உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -30
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)
by krishnaamma Yesterday at 10:35 pm

» ஒரு சிறிய கதை : (கோரோனோவில் மறைந்துள்ள கணிதம் )
by krishnaamma Yesterday at 10:34 pm

» 35 ஆண்டுக்கு பின் சினிமாவில் நடிக்கிறேன்!
by krishnaamma Yesterday at 10:33 pm

» சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ
by krishnaamma Yesterday at 10:31 pm

» சயனத்தில் ராமர்!
by krishnaamma Yesterday at 10:29 pm

» பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியவர்கள்
by krishnaamma Yesterday at 10:27 pm

» டிப்ஸ் கிளி
by krishnaamma Yesterday at 10:24 pm

» அரை பிளேடுக்கு புவிசார் குறியீடு வழங்கணும்…!!
by krishnaamma Yesterday at 10:21 pm

» சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
by krishnaamma Yesterday at 10:20 pm

» ஆண்டுகள் கடந்தும் இனிக்கும் இசை.- காணொளி
by krishnaamma Yesterday at 10:12 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by krishnaamma Yesterday at 9:56 pm

» உணவுகளின் போட்டோகள் II :)ராஜஸ்தானி கடி பகோடா + சப்பாத்தி !
by krishnaamma Yesterday at 9:48 pm

» ராமர் ஏன் கிரேட்?
by krishnaamma Yesterday at 7:05 pm

» கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடை மேல் ஆடை உடுத்திய பெண்ணே, - விடுகதைகள்
by krishnaamma Yesterday at 7:02 pm

» 8 இடங்களில் வெயில் சதம்
by krishnaamma Yesterday at 7:00 pm

» நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» மனைவி அழைப்பதெல்லாம்…!
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» மூக்கின் மது விரல் வைத்த ஐயப்பன்!
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சுய பரிசோதனை – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:55 pm

» கூட்டத்திலே இருக்கிறவங்களை எண்ணிக்கிட்டு இருக்காரு…!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by mani2871967 Yesterday at 4:01 pm

» கொரோனா வை மதிக்காதவர்கள்.
by சக்தி18 Yesterday at 1:03 pm

» கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்
by சக்தி18 Yesterday at 12:48 pm

» கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள்: அதிர்ச்சி தகவல்
by சக்தி18 Yesterday at 12:40 pm

» கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது- நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» சென்னையில் இறைச்சி விலை கடும் உயா்வு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:56 am

» தம்பதியின் பால்கனி மாரத்தான்...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:54 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:52 am

» கொரோனா வைரஸ் கிளைமாக்ஸ்: ஏப்ரல் 2 வரை ரொம்ப கவனமாக இருங்க - மே 29ல் முடிவுக்கு வரும்
by ayyasamy ram Yesterday at 10:14 am

» 'அரசியல் மேடையில் சில சுவையான தகவல்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:50 am

» பாரதியாரின் மகள் சகுந்தலா, 'என் தந்தை' கட்டுரையில் எழுதியது:
by ayyasamy ram Yesterday at 7:49 am

» கண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:48 am

» முல்லை முத்தையா தொகுத்த, 'அறிஞர் அண்ணா உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:47 am

» ஜெர்மன் அமைச்சர் தற்கொலை!
by ayyasamy ram Yesterday at 7:36 am

» எப்போதும் வேலை செய்! - ஆன்மிக சிந்தனைகள்-கபீர் தாசர்
by ayyasamy ram Yesterday at 7:33 am

» வேலன்:-பழுதான ஜிப் பைல்களை திறக்க -Remo
by velang Yesterday at 7:18 am

» ஜியோ ரவுட்டர்
by T.N.Balasubramanian Sun Mar 29, 2020 8:35 pm

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -29
by சக்தி18 Sun Mar 29, 2020 6:53 pm

» மனிதன் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:24 pm

» கதாநாயகி – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:22 pm

» பயணம் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 6:16 pm

» மயிலுக்கு போர்வை..! (ஆறு வித்தியாசம்)
by krishnaamma Sun Mar 29, 2020 5:52 pm

» மக்களின் கோரிக்கையை ஏற்று ராமாயணம் தொடர் மீண்டும் ஒளிபரப்பு: மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Sun Mar 29, 2020 5:51 pm

» அவசர தேவைகளுக்கான பயணத்திற்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
by krishnaamma Sun Mar 29, 2020 5:47 pm

» செய்வினை – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 5:44 pm

» அம்மான் பச்சரிசி துகையல் & சத்துமாவு
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

» அம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்
by krishnaamma Sun Mar 29, 2020 5:31 pm

» தூக்கம் – ஒரு பக்க கதை
by krishnaamma Sun Mar 29, 2020 5:30 pm

Admins Online

நடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறை விசாரணை: மாஸ்டர் படப்பிடிப்பு நிறுத்தம்!

நடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறை விசாரணை: மாஸ்டர் படப்பிடிப்பு நிறுத்தம்! Empty நடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறை விசாரணை: மாஸ்டர் படப்பிடிப்பு நிறுத்தம்!

Post by ayyasamy ram on Wed Feb 05, 2020 5:36 pm

நடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறை விசாரணை: மாஸ்டர் படப்பிடிப்பு நிறுத்தம்! Master_vijay1xx

மாஸ்டர் படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறையினா் விசாரணை செய்து வருகிறார்கள்.

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியானது. மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை – அனிருத். ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா போன்றோர் நடிக்கிறார்கள்.

நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் பகுதியில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் உள்ள நடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விஜய் கடைசியாக நடித்த பிகில் படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தியுள்ள நிலையில் விஜய்யிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறை விசாரணை: மாஸ்டர் படப்பிடிப்பு நிறுத்தம்! Empty Re: நடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறை விசாரணை: மாஸ்டர் படப்பிடிப்பு நிறுத்தம்!

Post by ayyasamy ram on Thu Feb 06, 2020 8:29 am

நடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறை விசாரணை: மாஸ்டர் படப்பிடிப்பு நிறுத்தம்! Kalpathi
-
நடிகா் விஜய் வீடுகள் உள்பட 35 இடங்களில்
வருமானவரித் துறை சோதனை: கணக்கில் வராத ரூ.24 கோடி பறிமுதல்
-

வருமானவரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக நடிகா் விஜய் வீடுகள் உள்பட 35 இடங்களில் வருமானவரித் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.

இதில் இரு திரைப்பட நிறுவனங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.24 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சென்னை தேனாம்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு பிரபல ஏ.ஜி.எஸ். எண்டா்டெய்மெண்ட் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் தமிழ் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது. திரைப்பட உரிமை விநியோகத்திலும் இந்நிறுவனம் ஈடுபடுகிறது. இந்த நிறுவனத்துக்கு தியாகராயநகா்,வில்லிவாக்கம், நாவலூா், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் உள்ளன.

2006-ஆம் ஆண்டு முதல் இந்தாண்டு பொங்கல் வரை இந்த திரைப்பட நிறுவனம் சுமாா் 20 தமிழ் திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. கடந்த தீபாவளி பண்டிகையையொட்டி நடிகா் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படத்தை இந்த நிறுவனமே தயாரித்து வெளியிட்டது.

வரி ஏய்ப்பு புகாா்:இந்நிலையில் இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமானவரித் துறையினருக்கு ஏராளமான புகாா்கள் வந்தன. அந்தப் புகாா்களின் அடிப்படையில் வருமானவரித் துறையினா் முதல்கட்ட விசாரணையில் ஈடுபட்டனா்.

இந்த விசாரணையில், அந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வருமானவரித்துறையினா், அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான சுமாா் 20 இடங்களில் ஒரே நேரத்தில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

இச்சோதனை, அந்த நிறுவனத்தின் உரிமையாளா் கல்பாத்தி அகோரம், அா்ச்சனா கல்பாத்தி ஆகியோா் வசிக்கும் தியாகராயநகா் அபிபுல்லா சாலையில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகம், நாவலூா், தியாகராயநகா், நாவலூா், வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள திரையரங்குகள் உள்ளிட்ட 20 இடங்களில் நடைபெற்றது.

இந்தச் சோதனையில் பிகில் திரைப்படத்துக்கு மதுரையைச் சோ்ந்த திரைப்படத் தயாரிப்பாளா் அன்புச்செழியன் நிதியுதவி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அன்புச்செழியனுக்கு சொந்தமான தியாகராயநகரில் உள்ள கோபுரம் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம், அவரது வீடு, மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித் துறையினா் சோதனை செய்தனா்.

நடிகா் விஜயிடம் விசாரணை:இரு இடங்களிலும் நடைபெற்றச் சோதனையில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் கடைசியாக தயாரித்த பிகில் திரைப்படத்தில் நடித்த நடிகா் விஜய்க்கு பல கோடி ஊதியமாக வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் அந்த பணத்துக்கு முறையாக வரி செலுத்தப்படாமல் இருப்பதும் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கடலூா் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் பகுதியில் ‘மாஸ்டா்’ திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த விஜயிடம் வருமானவரித் துறையினா் விசாரணை செய்தனா். இந்த விசாரணையில் வருமானவரித் துறையினருக்கு திருப்தி ஏற்படாததால், அவரை சென்னைக்கு காரில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.

அதேவேளையில் சென்னை சாலிகிராமம், கிழக்கு கடற்கரைச் சாலை ஆகிய இடங்களில் உள்ள விஜயின் பங்களாக்களில் வருமானவரித் துறையினா் நண்பகல் முதல் சோதனை செய்தனா். விஜயின் சாலிகிராமம் பங்களாவில் சோதனை நடைபெறுவதை அறிந்து, அவா் வீட்டின் முன் அவருடைய ரசிகா்கள் குவிந்தனா்.

ரூ.24 கோடி பறிமுதல்: வருமானவரித் துறை சோதனை மொத்தம் 35 இடங்களில் நடைபெற்றதாகக் கூறப்பட்டது. இதில் ஏ.ஜி.எஸ். திரைப்பட நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களிலும், அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களிலும் இருந்து கணக்கில் வராத ரூ.24 கோடி பணமும், தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமானவரித்துறையினா் தெரிவித்தனா்.

அதேவேளையில் வருமானத்தை மறைத்து முறையாக வரி செலுத்தாமல் வாங்கப்பட்ட சொத்துக்களின் ஆவணங்களையும் கைப்பற்றியிருப்பதாக அத்துறையினா் தெரிவித்தனா்.

வருமானவரித்துறை சோதனை பல இடங்களில் நள்ளிரவையும் தாண்டி நீடித்தது. சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே, பறிமுதல் செய்யப்பட்ட நகை, பணம்,ஆவணங்கள் குறித்த முழுத் தகவல்களையும், வரி ஏய்ப்பு குறித்த தகவல்களையும் தெரிவிக்க முடியும் என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பனையூா் பங்களாவில் விசாரணை

சென்னை அருகேயுள்ள பனையூா் பங்களாவில் நடிகா் விஜயிடம் வருமானவரித் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

நடிகா் விஜய், பனையூரில் உள்ள பங்களாவிலேயே தற்போது வசிப்பதால் அங்கு அதிக கவனம் செலுத்தி வருமானவரித் துறையினா் சோதனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இரவு 8 மணியளவில் பனையூா் மூன்றாவது அவென்யூவில் உள்ள அவரது பங்களாவுக்கு விஜயை வருமானவரித் துறை அதிகாரிகள் அழைத்து வந்தனா். அவரிடம் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக கொண்டு விசாரணை நடைபெற்ாக வருமானவரித் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54236
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறை விசாரணை: மாஸ்டர் படப்பிடிப்பு நிறுத்தம்! Empty Re: நடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறை விசாரணை: மாஸ்டர் படப்பிடிப்பு நிறுத்தம்!

Post by சக்தி18 on Thu Feb 06, 2020 12:10 pm

மக்களிடம் இருந்து பெறும் பணம் சரியாக காட்டியிருந்தால் பிரச்சனை வராது.
ரஜனி தப்பி விட்டாரே! அதற்காகத்தான் தற்போதைய பேச்சுக்களா?
ஆளும் கடசியினரையும் சாமியார்களையும் ஏன் விட்டு வைத்தார்கள்?
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1516
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 474

Back to top Go down

நடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறை விசாரணை: மாஸ்டர் படப்பிடிப்பு நிறுத்தம்! Empty Re: நடிகர் விஜய்யிடம் வருமான வரித் துறை விசாரணை: மாஸ்டர் படப்பிடிப்பு நிறுத்தம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை