண்ணெய் - நெய் கலவை இரண்டு பக்கமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
நிறைய முள்ளங்கி கிடைக்கும்போது இப்படி செய்து சாப்பிடலாம்.
வித்தியாசமான ருசியுடன் நன்றாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61074
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12432

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty Re: சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை