உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Padmajavasudevan Today at 5:13 pm

» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்
by ayyasamy ram Today at 4:41 pm

» எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று...
by ayyasamy ram Today at 4:30 pm

» முகநூலில் ரசித்தவை
by ayyasamy ram Today at 4:23 pm

» இலவச காய்கறி விவசாயி தாராளம்
by ayyasamy ram Today at 4:13 pm

» துப்புரவாளருக்கு ரூபாய் மாலை
by ayyasamy ram Today at 4:11 pm

» உயிர் எழுத்துக்களில் கொரோனா கவிதை
by ayyasamy ram Today at 4:10 pm

» ஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் துப்பாக்கி விற்பனை
by ayyasamy ram Today at 4:06 pm

» சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு
by ayyasamy ram Today at 4:02 pm

» வேலன்:-ஆடியோ பைல்களை பார்வையிட -Finetune.
by velang Today at 2:08 pm

» அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி
by சக்தி18 Today at 1:41 pm

» நடிகை ஸ்ரீதிவ்யா படங்களில் உங்களுக்கு பிடித்தது?
by சக்தி18 Today at 1:33 pm

» ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி
by சக்தி18 Today at 1:30 pm

» கொரோனா அவசரநிதி: இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி..!
by ayyasamy ram Today at 12:29 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 12:19 pm

» Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
by Pranav Jain Today at 11:51 am

» கொரோனா தமாஷ் பாருங்கள்!
by சக்தி18 Today at 11:41 am

» கோவிலில் கூட்டுக் குடும்பம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am

» சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்
by சக்தி18 Today at 11:39 am

» யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» இறைவன் எங்கே? இறை தூதர்கள் எங்கே?
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்குகியது - தூதரக அதிகாரி
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:00 am

» கொடுமைதான்.. கொரோனா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:35 am

» விவேக் மீம் இணையத்தில் வைரல்! நெட்டிசன்களுக்கு அவர் வைத்த கோரிக்கை
by T.N.Balasubramanian Today at 10:19 am

» மூன்றாம் உலகப்போர் எப்படி நடக்கும்? -எழுத்ததிகாரன்
by Pranav Jain Today at 8:57 am

» கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:35 am

» 300 படங்கள் நடித்துள்ளேன்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:32 am

» இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா
by ayyasamy ram Today at 8:29 am

» பல ஆண்டுகளுக்குப் பின் ஏழுமலையானுக்கு 6 மணிநேர ஓய்வு
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:23 am

» » » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 3
by ayyasamy ram Today at 6:37 am

» மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக மீட்பு உதவி
by ayyasamy ram Today at 6:26 am

» நண்பர்களே!!! ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?
by Akashgkr Yesterday at 9:06 pm

» குழந்தைகளுக்கு ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டிய தம்பதியினர்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» ஏப்.,15க்கு பிறகான ரயில் முன்பதிவு: தெளிவுப்படுத்திய ரயில்வே
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» வேலன்:-கணிணியில் தேவையற்ற பைல்களை நீக்கிட -Wash and GO -Abelsoft
by velang Yesterday at 5:54 pm

» வேலன்:-20க்கும் மேற்பட்ட விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள்-English Fonts
by velang Yesterday at 5:49 pm

» வேலன்:-புகைப்படத்தில் தேவையில்லாதவற்றை நீக்கிட - PhotoScissors.
by velang Yesterday at 5:48 pm

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» சம்யுக்தாவின் சாகச பயிற்சி
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» துருக்கியில் நிகிஷா
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ ஹைடெக் பின்னணியில் ஒரு காதல் கதை
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» கரோனா: தமிழகம் முழுவதும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» பிறந்த தினவாழ்த்துகள் திரு மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:51 pm

» ஆஹா டிப்ஸ்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 10:33 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» கொரோனா தொற்று ஆய்வு பணியில் இந்திய கடற்படை
by ayyasamy ram Yesterday at 5:30 am

» » கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 2
by ayyasamy ram Yesterday at 5:27 am

Admins Online

நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?

நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? Empty நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?

Post by ayyasamy ram on Sat Jan 18, 2020 4:45 pm

நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? Tamil-Daily-News-Paper_857921838761
-
சுகாதாரமான சூழலில் நாம் வசித்தால்தான் நோயின்றி
ஆரோக்யமாக வாழ முடியும். அதுபோலவே நமக்கு
மனநலமும், செயல் தூய்மையும் சிறந்து விளங்க
நல்லவர்களின் கூட்டுறவு அவசியம் தேவை.

முருகப் பெருமான் ‘இனியது எது?’ என்று கேட்க, ஒளவைப்
பெருமாட்டி ‘அறிஞர் தம்மைக் கனவிலும் நனவிலும்
காண்பதுதானே!’ என்பதையே இனியது என்று கூறினாள்.

ஆம்! நல்லவற்றின் நடுவில் நாம் எப்போதும், நாள்தோறும்
இருக்க வேண்டும்! கேட்பதும், சிந்திப்பதும், பாவிப்பதும்
நல்லவையாகவே அமைதல் வேண்டும்! இறைவனை
வழிபடுவதைக்கூட இரண்டாம் இடத்தில் வைத்து,
நல்லவர்களின் நட்பையே முதன்மைப்படுத்துகிறார் பட்டினத்தார்.

ஏன்? நல்லவர்களின் அறிவுரையால்தானே தெய்வ
வழிபாட்டின் சிறப்பே தெரிகிறது! எனவே ‘நல்லார்
இணக்கமும், நின் பூசை நேசமும்’ என்கிறார்.

அசுத்தநீர் தேங்கி, புதர் மண்டியுள்ள பயன்படுத்தப்படாத
நிலத்தில் பயிர் எப்படி செழித்து வளராதோ அப்படித்தான்
பெரியோர் தொடர்பு இன்றி சிற்றின்பம் சேர்ந்தவர்களின்
வாழ்வு சீரழிந்து விடும் என்கிற திருவள்ளுவர்

‘சிற்றினம் சேராமை’ என்று ஒரு அதிகாரமே எழுதியுள்ளார்.
‘நல்லாரைக் காண்பதுவும் நன்றே! நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே! நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே! அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்றே.’


-என்று அனைத்து விதத்திலும் நல்லவற்றின் நடுவில் நாம்
இருக்க வேண்டிய அவசியத்தை அற்புதமாக
எடுத்துரைக்கின்றனர், நம் ஆன்றோர்கள். குருகுலம் ஒன்றில்
மாணவர்களுக்கு நல்லொழுக்க வகுப்பை நடத்திக்
கொண்டிருந்தார் ஆசிரியர்.

‘மாணவர்களே! எந்நாளும் நல்லவர்களுடனேயே நட்பு வைத்துக்
கொள்ள வேண்டும். தீயோர் சேர்க்கை அறவே கூடாது.
ஒருவனிடம் தீய குணங்கள் இருந்தாலும் நல்லவரின் கூட்டுறவு
அவனை மாற்றும். உயர்நிலைக்கு அவனை அழைத்துச் செல்லும்!’

ஒரு மாணாக்கன் எழுந்து கேட்டான்: ‘தீயவர்கள் கூட்டத்தில்
நல்லவன் ஒருவன் சேர்ந்து அவர்களை உயர்வாக்க முடியாதா?’
‘நல்லவன் தாழ்ந்தவர்களோடு சேர்ந்தால் அவனும் தீயவனாகவே
மாறிவிடுவான். தீயவற்றின் வலிமை அப்படிப்பட்டது என்பதை
செய்முறையில் உங்களுக்கு விளக்குகிறேன்’ என்றார் ஆசிரியர்.

வகுப்பறையில் பெரிய பாத்திரம் ஒன்றும், குடம் ஒன்றும்
வரவழைக்கப்பட்டன. ஆசிரியர் கேட்டார்: ‘முப்பது குடம் நீர்
ஊற்றினால்தான் இந்த பாத்திரம் முழுமை அடையும்.

இருபத்து ஒன்பது முறை குடத்தால் தண்ணீர் ஊற்றி ஒரு முறை
மட்டும் குடத்தில் பால் நிரப்பி ஊற்றினால் என்ன ஆகும்?’
‘பாத்திரம் முழுவதும் தண்ணீராகவே காணப்படும்.
நீருடன் பால் கலந்து தன் நிலையை இழக்கும்’ என்று பதில்
வந்தது. மீண்டும் ஆசிரியர் கேட்டார்,

‘சரி. இப்போது, இருபத்து ஒன்பது முறை பாலும், ஒருமுறை
தண்ணீரும் ஊற்றினால் என்ன ஆகும்?’ ‘பாத்திரம் முழுவதும்
பாலாகவே இருக்கும். ஒரு குடம் நீரும் பாலாகவே மாறும்.’
இந்த பதில்கள், வினா எழுப்பிய மாணவனைத் தெளிவு
படுத்தின.

செத்துப் போனவரின் சடலத்தை கொத்தித் தின்பதுதான்
காக்கைகளின் பழக்கம். ‘முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம்’
என்று ஒரு பாடல் வரி உண்டு.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54382
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா? Empty Re: நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?

Post by ayyasamy ram on Sat Jan 18, 2020 4:48 pm


தீயதை விரும்பும் அக்காகம்கூட கற்பக மரச்சூழலில் இருந்தால்
அது அமுதத்தைத்தான் அருந்தும் என்று குறிப்பிடுகிறது
பழந்தமிழ்ப்பாடல் ஒன்று.

மேலானவற்றின் சங்கமத்தால் ஒருவன் தூய்மை அடைந்து
சிறப்பும் சேரப் பெறுவான் என்பதைக் ‘கற்பகத் தருவைச் சேர்ந்த
காகமும் அமுதம் உண்ணும்’ என்ற பாடல் வரிகள் நமக்கு
பாங்குற உணர்த்துகின்றன.

அரசர் ஒருவருக்கு உண்மைத் துறவி ஒருவரைப் பார்க்க வேண்டும்
என்கிற ஆர்வம் ஏற்பட்டது. ஆசைகளை அறவே துறப்பது அவ்வளவு
எளிதான காரியமல்ல. அதெப்படி ஆசை இல்லாமல் ஒருவர் இருக்க
முடியும்? அப்படிப்பட்ட நல்ல மகானை நாம் வணங்க வேண்டும்
என்கிற விருப்பம் அரசருக்கு எழவே அவர் தன் அமைச்சரை
அழைத்துச் சொன்னார்: ‘அமைச்சரே! போலிச் சாமியார் பலர்
இருக்கிறார்கள்.

நல்ல மகான் ஒருவரை நான் சந்தித்து ஆசி பெற ஏற்பாடு செய்யுங்கள்.’
பல இடங்களில், வெவ்வேறு ஊர்களில் தேடியும் உண்மைத் துறவி,
பணத்திற்கும், புகழுக்கும், வீண் பகட்டிற்கும் ஆசைப்படாத துறவி
அமைச்சருக்கு அகப்படவே இல்லை.

அதனால் அமைச்சர் நாடக நடிகர் ஒருவரை அணுகினார்.
‘தங்களுக்கு நான் இருபதாயிரம் ரூபாய் தருகிறேன். நம் நாட்டு
மன்னர் உங்களை வந்து சந்திக்கும்வரை நீங்கள் ஒரு துறவிபோல
நடிக்க வேண்டும். சரியாக வேடமிட்டுக்கொண்டு இந்த மரத்தடியில்
அமர்ந்து கொள்ளுங்கள்,’ என்றார்.

இருவருக்கும் இடையே ரகசியமான ஒப்பந்தம் உருவாயிற்று.
‘இன்னுமா உண்மைத் துறவி உங்களுக்கு அகப்படவில்லை?’ என்று
கேட்ட மன்னரிடம், அமைச்சர் ‘இப்போதுதான் அப்படிப்பட்ட
ஒருவரைக் கண்டுபிடித்தேன்,’ என்றார்.

அடுத்த வினாடியே அரசர் தன் மனைவி, குழந்தைகள்,
பரிவாரங்களுடன் புறப்பட்டார். அமைச்சர் தான் ஏற்பாடு
செய்திருந்த நபரைக் காட்டினார். அரசன் சாந்தம் தவழும் அவரின்
முக மண்டலத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

பாராளும் மன்னவர், பரிவாரங்கள், அமைச்சர், வந்திருந்த பெரியவர்கள்
எல்லோரும் நெடுஞ்சாண் கிடையாக நிலத்தில் வீழ்ந்து ‘துறவி’யை
நமஸ்கரித்தனர். தங்கத் தாம்பாளத்தில் பொன்னும், பொருளும் வைத்து
ஏற்றுக் கொள்ளும்படி வேண்டிக்கொண்டனர்.

‘எல்லாவற்றையும் துறந்து விட்ட எனக்கு இவை எதற்கு?
குடிமக்களுக்கு வழங்குங்கள்’ என்றார் நடிகர் துறவி!

நெடுநாள் ஆசை நிறைவேறிய மகிழ்வில் மன்னர் அரண்மனை
திரும்பினார். சிறிது நேரத்திற்குப் பிறகு துறவியிடம் வந்த அமைச்சர்
‘இந்தாருங்கள்! இருபதாயிரம் ரூபாய்’ என்றார்.

‘எல்லாவற்றையும் துறந்துவிட்ட எனக்கு இந்தப் பணம் எதற்கு?’
என்று கேட்டார் துறவி. ‘நாடக வசனம் போதும். சொன்னபடி இதோ
ரூபாய்’ என்றார் மந்திரி.

‘சில நிமிடம் நல்லவனாக நடித்ததற்கே நாட்டையாளும் மன்னவர்,
பரிவாரம் மற்றும் தாங்கள் ஆகிய எல்லோரும் என் காலில் விழுந்து
பணிந்தீர்களே! ஆசைகள் இல்லாமல் நல்ல துறவியாக
ஆகிவிடுவதுதான் எவ்வளவு உயர்வு, பெருமை என எண்ணி
உண்மையிலேயே நான் துறவி ஆகிவிட்டேன்!’ என்றார் நடிகர்!

நல்லதை நினை; நல்லதைச் சொல், நல்லதை செய்

என்கிறார் ஆஸ்கார் ஒயில்டு என்னும் அயல்நாட்டறிஞர்.

நல்லவற்றின் நடுவில் நாம் இருந்தால் வளரும் தலைமுறையும்
அதன் வழிப்படும். ஏனென்றால்
‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பிதான் இந்த நாடே இருக்குது!’

--
-------------------------------------
திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 54382
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12750

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை