உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by ayyasamy ram Today at 1:26 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by ayyasamy ram Today at 9:54 am

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

Admins Online

சரியான எச்சரிக்கை

சரியான எச்சரிக்கை  Empty சரியான எச்சரிக்கை

Post by T.N.Balasubramanian on Sun Jan 26, 2020 9:02 pm

பஸ் நிலையத்தில் காத்திருந்தேன். கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.
அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன், அங்கிருந்த மூதாட்டியிடம், 'ஏம்மா... இந்த வேகாத வெயில்ல பஸ்சுக்காக காத்து கெடக்கறீங்க... அப்படியே பஸ் வந்தாலும், உட்கார்ந்து போக இடம் கிடைக்காம நின்னுட்டே தான் பயணிக்கணும்... நீங்க எங்கே போகணும்ன்னு சொல்லுங்க, போற வழியில இறக்கி விடறேன்...' என்றான்.
இளைஞனின் மனிதநேயம் ஒருபுறம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், இன்னொரு புறம், நிறைய மூதாட்டியர் நிலையத்தில் காத்திருக்க, இவரை மட்டும் அழைப்பது ஏன் என, சிந்திக்க வைத்தது. பிறகு, எதேச்சையாக அவரின் கழுத்தை பார்த்தபோது, தங்க சங்கிலி, 'பளபள'வென மின்னுவது தெரிந்தது.
அதை பறிப்பதற்காக, அவன் திட்டமிடலாம் என்பதை யூகித்த நான், 'அவன், சந்தேகத்திற்குரியவன்..' என்பதை, கண்களாலேயே, மூதாட்டிக்கு சைகையில் எச்சரிக்கை செய்து, அவனுடன் செல்வதை தடுத்து நிறுத்தினேன்.
உடனே, சுதாரித்த மூதாட்டி, 'இல்ல தம்பி... எனக்கு, வண்டியில உட்கார்ந்து பழக்கமில்லை... குண்டும், குழியுமான சாலைகளில் வண்டி ஏறி இறங்கறப்ப, விழுந்தாலும் விழுந்துடுவேன்...' என, சமயோசிதமாக சொல்லி, அவனை அனுப்பி வைத்தார். என்னை தனியே அழைத்து, பாராட்டினார், மூதாட்டி.
பெரியோர்களே... இதுபோல, நைச்சியமாக பேசி, ஏமாற்றும் பேர்வழிகளை அடையாளம் கண்டு, உஷாராக இருங்கள்!
— கே. ஜெகதீசன், கோவை.

நன்றி தினமலர் வாரமலர்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25936
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9389

Back to top Go down

சரியான எச்சரிக்கை  Empty Re: சரியான எச்சரிக்கை

Post by சக்தி18 on Sun Jan 26, 2020 11:05 pm

இப்படியான சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக காவல்துறை எச்சரித்துள்ளது.சிலர் மாட்டிக் கொள்கிறார்கள்,சிலரால் சிலர் காப்பாற்றப்படுகிறார்கள்.

சென்னையில் தனியாக செல்லும் முதியவர்களிடம் தெரிந்த நபர் போல் பேசி, செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்று உதவுவதாக நூதன முறையில் பணம் பறிக்கும் நபரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். 
சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் 93 வயதான முதியவர் சதாசிவம். மீன்வளத் துறையில் அதிகாரியாக பணியாற்றி கடந்த 1980-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர்.
வெள்ளிக்கிழமை காலை வீட்டிற்கு அருகிலுள்ள இந்தியன் வங்கிக்கு தனது பென்ஷன் பணத்தை எடுப்பதற்காக சென்றார். அப்போது தலைகவசத்தை அணிந்து கொண்ட எதிரில் வந்த ஒருவர், சதாசிவத்தை ஏற்கனவே தெரிந்தவர் போல் நலம் விசாரித்தார். எங்கு செல்ல வேண்டும் என்று கேட்ட அந்த நபரிடம், அருகில் உள்ள வங்கிக்கு செல்வதாக கூறி சென்றார் சதாசிவம்.
வங்கிக்கு சென்று 20 ஆயிரம் ரூபாயை எடுத்து கொண்டு திரும்பிய போது, பின் தொடர்ந்து கவனித்த அந்த நபர், எதேச்சையாக எதிர்கொள்வது போல், முதியவரை சந்தித்தார். தனக்கு வந்த வேலை முடிந்துவிட்டது, வீட்டு வழியாக தான் செல்கிறேன், வண்டியில் அமருங்கள் தாத்தா என வாஞ்சையுடன் அழைத்தார்.
இதை நம்பி, தனது குடும்பத்தினருக்கு தெரிந்த நபராக இருக்கும் என நினைத்து அவருடன் சதாசிவம் சென்றார். வீட்டிற்கு அருகில் இறக்கிவிட்டு அந்த நபர் சென்ற பிறகு கைப்பை பார்த்த போது தான் 20 ஆயிரம் ரூபாயை அந்த நபர் திருடிச் சென்றது தெரியவந்தது. 

சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1312
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 416

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை