உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Today at 8:50 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by ayyasamy ram Today at 8:46 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Today at 8:31 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by ayyasamy ram Today at 8:18 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Today at 6:42 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

Admins Online

ஆயிரம் காதுகளுடன் காத்திருக்கிறேன்! - தமன் நேர்காணல்

ஆயிரம் காதுகளுடன் காத்திருக்கிறேன்! - தமன் நேர்காணல் Empty ஆயிரம் காதுகளுடன் காத்திருக்கிறேன்! - தமன் நேர்காணல்

Post by ayyasamy ram on Sat Feb 08, 2020 4:12 pm

ஆயிரம் காதுகளுடன் காத்திருக்கிறேன்! - தமன் நேர்காணல் 538492
-

கடந்த 2009-ல் வெளியான ‘சிந்தனை செய்’ படத்தின்
மூலம் இசையமைப்பாளராக அறிமுக மானவர் எஸ்.தமன்.

இதுவரை 118 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்;
40 இசை ஆல்பங்கள் வெற்றிபெற்றவை. ‘பின்னணி
இசையிலும் வலுவானவர்’ என்று பெயர் பெற்றிருக்கும்
தமன், தற்போது தமிழ்ப் படங்களைவிட அதிகமாகத்
தெலுங்குப் படங்களுக்கு இசையமைத்துக்
கொண்டிருப்பவர்.

எப்போதும் இசை வேலைகள் என்று இருக்காமல்,
இசை வேலைகளுக்கு நடுவே, தன் நட்சத்திர
நண்பர்களுடனும் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடும்
மனது கொண்டவர் என தமனைப் பற்றிப் பேசுவதற்கு
நிறையவே இருக்கிறது...

தெலுங்குப் படவுல கில் ‘பாகுபலி’ படத்துக்குப் பின் அதிக
வசூல் குவித்த படம் என்று கொண்டாடப்பட்டுவரும்
‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்துக்கும் தமன்தான் இசை.
அவரிடம் உடையாடியதிலிருந்து ஒரு பகுதி..

‘அலா வைகுந்தபுரம்லோ’ படம் போன்ற ஒரு ஹிட்டைத்
தமிழில் தரவில்லை என்ற வருத்தமுள்ளதா?

தமிழில் யாருமே நம்ப மாட்டேன் என்கிறார்கள். விஜய், அஜித்
தொடங்கி அனைத்துப் பெரிய கதாநாயகர்களையும் சந்தித்து
விட்டேன். சிம்பு, ஆர்யா இருவரையும் தவிர என்னை யாருமே
நம்புவதில்லை.

‘ஈரம்’, ‘மகாமுனி’, ‘வாலு’, ‘ஒஸ்தி’ எனப் படத்தின்
பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

யுவன், இமான், அனிருத் என அனைவருமே கடும் போட்டி
நிறைந்த உலகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எனக்கும்
இந்த மாதிரியான போட்டிக் களத்தில் ஓடத்தான் ஆசை.

தமிழில் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். விஜய், அஜித்
எல்லாம் எப்போது போன் பண்ணுவார்கள் என ஆயிரம்
காதுகளுடன் காத்திருக்கிறேன். நான் இசையமைத்த தமிழ்ப்
படங்கள் யாவும், ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் வரவேற்புப்
பெற்றவைதாம். ஆனால், பெரிய நடிகர்கள் அளவுக்குப் போய்ச்
சேரவில்லை.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆயிரம் காதுகளுடன் காத்திருக்கிறேன்! - தமன் நேர்காணல் Empty Re: ஆயிரம் காதுகளுடன் காத்திருக்கிறேன்! - தமன் நேர்காணல்

Post by ayyasamy ram on Sat Feb 08, 2020 4:12 pm


தெலுங்கில் அதிகப் படங்களுக்கு இசையமைப்பதால், தமிழில்
வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று சொல்லலாமா?

இல்லை. என் ஸ்டுடியோவே சென்னையில்தான் இருக்கிறது.
சிவகார்த்திகேயன், கலையரசன், அசோக் செல்வன், சாந்தனு,
காந்த் இவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.
அனைத்துத் தமிழ் தயாரிப்பாளர்களையும் தெரியும். ஜீவா, ஆர்யா,
அதர்வா, சந்தானம் ஆகிய நடிகர்களுடைய படம் பண்ணிட்டேன்.

பெரிய நடிகர்களுடைய படம் ஏன் அமையவில்லை எனத்
தெரியவில்லை. விஷால் - ஆர்யா இணைந்து ஆனந்த் ஷங்கர்
இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கிறேன்.
அதற்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வரும் என நம்புகிறேன்.

உங்களுடைய பாடல்களுக்காக இப்போது தெலுங்கு இயக்குநர்கள்
காத்திருப்பதாகச் சொல்கிறார்களே?


அப்படியெல்லாம் இல்லை. ‘அலா வைகுந்தபுரம்லோ’ படம்
வெளியாவதற்கு முன்பே மகேஷ் பாபு படம், ரவிதேஜா படம்
ஆகியவற்றை ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தின் வெற்றிக்குப்
பிறகு வந்த படங்கள் அல்ல அவை. நானியுடன் ஒரு படம் மட்டுமே
ஒப்பந்தமானேன்.

அந்தப் படம் பெரிய வெற்றியடைந்ததால் அதன் இயக்குநர்
ஷிவ் நிர்வாணா - நானி இணையும் படத்துக்கு இசையமைக்கிறேன்.
முன்பு மாதிரி தெலுங்குப் படங்களின் இசை இப்போது இல்லை.
அனைத்திலுமே பெரிய ரசனை மாற்றம் வந்துவிட்டது.

ஒரே நேரத்தில் பல படங்களுக்கு எப்படி இசையமைக்கிறீர்கள்?

இந்தத் துறைக்கு வந்து 25 ஆண்டு களாகிவிட்டன. அப்பா
இறந்தவுடன் 9 வயதில் வந்தேன். எஸ்.பி.பி., கங்கை அமரன்,
சிவமணி ஆகியோருடன் கச்சேரியில் வாசிக்கத் தொடங்கினேன்.

இசை என்றால் அவ்வளவு பைத்தியம். இசை மீதிருக்கும்
ஆர்வத்தைப் பார்த்துத் தான் ஷங்கர்கூட ‘பாய்ஸ்’ படத்தில்
வாய்ப்பு கொடுத்தார். நிறைய இசை யமைப்பாளர்களுடன்
இணைந்து 900 படம் வரை பணிபுரிந்திருக்கிறேன்.

7,000 மேடை கச்சேரி செய்துள்ளேன். இவை அனைத்திலும் கிடைத்த
அனுபவத்தால் மட்டுமே, இப்போதும் எத்தனை படங்கள் வந்தாலும்
இசையமைக்க முடிகிறது.

யுவன், அனிருத் தொடங்கி அனை வருமே கச்சேரியில் வாசித்ததால்
மட்டுமே இப்போதுவரை நீடிக்க முடிகிறது. மக்களுக்கு என்ன
பாட்டுப் பிடிக்கும் என அவர்களுக்குத் தெரியும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆயிரம் காதுகளுடன் காத்திருக்கிறேன்! - தமன் நேர்காணல் Empty Re: ஆயிரம் காதுகளுடன் காத்திருக்கிறேன்! - தமன் நேர்காணல்

Post by ayyasamy ram on Sat Feb 08, 2020 4:14 pm


-
ஏ.ஆர்.ரஹ்மானால் ‘சின்ன சின்ன ஆசை’ பாடலும் பண்ண
முடிகிறது, ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலும் பண்ண முடிகிறது.
அதற்குக் காரணம் கச்சேரியில் வாசித்தது தான். அப்படி
வாசித்தால் மட்டுமே வித்தியாசமான களங்களில் பாடல்களைக்
கொடுக்க முடியும்.

இசையமைப்பாளராக ஆவதற்கு முன் சென்னையில் நடைபெற்ற
பல கச்சேரிகளில் வாசித்திருக்கிறேன். அந்தக் கச்சேரிகள் தாம்
எங்களைக் காப்பாற்றுகின்றன.

தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழித் திரையுலகிலும் பணி
புரிகிறீர்கள். என்ன மாற்றத்தைப் பார்க்கிறீர்கள்?


நான் எப்போதுமே நாயகனின் இமேஜுக்குள் போவதில்லை.
கதைக்கு என்ன தேவையோ அதற்கேற்ப செய்துவிடுவேன்.
ஆகையால், எனக்குத் திரையுலக வித்தியாசம் தெரிவதில்லை.
கமர்ஷியல் படங்கள் எல்லாம் இப்போது கிடையாது.

அனைத்து நாயகர்களுமே தற்போது நல்ல கதைகளோடுதாம்
படம் பண்ணுகிறார்கள். ஏனென்றால், முழுக்கவும் கமர்ஷியல்
படங்களை மக்கள் தற்போது ஏற்றுக்கொள்வதில்லை.

திரையுலகில் அவமானங்களைச் சந்தித்துள்ளீர்களா?


நிறைய இருக்கிறது. அவமானங்கள் தாம் வெற்றிக்கான படி.
அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை அவமானங்கள் என்று
சொல்ல முடியாது. எப்போதுமே சின்ன ஈகோ ஒன்று இருக்கும்.
அதை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

நீங்கள் ஆடும் கிரிக்கெட்டைப் பல திரையுலகப் பிரபலங்கள்
பாராட்டுகிறார்களாமே?


கிரிக்கெட் எனக்கு மன அமைதி யைத் தருகிறது. குடி, புகை
போன்ற பழக்கமில்லை. டிஸ்கோதேவுக்கும் போகமாட்டேன்.
எனக்கு 22 நண்பர்கள் இருக்கிறார்கள்.

சனிக்கிழமை ஒரு டீமுடனும், ஞாயிறு ஒரு டீமுடனும் ஆடுவேன்.
அனைவருமே திரையுலக நண்பர்கள்தாம். சென்னையைப்
போலவே ஹைதராபாத்திலும் சாய் தரம் தேஜ், வருண் தேவ்,
அகில் என நிறையப் பேருடன் கிரிக்கெட் ஆடுவேன்.

இசையமைக்கும் பணிகள் 9 மணிக்கு முடிந்துவிட்டால்,
குளித்துவிட்டு கிரிக்கெட் ஆடக் கிளம்பிவிடுவேன்.

இரவு 1 மணி வரை விளையாடிவிட்டு வந்து தூங்குவது தான்
பொழுதுபோக்கு. மறுபடியும் காலை 9 மணிக்கு இசையமைக்கும்
வேலையைப் புத்துணர்வாகத் தொடங்கிவிடுவேன்.
-
------------------------------
கா.இசக்கி முத்து
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆயிரம் காதுகளுடன் காத்திருக்கிறேன்! - தமன் நேர்காணல் Empty Re: ஆயிரம் காதுகளுடன் காத்திருக்கிறேன்! - தமன் நேர்காணல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை