உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கொரோனா வை மதிக்காதவர்கள்.
by சக்தி18 Today at 1:03 pm

» ராமர் ஏன் கிரேட்?
by சக்தி18 Today at 1:01 pm

» கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்
by சக்தி18 Today at 12:48 pm

» ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்
by சக்தி18 Today at 12:44 pm

» கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்
by சக்தி18 Today at 12:40 pm

» சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ
by ayyasamy ram Today at 12:33 pm

» கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
by ayyasamy ram Today at 12:30 pm

» சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:56 am

» தம்பதியின் பால்கனி மாரத்தான்...
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:54 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:52 am

» 8 இடங்களில் வெயில் சதம்
by ayyasamy ram Today at 10:29 am

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30
by ayyasamy ram Today at 10:20 am

» கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்
by ayyasamy ram Today at 10:14 am

» 'அரசியல் மேடையில் சில சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:50 am

» பாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' கட்டுரையில் எழுதியது:
by ayyasamy ram Today at 7:49 am

» கண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:48 am

» முல்லை முத்தையா தொகுத்த, 'அறிஞர் அண்ணா உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:47 am

» ஜெர்மன் அமைச்சர் தற்கொலை!
by ayyasamy ram Today at 7:36 am

» எப்போதும் வேலை செய்! - ஆன்மிக சிந்தனைகள்-கபீர் தாசர்
by ayyasamy ram Today at 7:33 am

» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 7:28 am

» வேலன்:-பழுதான ஜிப் பைல்களை திறக்க -Remo
by velang Today at 7:18 am

» ஜியோ ரவுட்டர்
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» ஒரு சிறிய கதை : (கோரோனோவில் மறைந்துள்ள கணிதம் )
by T.N.Balasubramanian Yesterday at 8:13 pm

» இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -29
by சக்தி18 Yesterday at 6:53 pm

» மனிதன் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:24 pm

» கதாநாயகி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:22 pm

» பயணம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:16 pm

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by lakshmi palani Yesterday at 6:15 pm

» மயிலுக்கு போர்வை..! (ஆறு வித்தியாசம்)
by krishnaamma Yesterday at 5:52 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Yesterday at 5:51 pm

» அவசர தேவைகளுக்கான பயணத்திற்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
by krishnaamma Yesterday at 5:47 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by krishnaamma Yesterday at 5:47 pm

» செய்வினை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 5:44 pm

» அம்மான் பச்சரிசி துகையல் & சத்துமாவு
by krishnaamma Yesterday at 5:31 pm

» அம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்
by krishnaamma Yesterday at 5:31 pm

» தூக்கம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 5:30 pm

» பல் இருப்பவன் சாப்பிடும் பலகாரம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
by prajai Yesterday at 4:10 pm

» பழநி மலைக்கோயிலில் வாழும் நூற்றுக்கணக்கான குரங்குகளுக்கு உணவளிக்கும் போலீஸ்காரர்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» இசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» பெயரை மாற்றிய ஜீவா
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» டிப்ஸ் கிளி
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» கேலரி கண்மணி & லோன் அலோன் (செயலிகள்)
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» இதுவே வாழ்வின் அனுபவம் - ஜக்கி வாசுதேவ்
by சக்தி18 Yesterday at 11:58 am

» வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்
by சக்தி18 Yesterday at 11:56 am

Admins Online

வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்

வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும் Empty வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்

Post by ayyasamy ram on Tue Feb 18, 2020 6:16 pm

படித்தேன்;பகிர்கிறேன்

இன்றே நீங்கள் உங்கள் வீட்டில் ஆரம்பியுங்கள்.

1) உங்கள் துணியை நீங்களே முதலில் துவைத்துக்
கொள்ளுங்கள்.
அதுவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லாமல்
சொல்லும் முதல் பாடம்.

2) காலையில் எழுந்தவுடன் குளித்து, சந்தியாவந்தனம்
செய்யுங்கள்.
உங்கள் மனைவிக்கு சொல்லாமல் சொல்லும் இரண்டாவது
பாடம்.

3) முடிந்தால், அடுப்பு மனையில் உதவி செய்யுங்கள்.
நம் வீடு. நாம் செய்வோம். இது கூட்டு குடும்பத்தின்,
கூட்டு முயற்சியில் நாம் சொல்லாமல் சொல்லும்
மூன்றாவது பாடம்.

4) காபி குடித்தவுடன் , அதை முடிந்தால் அலம்பி வைக்கவும்.
இல்லையென்றால், அலம்பும் இடத்தில் வைக்கவும்.
இது நாம் நமக்குள்ளே ஒரு கட்டுப்பாடை வைத்துக் கொள்ள
உதவும். இது நமக்கு நாமே சொல்லும் நான்காவது பாடம்.

5) எங்கெல்லாம் உதவி செய்ய முடியுமோ, வீட்டில் உதவுங்கள்.
அது முக்கியமான ஐந்தாவது பாடம்- மற்றவர்களுக்கு உதவும்
பழக்கம் வர வேண்டும்.

6) காலை காபி குடிக்கும் போதோ, இல்லை எது சாப்பிட்டாலும் ,
குறை கூறாதீர்கள். வேண்டுமென்றால் நல்ல முறையிலே
கூறுங்கள். கோபமும், அதட்டலும், நமக்கு ரத்த அழுத்தம் தரும்.
இது ஆறாவது பாடம்.

7) உண்ணும் முன், பெரியவர்கள் இருந்தால், அவர்களை
கேளுங்கள் -சாப்பிட்டு விட்டார்களா என்று. குழந்தைகளை
கூப்பிட்டு கேளுங்கள். இது ஏழாவது பாடம் – நமக்கு நாமே.

8) முடிந்த வரை நடந்து செல்லுங்கள். பணம் கஞ்சத்தனம்
என்று இல்லை. நமது கால் நடக்கக் கற்றுக் கொண்டால்,
நாம் நமது காலில் இறக்கும் வரை , நின்றும், நடந்தும் வாழலாம்.
இது வாழ்க்கையின் எட்டாவது பாடம்.

9) அடுத்தது நம்மை அழிக்கும் தொலைக்காட்சி.
அது கத்திக் கொண்டு இருந்தாலும், நீங்கள் ஒரு நல்ல
புத்தகத்தை எடுத்துக் கொண்டு படியுங்கள்.

மின்சார கட்டணம் கண்டிப்பாக குறையும். குழந்தைகள்
படிக்க ஆரம்பிப்பார்கள். இது நமக்கு நாமே சொல்லும்
ஒன்பதாவது பாடம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54220
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும் Empty Re: வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்

Post by ayyasamy ram on Tue Feb 18, 2020 6:18 pm

.*Who Will Cry When You Die?”ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்.
-
அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?
என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்…

“நீ பிறந்த போது, நீ அழுதாய்…உலகம் சிரித்தது…
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா
சாந்தியடையும்” என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா,
இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்…

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும்
உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே
நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்…

உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே
கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள்.
மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென
ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள்.
அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

அதிகாலையில் எழ பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.
எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன்
செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள்.
இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக
குறையும்.
அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக
(Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு
அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய்
தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள்
முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி,
அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும்.
ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

தினமும் நல்ல இசையை கேளுங்கள்.
துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும்
உற்சாகத்தையும் தரும்.


Last edited by ayyasamy ram on Wed Feb 19, 2020 2:08 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54220
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும் Empty Re: வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்

Post by ayyasamy ram on Tue Feb 18, 2020 6:19 pm

புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து
கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.

பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த
நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே
வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.

நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய்
படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில்
உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை
வீணாக்காதீர்கள்.

உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான்.
அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச
வேண்டும் என்பதில்லை.
முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது
தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம்
புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு
நீங்கள் சென்று வர அவை உதவும்.

அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு
சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென
யோசியுங்கள்.

நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான
(humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள்
எளிமையானவர்களே!

“ஆணவம் ஆயுளை குறைக்கும்…”
மேற்கண்டக கருத்துக்களை பின் பற்றி,
ஆனந்தமாக வாழுங்கள்

நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியதை உங்களுக்கு
அனுப்பியுள்ளேன்…..!!!!வாழ்க வளமுடன்!

இதை அறுபது வயதிற்கு பின் ஆரம்பித்த என்னால் முடியும் போது,
கண்டிப்பாக உங்களால் முடியும். வசதிகள் இருந்தும், வசதி தேவை
இல்லை என்று நினைத்து, வசதியை உபயோகப் படுத்தாமல்
வாழ்வதே ஒரு பெரிய யோகம்.

படித்துவிட்டு பகிருங்கள் அனைவருக்கும் அவர்களும் படித்து பயன்
பெறட்டும்.
====
வாட்ஸ் அப் பகிர்வு


Last edited by ayyasamy ram on Wed Feb 19, 2020 2:08 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54220
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும் Empty Re: வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்

Post by சக்தி18 on Tue Feb 18, 2020 8:26 pm

சூப்பருங்க அருமையிருக்கு
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1516
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 469

Back to top Go down

வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும் Empty Re: வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை