உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கொரோனா வை மதிக்காதவர்கள்.
by சக்தி18 Today at 1:03 pm

» ராமர் ஏன் கிரேட்?
by சக்தி18 Today at 1:01 pm

» கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்
by சக்தி18 Today at 12:48 pm

» ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்
by சக்தி18 Today at 12:44 pm

» கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்
by சக்தி18 Today at 12:40 pm

» சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ
by ayyasamy ram Today at 12:33 pm

» கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
by ayyasamy ram Today at 12:30 pm

» சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:56 am

» தம்பதியின் பால்கனி மாரத்தான்...
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:54 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:52 am

» 8 இடங்களில் வெயில் சதம்
by ayyasamy ram Today at 10:29 am

» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30
by ayyasamy ram Today at 10:20 am

» கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்
by ayyasamy ram Today at 10:14 am

» 'அரசியல் மேடையில் சில சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:50 am

» பாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' கட்டுரையில் எழுதியது:
by ayyasamy ram Today at 7:49 am

» கண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:48 am

» முல்லை முத்தையா தொகுத்த, 'அறிஞர் அண்ணா உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:47 am

» ஜெர்மன் அமைச்சர் தற்கொலை!
by ayyasamy ram Today at 7:36 am

» எப்போதும் வேலை செய்! - ஆன்மிக சிந்தனைகள்-கபீர் தாசர்
by ayyasamy ram Today at 7:33 am

» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 7:28 am

» வேலன்:-பழுதான ஜிப் பைல்களை திறக்க -Remo
by velang Today at 7:18 am

» ஜியோ ரவுட்டர்
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» ஒரு சிறிய கதை : (கோரோனோவில் மறைந்துள்ள கணிதம் )
by T.N.Balasubramanian Yesterday at 8:13 pm

» இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -29
by சக்தி18 Yesterday at 6:53 pm

» மனிதன் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:24 pm

» கதாநாயகி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:22 pm

» பயணம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:16 pm

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by lakshmi palani Yesterday at 6:15 pm

» மயிலுக்கு போர்வை..! (ஆறு வித்தியாசம்)
by krishnaamma Yesterday at 5:52 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Yesterday at 5:51 pm

» அவசர தேவைகளுக்கான பயணத்திற்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
by krishnaamma Yesterday at 5:47 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by krishnaamma Yesterday at 5:47 pm

» செய்வினை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 5:44 pm

» அம்மான் பச்சரிசி துகையல் & சத்துமாவு
by krishnaamma Yesterday at 5:31 pm

» அம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்
by krishnaamma Yesterday at 5:31 pm

» தூக்கம் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 5:30 pm

» பல் இருப்பவன் சாப்பிடும் பலகாரம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
by prajai Yesterday at 4:10 pm

» பழநி மலைக்கோயிலில் வாழும் நூற்றுக்கணக்கான குரங்குகளுக்கு உணவளிக்கும் போலீஸ்காரர்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» இசை பயணத்தை ரத்து செய்த ஏ.ஆர்.ரகுமான்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» பெயரை மாற்றிய ஜீவா
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» டிப்ஸ் கிளி
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» கேலரி கண்மணி & லோன் அலோன் (செயலிகள்)
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» இதுவே வாழ்வின் அனுபவம் - ஜக்கி வாசுதேவ்
by சக்தி18 Yesterday at 11:58 am

» வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்
by சக்தி18 Yesterday at 11:56 am

Admins Online

முதல் பார்வை: பாரம்

முதல் பார்வை: பாரம் Empty முதல் பார்வை: பாரம்

Post by ayyasamy ram on Tue Feb 18, 2020 4:49 pm

முதல் பார்வை: பாரம் 1582019309855
-
முதல் பார்வை: பாரம் 1582019321855
-
படுத்த படுக்கையாகக் கிடக்கும் தந்தையைக் கவனித்துக்
கொள்ளாமல், அவரைப் பாரமாக நினைக்கும் குடும்பத்தின்
கதைதான் ‘பாரம்’

மகன், மருமகள், பேத்தி மூவரும் கிராமத்தில் வசிக்க,
நகரத்தில் உள்ள தன் தங்கையின் வீட்டில் இருந்துகொண்டு
இரவுநேர வாட்ச்மேனாகப் பணியாற்றி வருகிறார்
கருப்பசாமி.

அவருடைய தங்கை மட்டுமின்றி, தங்கையின் மகன்கள்
முருகன், மணி, வீரா மூவரும் கூட அவரிடம் மிகப் பாசமாக
உள்ளனர்.

அதுவும், வீராவுக்கு கருப்பசாமி மாமா மீது தனிப் பிரியம்.
‘இந்த வயசுல உன்ன யாரு வேலைக்குப் போகச்சொன்னா?
நாங்க மூணு பேரும் உன்னைப் பார்த்துக்க மாட்டோமா?’
என்று அன்புடன் கோபித்துக் கொள்கிறார் வீரா.

‘விட்டில் பூச்சிதான்டா விளக்கைத் தேடிப்போகும்.
நான் மின்மினிப் பூச்சிடா’ எனத் தத்துவம் சொல்கிறார்
கருப்பசாமி.

ஒருநாள், இரவுப் பணி முடித்துத் திரும்பும்போது, கருப்பசாமிக்கு
விபத்து நேர்கிறது. விஷயம் அவருடைய தங்கை மகன்களுக்குத்
தெரியவர, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர், இடுப்பு எலும்பு முறிந்து
விட்டதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்
என்றும் கூறுகிறார். இல்லையென்றால், கடைசி வரை அவரால்
எழுந்து நடமாட முடியாது என்றும் கூறுகிறார்.

எனவே, விஷயத்தைக் கருப்பசாமியின் மகன் செந்திலுக்குச்
சொல்கின்றனர். ஆனால், தான் வேலையில் இருப்பதாகவும்,
கிராமத்திலேயே வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம் என்றும்
அவரை கிராமத்துக்கு தூக்கிவரச் சொல்கிறார் செந்தில்.

எனவே, ஒரு குட்டி யானை வண்டியில் கருப்பசாமியை ஏற்றிச்
செல்கின்றனர் தங்கை மகன்கள்.

கருப்பசாமியைக் கிராமத்தில் விட்டுவந்த சில நாட்களில்,
அவர் இறந்துவிட்டார் எனத் தங்கை மகன்களுக்கு போன்
வருகிறது. கருப்பசாமி தானாக இறந்தாரா அல்லது கொலை
செய்யப்பட்டாரா? அதன் பிறகு நடந்தது என்ன? என்பது மீதிக்
கதை.

66-வது தேசிய விருது விழாவில், சிறந்த தமிழ்ப் படத்துக்கான
விருதைப் பெற்ற படம் இது. ஆனால், ஆவணப் படத்துக்கான
கூறுகள்தான் அதிக அளவில் இருந்தன.

----
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54220
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல் பார்வை: பாரம் Empty Re: முதல் பார்வை: பாரம்

Post by ayyasamy ram on Tue Feb 18, 2020 4:51 pm

முதல் பார்வை: பாரம் 1582019331855
-
முதல் பார்வை: பாரம் 1582019343855
படத்தின் மிகப்பெரிய பலம் நடிகர்கள். பெரும்பாலும் புதுமுக
நடிகர்கள். எனவே, கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளை,
நேரடியாகப் பார்ப்பது போல் உணர முடிகிறது. குறிப்பாக,
கருப்பசாமி, அவருடைய தங்கை, மீனா ஆகிய
3 கதாபாத்திரங்களின் நடிப்பும் மிக எதார்த்தம். அதேபோல்,
வசனங்களும். இதுதான் வசனம் எனச் சொல்லி, அவர்களை
ஒப்புவிக்கச் சொல்லாமல், பெரும்பாலும் சூழ்நிலையைச் சொல்லி,
நடிகர்களையே பேச வைத்தது போல் அவ்வளவு இயல்பாக உள்ளது.

அதேசமயம், ஆவணப்படமாக நினைக்கத் தோன்றுவதற்கு இதுவும்
ஒரு காரணமாகிறது.

மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால், தனியாக
டப்பிங் பேசாமல், லைவ் டப்பிங்கைப் பயன்படுத்தியுள்ளனர்.
அதேபோல், ஒளிப்பதிவிலும் பெரிதும் மெனக்கெடாமல், இயல்பாகக்
கிடைத்த வெளிச்சத்தையே பயன்படுத்தி எடுத்துள்ளனர். இவையும்
இதுவொரு ஆவணப்படம் என்ற கருத்தையே நம்முள் தொடர்ந்து
வலியுறுத்துவது போல் அமைந்துள்ளது.

தமிழகக் கிராமங்களில் சில தலைமுறைகளாக இருந்து வந்த/வரும்
‘தலைக்கூத்தல்’ முறையை அடிப்படையாகக் கொண்டு இந்தப்
படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் பிரியா கிருஷ்ணஸ்வாமி.

ஆனால், ஊர்ப் பெயரைச் சொன்னால் பிரச்சினையாகும் என்பதால்,
படத்தில் எந்த ஊர் எனக் குறிப்பிடவில்லை.

அதுபோல், 26 வகையான ‘தலைக்கூத்தல்’ முறை இருக்கிறது
என்று தான் மேற்கொண்ட ஆராய்ச்சி மூலமாகப் படத்தில் வசனம்
வைத்துள்ளார். அதில், ஏதாவது ஒரு முறையைப் படத்தில்
கையாண்டிருந்தாலும், அதை வைத்தே எந்த ஊர் எனக் கண்டு
பிடித்து விடலாம் என்பதால், அதை அறவே தவிர்த்து, தன்னுடைய
புத்திசாலித்தனத்தைக் காட்டியுள்ளார்.

அதற்காக, விஷ ஊசி போட்டுக் கொல்வது என்பது எப்படி
‘தலைக்கூத்தல்’ முறைக்குள் வரும் என்பது இயக்குநருக்கே
வெளிச்சம்.

அதேசமயம், தாத்தா - பேத்திக்கான உறவு இடைவெளி, மாமா -
தங்கை மகன் உறவின் பிணைப்பு போன்ற சின்னச் சின்ன
விஷயங்கள் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சின்ன வயதில்,
திருவிழாவில் பீப்பீ வாங்கி ஊதுவதை அண்ணனும் தங்கையும்
சிரித்துப் பேசும் காட்சி, அழகியல்.
அதேசமயம், சில மிகை எதார்த்தக் காட்சிகளும் படத்தில் ஆங்காங்கே
இடம்பெற்றுள்ளன.

மிகப்பெரிய உணர்வு குறித்துப் பேசியிருக்கும் படம், அந்த
உணர்வைப் பார்வையாளனுக்கும் கடத்த வேண்டியது அவசியம்.
அப்போதுதான் அந்தப் படம் எடுக்கப்பட்டதற்கான நோக்கத்தை
அடைய முடியும்.

ஆனால், அப்படி ஒரு உணர்வை இந்தப் படம் உண்டாக்கவில்லை.
-
-----------------------------
இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54220
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை